நைஜீரியா விருந்து

nigeriamapநான் இப்போது நைஜீரியாவில் வசிக்கிறேன். நைஜீரியாவை பத்து முறைக்கு மேல் சுற்றிவிட்டேன். நைஜீரியா உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் நான்காம் இடம். OPEC எனப்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் உறுப்பினர். இந்த எண்ணெய் வளத்தை முறையாக உபயோகபடுத்தியிருந்தால் நைஜீரியா முன்னேறிய நாடுகளின் வரிசையில் இருந்திருக்கும். ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தபின் பல்வேறு ராணுவ ஆட்சியாளர்களால் சிதைந்து சின்னாபின்னமாகி, இப்போதுதான் ஜனநாயக ஆட்சி நிலவுகிறது; அது நீடித்தால் வளமாக வாய்ப்பு இருக்கிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்தாலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இல்லாததால் கச்சா எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மீண்டும் பெட்ரோலியப் பொருள்களாக இறக்குமதி செய்வதால் தானிக்குத் தீனி சரியாகிவிடுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை இப்போது கட்டி வருகிறார்கள்; பார்ப்போம். இங்கு பெட்ரோலின் விலை நம் ஊர் மதிப்புப்படி ரூ.23.

ஊழலில் உலக வரிசையில் 3வது இடம் பிடிக்கிறது. லஞ்சம்nigeria-corruptions வாங்குவது இங்கு சட்டபூர்வம். எந்தவிதக் கூச்சமுமின்றி வாங்குகிறார்கள். இங்கு corruption என்பது 10 பில்லியன் டாலர்கள் என்பது சகஜம்.சுரண்டப்படும் பணம் சுவிஸ் வங்கியில் வருட கணக்கில் தூங்கி நாட்டிற்க்கும் பயன்படாமல், சொந்தக்காரர்களுக்கும் பயன்படாமல் சுவிஸ் மக்களை செழிக்கச் செய்கிறது.

வாழ்வதற்கான விலை(cost of Living) இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகம். ஆனால் வாழ்கைத்தரம்(Standard of Living) இந்தியாவைவிட அதிகம். கார்கள் அதிகம் புழங்குகிறது. இங்கு வீட்டுப் பணிப்பெண்ணிலிருந்து குப்பை துப்புரவாளர்வரை அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள். அதேபோல் இங்கு கல்வித் தரம் என்னைப் பொருத்தவரை இந்தியாவை விட தரம் என்றே சொல்வேன். மேலைநாடுகளில் இந்தக் கல்விக்கான பொது ஒப்புதல் (Accredition) இந்தியாவினுடையதை விட அதிகம். உதாரணம், இங்கு மருத்துவப் பட்டம் பெற்ற ஒருவர் இங்கிலாந்தோ அமெரிக்காவோ சென்றால் அங்கு அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற ஒருவர் இங்கிலாந்து சென்றால் அங்கும் ஒரு தேர்வு எழதித்தான் மருத்துவர் ஆக முடியும்.

இங்கு கச்சா எண்ணெய் உள்ள நைஜர் டெல்டா ஒரு காஷ்மீர். எண்ணெய் எடுக்கும் அயல்நாட்டு நிறுவனங்கள் (Shell, Mobil, Chevron, adax, …) எண்ணெய் எடுத்து அவர்கள் நாட்டை செம்மை செய்துகொள்கிறார்களே தவிர, தங்கள் மாநிலங்களுக்கு ஒரு மண்ணும் செய்வதில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடே இங்கிருக்கும் தீவிரவாதம். இந்தத் தீவிரவாதத்தின் முக்கிய அங்கம் வெளிநாட்டவரைக் கடத்தி பணயத் தொகை பெறுவது. உலகில் தீவிரவாதம் அல்லது போர் நீடிப்பது சில நாடுகளுக்கு நல்லது. சமாதானத்தைத் தீவிரமாக விரும்பும் ஜப்பான்தான் துப்பாக்கி உற்பத்தியில் முதல் இடம்; போகட்டும்.

nigerian-robbersஇங்கு Armed Roberry என்பது சர்வ சாதாரணம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும். நானே மூன்று நான்கு முறை Armed Roberry பார்த்திருக்கிறேன், என்ன ஒன்று கேட்டதை மறுக்காமல் கொடுத்துவிட்டால் அவர்கள் நல்லவர்கள் இல்லை டுமீல்தான். சூடு வாங்கிய இந்தியர்களை எனக்குத் தெரியும்.

மற்ற மேற்கு ஆப்பரிக்க நாடுகளைவிட இங்கு இந்தியர்கள் அதிகம்.நான் இருப்பது லேகோஸ்(Lagos) என்னும் இடம். நமது மும்பையை போல் வர்த்தக தலைநகரம். முன்பு நாட்டின் தலைநகரமாக இருந்தது; இடநெருக்கடி காரணத்தால் 15 வருடங்களுக்கு முன்பு நாட்டின் மையத்தில் அபுஜாவிற்குக் குடி பெயர்ந்தார்கள் ஆட்சியாளர்கள். லாகோஸ் மற்றும் வடக்கே கனோவிலும் இந்தியர்கள் அதிகம். நைஜிரியாவில் மொத்தம் இரண்டு லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். இங்கு இந்தியர்களுக்கு பொதுவாக ஒரு ஆறு இருக்கும்; கோவில்கள் உள்ளன. தமிழ்ச் சங்கம், கேரளா சங்கம், ஒரிய சமாஜ், துளு சங், என்று இந்திய மாநிலவாரியாக சங்கங்களும். நாகராஜ் தமிழ்ச் சங்கம், சுப்பிரமணி தமிழ்ச் சங்கம் என்று சங்கத்துக்குள் சங்கங்களும் இருக்கின்றன. அவரவர்கள் பண்டிகையை அந்தந்த சங்கங்கள் கோயில்களிலோ அல்லது பொதுவான ஓர் இடத்திலோ நடத்துவார்கள். தீபாவளி மேளா மிக விமர்சையாகக் கொண்டாடப்படும். இங்கிருக்கும் இந்தியர்கள் 80% குடும்பத்துடன் இருக்கிறார்கள். கம்பெனி செலவில் ஒரு வீடு(குறைந்த பட்சம் 1500 சதுரடி), வாகனம், வண்டியோட்டி, குழைந்தைகள் பள்ளிக் கட்டணம், வீட்டுக் காவலாளி, பணிப்பெண் (சமைக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள), மின்சாரக் கட்டணம், மற்றும் பல. இங்கு வேதிகாவைப் போல் வரும் பெண்கள் குஷ்புவை போல் ஆவது உறுதி. இதைத் தவிர இந்தியத் தூதரகத்தில் ஜனவரி 26, ஆகஸ்ட் 15 நாள்களில் கொடியேற்றி சிற்றுண்டி கொடுக்கிறார்கள். இங்கிருக்கும் இந்தியப் பள்ளியில் CBSE வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. LKG முதல் +2 வரை இருக்கிறது. சென்னை பள்ளிகளை விடத் தரமாக இருக்கிறது.

nigerian_womanஇங்கு இந்தியர்களை அடுத்து அதிகம் இருப்பது லெபனீயர்கள். இவர்கள் வடக்கிலிருந்தும் இந்தியர்கள் தெற்கிலிருந்தும் குத்தகை எடுத்து வர்த்தகம் செய்கிறார்கள். நான் இருக்கும் இடத்தில் மழை மாதம் மும்மாரி பெய்கிறது. மற்றபடி சென்னையின் சுடச் சுட சீதோஷண நிலைதான். இங்கு ஆங்கிலம் தவிர மூன்று மொழிகள் பிரதானமாக பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவை யுரூபா, ஈபோ மற்றும் ஹவுஸா. ஹவுஸா பேசுபவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் (99.99%); வடக்குப் பகுதியில் வசிக்கிறார்கள். ரொம்ப சோம்பேறிகள் மற்றும் இவர்கள்தான் எப்போதும் ஆட்சியாளர்கள். ஆதலால் சொகுசுப் பேர்வழிகள். ஹவுஸா அல்ஹாஜிக்கள் கணக்கில்லாமல் பணம் மற்றும் மனைவிகள் வைத்திருப்பார்கள். நாற்பது ஐம்பது குழந்தைகள் பெற்றுப் போடுவார்கள். ஏழை அல்ஹாஜிக்கள் பெற்ற பிள்ளைகளுக்கு தட்டை கொடுப்பார்கள்- பிச்சை எடுப்பதற்கு. ஈபோக்கள் கிழக்குப் பிராந்தியர்கள் வர்த்தகத்தில் சிறந்தவர்கள். நம்ப ஊர் சேட்டுக்களைப் போன்று படிப்பில் அதிக ஆர்வமற்றவர்கள். வியாபாரம்தான் முழு மூச்சே. நைஜர் டெல்டா (எண்ணெய் கிணறுகள்) தங்களுக்கே சொந்தம் என்று பிரிவினைவாதம் பேசுபவர்கள். யுருபாக்கள் நம்போல்வர்கள்; மெத்தப் படித்த மேதாவிகள் ஆதலால் ஆட்சியாளர்களாகவும் இல்லாமல் வியாபாரிகளாகவும் இல்லாத தூக்குத் தூக்கிகள். இவர்களில் 50% முஸ்லிம்கள் 50% கிறுஸ்துவர்கள். இவர்கள் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள்.

நைஜீரியாவில் இனக்கலவரங்கள் என்பது கிரகணங்கள் போல்– சூரியனை பூமி சுற்றி வருவது போல்– ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். 1953ல் ஆரம்பித்தது இந்தக் கலவரங்கள், இன்றுவரை தொடர்கிறது. வடக்கே வாழும் ஹவுஸா இனத்தவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்; ராணுவ ஆட்சியாளர்களில் ஆரம்பித்து இன்று யரடுவா வரை வடக்கத்தவர்கள்தான் எப்போதும் ஆட்சியாளர்கள். இதற்குக் காரணம் ஆங்கிலேய ஆதிக்க ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி. ஆரம்பத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை கடுமையாக எதிர்த்தது வடக்கு முஸ்லிம்கள்தான்; பிறகு ஆங்கிலோ-ஃபுலானிகள் இணைந்து நைஜீரியாவையே கட்டியாண்டார்கள். 1960ல் நைஜீரியா விடுதலை அடைந்தது. 1967-70 வரை நடந்த உள்நாட்டு போருக்கும்(Biafra Civil War) இன கலவரங்களுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு.

நைஜீரியாவின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்josviolence இஸ்லாமிய ஷரியா சட்டம் நடைமுறையில் இருக்கிறது. வடக்கு பகுதியில் ஜாஸ் (Jos) என்று ஒரு நகரம் இருக்கிறது. இது ஒரு மலைப் பகுதி, நமது ஊட்டி, டார்ஜிலிங் போல் ஆங்கிலேயர்களின் விடுமுறை கழிக்கும் இடமாக இருந்தது. இது கிறுஸ்தவர்கள் அதிகம் இருக்கும் இடம். நைஜீரியாவின் கலவரங்கள் ஆரம்பிக்கும் இடமும் இதுவாகத்தான் இருக்கும். 2001, 2003, 2004ல் நடந்த கலவரங்களின் ஆரம்ப இடமும் ஜாஸ்தான். இங்கு பெரும்பாலும் நடக்கும் கலவரங்கள் மதக் கலவரங்களைவிட இனக் கலவரமாகவே இருக்கும். ஹவுஸா ஃபுலானிகளுக்கும் யூருபா, இபோ இனத்தவரிடையே நடக்கும் போரட்டம்தான் இந்தக் கலவரங்கள். ஹவுசா இனத்தவர்கள் மிகவும் சாதுவானவர்கள்; கலவரம் வந்துவிட்டால் யுருபா நண்பன் முஸ்லிமாக இருந்தால் கூட அவர்களைப் போட்டு தள்ளிவிடுவார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாததற்கு சிறந்த உதாரணம் ஹவுஸாக்கள்.

நான் 2005-2007வரை வடக்கு நைஜீரியவில் கானுவில் இருந்தேன். நான் அங்கு இருந்தவரை இஸ்லாமிஸ்ட் இயக்கங்கள் நாளடைவில் தீவிரமடைந்தது போல் ஓர் உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. இந்தக் காலகட்டங்களில் நைஜீரிய தாலிபான் இயக்கமும் வளர்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த முறை நடந்த கலவரத்தில் நான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 1500 பேர் இறந்திருப்பார்கள். இந்த நைஜீரிய தாலிபான் இயக்கத்தின் பெயர் Boko haram; என்றால் மேற்கத்திய கல்வியை எதிர்ப்பது என்று அர்த்தம். அதாவது மதநூல் கூறும் முட்டாள்தனத்திற்கு ஷரியாவின் பெயரில் அர்த்தம் தேடும் இயக்கம். இவர்களின் முட்டாள்தனத்தால் எவ்வளவு உயிர்கள் பலி!

இங்கு மின்சாரம் ஒரு நாளில் 3 அல்லது 4 மணி நேரம் இருந்தால் நாம் பாக்யசாலிகள். ஜெனரேட்டர் வீட்டுக்கு வீடு எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். NEPA என்பது Nigerian Electric Power Authority. இதை இவர்கள் Never Ending Problem Always என்பார்கள். NEPAவை அரசு PHCN (Power Holding Corporation of Nigeria) தனியார் துறைக்கு விற்றது ஆனாலும் அதே பழைய குருடி கதவை திறடி கதைதான், இப்போது PHCNயை Problem Has Changed Name என்று குறிப்பிடுகிறார்கள்.

மின்சாரத்தின் கதைதான் தொலைபேசிக்கும், தண்ணீருக்கும், போக்குவரத்துக்கும் (நம்ம ஊர் நாய் வண்டிதான் இங்கே பஸ்). மக்கள் லோல்படுகிறார்கள். தனியார் கைபேசியில் MTN (நம்ம ஊருல கொஞ்ச காலமா அடி படுகிற தென்னாப்பிரிக்க நிறுவனம்) 70% சந்தையை ஆக்ரமித்துக்கொண்டு நம்ப ஊர் மதிப்புப்படி நிமிடத்திற்க்கு 15ரூ இருந்து 20ரூ வரை பிடுங்குகிறார்கள். CDMAவும் உண்டு ஆனால் எல்லா ஊர்களிலும் இல்லை. காசு கொடுத்தாலும் சேவை ஒன்றும் பிரமாதமாக இல்லை.

இங்கு தேர்தல்கள் எல்லாம் கூதல்தான். கள்ள ஓட்டு, வாக்குச் சாவடியை கைப்பற்றுதல் போன்றவை நடந்தாலும் ஜிம்பாப்வேயின் ராபர்ட் முகாபே போல் அல்லாமல் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு ஜனநாயகத்தைக் காப்பவர்கள். ஜனநாயகம் இப்போது கொஞ்சம் தழைத்தோங்குகிறது. எண்ணெயை விற்று நாட்டு நலனில் அக்கறை காட்டினால் நாடு முன்னேற வாய்ப்பு அதிகம் உள்ளது.

வாழ்க நைஜீரியா வளமுடன்!!! ( அப்பொழுதுதான் நாங்களும் வளமுடன் வாழ முடியும்.)

16 Replies to “நைஜீரியா விருந்து”

  1. சுய சார்பற்ற ஒரு தேஸத்தின் தொடரும் சோகம் இது. மனித நேயம் மீண்டு வரட்டும். நம் நாட்டவர்கள் வேலை செய்ய உகந்த இடம் தானா? தயை கூர்ந்து தெளியப் படுத்தவும். எழுதிய உங்களுக்கு எமது நன்றி மற்றும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  2. அட்டகாசமான கட்டுரை !!

    அருமையான எழுத்தாளர்.

    தொடர்ந்து கலக்குங்கள்.

  3. துபாய், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் உகந்த இடமென்றால் நைஜிரியவும் நிச்சயமாக உகந்த இடம் தான். நைஜிரியாவில் வேலை கிடைத்தால் கட்டாயம் வாருங்கள்.

  4. Sir,
    Fantastic article.
    Great style of writing.
    Excellent compilation of facts & Insights.
    Extraordinary exposure to the realities.
    Such details, must come out, for each of the countries in each of the continent, in our globe, for enabling a Proper & Good understanding.
    The keen Observation, with which the author has grasped the events & their outcome – with a Global perspective, is adorable.
    God Bless him.
    Please publish such in depth insights on each of the countries.
    Thanks and Regards,
    Srinivasan.
    Perth,
    Australia.

  5. Great Article about Nigeria. Narrated in detail about the facts of life in Nigeria. Very good job. Keep it up balaji.

    Rudhraganesh

  6. பாலாஜி,

    அருமையாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டுரை. ஒரு கதை போல் சுவாரஸ்யத்துடன் தொய்வில்லாமல் இருந்தது. வாழ்த்துக்கள்.

    என் எண்ணங்களை இங்கு வடித்திருக்கிறேன்.

    நைஜீரியா நன்கு வளமுடன் வாழ்ந்த தேசம், நம் நாட்டைப் போலவே, ஐரோப்பியர்கள் வரும் வரை. கூலி வேலை என்றால் என்னவென்றே தெரியாத அம்மக்களை, தன்னிறைவோடு வாழ்ந்திருந்த மக்களை, அவர்களின் உள் பகை துணை கொண்டு, பின் பற்பல காரியங்கள் செய்து, அவர்களை அடிமையாக்கி கூலித் தொழில் செய்ய வைத்தது முதல் காரியம். பின் தங்கள் நாட்டிற்கு அடிமைகள் வேண்டுமென இலட்சக்கணக்கான் இளைய தலைமுறையினரை தளையிட்டு எடுத்துச் சென்றது அடுத்து நடந்த கொடுமை. அது ஒரு பெரிய வியாபாமாகவே நடந்தது ஒரு சமுதாயத்தின் அலங்கோலத்திற்கு மற்றுமொரு மனித குலமே காரணமாயிருந்தது வெட்க வேண்டிய விக்ஷயம். 18/19ம் நூற்றாண்டில் William Grace என்ற ஆங்கிலேயரால் அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்டது. பின் அங்கிருக்கும் செல்வங்களை வியாபாரம் என்ற பெயரால் சூறையாடல் நடை பெறத் தொடங்கியது. 1960 வாக்கில் கறுப்புத்தங்கம் எனப்படும் எண்ணெய் வளம் அந்நாட்டை மேலும் மேலும் உறியச் செய்தது. அதன் காரணமாகவே லஞ்சம் என்பது பிறப்புரிமை ஆக்கப்பட்டது. அதற்கு அப்பாவி மக்கள் மற்ற நாடுகளைப் போலவே துன்பத்தில், ஏழ்மையில் துவள, ஒரு சிறு சத விகிதத்தினர் மட்டும் பெரும் செல்வந்தர்களாய் வலம் வரும் நிலையும் தொடர்ந்தது.

    நைஜர் நதி ஒரு வரப்பிரசாதம். நம் காவிரி டெல்டா, கிரிக்ஷ்னா டெல்டா ஏன் கோதாவரி டெல்டாகூட அதன் அருகிலேயே வர முடியாது. எதைப் போட்டாலும் அற்புதமாய் மலரக்கூடிய மண் வளம். அதுவும் கணக்கிடலங்காமல். சென்னையில் முக்கால்வசி இடங்களில் பத்து இருபது அடிக்கே பாறை மட்டும்தான். காவிரி டெல்டா அருகில் கூட மண் ஒரு குறீப்பிட்ட ஆழம் வரைதான். ஆனால் அங்கு அங்கும் குறைந்தபட்சம் 2 அல்லது 3 கிலோ மீட்டர்களுக்கு நல்ல ஆற்று மணல்தான் (வடக்குப் பகுதியில் மட்டும் அவ்வளவு இல்லை). நம்ப மாட்டீர்கள். நைஜர் நதி தாலாட்டும் டெல்டா ஏரியாவில் ஒரு சிறு கருங்கல்லைப் பார்க்க முடியாது. எல்லாம் மண். அத்தனை வளம்.

    இத்தனை இருந்தும், முதல் பாராவில் சொன்ன யாவும் அம்மக்களின் மேல் திணிக்கப்பட்ட சாபம். ஆனால் அடிப்படையில் அவர்கள் நல்லவர்கள், திறமைசாலிகள். எந்தப் பாவமும் அறியாத பொது ஜனமாய் அங்கிருக்கும் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். நன்கு பழகக் கூடியவர்கள். எளிதில் உணர்ச்சிப் படக்கூடியவர்கள். நாடு முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடையவர்கள்.

    ஆனால் அவர்களுக்குத் தேவை ஒரு நல்ல வழி காட்டுதல்.

    மெதுவாக மெதுவாக கல்வி, திறமை, ஆற்றல் கற்று, தெளிந்து முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். இன்று வேறு பல நாடுகளிலும் மேற் கல்விக்கும், வேலைக்காகவும் நைஜீரியர்கள் அதிகரித்து வருவது நல்ல விக்ஷயம். நாட்டின் எந்த மூலையிலும் ஆங்கிலம் என்பது ஒரு நல்ல பேசும் மொழி என்பதால் BPOs அங்கு அதிகம் வருவதற்கு அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தியா விழிப்புடன் கவனிக்க வேண்டிய நிஜம் இது.

    நாட்டின் தலைநகரம் அபுஜா ஒரு அற்புதமான நகரம். நன்கு திட்டமிடப்ப்பட்டு நம் ஊர் சண்டிகார் போல் கட்டப்பட்ட நகரம்.

    நைஜீயர்கள் இந்தியர்களை மதிப்பவர்வர்கள். அங்கு மட்டுமல்ல அமெரிக்காவின் நியூயார்க்கிலும், இங்கிலாந்தின் லண்டனிலும், இந்தியாவின் டெல்லியிலும் கூட தப்பான நேரத்தில் தப்பான இடத்தில் இருந்தால் robbery, way laying, mugging போன்றவை இருக்கின்றனவே! அதே போல் அங்கும் உண்டு. நாம் நம் வழியில் வாழ்ந்து வந்தால் அங்கு சந்தோக்ஷமாக வாழலாம்.

    ஆனால் ஒரு முக்கிய விக்ஷயம். அங்கு வேலை கிடைத்தால் பல முறை விசாரித்து விட்டு, நண்பர்கள் இருந்தால் வேலை கிடைத்த கம்பெனியைப் பற்றி நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள். அது மட்டும்தான் அங்கு தொல்லை. அவசரப்பட்டு இ-மெயில் அல்லது போன் மூலமாக வரும் வேலை வாய்ப்புகளை நம்பி எமாறாதீர்கள். உங்கள் நண்பர்களை நம்புங்கள்.

    நல்லது. வணக்கம்.

  7. Dear Balaji,
    it is a very good and interesting write up about Nigeria.
    great job !!!!! Keep it up!!!!
    wishing you many more success

    My views about Nigeria—————-
    Nigeria is land of Sanibaghvan
    The saying in Nigeria about our Expatriates(Indians)
    the person who leaves nigeria within one year will never come back to nigeria.
    The person who sustains the first year in Nigeria will not leave the country at least for 5-7 years.
    the person who crosses 10years would probably compelte his career in Nigeria.

    The population of people from Tamil Nadu is the highest in Lagos, followed with Kerala and Andra.
    Lots of scam on employment is going on in Nigeria, even if the candidate didnot apply for job; he receives a job offer with –K USD salary, appointment letter signed by company big boss, with government letter head etc., all this is to get atleast 500USD from the candidate as visa processing fee/any other reason. Kindly be aware of this and inform your friends or any known to confirm the reality of the offer.

    Regarding the safety and security of expatriates, Nigeria is a safe place if we are able to maintain a low profile and non exhibitory life style.

    the difference in robbery between India and Nigeria, the robbery happens in India when the house is locked for a while(when u have gone for a trip) and in Nigeria only when you are available they will come for robbery. Secondly in India the robbers may not know what is there at Home, but here they come with full information of the cash, property avialble with you through the inhouse person;
    lets wish for all our Indians in Nigeria for a safe and happy stay in Nigeria.
    A home away from Home!!!!
    with best wishes
    P.VENKATESH
    +234 80 54546536
    taknev74@yahoo.com

  8. Great Job !!! I had to shamelessly admit, being a Tamizhiyan I took more than half an hour to read this completely and understand correctly.Like some of the other comments,the focus on Nigeria covering almost anything & everything (School,Politics,Problems & Reasons, Geography to Castes) is articulated in the right way.

    Keep writing!! Most ppl(esp NRIs) would greatly appreciate these tamizh posts.How is the Tamil Pathivugal going ?

  9. அருமையான கட்டுரை. இப்போது நைஜீரியாவில் நடந்து வரும் சம்பவத்தை தீர்கதரிசி போல் நீங்கள் எழுதி இருப்பது பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்.

    விஜய்

  10. A comment in Haindavakeralam.

    The fate of Nigeria is upon us
    Nigeria had its own problems before the White Christians and Arab Muslims came. But nothing so gruesome as what is been witnessed there after the arrival of these blood thirsty religions. Half the people were converted to Islam by Arabs. and another half converted to Christianity. Now they are fighting with each other. Few months back Christians went and killed scores of Muslims, children and women. Now the Muslims have gone and killed scores of men, women and children. The majority who were killed today are christian women and children. If they had been not converted to these stupid religions, they would have lived together. These african human beings are now fighting proxy war between the White Christians and Arab Muslims.
    If we want to save Kerala, we need to proselytize the Hinduism to Christians and Muslim Keralites to save them from annihilating each other. When the Hinduism is wiped out of Kerala, then there will only be christians and Muslims. When there is no common enemy for these blood thirsty religions, they will turn upon each other. When they do, our descendants who were converted to Islam and Christianity would be dying a horrible death.
    It is for the betterment of Kerala and for our children and even the children of today’s muslims and christians, we need to stop and roll back the conversions.

  11. Good job! The article covers in depth analysis of whats happening in Nigeria. I am Living in Nigeria for a decade. Analyst says another coup is possible in Nigeria in coming years. God Save Nigeria.

  12. நைஜீரியாவின் அதிபர் உமரு மூசா யாரடுவா இறந்து விட்டதாக படித்தேன். அதை பற்றி ஏதாவது எழுதுங்களேன்.

  13. The Article was good. I recently heard from one of my engligh colleuge that Patersons book is based on “ECLIPSE” is about the oil spillage happened in Nigeria. Americans and Europeans rape other country and enrich their countries but will be environmental protectors in their own land.

    All the best.

    Ramanan

  14. கூகிள் மூலம் வந்து இந்த கட்டுரையை படித்தேன் . அட்டகாசமாக இருக்கிறது கட்டுரை…….வாழ்த்துக்கள்.

  15. புதிதாக நைஜீரியாவிர்க்கு வருபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை .நானும் புதிதாக வருபவன்தான். அங்கிருக்கும் நண்பர்கள் யாரேனும் தொடர்புகொண்டால் சற்று உதவியாய் இருக்கும் .எனது மின்னஞ்சல் maddie.rajam2020@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *