சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

அண்ட சராசர வடிவாக விளங்கும் ஆனைமுகர், வணங்குவோர் இடர் களையும் விக்னேஸ்வரர், குழந்தைகள் முதல் முதியவர் வரை எல்லாருக்கும் பிடித்தமான பிள்ளையார், ஒவ்வொரு தெருமுனையிலும், மரத்தடியிலும், குளக்கரையிலும் அமர்ந்து அருள்பாலித்து வீட்டையும், நாட்டையும் காக்கும் விநாயகர் அனைத்து நலன்களும் அருளுக என்று இந்த நன்னாளில் இறைஞ்சுகிறோம்.

”சிலை வழிபாடு தவறா? பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?” என்ற கேள்வியை எழுப்பி, அதன் ஊடாக சிலை வழிபாட்டின் வரலாற்றுத் தொன்மை, அதில் பொதிந்துள்ள உளவியல் மற்றும் அறிவியல், தெய்வத் திருவுருவங்களின் தத்துவம் ஆகியவற்றை அருமையாக விளக்கும் தமிழ் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் ஒன்றை அரவிந்தன் நீலகண்டன் உருவாக்கியிருக்கிறார். அதனை இந்த நன்னாளில் வெளியிடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.

பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை கீழ்க்காணும் பெட்டியில் காணலாம் (பெட்டி load ஆகும் வரை தயவுசெய்து பொறுக்கவும்). அந்த இணைப்புக்குச் சென்று .ppt மற்றும் .pdf வடிவ கோப்புகளையும் தரவிறக்கிக் கொள்ளலாம்.

Silai Worship

இந்தத் தொகுப்பிலிருந்து, விநாயகர் திருவுருவின் மெய்யியலை விளக்கும் பகுதியை இங்கு அளிக்கிறோம்.

ganesha3

பிள்ளையாரின் ஆனைமுகம் பிரணவ வடிவாக விளங்குகிறது. பிரணவம் எல்லையற்ற பரம்பொருளின் ஒலி வடிவம்.

ஒரு கரத்தில் ஏந்தியிருக்கும் கோடாரி சார்ந்த அங்குசம்: அங்குசத்தினால் மதயானை போலெழும் தீய எண்ணங்களை அகற்றுவதுடன், வழிபடுவோரின் ஆன்மிக, லௌகிக முன்னேற்றங்களைக் கட்டுப்படுத்தும் சங்கிலிகளைக் கோடாரியால் அறுக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

மற்றொரு திருக்கரத்தில் விநாயகர் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தை நோக்கி (சில நேரங்களில் அறியாமையால் நாம் தயங்கி நின்றால் கூட) இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது.

விநாயகரது தொந்தி அண்ட சராசரங்களும் பரம்பொருளுக்குள் அடக்கம் என்பதைக் காட்டுகிறது. பரம்பொருளின் பிராண இயக்கத்தில் சுருங்கி விரியும் தொந்தி, விரிவடைந்து சுருங்கி மீண்டும் விரிவடைந்து சுருங்கும் பிரபஞ்ச இயக்கத்தைக் காட்டுகிறது. ஜடப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருளும் இயக்கமும் இறை சக்தியின் ஒரு பகுதியே எனக் கூறும் பாரத மெய்ஞான தரிசனத்தை இது உணர்த்துகிறது.

“வழிபாட்டு வளர்ச்சிக்குத் தக்க அளவாக, ஆன்ம இதயத்தில் அருள் விளக்கம் பிறக்கும். அந்நிலையைச் ’சக்திநிபாதம்’ என்பர். சத்திநிபாதம் படரும் சமயம், சாதகர்க்குக் குண்டலிக் கனல் குடுகுடு குறுகுறு என்று மேலேறிப் பாயும். பெருச்சாளி ஓட்டம் போல் அதிருகின்றது அவ்வொலி. மூலாதாரத்தில் ஓடிப்பாயும் குண்டலிக் கனலேறி அமர்ந்துளார் பிள்ளையார் என்பது பிண்ட நுட்பம் ” (ஔவையார் அருளிய விநாயகர் அகவலுக்கு திரு. பு.பா.இரசபதி எழுதிய உரை விளக்கம்).

விக்னேஸ்வரராக விளங்கும் இந்த கணபதி எனும் கணேசர் யார்? ஒரு வார்த்தையில் சொல்வதானால் கணேசர் என்றால் மெய்யுணர்வு. மெய்யுணர்வு என்பது சாஸ்வதமான, அழியாத உள்ளுறையும் சத்தியத்தை இங்கே இப்போது உணர்வதற்குத் தடையாக விளங்கும் விக்னங்களை அகற்றுவது என்பதாகும்.

– ஜான்.ஏ.க்ரிமஸ், உளவியலாளர் மற்றும் தத்துவ இயலாளர், Ganapathi: Song of the Self என்னும் நூலில்.

29 Replies to “சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?”

 1. பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் !!

  த்வைதம், அத்வைதம் மற்றும் விஷிஷ்டாத்வைதம் குறித்தும் இது போல எளிய முறையில் விளக்குவீர்களா? நன்றி !!

 2. In my opinion, Idol worship is probably the best form of Worship, or atleast one of the best form of worship!

  There is absolutely no wrong or Sin in idol worship.

  Throughout the world, if you see the behaviour of the people,
  the Idol worshippers are the most tolerant people!

  Throughout the world, if you see the behaviour of the people,
  the Idol worshippers are the only people who accepts all forms of worship!

  Throughout the world, if you see the behaviour of the people,
  the Idol worshippers are the only people who does not spread hatredness for others!

  Throughout the world, if you see the behaviour of the people,
  the Idol worshippers are the only people who accepts all forms of worship!

  Throughout the world, if you see the behaviour of the people,
  the Idol worshippers are the only people who does not compell others to follow their method!

  I dont know what is the problem for other people, If I worship my God- I am not stealing money, I have not cheated any one, I am not disturbing the soceity!

  I can say confidently, that all these above mentioned good qualities have been inherited by me only through idol worship!

  I thank God for giving me this versatile and fantastic form of worship.

