நீங்கள் பார்க்கிற கொளபாய் படங்களின் அடிப்படை அதுதான். ஆச்சரியம் என்னவென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த செவ்விந்தியன் வில்லனாகக் காட்டப்பட்டான். அவனைத் துரத்தியடித்து அல்லது கொன்று அவனது நாட்டைப் பிடிக்க வந்த வெள்ளையன் நல்லவனாகக் காட்டப்படுவான்! இன்றுவரை அதுதான் தொடர்கிறது… சட்டர் என்பவர் ஒரு ரிட்டையர்ட் ராணுவ ஜெனரல்.அவரிடம் வேலை செய்து கொண்டிருந்த ஒருவன் அந்த ஆற்றங்கரையில் சிதறிக் கிடந்த தங்கத்தைக் கண்டெடுத்தான். அந்தத் தங்கத்தை எடுத்துக் கொண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ வீதிகளில் “Gold!” எனக் கத்திக் கொண்டு ஓடியது அமெரிக்காவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது…
View More அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்