சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்

பல நேரங்களில் உண்டாகும் அனுபவம் இது; இந்து மதத்திற்கெதிரான சதிகளைச் செய்யும் பிற மதத்தினர் பற்றியும் அரசாங்க நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களின் மோசடிகள் பற்றியும் நம்மவர்களிடம் விவாதிக்க நேர்ந்தால் அங்கே முதலில் அடிக்கப்படுவது சமத்துவ ஜல்லி. வெளிப்படையாக பிற மதத்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று பேசுவதையே மதவாதமாகப் பார்க்கும் போக்கு நம் மக்களிடம் இன்னும் தொடர்கிறது. வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். சத்தமாகப் பேசப் பயப்படுகிறார்கள்.

இந்துக் கலாசாரத்தை அழிக்க நம் கண்முன்னேயே எத்தனை நிகழ்வுகளை வெளிப்படையாகக் காண்கிறோம்; அனுபவிக்கிறோம். அப்படியிருந்தும் அதைப் பற்றி வெளிப்படையாக விவாதித்தாலே விவாதிப்பவரை மதவாதி என்று முத்திரை குத்த இந்துக்களே தயாராகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. ‘நீ உன் வழியைக் கவனி; பிற மதத்தவரைப் பற்றி யோசிக்காதே,’ என்றும் அறிவுரை வழங்கப்படுகிறது. அதற்கு சமத்துவம் என்றும் பெயர் வைக்கப்படுகிறது. இந்துக்களின் அமைதியான வாழ்க்கை முறையின் அஸ்திவாரங்களை அசைக்கும் முயற்சி நடக்கும்போது நமது வழியைப் பார்த்துச் செல்வோம் என்று விவாதிக்காமலும் உணர்வுகளை வெளிப்படுத்தாமலும் இருக்க இயலுமா என்பதே இந்தக் கட்டுரையின் கேள்வி.

குரங்கிற்கு இருக்கும் சாதுர்யம் கூட இல்லாமல், சமத்துவப் பேச்சு மட்டும் அமைதிக்கு உதவுமா? எது அந்தக் குரங்கு? சொல்கிறேன்…

monkey-and-the-crocodileஓர் ஏரிக்கரையில் இருந்த நாவல் மரத்தில் ஒரு குரங்கு இருந்தது. அங்கே வந்த ஒரு முதலை, “நண்பனே எனக்கு நாவல் பழத்தைப் பறித்து தருவாயா?” என்றது. குரங்கும் முதலையை நண்பனாக நினைத்து, பழத்தைப் பறித்து போட்டது. முதலை தானும் தின்று ஏரியில் நீந்திச் சென்று தனது மனைவிக்கும் கொடுத்தது. ருசியான நாவல் பழத்தைத் தின்ற பெண்முதலை, தனது கணவனிடம், “இந்த நாவல் பழமே இப்படி இனிக்கிறதே, தினந்தோறும் அதைத் தின்னும் குரங்கின் ஈரல் எப்படிச் சுவைக்கும்! எனவே அந்தக் குரங்கை இங்கே கொண்டு வாருங்கள். நாம் அதைக் கொன்று அதன் ஈரலை ருசிப்போம்,” என்றது.

ஆண் முதலையும் ருசிக்கு ஆசைப்பட்டு குரங்கிடம் சென்று வஞ்சகமாகப் பேசியது. “நீ பழங்கள் கொடுத்ததால் மகிழ்ந்த என் மனைவி உனக்கு உணவு விருந்து வைத்திருக்கிறாள். என்னுடன் என் வீட்டிற்கு வந்து என்னைக் கௌரவிக்கவேண்டும்,” என்றது. ஏமாந்த குரங்கும் முதலையின் முதுகில் ஏறிச் செல்லத் துவங்கியது. குரங்கு தப்பிக்க முடியாத அளவு தண்ணீரில் பாதிவழி சென்றபின் முதலை குரங்கிடம் மிரட்டலாகச் சொன்னது, “ஏமாந்த குரங்கே! உன் ஈரலை நாங்கள் தின்னப் போகிறோம். இன்றைய எங்கள் விருந்து நீ தான்!” என்றது.

இதைக் கேட்ட குரங்கு பதறாமல் சொன்னது, “நண்பனே! இதுதான் உன் எண்ணமென்று முன்னாலேயே சொல்லக்கூடாதா? இது தெரியாமல் நான் ஈரலைக் கழற்றி மரத்தில் காயப்போட்டிருந்தேன். நீ அழைத்ததால் அப்படியே வந்துவிட்டேன். கரைக்குச் சென்று அதை எடுத்து வருவோம் வா,” என்றது. இதை நம்பிய முதலை கரைக்கு வர, குரங்கு சட்டென்று குதித்து மர உச்சியில் ஏறிக் கொண்டது. “நண்பனாக இருந்து என் உயிருக்கே உலை வைத்தாயே! ஆராயாமல் நட்பு கொண்டவனின் நிலை என்னவென்று இப்போதுதான் புரிந்து கொண்டேன், என் உயிரையும் காத்துக் கொண்டேன்,” என்றது குரங்கு.

எது நட்பு, எது கூடா நட்பு என்பதை பின்னர் ஆராய்வோம். ஆனால் நண்பன் என்று நினைத்தவன் துரோகம் செய்கிறான் என்று தெரிந்தவுடன் விழித்துக் கொண்டு சமயோசிதமாக தப்பித்த அந்தக் குரங்கின் விழிப்புணர்ச்சி தான் நமக்கு இப்போது தேவை என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம்.

இந்துக்களின் வாழ்க்கை மிக விஸ்தாரமான தத்துவங்களில் துவங்கி மிக நுணுக்கமான வாழ்க்கை தர்மங்கள் வரையிலான சூட்சுமமான உணர்ச்சி வளையங்களைக் கொண்டது. இதை மூன்று பாகங்களாகப் பிரிக்க முடியும்.

 • ஆத்மா பரமாத்மா என்ற சிந்தனையை வளர்க்கும் அமைதியான ஆன்மிக வாழ்க்கை
 • சமூக மற்றும் கலாசார வாழ்க்கை
 • குடும்பம் மற்றும் தனிமத தர்மங்கள் அடங்கிய வாழ்க்கை.

இந்துக்களின் வாழ்க்கை இப்படியான பல கட்டங்களைக் கொண்ட வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து காணப்படும் ஓர் அமைப்பே ஆகும். ஒன்றுக்குள் ஒன்று அடக்கம். இந்துக்களின் வாழ்வில் இவற்றில் எந்தப் பாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது ஒரு சமூகத்தையே முழுமையாக பாதிக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அமைப்பு முறை ஒருவரை ஒருவர் சார்ந்தும் நெருக்கமாகவும் அமையப் பெற்றதாகும்.

இவற்றை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

 

முதலில், ஆன்மிகம்.

இந்த உலகில் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கிறது. ஆடு,மாடு, செடி, கொடிகள் முதல் சின்னச் சின்ன ஜீவராசிகள் வரை எல்லோரும் பிறக்கிறோம் இறக்கிறோம். ஆனால் இவை ஏன் நடக்கின்றன?. எங்கிருந்து வருகிறோம்? எங்கே போகிறோம்?. இந்த கேள்விகளை ஆழ்ந்து ஆராய்வதும் ஆத்மா, பரமாத்மா என்ற உண்மைகளை ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் விளக்கங்களின் அடிப்படையில் தவம் செய்து உணர்வதும், உயர்ந்த ஆன்மிக வாழ்க்கையாக இந்துக்களால் வாழப்படுகிறது. அதன் வழியே வாழ்ந்து உண்மைகளைக் கண்டுணர்ந்து நமக்கு பல ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும் பல காலகட்டங்களில் எடுத்துரைத்து வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். அந்த வழிகாட்டுதலின்படி வாழ்க்கையை நடத்திச் செல்வதே, அந்த வழிகாட்டுதலின்படி வாழ்வதே ஒவ்வொரு இந்துவின் வாழ்க்கையின் ஆழ்மன நோக்கமாக இருக்கிறது.

நிரந்தரமற்ற வாழ்வில் பற்றுதல் கொள்ளாமல் ஆன்மாவின் மேன்மையை உணர்ந்து அதை உணரும் பொருட்டு அதன் வழி செல்வதே நமது பாதை என்றும் அதுவே மேலான வாழ்க்கை என்றும் உபநிஷத்துக்கள் போதிக்கின்றன. இப்படிப்பட்ட உயர்ந்த மேலான வாழ்க்கை வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனும் அடிப்படையில் மனதில் அமைதியும் பக்குவமும் கொள்ளவேண்டும். அந்தப் பக்குவம் தான் அவனது ஆன்மாவின் தேடுதலுக்கும் உயர்ந்த ஆன்மிக வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். அத்தகைய பக்குவம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திலிருந்து தான் கிடைக்கும். அமைதியான சமூகமே பக்குவமுள்ள மனிதர்களை வழங்கத் தகுதியுள்ளது. எனவே சமூகம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அதற்கான தர்மங்களை உள்ளடக்கிய சமூகக் கலாசாரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

இனி, சமூகம்

குடும்பம் என்பது மிகச் சிறிய சமூகம். சமூகம் என்பது மிகப் பெரிய குடும்பம்.

ஒரு குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறைகளையும் கொண்டிருத்தல் வேண்டும். இது ஒரு குழு உணர்வு. அப்படி ஒரு குழு உணர்வு அடிப்படையில், பலதரப்பட்ட மக்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தார்கள். திருமணங்கள், பண்டிகைகள் கொண்டாடுவது, ஆட்சியாளரின் தர்மங்கள், மக்களின் வாழும் தர்மங்கள் என்று பல வகை தர்மங்கள் நம்மை வழிநடத்துகின்றன. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கைவிடாது, ஒருவருக்கொருவர் துரோகம் புரியாமல் வாழ்வதும் கலாசாரமாகக் கடைபிடிக்கப் படுகிறது. அதிலும் ராமாயணத்தையும் ராமரையும் சீதையையும் உதாரணமாக்கி, ஆன்மிகச் சிந்தனையில் வாழ்க்கையைப் பிணைத்து ஆன்மிகத்தையும் சமூகத்தையும் பின்னிப் பிணைந்து வாழ்வது இந்துக்களின் கலாசாரமாகிறது.

