கட்சி மாறிய கருணாநிதி
கே.பி. சுந்தராம்பாளின் சாரீரத்தைப் பற்றி சொல்லவா வேண்டும். ஐந்தரை கட்டை ஸ்ருதியில், உச்சஸ்தாயியில் பிருக்காக்களை அவுட் பாணம் போல் உதிர்க்கும்போது நாடகாபிமானிகள் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
அடுத்தாற்போல் ராஜபார்ட் நடிகர் வந்து நின்று என்னதான் உயிரைவிட்டுக் கொண்டு பாடினாலும் துளிகூடக் களை கட்டாது. உடனே ”உள்ளே போ!” என்ற கூச்சல் கிளம்பும். அந்த நடிகரும் உள்ளே மட்டுமல்ல, ஊருக்கே போய்விடுவார்.
இப்படியாக ஒரு வருஷ காலத்தில் பல ராஜ்பார்ட்டுகள் முறியடிக்கப்பட்டு திரும்பியதில் ஒப்பந்தக்காரர் மனமுடைந்து போனார்.
இந்த சமயத்தில் வந்து சேர்ந்தார் எஸ்.ஜி.கிட்டப்பா…
‘இலங்கையில் சுந்தராம்பாள் கொடி பறக்கிறது! அங்கே போய் சிக்கிக்கொள்ள வேண்டாம்’ என்று கிட்டப்பாவுக்கு சிலர் அறிவுரை கூறினர்.
சுந்தராம்பாள் காதுபடவே ”கிட்டாபாவுக்கு எதிராக நின்று பாடிச் சுந்தராம்பாள் பாராட்டுப் பெற முடியுமா?’ என்று பேசிக்கொண்டனர்…
’கிட்டப்பா ராஜபார்ட்! சுந்தராம்பாள் ஸ்திரி பார்ட்!’ என்று கொழும்பு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாம்… இருவர் பக்கமும் பலர் புரளி கிளப்பி விட்டாலும் சுந்தராம்பாளோ கிட்டப்பாவோ ஒருவருக்கொருவர் அஞ்சி பின்வாங்கிவிடவில்லை…
1926-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிட்டப்பா – சுந்தராம்பாள் நடித்த ‘வள்ளித் திருமணம்’ கொழும்புத் தமிழர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. ‘மோட்சமுகலது’ என்ற பாடலை கிட்டப்பா தனக்கே உரிய அற்புதமான குரலில் பாட ஆரம்பித்தார். சுந்தராம்பாள் இன்னிசை முழுக்கம் புரியத் தொடங்கினார். ஒருவருக்கு ஒருவர் சோடை போகவில்லை. குரல் இணைந்தது. உள்ளமும் இணைந்தது.
-கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு/ப. சோழநாடன்/ரிஷபம் பதிப்பகம்
மேடையில் இணைந்த கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் வாழ்க்கையிலும் இணைந்தனர். இது காதல் திருமணம் மட்டுமல்ல. கலப்புத் திருமணமுமாகும். கிட்டப்பா பிராமணர், கே.பி. சுந்தராம்பாள் கவுண்டர். சுந்தராம்பாளைச் சந்திக்கும்போது கிட்டப்பாவுக்குத் திருமணமாகிவிட்டிருந்தது.
புகழ்பெற்ற கன்னையா கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜி கிட்டப்பா அதிலிருந்து விலகி சுந்தராம்பாளோடு சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். கன்னையா கம்பெனியின் தசாவதார நாடகத்தில் கிட்டப்பா பரதனாகத் தோன்றினார். அப்போது அவர் பாடும்,
”தசரத ராஜ குமாரா
அலங்காரா சுகுமாரா.. அதிதீரா
என்ற பாடலுக்குத் தனியாக ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ஒரு பாடல் மட்டும் முன்று மணிநேரம் பாடப்படும்.
மகாத்மா காந்தி மீது அபிமானம் கொண்டவர் கிட்டப்பா. அவர் கதர் ஆடைகளைத்தான் அணிவார். அவர் காங்கிரஸ் கட்சி நிதிக்காக தொடர்ந்து நாடகங்கள் மூலம் நிதி திரட்டிக் கொடுத்தார்.
கிட்டப்பா 1933இல் இறந்தார். கிட்டப்பாவின் மறைவுக்குப் பிறகும் காங்கிரஸ் மேடைகளில் சுந்தராம்பாளின் குரல் ஒலித்தது.
‘காந்தியோ பரம ஏழை சன்னியாசி’ என்ற பாடல் தமிழ் நாட்டில் காந்திக்கென்று வெகுஜன ஆதரவை உருவாக்கியது.
1934ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றதற்கு கே.பி. எஸ்ஸும் ஒரு முக்கியக் காரணம்.
கொள்கையில் சமரசம் இல்லாமல் தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் கே.பி.எஸ். திரைப்படங்களில் நடித்தபோதும் அவர் நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை.
மு. கருணாநிதியின் கதை வசனத்தில் தயாரான பூம்புகார் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. (1964.) இந்தப் படத்தில் கே.பி.எஸ்ஸுக்கு கவுந்தி அடிகள் வேடம்.
கவுந்தி அடிகள், கோவலனுக்குத் தரப்பட்ட தண்டனையைக் கண்டித்துப் பாடுவதாக ஒரு காட்சி.
கவிஞர் மாயவநாதன்,
’’அன்று கொல்லும் அரசனின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது’’
என்று எழுதியிருந்தார். பாடல் வரிகளைப் பார்த்த கே.பி.எஸ். கடவுளை நிந்திக்கும் இந்த வரிகளை நான் பாடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
பிறகு கவிஞரும் கருணாநிதியும்தான் கட்சி மாறினார்கள்.
பாடல் வரி,
‘நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’
என்று மாற்றப்பட்டது. இதைத்தான் கே.பி.எஸ். பாடினார்.
தமிழகத்தில் தேசிய உணர்வை வளர்ப்பதற்காக நாடகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை இந்தப் பகுதியில் பார்ப்போம்.
நாடகங்களின் ஆரம்ப காலத்தில் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா, மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா, முத்துக் கிருஷ்ணன் பாய்ஸ் கம்பெணி என்று சிறுவர்களை நடிகர்களாக்கும் கம்பெனிகளுக்குப் பெயர் சூட்டப் பட்டிருந்தது. மக்கள் பொதுவாக பாய்ஸ் கம்பெனி என்று அழைத்தார்கள்.
போக்குவரத்து வளர்ச்சி அடையாத காலம் என்பதால் ரயில் அல்லது மாட்டு வண்டிகளே போக்குவரத்துச் சாதனங்களாகப் பயன்பட்டன. அல்லது யாராவது ஒருவர் அரிக்கன் விளக்கைப் பிடித்துக்கொண்டு முன்னே செல்ல, மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
பாலாமணி அம்மாள் என்பவர் நடத்திய நாடகக் கம்பெனியில் எல்லோரும் பெண்கள்தான். அவரும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் அந்த கம்பெனியை நடத்தினர்.
பாலாமணி நடித்த தாரா சசாங்கம் என்ற நாடகத்தில் அவர் கதாநாயகி தாரையாக வந்து, காதலன் சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாக ஒரு காட்சி வரும். காட்சியின் விசேஷம், தாரையின் உடலில் துணி இருக்காது.
இதைப் பார்ப்பதற்காக மாயவரத்திலிருந்தும், திருச்சிராப்பள்ளியிலிருந்தும் நாடகம் நடக்கும் கும்பகோணத்துக்கு விசேஷ ரயில் விடப்பட்டது. ரயிலின் பெயர் ‘பாலாமணி ஸ்பெஷல்.’
அடித்துப் பிடித்துக்கொண்டு பாலாமணி ஸ்பெஷல் மூலம் வந்தவர்களுக்கு, அவர் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்திருந்தார் என்ற விவரம் தெரியாது.
நல்லதங்காள் நாடகமும் மிகவும் வரவேற்கப்பட்டது. பாலாமணி கவர்ச்சி என்றால் நல்லதங்காள் கண்ணீர். வறுமையால் வாடும் நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டுப் பாடியபடியே நல்லதங்காள் கிணற்றில் எறிந்துவிடுவாள். சங்கரன் கோவில் அருகிலுள்ள செண்பகபுரம் என்ற ஊரில் நாடகம் நடந்தபோது, நல்லதங்களாக நடித்தவர் ஒரு குழந்தையைத் தாலாட்டுப் பாடாமல் கிணற்றில் போட்டுவிட்டார்.
மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். மேடையில் ஏறி, கிணற்றில் இருந்த குழந்தையை எடுத்து நல்லதங்காளிடம் கொடுத்து, மீண்டும் அழச் செய்தார்கள்; மீண்டும் தாலாட்டுப் பாடச் செய்தார்கள். இதுதான் தமிழகத்தில் 1924 ஆம் வருட நாடகச் சூழல்.
1930 முதல் 1940 வரை புராணம், சம்ஸ்கிருதக் காவியங்கள், தேசிய உணர்வு, சமுதாயச் சிந்தனை ஆகியவை நாடகங்களில் இடம்பெற்றன.
தாசிகளால் ஏற்படும் கேடுகளை விவரிக்கும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற பிரபலமான நாடகத்தின் கரு இதுதான்.
1937 ஆம் ஆண்டில் து.அ.வை. செட்டியார் இயற்றிய ‘பீமசேனனும் சந்திரிகாவும்’ என்ற நாடகமும், 1938 ஆம் ஆண்டில் கே.வி. சேஷய்யர் எழுதிய ‘ஆத்மநாதன்’ என்ற நாடகமும் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.
தேவதாசி குலத்தில் பிறந்த ஒருத்தி உத்தமியாக இருக்கிறாள் என்ற கருத்தோடு மாங்குடி துரை ராஜய்யர் ‘மித்திர பாசம்’ என்ற நாடகத்தை உருவாக்கினார். சுத்தானந்த பாரதியார் எழுதிய நாடகத்தில் தேவதாசிப் பெண்ணுக்கும் பிராமண இளைஞனுக்கும் திருமணம் நடக்கிறது.
சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார். இவர் ஒரு நீதிபதி.
தமிழ் நாடக மேடையில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பம்மல் சம்பந்த முதலியார். இவருடைய நாடகங்களில் தந்திரக் காட்சிகள் இடம்பெறும். 1891 முதல் 1958 வரை சம்பந்த முதலியாரின் நாடகப் பணி தொடர்ந்தது. பழமையைப் பலிகொடுக்காமல் புதுமைக்கு இடம் கொடுக்கவேண்டும் என்பது இவரது அணுகுமுறை.
கன்னையாவின் நாடகக் கம்பெணி பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளைக் கொண்டது இவர் நடத்திய ‘பகவத் கீதை’ நாடகம் 1008 முறை நடிக்கப்பட்டது.
தமிழ் நாடகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் சங்கரதாச சுவாமிகள். 1910 இல் இவர் உருவாக்கிய ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவில் மதுரை மாரியப்ப சுவாமிகளும், எஸ்.ஜி. கிட்டப்பாவும் நடித்துப் புகழ் பெற்றனர்.
‘மதுரை மீனலோசணி வித்துவ பாலசபை’ என்ற நாடகக் குழுவை சங்கரதாச சுவாமிகள் 1918 இல் ஏற்படுத்தினார். புகழ்பெற்ற நடிகர்களான டி.கே.எஸ் சகோதரர்கள் இங்கேதான் பயிற்சி பெற்றனர்.
இவருடைய நாடகங்களில் பாட்டும், வசனமும் கலந்து இருக்கும்’; நாடகங்களின் கருத்து புராணங்களில் இருந்தும், இந்து சமயத் தொடர்புடையனவாகவும் இருந்தது.
தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் என்ற நாடக ஆசிரியர் ‘கதர் பக்தி’ என்ற நாடகத்தை எழுதினார்.
பாட்டி நூற்ற ராட்டை நூலில்
ஸ்பேட்டு போட்ட சீட்டி வாங்கித்
தரவேண்டும் எனதாசை மணவாளரே
நாட்டுக் கதர்த்துணி வாங்கித்
தரவேண்டும் எனதாசை மணவாளரே
என்று நாடகத்தில் வலுவான கதர்ப் பிரசாரமும் இடம்பெற்றது. இவருடைய நாடகங்கள் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டன. இவர் லண்டனுக்குச் சென்று அங்கு நடந்த கண்காட்சியில் ‘கதரின் வெற்றி’ என்ற நாடகத்தை நடத்திக் காட்டினார்.
எஸ்.எஸ். விசுவநாத தாஸ் 1917 ஆம் ஆண்டில் நாடக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டார். புராண நாடகங்களில் நடுவில் தேசிய கீதங்களைப் பாடியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயல் தியேட்டரில் விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்’ நாடகம் நடைபெற்றது. முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ் கன்னட தேவ காந்தாரி ராகத்தில் உச்சக் குரலில் ‘சம்போ மகாதேவா’ என்று பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் உயிர் பிரிந்துவிட்டது.
மதுரகவி பாஸ்கரதாஸ் (1892-1952) எழுதிய பாடல்கள் இசைத்தட்டுகள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கான பிரசாரங்களாக அமைந்தன. இவரது பாடல் நூலை அரசாங்கத்தார் 1932 இல் தடை செய்தனர்.
