இது ஒரு சாலைப் பயண சினிமா. ப்ரேசில் நாட்டின் வறுமையும், வறட்சியும் நிறைந்த வடக்குப் பகுதியில் இருந்து 1000 ரியாஸ் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தன் 7 பேர்கள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றும், அந்த ஆயிரம் ரூபாய் வேலை ரியோ டி ஜெனிராவில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நான்கு சைக்கிள்களில் ரியோவை நோக்கிக் கிளம்பி விடுகிறான்…. இந்தியாவிலும் வறுமை உண்டு, அசுத்தங்கள் உண்டு, சாக்கடைகள் உண்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி நமக்கு இன்னும் ஆன்ம நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அந்த ஆன்மாவை இந்த தென்னமரிக்க நாட்டினர் முற்றிலுமாக இழந்து விட்டனர் என்று தோன்றுகிறது. வெறுமை மட்டுமே மீதம் இருக்கின்றது…..
View More திரைப்பார்வை: The Middle of the World