ஆஸ்திரேலிய இந்து இளைஞர் அறக்கட்டளை (Hindu Youth Foundation) குழந்தைகளுக்கான பகல்நேர முகாம் ஒன்றை 2009 ஜனவரி 10ம் நாளன்று நியூ சௌத்வேல்ஸில் உள்ள நார்த் கார்லிங்போர்டில் நடத்தியது. புராதனமான இந்துக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தமது குழந்தைகளும் பெற்றுச் சிறக்கவேண்டும் விரும்பிய பெற்றோர்களின் முனைப்பால் இந்த முகாம் உருவானது. இது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உதவியோடு நடத்தப்பட்டது.
ஐந்து முதல் பதினைந்து வயதுக்குட்பட்ட 53 சிறுவர் சிறுமியர் பங்கேற்ற இந்த முகாமில் இந்தியா, ஸ்ரீலங்கா, பிஜித்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோரின் குழந்தைகள் இடம்பெற்றனர்.
சுலோகம் ஓதுதல், யோகப்பயிற்சி, சமஸ்கிருத உரையாடல், பாகவதக் கதை, கோலப் பயிற்சி, இந்திய விளையாட்டுகள், பஜனை ஆகியவை இந்த முகாமில் பயிற்றுவிக்கப்பட்டன. குழந்தைகள் தமது பாரம்பரியத்தை அறிவதில் மிகுந்த உற்சாகம் காட்டினர். பெற்றோருக்கோ, வெளிமண்ணில் வளரும் தமது குழந்தைகள் சொல்லும் சுலோகங்களையும் பாடும் பஜனைகளையும் கேட்டுக் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
திருவாளர்கள் பிபேன் ஷர்மா, திலீப் சோப்ரா, ப்ரிஜ்பால் சிங் ஆகியோர் இந்த முயற்சியைப் பாராட்டிப் பேசினர்.
இந்நிகழ்ச்சி பற்றிய பத்திரிக்கைச் செய்தியை இங்கு காணலாம்.
உலகெங்கிலுமுள்ள இந்துப் பெற்றோர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தத்தமது குழந்தைகளுக்கு நமது உயர்ந்த பாரம்பரியத்தை அறியவும் அனுபவிக்கவும் தொடர்ந்து எடுத்துச் செல்லவும் பயிற்சி, ஊக்கம் அளிப்பது அவசியம்.
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் செய்திகளைக் கேட்கும்போது, அங்கு வாழும் நம் ஹிந்துகள் இங்கு வாழும் ஹிந்துக்களை விட சமயப் பற்றுடன் வாழ்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது.
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் திருமதி அகிலா ராமரத்தினம் அவர்கள் எனக்கு மின்னஞ்சல் மூலம் இந்த மாதிரியான செய்திகள் அனுப்பும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அவரைப் போலவே பல நாடுகளில் உள்ளவர்கள் இந்த மாதிரியான செய்திகள் அனுப்புகிறார்கள்.
நமது கலாசாரமும் பாரம்பரியமும் கடைப்பிடிக்கப்பட்டு நம் சமயம் நம்மவர்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் நன்றாக வளர்ந்து வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி, அன்புடன்
ப.இரா.ஹரன்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளால் புழகாங்கிதம் அடைந்து விட்டோம். ஆகா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்களை பற்றியும், இலங்கை அரசின் ஆதிக்க வெறி பற்றியும், இலங்கை கோவில்கள் நிலை பற்றியும் இதுவரை ஒரு பதிப்பும் தமிழ் இந்து.காம் ல் வெளி வராதது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.
அன்புடன்
பாலாஜி