அன்றிலிருந்து இன்றுவரை சமுதாயம் ஆண்களையே சார்ந்திருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. பெண்ணுரிமைக்குத் தற்காலத்தில் அதிகம் குரல்கொடுக்கப் படுகிறது என்றாலும், அது படித்த பட்டினத்துப் பெண்களுக்கே சாதகம் செய்திருக்கிறது. ஆகவே, அவர்கள் துணிச்சலாகச் செயல்பட்டால்தான் அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமாளிக்க இயலும்.
காமம் என்பதை ‘அறம், பொருள்’, இன்பம்’ இவற்றின் தேடலின் தூண்டுதலாக எடுத்துக்கொள்ளலாம். அதை ஆண்கள் நிறைவேற்றவேண்டும் என்று மந்திரங்கள் சொன்னாலும், அதற்கு உறுதுணையாக விரும்பிச் செய்வது – செய்யவைக்க உறுதுணை என்று மந்திரங்கள் சொல்வது பெண்கள்தான்! அந்தப் பெண் வாழ்க்கத் துணையாக, வாழ்க்கை வண்டியின் உறுதுணையாக இழுக்காவிடில் ஆண்களால் எதையும் செய்ய இயலாது என்று வேதங்களும் உணர்ந்து சொல்லியுள்ளன.