சாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன்? அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன்? இல்லையே சாமி! நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன். அது தப்பா சாமி? அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி! அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன்? பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன் சாமி ஒரு சொல்லு நான் கேக்கலே? இதுதான் சாமி என் கேள்வி! எனக்குப் பணம், காசு, சொத்து எதுவும் வேணாம். நல்ல சொல்லுதான் சாமி வேணும்.
View More தகுதி யாருக்கு? [சிறுகதை]