  Let Lord Vinayaaka, our God bless all of us!

  Oh! Lord Ganesha, please bless us, remove the hurdles and save us!

  I worship you!

 3. படத்தில் இருக்கும் கரு கரு துரு துரு குழந்தை கணபதியை மடியில் தூக்கி வைத்து கொஞ்சத் தோன்றுகிறது.

  உலகம் முழுவதும் கணபதியை பல்வேறு பெயர்களில் கொஞ்சுகிறார்கள் என்றால் சும்மாவா.

  https://www.ourkarnataka.com/Articles/starofmysore/ganapa.htm

  https://ganapati.club.fr/anglais/apays/apays.html

  இருந்தாலும் மாமா மாதிரி இல்லாமல், சமத்து அவர். (எனவே, பெண்கள் தைரியமாகக் கொஞ்சலாம் என இதன்மூலம் சொல்லிக்கொள்கிறேன்.)

  கணபதியை யாருக்குத்தான் பிடிக்காது 😉

  😉

 4. I downloaded the powerpoint slides and watched it.

  Mr Aravindan has taken so much of effort.

  Thank you sir.

 5. கணபதியை யாருக்குத்தான் பிடிக்காது//

  எனக்கு பிடிக்காது… ஏன் கேக்கறீங்க?

 6. hello Mr pradeep

  you are obviously a wolf (christian) in sheep skin, i also do not like your antagonistic attitude, why are you visiting this web site? change to your original name and go to your christian websites and praise your anglo saxon god there, we dont behave like you christians and make snide remarks there do we? that is the greatness of hinduism, maybe you should convert to your thaai matham and learn to be a decent being first.

  gayathri

 7. தங்கச்சி காயத்திரி…

  இப்பக்கத்தில் அவரவர் கருத்துக்களை தெரிவிப்பது தவறில்லை.

 8. அங்கிங்கெனாதபடி எங்கும் இறைவன் இருந்தால், சிலையில் மட்டும் இருக்க மாட்டாரா என்ன? இந்த பிரபஞ்சம் பூராவும் கடவுள் நிறைந்திருக்கிறார்.. சிலையை செய்ய பயன்படுத்தப்படு கல்லும் பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே.. ஆகையால், சிலை வழிபாடு ஒன்றும் தவறில்லை..

  சொல்லப்போனா, இந்த கேள்வியே தவறு.. எந்த கோவிலில் நாம் சிலையை கும்பிடுகிறோம்.. நாம் சிவனை, பெருமாளை, தேவியை, வினாயகரை.. இவர்களை அல்லவா கும்பிடுகிறோம்.. மற்றவர் கண்ணுக்கு அது சிலையாக தெரிந்தால் நாம் ஏன் பொறுப்பாகவேண்டும்..

  இது சம்பந்தமான் இன்னொரு கேள்வியை நம்மை கேவலப்படுத்துவதற்காகவே கேற்பார்கள்.. அதாவது, சிவலிங்கத்தை ஆண்குறி என்று கூறி, நாம் உடலின் ஒரு உறுப்பை வணங்குகிறோம் என்று நக்கலடிப்பார்கள்.. நான் கேட்டேன்.. ஆண்குறு என்ன கேவலமான உறுப்பா? அவர் சொன்னார். கழிவை வெளியேற்றுவதற்கும், இனப்பெருக்கத்துக்காகவும் இருக்கிற ஒரு சாதாரண் உறுப்பு.. அதை போய் ஏன் வழிபட வேண்டும் என்றார்..

  நான், ” இனப்பெருக்கம் இல்லையென்றால், இந்த உலகில் எந்த ஜீவராசியும் இல்லை.. ஆதலால், மனித குலத்துக்கே ஆதாரமான அந்த இனப்பெருக்க உறுப்பை வணங்குவதில் ஒன்றும் தவறில்லை..உங்களுக்கு அது கேவலமானதென்றால் நீங்கள் அதை அறுத்து எறிந்துவிடலாமே” என்றேன்.. எதிர்க்கட்சி ஆஃப் ஆகிவிட்டார்..

  பதிலடி கொடுப்பதில் நாம் சங்கோஜப்படக்கூடாது..

 9. இஸ்லாமிய நாடான இந்தோனேசிய ருபியா நோட்டில் (R.20000 ) கணபதி உருவம் அச்சடிக்கப் பட்டிருகிறது மற்றும் அந்நாட்டின் முக்கிய பொறியியல் கல்லுரி Institut Teknologi Bandung தனது கல்லுரி இலச்சினையில் கணபதியின் உருவத்தை பொறித்திருக்கிறது.

 10. முதலில் உருவ வழிபாடு பற்றி ஹிந்துக்கள் க்ரிச்தவர்களுக்கோ , முஸ்லீம்களுக்கோ விளக்கம் அளிக்க வேண்டிய தேவையே இல்லை
  அவர்கள் அது தவறு என்று சொன்னால் அது தவறாகி விடுமா?
  அவர்கள் அகங்காரம் பிடித்து தாங்கள் செய்வது எல்லாம் சரி ,மற்றவர்கள் செய்வது தவறு என்று பேசுகிறார்கள்.
  அதை நாம் பெரிதாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளிக்க கூடாது
  பதிலுக்கு ‘நீங்கள் வழிபடும் முறையான குட்டிச் சுவரை சுற்றுவது, கண்ட இடத்தில மண்டி இடுவது ,பாடையை வணங்குவது இது தவறு’ என்று
  அப்போது பாருங்கள் அவர்கள் ஓட்டம் பிடிப்பார்கள்.
  ,

 11. அன்புள்ள செந்தில்,

  தங்களுடைய செப்டம்பர் 20 தேதியிட்ட கடிதம் மிக நன்றாக உள்ளது. அடிக்கடி எழுதவும்.

  வாழ்த்துக்கள்.

 12. அவன் எங்கும் நிறைந்தவன் என்றால் உருவங்களுக்குள்ளும் அவன் இருக்கிறான். அவன் உருவங்களுக்குள் இல்லை என்று சொன்னால் அவனை எங்கும் நிறைந்தவன் என்று சொல்ல முடியாது. உருவத்தின் மூலம் வழிபாடு செய்வது மனித இனத்தில் 100 சதவீதத்தினருக்கும் ஆரம்ப கட்டங்களில் தேவைப்படுவது உறுதி.

  உருவம் இல்லாமல் இருப்பவனும் அவனே ஆகும்.எனவேதான் தமிழில் ‘உருவாய் அருவாய் ‘ என்று பாடினார்கள். உருவத்தின் மூலம் வணங்கப்படுபவனும் அருவமாக வணங்கப்படுபவனும் ஒரே சக்தி அல்லது கடவுள் அல்லது பகுத்தறிவு என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இதில் எந்த முறையும் உயர்வு தாழ்வு கிடையாது. அனைத்தும் சமமே ஆகும். நம்மில் சிலர் போதிய முதிர்ச்சி இல்லாததால் பிற முறைகளைக்குற்றம் சொல்கிறோம். எல்லா வழிபாடுகளும் ஒரே இலக்கை அடைய செல்லும் பல வழிகளே ஆகும். என் வழி நல்லது என்று சொல்பவன் மனிதன்.என் வழி மட்டுமே நல்லது அல்லது உயர்ந்தது என்று சொல்பவன் கிறுக்கன் ஆவான். உண்மையான பகுத்தறிவு உள்ளவனே இறைவழி பாட்டில் ஈடு பட முடியும். இறைவழிபாட்டில் ஈடு படாத சிலர் எக்காலத்தும் இருந்தனர், இருக்கின்றனர், இருப்பார். அவர்களும் நம் உடன்பிறந்த சகோதரர்களே ஆவார்கள். நாத்திகர்களுக்கும் நம் மதத்தில் மட்டுமே இடம் உண்டு.பிற மதங்களின் நூல்களில் நாத்திகர்களை கொன்று விடும் படி கட்டளைகள் உள்ளன.

  அந்த கட்டளை இல்லாத மதங்கள் இந்து, புத்தம், ஜைனம் இந்த மூன்று மட்டுமே.வேறு சில மதங்களிலும் பழைய காலங்களில் இந்த சகிப்பு தன்மை இருந்தது. பிறரைத்தன் வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுவது தவறாகும். நம் வழி நல்லதாய் இருந்தால் உலகமே நம் வழிக்கு வரும். பயமுறுத்தல், வலுக்கட்டாயம் மூலம் யாரும் எதையும் சாதித்து விட முடியாது.

 13. விநாயகரை பற்றி எழுதுவது மாபெரும் புண்ணியமல்லவா ? பணி வளர்க

 14. அரவிந்தன் நீலகண்டனின் power point presentation ரொம்ப அருமை. நாத்திகர்களுக்கும் போலி மதச் சார்பின்மை வாதிகளுக்கும் இது போலப் படைப்புகள் போய்ச் சேர வேண்டும். ஆனால் அவர்களுக்கு “அவன் அருள்” இருந்தால் தானே இதிலெல்லாம் மனம் செல்லும்? ஆகவே முதலில் சிலை வழிபாடு செய்பவர்கள் மட்டுமாவது இந்தக் கட்டுரை தரும் மேலான பொருள்களைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி.

 15. அனைவருக்கும் வணக்கம்……

  மிக சிறந்த முயற்சி மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் பொய்யான தெய்வத்தை வணங்கும் அறிவற்ற சிலை வழிபாட்டாளர்கள் என்று ஏளனம் செய்யும் இந்த தருணத்தில். திரு. அரவிந்தன் நீலகண்டன் செய்து இருக்கும் இந்த ஆய்வு ஒரு மிக சிறந்த ஒன்றாகும். இந்த ஆய்விற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…

  ஆனால் ஒரு விஷயத்தை அவர் இங்கு சொல்ல மறந்து விட்டார். மறந்து விட்டாரா அல்லது வேண்டாமென மறுத்து விட்டாரா என்பதை யாம் அறியோம் பராபரமே. இந்துமத தெய்வ சிலைகளின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞான உண்மைகள் எல்லாம் தென்னாட்டவர் குறிப்பாக தமிழர் தந்த அருட்கொடைகள். அணுவை பற்றி அணு அணுவாக ஆராய்ந்தவர்கள் தமிழர்களே அதற்க்கு ஆதாரம் சைவ சாத்திரங்களான திருமுறைகள், திருமந்திரம்,திருவாசகம்,கம்பராமாயணம்,வள்ளலாரின் திருஅருட்பா,தாயுமானவரின் பாடல்கள் போன்ற இலக்கியங்களில் காணலாம். அணுவினை ஆராய்ச்சி செய்தவர்களில் முன்னணியில் இருந்தவர்கள்(pioneers) தமிழர்கள் தான் அதற்க்கு இருக்கும் கண் கண்ட ஆதாரம் வேறு எந்த தேசத்திலும் இல்லாத தமிழகத்தின் தில்லையில் இருக்கும் நடராச பெருமானே. அறிவுபூர்வமான சிலைவழிபாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்று சொன்னால் அது மிகையாகது. அதற்கு இன்னொரு மிகபெரிய எடுத்துகாட்டாக திகழ்வது பழனியில் இருக்கும் முருக பெருமானின் நவபாஷன சிலை.ஆதிசங்கரர் போன்றவர்கள் பின்னாளில் வடமொழியில் இறைவனின் தெய்வீக தன்மையை விஞ்ஞான விளக்கப்படி சௌந்தர்யா லஹரி,சிவானந்தா லஹரி போன்ற லஹரிகளை பாட முன்னோடியாய் இருந்ததே தமிழர்களின் அறிவார்ந்த இந்த சித்தாந்த கோட்பாடுகள்தான். இங்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு எடுத்துகாட்டாக கொடுத்திருப்பதே தமிழ் எழுத்தான “ஓ” என்பதை தான். தமிழில் உள்ள அணைத்து எழுத்துகளுக்கும் குறில் நெடில் என்கிற இரண்டு ஓசை முறைகளும் உண்டு. அதற்கான இறந்து எழுத்துகளும் உண்டு. ஆனால் வடமொழியில் “ஒ” என்னும் குறில் இல்லை “ஓ” என்னும் நெடில் மட்டும் இருக்கிறது. ஆனால் ஓம் என்ற ஓசைக்கு எழுத்தை உண்டாக்கிவிட்டார்கள் . இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. ஒரு வேலை அது தேவபாஷை என்பதால் அனைத்தும் சாத்தியம் போலும். அதே நேரத்தில் கரையான் புத்துகட்ட கருநாகம் நுழைந்தது போல் அவர்கள்(தமிழர்கள்) கண்டுபிடித்த அனைவருக்கும் பொதுவான சிலைவழிபாட்டில் பார்பனர்கள் புகுந்து ஆக்கிரமிப்பு செய்த பிறகு சிலைவழிபாடின் அதன் தெய்வீக தன்மையும் பொது நன்மையையும் மாறி அக்ரகாரத்து சுயநல நெருப்பு பற்றி கொண்ட பின் அதே தமிழர்கள் தான் அந்த சிலைவழிபாட்டை ஒறுக்கவும் செய்தார்கள். எடுத்துகாட்டாக நம் தமிழ்சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் என்பார்.

