கடந்த 12 வருஷங்களாக குஜராத் மாகாணத்தில் சண்டை சச்சரவுகள் மதக்கலஹங்கள் இவையெதுவும் இல்லாமல் அமைதி நிலவுகிறதே. அதனுடைய மிகப்பெரும் பயனை அடைந்து வருபவர்கள் முஸ்லீம்கள். அதுவும் அடிமட்டத்தில் இருக்கும் முஸ்லீம் சஹோதரர்கள். ரிக்ஷாகாரர்கள் போன்று சமூஹத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் அடைந்த நிம்மதி மற்றும் பொருளாதார வளர்ச்சி மிகவும் உகக்கத் தக்கது…. கேழ்க்கப்பட்ட கேழ்விகள் அனைத்திற்கும் விவாதத்தில் பங்கு பெற்ற ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகளும் தெளிவான நேரடியான பதில்களை அளித்தார்கள் என்பது போற்றத் தக்கது. ப்ரதமராகப் பதிவி ஏற்க இருக்கும் மோதி அவர்கள் ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்பது சரியான எதிர்பார்ப்பு….
View More மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3Tag: முஸ்லிம் அமைப்புகள்
மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2
சஹோதரரே, நம்முடைய விரோதி யார் நண்பர் யார் என்ற விஷயத்தைக் கூட இன்னொரு அரசியல் கட்சி தான் நமக்குச் சொல்லித்தர வேண்டுமா? முஸல்மாணியர்களாகிய நாம் நாமாகவே இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாதா? குஜராத்தில் மோதி சர்க்கார் ஹிந்துக்களுக்காக அல்லது முஸல்மான் களுக்காக என்று ப்ரத்யேகமாக எந்த கார்யத்தையும் செய்வது கிடையாது. மோதி அவர்கள் எப்போது பேசினாலும் 6 கோடி குஜராத்திகள் என்று அனைத்து குஜராத்திகளுக்காகவும் தான் பேசுவார். அதே போல ஹிந்துஸ்தானம் என்று வரும் போது 125 கோடி ஹிந்துஸ்தானியரைப் பற்றியே பேசுகிறார். நாம் எல்லோரும் அதில் அடக்கம்…. அருகாமையிலேயே கல்விச்சாலைகள் இன்று இருப்பதால் ஒவ்வொரு கல்லூரியிலும் புர்க்கா / ஹிஜாப் (முகத்திரை) அணிந்து முஸல்மாணிய பெண்கள் கல்வி கற்பதை குஜராத்தின் பல நகரங்களில் இன்று காணலாம். இந்த அளவுக்கு இது வரை குஜராத் மாகாணத்தில் வேறு எந்த முக்ய மந்த்ரியும்…… நரேந்த்ரபாய் மோதி அவர்களைப் போல்….. ஒரு கூர்மையான பார்வையுடன் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கல்வியை அணுகவில்லை….
View More மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1
“மோதி அவர்கள் கிட்டத்தட்ட 20 – 30 நபர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 250 முஸ்லீம் குழுக்களுடன் அவ்வப்போது அளவளாவியிருக்கிறார். ஒவ்வொரு அளவளாவலும் ஒரு மணி நேரமாவது நிகழும். அப்போது மிக வெளிப்படையாக அவர்களுடன் சம்வாதம் செய்வார். அப்போது அவர் சொல்லியிருக்கிறார். குஜராத் மாகாணத்தில் முஸல்மாணியர் ஜனத்தொகை 9 – 10 சதமானம் தான். நீங்கள் ஓட்டுப்போடாவிட்டாலும் கூட நான் ஆட்சியைப் பிடித்து விட முடியும். ஆனால் உங்கள் ஆதரவு இல்லாமல் என்னால் ஒரு முழுமையான ஆட்சி நடத்த முடியாது என்பது நிதர்சனம் என்று சொல்வார். முஸ்லீம்களின் ஓட்டு எனக்கு கிடைக்கிறதா இல்லையா என்பது அடுத்த பக்ஷம். 20 கோடி முஸல்மாணியரை நான் அரவணைத்து செல்ல வேண்டும் என்று சொல்வார்” என்கிறார் ஜாஃபர் ஸரேஷ்வாலா.. குஜராத் மாகாண பாஜக Spokesperson என்ற பொறுப்பில் பணியாற்றும் மோ(ஹ்)தர்மா ஆஸிஃபா கான் சாஹிபா என்ற பெண்மணியும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்…
View More மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?
கலிபோர்னியாவில், செரிட்டாஸ் என்ற இடத்தில் வசிக்கும் ‘நகோலா பாசிலி’ (Nakola Bacile) என்ற அமெரிக்கன் தான் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவன்… அமெரிக்கச் சதியோ, கிறிஸ்தவச் சதியோ, ஏதாகிலும் இருக்கட்டும். அதற்கு, சென்னை, அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சாதாரண மக்களின் வாகனங்கள் என்ன பாவம் செய்தன?… நம்பாத பிற மதத்தவர்கள் மீதான காழ்ப்புணர்வு இஸ்லாமியர்களிடம் மண்டிக் கிடக்கிறது… சென்னையில் நடந்த முஸ்லிம்களின் வன்முறை வெறியாட்டத்தை தமிழில் ‘தினமணி’ நாளிதழ் (20.09.2012) மட்டுமே கண்டித்தது… அடுத்த உலகப்போருக்கு ஒரு ஒத்திகையாகவே இன்றைய சதியைக் காண வேண்டும்… அதற்கு, அந்த அளவற்ற அருளாளனும், பகைவரையும் நேசிக்கச் சொன்ன தேவதூதனும் தான் காரணமாக இருப்பார்கள்…
View More வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?