மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்

bus-with-facilities-for-differently-abledஅமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கவனித்திருக்கலாம்; அங்கே ஒவ்வொரு வளாகத்திலும் வாகனம் நிறுத்தும் இடங்களில் ஊனமுற்றவர்களுக்காக என்றே சிறப்பாக இடங்கள் ஒதுக்கி இருப்பார்கள். அவற்றில் வேறு யாராவது நிறுத்தினால் அபராதம் கட்டவேண்டிவரும். பொதுக் கழிவறைகள், பேருந்துகள் என்று எல்லா இடங்களிலும் அவர்களுக்குத் தனி வசதிகள் உண்டு. இதையெல்லாம் பார்த்து வியந்து இந்த அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்களே, நமது நாட்டில் இது போல இல்லையே என்று எண்ணி வருந்தியது உண்டு. ஊனமுற்றவர் என்ற சொல்லுக்கு Physically Challenged, Physically Disabled என்று கூட சொல்லாமல் இப்போது “Differently abled” என்று மாற்றுத் திறன் கொண்டோர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

நமது நாட்டில் மாற்றுத் திறன் கொண்டவர்களைப் பார்க்கும் பார்வையே வேறு. அண்மையில் நடந்த சம்பவம் இது. பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அருகில் சக்கர வண்டியில் மாற்றுத் திறன் கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த வழியாக வந்த மற்றொருவர் அவரைக் கண்டு கையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை இவர் கையில் எடுத்துப் போட்டார். கையில் திடீரென்று விழுந்த காசைப் பார்த்த இவர் பொங்கி எழுந்து விட்டார். ‘அடப்பாவி, நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை.. நானும் பஸ் ஏறத்தான் வந்தேன். வேண்டுமானால் உனக்கு பத்து ரூபாய் நான் தருகிறேன்,’ என்று கோபப்பட்டார். காசு போட்டவர் மன்னிப்பு கேட்டும் அவரால் பொறுக்க முடியவில்லை. இப்படித்தான் நமது சமூகம் மாற்றுத் திறன் கொண்டவர்களை பரிதாபத்துக்குரியவர்களாகவும், உதவி தேவைப்படுபவர்களாகவும் கருதி தமக்கு சமமான நிலை அளிக்காமல் ஒதுக்கி விடுகிறது.

நமது சமூக எதிரொலிப்பாக திரைப்படங்களிலும் மாற்றுத்childrenwithdifferentabilities திறன் கொண்டவர்களை கதையில் ஒரு சுமையாகவும், பரிதாபமாகவும், சமயத்தில் வில்லத்தனமாகவும் காட்டி ஒரு வித அருவருப்பையே ஏற்படுத்தி விடுகின்றன. இத்தகைய சூழலில் சாதாரணமாக ஊனம் உள்ளவர் ஆணாக இருந்தாலே அவர் பல இன்னல்களையும், சங்கடங்களையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். அதிலும் ஒரு பெண் ஊனமாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். அவள் சமூகத்தில் மேலும் பல சவால்களை சந்திக்க நேரிடும். அதுவும் அவளுக்கு திருமணம் என்று வரும்போது உடல் ஊனம் கூட இருக்க வேண்டாம், குள்ளமாகவோ, கருப்பாகவோ இருந்தால் கூட அதையும் ஊனமாக எண்ணி அதிக வரதட்சணை கேட்டவர்கள் உண்டு. இவையெல்லாம் பெருமளவு இப்போது மாறிக் கொண்டு வருகின்றன. இருந்த போதும், நமது சமூகத்தில் மாற்றுத் திறன் கொண்டவர்களின் வாழ்வு மலர்ப்பாதை என்று சொல்லிவிட முடியாது.

பழனி மாம்பழ கவிச்சிங்க நாவலர் என்று ஒரு பெரும்புலவர் இருந்தார். அவருக்கு கண்பார்வை கிடையாது. அவர் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. முருகனின் அருள் பெற்றவர். அவரை சேதுநாட்டு மன்னர்கள் ஆதரித்து வந்தனர். அந்த மன்னர்களின் அரசவைக்கு பாடி பரிசில் பெற மற்றொரு புலவர் ஒருவர் வந்தார். வந்தவர் தாம் நூறு செய்யுள்கள் இயற்றி முதன் முறையாக அரங்கேற்ற வந்திருப்பதாக அறிவித்தார். பின்னர் அவைப் புலவராக அமர்ந்திருந்த நாவலரைக் கண்ட அவர், நாவலர் கண்பார்வை அற்றவர் என்று கண்டு, அவை மங்கலமாக இல்லையே என்று குறிப்பாக நாவலரை வெளியேறுமாறு கூறி அவமதித்தார். அக்காலங்களில் ஊனத்தை அமங்கலம் என்று கருதினார்கள். இப்போது அந்த எண்ணத்தை நினைத்தால் ஒரு விதத்தில் வியப்பாகக் கூட இருக்கும்.

நாவலரும் மறைவாக விலகினார். புலவர், தான் எழுதி வந்த பாடல்களை அரங்கேற்றம் செய்து முடிக்க, நாவலர் வெளியே வந்து இவை அனைத்தும் தான் ஏற்கனவே இயற்றியது என்று கூறி அதிர வைத்தார். தன் அபாரமான ஞாபக சக்தியால் ஒரே ஒரு முறைதான் கேட்டபோதும் பிழையின்றி அந்தப் புலவர் பாடிய அத்தனை பாடல்களையும் பாடினாராம். புலவர் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு பரிசுகள் பெறாமல் திரும்பிப் போக எத்தனிக்கவும், கவிச்சிங்க நாவலர் அவரை மன்னித்து மன்னரிடம் பரிசு பெற்றுக் கொடுத்தாராம்.

peoplewithdifferentabilities1மங்கலம் அமங்கலம் என்று பிரித்து வைத்திருப்பது ஒரு மனோதத்துவ மருத்துவம் என்று கண்ணதாசன் கூறுவார். சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கிடைக்கும் போது மனம் மகிழ்ந்து உடல் சிலிர்க்கும் உணர்வைப் பெறுவது போல், இந்த மங்கல வழக்குகளும் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கின்றன என்று சொல்வார். இதுவரையில் சரி; ஆனால் நல்ல எண்ணத்தை பின்னணியாகக் கொண்ட இது போன்ற செயல்கள் கூட காலப்போக்கில் சமூக வக்கிரங்கள் ஏற்றப்பட்டு, கணவனை இழந்த பெண்ணைக் காண்பது அமங்கலம், ஊனமுற்றவர்களைப் பார்ப்பது கூட அமங்கலம் என்று மாறியது. அந்தணர் தனியாளாக வருவதைக் காண்பதும் அமங்கலம் என்று சொல்வது உண்டு. ஆனால் இது என்னவோ இந்து மதத்துக்குண்டான இழிவு என்று சொல்வதற்கில்லை.

ஏனெனில் இந்து மதத்தில் ஊனத்தை ஒரு ஒதுக்கக்கூடிய விஷயமாகவே கருதியதில்லை. சனாதன தருமத்தை நீரூற்றி வளர்த்த பெரியவர்கள், ரிஷிகள், ஏன் சில தெய்வங்கள் கூட, உடலில் ஊனம் உடையவர்களாக இருக்கிறார்கள். கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர். கண்ணனைக் காதலித்த பெண்களில் ஊனமுற்ற பெண்ணும் இருந்திருக்கிறாள். ஊனமுற்றவர்களை விலக்கி வைக்காமல் சமூகத்தில் அவர்களும் எல்லோரையும் போல அவரவருக்குரிய பங்கை அளித்து வருவதையே இந்து மத இதிகாச புராணங்கள் பதிவு செய்துள்ளதை இச்சம்பவங்கள் மூலம் அறியலாம்.

பின் ஏன் ஊனத்தை அமங்கலம் என்று எண்ணக்கூடியpeoplewithdifferentabilities3 அளவுக்கு நேரிட்டது? இதற்குப் பின்னுள்ள சமூகப் பின்புலங்களை சற்று விரிவாகத்தான் அலச வேண்டும். கூட்டாக வாழ்வதே பழைய நாள்களில் பெரும்பான்மையாக இருந்த குடும்ப அமைப்பு. அதில் சொந்தத் தாய் தந்தையர் மட்டும் அல்லாது சின்ன தாத்தா, பெரிய அத்தை என்று தூரத்து உறவினர்களைக் கூட வைத்து சம்ரட்சிப்பது தருமம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள். மாற்றுத் திறன் கொண்டவர்களும் விதிவிலக்கல்ல. அவர்களையும் அரவணைத்து குடும்பத்தில் அவருக்கு அதிக கஷ்டம் தெரியாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அந்நியப் படையெடுப்புகள், சுரண்டல்கள், கொள்ளைகளினால் வளம் குன்றி தனிப்பட்ட வாழ்க்கையைத் தள்ளுவதே பெரிய கஷ்டம் என்று ஆனபின் எல்லா தருமங்களும் உதிர்ந்து போக பல குறுகிய மனப்பான்மைகளும், சுயநலமும் சேர்ந்து பல மூட நம்பிக்கைகளை வளர்த்து விட்டன. இதன் நீட்சியாகவே குழந்தைத் திருமணம், சதி போன்ற கொடும் பாதகமான செயல்கள், சமூக சுயநலங்கள் நடைமுறை ஆகி, அது பெரும்பான்மை மக்கள் பின்பற்றி வந்த இந்து மதத்தின் மீது சுமத்தப் பட்டு, பரந்த நோக்குள்ள கொள்கைகள் எவ்வளவோ இருந்தும் மூடநம்பிக்கைகளும் இந்து மதக் கொள்கைகளாகப் பரிணமித்து விட்டன.

நமது இன்றைய காலகட்டத்தில் நாம் கண்கூடாக எத்தனையோ முதியோர் இல்லங்கள் பெருகி வருவதைக் காணவில்லையா.. வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களின் விளைவுதானே இப்படி பெற்றவர்களையே சுமையாக எண்ண வைத்திருக்கிறது. இதை யாரும் பாவம் என்று நினைக்காத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. சில நூறு வருடங்களில் வயதான பெற்றோர்களை தள்ளி வைப்பது புனிதச் செயலாகவும் மதக் கொள்கையாகவும் கூட மாறக்கூடும். இப்படித்தான் அந்தந்த காலகட்டத்தின் சமூக மதிப்பீடுகள் மதக்கொள்கைகளாக மாறிவிடுகின்றன என்று தோன்றுகிறது. இவ்வாறே ஊனத்தையும் அமங்கலம் என்னும் எண்ணம் வந்திருக்க வேண்டும்.

இக்காலத்தில் இவை அனைத்தும் முற்றிலும் மாறா விட்டாலும் ஊனமுற்றோர் குறித்த சமூகத்தின் பார்வை பெருமளவு மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. இப்போது அவ்வாறு அமங்கலம் என்று நினைப்பதை சாதாரணக் கருத்தாகக் கூட யாரும் நினைப்பதில்லை. இது போன்ற பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போதும் நகைப்புக்கு உரியதாகத்தான் எண்ணுவோம். இந்து மதம் இப்படி எத்தனையோ மூட நம்பிக்கைகளையும் சீர் திருத்தங்களையும் விலக்கியும் ஏற்றும் கடந்து வந்திருக்கிறது. இதில் கவனிக்கத் தக்க அம்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் செய்ததை, சொன்னதை இன்னமும் அப்படியே அமுல்படுத்தத் துடிக்கும் ஆபிரகாமிய மதங்களுடன் ஒப்பு நோக்கும்போது இந்து மதமே மாற்றத்தை ஏற்றுக் கொள்கிற முற்போக்கான மதம் என்பதில் ஐயமில்லை.

healing-touchஇதற்கு நேர்மாறாக முற்போக்கு முகமூடி அணிந்த கிறிஸ்தவ மதத்தில் நடப்பதைச் சொன்னால் மேலும் நகைப்புதான் எழும். எங்கெல்லாம் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வெளிநாட்டுப் பண உதவியுடன் களமிறங்குகிற மிஷனரிகள் மாற்றுத் திறன் கொண்டவர்களையும் வைத்து ஒரு கூத்து நடத்துகிறார்கள். பிறவி ஊனம் உள்ளவர்களைக் குணப்படுத்துகிறேன், நடக்க முடியாதவர் நடப்பார், குருடர் பார்வை பெறுவார், வாய் பேச முடியாதவர் பேசுவார் என்று போலி உத்திரவாதங்களை அள்ளிவிட்டு, அப்பாவி மக்களை மிஷனரிகள் ஏமாற்றி மதம் மாற்றுகிறார்கள். சாதாரண மக்களும் இவர்கள் வலையில் விழுந்து மதம்மாறுகிறார்கள். தமது குறை தீராத போது, அந்த மக்களுக்குப் போதுமான நம்பிக்கை இல்லை என்று கூறி தப்பித்துக் கொள்ளுகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் நடவடிக்கை எடுக்க முயன்றால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்பாடு என்று திரிக்கப்படும் என்று எண்ணி நடவடிக்கை எடுக்க யாரும் துணிவதில்லை.

மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையேhealing-touch2 இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான். கிறிஸ்தவத்தில் இது போல ஏதாவது மிராக்கிள் — அற்புதங்கள் செய்தால்தான் செய்பவரை ‘புனிதராக’ ஏற்றுக்கொள்வார்கள். அன்னை தெரேசா இப்படி எதுவும் செய்ததாகத் தெரியாவிட்டாலும் அவருக்கு புனிதர் என மரியாதை கிடைப்பதற்காகவே, ஒருவருக்கு கருப்பை புற்று நோயை அவர் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தினார் என்று கதைகட்டப் பட்டது. அப்படியும் புனிதர் என்ற பட்டம் பெற குறைந்தது இரண்டு அற்புதங்களாவது செய்தாகவேண்டும் என்கிற கட்டாயத்தை கிறிஸ்தவ தலைமை விதிக்க, அப்படி இரண்டாவது அற்புதம் எதுவும் அன்னை தேரேசாவால் நடக்காமல் போனதால், ‘அர்ச்சிக்கப் பட்டவர்’ என்கிற பட்டம் மட்டுமே கிடைத்தது.

இப்படி இன்றைய நவீனமான காலத்திலும் இன்னமும் அற்புதங்கள் நிகழ்த்துவதன் மூலம் உடல் ஊனங்களைக் குணப்படுத்த முடியும் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் மிகவும் முற்போக்கான மதம் என்று எல்லோரையும் நம்ப வைக்கிறார்கள். சில நாள்கள் முன்பு ஆனந்த விகடன், சாமியார்கள் ஸ்பெசல் என்று இணைப்பிதழ் ஒன்று வெளியிட்டார்கள். கிளுகிளுப்புக்காக பலான சாமியார்கள் பற்றிச் செய்தி வந்ததே தவிர, இந்த பாதிரி சாமிகளைப் பற்றி ஒரு வரி கூட இல்லை. போலிச் சாமியார்களில் பாதிரியார்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்லர். ஆனால் விகடன் போன்ற பத்திரிகைகள் ஏனோ கண்டும் காணாமல் இருக்கின்றன.

மாற்றுத் திறன் கொண்டவர்களுக்குத் தேவை நம்முடைய இரக்கம் இல்லை. சமூகத்தில் மற்றவர்களுக்கு ஈடான மரியாதையும் இடமும்தான் அவர்களுக்குத் தேவை. அதை விடுத்து அவர்களைப் பிரித்து வைப்பதோ, சந்தையாக நினைத்து மத வியாபாரம் செய்வதோ மிகவும் கீழ்த்தரமான செயல்.

19 Replies to “மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்”

 1. //அந்தந்த காலகட்டத்தின் சமூக மதிப்பீடுகள் மதக்கொள்கைகளாக மாறிவிடுகின்றன என்று தோன்றுகிறது.//

  ஊனத்தை நாகரிகமாகக் குறிக்கும் முறை வடமொழியில் உண்டு.
  செவித்திறன் குறைந்தவரை ‘சக்ஷுச்ரவா:’(கண்ணால் கேட்பவர்)
  என்று சொல்வர்.கள்ளிச் செடியை ‘மஹாவ்ருக்ஷம்’ என்பர்.
  செவ்வாய்க் கிழமை மங்கள வாரம் ஆகும். மரபு மறந்து போனதால்
  வெளிநாட்டினர் கூறுவது வியப்பளிக்கிறது.மென்மையும்,கருத்தாழமும்
  மிக்க வழக்கம் அழிந்து போய்விட்டது.

  தேவ்

 2. நல்ல கட்டுரை மது.

  மாற்றுத் திறனுடையோரை வெளியில் இருந்து ஆய்வு செய்து இருக்கிறீர்கள். அவர்களுடைய மறுபக்கம், மனம் சம்பந்தப்பட்டும் எழுதுங்கள். பலர் தங்கள் குறைகளை சுமையாக நினைப்பவர்கள். சிலர், அதை இயல்பாக எடுத்துக்கொண்டு தன்னெழுச்சியாக முன்னேறுபவர்கள்.

  மங்கலம்,அமங்கலம், தீட்டு, துடைப்பு எல்லாம் நம்மிடையே பரவியிருக்கும் நம்பிக்கை சார்ந்த ஏமாற்றல்கள். இதையெல்லாம முதலில் கேள்விகள் கேட்க பழக வேண்டும். அப்போதுத்தான் வெளிச்சம் கிட்டும்.

  நேசமுடன்
  வெங்கடேஷ்

 3. வணக்கம்,

  ////மாற்றுத் திறன் கொண்டவர்களுக்குத் தேவை நம்முடைய இரக்கம் இல்லை. சமூகத்தில் மற்றவர்களுக்கு ஈடான மரியாதையும் இடமும்தான் அவர்களுக்குத் தேவை. அதை விடுத்து அவர்களைப் பிரித்து வைப்பதோ, சந்தையாக நினைத்து மத வியாபாரம் செய்வதோ மிகவும் கீழ்த்தரமான செயல்.////

  அபாரம் நண்பர் ஸ்ரீ மது அவர்களே, இந்த வரிகள் இவ்வளவு சின்னதாக இருக்க வேண்டியவை அல்ல வீதி வீதியாக போஸ்டர் அடித்து ஓட்டப்படவேண்டியவை.

  ஆனாலும் ஏனோ இந்து சாமியார்களை அவர்கள் நன்மையே செய்வதாக இருப்பினும் ஹிட் லிஸ்டில் வைத்து, குறி வைத்து காத்துக் கொண்டு இருக்கும் பகுத்தறிவு என்று தங்களை நம்பிக்கொண்டு அரசாளும் கூட்டம் கிறிஸ்துவ மெசினரிகளுக்கு இப்படி பகிரங்கமாக மோசடி செய்ய ஸ்பெஷல் இலவச அனுமதி வழங்கியுள்ளது, மன்னிக்கவும் விற்றுள்ளது போலும்.

  பகுத்தறிவு பட்டதாரிகள் என்றாவது ஒரு நாளாவது இந்த மோசடியை வெளிச்சம் போட்டு கட்டி உள்ளார்களா?

  பிறவியில் குறை பாடு காட்டி இயற்க்கை இவர்களை ஏமாற்றும்போது அதை இவர்கள் அதை அறிந்திருக்க மாட்டர்கள், ஏனெனில் கருவிற்கு மனமும் இல்லை மதியும் இல்லை, ஆகவே அவர்கள் வளர்ந்தாலும் தங்களின் உறுப்பிலா நிலை அவர்களை பெரிதும் பாதிக்காது, ஆனால் உங்களை குனப்படுத்துகின்றோம் நீங்களும் மற்றவர்களை போல் வாழலாம் என்று இந்த மோசடியாளர்கள் கூறுவதை நம்பி பிரார்த்தனை செய்து கடைசியில் உங்களது நம்பிக்கை பெலவீனமானது என்று ஏற்கனவே வெந்து கிடக்கும் அவர்களது மனதில் வேல் பாய்ச்சும் இவர்களின் காருண்யம்……………மன்னிக்கவும் வார்த்தைகள் சொல்லமுடியாதவை.,

  நமது இளைஞர்கள் துணிந்து எழுந்து இவர்களின் முக மூடிகளை கிளித்தாலன்றி மக்கள் ஏமாறுவது நிற்கப்போவது இல்லை.

  தயவு செய்து மாற்றுத்திறன் கொண்ட இவர்களை அவர்களின் போக்கில் வாழ விடுங்கள். வலியோர் முன்னர் எளியோர் ஊனரே மற்றபடி இருவருக்குள் என்ன வித்தியாசம். அதே போல்தான் அவர்களும், அவர்களுக்கு நண்பர் ஸ்ரீ மதுவின் கூற்றுப்படி இரக்கம காட்ட தேவை இல்லை அவர்களையும் சக மனிதராக மதித்தலே நன்று. அது அவர்களை ஊக்குவிக்கும் நிலையும் ஆகும்.

 4. ஊனமுற்றோரை அமங்கலம் என்று கருதப்பட்டதாகத்தெரியவில்லை. நீங்கள் சொல்லும் ஒரு புலவரின் செவிவழிக்கதையை விடுத்து மற்ற வரலாற்று இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை விளக்கவும். திருதராட்டிரன் முதலான குருடர்களை அரசனாகக்கூட ஏற்றுக்கொண்டது நம் மரபு. (குருடன் அரசனாக இருக்க முடியாது என்பது யதார்த்தமும், சாத்திரமும் கூட).

  அது போன்று விதவைகளும் புறக்கணிக்கப்படவில்லை. அவர்களுக்கு பல நியாயமற்ற கட்டுப்பாடுகள் விதித்து மங்கள நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பதை நிறுத்தியதற்கு சமூக மனவியல் காரணங்களே இருக்கின்றனவே ஒழிய மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. இளம் விதவைகள் நிறைந்திருந்த காலத்தில் அவர்கள் மண விழாவில் கலந்துகொள்ளுதல் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம், அது வழக்காகி பின்னர் இப்படி ஒரு தடை ஏற்பட்டிருக்கிலாம். இது புரிந்துகொள்ளக்கூடியதே.

  ஆனால், விதவைகள் என்பதற்காக அவர்கள் இழிவுபடுத்தப்படவில்லை. இராமன் பட்டமுழுக்கில் தசரதனின் விதவைகள் கலந்துகொண்டதாக இதிகாசங்கள் பேசுகின்றன.

  //// கணவனை இழந்த பெண்ணைக் காண்பது அமங்கலம், ஊனமுற்றவர்களைப் பார்ப்பது கூட அமங்கலம் என்று மாறியது. ////

  விதவைகளைப் பார்ப்பது அமங்கலமா! இல்லவே இல்லை. இராமன் காட்டிலிருந்து வந்ததும் முதலில் வணங்கியதும் பார்த்ததும் கைகேயியைத்தான். பின்னர்தான் பரதனிடமே பேசுகிறான். தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள்.

  /// அந்தணர் தனியாளாக வருவதைக் காண்பதும் அமங்கலம் என்று சொல்வது உண்டு. ///

  சகுனத்தையும் மங்கல-அமங்கலத்தையும் குழப்பிக்கொண்டு கட்டுரை எழுதியிருக்கிறார் ஆசிரியர். பிணம் வந்தால் நல்ல சகுனம். அதனால், பிணம் என்ன மங்கலமா? தன் பெண்டாட்டி எதிரே வந்தால் கெட்ட சகுனம். அவள் என்ன அமங்கலமா?

  /// நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர். ///

  பகவான் உங்களை மன்னிக்கட்டும். ஸ்வாமி சனீஸ்வரர் தன் அண்ணன் யமனால் காலில் அடிக்கப்பட்டதால் கால் கொஞ்சம் விந்தி விந்தி நடப்பவர் என்பது புராணம். அவர் கால் இல்லா முடமாக நீங்கள் எழுதியிருப்பது தவறு

  தன் தகப்பன் சூரியன் தன் தாயார் சாயாதேவிக்கு இழைத்த அநீதியை எதிர்த்துக்கேட்ட தருமத்தலைவர் சனீஸ்வரர் தன் சகோதரன் யமனுடன் அப்போது ஏற்பட்ட தகராறு.

  ஊனமுற்றோர் பிரார்த்தனை செய்வது நல்லதுதான். அது எந்த மதத்தில் இருந்தாலும். இதற்காக கிருத்துவ மதத்தைக் குறை சொல்லக்கூடாது. ஆனால், இந்த “முடவர்கள் நடக்கிறார்கள்” சுவிசேஷக் கூட்டம் இந்தியாவின் “Prevention of Magical Remedies” சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

  நன்றி

  ஜயராமன்

 5. இவர்கள் எல்லோரையும் ஏமாற்ற நினைத்து அவர்கள் ஏமாந்து போதும் நாள் விரைவில் வரட்டும்!

 6. Dear friends physically disabled were healed by jesus christ in our preaching meeting we just mention thet versus to invite the needy people other wise we r not doing magic but miracles r happening that u cant stop cos its gods work those who belive will be healed

 7. மிக அருமையான அழகான சமயத்துக்கு தகுந்த கட்டுரை. தந்தமைக்கு நன்றி மது. விழுப்புரத்திலிருந்து நான்கு கல் தொலைவில் திருவாமாத்தூர் எனும் சிவத்தலம் உள்ளது. இத்திருக்கோவிலில் உள்ள 750 ஆண்டுகள் பழமையான கல் வெட்டு ஒரு செய்தியைத் தருகிறது. இத்திருக்கோவிலில் பதினாறு பார்வையற்றவர்கள் திருப்பதிகம் விண்ணப்பிக்கவும் (தேவாரம் ஓதவும்) நியமிக்கப்பட்டதாகவும் அவர்கட்குக் கண்காட்டுவாராக பார்வையுடைய இருவர் அவர்கள் தேவைகளை நிறைவு செய்ய பணிக்கப்பட்டதாகவும் அறிகிறோம். மாற்றுத்திறன் கொண்டோ ருக்கு கல்வி கற்கவும் வாழவும் நம் திருக்கோவில்கள் வழி செய்தன. 750 ஆண்டுகளுக்கு முன்னரே செய்யப்பட்ட இந்த சமுதாய சேவை நம் இன்றைய திருக்கோவில் பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகிகளுக்கும் வழிக்காட்டியாக அமைய ஆமாத்தூர் ஐயன் அருளட்டும். (தென் இந்திய கல்வெட்டுக்கள் பாகம் 8 பக். 749, பேரா. ந. சுப்பு ரெட்டியார் எழுதிய தம்பிரான் தோழர் நூலில் மேற்கோள் காட்டப்பட்டது.)

 8. Brothers,
  It is easy to say “let the differently abled be in that same state”. You dont know their pain in their heart. they dont want to compromise in their life. Also, please think about the people who born with all the abilities and became disabled due to some accident. People like DGS gave lot of hope to such people. GOD used him to bring healing to many. If needed you can go and check with the people who got healed in such meetings. It is not that difficult to get their addresses. You can catch hold of the people who got healed, while they are coming down from the prayer meeting stage after they testify.
  It is easy to brag about other on a blog, without any first hand experiances.
  Tamilhindu editor, I know, you might not publish this also. But, I am happy atleast you will be reading my words.

  Your Brother,
  Ashok

  (Editors’ note: comment edited)

 9. //People like DGS gave lot of hope to such people. GOD used him to bring healing to many.//

  ஐய்ய…….தோடா! அல்லாரையும் காப்பாத்னாறுன்னா……அவுரு இன்னாத்துக்கு கட்ஸீ காலத்ல ஆஸ்பத்ரில போய் பட்துக்குனாறு? போவ ஸொல்ல தன்னோட மாஜிக் தனக்கே வேலெக்கு ஆவாது, தன்னோட கடவுள் மாதிரியே அப்டீன்னு அவுருக்கு தெர்ஞ்சு போச்சு இல்ல? இன்னா….நா ஸொல்றது கரீட்டு தானே?

  //If needed you can go and check with the people who got healed in such meetings. It is not that difficult to get their addresses. You can catch hold of the people who got healed, while they are coming down from the prayer meeting stage after they testify.//

  நாங்க இன்னாத்துக்கு அஸோக்கு செக் பண்ணனும்? எங்க்ளுக்கு தான் மேட்டரு டுபாகூர்னு தெரியுமே! டுபாகூர் இல்லாங்காட்டி நீங்க தான் வாத்யாரே ப்ரூவ் பண்ணனும்.

 10. ஏம்ப்பா மன்னாரு, டி.ஜி.எஸ்ஸு ஆஸ்பத்திரியிலையா செத்தாரு..பொய் சொல்லாதீங்க…அண்ணாச்சி அ”சோக்”குமார் கணேசன்சொன்னா சரியாத்தான் இருக்கும். மெய்யாலுமேபா…

  ஆந்திராவையே சர்ச்சா மாத்திக்காட்டின ஒய்.எஸ்.ஆரையே கைவிட்டுட்டார் (யாருன்னு தெரியலை..யேசுவா அல்ல அவங்கப்பாவான்னு)

 11. அந்த கால எம்ஜிஆர் படக் காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது;
  கதாநாயகி ஏதோ ஒரு அதிர்ச்சியில் இடுப்புக்குக் கீழே கால் வழ‌ங்காமல் போக “வீல் சேரில்” இருப்பார்; நாயகன் எம்ஜிஆர் ஒரு பாடலை உணர்ச்சிகரமாகப் பாட இதனால் மனநிலையில் ஏதோ ஒரு மாற்றம் உண்டாகி கதாநாயகி எழுந்து துள்ளி நடனமாடுவார்; இது மருத்துவர்களாலேயே புரிந்துக்கொள்ளமுடியாத- ஆனால் நிரூபிக்கப்பட்ட அதிசயமாகும்;

  கரிசனையுடன் கூடிய வார்த்தைகள் மற்றும் அன்பான தொடுதல் எந்த நோயையும் குணமாக்கும் என்பது மருத்துவ உண்மையாகும்;

  ஏன் ஊமைகள்- அதிர்ச்சியினால் சித்த பிரமையினால் செயலிழந்தோர் கூட இதுபோல குணமாக்கப்படுவது மருத்துவ உண்மையாகும்;
  இதுவும் கூட திரைப்படங்களில் வந்துள்ள நிகழ்ச்சியே.

  “ஆகாதவன் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்ற போக்கைவிட்டு அறிவுபூர்வமாக யோசியுங்கள்;

  DGS அவர்கள் சுமார் 74 வயதான முதியவர்;
  பொறுப்பான வங்கி அதிகாரியாகப் பணிபுரிந்தவர்;
  அவர் அடைந்த வெற்றி அவரே எதிர்பாராததாகும்;
  அவர் கடந்த 35 வருடங்களாகவே மரணத்துடன் போராடி வந்தார்;
  அவருடைய மரணத்தைக் கொச்சைப்படுத்துவது படுபாதகச் செயலாகும்;
  அவர் மேஜிக் செய்து யாரையும் குணமாக்கவில்லை;
  அவரிடம் நம்பிக்கையுடன் வந்தவருடைய விசுவாசமே குணமாக்கியது;
  இதுவே வேதம் சொல்லும் விதியாகும்;

  குணமானவர் மீண்டும் சுகவீனப்படவும் மரிக்கவும் போகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்; சில வீட்டுக் காரியங்களை ஒழுங்கு செய்ய சிலருக்கு இறைவன் ஆயுளை நீட்டித்துத் தரலாம்; அதற்காக அவருக்கு மரணமே வராது என்று அர்த்தமல்ல;

  அதே போல மரணத்தருவாயிலிருக்கும் யாரும் “ஐயய்யோ என்னை ஆஸ்பத்திரியில் சேருங்களேன் ” என்று கூச்சலிடுவதில்லை;
  உயிரின் துடிப்பு உங்களுக்கு கேலியாக இருக்கிறதோ?

  DGS அவர்களைக் கேட்டுக் கொண்டா அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பார்கள்?

  உயிர் போனபிறகும் “ட்யூப்”ஐ செருகிவைத்து நம்மையும் உள்ளே அனுமதிக்காமல் ஆனமட்டும் இலட்ச லட்சமாக பிடுங்கிக் கொண்டு
  கையில் பிணத்தைத் தரும் மருத்துவ உலகத்திலேயே இத்தனை “இது” வாகப் பேசினால் அனுமனின் சிரஞ்சீவி மலை கையில் கிடைத்தால் என்னவெல்லாம் பேசுவோமோ?

 12. ‘ஆண்டவரின் அன்புக்குப் பாத்திரமான வர்களே! நீங்கள் அவரை நோக்கி வாருங்கள்… அவர் உங்கள் பிணிகளைத் தன் பார்வையால் ரட்சிக்கிறார்…’ – இப்படி சிலிர்க்கச் செய்யும் போதனைகளுடன் டி.ஜி.எஸ். தினகரன் குடும்பத்தினர் நடத்தும், ‘இயேசு அழைக்கிறார்’ ஆராதனைக் கூட்டங்கள் அகிலமெங்கிலும் பிரசித்தி பெற்றவை. சகோதரர் டி.ஜி.எஸ். தினகரனின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் பால் தினகரன், தன் மனைவி இவாஞ்சலினுடன் இணைந்து அந்தக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அவர்களின் ஜெபக் கூட்டங்களை மையம் கொண்டு ஒரு புகார் கிளம்பியுள்ளது!

  கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிட்டாமணி என்பவர், பால் தினகரன் உள்ளிட்டோர் மீது சமீபத்தில் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  அது தொடர்பான வழக்கு கோவை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற… பால் தினகரன், இவாஞ்சலின் மற்றும் அற்புத சுகமளிக்கும் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தியோடர் ஆகியோரை நவம்பர் 24-ம் தேதி நேரில் ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது கோர்ட்.

  கிட்டாமணியைச் சந்தித்தபோது, ”ஆண்டவன் பேரைச் சொல்லிக்கிட்டு ‘அற்புத சுகமளிக்கும் கூட்டம்’ங்கிற பேர்ல போதனைக் கூட்டம் நடத்தி, குருடர்களைப்பார்க்க வைக்கிறதாவும் ஊமையைப் பேச வைக்கிறதாவும் சொல்லி விளம்பரம் குவியுது. இதை உண்மைனு நம்பிக்கிட்டு ஊனமுற்றவங்ககூடத் தவழ்ந்துபோய் அந்தக் கூட்டத்துல கலந்துக்குறாங்க. ஜெகஜ்ஜோதியா கூட்டம் நடந்துட்டிருக்கும் போது, ‘இயேசு எப்போ வந்து அருள் புரிவார்? எப்போ நம்ம கை, கால் குணமாகும்?’னு இந்த சனங்க மனசுக் குள்ளே ஏங்கிப் போராடுறாங்க. ஆனா, கூட்டம் முடிஞ்சு மேடையில இருக்கிற மவராசங்க கார்ல ஏறிப் பறந்துடுவாங்க. நூறு கிலோமீட்டருக்கு அந்தப் பக்கமிருந்து வந்த அப்பாவி சனங்க,எந்த புண்ணியமும் கிடைக்காம மறுபடியும் தவழ்ந்து கிட்டே திரும்பிப் போகும்.

  இது ஒரு வகையில் ஏமாத்து வேலைதான். சாமி பேரைச் சொல்லித் தப்புப்பண்றவங்களை மன்னிக்கவே கூடாது! அதனால தான் அவங்க மேல புகார் கொடுத்திருக்கேன். இவங்களுக்கு சட்டம் கொடுக்கற எச்சரிக்கையைப் பார்த்தாவது இனி இந்த மாதிரி தப்பை யாரும் பண்ணக் கூடாது!” என்றார் ஆவேசமாக.

  கிட்டாமணியின் வக்கீல் ரமேஷ்குமாரிடம் பேசிய போது, ”இந்த வழக்கு நூறு சதவிகிதம் சமூகப் பொறுப்புடன் போடப்பட்டிருக்கு. காரணம், மேஜிக்கல் சிகிச்சை என்ற ‘அற்புதங்கள் மூலம் குணப்படுத்தும்’ முறை பற்றி விளம்பரம் செய்வதைத் தடுப்பதற்கென்று ஒரு சட்டமே இருக்கிறது. அந்த ரூட்டில்தான் இந்தப் பிரச்னையை நாங்க அணுகியிருக்கோம்.

  இந்தப் பிரச்னையை ஆராய்ஞ்சா, சுகமளிக்கிற பிரார்த்தனைக் கூட்டம்கிற பெயர்ல பெரிய அளவிலான மதமாற்றங்கள் மட்டுமே நடக்குதுங்கிறதைப்புரிஞ்சுக்கலாம். மகாராஷ்டிர மாநிலத்துல இப்படி பிரார்த்தனை மூலமா நோயைக் குணப்படுத்து றேன்னு திசைதிருப்பிய போதகர்கள், சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்கிறாங்க. தமிழ்நாட்டுல கிட்டாமணி யின் முயற்சி ஒரு முன்னுதாரணமா இருக்கப் போகுது!”என்றார்.

  இதுபற்றி பால் தினகரன் தரப்பில் பேசியபோது, ”உலக நலனுக்காக தேவனிடம் மன்றாடும் எங்களுக்கு இதுபோன்ற சில சோதனைகள் தோன்றுவதும் இயற் கையே! இதற்காக நாங்கள் கலங்குவதுமில்லை… வழக்குத் தொடுத்தோரை நொந்து கொள்வதுமில்லை. பிழை செய் பவர்களையும் தேவன் மன்னிக்கச்சொல்லியிருக்கிறாரே? எல்லாப் பிரச்னைகளுக்கும் சட்ட ரீதியாக பதில் தருவோம். தேவன் நம்மோடும் இருக்கிறாராக!” என்கிறார்கள்.

  – எஸ்.ஷக்தி
  Junior Vikatan 5.11.08

 13. https://www.jamakaran.com/tam/2008/october/poi_saatchi.htm

  சகோ.மோகன் சி.லாசரஸ் (நாலுமாவடி) அவர்கள் அற்புத மனிதர் என்ற பெயரில் சகோ.D.G.S.தினகரன் அவர்களைப்பற்றி வெளியிட்ட VCD ஒன்றை நான் காண நேர்ந்தது.

  சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் சகோ.தினகரனை இயேசுவுக்கு சமமாக்கி அவர் பாணியிலேயே சகோ.தினகரனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ஆனால் இவர் தான் நடத்திய ஒரு கூட்டத்தில் HIV எயிட்ஸ் வியாதியஸ்தனை தன் அருகில் இருக்கும் இயேசு மேடையிலிருந்து இறங்கிபோய் அவனை தொட்டு சுகமாக்கிவிட்டார் என்று ஜெபத்தில் ஒரு பெரிய பொய்யைக்கூறி, அந்த நபரையும் பெயர் சொல்லி மேடைக்கழைத்தார். அவனுக்கோ அந்த எயிட்ஸ்நோய் இப்போதும் சுகமாகாமல் அவன் அந்த வியாதியை சுமந்துக்கொண்டு, மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறான். எயிட்ஸ் வியாதி இதுவரை சுகமாகியதாக உலக மெடிக்கல் ரிப்போர்ட்டில் இல்லை என்பதை பழைய ஜாமக்காரனில் ஆதாரத்துடன் எழுதினேன். இவர் மேடையில் கூறியது பொய்சாட்சி – இதைக்குறித்து இதுவரை சகோ.மோகன் சி.லாசரஸ்ஸிடம் பலர் எழுதியும் நேரிலும் கேள்வி கேட்டும் பதில் கூறவில்லை.

  இப்போது உலகறிந்த ஒரு விஷயத்தை இவர் அந்த VCDயில் மூடிமறைத்து உலக மக்களை பொய் சொல்லி ஏமாற்றப்பார்க்கிறார். அந்த VCDயில் அவர் கூறிய முதல் பொய்.

  சகோ.தினகரன் வியாதியில் சாகவில்லை என்றும் கர்த்தராக பார்த்து வியாதி மூலமாக சகோ.தினகரனை எடுத்துக்கொண்டார் என்பதாகும். அதே CDயில் சகோ.தினகரன் எத்தனைமுறை வியாதிபடுக்கையில் இருந்தார் என்றும், தான் அவரை மலர் ஆஸ்பத்திரியில் வியாதிபடுக்கையில் இருக்கும்போதுபோய் பார்த்து வந்ததையும் அப்போது அவர் பேச பெலனின்றி படுக்கையில் கிடந்ததாக அவர் குறிப்பிட்டுவிட்டு, மரிக்கும்முன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இரும்பமுடியாமல் தவிப்பதை அதே VCD படத்தில் சகோ.தினகரனைக்காட்டி, அந்த சூழ்நிலையில் தான் சென்று ஜெபித்து வந்த விவரத்தையும் அந்த விசிடியில் கூறி அறிவித்தார். இவ்வளவையும் கூறிவிட்டு சகோ.தினகரன் வியாதியில் சாகவில்லை என்று கூறுவது கேலிகூத்தாக தெரியவில்லை? இதற்கு தன் மனைவியின் சொப்பனத்தை சாட்சிக்காக இழுப்பது அபத்தம்.

  அதுமட்டுமல்ல, சகோ.தினகரன் அவர்களுக்கு எத்தனைமுறை கிட்னி ஆப்ரேஷன் செய்யப்பட்டது. எத்தனைமுறை இருதய அறுவை சிகிச்சை நடந்தது என்பதை பலர் அறிவார்கள். அந்த ஆப்ரேஷனுக்காக ஒவ்வொருமுறை அமெரிக்கா சென்றபோதும் அவருக்கு சுகவீனம் ஒன்றுமில்லை என்று பகிரங்கமாக பொய் சொன்னார்கள். பிஷப்.சுந்தர் கிளார்க் அவர்கள் அமெரிக்கா சென்று படுக்கையில் கிடந்த அவரை கண்டு அதை அப்படியே இந்தியாவில் அறிவித்ததால் சகோ.தினகரன் குடும்பம் பிஷப் மேல் மிகவும் கோபப்பட்டார்கள்.

  அதைவிட அந்த VCDயில் இவர் கூறியிருக்கும் பெரிய பொய் என்னவென்றால் அத்வானியையும், சங்கராச்சாரியாரையும் சகோ.தினகரன் அவர்கள் சந்தித்தது மிஷனரிகளை காப்பாற்றுவதற்காகத்தானாம்! இது கேட்க தமாஷாக இல்லை! இப்போதெல்லாம் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் பொய் இவர் வாயிலிருந்து சரளமாக வருகிறது. அங்கு சங்கராச்சரியாரோடு நடந்த பேச்சுவார்த்தையின்போது சகோ.தினகரன் அவர்கள் தன் கால் ஷூவை கழற்றவில்லை என்பதை பெரிய சிறப்பு செய்தியாக அந்த சிடியில் அறிவிக்கிறார். 1½ மணி நேரம் இயேசு தன்னை சந்தித்ததை சங்கராச்சாரியாரிடம் கூறி அவருக்கு சுவிசேஷம் அறிவிக்கவே போனார் என்று மோகன் சி.லாசரஸ் அவர்கள் துணிகரமாக பொய் செய்தியை தான் கூடவேயிருந்து பார்த்தைப்போல் அறிவிக்கிறார். இந்த சம்பவத்தில் ஒன்றை இவர் ஒத்துக் கொண்டார். அதாவது சகோ.தினகரன் சங்கராச்சாரியாருக்கு பரிசு கொடுத்தது உண்மை என்றும், ஆனால் அது பூஜை சாமான் அல்ல என்றும், அந்த பெட்டி பூஜை சம்பந்தப்பட்டதல்ல ஆனால் அது பணம்போடும் பெட்டி என்கிறார். இந்த விவரத்தை எப்படி அத்தனை தெளிவாக கூறுகிறீர்கள் என்று அவரிடமே வாசகர்கள் கேளுங்கள். அந்த விவரத்தை வழக்கம்போல் இயேசு மேடைக்கு உங்கள் அருகே வந்து காதில் சொன்னாரா? என்று கேட்டுப்பாருங்கள். அவர் கூறும் பதில் சகோ.தினகரனே என்னிடம் கூறினார் என்பதாகும். குற்றவாளியின் சாட்சி ஏற்புடையதா? மேலும் கூறுகிறார். பூஜை பொருள் கொடுத்ததாக பத்திரிக்கைக்காரர்கள்தான் தவறாக எழுதிவிட்டனர் என்றும், சில கிறிஸ்தவ பத்திரிக்கைகளும் அதை எடுத்து எழுதி அவரை அவமானப்படுத்த அந்த செய்தியை வெளியிட்டன என்றும் கூறி அந்த சிடியில் என்னையும் சாடியிருக்கிறார். சங்கராச்சாரியரை சந்தித்த விவரத்தை வெளியிட்ட 11 தினசரி பத்திரிக்கைகள் ஆங்கிலம்-இந்தி-குஜராத்தி பாஷைகளில் வெளியிட்ட பத்திரிக்கைகள் மஞ்சள் பத்திரிக்கையல்ல என்பதை வாசகர்கள் அறியவேண்டும். அவைகள் அரசாங்க அங்கீகாரம் பெற்ற, எல்லாராலும் மதிக்கப்படும் புகழ்ப்பெற்ற பத்திரிக்கைகள் ஆகும். மேலும் அந்த பத்திரிக்கைகள் செய்தியை மட்டுமல்லாமல் அதைப்பற்றிய புகைப்படத்தையும் ஆதாரத்தோடு வெளியிட்டது. அந்த புகைப்படம் மிகத்தெளிவாக சகோ.தினகரன் சங்கராச்சாரியருக்கு அளித்த பரிசு பொருள் வெள்ளியில் செய்த பூஜை பெட்டகம்தான் என்பதை காட்டும்போது, அதை பார்க்கும் நமது கண்கள்கூட பொய் சொல்லுமா? சினிமா நடிகர் S.V.சேகரும் அதைப்பற்றி விளக்கி கூறினாரே! மோகன் சி.லாசரஸ்ஸின் அந்த VCDயை சங்கராச்சாரியாருக்கு அன்று பரிசளிக்கும்போது கூடநின்றவர்கள் கண்டால் கிறிஸ்தவ ஊழியர்கள் இவ்வளவு சின்னதனமாக இந்த விஷயத்தில் பொய் சொல்கிறார்களே என்று கேலியாக பேசமாட்டார்கள். காருண்யா கல்லூரியை யுனிவர்சிட்டியாக அதை மேம்படுத்த சங்கராச்சாரியாரின் சிபாரிசுக்காக சகோ.தினகரனும், பால் தினகரனும் சென்றதையும், மேற்கொண்டு இவர்கள் சங்கராச்சாரியரிடம் என்ன பேசினார்கள் என்பதையும் கூடவேயிருந்து இந்த கூடுகைக்கு ஏற்பாடு செய்து உதவிய நடிகர் S.V.சேகர் அவர்களை யாராவது கேட்டுப்பாருங்கள். இவ்வளவு தெளிவான படத்தோடுகூடிய ஒரு நிகழ்வுக்கு எயிட்ஸ் சுகமானது என்று தன் பாணியில் பொய் வெளிப்பாடு கூறியதுபோல மோகன்.சி.லாசரஸ் அந்த VCDயில் பொய்சாட்சி கூறியிருப்பது யாரை ஏமாற்ற? அல்லது யாரை திருப்திப்படுத்த இப்படி கூறுகிறார்? இதற்கு சாட்சியாக யாரை அழைக்கிறார் தெரியுமா? சகோ.தினகரனே என்னை அழைத்து அப்படி கூறினார் என்கிறார். இவர் கூறியது உண்மையா என்று இப்போது யார் சகோ.தினகரனை நேரில்போய் பார்த்து கேட்டு உறுதிப்படுத்துவது? அன்று சகோ.தினகரன் அவர்களே அதைக்குறித்து தன் பங்குக்கு பொய்யான தகவலை கொடுத்தார் என்பது நாடறியும். அவரிடம் கேட்டு சொல்லும் இவர் தகவலும் பொய்க்கு – பொய்சாட்சி சொல்லும் தகவலாகும். சகோ.தினகரன் இறந்த பிறகும் சகோ.தினகரனை மோகன் சி.லாசரஸ் அவர்கள் அந்த விசிடி மூலம் அவரை அவமானபடுத்துவது நல்லதல்ல. மக்கள் முன்புபோல அல்ல, விழித்துக்கொண்டார்கள்.

  மேலும் சந்தடிசாக்கில் இவர் தன்னைப்பற்றி நாட்டுமக்களுக்கு ஒரு இரகசியம் கூறுகிறார். அதாவது எலிசாவுக்கு எலியாவிடமிருந்து இரட்டிப்பான வரம் கிடைத்ததை சுட்டிக்காட்டி சென்னை V.P.ஹாலில் தன்னை (மோகன் சி.லாசரஸை) சகோ.தினகரன் அழைத்து தலைமேல் கை வைத்து தீர்க்கதரிசனமாக இப்படி கூறினாராம். கர்த்தர்தாமே என்னைவிட ஊழியத்தில் இரண்டு மடங்கு இவரை (மோகன் சி.லாசரஸ்ஸை) உபயோகப்படுத்தும் என்று கூறியதாக விளம்பரப்படுத்தியுள்ளார். சகோ.தினகரனின் மகன் தம்பி.பால் தினகரனே அப்பாவைவிட தன்னை கர்த்தர் இரண்டு மடங்கு உபயோகிக்கப்போகிறார் என்று கூறியதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சகோ.மோகன் சி.லாசரஸ் பால் தினகரனை முந்திக்கொண்டார் என்று நினைக்கிறேன். இனி எயிட்ஸ் வியாதி சுகம் ஆனது என்பதைப்போல் இரண்டு மடங்கு பொய்சாட்சிகளை மோகன் சி.லாசரஸ்ஸிமிடருந்து எதிர்ப்பார்க்கலாம்.

  தமிழ்நாட்டில் இனி லஞ்சமே இருக்காது என்று கூறிய தீர்க்கதரிசன VCD ஒன்றும் மோகன் சி.லாசரஸ் வெளியிட்டிருக்கிறார். இது எதில்போய் முடியுமோ? அந்த தீர்க்கதரிசன CDயில் கூறியிருப்பது எல்லாம் பொய். உதாரணத்துக்கு லஞ்சம்பற்றி கூறியதை மட்டும் இங்கு குறிப்பிட்டேன்.

  இனிவரும் காலத்தில் உலகெங்கும் லஞ்சம் கூடுமே ஒழிய லஞ்சம் குறையாது. இவர் தான் யூகித்ததை தீர்க்;கதரிசனமாக கூறுவதால்தான் இந்த பொய் வெளிப்பாடுகள் இப்படி சரளமாக வருகிறது. பிசாசு இவர்களுக்கு உதவி செய்வான்.எரே 23:16.

  உங்களுக்கு தெரியுமா?

  சகோ.D.G.S.தினகரனின் வல்லமை முகாமில் பயிற்சி பெற்ற அனைவரும் இன்று பல இடங்களில் ஜெபத்தில் பெயர் அழைக்கிற பொய்யான ஊழியத்தை கற்றுக்கொண்டு அதை தங்கள் பிள்ளைகளுக்கும், தன்னோடுள்ள உடன் ஊழியருக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். இவர்கள் சொல்லிக்கொடுக்காமல் போனாலும் கூட உள்ளவர்கள் ஜெபத்தில் பெயர் சொல்லும்முறையை கற்றுக்கொண்டு அவர்கள் எல்லாரும் தனி ஊழியம் தொடங்கிவிடுவார்கள். இப்போது சிலர் நாசூக்காய் ஜெபத்தில் பெயரை அழைக்காமல், வியாதியின் பெயரைமட்டுமே கூறுவார்கள். இப்போது இப்படிப்பட்ட ஊழியத்துக்குதான் மௌசு அதிகம்.

  இப்படி எயிட்ஸ் கிருமிபோல் பரவிவிட்ட ஜெபத்தில் பெயர் சொல்லும் ஊழியத்தின் ஆரம்ப நாயகன் இந்தியாவில் D.G.S.தினகரன் மட்டுமே. இப்போது அவருடைய மகன் அதை தொடர்ந்து நடத்தி இன்னும் மீதியானவர்களுக்கும் ஜெபத்தில் பெயர் சொல்லி அழைப்பதை சொல்லிதருவார் என்று நினைக்கிறேன்.

  இதற்கு TVயில் சென்னை சில்க், ஆச்சி மசாலாவுக்கு வரும் விளம்பரம்போல் கோயமுத்தூர் ஜவஹர் சாமுவேலை சாட்சி சொல்லவைத்து வல்லமை முகாமில் இவர் பெற்றவைகளை விளக்கும்படி TVயில் ஏற்பாடு செய்ய வைத்துள்ளனர்.

  இவர்கள் எல்லாரும் அந்திக்கிறிஸ்துவுக்கு வழிகளை ஆயத்தம் செய்யும் கூட்டத்தினர்.

  தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.

  பொதுவாக இவர்கள் பிரசங்கங்களில் எல்லாம் பாவத்தை கண்டித்து பிரசங்கிக்கமாட்டார்கள். பாவம் செய்தவர்களின் பெயர்களை ஜெபத்தில் தீர்க்கதரிசனமாக இவர்கள் கூறமாட்டார்கள். இவர்கள் பிரசங்கம் முழுவதும் ஆறுதலைப்பற்றியும், செழிப்பின் உபதேசமாகவும் இருக்கும்.

  வேதம் கூறுகிறது: உங்களுக்கு சமாதானமிருக்கும் என்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். எரே 23:17.

  தமிழ்நாட்டின் பெயர் சொல்லி அழைக்கும் பிரபல ஊழியக்கார சகோதரி.பாப்பா சங்கரின் நிலை கண்டீர்களா? 2008 கடந்த ஜுன் மாதம் அவர்கள் வீட்டில் நடந்த கொலை சம்பவத்தை ஊழியர்கள் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

  சகோ.D.G.S.தினகரனின் ஊழியத்தின் முடிவையும், அவரின் வாழ்க்கையின் முடிவையும், அவரின் மகள் கார் விபத்தில் மரித்த விவரங்களையும், தண்டனைகளையும் தயவுசெய்து மனதிலே வைத்து தவறான ஊழியத்தை திருத்திக்கொள்ளுங்கள்.

  கர்த்தர் சொல்லாததை கர்த்தர் சொன்னார் என்று கூறும் சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.தினகரன், சகோ.பால் தினகரன் போன்று ஜெபத்தில் பெயர் அழைக்கும் அத்தனை ஊழியக்காரர்களுக்கும் கர்த்தரே அவர்களுக்கு விரோதியாக மாறுகிறார். எரே 23:31,32. கர்த்தர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இப்போது உங்களுக்காக எச்சரிக்கை செய்கிறார் நமது ஆண்டவர்.

  பொய்:

  கர்த்தர் வெறுக்கும் காரியங்களில் ஒன்று பொய் நாவு. நீதி 6:16,17.

  பொய் சொல்லாதிருங்கள். கொலே 3:9.

  பொய்யை விரும்பி அதன்படி செய்கிற யாவரும் (பரிசுத்த நகரத்துக்கு) புறம்பே இருப்பார்கள். வெளி 22:15.

  இதோ தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் (கர்த்தர்) அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்கிறார். எரே 23:31.

  என் ஜனத்தை ….. பெயர்களினாலும் … கூறி மோசம் போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார் எரே 23:32.

  இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களை சொல்லுகிற ஊழியங்களை அடையாளம் கண்டுக்கொண்டு அவர்களை விட்டுவிலகுங்கள்.

 14. இப்போ ஒரு புது கரடி விட ஆரம்பித்து இருக்கிறார்கள் என்ன தெரியுமா. தீபாவளி பண்டிகையே அவர்கள் கிறித்துவ மதத்தின் பண்டிகையாம். டவிட்கும் கோளியதுக்கும் நடந்த சண்டையின் வெற்றியை அவர்கள் தீபாவளியாக கொண்டடுகிரர்கலம் . என்னுடைய client society pastor கிராமபுரங்களில் இந்த மாதிரி பிரசாரம் பண்ணி ஒன்றும் அறியாத பாமர மக்களை மதம் மற்றும் பணியில் இடுபடுகிரர்கள் . நன் அவர்களை கண்டித்து அனுப்பிநேணன் .

 15. இஸ்லாம் இது விஷயததில் மிக கவனமாக இருக்கிறது.ஏற்ரத்தாழ்வு இல்லை.அனைவரின் கண்ணியமும் காக்கப்படவேண்டிய ஒன்று. அற்புத கதைகளை சொல்லி இஸ்லாம் யாரையும் அழைப்பதில்லை.சிந்தனை சரம் [மதுரை]டிசம்பர் 2009இதழ் பார்க்க…. snr aalim.

 16. //திருதராட்டிரன் முதலான குருடர்களை அரசனாகக்கூட ஏற்றுக்கொண்டது நம் மரபு. (குருடன் அரசனாக இருக்க முடியாது என்பது யதார்த்தமும், சாத்திரமும் கூட).//
  வாரிசுகள்தான் பட்டத்துக்கு வர முடியும் என்பதை தூக்கி எறிந்து தகுதியுள்ளவனே பட்டத்துக்கு வர வேண்டும் என்று சொன்னான் பரதன். ஆனால் அவனுக்கு பின்னால் வந்த சன்தனு காலத்தில் அவன் சத்யவதி மேல் கொண்ட காதலால் மீண்டும் வாரிசுக்கு பட்டம் என்று மாறியது.

  நான் ஒரு முறை ஊனமுற்ற psychiatrist ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் லண்டன் சென்று பட்டம் பெற்றவர். அவர் சொன்னார் “மேலை நாடுகளில் ஊனமுற்றவரை ஊனமுற்றவர் என்றே அழைக்கிறார்கள். ஆனால் பொது இடங்களில் எல்லா வித வசதிகளும் செய்து தருகிறார்கள். இங்கு வசதிகள் தருவதில்லை, புது புது பெயர்கள்தான் தருகிறார்கள்” என்று ‘differently abled’ போன்ற termsஐ பற்றி பேச்சு வரும் போது கூறினார்.

 17. maslahiyaar

  Islam does not differentiate between groups? What abt shias & sunnis, sahibs & marakayars?

  Will a sahib allow a mafrakaayar to even enter his house?

  Why do shias have their own mosques? why only shias allow women to pary in their mosques while other sects do not do so?

  Please do not brag about your religion when you guys go around killing harmless people in the name of religion.

 18. D.G,S, DINAKARAN SISTER DIED IN A CAR ACCIDENT WHEN SHE CAME FROM TIRUCHI TO CHENNAI. WHAT JESUS WAS DOING THEN ? IS IT NOT D.G.S.DINAKARAN WORKING HARD TO SPREAD THE JESUS CALL MESSAGE ( EVIL MESSAGE). FOOLISH MONEY MAKING MAFIA GROUP TRAINED BY ITALIAN MAFIAS HEADED BY SONIA IN A COVERT OPERATION INSTALLED BY VATIGAN TO CHRISTIANIZE INDIA COMPLETELY AND DESTROY HINDUISM
  BUT THEY DO NOT KNOW THAT HINDUISM WITHSTOOD EVEN AFTER 800 YEARS RULE OF MUSLIMS AND 300 YEARS RULE OF CHRISTIANS – BRITISH WHO STILL SPREAD THE EVIL MESSAGE WITH THE MUSCLE AND MONEY POWER. STILL HINDUS ARE 80%. SO LET US INFORM ALL HINDUS TO BE CAUTIOUS ABOUT THE EVIL DESIGN PLANNED BY CHRISTIAN MISSIONARIES. CHRISTIANS FOXES MAKE HINDUS FALL PREY TO MONEY OR SEX OR POWER. HENCE MANY HINDU MONKS FELL PREAY TO THIS. LET US BE VIGILENT AND CAUTIOUS ABOUT THE FOX AND CUNNING MIND OF CHRISTIANS PARTICULARLY CONVERTS. D.G.S DINAKARAN HAD MADE LOT OF MONEY AND BOUGHT PROPERTIES WORTH MORE THAN 500 CRORES. HE FOOLED MANY PEOPLE OF MIRACLES – THIS IS NOT POSSIBLE IN THE WORLD BECOUSE GOD GOES BY THE LAW OF KARMAS – DEEDS DONE IN THE PREVIOUS BIRTH. ONLY WITH HINDUISM CONCEPT OF – ATHMA, KARMA, JANMA AND MOKSHA, ONE CAN EXPLAIN THE TRUTH OF REALITY.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *