பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்Tag: ராணுவ நிர்வாகம்
சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு
(எழுதியவர்: வி. சண்முகநாதன், பா.ஜ.க செயலர்) நம் நாட்டின் சாதாரண குடிமக்கள், ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங்கின் அமைதியான, சீரியசான, சிந்தனையில் ஆழ்ந்த முகத்தைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். இப்படிப்பட்ட அப்பாவித்தனமான தோற்றத்துக்குப் பின்னே, சி.பி,ஐ யினை துஷ்பிரயோஒகம் செய்யும் கையும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
View More சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசுபாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்
மெழுகுவர்த்தியை முத்தமிட்டுக் கொண்டு எப்படியாவது சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் உரைத்துக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. காட்டுமிராண்டித்தனமாக, மூர்க்கத் தனமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதிலடி கொடுக்காமல் சமாதானம், சமாதானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பது எந்தப் பயனையும் தரப்போவது இல்லை.
View More பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்