தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.
“பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.”
Tag: திருக்கேதீஸ்வரம்
ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்
இலங்கையின் வன்னி பகுதி மேற்கே மன்னாரையும் கிழக்கே திருகோணமலையையும் எல்லையாகக் கொண்டது. இவ்விரு எல்லைகளிலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவை உள்ளன… இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்… கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார். இன்றும் இக்கிராமத்தில் இக்கோவில் சிறப்புடன் விளங்குகின்றது….
View More ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்
புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார்… ‘எந்த விக்கிரகத்தின் வலது கால் அசைவதைக் காண்கிறாயோ, அதுவே சரியானது என்று காட்டு’ எனக் கட்டளையிட்டாள்… “ஒரு மார்பிழந்த திருமாபத்தினி” என்று போற்றப்படும் கண்ணகியின் கற்பு அவளை தெய்வீக நிலைக்கு உயர்த்தியிருக்கிறது… அம்பாள் திருவடிவத்தை கிறிஸ்துவின் அன்னையான மரியாள் என்று காட்டினார்கள். வந்தவர்கள் மகிழ்ந்து அக்கோயிலை கத்தோலிக்க மரபுப்படி மாற்றி ஜெபமாலை மாதா என்று போற்றினார்களாம்..
View More கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்