மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன… ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன? வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை உருவாக்கும். இந்தியா சகல துறைகளிலும் பல பத்தாண்டுகளுக்கு பின்னால் தள்ளப் படும். இந்தியா முழுக்க மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தாக்கப் படும். குண்டுகள் வெடிக்கும். அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாவார்கள்.. அபாயகரமான, மோசமான, பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம்? இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்?…
View More 2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?Tag: கூட்டணி ஆட்சி
நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01
இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.
View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01