டிரம்ப்புக்கு ஆதரவாக டெட் குரூசும், எதிராக அரிசோனா செனட்டர் கிரிஸ்டன் சினெமாவும் பேசினர்.
அச்சமயம், டிரம்புக்கு ஆதரவாகத் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்திலிருந்த பலநூற்றுக்கணக்கான போக்கிரிகள், சட்டப் பேரவைக்குக் காவலாக நின்றிருந்த காவலர்களை அடித்துநொறுக்கிக்கொண்டு சட்டப் பேரவைக்குள் நுழைந்தனர். கதவை மூடமுயன்ற காவலர்களுல் ஒருவரான ப்ரையன் சிக்னிக் என்ற காவலரைத் தலையில் அடித்து கதவுக்கு இடுக்கில் நசுக்கிப் படுகாயப் படுத்தினர். சிக்னிக், நாட்டுக்காக போர்புரிந்து திரும்பிய இராணுவ வீரர். கடைசியில் தாய்நாட்டின் எதிரிகளுடன் போராடிப் படுகாயத்தினால் மறுநாள் வீரமரணமடைந்தார்.