ஒருவரிடமோ, அல்லது ஒரு துறையிடமோ அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அமெரிக்கத்தந்தையர், அதிகாரத்தை மூன்றாகப் பங்கிட்டனர். அத்துடன் நிற்காது, அந்த மூன்று பிரிவுகளும் தங்கள் மனம்போனபோக்கில் நடந்துகொள்ளாமலிருக்க, தடைகளையும், சமப்படுத்துதலையும் [Checks and Balances] செய்யும்வண்ணம் அரசியல் அமைப்பை எழுதிவைத்தார்கள்.
மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையுடன் இயற்றப்படும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க அதிபரால் மறுக்கவியலாது. இந்த உரிமையின்மூலம், அதிபர் சர்வாதிகாரியாகச் செயல்படுவது மட்டுப்படுத்தப்ப்டுகிறது.