தூக்கம் கண்ணைச் சுற்றியது. கண்ணயர்ந்துவிட்டேன்.
திடுமென்று விழித்துக்கொண்டேன் நான். என்னைச்
சுற்றிலும் ஒரே இருட்டு. பயமாக இருந்தது. என்னைப் பெற்றவளைத் தேடினேன். பிறகுதான் அவள் இல்லை என்ற உணர்வு வந்து உறுத்தியது. அவளது கணகணப்பான உடம்பில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும்
என்ற ஆவல் எழுந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்தேன். அப்பா’வின்
நினைவு வந்தது. அவர் எங்கே?