ஒரொரு மாநிலத்துக்கும் அங்கே இருக்கற மாநிலச் செயலர்தான் (Secretary of State) வாக்குச் சீட்டுகளை எண்ணி, பட்டியலிட்டு, முடிவுகளுக்குச் சான்றளிக்கவேண்டும். ஒவ்வொரு கவுன்ட்டியிலேயும் – அதுதாங்க, இந்தியா மாவட்டம் மாதிரி — ஒரு பதிவாளர் இருப்பார். வாக்குகளைச் சேகரித்து, அதை எண்ணி, பட்டியல்போட்டு, அதுக்குச் சான்றளித்து, மாநிலச் செயலருக்கு அனுப்பவேண்டியது அவர் பொறுப்பு. ஒரு மாநிலத்திலே (டெக்ஸாஸ்) 254 கவுன்ட்டிகள், வாஷிங்டன் டி.சி.லே ஒரே ஒரு கவுன்ட்டிதான்.
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3