‘காந்தியோ பரம ஏழை சன்னியாசி’ என்ற பாடலை இயற்றியவர் இவர்தான்.
தந்திரக் காட்சிகளை வடிவமைப்பதில் விசேஷ கவனம் செலுத்தியவர் நவாப் ராஜமாணிக்கம். இவருடைய நாடகங்களில் முக்கியமானவை, சம்பூர்ண ராமாயணம் மற்றும் சுவாமி அய்யப்பன் ஆகியன.
ஒருமுறை தன்னுடைய ஆஸ்டின் காரையே மேடையேற்றி ஓட்டச் செய்தவர் நவாப் ராஜமாணிக்கம். மின் விசிறி இல்லாத காலத்தில் பார்வையாளர்களின் சவுகரியத்துக்காக பங்கா இழுப்பவர்களை இவர் வேலைக்கு வைத்திருந்தார்.
கடையநல்லூர் மஜீத் என்ற நடிகர் முருகன் மீது ஈடுபாடு கொண்டவர். ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில் இவர் முருகனாக நடிப்பார்.
டி.எம். காதர் பாட்சா என்ற நடிகர் தேசிய உணர்வு உள்ளவர். தேசபக்திப் பாடல்களைப் பாடியதற்காக இவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இறுதியில் இவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
சுருளிமலை மேவும் சீலா – உன்னை
தோத்தரித்தேன் சுப்பரமணிய வேலா
என்று அங்கேயே ஆர்மானியத்தோடு பாடினார். தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் சினிமாவில் பேச்சும் பாட்டும் அறிமுகமாகியது. இதன் விளைவாக நாடக கம்பெனிகள் பாதிக்கப்பட்டன.
சு.தியேடர் பாஸ்கரன் இது பற்றி எழுதுகிறார்.
“1931இல் ஒரே ஒரு படம் தயாரிக்கப்பட்ட காலம் மாறி, மூன்றாண்டு காலத்திற்குள் 14 தமிழ்ப்படங்கள் உருவாயின. சினிமாவில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என்பது தெளிவாயிற்று.
எனவே மேடையிலிருந்து சினிமா நோக்கிய படையெடுப்பு தொடங்கியது. 1934க்குப் பின் இவ்வரவு அதிகரித்தது. சென்னையிலேயே பேசும் பட ஸ்டூடியோ நிறுவப்பட்டதும், இது மேலும் அதிகரித்தது. பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற வாத்தியார்கள் ஸ்டூடியோக்களுக்கு இடம்பெயர்ந்தனர். நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.”
-பக் 78, ‘எம் தமிழர் செய்த படம்’, உயிர்மை பதிப்பகம்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் பயன்பட்ட நாடகத் துறை பிற்பகுதியில் திராவிட இயக்கங்களிடம் சிக்கிக்கொண்டது. அது பற்றிய விவரங்களை அந்தப் பகுதியில் பார்க்கலாம்.
மேற்கோள் மேடை:
இன்றைய இந்தியாவில் பல மொழிகளில் பண்பாட்டுத் துறைகளில் சீரிய சாதனையாளர்கள் சிறந்த முறையில் ஊடகங்களாலும் பொது மக்களாலும் ஆட்சியாளர்களாலும் போற்றப்படும் பொழுது தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த இழிநிலை? பாரதியும் புதுமைப் பித்தனும் புறக்கணிக்கப்படுவது ஏன்? சிந்திக்கவேண்டும்.
– தி.க. சிவசங்கரன், கணையாழி, ஆகஸ்டு 1998
— தொடரும்.
///பாரதியும் புதுமைப் பித்தனும் புறக்கணிக்கப்படுவது ஏன்? சிந்திக்கவேண்டும்.
– தி.க. சிவசங்கரன், கணையாழி, ஆகஸ்டு 1998///
புதுமைப்பித்தனைப் பற்றி தெரியவில்லை. ஆனால் பாரதி ப்ராமணர் என்பதாலேயே அவரைப் புறக்கணித்து அவமதிக்கிறது தமிழக அரசு. அ தி மு க கூட பாரதியை உரிய முறையில் மதித்துவிட்டால் எங்கே தமக்கு பார்ப்பன ஆதரவு குத்தி பிரசாரம் செய்வார்களோ என்றே ஒதுங்கி நிக்கிறது. இந்த சுயநலவாதிகள் எல்லாம் ஒழிந்தால் தான் தமிழகத்தின் நிஜ தியாகிகளுக்கும் உண்மையான பெரிய மனிதர்களுக்கும் மரியாதை கிடைக்கும்.
அதுவரை நமக்கு சபிக்கப்பட்ட காலம்.
(Edited.)
//இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் பயன்பட்ட நாடகத் துறை பிற்பகுதியில் திராவிட இயக்கங்களிடம் சிக்கிக்கொண்டது. அது பற்றிய விவரங்களை அந்தப் பகுதியில் பார்க்கலாம்.//
இந்திய சுதந்திரத்திற்கும், பின்னர் ஜனநாயகத்திற்கும், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் பயன்பட்ட நாடகத்துறை திராவிட இயக்கங்களிடம் சிக்கிக்கொண்ட பிறகு அதன் மூலம் மாய்மாலம் செய்து, அடுக்கு மொழி பேசி, ஆலகால விஷத்தை அமுதமெனக் கூறி, அசிங்கங்களை அலங்காரம் செய்து அரங்கேற்றி, மக்களை மயக்கி ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தனர். பின்னர் அரசியல், ஆட்சி, அரசாங்கம், என அனைத்துமே நாடகம் ஆகிப்போனது.
நாடகம் என்னவோ தொடர்கிறது…மக்கள் தான் விழித்தபாடில்லை. இலவசங்களும் இடஒதுக்கீடுகளும் தான் வாழ்க்கை என்று இளித்த வாயர்களாக இருக்கிறார்கள்.
ம்ம்ம்……போகப் போகத் தெரியும்…
அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.
என்ன ஒரு அருமையான கட்டுரைத்தொடர். தமிழர்கள் கட்டாயமாக சுப்புவுக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த கட்டுரைத்தொடர் ஒரு மிக முக்கியமான ஆவண பொக்கிஷம் மட்டுமல்ல உண்மையான தமிழர்களுக்கு பெருமிதம் அளிக்கும் உணர்ச்சிபூர்வமான பதிவும் கூட. எப்படிப்பட்ட இழிகூட்டம் நம்மை ஏமாற்றி நம் தலை மீது அமர்ந்திருக்கிறது என்பதை உணரும் போதுதான் இந்த தீராவிட சாக்கடை கொசுக்களை ஊதித்தள்ள பலம் கிடைக்கிறது.
Compare it to the current cinema that is under the control of evangelical forces…. 🙁
வணக்கம்,
//பிறகு கவிஞரும் கருணாநிதியும்தான் கட்சி மாறினார்கள்.//
மாறாமல் என்ன செய்வது, திரைப்படம் என்பது என்ன இளிச்சவாய் பொது மக்கள் முன்னாள் போடப் பட்ட பேச்சு மேடையா?
திடீரென்று பாதிப் படத்தில் இந்த பாட்டை நான் பாடுவதானால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கே. பி. சு. அம்மையார் சொல்லி விட்டால் நட்டம் யாருக்கு.
காட்சியில் லயித்து இருக்கும் மாங்காய் தமிழனுக்கு கலைஞர் பல்டி அடித்தது தெரியவா போகிறது. பணத்தில் நட்டம் பார்ப்பதை விட அவரின் கொள்கையை கொஞ்சம் நட்டப் படுத்திக் கொள்வது புத்தி சாலித்தனம் அல்லவா.
`கருணாநிதி கட்சிமாறினார்` போன்ற விசமத்தனமான தலைப்புகளை வைத்து யாரையும் ஏமாற்ற முடியாது.
எள்ளல் செய்வது உயர் சாதிகளுக்கு கை வந்த கலை.உங்கள் தரப்பில் நியாயம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்கிறோம்.
அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் நாடகங்கள் லட்சக்கணக்கான மக்களால் பாராட்டப்பட்டவை. சும்மாவாவது சுந்தராம்பாள் போன்ற வழக்கொழிந்த விஷயங்களைப் பற்றிப் பேசினால் இந்த தலைமுறையிடம் அது எடுபடாது.
அரசியலை எழுதுவதாகச் சொல்லும் சுப்புவிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதுதான் நாடகத்தின் பக்கம் நகர்ந்துவிட்டார்.
கட்டுரையாசிரியர் அந்தக்கால ஆள் போலிருக்கிறது. நல்ல விசயம்தான்.
அக்காலத்துக்கும் இக்காலத்துக்கும் பாலமாக இருக்க ஆட்கள் தேவை.
இந்தமாதிரி ஆட்கள் இன்னும் சில்லாண்டுகள்தான் இருப்பர். அதற்குள் அவர்கள் சொல்வதையும் எழுதுவதையும் பண்ணிவிட்டுச் செல்லவேண்டும். தமிழக வரலாறு நிலைக்க வேண்டும் வரும் தலைமுறைகளுக்காக.
