மூங்கில் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 1290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்தது உடனே நம் ஊர் அறிவாளிகள் நக்கல் அடித்து மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கோமாளி கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் குறுகிய காலத்தில் ஒரு 40000 கோடியையும் நீண்ட கால நோக்கில் ஒரு லட்சம் கோடிக்கு மேலும் சம்பாதித்து கொடுக்க கூடியது இந்த மூங்கில் துறை. தமிழ்நாடு முதல் திரிபுரா வரை கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வுரிமையையும் ஏற்படுத்த வல்லது என்பதை இந்த முட்டாள்கள் சிந்திக்கவில்லை. இந்த அறிவிப்பை வடகிழக்கு மாநிலங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றன… நேரடியாக வரவு செலவு அறிக்கை மட்டுமே இன்று பட்ஜெட்டில் வாசிக்கப்படுகிறது. பலருக்கு இன்னும் அது பிடிபடவில்லை இவர்கள் வரியை ஏற்றியும் குறைத்தும் கதாகாலட்சேபம் நடத்தும் நிதிநிலை அறிக்கைகளையே பார்த்து பழகிவிட்டார்கள் இன்று இது வரி வருவாய் இன்ன துறைக்கு இவ்வளவு ஒதுக்கப்பட்டிருந்தது அவ்வளவு தான் என்று நறுக்குத்தெரித்தார் போல வாசிக்கப்படும் அறிக்கைகளை பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. இவர்கள் மரமண்டைக்கு பட்ஜெட் என்றால் என்ன என்று புரிய இன்னும் ஒரு மாமாங்கமாகும்…
View More அடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்Tag: வருமான வரி
மோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்
வரி விதிப்புகளில் ஏற்ற தாழ்வுகள் மாற்றங்கள் வருவது எந்த நாட்டிலும் சகஜமே. இந்தியாவில் வரி கட்டுபவர்களே 3% மட்டுமே. வருமான விளிம்பை நீட்டிப்பதன் மூலமாக அந்த 3%க்கும் கீழே போய் விடும் அபாயம் உள்ளது. ஆரோக்யமான பொருளாதாரத்தில் அதிக சகவிகித மக்கள் வரி வலைக்குள் வர வேண்டும்..இந்தியா போன்ற ஒரு சிக்கலான நாட்டில் எல்லாமே கஷ்டம் தான். சிக்கல் தான். எதற்கும் எளிய தீர்வுகள் கிடையாது. தொலை நோக்குப் பார்வையும் ஊழலற்ற அரசையும் கூடுமானவரை அளிப்பவர்களை ஆதரிக்கிறேன். அந்த அளவில் மோடிக்கு மாற்றாக இந்தியாவில் வேறு எவரும் உருவாகாத வரை அவருக்கே என் ஆதரவு தொடரும்.. இன்று மோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று கேட்டது போல இதற்கு முந்தைய மன்மோகன் ஆட்சியில் சொன்னதுண்டா? முதலில் நேருவிய காங்கிரஸ் மாஃபியா ஆட்சிகளில் எத்தனை கோடி வேலைகளை உருவாக்கினார்கள்? மோதி அரசில் முத்ரா கடன் மட்டுமே கிட்டத்தட்ட 2.5 கோடி பேர்களுக்காவது குறைந்த பட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியிருக்கும். பிற கட்டுமானத் திட்டங்கள் மூலமாகவும் சில கோடி வேலைகள் உருவாக்கப் பட்டிருக்கும்…
View More மோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்இது தாண்டா பட்ஜெட்!
இந்த ஆண்டுதான் உண்மையான நிதிநிலை அறிக்கை சுதந்திர இந்தியாவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த்தகைய முன்மாதிரி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க மோடி அரசுக்கே நான்காண்டுகள் ஆகி இருக்கின்றன. ஏனெனில், இதற்கான அடிப்படையை கடந்த ஆண்டுகளில் அரசு உருவாக்கி வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி.யும் அவற்றின் இரு பகுதிகள் மட்டுமே… நாட்டிலுள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களில் உள்ள 50 கோடி பேர் பயனடையும் விதமாக, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வசதி பெறும் வகையிலான மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். விவசாயத் துறையில் கடன் வழங்க ரூ. 11 லட்சம் கோடி இலக்கு. ஊரக வளர்ச்சிக்கு ரூ. 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு… 2019ல் தேர்தல் வரவுள்ளதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று ஊடகங்கள் கட்டியம் கூறின. ஆனால், மோடியும் ஜேட்லியும் தாங்கள் சாதாரண அரசியல்வாதிகள் அல்லர், எதிர்காலத் தலைமுறையைக் கருதும் தலைவர்கள் என்பதை இந்த பட்ஜெட் மூலம் நிரூபித்திருக்கின்றனர்…
View More இது தாண்டா பட்ஜெட்!பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்
ஏறக்குறைய எல்லா பணமும் திரும்பி வந்து விட்டது என்பது நம்ப முடியாத ஒன்று. அந்த அளவுக்கா அம்புட்டு யோக்கியவானாகவா இந்தியர்கள் அனைவரும் மாறி விட்டார்கள்? இருக்காது. எப்படியோ பணத்தை கை மாற்றி கை மாற்றி வங்கிகளுக்கு வருமாறு செய்து விட்டிருக்கிறார்கள். காப்பானை விட கள்ளன் தான் பெரியவன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்…. இப்போது விசாரணையில் இருக்கும் 18 இலட்சம் பேரின் முந்தைய ஆண்டு வருமானங்களுக்கும் பணமதிப்பிழப்பின்போது அவர்கள் வங்கிகளில் செலுத்திய தொகைக்கும் ஒத்துப் போகவில்லை என்று வருமானவரித்துறை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது. இதில் ஐந்தரை இலட்சம் பேர் அபராதத்தோடு வரி கட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மீதி பேர் மீது வருமானவரித்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்….
View More பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்