ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக இந்தியா முழுவதுமான பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு சில தினங்களில் நடத்தி முடிக்கப் பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப் பட்டன. ஆனால் பரவலான நவீனமான தொலைத் தொடர்பு வசதிகளும் தேர்தல் இயந்திரங்களும் இருக்கும் இன்றைய சூழலிலும் கூட தேர்தல் நடத்த 2 மாதங்கள் எடுத்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒரு மோசமான திறனற்ற செயல்பாடாகவே கருதப் படும்… தேர்தலை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வக்கில்லாத இந்தத் தேர்தல் ஆணையம் பல காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை மட்டுமெ அதிகாரத் திமிருடன் ஒரு தலை பட்சமாக பயன் படுத்தி வருகிறது. தவறு செய்பவர்களையும் பணம் பட்டுவாடா செய்பவர்களையும் கைது செய்ய துப்பில்லாத, அதிகார பீடத்துக்கு அடி பணிந்து நடக்கும் சம்பத் ஒரு மோடி தனது படத்தைப் போட்டவுடன் அதை உலக மகா குற்றமாகக் கண்டு பிடித்து அவரைக் கைது செய்யத் துடிக்கிறார்… ஆளும் காங்கிரஸ் கட்சியினரின் அடிமைகளைக் கொண்டு முற்றிலும் திறமையற்ற விதத்தில் மிகக் கேவலமாகவும் மிக மோசமான திறமையற்ற முறையிலும் நடத்தப் படும் இந்த ஆணையம் உடனடியாக சீர்திருத்தப் பட்டு காலாவதியான சட்டங்கள் களையப் பட்டு வளர்ந்த ஜனநாயக நாடுகளில் கடை பிடிக்கப் படும் சிறப்பான முறைகள் பின்பற்றப் பட்டு சீரமைக்கப் பட வேண்டும்…
View More தேர்தல் ஆணையத்தின் அராஜகம்Tag: வாக்களிக்கப் பணம்
திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்
1995-ல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 4 உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வென்றது காங்கிரஸ். அதனை அன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் பாஜக தலைவர் வாஜ்பாய்…. பல மந்த நிலைகளைத் தாண்டி ஊர்ந்து வந்த வழக்கின் இறுதியில், அமர்சிங், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்…காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, ‘திருவாளர் புனிதர்’ மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் தொடர்கின்றனர்….
View More திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்