சங்கரதாஸ் சுவாமிகள் என்பவர் ’நாடகத்தந்தை’ என அழைக்கப்படுகிறார். சரி. ஏன் ‘சுவாமிகள்’? ஒருவேளை பிற்காலத்தில் துறவறம், மறைமலையடிகளைப்போல், ஏற்றுக்கொண்டாரோ?
எஸ்.எஸ். விசுவநாத தாஸ் ஒரு மருத்துவர் (நாவிதர்) குலத்தவர் என அறிகிறேன். தமிழக நாவிதர்கள் அவரை தங்கள் hero வாகப் பார்க்கின்றனர். இவர் ஒரு சுதந்திரப்போராட்ட வீரர் என்பதால்.
இவருக்கு தமிழக அரசு என்ன செய்தது என எவரேனும் கேட்டீர்களா?
பாரதியின் புதுமைப்பித்தனும் மட்டும்தான் நினைவுக்கு வரவேண்டுமா?
அய்யோ பாவம், மருத்துவர்கள் சார்பாக பேச ஆட்கள் இல்லை. தலித்துகளிலேயே ரொம்ப அடிமட்ட ஜாதியல்லவா?
எங்களூரில் நான் சிறுவனாக இருந்தபோது ஒரு வயதான ஆள் இருந்தார். அவர் தலித்து. சுதந்திரப்போராட்ட வீரர். இவர் வீட்டில்தான் கூட்டம் நடக்கும். காமராசரின் தொண்டர். காமராசர் எப்போது வந்தாலும் இவர் வீட்டில்தான் தங்குவார். காமராஜரை விட வயதில் பெரியவர். இந்த தலித்து ஒரு தன்வந்தரும் ஆவார். சாப்பாட்டுக்கும் தங்கும் வசதிக்கு குறைவில்லை. பெரிய வீடு. உள்ளூரிலே பெரிய நாடார் தனவந்தர்கள் இருப்பினும், காமராசர் இவர் வீட்டுக்குத்தான் நேரே வருவார்.
காமராஜர் முதல்மந்திரியான பின், இவரை மந்திரி சபையில் சேரச்சொன்னார். ஆனால், வயதில் சின்னவனாகவும் எப்போதுமே காமராஜர் கூடவே இருந்த கக்கனை சிபாரிசு பண்ண கக்கன் மந்திரியாக்கப்பட்டார்.
இதை நான் ஏன் சொன்னேன் என்றால், சுதந்திரப்போராட்ட வீரர்களில் ஏன் தலித்துகளான விசுவநாத தாஸூக்கு எந்த நினைவுச்சின்னமும் இல்லை தமிழ்நாட்டில்.
ஏன் இந்த ஹிந்து.காம் இதைப்பற்றியெல்லாம் பேசாமல் இருக்கிறது?
மேலும், சங்கரதாஸ் சுவாமிகளும் ஒரு தலித்து எனக்கேள்வி.
அந்தக்காலத்து ஆட்கள் இந்த .காமில் இருக்கிறார்கள்.
அவர்களுள் யாராவது சொல்லுங்கள்.
Sri Kallapiran
You have posted the following in the article on Pope and thiruvasagam in response to recognition for U.V.S. Iyer
“If Uu.Ve.Sa is not commemorated adequately or properly by the incumbent politicians, that comes under the domain of caste politics. It has nothing to do with religion. How does it affect you as a Tamil Hindu? It affects you only as a Tamil brahmins or a Tamil literature lover. If you mix the caste politics, literature with Hindu religion, you run the risk of brahminising the religion; and then, the feeling that THERE IS ONLY ONE ENTITY CALLED TAMILHINDU will be diluted.”
But now you say “இதை நான் ஏன் சொன்னேன் என்றால், சுதந்திரப்போராட்ட வீரர்களில் ஏன் தலித்துகளான விசுவநாத தாஸூக்கு எந்த நினைவுச்சின்னமும் இல்லை தமிழ்நாட்டில்.
ஏன் இந்த ஹிந்து.காம் இதைப்பற்றியெல்லாம் பேசாமல் இருக்கிறது?”
Maybe you differentiate between caste politics in literature and caste politics in memorials for freedom fighters!!
As far as I can tell there are only three memorials in Tamilnadu, for Anna, Kamarajar and M.G.R. Please correct me if I am wrong.
///கருணாநிதி கட்சிமாறினார்` போன்ற விசமத்தனமான தலைப்புகளை வைத்து யாரையும் ஏமாற்ற முடியாது.///
///அரசியலை எழுதுவதாகச் சொல்லும் சுப்புவிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதுதான் நாடகத்தின் பக்கம் நகர்ந்துவிட்டார்.///
1967 காமராஜ் தலைமையிலான காங்கிரசுக்கு எதிராக சுதந்திராக் கட்சியுடன் கூட்டு, எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்தார்
1971 காமராஜ் தலைமையிலான காங்கிரசுக்கு எதிராக இந்திராவுடன் கூட்டு, எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்தார்
1977 எம்.ஜி.ஆருக்கு இந்திரா ஆதரவு, அதனால் இந்திராவுக்கு எதிராக காமராஜ் வழிவந்த, மூதறிஞர் வழிவந்த ஜனதாவுடன் கூட்டு
1980 எம்.ஜி.ஆருக்கு இந்திரா எதிர்ப்பு, அதனால் இந்திராவுடன் கூட்டு, ஜனதாவுக்கு எதிர்ப்பு.
1984 எம்.ஜி.ஆருக்கு இந்திரா ஆதரவு, அதனால் இந்திராவுக்கு எதிராக காமராஜ் வழிவந்த, மூதறிஞர் வழிவந்த ஜனதாவுடன் கூட்டு
1987 இந்திரா மறைந்ததால் எம்.ஜி.ஆர் உடல் நலமில்லாததால் குழப்பம், எம்ஜி.ஆருக்கு ராஜிவ் தலைமையில் கங்கிரஸ் ஆதரவு. திமுக, காங்கிரசுக்கு எதிர்ப்பு
1989 “சொந்தக்காலில்” மூப்பனார் நின்றார். அ.தி.மு.க பிளவு, தி.மு.க. வென்றது.
1991 ராஜிவ் திடமாக ஜெயலலிதா பக்கம் போக, கங்கிரஸ் எதிர்ப்பு, ராஜீவ் சாக, படுதோல்வி.
1996 மூப்பனார், ரஜனி ஆதரவு, த.மா.கா என்ற காங்கிரஸ் பிரிவுடன் கூட்டு.
1998 மூப்பனார் காங்கிரசுடன், ஐக்கிய முன்னணி
1999 பா.ஜ.க. கூட்டணி
2001 காங்கிரஸ் எதிர்ப்பு, அதனால் தோல்வி.
2003 காங்கிரஸ் கூட்டணி, அதனால் வெற்றி.
2006 காங்கிரஸ் கூட்டணி, அதனால் பாதி வெற்றி
2008 காங்கிரஸ் கூட்டணி, அதனால் வெற்றி
அரசியல் கேட்ட தத்வன் அவர்கள் அரசியலில் கருணாநிதியின் கட்சித்தாவல் சரிதம் எழுதினால் அது மஹாபாரதம் போலப் பெரிய சரிதமாக, அதைவிட, திடுக்கிடும் திருப்பக்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதை சற்று யோசிக்கட்டும்.
//Maybe you differentiate between caste politics in literature and caste politics in memorials for freedom fighters!!// – Armchair Critic
My intention is not that.
My intention is that in freedom struggle, all from a variety of caste and religious communities stood shoulder to shoulder receiving lathi charge and rigorous imprisonment. For e.g Paramakkudi Srinivasan shared his cell with a Muslim freedom fighter Hasan. In cellular jail Andaman, many from all states were imprisoned. While we commemorate/honor, or want to take up prominent freedom fighters if they are ignored, as in the case of Bharati, we don’t even remember the lesser known people.
By commemorating/honouring these people, we make those, from such marginalised communities like barbers, feel they also contributed to the struggle and thus, their feeling of patriotism can be boosted tremendously.
Today, the sad fact is, there is no such patriotic fervour found equally among all sections of society. We must do everything to help rejuvenate the fervour, and the act of commemorating or honouring lesser known heroes, that too, from marginalised communities as barbers, will tremendously help in the process of rejuvenation.
It is not caste or any division that is at the root of what I propose. It is an effort at inclusiveness by asking those standing outside to join in and participate.
Same is valid in making people feel as Hindus. Much damage has been done in marginalising people from the mainstream. Even today, news have come in, and this .com has reported that, how dalits were prevented from entering Ekambereswarar Temple in Vedaraanyam. We join the cause of dalits there, not the other party. Dont we? To achieve ‘inclusiveness’.
Our endeavour should be to ‘include’ – both in country building and religion building.
According to me, the cases of Bharati and Uu.Ve.Sa can wait. The case of Vishwanathadass and his barbar generations should be taken up.
How many school children know who this Viswanathadass was!
Please imagine yourself as a barber child in a class room and imagain you get a lesson or a reference to Viswanathadass in history book, and the teacher talks about him – how proud you will be! What a fantastic feeling it is for you when other children look at you with a smile – ‘You also did it!” Everybody knows Bharati, Everybody knows VVS Iyer, Everybody knows VOC. But does anyone know Viswanathadass?
As I said already, and I reiterate it here again, Uu.Ve.Sa does not fall under the category of Bharati and Dass. The case of honouring him or his neglect falls under a different category – that of honoring the achievements of Tamil scholars only, however much you differed with me.
Lets toast to Viswanathadass, the forgotten freedom hero!
Thank you Mr.Kallapiran for the detailed explanation.
Many years back in conversing with Mr.Ragami, who is no more now, one who was an authority on the subject of freedom fighters I got to know the following.
That even after granting Independence to us British had 2 FIRs open – one against Bose and another against one Mr.Mariappan, a ‘puli aattam’ artist. They should be handed over to the British if ever they are found! We all know of Netaji, of course. But Mr. Mariappan…??!
It seems he was one of the co-accused in the death of Ash, for which Vanchinathan attained martyrdom. The police looking for Mr.Mariappan knew that he is a ‘puli aattam’ artist and on information went to his performance and waited for it to be over. But they didn’t know that he had already escaped leaving some one to don his part. It seems he went to Pondicherry. He couldn’t be traced.
Regarding Mr.Viswanatha Das, I came across Mr.Kaliappan, some years back, who played harmonium for his plays. He remembered a song ‘Punjab padukolai/Paarinil kodiyadhu/Dyer madhi kettadhu’ sung by Mr.Viswanatha Das on Jalian Wallabagh massacre, for which he will be imprisoned every time. And on release he will continue in the same vain. There is another popular song ‘Vellai kokku parakkudhu’ in the play Valli thirumanam, for which also he used to be imprisoned!
சுப்புவிடம் சரக்கு இல்லை என்கிறார் தத்துவன்.இவர் இந்தத் தொடரை தொடர்ந்து படிப்பதில்லை என்பது வெளிப்படுகிறது.
முன்பு ஒருமுறை பத்திரிக்கைகளைப் பற்றி சுப்பு எழுதியிருந்தார் விவசாயம் நிலஉடைமை பற்றியும் எழுதியிருந்தார். இந்தமுறை நாடகம். அரசியலில் பொருளாதாரம், கலை, இலக்கியம் ஆகியவற்றின் பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.இதில் என்ன குற்றம்?
அவசரப்பட்டு எழுதுவதற்கு முன்னர் முந்தைய பகுதிகளைப் பார்க்கவேண்டும் என்று தத்துவனைக் கேட்டுக்கொள்கிறேன்.
Mr.Armchair critic,
நீங்கள் குறிப்பிட்டுள்ள விடுதலைப்போராட்ட வீரர் மாரியாப்பனா அல்லது மாடசாமியா? மாடசாமி என்பவரைததான் வாஞ்சிநாதனின் கூட்டாளி என போலீசார் தேடிக் கடைசீ வரை கண்டுபிடிக்கவே இல்லை எனப் படித்திருக்கிறேன்.
Can someone write about the people, majority of the Indians to be precise, who collabrated and cooperated with the British against their own countrymen fo over 150 years? Small minority of English managed to rule the majority of us Indians only with full cooperation of our own. This includes the army, the police and civil servents who worked for the British. The police/army ddi not have any problem in shooting/lathi charging their own countrymen.
If not for this,the British would have been booted out of India a long time ago with their tails between their legs.
Is this topic too sensitive to stomach for the general populace? Why this is being swept under the carpet? Nobody wants to talk about the betrayal of Indians on Indians.
It may be Madasamy, Mr. Giri. The conversation I had with Mr. Ragami was in 1994 or thereabouts. By the way there is a memorial for Ashe in Tuticorin, I heard.
இந்த கட்டுரையில், முகப்பு பக்கத்தில் போட பல விஷயங்கள் உள்ளன. ஆனால், பாலாமணி அம்மையார் பற்றி போட்டிருப்பதின் நோக்கம் என்னவோ? தமிழ் ஹிந்துவும் இப்படி கவர்ச்சியை துணைக்கு அழைத்தால் என்னதான் செய்வது?
தமிழன்.
—களை எடுக்க நினைக்கிறேன், தவறாக நினைக்கவேண்டாம்—