பாரதம் செவ்வாய்க்கு முதல்தடவையே கோள் மங்கல்யானை அனுப்பி வெற்றிகண்டிருக்கிறது; விண்ணில் பறந்துசெல்லும் செயற்கைக்கோளை மிஷன் சக்தி ஏவுகணைமூலம் தாக்கியழித்திருக்கிறது; கண்டம்விட்டுக் கண்டம்தாவும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது; அணுகுண்டுத் தயாரிப்பிலும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆகவே, பாரத்த்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையில், ஆய்வுத் திறனில் உலக வல்லரசுகளுக்குச் சளைத்தவர் அல்லர் என்று கண்கூடாகத் தெரிகிறது.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7Tag: லாக்ஹீட் மார்ட்டின்
ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6
டசோல் நிறுவனம் மட்டுமல்ல, அமெரிக்க விமான நிறுவனங்களும்கூட, பாரதத்தில் எச்.ஏ.ஏல். நிறுவனத்துடன் இணைந்து விமான உற்பத்திசெய்ய முடியாது என்று தெரிவித்தபின்னர் பாரதத்தின்முன் நின்ற பெரும் பிரச்சினை இதுதான்..
முழுதாக, பறக்கும் நிலையிலுள்ள, பாரதம் விரும்பும் தொழில் நுட்பங்களுள்ள, – தாக்கும் திறனுள்ள, தளவாடங்களுள்ள, பாரத விமானப்படைத் தலைமை விரும்பும் போர்விமானமான ரஃபேலை உடனே பெறவேண்டும் என்றால் – அதை பிரெஞ்சு அரசின் மூலம்தான் அடையமுடியும் என்ற நிலைமை பாரதத்திற்கு ஏற்பட்டது.
ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5
2013ல் டசோல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆயினும், பட்ஜெட் தட்டுப்பாட்டினால் 2015வரை விமான ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கையை ஒத்திப்போடுவது என்று காங்கிரஸ் கூட்டணி அரசால் தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும், டசோல் நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை.
மூன்று ஆண்டுகள் டசோல் நிறுவனத்திற்கும், பாரத அரசுக்கும் இழுபறிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கையில், 2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ரஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.[