வீடுபெறச் செல்!

“சுயநலமிகளே, நீங்கள் நல்லாயிருக்க மாட்டீர்கள்!” என்று சபித்தார், சிங்காரவேலனர். அவரை யாரும் கவனிக்கவில்லை. ஏனோ, அவரைத் தூக்கிவிட மற்றவருக்கு இரக்கம் வரவில்லை. அந்தக் கூட்டத்தில் அவரைக் குனிந்து தூக்கினால் தம்மை மற்றவர்கள் மிதித்துத் தள்ளிவிட்டால் என்ன ஆகும் என்பதே அவர்கள் மனதில் தோன்றித் தடுத்தது. சிங்காரவேலன் கீழே கிடப்பதைக் கவனிக்காமல் அவரை மிதித்துத் தள்ளியவாறே பலரும் செல்லக் கண்டனர். அதைப் பார்க்கச் சகிக்காமல் மற்றவர் ஸ்ரீநிவாஸைப் பின்தொடர்ந்தனர்.

View More வீடுபெறச் செல்!

வீடுபெற நில்!

“அங்கே போய்ப் பார்க்காதவரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நாம் காண்பதெல்லாம் வெறும் மனப் பிரமை. கண்ணைக்கூசும் வெளிச்சம் பலவிதமான இல்லாத தோற்றங்களை உண்டுபண்ணுகிறது.”
“ஒண்ணைப் பார்க்காதாதுனாலே அது இல்லேன்னு நம்ம சிங்காரவேலர் சொல்றார். அந்த மலைலே ஏறி வெளிச்சத்திலே போய் மறையறவங்க யாரும் திரும்பி வரதாக் காணோம். மலைலேந்து உருண்டு விழறவங்க தூரத்திலே வீடு வேணும்கற கூட்டத்தில கலந்துடறாங்க. அதைப் பார்த்து நாம நம்ம மனசுக்குத் தோணினதைச் சொல்றோம். மலைக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாம வெளிச்சம்தான் நம்ம கண்ணை மறைக்குது. ”
“ஏன்? நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்?”

View More வீடுபெற நில்!