யாழ்ப்பாணத்து அரசகேசரி என்பார் காளிதாசரின் இரகுவம்சத்தை தமிழில் செழுங்கவிகளாக.. பெருங்காப்பியமாகப் படைத்திருக்கிறார்.. இளமைக்காலத்தைத் தமிழ்நாட்டில் கழித்த அரசகேசரி, யாழ்ப்பாண அரச வம்சத்தைச் சேர்ந்தவராதலில் தமது வம்சத்திற்கும் தெய்வீகத் தொடர்பைக் கற்பிக்க இக்காவியம் மூலம் முயன்றிருக்கலாம்.. இந்நூலில் வெளிப்படும் கவித்துவச் சிறப்புக்கும் மேலாக வித்துவச்சிறப்பு விரவியிருக்கிறது.. அரசகேசரி ஒரு கவிஞனாக, மந்திரியாக, முடிக்குரிய இளவரசனின் பாதுகாவலனாக, பக்திமானாக, இன்னும் போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்களிடமிருந்து யாழ்ப்பாண அரசை காக்க முனையும் வீரனாக பல பரிணாமங்களைப் பெறுவது…
View More தமிழில் ரகுவம்சம்