முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் கவர்னர் எல்லிஸ் காலத்திலும் கூட ம்யிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் அடைந்து போன நாளாக, மாசி உத்திர நட்சத்திர நாளும் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது.. திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்திய கருணாநிதி, அண்ணாதுரை, மறைமலை அடிகள் முதலான அனைவரையும் துாக்கி எறிந்து, 300 ஆண்டு வழக்கத்தையும் துச்சமென மதித்து, தை மாதம் இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படும் என்றும், இதுவே தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் எனவும், 2008ல் அறிவித்தார்… கருணாநிதியின் தை மாதம் ஆண்டு பிறப்பு என்ற கலாசாரத் திரிபை நீக்கி, பழையபடி சித்திரையே, தமிழ் ஆண்டு பிறப்பு என ஜெயலலிதா அறிவித்தார். திருவள்ளுவர் தினத்தையும் மாற்றுகிறேன் என்று சொன்னார். அதைச்செய்ய முடியாமல் அவர் மறைந்தது பெரும் குறையே…
View More வைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்