என்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து ‘உலாத்திக்’ கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா? ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே? நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா?… திடீரென்று ஒரு சலசலப்பு! பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது….
View More உண்மையான ரசிகன்