விஜயகாந்த் சொன்னது சரிதானா?

dmk1967 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சி.என். அண்ணாதுரை முதலைச்சரானார். சில மாதங்களுக்குப் பிறகு மாதச் சம்பளமாக ரூ. 500.00 ஐப் பெற்றுக்கொண்டார். ஆனால் அதை அவருடைய வங்கிக் கணக்கில் சேர்க்க முடியவில்லை.

அண்ணாதுரைக்கு வங்கிக் கணக்கே இல்லை என்பது அப்போதுதான் தெரியவந்தது. உடனடியாக வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு அந்தக் காசோலை வரவு வைக்கப்பட்டது.

நாற்பது ஆண்டுகாலமாக தமிழக அரசியலைப் பார்த்து வருபவர்களுக்கு இது ஒரு அதிசயமாகத்தான் தெரியும். அதிசயம் ஆனால் இது உண்மை.

திராவிட இயக்கங்களைப் பற்றித் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் என் பார்வையில் கூட அண்ணாதுரை முதலமைச்சர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகப் புகார் இல்லை.

முதலமைச்சர் அண்ணாதுரைக்கு அரசியல் நெறிகளில் பிடிப்பு இருந்தது; பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தது,, வெகுஜனங்களின் நலவாழ்வில் அக்கறை இருந்தது என்பதும் உண்மைதான்.

இத்தனை குணங்களையும் அடக்கி வைத்துக் கொண்டு அண்ணாதுரை ஈவெராவிடம் அடங்கி இருந்தாரே அது ஏன்? என்பது சுவாரசியமான கேள்வி.

மாறுபட்ட குணங்களைக் கொண்ட இருவர் எப்படி இணைந்திருந்தார்கள் என்பதையும் கருப்புச் சட்டையில் தொடங்கி, சுதந்திர தினத்தில் வளர்ந்து ஈவெராவின் திருமணம் என்ற மூன்றாவது காட்சியோடு உறவு முடிந்துவிட்டதையும் கற்பனை கலப்பில்லாமல் சொல்லி இருக்கிறார் மலர்மன்னன்.

கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கடவுள் சிலை உடைப்பு, மதநூல்கள் எரிப்பு என்று நீண்ட கால ஆர்ப்பாட்டம் செய்தவர் ஈவெரா. வெளிநாட்டுக்காரனுக்கு அடிமையாக இருப்பதை பெருமை என்ற ரீதியில் பேசியவர் அவர். கட்சிக்காரனை அடிமையாக வைத்திருப்பது இன்னொரு பெருமை.

ஆனால் இந்தத் தமிழ்நாட்டில் ஈவெராவுக்கு ஒரு ஒளிவட்டம் தரப்பட்டிருக்கிறது அவரது புனித பிம்பம் அரசாலும், அரசியல் கட்சிகளாலும், கல்வி நிலயங்களாலும், மீடியாக்களாலும், தேசவிரோதிகளாலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

இந்த பிம்பத்திற்குத் திரிவைத்து அதைப் பற்ற வைத்திருக்கிறார் மலர்மன்னன்.

காணக்கிடைக்காத காட்சி இது; நேர்மையான முயற்சி இது. காலச்சுவடு, ஜனவரி 2009 இதழில் அண்ணாதுரை குறித்து அவர் எழுதிய கட்டுரையின் விரிவான வடிவமே இந்தப் புத்தகம்.

periyaar_aa1
பெட்டிச் சாவியை அண்ணாதுரையிடம் தருகிறேன் என்று மாநாட்டு மேடையில் முழக்கமிட்ட ஈவெரா பிறகு ஒரு காலகட்டத்தில் ‘என்னிடம் வேலைக்கு வந்தபோது இவர் எம்.ஏ படித்ததாகக் கூறித்தான் சேர்ந்தார். ஆனால் இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது. இவரது எம்.ஏ. சர்ட்டிஃபிகேட்டைப் பார்க்கவேண்டும்’ என்று வெறுப்பை அள்ளிக்கொட்டினாரே, அது ஏன்?

‘ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு இருக்க வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை’ என்று பழத்தில் ஊசியை பக்குவமாக ஏற்றினாரே அண்ணாதுரை அது எதற்காக?

‘வெள்ளை சட்டை அணியும் குள்ள நரி’ என்று அண்ணாதுரையை ஈவெரா கண்டித்தாரே, அதற்குப் பின்னனி என்ன?

‘ஆகஸ்டு 15ந் தேதி, திராவிடருக்கும் திருநாள்தான், துக்கநாள் இல்லை’ என்று அண்ணாதுரை அறிவித்தாரே அதன் விளைவு என்ன?

என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரே வழி புத்தகத்தை வாங்கிப் படிப்பதுதான்.

இருந்தாலும் தமிழ் ஹிந்து வாசகர்களுக்காக ஒரு தகவலை மட்டும் கொடுக்கிறேன்.

‘திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது மு. கருணாநிதிக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு கூறினார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்த் மீது திமுக தரப்பில் அர்ச்சனை நடத்தப்பட்டது.

விஜயகாந்த் சொன்னது சரிதானா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு மலர்மன்னனின் புத்தகம் உதவக்கூடும்.

திமுக உருவானது ஏன்?
மலர்மன்னன்
கிழக்கு பதிப்பகம், சென்னை.

ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

20 Replies to “விஜயகாந்த் சொன்னது சரிதானா?”

  1. அஹா நன்றாகத்தான் கொளுத்திப் போட்டிருக்கிறார். ஆனா மூதறிஞர் சொன்னார், தி. க, தி.மு.க ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று.

    கும்மாச்சி

  2. ஐய….தோடா! கும்மாச்சி அண்ணாத்தே! இன்னாது இது புச்சா ஒரு புருடா வுட்ரீங்க?

    எம்ஜாரு அ.தி.மு.க இஷ்டார்ட் பண்ண ஸொல்ல… ரெண்டு கயகத்துக்கும் பெர்ஸா ஒன்னியும் டிபரன்ஸ் இல்ல. அத்தொட்டு நம்ம பெருந்தலைவரு தான் “தி.மு.க… அ.தி.மு.க… ரெண்டும் ஒரே குட்டைல ஊற்ற மட்ட” அப்டீன்னு ஸொன்னாரு, அஆங்… இன்னா தெர்தா?

    படிக்காத மேத ஸொன்னத மூதறிஞரு ஸொன்னதா ஸொல்றீங்களே… நாயமா நைனா? பாத்து உஜாரா இருங்க… ஆமா ஸொல்டேன்.

    இன்னா வர்டா,

    மன்னாரு

  3. //‘திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது மு. கருணாநிதிக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை”//

    உண்மைதான். அடிமை மாடுகள் அரசாங்க ஊழியர்களை தவிர எல்லோரும் ஒப்பு கொள்வார்கள்.

  4. //‘திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது மு. கருணாநிதிக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை”//

    யார் முதலில் வராங்கங்க்றதா முக்கியம்.

    இன்னிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அத்தனை பங்குகளும் தலைவிருடயதே – யாரவது பங்கு கேட்டால் தாறு மாறாக பேசி விடுவார்

  5. As far as I am concerned the different parties in Thamizhnadu are all self-serving. To get to power they go after the ignorant masses promising them “free that free this” slogans. Where do they get the revenue to offer “free” stuff? Don’t you have to earn the money through hard work? Don’t give any “free” stuff. Make them earn it by giving them work incentives.

    As for who is right, it is not a question that can be answered in politics. The one who holds the power is always right. Sorry state of affairs indeed!

  6. மலர்மன்னனின் அண்ணா பிரபாவம் தாங்கமுடியவில்லை. தமிழ் ஹிந்து இத்தகைய புத்தகங்களுக்கு ஆதரவு தரக்கூடாது. அண்ணா புகழை அறிய விரும்புகிறவர்கள் முரசொலியைப் படித்துக்கொள்ளலாம்.

  7. அண்ணாதுரையின் பொதுத்தொண்டு என்றால் ‘யாருக்கும் தெரியாமல் மூக்குப்பொடி போடுவதென்பதை’ சொல்லிக்கொடுத்தது தான். இதற்கும் மேல் அவர் காஞ்சிபுர கோவில் திருவிழாக்களுக்கு இயற்கையாகவே வந்த பக்திக் கூட்டத்தை பார்த்து பொறாமைப் பட்டு, இந்து மதத்திற்கு எதிர்ரகப் புனைந்தவைகள்தான், அண்ணாத்துரை வைத்த சமுதாய எதிர் குண்டு;

    (edited and published)

  8. Many of the differences mentioned here between EVR & anna are given in the website on annadurai, arignaranna.com.

    But I do not agree that anna was a holy cow. His drama & short stories were very vulgar in their criticism of brahmins *(maybe not as crude as EVR but nevertheless very vulgar).

    His book “kamba rasam” was ordered by anna himself to be taken off the book shops after he came to power.

    So, annadurai was not all that a holy cow as made out to be.

  9. மூதறிஞர் சொல்லவில்லை .காமராஜர் தான் சொன்னார்’ திமுக ,அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று’.

  10. மலர்மன்னன் நல்லத்தான் எழுதறாரு. ஆனா கமலஹாசனுக்கு ஆதரவாக `மன்மதன் அம்பு` விஷயத்தில் எழுதியதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  11. //மலர்மன்னன் நல்லாத்தான் எழுதறாரு. ஆனா கமலஹாசனுக்கு ஆதரவாக `மன்மதன் அம்பு` விஷயத்தில் எழுதியதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.-vetrivel //

    பொழுதுபோக்குத் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் இல்லை. முதலில் மன்மதன் அம்பு விஷயம் என்றால் என்ன என்று கேட்டு விவரம் அறிந்தேன். அதில் ஏதோ ஒரு பாடலில் வந்த கருத்து பற்றிய மறுமொழி
    களை ஒட்டியே எனது கருத்தும் வந்திருக்கலாம். அதில் கமலஹாசனுக்கு ஆதரவாக என்னால் எப்படி எழுத முடியும்?

    கமலஹாசனுக்கு நாத்திகமும் தெரியாது ஆத்திகமும் தெரியாது என்று எழுதியதாகத்தான் நினைவு. தீய குண கதாபாத்திரங்களை ஹிந்து சமயச் சின்னங்கள் அணிந்தவர்களாகவும் நல்ல குணம் உள்ள கதாபாத்திரங்களை வந்தேறிய அந்நிய சமயத்தவர்களகவும் காண்பிப்பதுதான் கமல ஹாசனுக்குத் தெரிந்த நாத்திகம் என்றும் எழுதியதாக நினைவு.
    மற்றபடி கமலஹாசனைப் பாராட்டி நான் எதுவும் எழுதியதாக நினைவில்லை. அவருடைய நடிப்புங்கூட மிகையானது என்பதே என் கருத்து. அவர் முன்னுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் என்னை அறிந்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னரும் என்னை அடையாளம் கண்டுகொண்டார் அவ்வளவுதான். மற்றபடி அவரது அரைவேக்காட்டு அறிவைக் கண்டனம் செய்துதான் எப்போதுமே எழுதி வந்திருக்கிறேன்.
    எலிசபெத் ராணியை அழைத்து விழா நடத்திய அவரது காலனிய அடிமைப் புத்தியைக் கண்டித்து ஒரு கட்டுரையும் எப்போதோ எழுதிய நினைவு உள்ளது.
    -மலர்மன்னன்

  12. கமலஹாசனின் கடைக்கண் பார்வை தன்மீது பட்டதாக மலர்மன்னன் எழுதியிருந்தார்.அதுதான் உதைகிறது.

  13. //கமலஹாசனின் கடைக்கண் பார்வை தன்மீது பட்டதாக மலர்மன்னன் எழுதியிருந்தார்.அதுதான் உதைகிறது.-thamilan//

    நேர்பார்வைதான்! நான் கடுமையாக விமர்சிப்ப்வனாக இருந்தும் என்னை நோக்கியே அவ்ர் பேசியதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். அதுவும் உடன் இருந்தவர்கள் அதை எடுத்துக் கூறி எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமாறு நான் அவரைக் கேட்க வேண்டும் என வற்புறுத்தியதால் அதை ஒரு விஷயமாகக் குறிப்பிட்டேன், அவ்வளவுதான். அச்சமயம் நான் ஒரு சர்வ தேச எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் அறக் கட்டளை அமைப்பின் ஊடக ஆலோசகனாக இருந்தேன். பலரை நன்கொடை அளிக்கச் செய்தேன்.
    அடிப்படையில் நான் ஒரு பத்திரிகைக்காரனாக இருந்தமையால் எல்லா முகாம்களிலும் உள்ளவர்கள் என்னிடம் மரியாதையுடனும் நட்புறவுடனும் இன்றளவும் பழகிவருகின்றனர். மற்றபடி எனக்கென்று எவ்விதத் தனிச் சிறப்பும் இல்லை. மற்றவர்களின் கடைக்கண் அல்லது நேர்பார்வையால் எனக்கு தனிப்ப்ட்டமுறையில் பெருமையும் இல்லை.
    -மலர்மன்னன்

  14. கமலஹாசன் புராணம் முடிவதற்குள் திண்ணையில் கனிமொழி புராணம். தான்கமுடியளையப்பா.

  15. திமுக வின் தோற்றம் ஒருபுறம் இருக்கட்டும் . ஆளில்லாத விஜயகாந்த் கட்சியை ஊராட்சி தேர்தலில் ஓரம் கட்டிவிட்டார்களே? இது பற்றி ஏதாவது சொல்லமுடியுமா?

  16. ada ada.. what an article ? that too related with Hinduism… Shame on you TamilHIndu.
    I though this site for Hinduism. But, nowadays ADMK people are writing articles. Are you ready to announce that this is political site and not for hinduism???

  17. @ sarav

    what’s the wrong with you?you mean that if a person who devoted him to a religion,he should keep away from political,art,science,medical,general knowledge….???that’s the main rule for ஆபிரகாமியம்…not for Hindu devotees,

    We are likely to keep our mind updated,that’s the reason for us to question the non-Hindus with evidence from the bible, Qu-ran and history.If you want to be a ஆபிரகாமியன், please don’t read news paper,please be refrain from watching news,please don’t try to observe what is happening in the world,even don’t browse in the internet.Just limit your mind & world to a single book.It may contain ,salvation,judgement,death is the price for the fault,crusade,devil,….ETC.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *