கொஞ்சம் அறிவியல், ரொம்ப கிராபிக்ஸ் – கூடவே நெய்யூரின் அழுகுரல்.
பல பிரம்மாண்டமான ஹாலிவுட் திரைப்படங்களை தந்த ஜேம்ஸ் காமரோனின் கனவு இலட்சியம் என இத்திரைப்படம் சொல்லப்படுகிறது.
பிரம்மாண்டத்தில் இத்திரைப்படம் நிச்சயமாக ஏமாற்றவில்லை.
மிகப் பிரம்மாண்டமான கிராபிக்ஸ். புத்தம் புதியதோர் உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு இயற்கை அம்சமும் பிக்ஸல் பிக்ஸலாக அணு அணுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு மகோன்னத விசித்திர கனவுக்குள் நுழைந்து மீண்டு வரும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு திரைப்படம் அளிக்கிறது. ஒருவிதத்தில் இதைத்தான் எல்லா ஹாலிவுட் பெரும் வசூல் அள்ளும் திரைப்படங்கள் அனைத்தும் செய்கின்றன. ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.
மற்றொரு விதத்தில் இது அவர்களின் ஒரு ஏக்கம். இழந்த தொன்மையினை எண்ணி ஆழ்மனம் அடையும் ஏக்கம்.
இத்திரைப்படம் அறிவியல் புதின வகையறாவைச் (science fiction) சார்ந்தது. வருங்காலத்தில் பண்டோ ரா என தாங்கள் பெயரிடும் ஒரு புதிய உலகத்துக்கு மானுடம் செல்கிறது. சமூக அறிவியலாளர்கள், ஒரு பெரும் வர்த்தக அமைப்பு அத்துடன் இராணுவம் என மூன்றுவித உப குழுக்கள் கொண்ட பெருங்குழு. அவர்களின் நோக்கம் அந்த புதிய உலகில் ஏற்கனவே வாழும் அறிவுகொண்ட ஜீவராசிகளான பத்தடி உயரமும் வலிமையும் கொண்ட நா’வ்வி (Na’vi) யுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர்கள் அவர்கள் வாழும் வனப்பரப்பிலிருந்து அகற்றுவது. காரணம் அந்த வனத்தின் அடியில் ஒரு விலைமதிப்பற்ற தாதுப்பொருள் இருப்பதை மானுடம் கண்டுபிடிப்பது.
இதற்காக நா’வ்விகளுக்கு கல்விச்சாலைகள் அமைத்து மேற்கத்திய பண்பாட்டையும் ஆங்கிலத்தையும் கற்றுத்தருகிறார்கள். மருத்துவசாலைகள் அமைக்கிறார்கள். ஆனால் நா’வ்விக்களை தங்கள் வழிமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. கூடவே மானுட ராணுவமும் அவர்களைத் தாக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் சமூகவியலாளர்கள் அவர்களை அறிந்து அவர்களுடன் உரையாடி அவர்களை வழிக்கு கொண்டு வரமுடியுமா பார்க்கிறார்கள். இதற்கு அவர்களுள் ஒருவராக அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியே “அவதார்”.
பொதுவாக சொல்லப்படுவது போல இந்த “அவதார்” என்கிற வார்த்தைக்கும் ஹிந்து புராணங்களின் அவதாரக் கோட்பாட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த அவதார் கோட்பாடு சைபர் வெளியில் ஒருவர் உருவாக்கும் விர்சுவல் ஆளுமைக்கு கொடுக்கப்படும் பெயராகும். இங்கு நா’வ்வி உடல் உருவாக்கப்படுகிறது. அதன் மூளை ஒரு இயந்திரத்துக்குள் இருக்கும் மானுடனால் இயக்கப்படும். அந்த நாவ்வி உடலுக்குள் மானுடன். ஹை டெக் கூடு விட்டு கூடு பாய்தல்!
ஆனால் இது வெறும் ஹைடெக் அதீதக்கற்பனை அல்ல என்பதுதான் உண்மை. மேற்கத்திய மானுடவியலின் அடிப்படை அணுகுமுறை இதுதான். இதைத்தான் இன்றைக்கும் நம்முடைய மானுடவியல் துறைகளில் பயன்படுத்துகிறோம்.
“அவர்களில் ஒருவனாகாமல் அவர்களில் ஒருவனாக” நடித்தல் அல்லது தகவல் தருபவர்களை – உளவாளிகளை – “அவர்களுக்குள்” உருவாக்கி தகவல் சேகரித்தல் – இவைதான் நம் சமூகவியல் அணுகுமுறைகள். நமது சமூக அறிவியல் துறைகளில் வனவாசி சமூகங்களையாகட்டும் குல தெய்வ வழிபாட்டு முறைகளையாகட்டும் இப்படித்தான் அணுகுகிறது. சுருக்கமாக நாம் “பிறர்” என கருதுவோரை அணுக இத்தகைய ஒரு உத்தியைத்தான் பயன்படுத்துகிறோம்.
ஏனெனில் மேற்கத்தியர்கள் இந்த முறைகளைத்தாம் தம்மைவிட “கீழ்நிலை” மனிதர்களாக கருதிய பண்பாடுகளை “அறிந்து” கொள்ள பயன்படுத்தினார்கள்.
ஆனால் இந்த முறை சில அடிப்படை உண்மைகளை கனகச்சிதமாக எப்போதுமே தவறிவிடும். அவ்வாறு தவற விடப்பட்ட உண்மைகள்தான் “ஆராயப்படும்” பண்பாட்டின் ஆதார உயிர் நிலைகளாக அமையும். பல நேரங்களில் வேண்டுமென்றே அந்த தவறு நடத்தப்படும். ஏனெனில் “அவர்கள்” உண்மையான் இதயத்துடிப்புடன் இருப்பது “நமக்கு” பல சங்கடங்களை விளைவிக்கும். குறிப்பாக “அவர்களை” அழித்தொழிப்பதில்.
இந்த அவதார்களில் ஒருவனான கதாநாயகன் இழந்த கால்களை பெறும் வாக்குறுதியை ராணுவ மேஜர் ஒருவன் கொடுக்கிறான். அதை நம்பி நா’வ்விகளிடம் கிடைக்கும் தரவுகளை ராணுவ மேஜருக்கு அளிக்கிறான். ஆனால் சிறிது சிறிதாக நா’வ்விகளின் வாழ்க்கை முறையில் தன்னை இழந்து நா’வ்விகளில் ஒருவனாகிவிடுகிறான். இதுவும் நிகழக்கூடிய விஷயம்தான். உதாரணம் பாரதத்துக்கு வனவாசிகளை மதம்மாற்ற வந்து அவர்களூள் ஒருவராகி மதமாற்றங்களையும் வனவாசிகளை ஹிந்து சமுதாயத்திடமிருந்து பிரிப்பதையும் எதிர்த்த வீரியர் எல்வின்.
வீரியர் எல்வின் பற்றி மேலும் அறிய, பார்க்க: வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே
இறுதியில் மானுடத்தின் பேராசை வெற்றி அடைகிறதா? அல்லது நா’வ்விகளின் இயற்கையோடிணைந்த பண்பாடும் வனத்தின் மீதான அவர்களின் உரிமையும் வெற்றி அடைகிறதா? என்பதுதான் கதை.
இயற்கையில் பரிணமிக்கும்/வெளிப்படும் உயிர் உறவுகள் புனிதம் கொண்டவை – அவற்றுடன் நம்மை இணைத்துக்கொள்வதே ஆன்மிகம். அந்த இணைப்பை நமக்கு உணர்த்துபவையே சடங்குகள். இது இத்திரைப்படத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு அடிப்படையான விஷயம். புனித மரங்கள் புனித வனங்களை உருவாக்கிய பண்டைய பண்பாடுகள் இந்த இணைப்பை உணர்ந்து அவற்றின் பொருண்மையான குறியீடுகளாக புனித வனங்களையும் புனித மரங்களையும் கண்டடைந்தன.
பாரதம் முழுவதும் இத்தகைய தெய்வீக வனங்கள் உள்ளன. படையெடுக்கும் ஆக்கிரமிக்கும் பண்பாடுகளின் முக்கியமான தாக்குதல் இலக்காக இந்த வனங்களே அமைந்துள்ளன.
கிறிஸ்தவம் ஐரோப்பிய மதமாக தன்னை நிலைநிறுத்துவதற்கு முன்னால் ஐரோப்பிய பாகனிய பண்பாடுகளில் இந்த புனித மர பண்பாடு இருந்தது. ஆனால் ஆபிரகாமிய மதங்களில் இது விக்கிரக ஆராதனையாகவும் பண்பாடற்ற மூட நம்பிக்கையாகவும் கருதப்பட்டு அழிக்கப் பட்டது.
இத்திரைப்படத்தில் நா’வ்விகளின் ஆன்மிகம் அன்னை வழிபாடாகவும் வன-மலை வழிபாடாகவும் காட்டப்படுகிறது. எய்வா எனும் அனைத்து சிருஷ்டியாகவும் இருக்கும் அன்னை சக்தி எல்லாவற்றுள்ளும் சென்று அனைத்தையும் இணைக்கிறது. பல பயிற்சிகளின் மூலம் இதனை உணர்ந்து கொண்டு ஒரு நாவ்வி தன்னை சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இணைத்துக் கொள்ளும் போது அவன் “இரு பிறப்பாளன்” ஆகிறான்.
நா’வ்விகளின் நம்பிக்கைகளை அறிவியல் தனக்கே உரிய விதத்தில் உறுதி செய்வதை மேற்கத்திய மானுடர்கள் கண்டடைகிறார்கள். பெண் சமூகவியலாளர் இதனை எடுத்து கூறுகிறார். நிலத்தனடியில் மரங்களின் வேர்கள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து தகவல் பரிமாற்றம் செய்வதாகவும் அது நம் மூளையின் நியூரான்களின் செயல்பாட்டை ஒத்திருப்பதாகவும் கூறுகிறார். ஆக அந்த புனித வனமும் ஒருவிதத்தில் அந்த முழு கிரகமும் ஒரு அதி-உயிரியாகவும் (super organism) பிரக்ஞையுடையதாகவும் செயல்படுவதாக சொல்கிறார். மேலதிகாரிகள் சிரிக்கின்றனர் “பாட்டி கதை” என்கின்றனர், “அதாவது இங்கிருந்து ஒரு கல்லை எந்த திசையில் வீசினாலும் அது விழுகிற இடம் ஒரு புனித இடமாகத்தான் இருக்குமா?” என கேலி செய்கின்றனர்.
அதீதக்கற்பனையாக இது தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால் உலகத்தை ஒரு அதி-உயிரி போன்று செயல்படுவதாகக் கூறும் Gaia கருதுகோள் முதலில் மேற்கத்திய அறிவியலாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்து பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலத்தடியில் தாவரங்களின் வேர்களுக்கிடையே உயிர்-வேதியியல் பொருட்களின் மூலம் நடத்தப்படும் தகவல் தொடர்புகள் பெரிய ஆச்சரியங்களை அறிவியலாளர்களுக்கு அளித்துள்ளது. உதாரணமாக 2004 இல் Trends in Plant Science எனும் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடும் சர்வதேச நூல் பிரசுரித்த கட்டுரையின் தலைப்பு: How plants communicate using the underground information superhighway. இத்திரைப்படத்தின் மூலம் புதுமையான அறிவியல்பார்வைகளை இளம் உள்ளங்களுக்கு கொண்டு செல்லவும் முடியும்.
அந்த பெரிய புனிதமரம் ஏவுகணைகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டு கீழே விழுகிறது. அதனைக் கண்டு சிதறி ஓடும் வில்லம்புகளால் போரிட்டப்படி சாகும் நா’வ்விகள் துடிக்கின்றனர். வன ஆராதனையாளர்கள் கண்ணீர்விடுகின்றனர். செய்வதறியாமல் ஓலமிடுகின்றனர். மரம் படிப்படியாக கீழே விழுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக மானுடத்தின் புற்று நோயென காலனியம் பரவிய கண்டங்களிலெல்லாம் வீழ்த்தப்பட்ட புனித மரங்களின் மௌன ஓலங்கள்… அவற்றை வழிபட்ட சமுதாயங்களின் கண்ணீர் ஒரு மெகா கிராபிக்ஸ் வாக்குமூலமாக நம் முன் தோன்றுகிறது.
உலகெங்கிலும் பரவியிருந்த வனங்களை வணங்கும் ஆன்மிகப் பண்பாடு இன்றைக்கு மிஞ்சியிருக்கும் ஒரே தேசம் பாரதம். இங்கு இன்னும் புனித வனங்கள் எஞ்சியுள்ளன. தலவிருட்சங்கள் உள்ளன. இங்கு இன்னும் நாகதேவதைகள் தெய்வ வனங்களை காக்கின்றனர். வனங்கள் மானுடத்துக்கு மூலிகைகளை அளிக்கின்றன. நிலத்தடி நீரை வளப்படுத்துகின்றன. மண் அரிப்பை தடுக்கின்றன. கரியமில வாயுவை உள்வாங்கி பிராணவாயுவை நல்குகின்றன. இந்த பண்பாட்டையும் இந்த வளத்தையும் அழிக்க இங்கும் போர் நடைபெறத்தான் செய்கிறது.
(உடைக்கப்பட்ட வனசாஸ்தா கோவில் : திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம் – தமிழ்முரசு 30-12-2006)
பிற்சேர்க்கை-1
புனிதவனங்களை வெட்டிச்சாய்க்கும் பண்பாடற்ற மானுடம் கிராபிக்ஸ் அதி கற்பனைகள் அல்ல. வேதனையான உண்மை. எங்கோ என்றோ அல்ல. மிக அருகில். உதாரணமாக இதோ ஒரு மிஷினரி அறிஞர் சாமுவேல் மாட்டீரின் வாக்குமூலம். இத்திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இதிலிருக்கும் வரிகள் கிராபிக்ஸின் பின்னாலிருக்கும் வரலாற்று யதார்த்தத்தை வடித்துக்கொடுக்கும். இதனைப் படித்த பிறகு படத்தை பார்த்தால் அத்திரைப்படத்தின் ராட்சத பின்னணி இசையையும் மீறி இவ்வரிகள் காட்டும் காட்சி இதயத்தில் எதிரொலிக்கும்.
Some of the demons are supposed to reside in certain trees (compare Deut xvi.21) at the foot of which a rough stone is placed on which turmeric powder is rubbed. None will pass by these places after night. Such trees are usually very large, old and well grown as it is considered sacrilegious and dangerous to hew them down. In some parts of the these trees are quite common. In one of the mountains of Travancore grew a noble timber tree which our assistant missionary Mr. Ashton wished to secure for use in the erection of the large chapel at Neyyor. The trunk was so large that four men with outstretched arms could not compass it and the branches were as thick as the ordinary trees of that species. …Even the native government has refrained from cutting down the monarch of the forest for their public works. …The mountaineers firmly refused to assist in cutting down the tree, so that the missionaries had to bring Christian workmen from considerable distance. At last the tree feel with a terrible crash, which echoed amongst surrounding mountains, amidst screams and cries of the heathen who from that time seemed to listen more readily to the exhortations of the missionary. Much of the wood-work of the chapel was made of this single tree; so that what had formerly been used in the service of the devil now became subservient to the worship of the one true and living god.
[“Rev”. Samuel Mateer, Land of Charity pp.206-7, London, 1870]
அரவிந்தன் நீலகண்டன்,
அற்புதமான விமர்சனம். நன்றி. அத்துடன் இது ஒரு கற்பனைக் கதையல்ல, ஆபிரகாமிய உளவியலை படம் பிடித்துக் காட்டுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
ஐரோப்பாவில் மட்டும் அல்ல, அரேபியாவிலும் புனித மரங்கள் இருந்தன. அவை முஹமதின் உத்தரவின் பேரில் அவரது சஹாபாக்களால் அழிக்கப் பட்டன. பின்னாளில் வஹாபிகள் சவுதியை கைப்பற்றியபோதும், மரங்கள் சாத்தானின் உறைவிடங்கள் என்று இஸ்லாம் சொல்வதாகச் சொல்லி அழித்தனர்.
அரேபியாவில் தற்போது நிறைய மரங்களை காணமுடிகிறது. வெளியிலிருந்து தருவித்தும் நடுகிறார்கள். போகப் போக இந்த மரங்களின் மூலமாவது மனிதத்தன்மை அங்கே நுழைந்து பாகனியப் பண்பாடு மலரும் என்று நம்புவோம்.
3D இருப்பதால், சிறார்களுக்கும் படம் பிடிக்கும். உங்களது சீரியஸான விமர்சனத்தை படித்துவிட்டு இது எதோ தத்துவ ரீதியான படம் என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். இது எதுவுமே புரியாமல் பார்த்தாலும் மிகவும் ரசிக்கக் கூடிய திரைப்படம் இது.
அந்த மக்களின் வாழ்க்கை முறையை ஆதரிக்கும் விதமாக, மேற்கு உலகில் இருந்து வந்துள்ள படம் இது. இது இயற்கையை நேசிக்கும், வணங்கும் மக்களுக்கான படம். ஏனோ இந்த படத்தை வேறு கிரகத்தில் நடப்பதாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் பல வசனங்கள் வரும். “அவங்க அந்த மரத்தை விட்டு போக மாட்டேங்குறாங்க. அதை போய் கடவுளா வணங்குறாங்க” என்று நக்கலாக பேசும் வசனங்கள், அதை தொடர்ந்த சிரிப்பொலி. “அந்த மரத்தில் இருப்பது அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. ஆனா, அத விட மாட்டேன்னு போர் புரியராங்க”, “அங்க பாரு. ஒரு குண்டு போட்டதும் கரப்பான் பூச்சி போல கலஞ்சு ஒடுறாங்க” என்ற எள்ளல். கையில் காப்பி கோப்பையுடன் சினிமா பார்ப்பது போல பார்த்துக் கொண்டு அவர்களை குண்டு போட்டு அழிக்கும் காட்சிகள். இவர்களை நோக்கி நவிக்கள் வீசும் அம்புகளை கண்டு கொள்ளாத மனிதர்களின் அசட்டைகள் போன்றவை.
கடைசியில் அந்த மரங்களை மனிதர்கள் ஒரு சில நிமிடங்களில் அழிக்கப்பட்டாலும், போரில் வெகு சீக்கிரமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களுக்கு இயற்க்கை உதவும் என்ற கருத்து முக்கியமானது. செடிகளிலும், மலர்களிலும், புல் தரையிலும் இருக்கும் ரேடியம்கள். அதில் நவிக்கள் நடந்து போகும் போது ஏற்படும் சொற்ப வினாடி கால்தடங்கள், கடலில் இருக்கும் ஜெல்லி மீன்களை போன்று வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஜந்துக்கள், தொட்டால் சுருங்கிவிடும் மெகா மலர்கள், பின் தொடப்போகும் முன்னரே சுருங்கும் மலர்கள், நவிக்களின் உணர்வுகளுடன் பேசும் மரங்கள், அந்த மரங்களில் இருக்கும் மூதாதயர்களின் நினைவுகள், அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக மொழி, தற்காப்புக்காகவே நவிக்கள் விலங்குகளை கொல்லுதல், இயற்கையை அவர்கள் நேசிக்கும் அதன் ஊடே வாழும் அவர்களின் வாழ்க்கை முறைகள் என்று எனக்கு பிடித்த அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் நவிக்கள் எப்படி இயற்கையுடன் இணைந்து வாழ்கிறார்கள் என்பதற்கான காட்சிகள். இப்படி பல அம்சங்களை இந்தியத்தன்மையுடன் ஒப்பிட்டு படம் பாருங்கள்.
https://jeeno.blogspot.com/2009/12/v-t-r.html
திரைப்பார்வை: அவதார்
உலகின் பல இடங்களில் மரங்கள் சக்தி வாய்நதவைகளாக கருதப்படுகிறது. பஹரய்ன் நகரின் வெளியே பாலைவனத்தில் , சுற்று வட்டராத்தில் 10 மைலுக்கு சொட்டு தண்ணீர் இல்லாத இடத்தில் ஒரு மரம் 400 வருடங்களாக வாழுகிறது .இதை ” TREE OF LIFE ” என அழைக்கிறார்கள். பார்த்தவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும் என நம்புகிறார்கள் . இதை முகமதிய மன்னரின் ஆட்சி
பாதுக்கக்கிறது .
ரமணன் . வி
l
மரம் செடி கொடிகள் என இயற்கையை வணங்குபவர்கள் மலைஜாதியினரே. இயற்கை வணக்கமுடையவர்கள் இந்துக்கள் அல்ல என்கிற அடிப்படை உண்மை கூட அறியாமல் அலப்புகிற அவதார் விமர்சனம். சூப்பர்!?
இன்னும் சொல்லலாம். ஆனால் சொல்லமாட்டேன். விழலுக்கிறைத்த நீராகிவிடும்.
Can you pl send me the reference from the quote in English has been reproduced? Its an excellent ref. Congrats.
அற்புதமான பார்வை அரவிந்தன்.
எந்த விமர்சனமும் தொடாத, ஆனால் இந்தப் படத்தின் சாரமான விஷயத்தைச் சொல்லுகிறது இந்த ரிவ்யூ.
இதில் சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை”யின் சாயலும் தெரிவதாகத் தோன்றுகிறது – புனித மரம் என்பதை பிரபஞ்சத்தின், வாழ்க்கை முழுமையின் படிமமாகக் காண்பதில். ஆனால் அதன் களம் முழுக்க முழுக்க ஒரு ஊர் சார்ந்தது. இங்கு கண்டங்களும், கலாசாரங்களும் மோதுகின்றன..
கண்டிப்பாக குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன்.
//இயற்கை வணக்கமுடையவர்கள் இந்துக்கள் அல்ல என்கிற அடிப்படை உண்மை கூட அறியாமல் அலப்புகிற அவதார் விமர்சனம்//
ஹிந்து ஆன்மிகத்தின் அடிப்படையே அனைத்து இயற்கையும் புனிதமானது என்பதுதான். வேதமாகட்டும் உள்ளூர் அம்மன் வழிபாடாகட்டும் இயற்கை வழிபாடு ஹிந்து தருமத்துடன் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. வானில் உறையும் கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு பதிலாக தம் மக்களை கண்ணுக்குத் தெரியும் இயற்கை கடவுளான கோவர்த்தன மலை வழிபாட்டை ஸ்ரீ கிருஷ்ணன் செய்யச் சொன்னார். ஆபிரகாமிய மத கடவுளரின் இறைத்தூதர்களோ இயற்கை வழிபாட்டு முறைகளை அழித்து கண்ணுக்குத் தெரியாத தந்தை தெய்வக்கற்பனையை வழிபடச் சொன்னார்கள். ஹிந்து பண்பாட்டுச்சூழலில்தான் ஐயாயிரம் வருடங்களுக்கு மேலாக இயற்கை வழிபாடு பேணப்பட்டு அழிக்கப்படாமல் உள்ளது. இது கூட புரியாமல் அலப்புகிற நீங்கள் உண்மையிலேயே ஒரு “அற்புதம்தான்”
நா’வி என்ற இந்த பெயரே எனக்கு நாவல் மரத்தை நினைவூட்டுகின்றது. நாவல் மரம் எங்கும் காணப்பபட்டதால், நாமிருக்கும் இந்தப் பகுதி நாவலந்தீவு எனப்பட்டது. இந்த நாவல் மரத்தின் மிகப் பெரிய பயன் என்னவென்றால், அதன் அருகில், மூன்றிலிருந்து பத்தடி ஆழத்திற்குள் இனிய ஊற்று நீர் கிடைக்கும். அதாவது எங்கெல்லாம், நிலத்தடி நீர் ஓடுகின்றனவோ அங்கெல்லாம் நாவல் மரம் முளைத்து விடும். மரங்களின் வேர்கள் நியூரான் போல பின்னிப் பிணைத்துள்ளது, இந்த நிலத்தடி நீரோட்டங்களின் போக்கை ஒட்டியே. நாவல் மரம் அருகில், புற்றும் காணப்பட்டால், அந்தப் புற்று இருக்கும் திசையைக் கொண்டு, நிலத்தடி நீர் ஓடும் இடத்தையும் கண்டு பிடித்து விடலாம். இந்த clue -வைக் கொண்டு, அந்த நாட்களில், எங்கு பார்த்தாலும், குளங்களும், ஏரிகளும் வெட்டப் பட்டன. புற்றுகளையும் பராமரிக்கும் வகையில், நாகக் கடவுள் நம்பிக்கைகள் உதவின.
நாவல் மரம் மட்டுமல்ல, 50 வேறு மரங்களும், நிலத்தடி நீரைக் கண்டுபிடிப்பதில் உதவின. ஆல், அரசு, வில்வம், வேம்பு, விளா மரமும் இவற்றுள் முக்கியமானவை. கடவுளர்களுக்கும், இவை முக்கிய மரங்களாகக் கொள்ளப்பட்டதில், இந்த ecology -யும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ‘கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்; என்று விநாயகக் கடவுளைப் போற்றும் பாடலில், கபித்தம் என்றால் விளாம் பழம், ஜம்பூ என்றால் நாகப் பழம். விநாகருக்கு இந்த இரண்டு பழங்களையும் படைக்க வேண்டும் என்று கொண்டு வந்ததும், இந்த மரங்களை மக்கள் அழிக்காமல் காப்பற்றும் பொருட்டுதானோ என்றும் தோன்றுகிறது.
வராஹமிஹிறரால் சொல்லப்பட்ட 50 மரங்களில், ஒரு மரம் கூட இன்று காப்பாற்றப் படவில்லை. இதனால் நிலத்தடி நீரோட்டம் பற்றிய அறிவும் மறந்து விட்டது.
ஜெயஸ்ரீ சாரநாதன் உங்கள் பலதுறை அறிவு வியக்க வைக்கிறது. விநாயகருக்கு படைக்கப்படும் இந்த இரண்டு கனிகளின் மரங்களுமே சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஜடாயும் சீனு அற்புதம் நேசகுமார் – கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
Dear Sri Tarunji, Thank you for your interest and encouragement. The reference for Mateer work is given there itself : Samuel Mateer, Land of Charity pp.206-7, London, 1870 (It has been reprinted by Asian Educational Services, 1991. it is a highly biased account of Travancore life in the 19th century though it is important as a contemporary document of those times)
s. aravindan neelakandan
எனக்கு ஜேம்ஸ் கேமரூன் மேல் நம்பிக்கை இல்லை. அவர் ஒரு கிருத்தவ சிந்தனை அடிப்படை கொண்டவர். அவர் எடுத்த படங்கள் எல்லாமே அப்படித்தான் இருந்துவந்துள்ளன. டெர்மினேட்டர் முழுவதும் புரோடஸ்டண்ட் சிந்தனை படம் தானே…! \
அவதார் பார்த்துவிட்டு வந்து மேலும் சொல்கிறேன்.
ஐயா அற்புதம் ,
நிங்களவே ஒன்னு செல்லுவிங்க ,அப்புறம் விழலுக்கு இரைத்த neernu ஒரு போடு போடுவிங்க ! நீங்க பாத்ததில்லை நம்ம ஊர்ல எல்லா ஹிந்துக்களும் அரச மரத்தையும் ,வெப்ப மரத்தையும் கும்பிடரதை ! இயற்கை வழிபாடு எல்லா ஹிந்துக்களுக்கும் பொது ஆனது . மலை ஜாதியினரும் ஹிந்துக்களே !
ஆனா உங்க தெளிவு எங்களுக்கு புரியுது . அவர்கள் ஹிந்து இல்லைன்னு சொன்னதனே உங்க மூட கிறிஸ்தவ மதத்துக்கு ஆள் சேர்க்க முடியும் . ஆனா அதை பொறுத்த ஹிந்து மரணம் எய்துவிட்டான். இனி பாரதம் ஹிந்துக்களுக்கு ஆனா தேசம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.
உங்க தெளிவு எது வரை பொய் சொல்லுது என்றால் ஹிந்துக்கள் என்பவர்கள் பிராமணர்கள் மட்டும் தான் என்பதுவரை. அறிஞர் அண்ணா சொன்னது போல் பிராமணர்களும் ஒரு காலத்தில் மலை ஜாதியினரே என்பதே உங்கள் பொய்க்கு கிடைத்த ஒரு சம்மட்டி அடி.
ஒத்த சிந்தனை.. ஒவ்வொரு காட்சியும் எனக்கு பாரத பண்பாட்டின் மகத்துவம் காட்டுவதாகவே பட்டது.. அற்புதமான படைப்பு ..
நாவலந்தீவு என்பது தற்போது இல்லை. ஆனால் நமது முன்னோர்கள் அதில் வசித்தனர். கடலுக்குள் அது அமிழ்ந்து விட்டது என்பதே உண்மை.
அற்புதம்,
//இயற்கை வணக்கமுடையவர்கள் இந்துக்கள் அல்ல என்கிற அடிப்படை உண்மை கூட அறியாமல் அலப்புகிற அவதார் விமர்சனம்.//
ஆஹா அற்புதம். எந்த சர்ச்சில் உங்களுக்கு இதை திணித்தார்கள்? இயற்கை வழிபாடு என்பது இந்துக்களில் வாழ்வியல் முறை என்ற அடிப்படை விஷயம் கூட தெரியவில்லையே உங்களுக்கு. உண்மையிலேயே அற்புதம் தான் 😉
இந்த படத்தில் சில அம்சங்கள் நம் பழக்க வழக்கங்களோடு ஒத்து போகிறது.
1. நீல நிறம். ஏன் டைரக்டர் இந்த கலரை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.
2. நாவிக்கள் அமர்ந்து தியானம் செய்யும் முறை, யோகா செய்வது போல் இருப்பது.
3. இயற்கையை வழிபடுவது. அந்த மரத்தை நம் முன்னோர்கள் என்று கருதுவது. மரங்களோடு பேசுவது.
4. மறுபிறப்பு. கடைசியில் ஜேக் கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு உடலுக்கு செல்வது.
முக்கியமாக. அங்கு இருக்கும் தொங்கும் மலைகளின் பெயர், “அல்லேலூயா மலைகள்”. அந்த மரங்களை பார்த்தால் நாவிக்களுக்கு மிகுந்த பயம் ஏற்படுமாம்.
“The Pandorans call them the Thundering Rocks, and the entire area is sacred to them.”
https://james-camerons-avatar.wikia.com/wiki/Hallelujah_Mountains
இப்படி பல விஷயங்கள்.
சுரேஷ் குமார் கூறுகிறார்:-
>>நாவலந்தீவு என்பது தற்போது இல்லை. ஆனால் நமது முன்னோர்கள் அதில் வசித்தனர். கடலுக்குள் அது அமிழ்ந்து விட்டது என்பதே உண்மை.<<
*******
அகண்ட பாரதத்தையும், கடல் கொண்ட குமரியையும் உள்ளடக்கிய மிகப் பெரிய தீவாக இருந்த நிலப் பரப்பே நாவலம் தீவு எனப்பட்டது. தற்போது, அந்தத் தீவு தீபகற்பமாக ஆகி விட்டது. ஆயினும் நாம் இருக்கும் நிலப்பரப்பு நாவலம் தீவைச் சேர்ந்தது,அந்நாள் தமிழர், இந்த நிலத்தை நாவலம் தீவு என்றே குறிப்பிட்டு வந்தனர்.
சில உதாரணங்கள்;-
சிலப்பதிகாரத்திலிருந்து:-
1) சேரன் செங்குட்டுவன், கண்ணகி கோவிலுக்குக் கல் எடுக்க இமயம் செல்ல முடிவெடுத்தவுடன், தான் படையுடன் வடபுலம் செல்வதைப் பறை அறிவிக்குமாறு கட்டளையிடுகிறான். ஏன்? இந்த நாவம்தீவின் கண் உள்ள பிற நாட்டு அரசர்களது ஒற்றர்கள் தன வஞ்சிக் கோட்டையின் வாயிலில் திரிந்து, ஒற்றுச் செய்தி ஏதேனும் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மூலம் அவர்களது அரசர்களுக்கு, நமது வடதிசைப் படையெடுப்புதெரியட்டும் . எனவே பறை அறிவியுங்கள் என்கிறான்.
” நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம்..”
என்னும், காட்சிக்காதை வரிகளில் சொல்லப்படும் நாவலம் தீவு கடலுக்குள் இல்லை. தமிழகத்தின் வடபகுதியில் தான் இருந்தது.
(2) ஆய்ச்சியர் குரவை ஆரம்பத்திலேயே,
“நாவலந்தண் பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பாரரசாண்ட
மாலை வெண் குடிப் பாண்டியன் கோயில்”
என்று மாதரி கூறுகிறாள்.
நாவலம் தீவின் மன்னர்கள் பாண்டியனுக்கு அடி பணிந்து ஏவல் கேட்டு இருந்தனர். இந்தக் காட்சி விவரிக்கும் காலத்தில், குமரி பெள்வமாகிவிட்டது. மீது இருந்தது நாம் பாரதம் என்று சொல்லும் இப்பகுதியே.
மணிமேகலையிலிருந்து:-
(3) பதிகத்தில், இந்த நாவலம் தீவு பற்றியும், இத்தீவின் காவல் தெய்வமான (தீவத் தெய்வம்), ஜம்பு மரத்தின் கீழ் அமர்ந்து தவம் இயற்றி, அதனால் “சம்பு என்பாள் சம்பா பதியினள்” என்று பெயர் பெற்று, இத்தீவின் தென் பகுதியில் உள்ளோர் அசுரர்களால் தீங்கு அடையா வண்ணம் அவர்களைக் காக்கும் பொருட்டு தென் திசை நோக்கி அவள் அமர்ந்த ஊர் சம்பாபதி என்று பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகிறது . அவள் அங்கு அமர்ந்த வெகுகாலம் பின்னர்தான், சோழ மன்னன் அகத்தியரிடம் வேண்டி, காவேரியைக் கொணர்ந்தான்.
சம்பாபதி நோக்கி வந்த காவேரியை , அந்த சம்புத் தெய்வமானவள் , அரவணைத்து , இத்தனை நாள் தன் பெயரால் , சம்பாபதி என்றழைக்கப்பட்ட அம்மூதூர் , இனி காவிரியின் பெயராலும் , காவிரிப் பூம் பட்டினம் என வழங்கப்படும் என்கிறாள் .
“என் பெயர் படுத்த இவ்விரும் மூதூர்
நின் பெயர் படுத்தேன் நீ வாழி ”
எனக் காவேரியை வாழ்த்துகிறாள்.
நாவலம் தீவுத் தெய்வமான அவள், தெய்வங்களுக்கெல்லாம் முதன்மையான இந்திரனுக்குச் செய்து வந்த விழவே , இந்திரா விழவு என்று காலம் தொட்டு புகார் நகரத்தில் நிகழ்ந்து வந்தது .
இவ்வாறு நடந்தது எல்லாம் நாவலம் தீவின் பகுதிகளே. புகாரும், காவிரி பாயும் நிலமும், அந்த சம்பாபதி தெய்வம் காத்த நாவலம் தீவின் பகுதிகளே.
(4 ) எந்த வேத காரியத்திலும் செய்யப்படும் சங்கல்ப மந்திரம், கல்பம் தொடங்கி, காலத்தின் உட்பகுதியாக நாம் இப்பொழுது இருக்கும் காலத்தைச் சொல்லி, அதே போல் நிலக் கூறுகளில் ஜம்புத் தீவு தொடங்கி, அதன் உட்பிரிவாக நாம் இப்பொழுது இருக்கும் பகுதியைச் சொல்கிறது. “ஜம்புத் த்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே ” என்று சொல்லப்படும் இந்த தேச, கால, செயல் (Space – Time – Events ) பற்றிய குறிப்பான சங்கல்ப மந்திரத்தில், பாரத வர்ஷம் என்பது ஜம்புத் தீவு எனப்படும் நாவலம் தீவின் மிகப் பெரிய பகுதி. அதன் ஒரு பகுதி, பரதக் கண்டமாகும். நாமிருக்கும் இந்தப் பகுதி, நாவலம் தீவின் உட்பகுதி என்பது இந்த மந்திரம் காட்டும்விவரம்.
Dear Tamil Hindu team,
In Tamil Hindu site particulary the feed back about article is very fine. I do not find these type of healthy and informative feed back in other sites mostly. Normally i do not read feedback columns in all the sites because mostly junks and blabbering come as feedback.But Tamil Hindu is different and fine.
Dharmasenan
Thank you Aravindhan and Jayasree.
மிகவும் வேறுபட்ட ஒரு பார்வையில் எழுதப்பட்ட அற்புதமான விமர்சனம். அரவிந்தன் நீலகண்டனுக்கு என் பாராட்டும் நன்றியும்.
தமிழ் மரபில் நால்வகை நிலப்பகுப்பும் ஒவ்வொரு நிலத்துக்கும் தனித்தனி கடவுளர்களை வணங்கும் பண்பாட்டையும் அமைத்திருப்பதே நமது அடிப்படை. இந்துமதத்தின் ஒவ்வொரு செயல்பாடும் இயற்கை சார்ந்தது என்பதில் இந்த அற்புதம் போன்றவர்களைத் தவிர யாருக்கு ஐயம் இருக்க முடியும்?
ஓகை நடராஜன்.
இயற்கை வணக்கம் இந்துக்களுடையதில்லையா? அபாரமான அறிவு இந்த நபருக்கு.
சூரிய நமஸ்காரம் என்ற பிரசித்தி பெற்ற ஒரு ஆசனம் உண்டே அது என்ன என்று நினைக்கிறாராம்? வெறும் ஆசனமா அது?
கங்கையை வட மாநிலங்களில் வெறும் நதியாகவா நினைக்கிறார்கள்? கங்காஜி என்றுதான் அதை சாதாரணப் பேச்சிலேயே குறிக்கிறார்கள். வாழும் நபருக்கு ஒத்த, மரியாதையோடே எப்போதும் அழைக்க்த் தக்க மாதா அவள். தம் நாகரிகத்தின் ஜீவிதமே கங்கா மாதாவின் அளிப்பு என்று எந்த வட இந்திய இந்துவுக்கும் சொல்லாமலே தெரியும்.
வீட்டில் துளசியை வைத்து அதைத் தினம் வலம் வரும் எத்தனையோ லட்சம் இந்துக் குடும்பங்களைப் பற்றி ‘அற்புதம்’ ஒன்றை மட்டுமே வணங்குபவருக்கு எப்படித் தெரியும்?
பிணத்தை தெய்வமாக வணங்கும் ஒரு பார்வை, உடலைப் பிய்த்துத் தின்பதாகக் குறியீட்டுச் செயலை வணக்கத் தலத்தில் இன்னும் வைத்திருக்கும் ஒரு பார்வையில் இருந்து எழுதுபவருக்கு, இந்துக்கள் அன்றாட வாழ்வெங்கும் வாழும் ஜீவராசிகளை வணங்குவதும், மரியாதை செலுத்துவதும் எப்படிப் புரியப் போகிறது? மலர்களும், நீரும், தானியங்களும், இலைகளும், நெருப்பும்,மண்ணும், மிருகங்களும் இந்துக்களுக்கு வணக்கத்துக்கு உரியனவாக இருந்தன் என்பதால் அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று கருதிய யூரோப்பியர் இன்று பல்டி அடித்து இந்துக்கள் கருத்துகளை மட்டும் வணங்குகிறார், இயற்கையோடு தொடர்பற்றவர் என்று சொல்லத் துவங்கி இருப்பதை என்ன சொல்ல.
மரமண்டைகள் என்று கூடச் சொல்ல முடியாது. மரங்களுக்காவது அறிவும் உண்டு, நன்மை செய்யும் இயல்பும் உண்டு.
Excellent article. Hands off to author. I appreciate your view of the film.
அறுமை
இந்திய உளவியலையும், அதற்குறிய பொருளாதர ஒருங்கினைப்பையும் அதன் விளைவால் உருவான தொன்மத்தினையும் சிறப்பாய் விமர்சித்துள்ளிர்,,
தமிழ்ஹிந்து தளத்தில் வரும் சில கட்டுரைகள் மேல் எனக்கு ஆட்சேபம் உண்டு. இயற்கை சார்ந்த வழிபாட்டை ஆதரிக்கும் இந்த் ஆர்கானிக் அவதார் கட்டுரை எனக்கும் மிகவும் பிடித்துவிட்டது.
This is why we called Hindu…………ha ha ha
I remember the ‘mayil kal muniyandi’//
All the best hindu makkale……………
I really liked this article and also some of the other imporant comments by our brothers and sisters. In Australia, we teach Hindu Scripture in the Public school for 30 mins every week. VHP Australia obtaned license from the Dept of Education and I am also one of the teacher. In our curriculam one of the topic called “HINDUS AND THE ENVIRONEMENT”- We teach the children how (hindus) our ancestors worshipped and respect the environment, and we still are doing it. examaple navagraham in the temple – surya namaskarams etc. In one of the slogam Gangecha( our children liked this slogam, easy to by heart) while teaching this slogam what we explain, how we respect the rivers, worships the rivers by offering flowers to ganga mata,light the oil lamp and other rivers and doing namaskaram.
IN other words we HINDUS “dont treat the rivers as an object, we treat the rivers as our mother/as a person”-not only rivers like surya god , moon god etc-when we say environment everything included including other humans/persons – if we treat everything with respect ” THIS WAY WE PROMOTE PEACE AND HARMONY IN THE SOCIETY” even the western local teachers liked this concept and appreciating our culture and they have great respect to HIndus. IN Australia Hindus are respected and regarded very well by local aussies.-tks -akila
அன்புள்ள அகிலா ராமரத்தினம்,
தங்கள் கருத்துகளுக்கு நன்றி. ஆஸ்திரேலியா என்பதால் ஒரு கேள்வி எழுகிறது. நம்முடைய ஹிந்து ஆர்வலர்கள் பண்பாட்டு சிந்தனையாளர்கள் அங்குள்ள பூர்விக மக்களுடன் அவர்களது கலாச்சார சமுதாய இயக்கங்களுடன் எத்தகைய உறவுகளை ஏற்படுத்தியுள்ளனர்? அங்குள்ள ஆஸ்திரேலிய பூர்விக மக்களின் புனித தலங்களுக்கு நம் தமிழ் ஹிந்து மாணவமாணவிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்களா? பாரதத்தின் ஹிந்து ஞான மரபின் முக்கிய ஒரு விஷயம் அது ஏனைய புவிசார்ந்த ஆன்மிக மரபுகளுடன் இணைந்து பரஸ்பர அரணாகவும் ஒன்றையொன்று சான்று பகரும் அமைவுகளாகவும் பரிணமிக்க முடியும் என்பதே. ஆபிரகாமிய மேற்கத்திய பண்பாட்டு அழிவுகளுக்கும் சமுதாய சுரண்டல்களுக்கும் ஆளாகியுள்ள ஏனைய இயற்கை ஆன்மிக பண்பாடுகளுடன் ஹிந்து சமுதாயம் குறிப்பாக இளைய சமுதாயம் உறவுகளை networking களை ஏற்படுத்த வேண்டும். அதனை செய்யும் இடத்தில் தாங்கள் இருக்கிறீர்கள். தங்கள் பணி சிறக்க வணக்கங்களும் வாழ்த்துக்களும். (குறிப்பாக ஆஸ்திரேலிய பூர்விகவாசிகளுடன் நம் தென் தமிழக ஹிந்து பண்பாட்டின் உள்ளார்ந்த உறவின் தொன்மையையும் அதனை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தையும் மிகவும் வலியுறுத்தியவர் காஞ்சி பரமாச்சாரியார் ஆவார். அது குறித்த கள-ஆய்வினை நடனக்கலைஞரும் ஆராய்வாளருமான முனைவர். பத்மா சுப்பிரமணியம் மேற்கொண்டார். ஆனால் அதனை பின்னர் ஹிந்து இயக்கங்கள் முன்னெடுத்து சென்றனவா என்பது தெரியவில்லை. பீம்பெதகா குகை ஓவியங்களை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர் வகேங்கர் அமெரிக்க பூர்விகக் குடிகளின் சடங்குகளில் பங்கு பெற்று அதற்கும் வைதீக வேள்விகளுக்குமான சில ஒற்றுமைகளை கூறியுள்ளார். பொதுவாக வெளியாட்களை அனுமதிக்காத சில சடங்குகளுக்கு அந்த அமெரிக்க பூர்விகக் குடிகள் வகேங்கரை அனுமதித்தார்களாம்.)
அரவிந்தன் நீலகண்டன்
அன்புள்ள அய்யா
இங்கு ஜேம்ஸ் கேமரூன் ஒரு கிறித்துவ சிந்தனை உடையவர் என்று வஜ்ரா சொல்கிறார். மனித நேயம் மிக்க கருத்தை யார் சொன்னாலும் ஏற்று கொள்வதே நல்ல மனிதனின் பண்பு. அவர் ஒரு இந்து வெறியர் என இங்கு காண முடிகிறது. மதம் இறைவனை சென்றடைய உதவும் ஒரு கருவி மட்டும் தான். அதுவே எல்லாம் இல்லை என்பதை தெளிவாக புரிதல் அவசியம்.
//இயற்கையோடு தொடர்பற்றவர் என்று சொல்லத் துவங்கி இருப்பதை என்ன சொல்ல. மரமண்டைகள் என்று கூடச் சொல்ல முடியாது.//
வள்ளுவர் மொழியில் “மாக்கள்” என சொல்லுங்க! 🙂
அற்ப்புதம் ஒரு muttaal அவருக்கு அத்வைதம் entraal enna entru theriyaathu
Well said..
நாவலந்தீவு பற்றிய குறிப்பு மிகக் சிறப்பு.
இதனை ஹிந்துக்கள் (குறிப்பாக தமிழர்கள்) உணர்ந்து கொள்ள வேண்டும்.
போலி தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
And then வந்தேறிகளின் கதறல் இனிதே தொடரட்டும்.
நன்றி️