நிறம், மொழி, வாழிடம் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருமே கலாசாரம் என்ற ஒரு குடையின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தார்கள். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் காசிக்கும் வட இந்தியர்கள் ராமேஸ்வரத்திற்கும் வந்துசெல்வதும் ஒரே கலாசாரத்துடன் வாழ்வதாலேயே சாத்தியமாகிறது. மக்கள் இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஒரே மாதிரி நட்புணர்வையும் அன்பையும் பெற முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு குழு உணர்வுடன் பெரும்பான்மை மக்கள் வாழும்போது, அந்தச் சமூகத்திற்கு அமைதியான சூழ்நிலை கிடைக்கிறது. அப்படி ஓர் அமைதியான சமூகத்தில் வாழும்போது தான் ஒருவன் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்ட முடியும்.
 

இனி. குடும்பம் மற்றும் தனிநபர்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிறைந்த தர்மங்கள் இருக்கின்றன. பிள்ளைகளைப் பேணிகாத்தல் பெற்றோரின் கடமை.

பெற்றோருக்கு மரியாதை செய்து அவர்களது வயோதிகத்தில் அவர்களைப் பாதுகாத்து பணிவிடை செய்தல் பிள்ளைகளின் கடமை. மனைவி, குழந்தைகளைக் காத்தல் கணவனின் கடமை.

கணவனுக்கும் குடும்பத்திற்கும் உண்மையாக நடந்துகொள்வது மனைவியின் கடமை.

குடும்பம் என்ற அமைப்புக்குள் வாழாமல் குடும்பங்களைச் சார்ந்து வாழும் துறவிகள் மற்றும் பிரம்மச்சாரிகளுக்கு உணவளித்து உதவுதல் குடும்பஸ்தர்களின் கடமை.

எல்லா ஜீவராசிக்கும் வாழ இடமளித்து இயற்கையோடு ஒன்றி வாழுதல் சக மனிதர்கள் யாவருக்கும் கடமை.

ஒவ்வொரு தனிமனிதர்களும் பாவகாரியங்கள் என்று அழைக்கப்படுபவைகளைச் செய்யாதிருத்தலும், புண்ணிய காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் விதிக்கப்பட்டு, தனிமனித ஒழுக்கங்கள் தர்மங்களாகவே கடைபிடிக்கப்பட்டும் வந்தன.

இதுமட்டுமல்லாமல் இறை நம்பிக்கையையும் அறிவியலையும் ஒன்றாக இணைத்து, அதை வாழ்க்கை முறையாகவே அமைத்துக் கொண்டது இந்துக்களின் வாழ்க்கை.

neem-leaves-hung-outside-for-indication-of-chickenpoxஉதாரணமாக மாரியம்மன் திருவிழா என்றால் வேப்பிலை முக்கியத்துவம் பெறும். வேப்பிலையை பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம். வேப்பிலையில் மருத்துவ குணம் உள்ளது என்பதை வெள்ளைக்காரன் சமீபத்தில் தெரிந்துகொண்டு, அதைத் தாமே கண்டு பிடித்ததாகவும் காப்புரிமை கேட்டது வேறு விஷயம். அம்மை நோய் வந்தவர்களை வேப்பிலையாலே சுற்றி வைப்பார்கள். வேப்பிலை அரைத்து மருந்தாகக் குடிக்கக் கொடுப்பார்கள். இவை அம்மனுக்கும் மருத்துவத்திற்கும் கலாசாரம் என்ற பெயரால் நாம் வைத்துக் கொண்ட சம்பந்தம். இதை மூடத்தனம் என்றோ காட்டுமிராண்டித்தனம் என்றோ புறந்தள்ளினால் கெடுதல் நமக்குத்தான்.

இப்படி இந்துக்களின் வாழ்க்கை முறை பல்வேறு கட்டமைப்புகளாக மேக்ரோ முதல் மைக்ரோ வரை மிக நுணுக்கமான முறையில் அமைக்கப்பட்டது. ஆன்மிகம் என்னும் உயர்ந்த விஷயத்தை ஒரு சராசரி மனிதன் அடைய வேண்டுமென்றால், இப்படி பல கட்டங்களைக் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்துதான் அடைய முடியும்.

ஆனால் இந்துக்களின் இந்தச் சமூகக் கட்டமைப்பை சிதைக்கத்தான் இப்போது பெரிய போராட்டமே நடந்து வருகிறது. அப்படி நடந்தால் ஆன்மிக நாட்டத்தை விட சமூகப் போராட்டத்திலேயே மக்கள் கவனம் சிதறும். அப்போது மனிதர்களிடம் அன்பு குறைந்து வன்முறைகளும் போராட்டங்களுமே மேலோங்கி இருக்கும். இப்படி ஒரு சூழலை சமூகத்தில் உருவாக்கத்தான் இந்துக் கலாசாரத்தைச் சிதைக்க விரும்புபவர்கள் முயற்சிக்கிறார்கள்.

 

அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்?

* இந்துக்களின் இந்த வாழ்க்கைக் கட்டமைப்பைக் கலைக்க நினைப்பவர்கள் செய்யும் முதல் வேலை, இளைஞர்களைக் கொண்டு அவர்கள் கலாசாரத்தை அவர்களை வைத்தே கேலியாகப் பேசவைப்பது.

* திருமணம் எனது சொந்த உரிமை, என் தாய் தந்தையருக்கு அதில் தலையிட உரிமை இல்லை என்று சொல்ல வைத்து பெற்றோர்கள் என்ற குடும்பக் கூரையை கிழித்தெறியச் செய்வது. இதற்கு காதல் காட்சிகள் கொண்ட சினிமாக்கள் பெரிதும் உதவுகின்றன.

* குடிப் பழக்கம் கூடாத பழக்கம் என்று குடும்பங்களில் பெற்றோர்கள் போதனை செய்தாலும், பப் கலாசாரத்தை வளர்த்து ஆணும் பெண்ணுமாக குடுத்துக் கூத்தடிப்பதை நாகரிகமாக இளைஞர்களைக் கருத வைப்பது. அதை எதிர்க்கும் பெற்றோர்களை ஹிட்லரைப் போலச் சித்தரித்து சினிமாவிலும் சீரியல்களிலும் காட்டி, குடும்பங்களை நிலைகுலையச் செய்வது.

* நாகரிகம் என்ற பெயரால் டிஸ்கோத்தே நடன நிகழ்ச்சிகள் போன்றவைகளை ஊக்கப்படுத்தி ஆண், பெண் கலாசாரத்தில் குண்டைத் தூக்கிப் போடுவது. இதிலும் அசிங்கம் என்னவென்றால் நடன நிகழ்ச்சி என்ற பெயரில் எல்லாத் தொலைக்காட்சிகளும் ஒரு குத்தாட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்புவது. இவன் பெண்டாட்டி அவன் கூட ஆடுவதும் அவள் கணவன் இவளுடன் ஆடுவதும் இருவரது கணவன்/மனைவியும் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அதைக் கைதட்டி, சூப்பர் ஃபெர்பாமன்ஸ் என்று விசிலடிப்பதும், அந்த மாற்று இருவருக்கிடையே கெமிஸ்ட்ரி(?!) எவ்வளவுதூரம் பிரமாதமாக இருக்கிறது என்பதை குட்டைப் பாவாடை நீதிபதிகள் சோதித்து, தீர்ப்பளித்து லட்சக்கணக்கில் பரிசளிப்பதும்…. கலாசாரம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்விக்குறியை உண்டாக்குகிறது. அதிலும் அளவு கடந்த ஆபாசத்தை வீட்டுக்குள்ளேயே அள்ளித் தெளிக்கிறார்கள்.

* ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று சொல்லி, இரு பால் உறவுகளில் குழப்பத்தை விளைவிப்பது.

* திருமணம் என்ற கலாசாரத்தையே கேலிப்பொருளாக விவாதிப்பது, கமலஹாசன் போன்றவர்கள் நாகரிகம் என்ற பெயரில் திருமணங்களை முட்டாள்தனம் என்று சொல்லி இந்தச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைக் கெடுக்க ஆலாய்ப் பறப்பது.

* ஓரினச் சேர்க்கைக்கெல்லாம் சட்டம் இயற்றி அது சரியானதே என்று கருத்துருவாக்கம் செய்து ஒரு சமூகச் சலசலப்பைக் கொண்டுவருவது. சமூக அறிவியலாளர்கள்,  பெரியோர்களை விட்டுவிட்டு, குஷ்பூ போன்ற நடிகைகளைக் கொண்டு, ‘நான் அந்தச் சட்டத்தை ஆதரிக்கிறேன்,’ என்று வழிமொழியும் பேட்டி கொடுக்கவைப்பதும் சமூகக் கட்டமைப்பைக் குலைக்கும் நிகழ்வுகளே.

kanimozhi-in-christmas-celebrations

kanimozhi-in-iftar-party

 

 

 

 

 

 

* பிற மாநிலங்களில்கூட இல்லாத அளவுக்கு, (இந்து) ஆன்மிகம் என்பதே மூட நம்பிக்கை என்று பரப்புவதும், (இந்து) நாத்திகவாதம் தான் தமிழ்க் கலாசாரம் அதாவது தமிழன் என்றால் (இந்து) நாத்திகம் பேச வேண்டும் என்பதும் பரப்பப்படுகிறது. அதாவது இந்து மதம் தவிர்த்து, பிற மதங்களின் நம்பிக்கைகளுக்கு ஆட்சேபணை இல்லை என்பதோடு தானே தலைமை தாங்குவதன்மூலம் சமத்துவ(ஜல்லித்தன)மும் பேணப்படுகிறது. 

* ஓட்டு அரசியலுக்காக பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் விதமாக அரசே நடந்துகொள்வது.

* மதம் மாற்றிகளுக்கு அரசு இயந்திரங்களே துணை போவது. உதாரணமாக ஒரு கிராமத்தில் தேவாலயக்காரர்கள் குடிநீர்க் குழாயை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அரசைக் கோரி அதை அவர்கள் தேவாலயத்தின் வாயிலிலேயே அரசு செலவிலேயே அமைத்துத் தரச் சொல்லுவது. மக்களுக்காக நாங்கள் போராடி வாங்கினோம் என்றும் சொல்லிக் கொள்ளலாம், மதம் பரப்பும் தொழிலும் செய்து கொள்ளலாம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்……

ஒரு மனிதனின் தனிமனித ஒழுக்கத்தைக் குலைக்கும் போது அது குடும்பத்தைப் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பம் கலாசாரத்தை இழக்கும். அது சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தும். இப்படி ஒரு சமூகத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டால் ஒரு சமூகமே நிலைதடுமாறிப் போகும். எங்கெல்லாம் சமூகக் கட்டமைப்பு சீரழிகிறதோ அங்கே போராட்டங்களும் வன்முறைகளும் அதிகம் நடக்கத் துவங்கும். இந்தச் சூழ்நிலையைத்தான் இந்து மதத்தைத் தாக்குபவர்கள், இந்தியா முழுவதிலும் உண்டாக்கி வருகிறார்கள்.

சமத்துவ ஜல்லியடித்துக் கொண்டு மேற்கொண்டு சீரழிவை அனுமதித்துக் கொண்டே இருக்கக்கூடாது. குறைந்த பட்ச எதிர்ப்பையாவது காட்ட வேண்டும். சாதுர்யமாக அழிவைத் தடுக்கவாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, “இந்துக்களே ஒன்றுபடுங்கள்!” என்று அறைகூவல் விடுக்கும்போதே, இது மதவாதம் என்று நம்மவர்களே ஒதுங்குவது முதலையிடமிருந்து தப்பிக்கும் சாதுர்யம் கூட இல்லாத குரங்கைப் போன்றவர்களாகவே இருக்கின்றனர் என்பதே உண்மை.

நாம் வன்முறையில் இறங்க வேண்டியதில்லை. சாத்வீக வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வெற்றியடையவும் நிறையவே அவகாசம் இருக்கிறது. அதுவே நிரந்தர அமைதியைக் கொடுக்கும் வழியும் ஆகும். ஆனால் அதற்கு முதலில் வெளிப்படையான விவாதமும் விழிப்புணர்ச்சி கொள்வதும் அவசியம் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணரவேண்டும். இந்து தர்மத்திற்கு வரும் சோதனைகளை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தையாவது கொள்வோம். வெளிப்படையாக விவாதிப்போம். இந்து என்ற குடையின் கீழ் ஒன்றுபடுவோம்.

எம்மதமும் சம்மதம் என்பது அனைத்து மதமும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் தான் சாத்தியம் என்பது நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை என்பதே இந்தக் கட்டுரையின் ஆதங்கம்.

சமத்துவ வாதிகளே, எச்சரிக்கை! குரங்கின் சாதுர்யம் கூட நமக்கில்லாவிடில் நம் ஈரல் தின்னப்படும்.

33 Replies to “சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்”

 1. //ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று சொல்லி, இரு பால் உறவுகளில் குழப்பத்தை விளைவிப்பது. //

  Author can u pls explain how far this is wrong and upto which limit you are saying. I don’t think the statement here gave full clarity. aanum pennum alavaana natpudan, thooimaiyaana ennam,pazhakka vazhakkangaludan natpu kondaal thavaraa? kuzhappam erpadumaa?

 2. ரொம்பப் பழமைவாதம் பேசுவது போல் உள்ளது.
  திருமணம், பெற்றோர், காதல், குடி, பப் கல்ச்சர், டிஸ்கோதோ போன்ற விஷயங்களில் உங்கள் கருத்தைக் கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம்.
  ஆனால் ஹோமோசெக்ஸுவாலிடி, லெஸ்பியனிஸம் பற்றி நீங்கள் சொல்வது தாலிபான் தனமாக உள்ளது.

 3. ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நிலையையோ அல்லது எதிரான நிலையையோ இந்து மத நூல்கள் என்றும் எடுத்ததில்லை.

  ஆனால், ஓரினக் கவர்ச்சிக்கு எதிரான நிலையை ஆபிரகாமிய மதங்களே எடுத்து வருகின்றன.

  இந்த ஆபிரகாமிய சிந்தனை தாக்கத்தின் விளைவாக இந்துக்களில் சிலரும் கூட தற்போது இந்த இயல்பான உணர்ச்சியை எதிர்த்து வருகிறார்கள். கட்டுரை ஆசிரியரும் இந்த நிலையைத்தான் எடுத்துள்ளார்.

  பல்வேறு சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பில் இந்த சிந்தனை முன்வைக்கும் வாதங்களையும் பரிசீலிக்க வேண்டும். ஆனால், பரிசீலனை முடிவில் வாசகர் ஒவ்வொருவரும் தமக்கேயான புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளுவர். மற்றபடி, இது போன்ற கருத்துக்களை பொது உண்மைகளாக ஏற்றுக்கொள்ளுவது பரிந்துரைப்பது அடாதது.

  இருப்பினும், ஆசிரியர் வேறு ஏதேனும் ஒரு கோணத்தில் தனது வாதத்தைச் சரியெனவும் காட்டலாம். அந்தக் கோணத்திற்குள் மட்டுமே அவ்வாதம் எடுபடவும் கூடும். ஆனால், அந்தக் கோணத்தையும் அது சார்ந்த சரியான வாதத்தையும் ஆசிரியர் எடுத்துரைப்பார் எனவும் எதிர்பார்க்கிறேன்.

 4. //இவன் பெண்டாட்டி அவன் கூட ஆடுவதும் அவள் கணவன் இவளுடன் ஆடுவதும்//

  சில தினங்களுக்கு முன் நண்பரின் மகனின் திருமண வரவேற்புக்கு செல்லவேண்டியிருந்தது. வரிசையில் நின்று மணமக்களை வாழ்த்த பலர் நின்றிருந்தனர். “டப்பா சங்கீதம்” என்று அமரர் கல்கியினால் “ஆசீர்வதிக்கப்பட்ட” மூன்றாம் தர திரைஇசைப்பாடல்கள் குறுந்தடு மூலம் காதை புண்படுத்திக் கொண்டிருந்தன. ஒலிமாசினைத் தாங்கமுடியாமல் நான் வெளியே வந்துநின்றேன். சிறிது நேரம் கழித்து மண்டபத்தின் உள்ளே பலத்த கரகோஷம். எனது மனைவியின் உறவினர் ஒருவர் வெளியே வந்து என்னுடன் பேசினார். “நாக்க மூக்க” என்கிற இலக்கியச் சுவையும் “ஆழ்ந்த பொருளும்” கொண்ட பாடலுக்கு சில இளம்(!?) பெண்மணிகள் ஆடப்போவதாய் தெரிவித்தார். ஆனால் அங்கு கலாச்சார சீரழிவுதான் மடை திறந்து ஓடும் என்பது “உள்ளங்கை நெல்லிக்கனி”யாய் விளங்கியது. ஆறுமாதக் கைக்குழந்தையுடன் வந்த ஒரு தாய்! அதனை தனது கணவன் வசம் கொடுத்துவிட்டு அந்தப் பாடலுக்கு சில இளைஞர்களுடனும், பெண்களுடனும் விரசமான அசைவுகளுடன் ஆடத்தொடங்கினாள்(ரிக்கார்ட் டான்ஸ்). நல்லவேளை மணப்பெண் மேடையைவிட்டு இறங்கவும் ஆடவும்(நண்பிகளின் வேண்டுகோள்) மறுத்துவிட்டாள். எனது நண்பர் கலிகாலம் என்றுஅங்கலாய்த்து விட்டு கர்நாடகத்தின் முத்தலிக் செய்தது சரிதான் என்று சொல்லி விடை பெற்றார்.

 5. பெண்கள் ஆடினால் சீரழிவா? அவர்கள் என்ஜாய் பண்ணினால் என்ன தப்பு? கோவில் சிலைகளை பார்த்தால் விரசம் வருமா? அதே போல எண்ணி கொள்ளலாமே? விதண்டாவாதத்திற்காக சொல்லவில்லை. எல்லாம் கடவுளின் அம்சம் என்றால் இங்கேயும் கடவுளை பார்க்கணும் என்றுதான் நான் நினைக்கிறேன். எனக்கு ஆண்களை சும்மா பார்த்தாலே விரசமான உணர்வு வருகிறது என்றால் அது என் பக்குவமின்மை அல்லவா? ஆண்கள் குடிப்பதும் கூத்தடிப்பதும் எப்படி உலகம் முழுக்க இருக்கிறது. If you want a closed society with a close mind like it is in your imagination you can have it. But you are not going to be a majority and I think that is what is bothering you more. Why did you not strudy vedas and upanishadhs? Probably you are an engineer or some other professional because that is practical. I am not blaming you or your generation for choosing to make money. SO, don’t blame the younger generation for choosing this life style. What we need is an open and honest conversation in an unbiased platform. That will give both sides to address and understand the other side. Last but not least, throughout the world people have values very similar to what we have.