  “கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
  மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
  சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
  வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.”

  “நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
  சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
  நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
  சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?” என்று பாடி அத்தகைய சிலைவழிபாடு எவ்வளவு அறிவுபூர்வமானதாக இருந்தாலும் அது இனி தேவை இல்லை. அது பக்தி வழியின் முதல் படி தான். அதுவே முடிவல்ல என்று கூறி அதை தவிர்த்து விட்டார். உண்மை நிலை என்ன என்பதையும் உணர்த்தி விட்டார். உணராதவர்கள் இன்னும் இருப்பார்களானால் அதற்க்கு சிவவாக்கியர் பொறுப்பல்ல.

  நீங்கள் பாரத பண்பாடு என்று கூறி கொள்ளுங்கள் தவறு இல்லை . தமிழ்நாடு இந்தியாவுடன் அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்து உள்ளதால் பாரத பண்பாடு என்று கூறுவதில் தவறு இல்லை அதே நேரத்தில் கொஞ்சம் தமிழர்களின் பண்பாட்டையும் தமிழர்கள் சார்ந்த விஞ்ஞான அறிவயையும் கூறும்போது தமிழர்கள் என்ற பெயரோடு கூறுவதால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படபோவது இல்லை. சம்மந்த பட்டவர்களுக்கு புரிந்தால் சந்தோஷமே நன்றி.

 16. //தமிழில் உள்ள அணைத்து எழுத்துகளுக்கும் குறில் நெடில் என்கிற இரண்டு ஓசை முறைகளும் உண்டு. அதற்கான இறந்து எழுத்துகளும் உண்டு.//

  மேற்கண்ட வரியில் “இரண்டு” என்பதற்கு பதிலாக “இறந்து” என்று தவறாக தட்டச்சு செய்யப்பட்டு விட்டது. அதை இங்கு சுட்டி காட்டி சரி செய்து கொள்கிறேன்.

 17. அன்புள்ள தாயுமானவன்,

  எதனுடனோ கோபித்துக்கொண்டு கால்கழுவாமல் போனவன் கதையை பற்றி நம் முன்னோர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் கால் கழுவ வேண்டும்.

  உருவ வழிபாட்டை விட உருவமற்ற வழிபாடு உயர்ந்தது அல்ல. இரண்டும் சமமே. உருவமற்ற வழிபாட்டு முறை கோடியில் ஒருவருக்கே பொருந்தும். சாதாரண மக்களுக்கு உருவமற்ற வழிபாடு என்பது ஒரு மோசடி ஆகும்.

  உருவ வழிபாடு தேவை அற்றது என்று சொல்லும் போது, உருவமற்ற வழிபாடும் தேவை அற்றது என்பது உறுதியாகிவிடும்.

  இதன் அடுத்த கட்டம் எங்கே போய் நிற்கும் என்றால் , எந்த வழிபாடும் தேவையில்லை என்பதில் தான். வாழிபாடுகளில் எந்தவித கட்டுப்பாடையும் எவரும் உருவாக்கமுடியாது. கட்டுப்பாடுகளை உருவாக்குவோரை காலம் தூக்கி எறிந்துவிடும்.

  சிவ வாக்கியர் பாடலுக்கு தவறான பொருள் கற்பித்து எழுதியுள்ளீர்கள். நட்ட கல் பேசாது என்பது அப்பாடலின் பொருளல்ல.கையிலே வெண்ணையை வைத்துக்கொண்டு , நெய்க்காக ஊர் ஊராக அலையாதே என்பது அப்பாடலின் பொருள். எங்கும் நிறைந்தவன் ஈசன் என்பதால், நமக்குள்ளேயும் இருக்கிறான் என்பதை மறந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக இப்பாடல் புனையப்பட்டது. யானையை பார்த்த குருடர்கள் கதையாக ஆகிவிட கூடாது. உருவ வழிபாடு மிக மிக உயர்ந்தது. அதை விட உயர்ந்த வழிபாடு உலகில் எதுவுமே இல்லை. சிலரின் திருப்திக்காக வேண்டுமானால், உருவ வழிபாட்டுக்கு ஈடாக உருவமற்ற வழிபாட்டையும் கூறலாம்.

  உருவமற்ற வழிபாடு என்பது ஒரு குருடன் வரைந்த ஓவியம் போன்றது. குருடர்களுக்கும் ஓவியம் வரையும் உரிமை உண்டு. ஏனெனில் அவர்களும் எல்லாம் வல்ல பரம்பொருளின் ஒரு அம்சமே.

  உருவ வழிபாட்டை குறை கூறுபவன் எவனாயினும், மனநிலை பாதிக்கப்பட்டவனே ஆவான் .

 18. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தை கைதொழக்
  கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே
  பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெல்லாம்
  பேயனகி ஓதிடும் பிழை போருக்க வேண்டுமே.

  இது சிவவாக்கியத்தின் காப்பு செய்யுளின் இரெண்டாவது பாடல். முதல் வரியிலேயே உருவத்தை (கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தை )கைதொழ என்றுதான் ஆரம்பிக்கிறார்.
  ஆரம்பநிலையிளுல்லோர்க்கு உருவம் அவசியம். மேதாவிகளாக எல்லோரும் ஆகிவிடவில்லை. மேதாவிகளுக்கு வேண்டாம் என்றால் சிலை வழிபாட்டை தாரளமாக விட்டு விடுங்கள். அதனை எல்லோர் மீதும் திணிக்க முயற்சிக்க வேண்டாம்.

  வள்ளல் பெருமானும் தில்லை நடராசரையும்,கந்த கோட்டத்துறை முருகனையும் வணங்கியே இறுதியில் ஜோதி வழிபாட்டில் லயித்தார். அவரே தினமும் சிவத்தியானம் செய்ய அறிவுறுத்தி இருக்கிறார். செவ்வாய் கிழமை விரதத்தை அறிவுறுத்துகிறார்.அவர் ஜோதி வழிபாடு சென்றாரே ஒழிய சிலை வழிபாட்டை தவறு என்று கண்டிக்கவில்லை. முதிர்வு வந்த பின்பு தானாக சிலை வழிபாட்டை விட வேண்டியது அவரவர் விருப்பம். இங்கே வந்து பத்வா எல்லாம் போடக்கூடாது.
  சிவவாக்கியருக்கு முன்பிருந்த பல சித்தர்கள் உருவ வழிபாட்டினர்தான். போகரே பழனிமலை முருகனை பிரதிஷ்ட்டை செய்தார், தஞ்சையில் உள்ள
  புன்னைநல்லூர் மாரியம்மனையும் ஒரு சித்தர்தான் பிரதிஷ்ட்டை செய்தார்.

 19. திரு தாயுமானவன் அவர்களே,

  // ஆனால் வடமொழியில் “ஒ” என்னும் குறில் இல்லை “ஓ” என்னும் நெடில் மட்டும் இருக்கிறது. ஆனால் ஓம் என்ற ஓசைக்கு எழுத்தை உண்டாக்கிவிட்டார்கள் . இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. ஒரு வேலை அது தேவபாஷை என்பதால் அனைத்தும் சாத்தியம் போலும். அதே நேரத்தில் கரையான் புத்துகட்ட கருநாகம் நுழைந்தது போல் அவர்கள்(தமிழர்கள்) கண்டுபிடித்த அனைவருக்கும் பொதுவான சிலைவழிபாட்டில் பார்பனர்கள் புகுந்து ஆக்கிரமிப்பு செய்த பிறகு சிலைவழிபாடின் அதன் தெய்வீக தன்மையும் பொது நன்மையையும் மாறி அக்ரகாரத்து சுயநல நெருப்பு பற்றி கொண்ட பின் அதே தமிழர்கள் தான் அந்த சிலைவழிபாட்டை ஒறுக்கவும் செய்தார்கள். //

  ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்பார்களே அது தான் நினைவிற்கு வந்தது…

  What were you smoking when you wrote the above?

 20. சிவவாக்கியர் பாடல்கள் திரு தாய்மானவன் அவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
  சைவநெறி சிவம் எங்கும் வியாபகமாகப் பரந்துள்ளதென்றும் அரு அருவுரு உரு என்பன சிவத்தின் தடத்த வடிவங்கள் என்றும் பேசும் .அருவாய் யாண்டும் பரந்து இருக்கும் சிவம் உருவுடைச் சீவர்கள் அடைவதற்குரிய சன்னிதானமாக இருக்க முடியாது. ஏனெனில் உயிர்களும் அவ்வியாபகத்தில் அடங்கியுள்ளன. உருவுடைத் தடத்தமூர்த்திகளே உயிர்கள் சிவத்தை அறிந்து அடைவதற்கு உரிய சன்னிதானமாகும்.
  “மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவம்
  ஆயவேல் அருள்மய மாகும்” என்று காஞ்சிப்புராணத்தில் மாதவச் சிவஞானயோகிகள் கூறுகின்றார். அதாவது கல் செம்பு பொன் போன்றமாயா காரியங்களும் எமது முதல்வனாகிய சிவபெருமானது திருமேனிகளாக அமைந்தனவாயின் அவை மாயாகாரியங்கள் அல்ல; அருள் வடிவங்களே.. அருளை வழங்கும் வடிவங்களே.. “வெட்டவெளியாக’ பராகாசமாக வியோமரூபமாக இருக்கும் சிவம் இவ்வுருவத்தில் தங்கி அடியவனின் பூசையை ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்கின்றது என்றறியாத மூடர்களையே சிவவாக்கியர் தாயுமானவன் காட்டிய பாடல்களில் கண்டிக்கின்றார்.
  உருவ வழிபாட்டில்தான் உள்ளம் உருகும்; மனம் நெகிழ்ந்து கசியும். திருமுறைகளி ஓதி அனுபவிக்கமுடியும். தில்லைத்யில் கூத்தப்பிரானைத் த்ரிசித்த அப்பர் பெருமான்,ஐயனின் அபயகரத்தில், “என்று வந்தாய் என்னும் திருக்குறிப்பைக்” காணுகின்றார். திருமுறைகள் அனைத்தும் உருவவழிபாட்டின் வெளிப்பாடுகளே.
  சிவவாக்கியர் ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்று கூறியது, வேதத்தில் கூறப்பட்டுள்ள் ” தகரவித்தையையே” ஆகும். உபசாரமொழிகளை உண்மைமொழிகளாகப் போலிப் பகுத்தறிவாளர்களே பேசுவார்கள்.

  சிலை வழிபாடு என்ற சொல்லாட்சியே பிழை. கருணாநிதியும் வீரமணியும் பெரியார், அண்ணாதுரை பொம்ம்மைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி வழிபடுகிறார்களே அதுதான் சிலைவழிபாடு அல்லது பொம்மை வழிபாடு.

  மூர்த்தி ஆகிய திருவுருவத்தில் மூர்த்திமானாகிய பெருமானை எழுந்தருளச் செய்து, வழிபாட்டை ஏற்றருளும்படி வேண்டிக் கொண்டு செய்யும் வழிபாடு சிலை வழிபாடு அல்ல.
  சிவஞானபோதம் 12ஆம் நூற்பா உருவ வழிபாட்டைச் சீவன் முத்தர்களுக்கும் “தொழுமே” எனக் விதிக்கின்றது. அதைப் பத்தியின் முதல்நிலை , ஆரம்பநிலை என்பதெல்லாம் சாத்திரம் பயிலாத போலிச் சமய வாதிகளின் கொள்கை. ஆன்ம இலாபம் பெற விரும்புவோர், இந்துப் பண்பாட்டில், அதன் கூறாராகிய தமிழ்ர்பண்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள் போலிச் சமயவாதிகளின் கூற்றைப் புறந்தள்ளுவர்.

 21. நான் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியின் ஒரு கட்டமே இறை வழிபாடு ஆகிறது. நான் யார் என்ற வினாவுக்கு விடை கிடைத்தவுடன் தேடல் நின்றுவிடும். தேடியவரும், தேடப்பட்டபொருளும், ஒன்றே என்பது உணர்வு மூலமாக தெரிந்தவுடன் , இறைவழிபாடு என்பதன் உண்மை பயனும் பொருளும் விளங்கிவிடும்.

  அவ்வாறு அறிந்தபின்னும் இறைவழிபாடு நிறுத்தப்படவேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. மனிதனாக பிறந்தவன் யாராயினும் , ஒரு நாள் இந்த உடலை நீத்தாக வேண்டும். எனவே எதற்காக நூறு வயதுவரை வாழவேண்டும், இப்போதே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று யாராவது சொன்னால் , நாம் என்ன நினைப்போம்? என்றாயினும் மரணம் நிச்சயம். ஏன் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து அதன் பின்னர் சாக வேண்டும்? இப்போதே சாகிறேன் என்று ஒருவர் சொல்வதை போன்றதே உருவ வழிபாடு தேவை அற்றது என்ற கூற்றும்.

  இறை வழிபாடு மிக புனிதமானது. அதற்கு எல்லைகள் எதுவும் கிடையாது. எல்லைகளை வகுப்பவன் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்துவதற்காகவே, எல்லைகளை உருவாக்குகிறான்.

  அறிவிற்கு எல்லைகள் கிடையாது.. அறியாமைக்கு எல்லைகள் மட்டுமே உண்டு. அறியாமைக்கு வேறு எதுவும் கிடையாது. உருவங்கள் மூலம் செய்யப்படும் வழிபாட்டை போல, ஒரு மிக உயர்ந்த வழிபாட்டு முறை உலகிலேயே எங்கும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 22. அனைவருக்கும் வணக்கம் …..

  என் கருத்துக்கு மறுமொழிகள் மூலம் விளக்கங்கள் தந்த அனைவருக்கும் என் நன்றிகளை முதற்கண் தெரிவித்து கொள்கிறேன் ..

  திரு. சிவசுப்ரமணியன்….
  //உருவ வழிபாட்டை குறை கூறுபவன் எவனாயினும், மனநிலை பாதிக்கப்பட்டவனே ஆவான் .//

  முதலில் உருவ வழிபாட்டை நான் தவறாகவோ இழிவுபடுத்தியோ எங்கும் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அப்படி உருவ வழிபாட்டை நான் தரம் தாழ்த்தி பேசவேண்டும் என்றால் ஒன்று நான் அறிவாராய்ச்சி இல்லாத முரட்டு இஸ்லாமிய சமயத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும். அல்லது இந்துமதம் என்னும் இமயமலையின் மீது மோதி மோதி கொம்பு ஒடிந்து போன நாத்திக கட்சியை சேர்ந்தவனாக இருக்க வேண்டும். நான் அந்த இரண்டையும் சேர்ந்தவன் அல்ல. இங்கு நண்பர்கள் அனைவரும் கூறியது போல அணைத்து ஞானிகளும்,சித்தர்களும் முதலில் உருவ வழிபாட்டை உயர்த்தி பாடி இருந்தாலும் அவர்கள் முடிவாக கூறவருவது இறைவனின் இயற்கை உண்மையான உருவம் இல்லா எங்கும் வியாபித்து இருக்கும் சர்வ சக்தியை தான். இதையே தான் ஞானிகள் அனைவரும் சுத்த சூனியம் என்றும் வெட்டவெளி என்றும் சொல்கிறார்கள். ஆதி சங்கரர் தொடகத்தில் சிவன், சக்தி, மகாலட்சுமி என்று அணைத்து தெய்வங்களையும் போற்றி புகழ்ந்து பாடி இருந்தாலும் அவர் முடிவாக கூறியது என்னவோ அத்வைத கோட்பாட்டை தான். அத்வைதம் என்றால் இரண்டற்றது. இருப்பது எல்லாமே ஒன்று தான் அந்த ஒன்று தான் பலவாக தன்னை வியாபகபடுத்தி கொள்கிறது . எங்கும் பூரணமாக இருக்கும் இறைவனின் இயற்கை உண்மைகளை சிற்றறிவினரான நமக்கு எளிமையாக உணர வைப்பதற்கே பேரறிவினர்களான ஞானிகளும் சித்தர்களும் நமக்கு உருவ வழிபாட்டை ஏற்படுத்தி வைத்தார்கள். இது எவ்வாறென்றால் தொடக்க கல்வி படிக்க போகும் மாணவர்களுக்கு அவர்களின் நூலில் பல வண்ண படங்களின் துணையுடன் பாடம் போதிக்கப்படும் . மேல் வகுப்புக்கு செல்ல செல்ல படங்கள் குறைந்து வார்த்தைகள் தான் அதிகம் இருக்கும். அதுபோல ஞானத்திற்கு வித்திடும் அடிப்படை நான்கு யோகங்களில் ஒன்றான பக்தி யோகத்தை கடந்து வருவதற்கு உருவ வழிபாடு அவசியமே. ஆரம்ப நிலையில் இருக்கும் சாதகன் ஒருவனுக்கு பல இடங்களில் சிதறி கிடக்கும் மனதை ஒரு நிலையில் ஒரு புள்ளியில் கொண்டுவந்து வைப்பதற்கு உருவ வழிபாடும் மந்திர உச்சரிப்புகளும் அவசியம் தான். மனம் ஒருநிலை படும் கலையில்(ப்ரத்யாஹாரம்) ஒருவர் தேர்ந்து விட்டால் அதற்க்கு மேல் அவருக்கு உருவ வழிபாடு அவசியம் இல்லாமல் போகிறது. மனம் அடங்கினால் ஆணவமும் அடங்கும் ஆணவம் அடங்கிய மனதில் ஒருவித தெய்வீக அமைதி குடிகொண்டு இருக்கும் அந்நிலையில் இருக்கும் ஒருவனுக்கு இயற்கை உண்மையாகிய இறைநிலை நன்கு வாய்க பெரும் அப்போது இந்த பேரண்டத்தின் ரகசியங்கள் அனைத்தின் மர்ம முடிச்சுகளும் அவிழும் அப்போது உண்மையான இறைவன் யார் என்று ஒருவன் உணர்ந்து கொள்வான்.. ஆக உருவழிபாடு என்பது மனித அடைய வேண்டிய ஞானத்தின் முதல் படியே அன்றி முடிவு அல்ல. மேலும் உருவ வழிபாட்டால் மக்களுள் பிரிவினைகளும், பூசல்களும்,மனிதரில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற ஏற்றதாழ்வுகள் தான் எழுமே தவிர ஆன்ம நேய ஒருமைப்பாடு அங்கு வளர வாய்ப்பு இல்லை. கோயில்களில் அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது குறிப்பிட்ட ஒருவருக்கே அந்த பணி சொந்தம் என்கிற வாதமே அந்த வாதத்தை ஆணித்தரமாக மொழிந்திடும் கூட்டமே இதற்க்கு பெரும் சாட்சியாகும். இதை தான் வள்ளலாரும்
  “தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
  பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
  மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
  எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்” என்று பாடி அருளினார். நண்பர் சிவ சுப்பிரமணியம் கூறியது போல் உருவ வழிபாட்டை எதிர்ப்பவன் எவனாயினும் மனநிலை பாதிக்க பட்டவன் என்றால் ஆதி சங்கரர், பதஞ்சலி, சிவவாக்கியர், முதல் அணைத்து சித்தர்களும் மன நிலை பாதிக்க பட்டவர்களே. நன்றி

 23. மேலும் உருவ வழிபாட்டால் மக்களுள் பிரிவினைகளும், பூசல்களும்,மனிதரில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற ஏற்றதாழ்வுகள் தான் எழுமே தவிர ஆன்ம நேய ஒருமைப்பாடு அங்கு வளர வாய்ப்பு இல்லை.
  ———————————–/////////////////////////————————————————————–

  எப்படி இது? புரியவில்லையே, எந்த உருவ மூர்த்தியும் மக்கள் பிரிவினையை ஊக்குவிக்கவில்லையே? உயர்வு தாழ்வை கற்பிக்கவில்லையே? எந்த உருவம் உங்களுக்கு இதையெல்லாம் உபதேசித்தது? மாறாக கிராமங்களில் நீங்கள் எதிர்க்கும் உருவ வழிபாடு உள்ள கோயில்களில் எல்லாம் ஊரில் உள்ள எல்லா சாதியினரும் ஒன்றாக சேர்ந்து திருவிழா கொண்டாடுகிறார்களே, இதனால் ஊருக்குள் எல்லா தரப்பு மக்களிடமும் ஒற்றுமையும் நல்லினக்கமும்தான் ஏற்படுகிறது.

  மேலும் என் தாய் மாரியம்மனின் கோவிலில் பூசாரியாக எல்லா தரப்பினரும் உள்ளனரே. மேல்மருவத்தூர் செல்லுங்கள் அங்கு எல்லாரும் பூசை செய்யலாம், ஈசா லிங்கம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது அதற்கு எல்லோருமே பால் அபிசேகம் செய்ய பௌர்ணமி தோறும் அனுமதிக்கபடுகின்றனர்.
  சாதியையும் மற்ற பிரிவுகளையும் உண்டாக்கியவன் மனிதனே அன்றி உருவ மூர்த்திகள் அல்லர்.
  நீங்கள் உருவழிபாட்டினால் தான் ஒருமைப்பாடு குலைவதாக சொல்வது அஜித் ஒரு படத்தில் கருணாஸ் ஆட்டோ ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்கு காரணம் அவருடைய ஆடோவின் கண்ணாடி திரும்பி இருப்பதுதான் காரணம் என்று சொல்வது போல உள்ளது.
  மேலும் நீங்கள் மேல் நிலையை அடைந்து விட்டால் போதுமா? அதனால் சிலை வழிபாட்டை நிறுத்திவிட வேண்டுமா?நீங்களே ஒத்துக்கொண்டது போல ஆரம்ப நிலையிலுள்ளவர்க்கு என்ன செய்வது ?
  ஆதி சங்கரும் தான் அத்வைத நிலைக்கு வந்த பின் (அவர் ஆரம்பத்திலிருந்தே அத்வைதியாக தான் உருவ வழிபாடுகளையும் செய்தார்) மூர்த்தி வழிபாட்டை தடை செய்யவோ, குறை சொல்லவோ இல்லை, சிருங்கேரி வித்யா பிடத்தையும் அதனை சார்ந்து ஒரு கோவிலும், காஞ்சி மடமும் அங்கும் உருவழிபாட்டையும் விட்டு தான் சென்றார்.

  சிவவாக்கியர் ராம மந்திரத்தையும் திரு ஐந்தெழுத்து. மந்திரத்தையும் தன் பாடல்களில் சிறப்பித்து கூறுகிறார்.
  மேலும் அருள்தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே என்ற வரிகளில் உருவ வழிபாடுதனை விடாமலே இருக்கிறார் ஐயா.
  ஸ்ரீராம மந்திரமும் திரு ஐந்தெழுத்து மந்திரமும் ஐயனின் உருவை மனகண்ணில் கொண்டு வராது இருக்குமா?
  அத்வைத மகான் ரமணர் கடைசிவரை திரு அருணாசலத்தை பற்றியே நின்றார்.
  மேலும் அத்வைதம் ஒரு தரிசன முறையே அன்றி அது முற்றிலும் அருவ வழிபாடாக தெரியவில்லை. ஒரே பிரமத்தை எல்லாவற்றிலும் காணும் இரண்டற்ற நிலைதானே தவிர அது உருவுக்கு எதிரான முறையாக தெரியவில்லை.
  அவ்வாறு இருப்பின் அத்வைதி சங்கரர் வழிவந்த காஞ்சி மடத்தினால் மூர்த்தி வழிபாடு நடைபெறும் இத்துணை கோயில்கள் ஏன் பராமரிக்க படுகின்றன?

 24. மேலும் என்னை பொறுத்தவரை ஆன்மிக வெற்றி அர்ச்சகர் ஆவது இல்லை ஆண்டவனை அறிவது.அது என்னை பொறுத்தவரை ஒரு தொழில் அர்ச்சகராக பதவி பெற்ற எல்லோரும் ஆன்மிகத்தில் வெற்றி அடைந்து விட முடியுமா? இன்றைய சூழலில் அது ஒரு அரசியல் ஸ்டன்ட் அவ்வளவே. விருப்பம் இருப்பின் இன்று எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் தகுதிகளை வளர்த்துகொண்டால்.
  பக்தனுக்கு தான் முக்தி அன்றி, அர்ச்சகனுக்கு அல்ல, பூசை செய்வது அவனுக்கு ஒரு கடமை.அவனும் சிறந்த பக்தனாக இருப்பின் மட்டுமே அவனுக்கு ஆன்மிக முன்னேற்றம்.
  அத்தொழிலில் விருப்பம் உள்ளோர் யாவராயினும் தகுதியை வளர்த்து கொண்டு அர்ச்சகர் ஆக வேண்டியது தானே?

 25. அன்புள்ள தாயுமானவன்,

  சிவா வாக்கியருடைய பாடல்களை தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். உருவவழிபாட்டை குறை கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது தவறான செயல் ஆகும். உருவமற்ற வழிபாடுகள் மிக சிரமமானவையும் ஆகும்., எல்லோருக்கும் பொருத்தமானவையும் அல்ல.

  ஆதி சங்கரர் முதல் அனைத்து சித்தர்களும் ஒருபோதும் உருவங்கள் மூலம் வழிபாடு கூடாது என்று கூறவில்லை. உருவங்கள் மூலம் வழிபாடு செய்த மக்களில் அக்காலத்தில் சிலர், உருவங்கள் மூலம் செய்யப்பட வழிபாட்டுக்கு எல்லைகள் வகுத்த போதும், உருவமற்ற வழிபாட்டினை பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தபோது, உருவமற்ற முறையிலும் வழிபட முடியும் என்று அறிவுறுத்தவே அவர்களது பாடல்கள் எழுந்தன. மேலும் அவர்களே, உருவமற்ற வழிபாடு எல்லோருக்கும் எளிதானதல்ல, ஒரு சிலருக்கே பொருந்தும் என்றும் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

  உருவ வழிபாடு உன்னதமானது. உருவமற்ற வழிபாடும் உன்னதமானதே. ஆனால் உருவம் மூலம் செய்யப்படும் வழிபாடே பெரும்பான்மையோருக்கு பொருந்தும். எளிதாக வரும்.

  மாணிக்க வாசகரின் தேனினும் இனிய திருவாசகத்தில் ” உருவத்திருமேனியாக சிவபிரானின் இடப வாகன ஆரூடரின் தோற்றமும் , உரு-அருவ திருமேனியாக இலிங்க திருமேனியும், அருவ திருமேனியாக சோதியை வியந்தும் பாடியுள்ளார். இதே போன்றே பல அருளாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

  நான் சொல்லவந்த கருத்து என்னவெனில், தான் பின்பற்றும் வழிபாட்டு முறையை மட்டும் உயர்த்தி, பிற வழிபாட்டு முறைகளை தாழ்த்தி கூறும் எவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே ஆகும். கண்டவர் விண்டிலர், விண்டவர் காணாதோர் ஆவார்கள்.

 26. // உருவ வழிபாட்டை எதிர்ப்பவன் எவனாயினும் மனநிலை பாதிக்க பட்டவன் என்றால் ஆதி சங்கரர் //

  இதென்ன கொடுமை! ஆதி சங்கரர் உருவ வழிபாட்டை எதிர்த்தாராம். ஐயா, கொஞ்சம் ஆதி சங்கரர் என்ன சொல்கிறார் என்பதை உரைநூல்களில் ஆய்ந்து விஷயம் தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

 27. உருவ வழிபாடு ஏதுற்பவர்கள் அவர்களது தாய் அல்லது கடவுள் சின்னைதை அவமானபடுத்தும் செய்கையை செய்வார்களா. மனிதனுக்கு இயர்கயாகவே உள்ள உணர்வுதான் உருவ வழிபாடு.

 28. சிலை வழிபாடு ஒரு பாவச்செயல் என்றும் அதன் விளைவை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிப்போம் என்பதை அறியாதவர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது கிறிஸ்துவர்களின் கடமையாகும்.ஏற்பதுவும் ஏற்காததுவும் அவரவர் விருப்பம்.ஆனால் அறிவித்த நிமிடம் முதல் நீங்கள் திட்டினாலும் கொட்டினாலும் அவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியில் போய் விடுவான்.நீங்கள்தான் நிம்மதி இழக்க துவங்குவீர்கள்…..சிலைவணக்கம் கொண்ட கிறிஸ்தவர்களிடமே இப்படி சொல்லி உதைவாங்கிய அனுபவமெல்லாம் உண்டு……….இருந்தாலும் முடிவான விளைவுப்படி அந்நிமிடம் முதல் அக்கிருஷ்தவன் ஒரு வளர்ச்சியும் அவனை அவமானப்படுத்தியவன் வீழ்ச்சியையும் காணத்தொடங்குவான்………அதனால நல்லாத்திட்டுங்க அதுதான் வேணும் அவனுக்கு……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *