அன்புக் காதலியான மனைவி, தன்னை உயிருக்குயிராகக் காதலிக்கும் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலன் வீட்டிற்குச் சென்றால், தன் கௌரவத்திற்கும், தன் குடும்பத்தின் நற்பெயருக்கும் இழுக்கு வந்து சேர்ந்ததே, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோமே என்று அணுஅணுவாக மனதிற்குள் புழுங்கி இறந்துபோகவோ, அல்லாது தற்கொலை செய்துகொள்ளவோ, நேரிடும்.
View More சாணக்கிய நீதி – 7Tag: பெற்றோர்
இன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்
சிரவண குமாரன் கதை என்று ஒன்று இராமாயணத்தில் வரும். பெற்றோரின் சேவையை உயிரினும் மேலாக கொள்வதே மகனின் கடமை என்பதை உணர்த்த சனாதன தர்மத்தில் இந்த கதை அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. அதை போன்றதொரு சம்பவம் ஒரிசாவில் சமீபத்தில் உண்மையிலேயே நடந்துள்ளது…இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் கார்த்திக் சிங் தன் பெற்றோரை ஒரு காவடியில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 40 கிலோமீட்டர் கால்நடையாகவே சென்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார், தன் மேல் போடப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக… இந்த தேசம் பன்னெடுங்காலமாக தன் ஆன்மாவை இழக்காமல் உள்ளது. பெரும் பேராசைக்காரர்களும், திருடர்களும், கொள்ளையர்களும், பணப்பேய்களும் மலிந்துவிட்ட காலத்தில் கூட கடந்த காலத்தின் எச்சம் இன்னும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது….
View More இன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு
அந்தப் பெண் அந்தச் சிறுவனை அணைத்துத் தூக்கி அவசரமாய் வெளியில் கிளம்ப முயன்றார். அந்தப் பையன் தரையில் படுத்துக் கொண்டு பிடிகொடுக்காமல் கையையும் காலையும் ஆட்டியபடி புரண்டு அழுது கொண்டிருந்தான்…. ”உலகம் உன்னையும் என்னையும் நார்மல்-னு சொல்லுது. ஆனால் நீயும் நானும் ஒரே மாதிரியா இருக்கோம்? இந்தக் குழந்தைகள் தலையில் ஒரு வார்த்தையைக் கட்டி, அதனாலேயே அவங்களை ஒதுக்கத் தேவையில்லை… ஆட்டிஸம் இருக்கற எல்லாரையும் குறைபாடு இருக்கறவங்களாப் பார்க்க வேண்டியத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகள் இப்ப ஆட்டிஸமை குறைபாடு-னு பார்க்காம வேறுபாடு-னு பார்க்கத் துவங்கியிருக்காங்க….”
View More ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு