ஒருவன் கழுதை ஒன்றையும், கணிகை ஒருத்தியையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கிறான். சிலநாள் சென்று அவன் கழுதையை மட்டும் பார்க்கும்போது அங்கே கணிகையும் வந்திருப்பாள் என்ற அனுமானத்திற்கு வரமுடியுமா? முடியாது. ஏனென்றால் நெருப்பு இல்லாத இடத்தில் புகையில்லை என்று மேற்கோள் காட்ட்டப்படும் அந்த எதிர்மறை உடன்நிகழ்ச்சியாகிய வெதிரேகம் (வியதிரேகம்) பொருளின் இருப்பைச் சாதிக்கும் என்றால் நாய்வால் இல்லாத கழுதையின் பிடரி மயிரைக் கண்டவன் அது நாய்வாலோ அல்லது நரி வாலோ என்று மயங்குகிறான். அங்கு இரண்டுமே இல்லை என்று தெளிகிறான். அவனே வேறொரு இடத்தில் வால் ஒன்றைக் கண்டு இது நாய்வால் இல்லை என்று துணிந்தால் நரிவாலும் இல்லை என்று துணியலாமா? கூடாது.
View More தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30