நான் சொன்னேல்ல, நம்ம கோவில் திருவிழாவுக்கு அவங்க ஆளுங்க எதுக்கு. வெறும் மாலைய மட்டும் வாங்கிட்டு போகவா? பிராசாதம் வாங்கிப்பாங்களா, குங்குமம் வச்சுப்பாங்களா? துளசி வாங்கிப்பாங்களா?….. டேய், ராவுத்தர் அப்பா எல்லாம் வாங்கிட்டிருந்தவர்தான், நானே சின்ன பிள்ளைல பாத்திருக்கேன். ராவுத்தரும் அப்படி இருந்தவர்தான், பின்னாடி அவங்க ஆளுங்க கொஞ்சம் சங்கடப்படறாங்கன்னு ஜாடையா சொன்னாப்ல, அதனால நாமளும் அத மதிச்சி ஒன்னும் தர்றதில்ல…. சற்று யோசித்த கவுண்டர், “வேண்டாம்யா, ஒவ்வொரு ஜாதிக்கும் வடக்கயிறுல பங்கிருக்கு, எங்க ஜாதிப் பங்க வெட்டிடாங்கன்னு கலாட்டா வரும், எதுக்கு. பாத்து சமாளிச்சிக்கலாம், கட்ட போடறவங்கள கொஞ்சம் பாத்துக்க சொல்றேன்”…
View More தலைமுறை [சிறுகதை]