[முன்குறிப்பு: மேற்கத்திய இதழான ‘ஸண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் 26-10-2008 அன்று வெளியான இந்தக் கட்டுரை சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. தமிழ்இந்து.காம் மத நல்லிணக்கத்தை பேண விரும்பும் இணையதளம். மாற்று மத சகோதரர்களைப் புண்படுத்தும் எண்ணம் அதற்கு இல்லை. இக்கட்டுரை எழுப்பும் சில முக்கியமான கேள்விகளை தமிழ் இந்து.காம் தளமும் முக்கியமானவை எனக் கருதுவதால் – குறிப்பாக இந்து மதத்திலிருந்து மதம் மாறி மாற்று மதங்களுக்கு சென்ற சகோதர சகோதரிகள் ஒருவித கலாச்சார-ஆன்மிக limbo பிரதேசத்தில் இருப்பதை இந்த கட்டுரை சுட்டுவதால் இக்கட்டுரையினை வெளியிடுகிறோம். இக்கருத்துக்களை தமிழ்இந்து.காம் ஏற்கவோ மறுதலிக்கவோ இல்லை. மதம் மாறி மாற்றுமதங்களில் இருக்கும் இந்துமதத்தவரின் கருத்துக்களை தமிழ் இந்து.காம் வரவேற்கிறது. ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு இந்த சிறு கட்டுரை வழிவகுக்குமென தமிழ் இந்து.காம் நம்புகிறது – ஆசிரியர் குழு]
ஒரு வெள்ளை இனமேன்மை வாத மனம் தான் போப் பதினாறாம் பெனிடிக்ட் *இந்தியாவின்* *முதல்* பெண் புனிதரை பட்டமளித்து அங்கீகரித்ததாகக் கூற முடியும். எப்படிப் பார்த்தாலும் இம்மாக்குலேட் கன்ஸ்ப்ஷன் (Immaculate Conception) அமைப்பின் சகோதரி அல்போன்ஸா இந்தியாவின் *முதல்* புனிதை அல்லவே அல்ல. முதல் கிறிஸ்தவ அல்லது இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் முதல் கத்தோலிக்க புனிதை என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ஏனெனில் இந்தியா ஏற்கனவே அதன் மண்ணில் வளர்ந்த தெய்வீகப் பெண்களான புனிதைகள் பலரைக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், இனம் குறித்த அதீத உணர்ச்சி கிறிஸ்தவ சபையில், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் அதிகமாக இல்லாதிருந்திருந்தால் அல்போன்ஸா (“இந்தியாவுக்கான” என்றில்லாமல்) கத்தோலிக்க உலகனைத்துக்குமான புனிதையாகக் குறிப்பிடப்பட்டிருப்பார். (படம் : நன்றி: www.tribuneindia.com)
யோசியுங்கள். ஊடகங்கள் முகமது சித்திக் கானை (ஜூலை 7 2005 இன் லண்டன் வெடிக்குண்டுகளை வடிவமைத்தவன்) ஒரு பிரிட்டிஷ் பயங்கரவாதி எனக் குறிப்பிடவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதி என்றே கூறியது. அதே போல ஒரு கத்தோலிக்க புனிதை என்பவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் கத்தோலிக்க புனிதை என்றே குறிப்பிடப்படவேண்டுமேயல்லாது இந்தியப்புனிதை எனக் குறிப்பிடப்படக்கூடாது. இதைப்போலவே மகரிஷி மகேஷ் யோகி மேற்கிலேயே அதிக நாள் இருந்திருந்தாலும் கூட அவர் மேற்கத்திய ஊடகங்களால் இந்திய குரு என்றே அழைக்கப்பட்டார்.
மாறாக பக்தி ஸ்வாமி தீர்த்த கிருஷ்ணபாதர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றாலும் இந்து சுவாமி என்றே உலகெங்கும் உள்ள இந்துக்களால் அழைக்கப்படுகிறார். ஆப்பிரிக்க அமெரிக்க ஸ்வாமி என அவரை எந்த இந்து இயக்கமும் அழைப்பதில்லை.
[பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தின் அன்னை இந்துக்கள் அனைவராலும் “அன்னை” என்றே அன்புடனும், பக்தியுடனும் வணங்கப் படுகிறார், “முதல் பிரெஞ்சு அன்னையாக” அல்ல. ஹவாய்த் தீவில் சைவ மடமும் திருக்கோயிலும் நிறுவிய இந்துத் துறவி, மறைந்த சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி பிறப்பால் ஒரு அமெரிக்கர் என்ற தகவல் கூட பெரும்பாலான உலக இந்துக்களுக்குத் தெரியாது, அதற்கு அவசியமும் ஏற்படவில்லை! – ஆசிரியர் குழு]
கிறிஸ்தவர்களுக்கு இனவுணர்வின் மீதிருக்கும் அதீத பற்றினைக் (Christian obsession with race) காட்டும் மற்றொரு உதாரணத்தையும் பார்ப்போம். காதுகேளாதோருக்கான உலக அழகிப் போட்டியில் வென்ற காண்டைஸ் மார்கன் (தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்) ஏப்ரல் 15 2007 நேர்முகக்காணல் ஒன்றில் தன்னை கிறிஸ்தவர் எனக் கூறினார். ஆனால் இந்து நம்பிக்கைக்கு சான்றுரைக்கும் சின்னமான திலகத்தை அவரது நெற்றியில் வைத்திருந்தார்.
பல இந்தியக் கிறிஸ்தவர்கள் இந்து நம்பிக்கைக்கு சான்றுரைக்கும் குறியீடுகளை வெளிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் தங்களை மற்ற கிறிஸ்தவர்களிடமிருந்து குறிப்பாக கறுப்பின கிறிஸ்தவர்களிடமிருந்து பிரித்துக்கொள்ள செய்கிறார்கள். இன்னும் சில இந்திய கிறிஸ்தவர்களோ ‘புனித கல்லறைத்தோட்டங்களில்’ தம்மை புதைக்கக் கூட விரும்புவதில்லை. அவர்கள் சுவர்க்கத்துக்கு பின் கதவு வழியாக (க்ளாரே எஸ்டேட்) இந்து மயானத்தின் மூலம் நுழைந்துவிட துடிக்கிறார்கள்! அந்த இடம் கிறிஸ்தவ புனித நூலில் முன்பு ‘சாத்தானின் இடமாக’ அழைக்கப்பட்டு வந்தது என்பது நினைவிருக்கிறதா?
இனவாதத்தை வெளிப்படுத்தத் தான் எத்தனை புத்திசாலித்தனமான வழிமுறைகள் !
[மூலம்: ‘Christian church is obsessed with race’, Oct 26, 200 Sunday Times]
நன்று! உண்மையில் எல்லோரும் விவாதிக்க வேண்டியதுதான், இப்போதைய தேவை என்று தோன்றுகிறது! அப்போதுதான் அவர்களின் கொட்டம் அடங்கும்!
இனவாத, இனவெறி, இன அழிப்பு கொள்கைகளை பரப்பும் நூல்கள் தடை செய்யப் பட்டே ஆக வேண்டும்.
“உலக அமைதி”க்கு கர்த்தரின் பங்கு இதோ
மோசசிடம் “கர்த்தர்” கூறியது:
“எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”
யோசுவாவிடம் “கர்த்தர்” கூறியது:
யோசுவா, அதிகாரம் 6,
2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!
21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.
24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//
கர்த்தரின் “ஆசீர்வாதம்” இன்னும் பல உள்ளது.
இஸ்ரேல்தான் தேர்ந்து எடுக்கப் பட்ட இனம் பல பிற இனங்களை முழுவதியும் அழித்துப் போடு, இரக்கம் காட்டாதே என்று கூறியிருப்பது தெளிவாக இருக்கிறது.
இன அழிப்புத் தூண்டுதலுக்கான குற்றச் சாட்டு அந்தக் “கர்த்தர்” மேல் வைக்கப்
பட்டே ஆக வேண்டும். அவர் ஹிட்லர், ராஜபக்ஷே இவர்களுக்கு முன்னொடி போல செயல் பட்டு, இன அழிப்பையே தன் கொள்கையாக வைத்து இருந்தவர் என்பதை வருத்தத்துடன் தெரிந்து கொள்கிரோம்.
Atleast we should appeal and acheive to ban the books which supports, authenticate and probagate Genocide!
இனவாத, இனவெறி, இன அழிப்பு கொள்கைகளை பரப்பும் நூல்கள் தடை செய்யப் பட்டே ஆக வேண்டும்.
DEAR FRIEND IF YOU READ BIBLE WRONG MIND THAT WILL LOOKS LIKE WRONG. PLEASE READ FULLY AND BIBLE WORDS WILL CLEAR YOUR MIND AND HEART RAISING ARGUMENTS.
SOME FILASAPERS AND SCOLARS WHO NOT ACCEPTED BIBLE WORDS AND JESUS THEY STARTED LIKE YOU TO READ BIBLE HALF MIND AND FINALLY AT THE TIME OF COMPLITING BIBLE THEY GIVEN FULL HEART TO JESUS.