வழக்கமாக சுதந்திர தினம் நியூயார்க் நகரத்தில் உற்சாகமாக இருபுறமும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் போன்ற மக்கள் கூடி நிற்க, நடிக – நடிகைகள், விளம்பர பேனர்கள் போன்றவற்றுடன் நடந்து முடியும். ஆனால் இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாக சுதந்திர தின ஊர்வலம் நடந்தேறியது. ஹிந்து மனித உரிமை அமைப்பின் அணிவகுப்பில் அக்ஷர்தாம் கோவில், அஹமதாபாத் வெடிகுண்டு வைப்பு, அமர்நாத் புனித யாத்ரீகர்களின் உரிமை என ஹிந்துக்களை எதிர்நோக்கி இருக்கும் பல பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அணிதிரண்டிருந்த பார்வையாளர்களை உலுக்கியது காஷ்மீர ஹிந்துக்களின் நிலையை விளக்கிய புதினமே!
View More அந்த காஷ்மீரப் பாட்டி!