‘கடவுள் இல்லை’ என்று சொல்லும் ஈ. வெராவின் திராவிட இனவாதக் கோரிக்கையை எதிர்த்து, ‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழ் எழுதியது. ‘திராவிட நாட்டில் அல்லாவுக்கும் குர் ஆனுக்கும் இடமிருக்காது’ என்று அது எச்சரித்தது.
“…நபிகள் நாயகம் விழாக்களுக்கு நமது அண்ணாவும் பெரியாரும் போகாமல் நடந்தது கிடையாதே – பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதாரம் நம்மைப்போல யாரும் தந்தது கிடையாதே – அவர்களும் திராவிட முஸ்லிம்கள்தான் என்ற எண்ணத்தை நாம் மாற்றியது இல்லையே…”
–மு. கருணாநிதி/ ஆறுமாதக் கடுங்காவல்