 6. \\ஆனால் ஹோமோசெக்ஸுவாலிடி, லெஸ்பியனிஸம் பற்றி நீங்கள் சொல்வது தாலிபான் தனமாக உள்ளது.\\

  இதில் நீங்கள் என்ன தாலிபான் தனத்தை கண்டுவிட்டிரிர்கள் என்று தெரியவில்லை? நம் சமய நூல்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்று சொல்லும் சிலர் இந்த மாதிரியான கன்றாவிகளை நினைத்து குட பார்திற்குக்க மாட்டார்கள் பெரியோர்கள், அதனாலேயே இதை நாமும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பது முறையல்ல மேலும் சமயம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லவில்லையே அதனால் இந்த விஷயத்தில் சமய மற்றும் சமுக விரோத செயலாக மட்டும் இன்றி ஒர் உயிர் பிறபதற்கு தடையாக இருக்கும் இந்த தகாத செயலை கொலை விட கொடியது……..

 7. Thanks Ramkumar.
  Good article.
  I dont know what Talibanism in condemning homosexuallity. It is not good for the human values. Vajra should understand.

  Again thanks to Ramkumar

  Srinivasan

 8. எம் மதமும் சம் மதம் என்ற ஏமாற்று வார்த்தையில் மயங்கி, அனைத்து மத தெய்வங்களின் படங்களையும் சமமாக எண்ணும் பெருந்தன்மை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

  ஆனால் மற்ற மதத்தவரோ, பலரும் வந்து போகும் தங்கள் வர்த்தக நிறுவனங்களில் கூட அவர்கள் மத தெய்வங்களின் படங்கள், மத அடையாளங்களைத் தவிர வேற்று மத படங்களையோ, அடையாளங்களையோ வைப்பதில்லை, இது மற்ற மதத்தினரின் புத்திசாலித் தனத்தை காட்டுகிறது. இந்துக்களின் பெருந்தன்மை இங்கே கேணத் தனமாகவே பார்க்கப் படுகிறது. இதற்கொரு முடிவு கட்டுவது இந்துக்கள் ஒவ்வொருவரின் கடமை.

  மற்ற மத கொண்டாட்டங்களின் போது, பத்திரிகை விளம்பரங்களிலும், பேனர்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு வாசகம் – ” அனைத்து சமயம், மதத்தவரும் கலந்து கொள்ளும் திருவிழா ” . .

  இதுவே இந்துக்களின் கோவில் திருவிழாவில் மற்ற மதத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட காண முடியாது. இனிமேலாவது ஏமாற்று வார்த்தைகளில் மயங்காது நமது செயல்களின் மூலம் நாங்களும் புத்திசாலிகள்தான் என்று
  காட்டுதல் வேண்டும்.

  அன்புடன்
  ஆரோக்யசாமி

  .

 9. குரு,
  பெண்களைப்பார்த்தால் ஆண்களுக்கும், ஆண்களைக் கண்டு பெண்களுக்கு ஏற்படும் இனக்கவர்ச்சி எவ்வளவு இயற்கையான விஷயமோ அதே போல் தான் ஆண்-ஆண், பெண்-பெண் இனக்கவர்ச்சியும்.
  இது வெரும் இனவிருத்திக்காக ஏற்படும் உறவும் அல்ல. ஹோமோசெக்ஸுவல்ஸைப் பார்த்தால் அவர்கள் உடலுறவு கொள்வது தான் உங்கள் மனதில் ஏற்படும் எண்ணமாக இருப்பின் அது அவர்கள் தவறு அல்ல. உங்கள் பார்வைக் கோளாறு.
  தயவு செய்து, வேதம், உபநிடதம் போன்றவற்றில் இல்லை, இருக்கு என்ற வியாக்கியானம் எல்லாம் வேண்டாம். அது சின்ன விஷயத்தை காம்பிளிகேட் செய்து உங்கள் பார்வை வக்கிரத்தை மூடப்பயன்படுவது தவிற வேறேதும் பலன் தராது.
  அப்படி செய்வதும், குரானில்/விவிலியத்தில்/தோராவில் ஹோமோசெக்ஸுவல்சைப்பற்றி ஜெஹோவா/அல்லா சொல்வதனால் தான் அதைத் தடைசெய்கிறோம் என்று சொல்லும் அடிப்படைவாதச் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

 10. //அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீ கிரிஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்.

  “எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்”.

  உலகம் முழுவதும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்து விடுகிறது.

  எந்த நாட்டிலும் தோன்றிய எந்த மாகானையும் ஓர் இந்து வழி பட முடியும்.

  கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் , முகமதியரின் மசசூதிக்கும் சென்று நம் வழி படுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது. நான் முன்பே சொல்லியது போல நம்முடைய மதம் உலகம் தழுவிய மதம்.

  எல்லாக் கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. //

  பக்கம் 77, 78
  தலைப்பு: இந்திய ரிஷிகள்
  நூல் : இளைய பாரதமே எழுக
  அச்சிட்டவர் : இராம கிருஷ்ண மடம்

  சொற்ப்பொழிவு நிகழ்த்தியவர்: சுவாமி விவேகானந்தர்
  நாள் பிப்ரவரி 07, 1897
  இடம் விக்டோரியா ஹால், சென்னை.

 11. முத‌லில் பிர‌ச்சினை என்ன‌, அத‌ற்க்கு கார‌ண‌ம் என்ன‌, அத‌ற்க்கு ச‌ரியான‌ தீர்வு என்ன‌ என்ப‌தைப் புரிந்து கொள்ள‌ வேண்டும்.

  செய‌ல் திட்ட‌ங்க‌ளை தீட்டி , அதை ந‌டை முறைப் ப‌டுத்த‌ வேண்டும். தும்பை விட்டு வாலைப் பிடித்து என்ன‌ ப‌ய‌ன்? உண்மையான‌ பிர‌ச்சினை என்ன‌ என்ப‌தைப் புரிந்து கொள்ளாம‌ல், ந‌ம் ச‌க்தியை எல்லாம் விர‌ய‌ம் செய்து ப‌ல‌ன் என்ன‌?

  இந்து ம‌த‌ ஆன்மீக‌ த‌த்துவ‌ங்க‌ளின் வ‌லிமையை உண‌ர்ந்து கொண்ட‌வ‌ன், தைரியமாக‌ உல‌கின் எந்த‌ காட்டுமிராண்டி த‌த்துவ‌த்தையும் ச‌ரி செய்ய‌ த‌யாராகி விடுவான்.

  த‌ன்னுடைய‌ ம‌த‌த்தின் ஆன்மீக‌ ஆழ‌த்தையும் வ‌லிமைய‌யும் ச‌ரியாக‌ புரித‌ல் செய்தால், ர‌ப்பரால் செய்ய‌ப் ப‌ட்ட‌ முத‌லை பொம்மையை பார்த்து ப‌ய‌ப் ப‌டாம‌ல், அதையே மித‌வையாக‌ வைத்து ஆற்றைக் க‌ட‌ந்து விடுவான்.

  த‌ன்ன‌ல‌ம‌ற்ற‌ அர்ப்ப‌ணிப்பு தொண்ட‌ன் அனும‌னைப் போல‌ விண்ணிலும், ம‌ண்ணிலும், நீரிலும் அனாய‌ச‌மாக‌ ச‌ஞ்ச‌ரிப்பான்.

 12. ஒரு நிக‌ழ்வு ஒன்றை ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்புகிறேன்.

  ச‌மீப‌த்தில் நான் ஒரு ந‌ண்ப‌ரின் – அவ‌ர் பெய‌ர்‍ முருக‌ன் – வீட்டுக்கு சென்று இருந்தேன். அவ‌ரின் வீட்டுக்கு இன்னும் சில‌ ந‌ண்பர்க‌ள் குடும்ப‌த்துட‌ன் வ‌ந்து இருந்தார்க‌ள்.

  ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றிப் பேசினோம். ரிய‌ல் எஸ்டேட், இன்வெஸ்ட்மென்ட், கிரிக்கெட் இவ‌ற்றை எல்லாம் ப‌ற்றி பேசினோம். ஆனால் ஆன்மீக‌ம் பற்றி பேச்சு எடுத்த‌வுட‌ன் வ‌ந்திருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் அதில் த‌ங்க‌ளுக்கு ஈடுபாடு இல்லை என‌க் கூறி விட்ட‌ன‌ர்.

  முருக‌ன் அவ‌ர்க‌ளை த‌ன்னுடைய‌ வீட்டின் பூசை அறையை வ‌ந்து பார்க்குமாறு கூப்பிட்டார். க‌டைசி வ‌ரையில் அவ‌ர்க‌ள் பூசை அறையை வ‌ந்து பார்க்க‌வே இல்லை. அதை த‌விர்த்து விட்ட‌ன‌ர்.

  இத்த‌னைக்கும் அவ‌ர்க‌ள் இந்துக்க‌ள், இந்திய‌ ச‌முதாய‌த்தின் க‌ட்ட‌மைப்பில் உச்ச‌ப் ப‌குதி ச‌முதாய‌மாக‌க் குறிப்பிட‌ப் ப‌டும் ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளின் ம‌ன‌திலே ஆன்மீக‌த்துக்கு இட‌ம் இல்லை.

  இன்னும் சொல்ல‌ப் போனால், அதில் ஒருவ‌ரின் த‌ந்தையார், எழுபது வ‌ய‌திருக்கும், சென்னை உச்ச நீதி ம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிங்க‌ர், அவ‌ர் கூட‌ “ஆங்காங்கே புதிதாக‌ சிறிய‌ பிள்ளையார் கோவில் க‌ட்டி விடுகிறார்க‌ள், அதில் ந‌ல்ல‌ வ‌ருவாய் பார்க்கிறார்க‌ள்”, என‌, நல்லா ச‌ம்பாரிக்க‌ராங்க‌ப்பா என‌ வ‌ருவாய்க்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து பேசி விய‌க்க‌ வைத்தார்.

  இந்துக்க‌ளை ச‌ரியான‌ இந்துக்க‌ள், ஆன்மீக‌ ஈடுபாடு உள்ள‌ இந்துக்க‌ள் ஆக்குங்க‌ள் , அது மிக‌ முக்கிய‌மான‌ செய‌ல்.

 13. orina cherkai (aan-aan,pen-pen) ithu rendutthukkum ore peruthan. Lesbianism is not different from OrinaCherkai. seri vishayathukku varuvom. Ethukku eduthaalum vedam padinga,upanishad padinga appathan terium. enna sir vedikkai. Vedam,Upanishad lam padichu terinchikitta apdiye intha vishayamlam akkuvera aanivera alasi aranchudalama? enna thinking ithu? oru thagunda aasaan, nalla purinthukollum mana pakkuvam, vedha ezhuthukkal,ucharippukkal ivaigalai muzhuvathumaaga paiyinraal thaan Vedam,Upanishad ithai karpathu enpathu oralavenum saathiyapadum. Melum verum Vedathai oppuvithal, Upanishadai paatu paaduvathu pole raagathodu paaduthal mattum eppadi athil ulla karuthukalai vilakki purinthu kolvatarku vazhivagai seiyum?. Chumma etho Vedhaaagamathil ippadi ullathu aandavareeeeeee enru koovum abrahamiya kuyilgal pol nam Sanathana Dharma Hindu Matha Vedhangal enru ninaithu vitteergala (Vedhathaiye eppadi solla vendiathu paartheergala Hindu Matha Vedham. apadi oru CopyCons inga vanthu kottam adikkaravanga … enna panrathu En nenjil Urayium Kuzhal oothum mayapiran ennai mannithu rakshikattum…. aiyago enna sir ithu Rakshikkattum apdinna kooda etho oru Varghese Muthuzhet solluvathu pola irukkunga apdi airuchu inga seerkedu). Vedham,Upanishad ivatril ulla karuthukkal pala samaiyam nanraaga katru arintha meigyaaniyarukkum,aringarkalukkum, vedhathukku artham (Baashyam enru vadamozhi) ezhuthiyavargalaie kuzhappu kuzhappunu kozhappum. Ovvaru ezuthum athan ucharippu (literals with tone of pronounciation) and antha ezhuthu kootam (words in the sentence) amainthu ulla vedha vaakiyam ivatrai poruthu ore vaarthai allathu vaakiyam vevveru arthangalai kodukkum (in detail: giving different meanings based on the section,sentence,words,tone of pronounciation – in hierarchical manner) //கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் , முகமதியரின் மசசூதிக்கும் சென்று நம் வழி படுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது. நான் முன்பே சொல்லியது போல நம்முடைய மதம் உலகம் தழுவிய மதம்//
  en vazhi pada vendum? enna paithiyakaarathanam. eppozhuthu ungal theivam matrum vedha,purana,ithihaasa karuthukkalai sariyaaga purinthu kondu vazhipada arambithu vittomo, antha theivathai pinpatri antha vazhiyil vantha aanmeega periyorgalai vanangi etrukolvathe siranthathu. nammudaiya matham ulagam thazhuviya matham. yaaru illena. athukkaga eppadivena nam inthu matha kolgai kotpaadugalukku ethiraagavum, thittikondum irukkum mathavazhipaatuku naangal en sir poganum. inga kumbudatha saamiyaa anga poi kumbuttu peria varam vaanga poreenga. enna jallithanam ithu. ai itho varan paaru avan kazhutha kozhi thalai thirugura maari thiruguda apdinnu solra matham, athukku oru thalaivar irunthu apadiye seial paduthi namma mudhugalaiye eri savaari senchavanga,seiaravanga avanunga idathukku poganumam, vazhipadanumaam. apadinna enna artham avanga kotpaadugala ethukittu enjaaami neenga sollurathuthen theiva vaaku. sollunga ketukarom,thalaivanangurom unga arumaiyin arputhatha. apdingarathu thane artham.
  //அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீ கிரிஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்.
  appo avara kadavulaa mathikka maateenga. seri ipdi paarthaalum, yesu enna avathaara purushara? Kill the Paagans and idol worshippers. aha enna oru thathuva gyaani, avathara purushar avar. nesamave SriKrishnarum Yesuvum onnunga…… ??? en sir ithu enna oru kevalamaana thanthiram. apdiyum illa ipdium illa naduvaana poonai naan. athane peru??

 14. ambai ezhuthiyatharkku naan karuthu therivithen. athu vazhakkam pol varaamal duplicate entry enru vanthathu. Aasiriyar kuzhu pariseelikavum. Check the cookies or your message box.

 15. //ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று சொல்லி, இரு பால் உறவுகளில் குழப்பத்தை விளைவிப்பது.//

  இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்றால் தப்பா? ஒரு மனைவி தன் கணவனைத் தவிர யாரையும் நண்பனாக வைத்துக்கொள்ளக்கூடாதா? சொந்தத்திலேயே இருக்கும் மற்ற ஆண்களை எப்படி பார்க்கவேண்டும்? அதற்கும் விதிகள் கொடுத்துவிட்டால், தமிழ்ஹிந்துவுக்குப் புண்ணியமாகப் போய்விடும்.

  ஒரு பெண் இன்னொரு ஆணுடன் ஆடினால் தவறா? பழந்தமிழ் நாடகங்களில் நடித்திருந்த பெண்கள் எல்லாம் கேஸ்களா? இப்போது நடிக்கும் பெண்கள் எல்லாம் கலாசாரத்துக்கு தேவையற்றவர்களா?

  பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழ்ஹிந்துவில் தொடர்ந்து வருகின்றன. பெண் என்றால் அவள் உடலைச் சார்ந்து மட்டுமே மதிப்பிடப்படும் பொதுப்புத்தி இது. அன்னிபெசண்ட் அம்மையார் முதல் சாரதா தேவி வரை அனைவரும் பெண்களே. அவர்கள் ஆண்களோடு நட்பாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இது பொருந்துமா என்று தமிழ்ஹிந்து விளக்கவேண்டும்.

 16. த‌ங்க‌ச்சிக‌ளே, அக்காக்க‌ளே,

  உங்க‌ளுக்கு எல்லா சுத‌ந்திர‌மும் இருக்கிற‌து. உங்க‌ளுக்கு உத‌வியாக‌ வீட்டு வேலையை நாங்க‌ள் செய்து த‌ருகிறோம். வ‌ருவாய் முழுவ‌தும் உங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருக்க‌ட்டும். குடும்ப‌ உற்வுக‌ளில் உங்க‌ளுக்கு தான் முத‌ல் முக்கிய‌த்துவ‌ம்.

  ஆனால்

  //ஒரு பெண் இன்னொரு ஆணுடன் ஆடினால் தவறா?//

  அப்ப‌டி ஆடும் போது இன்னொரு ஆண், என் ம‌னைவியின் இடுப்பிலே கை வைத்த‌வாறே ஆடினால் த‌வ‌றா? அங்க‌ங்க‌ள் உர‌சிக் கொண்டே ஆடினால் த‌வ‌றா? …. இப்ப‌டியே கேட்டுக் கொண்டே போங்க‌ள்.

  நான் என் மனைவியைத் த‌விர‌ எந்த‌ப் பெண்ணுட‌னும் ஆட‌வில்லையே?

  அது போல‌ என் ம‌னைவியையும் க‌ண்ட‌வ‌னும் தொட்டு ஆடுவ‌தை நான் ஒப்பாம‌ல் இருப்ப‌தில் த‌வ‌று இல்லையே!

  ந‌டிகைக‌ள் ம‌ட்டும் தான் உங்க‌ளுக்கு உதார‌ண‌மா?

  உங்க‌ள் அம்மா, பாட்டி எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள் என்று நினைத்துப் பாருங்க‌ளேன்!

  உங்க‌ள் மூதாதைய‌ர்க‌ள் பல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ள் வாழ்ந்து உருவாக்கிய‌ ச‌முதாய‌ம் இது. நானூறு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் உருவான‌ ச‌மூக‌ம் அல்ல‌.

  உங்க‌ள் அம்மா, பாட்டி எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள் என்று நினைத்துப் பாருங்க‌ளேன்!

 17. மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி.

  இந்தக் கட்டுரையில் இந்துக்களின் கட்டுக்கோப்பான கலாச்சாரத்தை உடைக்க நினைப்பவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை சில உதாரணங்களுடன் எடுத்தாண்டிருக்கிறோம். அதில் சிலருக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. முதலில் ஓரினச்சேர்க்கை என்பதைப் பார்ப்போம்.

  ///ஆனால் ஹோமோசெக்ஸுவாலிடி, லெஸ்பியனிஸம் பற்றி நீங்கள் சொல்வது தாலிபான் தனமாக உள்ளது///

  என்று ஒரு நண்பர் தெரிவிக்கிறார். அதாவது ஒரு விஷயம் பற்றி இதை செய்ய வேண்டாம் என்று சொன்னாலே அது தாலிபானிஸம் என்று சொல்லத்துவங்கி விட்டார்கள். “காதலர் தினம் நமக்கு வேண்டாமே” என்றால் உடனே அது தாலிபானித்தனம். அட அது நமக்குத் தேவையில்லையே! அந்த ஒரு நாள் காதலோடு வாழ்க்கை என்பது முடியப்போவதில்லையே. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்த ஆத்மார்த்தமான கணவன் மனைவி என்ற பாசப்பினைப்பைப் பற்றி, ஆத்மார்த்தமான ஆண்பெண் உறவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நாம் ஏன் ஒரு நாள் கூத்தைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டால் அதுவும் தாலிபானித்தனமாகிவிடுகிறது. அதாவது யோசிக்கவே கூடாது, வெள்ளைக்காரனும் ஊடகக்காரர்களும் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே வழி மொழிவது புத்திசாலித்தனம் என்றாகிறது.

  இந்துக்களின் வாழ்க்கை என்பது முற்றிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மிருக வாழ்க்கை அல்ல. இந்துக்களின் வாழ்க்கையிலும் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தாலிபானியத்திற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம், அவர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கொன்றுவிடுவார்கள், ஆனால் நாம் மீறுபவர்களை அதனால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லி எச்சரிக்கிறோம். அவ்வளவுதான். ஆனால் நீங்களோ எல்லாவற்றையுமே தாலிபானியம் என்று சொல்லி கட்டுப்பாடுகளே இருக்ககூடாது என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை

  ///ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நிலையையோ அல்லது எதிரான நிலையையோ இந்து மத நூல்கள் என்றும் எடுத்ததில்லை./// என்று எழுதிய Wilting Tree இன் கூற்று சரியே. மேலும் இந்துக்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையாளர்ள் பரிதாபத்திற்குரியவர்களாகவே கருதப்படுகிறார்கள். As they are abnormal persons. அவர்களை பாவிகளாக்குவதும், குற்றவாளிகள் போன்றும் நாம் சித்தரிப்பதும் இல்லை. பரிதாபத்திற்குரியவர்கள் அவ்வளவே.

  ஆனால் அவையாவும் குற்றம் என்று சொல்வதில்லையே தவிற ஊக்குவிக்க நாம் என்றும் முயன்றதில்லை. நம் கலாச்சாரம் அதை விரும்பியதும் இல்லை. ஏனெனில் இயற்கைக்கு மாறான ஒரு விஷயம் எல்லோருக்கும் பரவுவது சமூகத்திற்கு நல்ல தல்ல என்பதால் அதைபெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறனர். ஆனால் நம் அரசு வலிய இவற்றைப் பெரிது படுத்தி அதற்கு அங்கீகாரம் கொடுப்பது போல் செயல்படுகிறது. இது அரசாங்கத்திற்கு தேவையற்ற வேலை தானே! சும்மா இருப்பவரை எல்லாம் அழைத்து “நீயும் ஓரினச்சேர்க்கை செய்யலாம், சட்டம் அங்கீகரித்து விட்டது. !” என்று சொல்லி அதைப்பற்றிய சிந்தனை இல்லாதவர்க்கு கூட “நாமும் செய்யலாமோ” என்ற ரீதியில் ஓரினசேர்க்கை பற்றி சிந்திக்கத்தூண்டுவது திட்டமிட்ட சமூகக் கலாச்சார கட்டுப்பாட்டை அழிக்க நினைக்கும் சதியாகவே நான் நினைக்கிறேன். அதையே தான் கட்டுரையில் பிரதிபலித்திருக்கிறேன்.

  //பெண்களைப்பார்த்தால் ஆண்களுக்கும், ஆண்களைக் கண்டு பெண்களுக்கு ஏற்படும் இனக்கவர்ச்சி எவ்வளவு இயற்கையான விஷயமோ அதே போல் தான் ஆண்-ஆண், பெண்-பெண் இனக்கவர்ச்சியும்.// என்று கூறுவது தவறு. ஓரினச்சேர்க்கை இயற்க்கையானது அல்ல. இதை ஒத்துக்கொள்ள முடியாததே!

 18. //ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்றால் தப்பா? ஒரு மனைவி தன் கணவனைத் தவிர யாரையும் நண்பனாக வைத்துக்கொள்ளக்கூடாதா? //

  என்று ஒரு நண்பர் தெரிவிக்கிறார்.

  ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அதையே நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் மீது திணித்த மேலை நாடுகளில் எடுத்த கணக்கெடுப்புகளில் கூட 80% ஆண் பெண் நட்பு காதல் மற்றும் காமத்தில் தான் விழுகிறது என்றே தெரிவிக்கிறது.

  தெரியாமல் தான் கேட்கிறேன். கணவனைத் தவிற மற்றவர்களை ஏன் நண்பனாக வைத்துக் கொள்ள வேண்டும்?. அண்ணனாகவோ, தம்பியாகவோ ஏன் பாவிக்கக்கூடாது. மனைவியைத் தவிற மற்ற பெண்களை ஏன் சகோதரியாக அக்கா, தங்கை என்று பாவித்துப் பழகக்கூடாது. கணவன் அல்லது மனைவி மற்றவர்களிடம் உண்மையிலேயே அன்போடும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பழக நேர்ந்தால் அவரை சகோதர, சகோதரியாக பாவிக்கலாமே.

  அப்படிச் சொல்லிவிட்டால் எதிர்காலத்தில் நமக்கு உணர்ச்சி தடுமாற்றம் உண்டானால் அதற்கு வடிகால் இல்லாமல் போய்விடுமே என்ற பயம் தான் மனைவியைத் தவிற மற்ற பெண்களை சகோதரியாக பாவிக்க விடாமல் செய்கிறது என்று நான் தைரியமாகச் சொல்வேன்.

  உணர்ச்சிகளில் நேர்மை இருக்கும் ஆணும், பெண்ணும் தங்கள் நேரான சேர்க்கைக்குரிய உறவைத் தவிற மற்றவர்களை சகோதர சகோதரியாக பாவிப்பதை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.

  ஏறக்குறைய ஒரு இருபது வருடங்கள் முன்புவரை கூட அப்படித்தானே நம் சமூகம் இருந்தது. தினசரிகளில் அப்போது இருந்த கள்ளத்தொடர்பு செய்திகளுக்கும் இப்போது வெளியாகும் கள்ளத்தொடர்பு செய்திகளுக்கும் எண்ணிக்கை ரீதியான வித்தியாசத்தை நம்மால் உணரமுடியாதா? ‘he is my friend’ என்று தான் எதுவும் துவங்குகிறது. ஆணோடு ஆண் நட்பு கொள்வதைப் போல, பெண்ணோடு பெண் நட்பு கொள்வதைப் போல ஆணும் பெண்ணும் நட்பு கொள்ள முடியாது. ஆணும் பெண்ணும் Gender attraction இல்லாமல் பழகுவது நடக்காத காரியம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

  (edited and published)

 19. தங்கச்சி,

  //அன்னிபெசண்ட் அம்மையார் முதல் சாரதா தேவி வரை அனைவரும் பெண்களே. அவர்கள் ஆண்களோடு நட்பாகவே இருந்திருக்கிறார்கள்//

  சாரதா தேவிக்கும் இராம கிருட்டினரின் சீடர்களுக்கும் இடையே இருந்த உறவு, தாயுக்கும் மகன்களுக்கும் இடையேயான உறவு போன்றது.

  நாம் கூட அலுவலகத்திலே பல பெண்களுடன் பழகுகிறோம். அவர்கள் கும்பத்துடன் நமது வீட்டுக்கு வருகிறார்கள். அது குடும்ப உறவு.

  அதே போல கல்லூரியில், பள்ளிகளில் பல ஆண் – பெண் நட்பு உண்டு. அதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நேர்மையான உண்மையான நட்பை யாரும் குறை சொல்லவில்லை. அந்த நட்பு நேர்மையான ஆழாமான காதலாக மலர்ந்தாலும் நாம் குறை சொல்லவில்லை.

  ஆனால், திருமணத்துக்கு முன்னோ அல்லது திருமணத்துக்கு பின்னோ நட்பு என்ற பெயரிலே “ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்கிற வள்ளுவனின் வார்த்தையை மறக்கும் படி நடப்பது சமுதாயத்தை சீர் கெடுத்து விடும், குடும்ப வாழ்க்கையை அழித்து மேலை நாட்டு சமுதாயம் போல ஆக்கி விடும் என்பதுதான் விடயம்.

 20. // பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழ்ஹிந்துவில் தொடர்ந்து வருகின்றன.//

  இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? இந்தக் கட்டுரையின் ஒரு சில வரிகளைப் பிடித்துக் கொண்டு இப்படி ஒட்டுமொத்தமாக முத்திரை எல்லாம் குத்துவது சரியில்லை..

  இந்தக் கட்டுரை எழுதியவர் ஒழுக்கம் பற்றீய கறாரான மதிப்பீடு வைத்திருப்பவராக இருக்கலாம். தன் மகன்/மகள் பற்றி எல்லா தாய் தந்தையருக்கும் மிகவும் இயல்பாகவே உள்ள கவலை கொண்டவராகக் கூட இருக்கலாம். இந்து சமூகத்திற்குள் இப்படிப் பட்டவர்களைக் காண்பது அரிதான விஷயமும் அல்லவே. இதையும் ஒரு முக்கியமான பார்வை என்று எடுத்துக் கொள்ளுங்கள்..

 21. நல்ல கட்டுரை தந்தமைக்கு பாராட்டுக்கள்.

  ஒருமுறை ஓர் பெரியாரிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

  அவர் “பிராமணர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வந்த முஸ்லிம்களே” – என்னும் அதிரவைக்கும் கருத்தை தெரிவித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வந்த லோடி, மொகலாய முஸ்லிம்கள் நல்லவர்கள் எனவும் சொன்னார். தான் ஹிந்து மதத்தைப பற்றி தாழ்வாகப் பேசுவதே “சமத்துவம்” என்று கருதுவதாகவும் ஹிந்துக்களுக்கு மத சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் இதெல்லாம் தேவை என்றும் சொன்னார். தன் கருத்துக்கு எவ்வவளவு எதிராகப் பேசினாலும் பொருத்தருள்பவனே மனிதன், ஆனால் இந்தத் தன்மை ஹிந்துக்களிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.

  அடுத்த நாள் ‘பெரியாரின் மறுபக்கம்’ சுட்டியை அனுப்பி, சகிப்புத்தன்மையுடன் பொறுத்தருளக் கூறினேன். அவ்வளவுதான், அவர் “நீங்கள் ஒரு மதவாதி, என் *தெய்வம்* போன்ற பெரியாரை இவ்வளவு மோசமாகச் சித்தரிக்கும் ஒன்றை எனக்கு அனுப்பினீர்களே” என்று சொல்லி பேயாட்டம் ஆடினார்!!

 22. ‘Nakku mukku Nakku mukku ” enru Aabasamaga adduvathuthan pen suthanthiramaa!!! Ambai yin munnorgal, nam kalacharathirku enanga thangalai santhoshamaga vaithukondargal. With the western influence on the youth of today, they have taken to this type of cheap entertainment . Nam Kalachara seerazhivai epadi payanpaduthi nam mathathai/ kalacharaththai azhikirargal enbathaithan intha katturai padam piduthu kattugirathu.

  (edited and published)

 23. நல்ல கட்டுரை.

  // நாகரிகம் என்ற பெயரால் டிஸ்கோத்தே நடன நிகழ்ச்சிகள் போன்றவைகளை ஊக்கப்படுத்தி ஆண், பெண் கலாசாரத்தில் குண்டைத் தூக்கிப் போடுவது. இதிலும் அசிங்கம் என்னவென்றால் நடன நிகழ்ச்சி என்ற பெயரில் எல்லாத் தொலைக்காட்சிகளும் ஒரு குத்தாட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்புவது. இவன் பெண்டாட்டி அவன் கூட ஆடுவதும் அவள் கணவன் இவளுடன் ஆடுவதும் இருவரது கணவன்/மனைவியும் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அதைக் கைதட்டி, சூப்பர் ஃபெர்பாமன்ஸ் என்று விசிலடிப்பதும், அந்த மாற்று இருவருக்கிடையே கெமிஸ்ட்ரி(?!) எவ்வளவுதூரம் பிரமாதமாக இருக்கிறது என்பதை குட்டைப் பாவாடை நீதிபதிகள் சோதித்து, தீர்ப்பளித்து லட்சக்கணக்கில் பரிசளிப்பதும்…. கலாசாரம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்விக்குறியை உண்டாக்குகிறது. அதிலும் அளவு கடந்த ஆபாசத்தை வீட்டுக்குள்ளேயே அள்ளித் தெளிக்கிறார்கள்.//

  ராம்குமார் குறிப்பிடும் தொலைக்கட்சி நிகழ்ச்சிகள் பலசமயங்களில் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. இளைஞர்களும் கூட இவ்வாறு சில சமயம் உணர்வதை நான் கண்டிருக்கிறேன். நடிகர்களுக்குள் மேடைக் காட்சிகளில் பாத்திரப் படைப்பினால் வெகுவாழ்வின் கணவன் மனைவி வேற்பாடுகளைப் பார்க்கத் தேவையில்லை என்றாலும் இந்நிகழ்ச்சிகள் இவர்களை வெகுவாழ்வின் தம்பதியர்களாகவே காட்டுகின்றன. இதன் உத்தேச சமுதாய தாக்கத்தை பலரால் உதாசீனப் படுத்த முடியவில்லை. மேலும் இது சமுதாயத்தின் அத்தியாவசியமான தேவையா என்று பார்த்தால் அவை சாதாரண தேவையாகக் கூட தோன்றுவதில்லை. அவ்வாறிருக்கும்போது இந்தப் போக்குகள் கண்டனத்துக்குள்ளாகின்றன. என் கருத்தில் அவர் செய்துள்ள கண்டனம் சரியாகவே படுகிறது.

  //ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று சொல்லி, இரு பால் உறவுகளில் குழப்பத்தை விளைவிப்பது//

  கட்டுரை முழுதிலும் இது தொடர்பாகக் காணப்படும இந்த ஒற்றை வாக்கியத்திலிருந்து மிக அதிக அதிகபட்ச எதிர்மறை சிந்தனையைப் பிழிந்தெடுத்து ஹபி எதிர்வினையாற்றியிருக்கிறார். “இரு பால் உறவுகளில் குழப்பத்தை ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று சொல்லி விளைவிப்பது” என்பதே அவ்வாக்கியத்தின் பொருளாக நான் உணர்கிறேன். ஏனென்றால் கட்டுரையாளரின் வாக்கியம் எந்த வகையிலும் ஆண் பெண் நட்பை கண்டிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. குழப்பம் விளைவிக்காத வரையில் ஆண்பெண் நட்பும் அது சார்ந்த செயல்பாடுகளும் எந்த அளவிலும், எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டதாகவும் இருக்கலாம் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும். குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க இப்போது சமூகத்தில் இருக்கும் எல்லைக் கோடுகளை தளர்த்த முற்படும்போது அவை ஏற்படுத்தப் பட்டதன் நோக்கங்கள் அழிந்துவிடாமலிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய கவனயீப்பத்தான் கட்டுரையாளரின் அந்த வாக்கியம் குவியமாக்குகிறது.

  ஆனால் ஹரன் பிரசன்னாவின் எதிர்வினைக்கு கட்டுரையாளரின் பதில் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சமூகத்தில் பிற பெண்களை மனைவி அல்லது அக்கா தங்கை என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்து எந்த காலத்திலும் பின்பற்ற இயலாததொன்று. இல்வாழ்க்கை குழப்பங்கள் ஏற்படுத்தாத எதிர்பாலர் நட்பு என்பது நடைமுறை சாத்தியமானது மட்டுமல்ல யதார்த்தமானதும் அசூசையற்றதுமானதாகும்.

  ஓகை நடராஜன்.

 24. இப்போதெல்லாம் 3 வயது பெண் குழந்தைக்கு கூட பாதுகாப்பு தேவை படுகிறது. இந்த அளவிற்கு வக்கிரம் பரவியதற்கு என்ன காரணம் என்று மறுப்பு மொழி அளித்தவர்கள் யோசித்தால் நலம்.

 25. Friends
  Its the liberal West that wants to reduce women to mere bodies.
  Some of us buy that junk concept and call that women’s emancipation!
  Most TV programs that show participation of ordinary people are vulgar and ugly-there is a mother -daughter program in one channel-in the name of free expression and dance you should see the movements and costumes.The poor husband-father must be crying at hime seeing this.
  by the way those who support homosexuality ,are they thinking of cureless disesaes like AIDS?
  those who support free relationships between men and women ,will they accompany the women to hospitals if they need urgent medical help?
  I like Trichykaaran’s comment about the dance programs. These dance programs are aired on most days and it is better to watch some cartoon channel or DD in stead.
  Saravanan

 26. //
  இப்போதெல்லாம் 3 வயது பெண் குழந்தைக்கு கூட பாதுகாப்பு தேவை படுகிறது. இந்த அளவிற்கு வக்கிரம் பரவியதற்கு என்ன காரணம் என்று மறுப்பு மொழி அளித்தவர்கள் யோசித்தால் நலம்.
  //

  இது தொடந்தால் தாலிபான் காரர்களுக்கு தான் ஜெயம் – பெண்கள் தாங்களே முன்வந்து பர்தா போட்டுக்கொள்வதை விட வேறு வழில்லை என்றாகிவிடும் பாருங்கள்

 27. //பெண்கள் ஆடினால் சீரழிவா? அவர்கள் என்ஜாய் பண்ணினால் என்ன தப்பு? கோவில் சிலைகளை பார்த்தால் விரசம் வருமா? அதே போல எண்ணி கொள்ளலாமே? விதண்டாவாதத்திற்காக சொல்லவில்லை. எல்லாம் கடவுளின் அம்சம் என்றால் இங்கேயும் கடவுளை பார்க்கணும் என்றுதான் நான் நினைக்கிறேன்.//

  நிச்சயமாய்ப் பெண்கள் ஆடுவது சீரழிவே இல்லை, அதுவும் ஆண்களோடு ஆடுவதும் சீரழிவு எனச் சொல்லமுடியாது. ஆனால் அது எத்தகைய ஆட்டம் என்பதும் இருக்கிறதல்லவா?? பலரும் சொல்கிறாப்போல் தொலைக்காட்சிகள் இம்மாதிரியான குத்தாட்டங்கள் நடக்கும் தொடர் நிகழ்ச்சிகளைப் போட்டுக் கலாசாரத்தைச் சீரழித்தே வருகின்றன. மற்றபடி திரு ராம்குமார் சொல்லி இருப்பது அனைத்தையும் முழுமையாக ஆதரிக்கிறேன். வரவேற்கிறேன். மற்ற மதங்களைப் பற்றியும் எழுதினால் தான் மதச் சார்பின்மை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. நமக்குத் தெரிந்த விஷயம் நம்முடைய மதமும் அதன் சார்பான கலாசாரங்களும் தான். அதில் தவறு ஏற்படும்போது அதைத் தான் சுட்டிக் காட்டமுடியும். இரண்டு நாட்கள் முன்னர் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி வரும்போது கிறிஸ்தவ அமைப்பினர் கையேடுகளை விநியோகித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் வாங்க மறுத்தும் வற்புறுத்திக் கொடுத்ததைக் காணமுடிந்தது. எனக்குக் கொடுக்க வந்தபோது மறுத்தேன், ஆனாலும் கொடுத்தாங்க, வாங்கி அங்கேயே கசக்கிப் போட்டுவிட்டு வந்தேன். இதுவும் ஒரு மறைமுகமான பிரசார யுக்தியே! சரியான தலைமை, வலிமையான தலைமை இல்லாமல் நாடு பலவகையிலும் தத்தளிக்கிறது. :((((((((((((((

 28. ராம்குமார்,

  //மேலும் இந்துக்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையாளர்ள் பரிதாபத்திற்குரியவர்களாகவே கருதப்படுகிறார்கள். As they are abnormal persons. அவர்களை பாவிகளாக்குவதும், குற்றவாளிகள் போன்றும் நாம் சித்தரிப்பதும் இல்லை. பரிதாபத்திற்குரியவர்கள் அவ்வளவே.//

  என்று பதில் சொல்லி உள்ளீர்கள். இது மிகவும் தவறான தகவல் மற்றும் புரிதல்.

  ஓரினக் கவர்ச்சி உள்ளவர்கள் மற்றவர்களைப் போல சாதாரண மனிதர்கள்தான். மற்றவர்களுக்கு இணையானவர்கள்தான். இதுதான் இந்து சமூகத்தின் பார்வை. வேறுபட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ளும் இந்து மரபு இதனைக் கீழ்த்தரமாக எப்போதும் கருதியதே இல்லை.

  ஆனால், தற்போதைய பொதுப்புத்தியை முன்வைத்து கட்டுரையின் இந்த வாதம் சமைக்கப்பட்டு உள்ளது.

  இந்த வகையில் பேசுவது என்றால், “பல இந்துக்கள் தீண்டாமையை ஆதரிக்கிறார்கள். சாதி உயர்வு மனப்பான்மையோடு இருக்கிறார்கள் எனவே அந்த மனப்பான்மை சரி என்று கொள்ள வேண்டும்” என்று கூட வாதிடலாம்.

  நமது புராணங்களும், இலக்கியங்களும் ஓரினக் கவர்ச்சியை இயற்கையான ஒன்று என்றுதான் சொல்லுகின்றன. தற்போதைய இந்து மந்தைகள், ஆபிரகாமிய அடிச்சுவட்டில், இந்த உணர்வை மட்டமாக நினைப்பதால், அதையே நீங்களும் முன்வைக்கிறீர்கள்.

  “மலரினும் மெல்லியது காதல்” என்றார் இந்துக்களின் ரிஷி திருவள்ளுவர். அந்த மென்மையான ஒன்றை மேடைப் பேச்சு போலக் கட்டுரை கையாண்டுள்ளது.

  இந்தப் பிரச்சினை பல கோணங்களைக் கொண்டது. அவற்றைப் புரிந்துகொள்ளாமல், தெரிந்துகொள்ளாமல், ஆராயாமல் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேம்போக்காக உள்ளது.

  குறைந்தது, கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு கோயில்களுக்காவது போகும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளலாம்.

 29. சரவணன்,

  //by the way those who support homosexuality ,are they thinking of cureless disesaes like AIDS?//

  எதிர்பால் சேர்க்கை உள்ளவர்களால்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. ஏனெனில் மக்கள் தொகையில் அவர்கள்தான் அதிகம். எனவே, அதைத் தடை செய்துவிடலாம். 🙂

  //those who support free relationships between men and women ,will they accompany the women to hospitals if they need urgent medical help?//

  பொறுப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை யாரும் எதிர்க்க வில்லை. ஆனால், அதைச் சாக்கு வைத்து பார்க்கக் கூடாது, பழகக் கூடாது, ஊர் சுற்றக் கூடாது என்றெல்லாம் சொல்லுவது எப்போதும் எதிரிடையான நிலைகளைத்தான் எடுப்போம் என்று சொல்லும் பார்வை. ஒரு பைத்தியக்காரத்தனத்திற்கு மாற்று மற்றொரு பைத்தியக்காரத்தனம் என்று சொல்லுவதைத்தான் இந்து மதம் எதிர்க்கிறது.

  சம நிலையில் வாழ்வதே இந்து வாழ்க்கை. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் பெயரளவில்தான் இந்துக்கள்.

 30. //Wilting Tree
  18 February 2010 at 12:18 pm

  //ஓரினக் கவர்ச்சி உள்ளவர்கள் மற்றவர்களைப் போல சாதாரண மனிதர்கள்தான்// இதை மறுக்கவில்லை.

  //நமது புராணங்களும், இலக்கியங்களும் ஓரினக் கவர்ச்சியை இயற்கையான ஒன்று என்றுதான் சொல்லுகின்றன.//

  விலங்குளிடம் கூட ஓரினச்சேர்க்கை உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இயற்கையான ஒன்றே!

  ஆனால் ஒரு ஆணோ பெண்ணோ, தன்னை முழுமையான ஆணாகவும், முழுமையான பெண்ணாகவும் உணரும் பட்சத்தில், அவர்கள் எதிர்பாலரைக் கவர்வதில் தான் ஆர்வம் காட்டுவார்கள் என்பது இயல்பு. சுய பாலினரைக் காணும் போது காந்தத்தின் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்ற அடிப்படையில் நட்பு கொள்வார்களேயன்றி சுய பாலர் மீதே காதல் கொள்வதில்லை. சரியான இனச்சேர்க்கைக்கு வடிகால் இல்லாத நிலையில் ஓரினச்சேர்க்கை கைகொடுப்பதாய் அமைவது தான் இயல்பு.

  மற்றபடி ஓரினக்காதலும், ஓரினக் கல்யாணமும் சமூகவெள்ளத்தில் ஒட்டாதவை.

  //குறைந்தது, கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு கோயில்களுக்காவது போகும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளலாம்.//

  தயவு செய்து அவமதிக்கும் விதமான தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்க வேண்டாம். எமது சொந்தபழக்க வழக்கங்கள் பற்றிய முடிவை எடுக்கும் உரிமை எனக்குண்டு என்றே நினைக்கிறேன். உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

  அன்புடன்
  ராம்

 31. //
  குறைந்தது, கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு கோயில்களுக்காவது போகும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளலாம்.

  //

  இப்படி அவர் சொன்னது கோவில்களில் காணப்படும் சிற்ப்பங்களை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்பது போல் தான் எனக்கு தோணிற்று – இப்படி நேரடியாக கேட்டிருந்தால் பிரச்சனையை வராது

  மற்றபடி இந்த கோவில் வெளி பிரகாரங்களில் இருக்கும் விஷயத்தை பற்றியும் – பாருங்கள் இதுவும் இயற்கை என்று கருதியே நமது முன்னோர்கள் இதை கோவிலில் செதுக்கி உள்ளார்கள் என்று திருஷ்டாந்தம் கூறுவதை பார்த்து – இப்படியுமா அர்த்தம் கொள்வது என்று வியந்திருக்கிறேன் 🙂

  உலக விஷயங்கள் இப்படி தான் இருக்கும், இதில் நாட்டம் கொண்டால் பிரகாரம் அமைந்திருப்பது போல் நாம் சுற்றி சுற்றி வாழ்வில் வந்து கொண்டிருப்போம் (பிறந்து இறந்து) – இதை தவிர்த்து நேரே உள்ளே சென்று கர்ப கிரகம் தன்னில் இருக்கும் ஆண்டவனில் ஆழவேண்டும் – அதற்க்கு ஏன் கர்ப கிரகம் என்று பெயர் – அது தான் அய்யா நாம் பிறந்த(இருக்க வேண்டிய) வீடு – அப்படி ஆழ்ந்த மற்ற உலக விஷயங்கள் எதிலும் பற்றில்லாத பக்தி ஏற்பட்டால், நாம் தோன்றிய இடம் ஒன்றிற்கே அழைத்து செல்லப்படுவோம் – கர்பக்ரத்திர்க்கு ஒரு வாயில் தான் சென்றால் அந்தபக்கம் தப்ப முடியாது

  தீட்சிதர் டெய்லி கர்ப கிரகம் உள்ளே போறார் அவர் திரும்பி வராரே என்று கேள்வி கேட்டால் – நான் ஒன்றும் சொல்வதற்கில்லை 🙂

 32. நன்றி சாரங்,

  //இப்படி அவர் சொன்னது கோவில்களில் காணப்படும் சிற்ப்பங்களை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்பது போல் தான் எனக்கு தோணிற்று – இப்படி நேரடியாக கேட்டிருந்தால் பிரச்சனையை வராது//

  இருக்கலாம். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமல் கருத்தைப் பரிமாறும் பொழுது என்ன சொல்ல வருகிறோம் என்பதை நேரடியாக சொல்லாவிட்டால் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டாகிறது.

  //பாருங்கள் இதுவும் இயற்கை என்று கருதியே நமது முன்னோர்கள் இதை கோவிலில் செதுக்கி உள்ளார்கள் என்று திருஷ்டாந்தம் கூறுவதை பார்த்து – இப்படியுமா அர்த்தம் கொள்வது என்று வியந்திருக்கிறேன்//

  உண்மையே!. ஆனால் அவை அனைத்துமே ஓரினச்சேர்க்கை குறித்தவை மட்டும் தானா?

  கோனார்க் கோவில் சிற்பங்களில் கூட ஆண் பெண் சேர்க்கைக்காண சிற்பங்களே அதிக இடம் பிடிக்கின்றன.

  காமம் என்ற பதத்தில் ஓரினக் காமமும் உண்டு. ஆனால் அவை இடம் , காலம், தனிப்பட்ட மனிதர்கள் சம்பந்தப் பட்டதே! ஆண் பெண் உறவைப் போல பொதுவான ஈர்ப்பைக் கொண்டது என்று வாதிட முடியாதது.

  ///உலக விஷயங்கள் இப்படி தான் இருக்கும், இதில் நாட்டம் கொண்டால் பிரகாரம் அமைந்திருப்பது போல் நாம் சுற்றி சுற்றி வாழ்வில் வந்து கொண்டிருப்போம் (பிறந்து இறந்து) – இதை தவிர்த்து நேரே உள்ளே சென்று கர்ப கிரகம் தன்னில் இருக்கும் ஆண்டவனில் ஆழவேண்டும் – அதற்க்கு ஏன் கர்ப கிரகம் என்று பெயர் – அது தான் அய்யா நாம் பிறந்த(இருக்க வேண்டிய) வீடு – அப்படி ஆழ்ந்த மற்ற உலக விஷயங்கள் எதிலும் பற்றில்லாத பக்தி ஏற்பட்டால், நாம் தோன்றிய இடம் ஒன்றிற்கே அழைத்து செல்லப்படுவோம் – கர்பக்ரத்திர்க்கு ஒரு வாயில் தான் சென்றால் அந்தபக்கம் தப்ப முடியாது////

  அருமையான விளக்கம் சாரங்.

 33. சாரங் ,
  நல்ல விளக்கம் அளித்தீர்கள். பிறப்பிறப்பு சுழற்சியில் மாட்டாமல் ஐக்கியமாவதே என்ற விளக்கம் அளித்ததற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *