கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2

|முதல் பகுதி|

கோவைக் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை:

coimbatore_blast_03பயங்கரவாதி மதானியின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யாமலும், தற்போது 10 பயங்கரவாதிகளை அவர்கள் தண்டனைக்காலம் முடிவதற்குள் விடுதலை செய்ததன் மூலமும், தி.மு.க அரசு, குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எந்தவிதமான மரியாதையையும், மனிதாபிமானத்தையும், காண்பிக்காமல், அவர்களின் மனித உரிமையையும் கண்டுகொள்ளாமல், அவர்களை அவமரியாதை செய்திருக்கிறது. (போலி மதச்சார்பின்மை மூலமும், மாநிலப் பாதுகாப்பை பற்றி அக்கறை கொள்ளாமலும், இஸ்லாமியர்களின் ஓட்டுகளை வேட்டையாடுவதில், உம்மன் சாண்டி, அச்சுதானந்தன் ஆகியோருக்குத் தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்று கருணாநிதி நிரூபித்துள்ளார்).

கேரளத்தில் தங்கள் கட்சிக்காரர்கள் மதானியின் விடுதலையை, தேசவிடுதலையை விடப் பெருமை வாய்ந்ததாகக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிசக் கட்சித் தலைவர்கள், குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழ் இந்துக்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமலும், அவர்களின் குடும்பத்தாருக்கு மதிப்பளிககாமலும், மௌனம் காத்தது அருவருக்கத்தக்கச் செயலாகும்.

அல் உம்மா இயக்கத்தையும் அதன் பயங்கரவாதிகளையும் தன் ஆட்சியில் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அ.தி.மு.க கூட மதானியின் விடுதலைக்கு எதிராக மௌனம் சாதித்து, தன் மதச்சார்பின்மைக் கொள்கையையும், முஸ்லீம் ஒட்டுகளுக்காகத் தான் எந்த அளவிற்கும் கீழே இறங்கத் தயார் என்றும், பறைசாற்றிக் கொண்டது.

தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சேவை செய்வதே எங்கள் உய்ர்மூச்சு என்றெல்லாம் நாடகம் ஆடும், “தமிழ்” அரசியல்வாதிகளில் ஒருவர் கூட மதானியின் விடுதலைக்கு எதிராகவோ, அல்லது அவன் குண்டு வைத்ததனால் பாதிக்கப் பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ஆதரவாகவோ, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்து தமிழ் மக்களை அவமரியாதை செய்தனர்.

”தமிழ் தேசிய இயக்கம்” என்கிற ஒரு இயக்கத்தைச் சும்மா பேருக்கு நடத்திக்கொண்டிருக்கும் நெடுமாறன், மதானியை ஒன்பது வருடங்கள் சிறையில் வைத்துக் “கொடுமை” படுத்தியதற்காக தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கூறி, எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவதைப் போலவும், வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போலவும், குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.

மிகவும் துரதிர்ஷ்டவசமாக, பா.ஜ.க கூட, ஆரம்பத்தில் மதானியின் விடுதலைக்கு எதிராக சிறு சலசலப்பு செய்ததோடு சரி. பின்னர் முழுமையாக மௌனம் கடைப்பிடித்தது. மதானியின் விடுதலைக்கு எதிராக தி.மு.க அரசை மேல்முறையீடு செய்யச் சொல்லி எந்தவிதமானப் போராட்டங்களும் செய்யாமல் நின்றது. எதிர்காலத்தில் தி.மு.கவுடன் கூட்டணி ஏற்படவேண்டும் என்று கருதியதா எனத்தெரியவில்லை.

தொடர் குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் எந்த விதமான ஆதரவும் இன்றித் தனிமையில் விடப்பட்டனர். பெரும் காயம் அடைந்த நான்கு பேரும் மற்றும் இறந்து போன இளைஞன் ஒருவனின் தந்தையான வெள்ளியங்கிரி என்பவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிவிஷன் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 18, 2008 அன்று நீதிபதி கே.மோஹன்ராம் அவர்கள் அவற்றை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதனிடையே…

மார்ச்சு 28, 1998: – மதுரைக் கல்லூரிப் பேராசிரியரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மாநில உப தலைவருமான திரு கே.ஆர்.பரமசிவம் அவர்கள், இப்ரஹிம், ‘போலீஸ்’ ஃபக்ருதின், இப்ரஹிம் ஷா, நூருத்தின், சாஹுல் ஹமீத் ஆகிய ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். (Ref: https://www.hinduonnet.com/2002/07/12/stories/2002071204520400.htm).

ஃபிப்ரவரி 2, 1999: – பா.ஜ.க திருச்சி மாவட்டத் தலைவர் டாக்டர் பி.வி.ஸ்ரீதர் அவர்கள் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். (Ref: https://www.thehindu.com/fline/fl1921/stories/20021025004503600.htm).

ஜூலை 12, 2003: – செப்டம்பர் 1997-ல் தப்பிச் சென்ற, மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷேய்க் தாவூத் முஸ்தபா, தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறை ஆகியோரால் புது தில்லியில் கைது செய்யப்பட்டான். (Ref: https://in.news.yahoo.com/030712/43/25yr2.html and https://www.hvk.org/articles/0703/110.html).

தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்திற்குப் புதிய வாழ்வு கொடுக்கும் விதமாக “மனித நீதிப் பாசறை” என்கிற அமைப்பு 2004-ல் தொடங்கப்பட்டது.

ஜூன் 21, 2005: – இந்து மக்கள் கட்சியின் மாநில உப தலைவர் திரு.ஆர்.காளிதாஸ் அவர்கள் மதுரையில் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். புலனாய்வு விசாரணைக்குப் பிறகு, மன்னர் மொய்தீன் (30), இப்ரஹிம் ஷா (25), மொஹம்மது அனிஸ் (25), மொய்தீன்பிர் (26), ஹகீம் என்கிற கருவாயன் (26) மற்றும் ஷேக் அலாவுத்தீன் (29) ஆகிய ஜிகாதிகள் கைது செய்யப் பட்டனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடரும் தி.மு.க அரசின் லட்சணம்

(கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு)

மே 2006: – தி.மு.க அரசு பதவியேற்று சில நாட்களிலேயே பாளையங்கோட்டை சிறையிலிருந்து அரை டஜன் அல் உம்மா தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜூலை 22, 2006: – கோவையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பை நிகழ்த்த தீட்டம் தீட்டியதாக மனித நீதி பாசறையைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஐவரும் தவறான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகக் கூறி ஃபிப்ரவரி 9, 2008 அன்று விடுவிக்கப்பட்டனர் (!?).

ஜூலை 26, 2006: – மனித நீதி பாசறை இயக்கம், “அறிவகம்” என்கிற பெயரில் தமிழகத்தில் சில இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தி, ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி, அவர்களை ஜிகாதிகளாகப் பயன்படுத்தி வருவதாக ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழில் ஜெயா மேனன் என்கிற பத்திரிகையாளர் விவரமாக எழுதியிருந்தார்.

(’மனித நீதி பாசறை’ தேனி, கோவை மாவட்டங்களிலும் மற்றும் கேரள எல்லையில் உள்ள தமிழகப் பகுதிகளிலும், மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவதாகச் சொல்லப்பட்டது. கேரள எல்லைக்கு அருகே இயங்குவதால் அம்மாநிலத்தில் உள்ள NDF – தீவிரவாதிகளின் உதவியும் சுலபமாகக் கிடைப்பதாகக் கூறப்பட்டது).

ஆகஸ்டு 8, 2006: – ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ், “இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் தி.மு.க அரசு காண்பிக்கும் அப்பட்டமான கரிசனமும் பரிதாபமும் மூத்த காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது” என்று கருத்து தெரிவித்தது.

நவம்பர் 22, 2006: – ”கர்னாடகா ஃபார் டிக்னிடி” (KFD – Karnataka For Dignity), ”மனித நீதி பாசறை” (MNP – Manitha Nithi Paasarai), ”நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரெண்ட்” (NDF – National Development Front) ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடில் சந்தித்து, தங்கள் இயக்கங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல் படுவதற்காக, “பாபுலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா” (PFI – Popular Front of India) என்கிற புதிய அமைப்பை தோற்றுவிப்பதென முடிவு செய்தனர். புதிய இயக்கத்தின் தலைவர்களாக KFD-ஐ சேர்ந்த ஷெரீஃப், MNP-ஐ சேர்ந்த குலாம் மொஹம்மது, NDF-ஐ சேர்ந்த அப்துர் ரஹமான் பகாரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தங்கள் செயல்பாடுகளை தென்னிந்தியா அளவில் மட்டுமே நிறுத்திக் கொள்ள முடிவு செய்தனர். இந்தத் தலைவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (SIMI) சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2006: – திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகில் வேண்டுமென்றே ஒரு மசூதி கட்ட த.மு.மு.க முயற்சி செய்தது. குமார பாண்டியன் தலைமையில் இந்து முன்னணி அம்முயற்சியைத் தடுத்தது.

டிசம்பர் 17, 2006: – த.மு.மு.கவினர் குமார பாண்டியனைப் படுகொலை செய்தனர்.

ஃபிப்ரவரி 17, 2007: – ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ், KFD, MNP, NDF ஆகிய மூன்று இயக்கங்களும் இணைந்து செயல்படுவதற்காக PFI இயக்கத்தை ஃபிப்ரவரி 16 அன்று தொடங்கியதாக செய்தி வெளியிட்டது. ”தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அடித்தளத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளை பலப்படுத்தவும், அதைத் தொடர்ந்து “இந்தியா சக்திபெற” (Empower India) என்கிற மாநாட்டைப் பெங்களூருவில் நடத்தவும், நோக்கம் கொண்டு அந்த இயக்கம் செயல்படும். மேலும், அவ்வியக்கம் தன்னுடைய திட்டங்களாக ஜனநாயகம், சமூக நீதி போன்ற கொள்கைகளை முன்வைத்தாலும், உண்மையில் தீவிரவாதக் கொள்கைகளை பரப்பும் விதமாகத் தான் செயல்படும் என்று தமிழகக் காவல்துறை கருதுகின்றது” என்றும், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் கருத்து தெரிவித்து செய்தி வெளியிட்டது.

மார்ச்சு 26, 2007: – ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ், “நூறுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சிறையிடப்பட்டதால் சற்றே பலவீனம் அடைந்த அல் உம்மா இயக்கம், தி.மு.க அரசின் மென்மைப் போக்கினால் மீண்டும் பலம் பெற்று தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மிக்க சட்டங்களை முஸ்லீம் சமுதாயத்தினர் மீது திணிக்கத் தொடங்கியுள்ளது” என்று செய்தி வெளியிட்டது. தமிழகம் தாலிபான் மயமாக்கப் படுவதற்கு அத்தாட்சியாக இச்செய்தி இருக்கின்றது.

ஆகஸ்டு 14, 2007: – தென்காசியில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் இந்து முன்னணியின் குமார பாண்டியனின் சகோதரர்கள் மூவர் த.மு.மு.கவினரால் படுகொலைச் செய்யப்பட்டனர். த.மு.மு.கவிலும் மூவர் கொல்லப்பட்டார்கள்.

ஜனவரி 24, 2008: – தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்த வழக்கில், குமார பாண்டியனின் கடைசி சகோதரர் ரவி பாண்டியனும் மற்றும் இரு இந்துக்களும் கைது செய்யப்பட்டனர்.

ஃபிப்ரவரி 5, 2008: – ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்ததற்காக இந்துக்களே கைது செய்யப்பட்டதை வரவேற்று, த.மு.மு.க தலைவர் ஜவஹிருல்லா www.twocircles.net என்கிற இணைய தளத்தில் காவல் துறையைப் பாராட்டிக் கட்டுரை எழுதினார். (https://www.twocircles.net/2008feb05/sangh_parivar_activists_arrested_blasts_rss_office.htm)

ஜூன் / ஜூலை 2008: – தமிழகத்தில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என்று தகவல் தெரிவித்து மத்திய உளவுத்துறை தமிழக அரசை எச்சரித்தது. மாநில உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் மாநகரப் போலீசார் சென்னை மண்ணடியில், செயல் திட்டங்களுடன் தாக்குதல் நடத்த தயாராய் இருந்த ஒரு பயங்கரவாதக் குழுவை சுற்றிவளைத்தபோது, அக்குழுவின் தலைவர்களாக இருந்த, பாகிஸ்தானில் உள்ள “லஷ்கர்-இ-தைபா” இயக்கத்தில் பயிற்சி பெற்ற தௌஃபீக், அபு தாஹிர், ஆகிய இரண்டு தீவிரவாதிகள் தப்பிச்சென்றனர். ஆனால் தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று (15-08-08) நடக்கவிருந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலை, புழல் சிறையில் இருந்துகொண்டே இயங்கும் அலி அப்துல்லா என்கிற பயங்கரவாதியின் ஆலோசனைப்படி செயல்படும் அப்துல் கஃபூர் என்கிற மற்றொரு பயங்கரவாதியைக் கைது செய்ததன் மூலம், தவிர்த்தது தமிழகக் காவல்துறை.

ஈரோடு மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான 30 கிடங்குகளில் சோதனை செய்த போலீசார், கல் குவாரிகளிலும் கிணறு வெட்டுவதற்கும் பயன்படுத்தக் கூடிய ஜெலடின் குச்சிகள், வெடி மருந்துகள், மற்றும் வெடிப்பொறிகள் ஆகியவற்றை மிகப் பெரிய அளவில் கைப்பற்றினர்.

கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், ஊத்துக்குளி, பவானி ஆகிய இடங்களில் உள்ளா கிடங்குகளையும் போலிசார் சொதனை செய்தனர். (Ref: https://islamicterrorism.wordpress.com/2008/07/28/muslim-terrorists-target-sri-meenakshi-and-other-major-temples-in-tamil-nadu-security-tightened/ and https://ibnlive.in.com/news/tamil-nadu-cops-foil-aug-15-terror-bid-arrest-one/69709-3.html?xml).

ஜிகாத் இயக்கங்களின் மற்ற செயல்பாடுகள்:

தி.மு.க அரசின் மென்மையான போக்கினால் தைரியம் கொண்ட தீவிரவாத இயக்கங்கள், தமிழ் இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாக்களில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தின. விநாயகர் விக்ரஹங்கள் வைப்பதைத் தடுத்தல், விஸர்ஜன ஊர்வலங்களில் கல்வீசி தாக்குதல், ஊர்வலம் போகும்போது விக்ரஹங்களை கல் வீசி உடைத்தல், போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபட்டன. 2006-ஆம் ஆண்டிலிருந்து இம்மாதிரியான தாக்குதல்கள் தமிழகமெங்கும் அதிக அளவில் நடக்கத் தொடங்கின. அச்சம்பவங்கள் பெரும்பாலான ஊடகங்களிலும், குறிப்பாக தி.மு.க சார்புள்ள தினகரன், தமிழ் முரசு, ஆகிய இதழ்களிலும், சன் டிவி, தொலைக்காட்சியிலும் கூட செய்தியாகச் சொல்லப்பட்டன. இவ்வாண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பல இடங்களில் முஸ்லீம் இயக்கங்கள் தாக்குதல் நடத்தி, அச்சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

மற்றொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுடைய தொண்டர்களுக்கு “ராணுவப் பயிற்சி” அளித்து வருவதுதான். ஏப்ரல் 2008-ல் ’தினமணி’ நாளிதழ், மனித நீதி பாசறை இயக்கம் சீருடை-ஆயுதங்களுடன் கூடிய 1000 தொண்டர்களுக்கு (ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50 தொண்டர்கள்) சுதந்திர தினத்தன்று “விடுதலைப் பேரணி” நடத்தி தங்களுடைய “தேசபக்தி”யைக் காட்டுவதற்காக ராணுவப் பயிற்சி அளித்ததாக விவரமாகச் செய்தி வெளியிட்டது. மேலும் இவ்வியக்கம் தொடங்கப்பட்டு நான்கு வருடங்களில் 25000 அஙத்தினர்களை சேர்த்துவிட்டதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 பேருக்கு ராணுவப் பயிற்சி அளிப்பதாகவும் கூறியது தினமணி. மனித உரிமை, சமூக நீதி போன்ற நோக்கங்களைக் கொண்டதாக இவ்வியக்கம் சாதித்தாலும், மாநில ‘Q’-பிரிவு போலீசார் இவ்வியக்கத்தின் நடவடிக்கைகளை கண்கானித்து வருவதாகவும் தினமணி செய்தி வெளியிட்டது.

சென்ற ஆண்டு ’விடுதலை பேரணி’யை மதுரையில் நடத்தியபோது, இவ்வியக்கம் தன்னுடைய சுவர் விளம்பரங்களிலும், மற்ற விளம்பரங்களிலும், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள “ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம்” என்கிற அமைப்பின் கொடியை பயன்படுத்தியுள்ளது. (Ref:
https://prativad.com/MPDailyNews/Popular-Front’s-spearheaded-Freedom%20Parade.htm
)

இந்த விடுதலைப் பேரணியை 2004-ஆம் ஆண்டு முதலே செய்வதாக www.Popularfrontindia.org இணையத்தளம் கூறுகிறது. (Ref: https://www.popularfrontindia.org/documents/Popular%20Front%20of%20India%20Annual%20Report%202007.html). சென்ற ஆண்டு, கர்னாடக, கேரள மாநிலங்களிலும் பேரணி நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு கர்னாடகத்தில் பா.ஜ.க அரசு அனுமதி மறுத்துவிட்டதால், தமிழகத்தில் கும்பகோணத்திலும், கேரளாவில் இடுக்கியிலும் மட்டும் பேரணி நடந்துள்ளது. (Ref: https://www.twocircles.net/2009aug15/thousands_took_part_pfis_freedom_parade_north_kerala.html and
https://freedomparade2009.blogspot.com/2009/08/report-from-kumbakonam.html and https://dailymuslimnews.blogspot.com/2009/07/pfi-freedom-parade-in-four-places-on.html). இந்த ஆண்டு கர்னாடகத்தில் பா.ஜ.க அரசு அனுமதி மறுத்துவிட்டதால் PFI தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டது.
(Ref: https://www.deccanherald.com/content/20200/pfi-flays-government-stages-protest.html ).

பேரணி நடத்த ராணுவமும், காவல் துறையும் இருக்கின்ற போது, இவர்கள் நடத்தலாமா, நடத்த வேண்டிய அவசியம் என்ன, நடத்த அனுமதி அளித்தது சரியா, போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பக்கம் தேச பக்தி மிக்கவர்கள் என்று சொல்லிக் கொண்டு சுதந்திர தினத்தில் விடுதலைப் பேரணி நடத்தும் இவர்கள், மற்றொரு புறம் பாபர் கட்டட இடிப்பு நினைவு தினத்தை அனுசரிக்கிறோம் என்ற பெயரில் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்வதுதான். சென்ற ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியன்று, இவ்வியக்கங்களைச் சேர்ந்த 7000 பேர்கள் தமிழகம் முழுவதும் சிறைபிடிக்கப் பட்டனர். இச்சம்பவங்கள் பாகிஸ்தானிய ஊடகங்களில் வெளியானதை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் ஆகிய இயக்கங்கள் மீதான கேள்விகள் அதிகமாகின்றன. (Ref: https://www.app.com.pk/en_/index.php?option=com_content&task=view&id=61510&Itemid=2 ).

ஃபிப்ரவரி 19, 2009: – ’தினமலர்’ நாளிதழ், “PFI இயக்கம் ஃபிப்ரவரி 13, 14, 15 தினங்களில் கேரள மாநிலம் கோழிக்கோடுவில் “தேசிய அரசியல் மாநாடு” (National Political Conference) நடத்தியது. அதில், KFD, MNP, TMMK, NDF ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டார்கள். “மக்களுக்கு சக்தி” (Power for People) என்பதே மாநாட்டின் கொள்கைப் பொருளாக முன்னிறுத்தப்பட்டது. சில தினங்கள் முன்னர்தான் த.மு.மு.க “மனித நேய மக்கள் கட்சி” என்கிற அரசியல் கட்சியைத் தமிழகத்தில் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்சியின் தலைவர்களும் கூட கோழிக்கொடு மாநாட்டில் கலந்து கொண்டனர்” என்று விவரமாகச் செய்தி வெளியிட்டது.

முடிவுரை

தண்டனைக் காலம் முடிவதற்குள்ளாகவே 10 பயங்கரவாதிகளை அண்ணாதுரை பிறந்த தினத்தன்று விடுதலை செய்த தி.மு.க அரசின் கொடுஞ்செயலை, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக அரசின் பலவீனமான மென்மையான போக்கு, மிக முக்கியமாகத் தேவைப்படும் 12 பயங்கரவாதிகள் தேடப்பட்டு வரும் சூழ்நிலை, ஆகிய பின்னணியில்தான் நாம் பார்க்க வேண்டும்.

தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் (எ) காக்கா (7 வழக்குகள்), அயூப் (எ) அஷ்ரஃப் அலி (9 வழக்குகள்), இப்ரஹிம் (கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு), மொஹம்மது அலி (எ) யூனஸ் (எ) மன்ஸூர் (3 வழக்குகள்), அஷ்ரஃப் அலி (கோவை குண்டு வழக்கு), முஜிபூர் ரெஹ்மான் (எ) முஜி (5 வழக்குகள்), முஷ்டாக் அஹமது (சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு), ரஸூல் மைதீன் (2 வழக்குகள்), ஜாகுவார் சாதிக் (எ) டெய்லர் ராஜா (எ) வளர்ந்த ராஜா (5 வழக்குகள்), தௌஃபீக் (2 வழக்குகள்), நூஹி என்.பி. (எ) மன்கவெ ரஷித் (கோவை வழக்கு) மற்றும் குஞ்சு மொஹம்மது (எ) கனி (கோவை வழக்கு) ஆகியோர் ஆவர்.

இவர்களில் காக்கா, அயூப், தௌஃபீக் ஆகிய மூவரும் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வெடிமருந்துகள், குண்டுகள் தயாரிப்பதில் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அல் உம்மா தீவிரவாதியான காக்கா வெடிமருந்து பொருட்கள் சட்டத்தின் படி 7 வழக்குகளில் சிக்கியுள்ளான். 1997-லிருந்து தேடப்பட்டு வருகிறான்.

இஸ்லாமிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பயங்கரவாதியான அயூப் என்கிற அஷ்ரஃப் அலி 1997-ல் 10 பேரை பலி வாங்கி 70 பேருக்கும் மேல் படுகாயமுறச் செய்த, ரயில் (சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ்) குண்டு வெடிப்புகள் வழக்கில் தேடப்பட்டு வருபவன். சென்னையி அமெரிக்க தூதரகத்தின் அருகே அண்ணா மேம்பாலத்தின் கீழ் குண்டு வைத்தவனும் இவன் தான். சினிமா இயக்குனர் மணிரத்னத்திற்கு பம்பாய் படம் எடுத்ததற்காக பார்ஸல் குண்டு அனுப்பிய வழக்கிலும் இவன் சம்பந்தப் பட்டுள்ளான்.

அல் உம்மா இயக்கத்தைத் துவக்கியவர்களுள் ஒருவனான படுபயங்கரவாதி இமாம் அலியுடன் பின்நாளில் சேர்ந்து கொண்ட முஷ்டக் அஹமது என்பவன் 1993-ல் 11 ஸ்வயம் சேவகர்களைப் பலி வாங்கிய ஆர்.எஸ்.எஸ் அலுவலகக் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வருபவன். (Ref: https://timesofindia.indiatimes.com/Chennai/TNs_most_dangerous_ultras_still_at_large/articleshow/3799461.cms ).

இவர்களில் ஒவ்வொருவர் பற்றிய தகவலுக்கும் இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அரசு அறிவித்திருந்த போதும், பயங்கரவாத வழக்குகளை விசாரித்து வரும் சிறப்புப் புலன்விசாரணை படைக்கோ, தமிழக உளவுத் துறைக்கோ, இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றோ, என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றோ ஒரு தகவலும் இன்று வரைத் தெரியவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கமே ஒரு மென்மையானப் போக்கை கடைபிடிக்கும்போது, புலன்விசாரணைத்துறையோ, உளவுத்துறையோ, காவல் துறையோ நல்ல முறையில் ‘சுதந்திரமாக’ செயல்படும் என்று மக்கள் எவ்விதம் எதிர்பார்க்க முடியும்?

ஆனால் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் படுபயங்கரவாதிகள் பன்னிரண்டு பேர் பிடிபடாமல் இருக்கும் நிலையில் இன்னும் பத்து பேரை விடுதலை செய்வது இம்மாநிலத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியாதா என்பதே இன்று தமிழ் மக்கள் கேட்கும் கேள்வி.

”கரிசனம்” மிகுந்த அரசாங்கம் மாநிலத்தை ஆபத்தான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அதன் விளைவாக மக்கள் பரிதாபமான நிலையில் உள்ளனர். எனவே அமைதி என்பது வெறும் பகல் கனவாகவே இருக்கின்றது.

One Reply to “கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2”

  1. கோவை குண்டு வெடிப்பில் “பாதிக்கப்பட்ட” சில முஸ்லீம்களுக்கு பென்சன் வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது என ஒரு தகவல். அவ்வாறெனில் அதே போன்ற உத்திரவு இந்துகளுக்கும் பொருந்தவேண்டும் அல்லவா. இது என்ன மதச்சார்பின்மை என்று புரியவில்லை. கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிகளுக்கு “மனித நேயத்துடன் மன்னிப்பு” (கொ)கலைஞர் அரசு மனுநீதிச் சோழனின் அரசு அல்லவா?. ஆவியுலகத்துடன் தொடர்பு கொண்டு “அறிஞர் அண்ணா”வின் கருத்தைக் கேட்கவேண்டியதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *