இந்தியர்களின் எதிர்ப்பு ஊர்வலம்
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருந்தால் அந்த மாநில முதலமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டிருக்காதா? அந்த முதல்வரை பதவியிலிருந்து விலக்கவேண்டும் என்று வற்புறுத்தி போராட்டம் நடத்தப்பட்டிருக்காதா? ஆனால் ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக அங்கு ஊடகத்தில் முக்கியத்துவம் அளித்து எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை. முதல் கட்டத்தில் இத்தகைய நிகழ்வுகளை ஆஸ்திரேலிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பொருட்படுத்தவே இல்லை கண்களை ஈர்க்காத பகுதியில் முக்கியத்துவம் கொடுக்காமல் செய்திகள் வெளியிடப்பட்டன. பிறகு இப்பிரச்சினை தொடர்பாக வலுவான கண்டனக் குரல் எழத்தொடங்கியதையடுத்து வேறு வழியின்றி ஆஸ்திரேலிய ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
இந்தியாவில்தான் மனிதநேயம், வெளிநாட்டு மாணவர்களுக்குப் பாதுகாப்பு என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வெளிநாட்டவரின் நலனைப் பற்றி அக்கறை காட்டப்படுவதே இல்லை. அவர்களது நலனைப்பற்றி மட்டுமே அவர்கள் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களிடம் போதுமான அளவு நிதி இல்லை. எனவே கல்வி வாய்ப்பை வழங்குவதாகவும், கல்வி கண்காட்சியை நடத்துவதாகவும் கூறி வெளிநாட்டு மாணவர்களை இந்தக் கல்வி நிறுவனங்கள் ஈர்க்கின்றன. அப்பட்டமாகச் சொல்லப்போனால் இந்த நிறுவனங்களெல்லாம் பணத்திற்காகப் பிச்சை எடுக்கின்றன. இதற்கு இந்திய ஊடகங்களும் பெரும் அளவில் செய்தி வெளியிட்டு துணைபோகின்றன.
நம் மக்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. வெளிநாட்டில் அது மூன்றாம் தர நாடாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெறுவது பெருமையானது என்று இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இப்படி வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க இங்குள்ள மாணவர்கள் துடிப்பது ஏன்?
நமது கல்வி முறையிலியே சில பிரச்சினைகள் உள்ளன. இங்குள்ள பல்கலைக் கழகங்களில் கூட ஜாதிரீதியான உணர்வு உள்ளது. தரமான கல்வி புறக்கணிக்கப்படுகிறது. கல்வி வர்த்தகமயமாகிவருகிறது. பல்கலைக்கழக வேந்தர்கள் கூட கல்வித் தகுதியினால் மட்டும் நியமிக்கப்படுவதில்லை. கல்வித் தகுதிக்கு அப்பால் வேறு சில அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. கல்வித்துறையின் மீது அரசின் கட்டுப்பாடு இறுக்கமாக உள்ளது. வெளிநாட்டுக் கல்வி மோகத்திற்கு ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிறது. நீங்கள் உரிய கட்டணத்தை பாக்கி வைக்காமல் கட்டிவிட்டால் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் எப்படியாவது தேர்வு சான்றிதழைப் பெற்றுவிடமுடியும். அங்கு தோல்விக்குப் பெரும்பாலும் வாய்ப்பே கிடையாது. அந்தப் பட்டத்தின் தரம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அதற்கு இங்கு ஒரு மதிப்பு உள்ளது.
இந்தியாவில் கல்வித்துறையின் மீது உள்ள அரசின் இறுக்கமான பிடிதளரவேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் தனியார் துறையை ஊக்கப்படுத்த வேண்டும். பங்குச்சந்தையைக் கண்காணிக்க செபி (SEBI) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதைப்போல கல்வித் துறையைக் கண்காணிக்கவும் இதைப்போன்றதொரு அமைப்பை உருவாக்கவேண்டும். கல்வித்துறையில் ஒளிவு மறைவு அற்ற தன்மை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். எந்தத் தகவலைக் கேட்டாலும் உடனே அது பற்றிய தகவலைத் தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மூடுமந்திரமாக கல்வி நிலையங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது. ஊழலுக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும் விதிமுறைகளுக்குப் புறம்பாக சலுகை காட்டும் ஆரோக்கியமற்ற போக்குக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் ரூ. 20 ஆயிரம் கோடி செலவிடுகிறார்கள் என்பது சாதாரணமான விஷயமல்ல. இதைப்போல வேறு பல வெளிநாடுகளிலும் இந்திய மாணவர்கள் கல்விக்காக கணிசமான தொகையைச் செலவு செய்து வருகிறார்கள். எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டிவிடும். இந்தியக் கல்வி நிறுவனங்கள் பணப்பற்றாக்குறையால் தவிக்கின்றன. ஆனால் இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளில் கணிசமான தொகையை செலவிட்டு வருகிறார்கள் இந்த முரண்பாட்டை எப்படி புரிந்துகொள்வது?
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த ஆண்டு அரசு செய்த ஒரு காரியம் அபத்தமானது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கும் ரூ. 100 கோடி கொடுக்கப்பட்டது. ஜவகர்லால் நேருவைப் பற்றி ஆய்வு நடத்துவதற்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு தொகை கொடுக்கப்பட்டது. இந்தியாவைப் பற்றி ஆய்வு நடத்துவதற்காக ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கு தொகை கொடுக்கப்பட்டது.
கல்வி என்பதே மாநில அரசு கையாள்கின்ற ஒரு துறைதான். இப்படி இருக்கும்போது மத்தியில் மனிதவள மேம்பாட்டுத் துறை என்ற பெயரில் ஓர் அமைச்சகம் இயங்குவது தேவைதானா? 21ஆம் நூற்றாண்டில் கல்வித் துறையில் எத்தகைய இலக்குகளை எட்டவேண்டும் என்று கல்வியியல் வல்லுனர்கள் கூறிவருவது எட்டப்படுமா என்பது சந்தேகத்திற்கு இடமானதே. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இதில் கவனம் செலுத்தி தேவையில்லாத நடவடிக்கைகளை குறைத்துக்கொண்டு எது இன்றியமையாததோ அதில் மட்டும் கவனம் செலுத்த முன்வரவேண்டும். இவ்வாறு செய்தால்தான் கல்வித்துறையின் தரம் உயரும்.
பொதுவாக ஆரம்பக் கல்வியை அரசு கவனித்துக் கொள்ள வேண்டும், உயர் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால் குழந்தகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை போலி டாக்டர்களிடம் ஒப்படைத்து விட்டு முதியவர்களைக் கவனிக்கும் பொறுப்பைத் தகுதிவாய்ந்த டாக்டர்களிடம் ஒப்படைப்பதைப் போன்று இருக்கிறது. எந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கவேண்டும் என்று முடிவு செய்யும் பொறுப்பு மாணவர்களிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்காக வவுச்சர் முறையை அரசு கொண்டுவருவது விரும்பத்தக்கது. இப்படி கொண்டுவந்தால் வசதி வாய்ப்பு குறைந்தவர்கள்கூட தரமான கல்வியைப் பெறுவது சாத்தியமாகும்.
களைகளைப் போல பெருகிவிட்ட வர்த்தகரீதியான கல்வி நிலையங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கல்வித்துறையில் களையெடுக்காவிட்டால் தரமான கல்விப் பயிர் வளராது. கல்வியை வியாபரமாகக் கருதும் போக்கு அபாயகரமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முனைப்புடன் கூடிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் அரசு, வசதிவய்ய்ப்பு குறைந்தவர்களுக்கு உதவி செய்வதையும் கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வதையும் கல்வி நிறுவனங்கள் செம்மையாக இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிப்பதையும் கவனித்து வந்தால் போதுமானது. ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் செல்வத்தில் கொழிக்க, இந்திய மாணவர்கள் ரூ. 20 ஆயிரம் கோடியை கொட்டிக் கொடுப்பது ஆரோக்கியமானதல்ல. இதன்வாயிலாக நமது கல்வியை நாமே முடக்குகிறோம். இன்னும் சொல்லப்போனால் படுகொலை செய்கிறோம். கூலிக்காக கொலை செய்யும் போக்கு காணப்படுகிறது. நமது கல்வி முறையை கூலி கொடுத்து நாமே கொன்றுகொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இந்த ஆக்கப்பூர்வமற்ற ரூ. 20 ஆயிரம் கோடி தொகை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
நமது உடலின் மரபு அணுக்களிலேயே வெளிநாட்டவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் அடிமையாக இருக்கவேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை படிந்துள்ளதோ என்பதை உணர்த்தும் வகையில்தான் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு நாம் பல்லாயிரம் கோடி ரூபாயை கொட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றே எண்ணவேண்டி இருக்கிறது.
நன்றி: விஜயபாரதம் வார இதழ் (19.06.2009)
கட்டுரை ஆசிரியர் ஆர்.வைத்தியநாதன் பெங்களூர் இந்திய மேலாண்மைப் பல்கலைக் கழகத்தின் (IIM, Bangalore) நிதித்துறை பேராசிரியர். பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பான அவரது கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
Sorry for writing in English.I read the above article and I am not sure where to start. I have been living in Australia for over 32 years. Australia was a racist country in the past. ( refer to White Australia policy). This changed in in the late 60 when the original inhabitants, the aboriginies were given equal rights as the whites. They were also given voting rights. The Australian society has changed since. The society has evolved into a muticultural society, under successive labour and liberal govts. I hardly saw any Indians when I migrated here in 1977. Now, we have a thriving, very well off Indian community here, with our own temples and cultural festivals. The Indians who have migrated to this country are probably the wealthiest in the country. Per capita income for Indians, like USA, will probably be the highest for any migrant group. Most of the Indians work as profeesionals, like doctors, accountants and in IT industries. Many of my long term Indian friendsand I have not been subjected to any racisim here so far.
This does not mean that racisim DOES NOT EXISTS. There is a significant minority group,whites as well as Lebanese (in particular who are a pathetic bunch of no hopers and druggies) are finding the Indian students as easy targets for racial and opportunitic attacks, These students work in late night jobs (that other communities are reluctant to take) and travel at night alone and do not put up with any resistance when attacked by these thugs. The police in Paramatta area in Sydney are willfully negligent to the complaints of the students. They are also handicapped by the ” do good laws” which favour the attackers rather than the victims. The police are also totally understaffed and have a poor attitude to these complaints.
The real reason why Indians come to Australia is pure and simple: BACK DOOR WAY OF GETTING PERMANENT RESIDENCY TO AUSTRALIA. The courses they undertake are are probably worthless and unintresting and totally unrelated to their studies in India.The time they work in the odd jobs and studies earn them points for their future applications for migration to Australia. The whole point of coming to Australia is to get a permanent residency visa and nothing else. I do understand their motivation and appreciate thei zeal and hard work. They can be a bit of irritant to the local community as they mostly talk(loudly) in Hindi and tend to treat the whole area as another part of India but this behaviour DOES NOT deserve attacks by anyone in any form.
By the way, I have not heard of any deaths due to these racial/opprtunitic attacks, as described in the article.The author should not mislead the public in India by false accusations.Final point:: YES, there are racial attacks on Indian students in Australia,by a small minority group of mid-eastern and white people but MAJORITY attacks are pure and simple OPPORTUNITIC attacks on easy targets. The Indian media got to take the blame for overblowing this situation. Majority of Australians are NOT racial as implicated in the article.Most of them are laid back and easy going sort.I have a lot of Aussie patients and you cannot get a better bunch of people than them. They are equally disgusted with these attackas as they hold Indians in very high regard.
Dr Rama Krishnan
What Ails Indian Education !
This is a very thought provoking article ! Indian education is very well renowned. There is little doubt about this. Our higher educational institutions like IITs, IIMs, IISc, AIMS, NLS,JIPMER, AFMC etc. etc. are shining symbols of our glorious success in higher education. But where are we going now ?
We have started playing with the future of generations by tampering with the very fundamental of selection process in the name of reservation. Some of the communities have little chance of getting into medicine etc. even if the score 99.99 % in entrance tests in some of the states ! In some of the states the entrance test is conveniently dispensed with to help the political administrators !
If you are belonging to a religious minority group you can open an educational institution and start minting money from students by exploiting various loopholes by way of transportation charges, hostel charges, building maintenance charges, educational trips etc.
We have no standard syllabus. SSC, SSLC, CBSE, State Board, ICSC etc. all for same 10th class and 12th class with varying level of evaluating system and examination pattern.
Prolific growth of tution centers for kinder garden to class 12. They are neither regulated nor governed by any laws of this land.
Donations for school admissions in various forms and means. Without greasing the palms nothing moves in the educational system.
As against dedicated teachers and professors, now we have persons who are victims of circumstances who lecture without having any interest of the listeners.
Unlike the west we have little choice or opportunity to earn while you learn.
All these things are leading to exodus of students to lands of opportunities where things were so far FAIR ! Now there also things have started turning for the worst.
What can a studnet do but for kneeling down and pray for some miracle !!!!
இங்கே இதை ப்பற்றி எல்லாம் கவலைப்பட அவர்களுக்கு நேரமே இல்லை! மத்திய அமைச்சர் பிராந்திய மொழியில் பேச வேண்டும், என கேட்டு கொண்டு இருக்கிறார்கள்! அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர் சொல்லி விஷயங்களை புரிந்து கொண்டு பதில் அளிக்க கூட நேரம் இருக்காது! மக்களை ப்பற்றி கவலைப்படும் அரசு அமையும் போது தான் இவற்றை எல்லாம் எதிர் பார்க்க முடியும்!