ஸ்ரீராமானுஜர் மற்றும் வைணவ ஆசாரியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் முன்வைத்து சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் அவர்கள் எழுதியுள்ள குறுநாவல் ‘நான் இராமானுசன்’…. “ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.. பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது இந்த நூல் துலங்கி நிற்கிறது. ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, நூல் உருக் கொண்ட கதை இதுவே…. ”
View More ‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்Tag: வைணவர்கள்
அனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்
நீ யாவன் எந்த சாதியில் வந்து பிறந்துளாய்? இறந்து போன சண்டாளன் எந்தச் சாதியோ? என்ன குலத்தவனோ?, அவனது உடலைத் தாயாதிபோலச் சுமந்து கொண்டுபோய்ச் சுடலை சேர்த்த்துத் தகனமும் செய்.தாய். அப்படிச் செய்ததனால் நீசத்துவம் அடைந்து விட்ட நீ, எங்கள் வீட்டு வாசலின் முன்வருதற்குக் கூடத் தகுதி யில்லை. அப்படி இருக்க, எப்படி எங்கள் வீட்டினுள் வரலாம், வந்து உன் வீட்டில் உணவுண்ண அழைக்கலாம்? உன்னுடன் பேசியதற்கே நாங்கள் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று அறிவாயாக உன்னைப் போல ஒழுக்கம்(!?) நிறைந்தவன் இல்லத்தில் காகம் கூட இரை எடுக்காது, அப்படியிருக்க நாங்கள் வந்து உண்போம் என நினைக்கின்றாயா? பேசாமல் வந்தவழி பார்த்துப் போ’ எனப் பழித்தும் இழித்தும் கடுமொழி சிந்தினர் [..]
View More அனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்