அவுரங்கசீப்பின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லும் மா-அசிர்-இ ஆலம்கிரி, 1669-ஆம் வருடக் குறிப்பொன்றில், “முட்டாள் பிராமணர்கள் தங்களுடைய கேவலமான புத்தகங்களை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு – இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு – சொல்லித் தருகிறார்கள். அவர்களிடம் படிக்க தூர, தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் இவர்களின் கேவலமான அறிவியலைப் படிக்க வருவதாக அவுரங்கசீப்பிற்குத் தெரியவந்தது. இதனால் கடும் சினம் கொண்ட அவுரங்கசீப், எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் காஃபிர்களின் கோவில்களையும், அவர்களின் பள்ளிகளையும் தயக்கமின்றி இடித்துத் தள்ளும்படி அவரது ஆட்சியின் கீழிருந்த அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் (கவர்னர்கள்) உத்தரவிட்டதுடன், இனி ஒருபோதும் காஃபிர்கள் தங்களின் வேதங்களை ஓதுவதையும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதையும் அனுமதிக்கவே கூடாது” என உத்தரவிட்டதாகக் கூறுகிறது.
View More வன்முறையே வரலாறாய்… – 12