அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத யூதர்கள் என்ற ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது? அந்த பயங்கரவாதிகளை ஏன் காக்க வேண்டும் – அவர்களுடன் என்ன உறவு, மத ரீதியிலானதை தவிர?… முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் முஸ்லிம் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்… ”இந்த அங்கியை அணிந்தால் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக அந்தக் குழந்தை சொன்னது சுருக்கென்று தைத்தது. ஆனால் அவள் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார். 7 வயது குழந்தைக்கு ஹிஜாப் என்ற அந்தக் கருப்பு அங்கியை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?…
View More நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை