கிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை

christian_school_01ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறிய பையன், என் பேரன் வயசு இருக்கலாம், கையில் ஒரு சின்ன ரசீது புஸ்தகத்துடன் வந்து நன்கொடை கேட்டான். என்ன என்று வாங்கிப் பார்த்தேன். அவன் வாசிக்கும் பள்ளிக்கூடத்தில் சர்ச் கட்ட பணம் வசூலிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 16 வருஷங்களுக்கு முன்பு, இதே போல என் மகனுடைய சிநேகிதர்கள் சிலர் பணம் கேட்டு என்னிடம் வந்தது என் மனசில் தோன்றி மறைந்தது. அப்போது நான் டிவியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பையன், பெயர் என்னவோ மறந்துவிட்டது, தயங்கித் தயங்கிப் பணம் கேட்டதும், ஒரு பையனுக்கு இவ்வளவு தொகை வசூலிக்கவேண்டும், இல்லை என்றால் சார் திட்டுவார் என்று சொன்னதும் மனசில் நிழலாடியது.

தொடர்ந்து இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு சங்கல்பம்! கிறித்துவ பள்ளிகளில் படிக்கும் ஹிந்து பிள்ளைகளின் நிலை சொல்லி மாளாதது. எல்லாப் பள்ளிக்கூடங்களும் இப்படி அல்ல என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பெரும்பாலான பள்ளிக் கூடங்கள் இப்படித்தான் என்பதையும் சொல்லிவிடுகிறேன். நான் கேள்விப்பட்ட விஷயங்களை விட்டுவிட்டு, நானே நேரில் பார்த்த விஷயங்களை மட்டும், பள்ளிக் கூடங்களின் பெயர்களைத் தவிர்த்துவிட்டுச் சொல்கிறேன். அப்போது இது ஒரு பொது விஷயமாக மாறுவதைப் பார்ப்பீர்கள். எல்லாம் நம் தலையெழுத்துதான் என்றும் முடிவுக்கு வருவீர்கள்.

ஒரு பையன், அவனது பள்ளியில் சர்ச் கட்டப் பணம் கேட்டு வந்தான். வீடு வீடாகக் கேட்டிருக்கிறான். ஒரு வீடு என் சிநேகிதனின் வீடு. சிநேகிதனின் தங்கை அந்தப் பையனை அழைத்துக்கொண்டு நேராக அவன் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டாள். இதற்குத்தான் பையனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்களா என்று கேட்டிருக்கிறார்கள். பள்ளிக்கூட வாத்தியார் அந்தப் பையனின் அம்மாதான் வந்திருக்கிறார் என நினைத்து பயந்துவிட்டார் போல. பின்னர்தான் தெரிந்திருக்கிறது வந்தது பையனின் அம்மா இல்லை என்று. கொஞ்சம் தைரியம் வந்து பேசத் தொடங்கிய அந்த வாத்தியார், சர்ச் கட்ட பணம் கேட்கவே இல்லை என்று சாதித்துவிட்டார். ரசீதிலும் சர்ச் கட்ட என்று எங்கேயும் இல்லை. என் சிநேகிதனின் தங்கை இனிமேல் இது போலச் செய்யாதீர்கள், சர்ச் கட்டவேண்டும் என்றால் நீங்களே பணம் வசூலித்துக் கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தார்.

இன்னொரு கதையைப் பார்ப்போம். அந்தப் பள்ளிக்கூடம் அந்த ஊரிலேயே முக்கியமான பள்ளிக் கூடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 1500 பிள்ளைகளுக்கு மேல் வாசிக்கிறார்கள். கிறிஸ்துவப் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்துக்கு உள்ளேயே சர்ச் உண்டு. பத்தாம் வகுப்பு பொதுப் பரீக்ஷைக்கு முன்னால் சர்ச் சென்று, ஸ்தோத்திரித்தால்தான் ஹால் டிக்கெட் தருவார்களாம். புனித நீரும் தெளிப்பார்களாம். எல்லாப் பிள்ளைகளும் இதனைச் செய்கின்றன. ஒரு பையன் தன் வீட்டில் இதைச் சொல்லி, எனக்கு அப்படி கும்பிட மனம் வரவில்லை என்று சொல்லியிருக்கிறான். பையனின் அப்பா பள்ளிக்கூடத்துக்கு வந்து சத்தம் போட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பையனுக்கு ஹால்டிக்கெட் தரவே இல்லை பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர். பையனின் அப்பாவும் பரீக்ஷைக்கு ஒருவாரம் வரை பார்க்கலாம், இல்லை என்றால் பிரச்சினை பண்ணிவிடலாம், ஆனால் எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு வந்த வண்ணம் இருந்திருக்கிறார். கடைசியில் இந்தப் பையன் வந்து கும்பிடமாட்டான் என்று தெரிந்ததும், பரீக்ஷைக்கு இரண்டு நாள் முன்பு அந்தப் பையனுக்கு ஹால் டிக்கெட்டை ஒரு பியூனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்கள் பள்ளிக்கூடக் காரர்கள். அத்தனை நாள் அந்தப் பையனும் அந்தப் பையனின் குடும்பமும் அனுபவித்த கஷ்டங்கள் தேவைதானா? யாரையும் இப்படி, இவரைக் கும்பிடு என்று கட்டாயப் படுத்துவது தவறு என்று பள்ளிக்கூட நிர்வாகத்துக்குத் தெரியாதா என்ன?

school-boysஇன்னொரு கதை பெண் பிள்ளை பற்றியது. ஐந்தாம் வகுப்பு வரை சாதாரண அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் படித்த அந்தப் பெண் பிள்ளை எனக்கு தூரத்துச் சொந்தமும் கூட. வயது பதினொன்று. ஒழுங்காகப் படிக்கவில்லை என ஒண்ணாங் கிளாஸில் இரண்டு தடவை போட்டுவிட்டார்கள். ஆறாம் வகுப்புக்குப் போவதற்கு முன்பே பெரியவளாகிவிட்டாள். பவுடர் போட்டுக்கொண்டு, பொட்டு வைத்துக்கொண்டு, நிறைய பூ வைத்துக்கொண்டு, கொலுசு போட்டுக்கொண்டு செல்வதில் அவளுக்கு சந்தோஷம். ஆறாம் கிளாஸ் நல்ல பள்ளிக்கூடத்துக்க்குப் போகவேண்டும் என்ற ஆசையில் அவளது அப்பா ஒரு பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். அந்தப் பள்ளியில் குங்குமம் வைத்துக்கொண்டு வரக்கூடாது, பூ வைத்துக்கொள்ளக்கூடாது, கொலுசு போட்டுக்கொள்ளக்கூடாது, வளையல் போட்டுக்கொள்ளக்கூடாது என்று பலவிதமான கட்டுப்பாடுகள்.

அப்படியே நொறுங்கிப் போய்விட்டாள் அந்தப் பெண் குழந்தை. எப்போதடா ஞாயிற்றுக் கிழமை வரும் என்று காத்துக்கொண்டிருப்பாள். ஒரு தடவை நான் வந்து பேசட்டுமா என்று கேட்டேன். ‘அவங்க போட்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு சொல்லலியே’ என்றாள். அப்ப நீ ஏன் போட்டுக்கிட்டு போகமாட்டேங்கிற என்று கேட்டபோது, அது அப்படித்தான், போட்டுக்கிட்டு போனா எதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க அதான் என்றாள். எப்படி நெருக்கிறார்கள் பாருங்கள். தங்க வளையல் போட்டால் தொலைந்து போகும் என்பது சரிதான். அதற்காக சாதாரண கவரிங் வளையல் கூடப் போட்டுக்கொண்டு போகக்கூடாதா என்ன? இந்தப் பள்ளிக்கூடங்கள் நேரடியாக ‘நாங்கள் கிறிஸ்துவப் பள்ளிகள். அதனால் இதையெல்லாம் செய்யக்கூடாது’ என்று சொல்வதில்லை. மாறாக, அதற்கு ஏதேனும் காரணங் கற்பித்துத்தான் சொல்கிறார்கள். ஆனால் உள் நோக்கம் என்னவோ இதையெல்லாம் ஹிந்து மதச் சின்னமாகப் பார்த்து அதனை அனுமதிக்கக்கூடாது என்று நினைப்பதுதான். ஒருநாள் அந்தப் பெண் பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது காலில் கொலுசு போட்டுக்கொண்டு, அதன் மேல் சாக்ஸ் போட்டுக்கொண்டு, ஷூ போட்டுக்கொண்டு போனாள். நீ நடக்கும்போது சத்தம் கேட்காதா என்று கேட்டேன். சாக்ஸ் போட்டிருக்கேன்ல, கேட்காது என்றாள். கொலுசு போடுவதன் அர்த்தமே அழிந்துபோக, மனத் திருப்திக்காக அப்படிப் போட்டுக்கொண்டு செல்லும் குழந்தையைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

இன்னொரு கிறிஸ்துவப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பையனின் அப்பா என்னிடம் ‘நேத்து என் பையன் என்னவோ பேசிக்கிட்டிருந்த சேசப்பான்னு சொன்னான், ஷாக்காயிடுச்சு’ என்றார். இந்த ஷாக் எல்லாம் தானாக வருவதல்ல, நாமாக சென்று ஏற்படுத்திக்கொள்வது என்று அவரிடம் சொல்லலாமா என நினைத்தேன். ஆனால் அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ஹிந்துப் பள்ளிக் கூடங்களில் சேர்க்கலாம் என்றால், பக்கத்தில் நல்ல ஹிந்துப் பள்ளிக் கூடங்கள் இருப்பதில்லை! சில ஹிந்து ஆன்மிக இயக்கங்கள் நடத்தும் பள்ளிக் கூடங்களிலோ கட்டணம் அதிகமாக இருக்கிறது. கட்டணம் குறைவாக வாங்கும் ஹிந்துப் பள்ளிக்கூடங்கள், நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவப் பள்ளிகளோ நம் வீட்டுக்கு அருகில் நான்காவது இருக்கின்றன.

இப்படி நான் என்னுடைய சிநேகிதனிடம் சொல்லிக்கொண்டிருந்த போது அவன் சொன்ன விஷயம் இன்னும் வேதனையானதாக இருந்தது. இப்படி கிறிஸ்துவப் பள்ளிகளுக்குப் போட்டியாக ஒரு ஹிந்து அமைப்பு ஒரு ஹிந்துப் பள்ளியைத் தொடங்கியதாம். ஒரு மானேஜ்மெண்ட் பள்ளி. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. பின்னர் போதிய பணம் இல்லாத காரணத்தால் நல்ல ஆசிரியர்களை நியமிக்க முடியாமல், பள்ளியின் போக்கும் தரமும் மிகவும் கீழே இறங்கிவிட்டதாம். ஹிந்து உணர்வு அவரை அந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்கிறது என்றாலும், என் பையனின் எதிர்காலம் என்னை அந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டாம் என்று தடுக்கிறது என்றார் அந்தத் தகப்பனார். ஏதேனும் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் வாசிக்கப் போடலாம் என்றால், அந்தப் பள்ளிக்கூடங்களின் தரமோ இன்னும் மோசம் என்றார். யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

பெரும்பாலான கிறிஸ்துவப் பள்ளிகள் அரசாங்க உதவியுடன் (கவர்மெண்ட் எயிடட்) நடப்பவைதான். அதாவது நம் அந்தப் பள்ளிகள் நடப்பதில் நம் வரிப்பணமும் உள்ளது. எனவே நாம் கொஞ்சம் விழித்துக்கொண்டால் போதுமானது. ஹிந்துப் பள்ளிக்கூடங்களாகப் பார்த்துச் சேர்க்க வழி இல்லை என்றால், இப்படி பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டு, பாடம் நடத்துகிறேன் என்ற போர்வையில் மதப் பிரசாரம் நடத்துவதாகத் தெரிந்தால், நாம் பயப்படாமல் சென்று அந்தப் பள்ளிக்கூடத்தில் பேசவேண்டும். நம் பிள்ளைகளிடமும், நான் வந்து இப்படி பேசுவதால் உன்னை என்ன செய்வார்களோ என்று பயப்படாதே, அவர்களால் அப்படி ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இதை நிறைய பேர் செய்ய ஆரம்பித்தால் இப்படி பிரசாரம் செய்யும் வேலையை அவர்கள் நிச்சயம் நிறுத்தியே ஆகவேண்டும்.

நிறைய ஹிந்துப் பள்ளிகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படி ஹிம்சைக்கு ஆளாவதில்லை. எல்லா ஹிந்துப் பள்ளிக்கூடங்களும் மறக்காமல் சர்வ சமயப் பிரார்த்தனைதான் நடத்துகிறார்கள். கோவிலுக்குள்ளே வந்து கும்பிட்டு, திருநீறு வாங்கிக்கொண்டு, பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போ என்று ஒரு கிறிஸ்தவப் பையனைச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால், இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இதெல்லாம் நம் தலையெழுத்து இல்லாமல் வேறென்ன!

29 Replies to “கிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை”

  1. நல்ல கட்டுரை. இவர்கள் செய்யும் குள்ள நரி வேலையால் எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டு உள்ளது. பெண்ணின் பெயர் மகாலட்சுமி, அவர் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் ஆசிரியை-யாக பணியாற்றினார். ஒரு வருடம்கூட ஆகவில்லை அவரை முழு நேர சர்ச் பணிக்கு மாற்றிவிட்டனர். இன்று அவர் பெயர் மேரி.

  2. பாதாளம் வரை பாயும் பணம் பாரத மக்களை பாதாளத்திற்குள் புதைக்கிறது.

    கட்டுரை சொல்லுவது போல மாணவர்களையும் தங்கள் மதம் பரப்பும் வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    மதுரையில் உள்ள பெண்களுக்கான கிறுத்துவப் பள்ளி ஹாஸ்டலில் இது தீவிரமாகவே நடக்கிறது. விடுதியின் ஒவ்வொரு அறையிலும் மற்ற மாணவிகளோடு ஒரு கிறுத்துவ் மாணவியும் இருப்பார். மற்ற மாணவிகள் தவறு செய்யாமல் இருக்க உதவும் வேலை இவருக்கு. மின்சாரம் தடைப்பட்டால் விடுதியில் உள்ள அனைத்து மாணவிகளும் மண்டியிட்டு சத்தமாகப் ப்ரேயர் செய்ய வேண்டும். ப்ரேயர் செய்யாத மாணவியை அவளது அறையில் உள்ள அந்தக் கிறுத்துவ் மாணவி போட்டுக்கொடுப்பார்.

    ஞாயிற்றுக் கிழமை சர்ச்சிற்குப் போகாதவர்களை, பரிட்சையின் ஒவ்வொரு நாளும் சர்ச்சில் போய் மெழுகுவர்த்தி ஏற்றாதவர்களை எல்லாம் போட்டுக்கொடுப்பதும் இவரது பணியாகும்.

    ஒரு ரம்ஜான் மாதத்தில் அங்கிருந்த இசுலாமிய மாணவிகள் இரண்டு பேர் தொழுகை நடத்த முயன்றார்கள். விடுதி நிர்வாகம் தடை செய்தது. அவர்கள் இருவரும் உணவு சாப்பிட மறுத்து மூன்று நாட்கள் பட்டினி இருந்தனர். விஷயம் அந்த மாணவிகளின் பெற்றொருக்குத் தெரிய வர, அவர்கள் வந்து பள்ளி தொடர்ந்து நடக்க வேண்டுமானால், எங்கள் விஷயங்களில் தலையிடக்கூடாது என்று அமைதி மார்க்கத்தைப் போதித்த பின்னர்தான் அந்த மாணவிகளுக்குத் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    அடுத்த வருடம் அந்த இசுலாமிய மாணவிகளுக்கு விடுதி வழங்கப்படவில்லை.

    (Edited and published.)

  3. A timely article. One of my friend, who put her her daughter in a christian school in Anna Nagar, changed the school after a year or two, because the school was preaching too much to the Hindu students and are forcing them to attend church and prayers. Since the child, who was just in UKG was not able to face this pressure, she changed the school.

    ‘Secularism’ is only for Hindus in our country. Only we should follow it and not one should follow. When Nithyananda is slapped with a case of hurthing Hindu sentiments, there is no way we can do the same thing on the person who says ‘Rama is a drunkard’ or ‘In which college Ram studied?’ etc…

    nalla secularism..

    //இதெல்லாம் நம் தலையெழுத்து இல்லாமல் வேறென்ன!

    Well said… 🙁

  4. Good article !

    I studied in a school run by “Vivekananda Educational Society”. I owe all my good qualities and patriotism to that school. They were running nearly 10 schools at the suburbs of Chennai ( Vivekananda Vidhyalaya ) that time. There are still many such organizations which run schools as non-profit. We should donate at least a brick to these schools, even if they are not in our locality.

    A request to parents ! Even if you are selecting a Christian School for your Child, Please spend some 2 hrs every week with your child telling him/her Hindu stories, significance of temples, saints etc. That will undo the brain washing the child receives in the schools.

  5. முள்ளின் மேல் கால் வைத்துகொண்டு, முள்ள குத்துதே என்று சொல்வதை விட, அதை விட்டு தள்ளி இருப்பது வலியை தடுக்கும். எனவே கிறித்துவ பள்ளிகளில், பிள்ளைகளை தவிர்த்து, இந்து பள்ளிகளில் சேர்த்தால் எந்த பிரச்சனயும் இருக்காது. என்னோட பக்கத்துக்கு வீட்டுக்காரர், தன்னுடைய மகனை ஒரு இந்து பள்ளியில் சேர்த்தார், அங்கே இந்து தியானம் செய்வது அனைவர்க்கும் கட்டாயம். அவருக்கு பிடிக்காமல் கிருத்துவ பள்ளியில் சேர்த்தார். எனவே அவர்களது குடும்ப வழக்கத்திற்கு ஏற்ற பள்ளிகளில், பிள்ளைகளை சேர்க்கலாம். எதுவும் கட்டாயம் கிடையாது. அணைத்து இந்து கல்வி நிலையங்களிலும் விநாயகர் கோவிலும், கிருஸ்தவ நிறுவனங்களில் சர்ச்-ம், முஸ்லிம் நிறுவனங்களில் தொழுகை இடமும் உண்டு, எனவே சரியான பள்ளியை தெரிந்து எடுப்பது அவர்களது விருப்பம்.

  6. அது மட்டு இல்லை ஹிந்து பண்டிகைகளுக்கு லீவ் கிடையாது
    லீவ் போட்டால் புனிஷ்மென்ட்
    இதெல்லாம் கோவேர்ந்மேன்ட் ஐதேத் ஸ்கூல் . நம்ம பணத்துல நமக்கே ஹல்வா

    தைரியமா கேள்வி கேட்டதன் அடங்குவாங்க

  7. ராஜா அவர்கள் சொல்வதை வழிமொழிகிறேன்.

    இந்து சமயம் என்ன சொல்கிறது? இந்துதர்மம் என்றால் என்ன என்று இங்கே தமிழ் இந்து தளத்தில் அருமையாக எழுதியிருக்கிறார்கள்.

    இவற்றை கிறிஸ்துவர்கள் செய்வது போல pamphlet களாக செய்து கிறிஸ்துவ பள்ளிகளின் முன்னால் நின்றுகொண்டு அங்கு வரும் குழந்தைகள் கையில் கொடுக்கலாம்.

    இதனைத்தானே அவர்களும் செய்கிறார்கள்? ஆகையால் தமிழ் இந்து இளைஞர்கள் இது போல செய்யக்கூடாது என்று சொல்லமுடியாது.

    இந்து இளைஞர் அமைப்புகள் பல இருக்கின்றன. அவைகள் இவற்றை முனைப்புடன் செய்யும். தேவையானது இது போன்ற துண்டு பிரசுரங்களே.

    அதனை தமிழ் இந்து தளம் செய்யுமெனில் பெரும் மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வர இயலும்.

  8. சரியானது! நாமும் துண்டுப் ப்ரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படச் செய்யலாம்! தமிழ் ஹிந்து அதற்கு உதவலாமே! எல்லாரும் அதற்கு உதவலாமே!

  9. This is my own experience. After completing my sslc. i joined st puals HSS, salem for doing my higher secondary.. i was forced to sing their religious songs. i was not matured enough to deal with that issue Even i couldn’t say this to my parents.Those times, i was totally depressed; Apart from the syllabub book,, they also have additional book. Each and every line of this book speaks about their religious indirectly. i was there for almost three months. i was like hell for me. i have no words to say about the pain which i got… I discontinued my higher studies.without informing about my real problem. A

    Because of my discontinuation, i had to face so many problem. i was insulted by every body. But, i didn’t loose my faith on GOD. I got a ‘sagalakala valli malai’ book from my neighbor. I used to read it on every Sunday. Next year, i joined in gugai HSS. Even though, the Gugai hss management belongs to Hindu community. they never asked any one to sing hindu religious songs. Now, i am working as a research engineer.

    If we have faith on GOD, he will surely help to us in anyway. In my case, i got a ‘sagalakala valli malai book’. because of that, i got confidence and Ma saraswathi’s blessings.

    My humble request to Tamil Hindu reader, please avoid this Cristian religious school. They will make your kid as a slave of their religious. They have very clever strategy. they will slowly poison our kids mind in the name of discipline.

    Please think, is there any discipline in western country?
    how the people who follows western religious and their concept can teach about the discipline?

    in case if your kid have any problem in studies, please ask them read ‘ sagala kala valli malai’ book. I am sure. your kid will be able come out from any type of distress and negative things.

  10. நான் ஏற்கனவே இத்தளத்தில் இதை பற்றி ஒரு முறை என் விமர்சனத்தில் கூறினேன். அதற்கு முன்னர்: அமிர்தராஜ் – ஏன் சார் !! பிள்ளைகளை படிக்கவும் நல்லொழுக்கம், திறமை ஊக்குவித்தல் போன்றவற்றுக்காக தான் பள்ளிக்கு அனுப்படுகிறார்கள். இறை வழிபாடு இருக்கவேண்டியது தான். ஆனால் நாங்கள் கூறும் இறைவனைதான் வழிபடவேண்டும், எங்கள் வழக்கப்படிதான் நடை,உடை எல்லாம் இருக்கணும்னு கட்டாயப்படுத்துவது சரி என்கிறீர்களா? இந்திய அரசாங்க சட்ட திட்ட விதிகளின்படி கட்டணம் வசூலித்தோ, அதற்கு மேலோ வசூலித்தோ தான் பல பள்ளிகள் நடத்த படுகிறது. பின் ஏன் இந்த கட்டாய ஜல்லி?? இதற்க்கு பெற்றோரும் காரணம். அந்நாளில் நல்ல குளு குளு வசதியுடன் ஊட்டி, கொடைக்கானல், சிம்லா போன்ற மலை வாசஸ்தலங்களில் நம் இந்திய ஊழியர்கள், இந்திய மண்,கல், மரம் இவற்றை கொண்டு நம் தலையிலேயே மிளகாய் அரைத்த வெள்ளை பரங்கியரின் ஏமாற்று வித்தையில் , அவர்களின் கல்வி கூட நேர்த்தி, ஆங்கில மோகம் போன்றவற்றுக்கு அடிமைஆகினோம். அந்த மோகம் இன்றளவும் தலைமுறை தாண்டி ஊட்டிவளர்க்க படுகிறது.
    சார் !! என்னவோ ஹிந்து மதம் சார்ந்த அறக்கட்டளைகள் பள்ளிகளை தொடங்க முன்வருவது இல்லை,முன் வந்தாலும் வியாபார நோக்கு என்று சொல்கிறார்கள். DEO, அல்லது கல்வி மந்திரியிடம் வரைக்கும் பணம் பாய வேண்டுமே? முதலில் கடை நிலை ஊழியர்களிடமிருந்து, பல இடங்களில் கிறுத்துவ,முஸ்லிம் மக்கள் அல்லவா இருக்கிறார்கள் (thanks to quota system !!!) முஸ்லிம்களை விடுங்கள் அவர்களால் இந்த விஷயத்தில் எந்த தொந்தரவும் அவ்வளாவாக கிடையாது. சிறு வயதிலேயே மதரசாக்கள் நன்றாக !!! கவனித்து விடும். ஆனால் பைபிள் பரப்பிகள் ஒரு சில கல்வி நிறுவனங்களை கசக்கி பிழியும் கொடுமை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இதற்காக கட்டணம் வசூலித்தே பெருச்சாளி ஆக சொல்லவில்லை. ஆயினும் இப்படியும் நிலைமை இருக்கிறது என்பதை நம் போன்ற திருவாளர் பொது ஜனம் புரிந்து கொள்ள வேண்டும். (எப்படியும் இவர்கள் வாய் திறந்து கேட்க போவது இல்லை). நம் அரசு கல்வி கூடங்களில் சேர்க்க முன் வந்தாலும், கல்வி தரம் ??? கேள்விகுறியாக இருக்கிறதோ இல்லையோ. முண்டம், அரைலூசு என்று ஆங்கிலத்தில் திட்டினாலும் ஆஹா ! பிள்ளை என்னமா இங்கிலீசு பேசுது !!!. ஏன் பேரன் கொல்லபுரதுக்கு(புரிந்து கொள்க) போகனும்னாலும் இங்கிலீசுலதேன் கேக்குறான். என்று பெருமிதம் கொள்ளும் பாட்டிமார்களும் !! சாக்கடையில் காசு பொறுக்கினாலும் கூட பிள்ளை படிப்புக்கு கான்வென்ட்(convent unnu use பண்ண கூடாதுன்னு ஒரு கிறுத்துவ நிலையம் கேசு போட்டிருக்கு) தான் போகணும்னு ரா பகலா coding,implementation SAP அப்டின்னு சாவுற தாய் தகப்பன்கள். இப்படி பல காரணம் இருக்கும் போது எப்படி சார் முடியும். நான் RSS ஆளு கிடையாது(அப்படி இருப்பதும் தவறும் இல்லை). ஆனால் மேற்கு இந்திய எல்லைகளிலும், வடகிழக்கில் பல மாநிலங்களிலும் பல சமுதாய மக்களை எந்த வித வித்தியாசமும் இல்லாமல் RSS இயக்கத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி சாலைகளில் ஏழை முஸ்லிமும், பணக்கார சேட்டு குழந்தையும் ஒன்றாக எவ்வித பாகுபாடும் இன்றி பயின்று வருகின்றனர். பெற்றோரும் எவ்வித தயக்கமும் இன்றி அனுப்புகின்றனர். இது ஏதோ செய்தி தாளிலோ, இணையதளத்தில் இருந்தோ எடுக்கப்பட்டவை அல்ல. என் சொந்த அனுபவம். என் தந்தையார் ரயில்வே அதிகாரி. ஆகையால் பல வெளி மாநில அனுபவம் நிறையவே வைக்க பெற்று உள்ளது. ஆனால் நம் செந்தமிழ் நாட்டினில் தான் தேன் போன்ற திராவிட நாத்திக மாயை எந்த வித நல்ல செயல்களையும் செய்ய விடாதே?

    வெளிப்படையாகவே எழுதுகிறேன். திருச்சியில் ஒரு பயிற்சி உண்டு. கிராம சேவைக்காக. ஆனால் இன்று இவர்கள் சென்ற கிராமங்கள் பல சொந்த தெய்வங்களான மாரியம்மன், முருகன் போன்ற வழிபாடை விட்டு விலகி. இது ஏதோ படிக்காத பாமரர்கள் அல்லது இந்த வழிபாடு, திருவிழா போன்றவற்றை நடத்தினால் நம்மை கிராம பண்டாரம் என்று கேலி செய்வார்களோ என்று உளவியல் ரீதியாக மிகவும் மாற்றப்பட்டு பலர் ஆபிரகாமிய மதங்களுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தில் இல்லை என்றாலும். thanjavur passenger வேகத்திலாவது மாறி கொண்டு இருக்கிறார்கள். ஊர் பெயர்கள்: கவுண்டம்பட்டி, குறிச்சி,கோப்பு,சீராதொப்பு, நச்சலூர், பாடாலூர், பிராட்டியூர், மணிகண்டம், முசிறி, நாகமலை(இந்த ஊரே இன்று மூலிகை தோட்டம் தான் ஆனால் இவர்கள் கட்டுபாட்டில்). இந்த ஊர்கள் அனைத்தும் திருச்சி சுற்றி உள்ளது. இவர்கள் அனுப்பும் சேவை குழுவில் brother என்று சொல்லப்படும் கிறுத்துவ இளம் பாதிரி குருத்து செல்லும். இந்த பிரதர் வைத்ததே சட்டம். பிறகு நீங்களே யோசித்துக் கொள்ளவும் எப்படி நிலைமை என்று. இந்த கல்லூரியில் முது நிலை பட்டங்களில் ஒரு ஹிந்து பெண்ணோ, முஸ்லிம் பெண்ணோ, ஏன்? protestant பெண்கள் கூட சேர இயலாது. இவர்களின் சிஸ்டர் institution . இங்கு பெண்கள் மட்டுமே. ஆயினும் ஒரு சில பேராசிரியைகள் கல்வி போர்வையில் இங்கே அடிக்கும் கோட்டம் ஆண்டவரே !!!! உமக்கே வெளிச்சம். இவன் ஏதோ போட்டி கல்லூரி சேர்ந்தவன், ஹிந்து வெறி பிடித்த ஆள் என்று பேர் கட்டி ஒதுக்குவார் இந்த உண்மைகளை இங்கு கூறினால். மேலும் திருவரங்கம் – கோவில் சார்ந்த ஊர். இங்கு கோவிலுக்கு வெகு அருகாமையில் ராகவேந்திர மடம். இதற்கு அருகில் ஒரு தனியார் பள்ளி. முன்னர் ஹிந்துக்களால் நிர்வகிக்க பட்டது. இன்று பெரும் கிறுத்துவ மிஷனரி ஒன்றால் முழு நிர்வாகம் செய்ய படுகிறது. ஏன் செய்தால் என்ன? செய்யட்டும். ஆனால் முழுக்க முழுக்க கிறுத்துவ பஜனை, ஜெப கூட்டம்தான். சிறு மழலையர் ஆயினும், பள்ளி இறுதி படிப்பு பயிலும் மாணவன் வரை பாடித்தான் ஆக வேண்டும். பெரிய கோவில் உள்ள பகுதிக்குள் இருப்பதால் பெயர் மட்டும் ஹிந்து மத பெயராகவே தொடர்கிறது. பின் மக்களை ஏமாற்ற எப்படி முடியும்? இன்னும் வெளிபடையாக சொல்லலாம் ஆனால் பல தனியார் பெயர் எக்கச்சக்கமாக மாட்டும். தமிழ் ஹிந்து நிர்வாகிகள் வெட்டி (commentai வெட்டி) விடுவார்கள். ஒரு சின்ன clue மட்டும். சென்னையில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் மிக பெரும் தலைவரும் அடிக்கடி மஞ்ச துண்டு தலைவரை சந்திக்கும் ஆமாம் பேராசிரியர்(எப்படித்தான் இப்படி ஆசிரியர்,பேராசிரியர்னு போட்டுகிறாங்க?) ஒருவர் இந்த பள்ளிக்கு பெரும் ஆதரவு தருகிறார்.

    (Edited and published.)

  11. சார் நான் இதன மாதிரி துண்டு பிரசுரம் போல ஒரு சில கட்டுரைகளை போட்டு குடுக்கலாம். ஆனால் தமிழ் ஹிந்து தளம் அனுமதி தராமல் செய்யலாமா? நான் ஒரு சில முறை யோசித்து பிறகு விட்டு விட்டேன். இன்னொரு செயலையும் இங்கு சொல்லிவிடுகிறேன். பெரியார்(இவன் ஒரு சிறியார் தான்) பற்றிய கட்டுரை ஒரு சிலவற்றை இங்கு இருந்து copy செய்து ஒரு சில திராவிட நாத்திகவாத வெறியர்களிடம் அனுப்பி உள்ளேன். அவர்கள் தளத்திலோ, பத்திரிக்கையிலோ இதை பற்றி மூச்சே விடவில்லை. எனினும் இப்படி செய்வது தவறோ என தோன்றுகிறது. தமிழ் ஹிந்து தளம் அனுமதித்தால் செய்யலாம். நல்ல முயற்சியே !!!. ஏன் என்னில் பல கிராமத்து இளைஞர்கள், ஏழை பாமரர்களுக்கு இணையத்தில் இது போன்ற விழிப்புணர்வு தளங்களோ, blogs (jataayu,agappayanam,nanavuhal) போன்றவை இருப்பதோ, இல்லை படிக்கவோ சமய சந்தர்ப்பம் வாய்க்காமல் இருக்கலாம். இவை அவசியம் வெளிப்படுத்த வேண்டிய செயல்.

  12. இந்த நிலைமைக்கு இந்து பெற்றோர்களை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும்.

    என்ன காரணமாக இருந்தாலும், கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தால், ஒரு வருடத்தில் அனைத்து கிறிஸ்துவ பள்ளிகளும் மூடப்பட்டுவிடும்.

    ஆனால், இந்து பெற்றோருக்கு தரமான இந்து பள்ளிக்கூடங்கள் தேவையாக இருப்பதால், இப்படி கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களை தற்போதைக்கு புறக்கணிக்க முடியாமல் இருக்கிறது.

    மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களில் பணம் ஏராளம். தொழில் முனைவோர்கள் மெட்ரிகுலேஷன் இந்து பள்ளிக்கூடங்களை ஆரம்பித்து நல்ல தரமான கல்வி கொடுக்க ஆரம்பித்தாலேயே போதுமானது.

    இந்து அமைப்புகள் திட்டமிட்டு ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களை அமைக்க முயன்றால், பத்தே வருடங்களில் நிலைமையை மாற்றிவிடலாம்.

  13. மதுரை விடுதி வசதியுடன் இயங்கும் ஹிந்து மேல்நிலை பள்ளிகூடங்கள் பற்றிய விவரங்களை தயவு செய்து கொடுங்களேன்.

  14. Unlike what Mr.Rangasamy says, the fault is not just with Hindu parents but also the attitude of the heads of Hindu educational institutions.
    There is a school in West Mambalam which says it has been nurturing Hindu thoughts and ethos. The school uniform says it all- one piece white dhoti and half shirt in white for boys; Double-plait hair, long skirt, blouse with dhavani for girls.
    It starts with the man in the front-office who looks at any parent walking in for information on admission as if he/she is a lump of shit. Call it contempt or arrogance, the man in the enquiry desk will be as vague as possible and will try to dismiss you at the earliest!
    So the parent returns like a ball hurled agains the wall and excatly like the way he entered- with no information whatsoever on admission procedures or dates!

    Now move on to another educational institution little away from the school mentioned earlier. Here they carry the prefix ‘Hindu’ in their name and you enter the place with confidence. Here the front office is manned by an unsmiling personnel who we learn later is doing ‘honorary service’ after retirement! You ask him about prospectus/admission procedures. His cheecks bulging out with a heavy load of tobacco mix, he tilts up his chin and mumbles something which can mean anything. He is irritated that you are not able to decipher what he said and dismisses you with a very vague ‘ come back in May!” The principal of the institution is a law unto herself- a lady you can spot at Ashok Pillar junction slapping an errant two-wheeler driver! Plus 2 Students are supposed to dedicate their project work with a 4-line poem on her achievements which should appear invariably on the first page of their record book!!!

    Dear Hindu brothers and sisters, the point I am trying to make here is we are lacking in PR and being nasty to information-seeking parents without any provocation comes to us naturally.
    Notwithstanding my strong pro-Hindu thoughts and commitment to Hindu unity, I must admit we need to learn these qualities from Christians. How many of us have the time or the patience to suffer the indifference and arrogance of the heads and personnel of Hindu educational institutions. Courteous answering of telephones greeting people with a smile or trying to be of help are something we are unaccustomed to. Having a goal is one thing and transferring it to the man in the lowest level of the organisational pyramid is another . We have totally failed in this area. This is how all our religious institutions also function. At this rate you will find functionaries of Hindu outfits will make a beeline before Christian educational institutions to enroll their children!

  15. ஒரு புறம் ஆரிய பார்ப்பனர்கள் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பிய கிருஸ்தவர்களுக்கு வால் பிடித்துக்கொண்டு
    அவர்கள் உலகமனைத்திலும் செய்யும் அயோக்கியத்தனத்துக்கும் காலனி ஆதிக்கத்துக்கும் துணை போய்க்கொண்டுண்டும் இருந்துக்கொண்டு,
    மறுபுறம் குத்துது குடையுது என புலம்புகிறார்கள்.
    மதம் மட்டும் அவர்கள் மாற்றவில்லை உலகத்தின் வளங்களை ஆசியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்கு கிடைக்க விடாமல் செய்வதோடு
    நம்முடைய நிம்மதியான வாழ்க்கைகளையும் தான் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

  16. My cousin she studied in a Cristian collage; They made her as a Cristian…My strong advise is dont trust Cristian educational institutions, they are Evangelist [meaning of ‘Evangelist’ is – a Christian who tries to persuade other people to become Christian, especially at public gatherings or in broadcasts]

  17. mahesh
    // ஒரு புறம் ஆரிய பார்ப்பனர்கள் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பிய கிருஸ்தவர்களுக்கு வால் பிடித்துக்கொண்டு //
    இதில் சிறியமாற்றம் அன்றிலிருந்து இன்றுவரை கிருஸ்துவர்களுக்கு வால் பிடித்துக்கொண்டிருப்பது திராவிட பகுத்த அறிவு இல்லாத கூட்டம். அப்பத்தை வெகுகாலம் சுவைத்துக்கொண்டிருக்கமுடியாது. ஒருநாள் குரங்குகதைபோல் நடுவில்மாட்டி சாகபோவது நடக்கும். இப்படியே போனால் இலங்கை தமிழனுக்கு ஏற்ப்பட் கதியே இங்குள்ள தமிழனுக்கும் நடக்கும். பட்டும் திருந்தாத ஆட்டுமந்தையிலிருந்து வெளியே வாருங்கள்

    (Edited and published.)

  18. இப்போது வழக்கத்தில் இருப்பது கிறிஸ்துவ கல்வி முறை. ஒரு சர்ச்-க்கும், பள்ளிகூடத்திற்கும், பெரிய வித்தியாசம் இருக்காது இரண்டிலுமே பெஞ்சுகள் வரிசையாக போட பட்டிருக்கும். வெள்ளையர்களின் வருகைக்கு முன்பு நம்மிடையே குருகுல கல்வி முறை இருந்தது. முஸ்லிம்கள் “மதரசா” பள்ளியை பின்பற்றினார்கள். எனவே மற்றவர்களின் கல்வி முறையில் குறைகள் காண்பதை விட, குருகுல கல்வி முறையை மீண்டும் ஆய்வு செய்து, நடை முறை படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

  19. அய்யா மிக்க நன்றி செய்யகரிய பணியை செய்து கொண்டு இருக்கிறிர்கள்.. நான் இது போன்றதொரு வெப்சைட்- தான் பல நாளாக தேடி கொண்டிருத்தேன்..

  20. மதம் கூடாது என்று தீக்காகாரனும் கம்முநிச்ட்காரனும் சொல்லுவான்,ஆனான் கிருஸ்து பள்ளிகூடத்தில் இப்படி மதத்திணிப்பு செய்கிறார்கள் தட்டிக்கேப்போம் வாங்கையா என்றால் வரமாட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் கிருஸ்தவர்,முஸ்லீம்களுக்கு வால் பிடிக்கும் மதவெறியர்கள்.அவர்களின் இலக்கு எல்லாம் ஹிந்துக்களை,ஹிந்து கலாசாரத்தை ஒழிப்பதுதான்.மத்திய, மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்போடுதான் இந்த மாதிரி அநியாயமெல்லாம் நடைபெறுகிறது. கேட்டால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஒளிந்துகொல்வார்கள்.ஹிந்துக்களிடம் மதப்பற்று வரும்வரை,யாரை சொல்லியும் குற்றமில்லை.ஹிந்து பள்ளிகூடங்கள்,கல்லூரிகள் தரத்தையும் உயர்த்தணும்.

  21. பள்ளிகளில் மட்டுமா மதப் பிரச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது? அரசு நிறுவனங்களிலேயே பகுத்தறிவு பரப்புகிறோம் என்கிற பெயரில் என்ன நடக்கிறது க்ளிக் செய்து பாருங்கள் https://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7564

  22. தமிழ் தமிழ் என்று வாய் கிழியப் பேசும் தானைத் தலைவர் ஆட்சியில் ஏன் பள்ளிகளில் கட்டயமாகத் தமிழ் படிக்க வேண்டும் என்று கொண்டு வரவில்லை?
    ஐயா ,தமிழ் மீடியம் வேண்டாமையா ,வேறு எந்த மீடியத்தில் வேண்டுமானாலும் படிக்கட்டும் ,குறைந்த பட்சம் தமிழ் ஒரு பாடமாகப் படிக்க வேண்டும் என்று கொண்டு வருவதில் என்ன கஷ்டம்?

    உக்கும், அங்கே தானே இருக்கு விஷயம்
    முக்கால்வாசி் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கிறித்தவர்களால் நடத்தப் படுகின்றன.
    அவர்கள் தமிழை போதிக்கத் தயாராக இல்லை
    அப்படிச் செய்தால் மாணவர்கள் கொஞ்ச நஞ்சம் நமது மண்ணின் வாசனையை முகர்ந்து விடுவார்கள்
    ஒரேயடியாக அந்த வாசனை மறக்க அடிக்கப் பட்டு ஆங்கிலம் மட்டுமே படித்தால் தான் அவர்கள் மிகச் சிறந்த ‘மேற்கத்திய கார்பன் காப்பிகளாக’ உருமாறுவார்கள்.
    எதிர் காலத்தில் நமது கலாச்சாரத்தையும் நாட்டையும் அவர்களே அழிப்பார்கள்
    அதுதானே அவர்களுக்குத் தேவை.

    ஓட்டுப் பெட்டியும் பணப்பெட்டியும் சேர்ந்து ஆள்பவர்களைக் கட்டிப் போடுகிறது
    இனித் தமிழ் மெல்லச் சாகும் .
    தமிழ் மட்டுமல்ல தமிழ் நாடும் மெல்லச் சாகும்
    பாரத நாடும் மெல்லச் சாகும்

    இரா .ஸ்ரீதரன்

  23. வாழ்க்கைக்கு அத்தியாவசியமான புனிதமான கல்விப் பணியில் மத நம்பிக்கைகளைத் திணித்தால் யார் செய்தாலும் அது தவறுதான்;

    இளங் குருத்தான மாணவர் உள்ளத்தில் பொதுவான இறையச்சம் கள்ளத்தைத் தவிர்த்து நல்வழிப்படுத்தும்;ஆனால் அது அளவுக்கு மீறினால் நஞ்சாகும்;எதிர்விளைவையே ஏற்படுத்தும்..!

  24. காரைக்காலில் உள்ள oru பள்ளியிலும் கிருத்துவ kalaachara vakuppu matrum dance, pattu nikazchikalil pangerka vendum endrum – muslimkal ithil pangerka maattom endraal muthalil solli vittu veru school parthu kollungal… pirahu tc mattumthan tharuvom… marksheet tharamattom endru antha muthalvar admission timela kandippaka solkirar – ithanal muslimkal antha schoolil sera mudiyavillai…

  25. please namma ellarum ஒன்னaa சேர்ந்து idhukku oru முடிவு kattanum

  26. I DO NOT REMEMBER THE NAME OF TAMIL MOVIE IN WHICH LATE RAGHUVARAN WAS ACTING AS A ”C M’ OF A STATE. THE STORY GOES WHEN AN OLD FRIEND OF THAT CHIEF MINISTER COMES TO SEE HIM IN ORDER TO GIVE THE MARRIAGE INVITATION OF HIS DAUGHTER, THAT C M (RAGHUVARAN) SAW THE NAME OF DRIDE ( DAUGHTER OF HIS OLD FRIEND ) IN HINDU NAME AND BRIDEGROOM NAME IS A CHRISTIAN. THAT CM
    ( RAGHUVARAN) SAID TO HIS FRIEND ” DO YOU NOT GET AN HINDU BOY FOR YOUR DAUGHTER” WHAT A SHAME THAT YOU GET HER MARRIED TO A CHRISTIAN’ SAYING IN TAMIL ”ENDA ENNUM MANDI EDDERENGA ” ( WHY YOU PEOPLE STILL PUT DOWN YOUR KNEES DOWN ” ). I ENJOYED THIS MOVIE AND APPRECIATED THE GUTS OF LATE RAGHUVARAN TO BOLDLY INCLUDE THIS DIALOGE IN THIS MOVIE ESCAPING FROM THE ”SICKULARIST SENSOR BOARD ”. .

  27. நன்றி தமிழ் ஹிந்து,

    இந்தியாவை போல இலங்கையிலும் ஆங்கில மோகம் தமிழரை பிடித்து ஆட்டி கொண்டு தன இருக்கிறது..ஆயினும் பிரச்சனை அது அல்ல ..இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளை பட்டியல் இட்டால் அவை அனைத்துமே அரச பாடசாலைகள் தான்,எனினும் அங்கு பயிலும் இஸ்லாமிய ,கிறிஸ்தவ மாணவர்கள் பொய் பரப்புரைகளை கூறி நம் ஹிந்து மாணவர்களை அவர்கள் பாதைக்கு இட்டு செல்ல தலை படுகின்றனர்…அதிகம் தேவை இல்லை ,எனது சித்தியின் மகன் ஹிந்து பாடசாலையிலிருந்து இன்னுமொரு அரச பாட சாலைக்கு தரம் 6 இல் மாறி சென்றிருக்கிறான்.அங்கு பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் ,நீ என் மதத்திற்கு மாற விட்டால் உன்னை ஒதுக்கி வைத்து விடுவோம் ,என கூறி உள்ளனர். ஒன்றே குலம் ஒன்றே ஜாதி என போதிக்க வேண்டிய பள்ளிகூடங்கள் மத பிரசங்கமாய் மாறி போவதற்கு ஆசிரியர்களுமே காரணமாய் உள்ளனர் .இருந்த போதிலும் இந்து கல்லூரி,விவேகனந்தர் கல்லூரி ,சைவ மங்கையர் கழகம் போன்ற பாடசாலைகள் எம் மதம் ஆயினும் ஏற்று கொள்ளும் மன பக்குவத்தை கொண்டு உள்ளதுடன்,மத மாற்ற கருத்துக்களுக்கு இடம் அளிக்காமல் இருப்பது வரவேற்க தக்கது.தரம் 6 ஆயினும் என் தம்பி ஆன்மிக ஈடு பாடுடையவண்.அவன் மனதை குழப்பி மதம் மாற்றி அவன் கல்வியை சீரழிக்க இவர்கள் எடுக்கும் முயற்சியை எம் பெருமான் அழித்து காத்து அருள்வாராக

  28. @thamilan

    நான் தயார்,அனைவரையும் ஒன்றிணைப்போம் நம் தமிழ்ஹிந்துவில்

  29. In India we hindus , must capture the Government. இந்தியாவில் நாம் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவா்கள் -விவேகானந்தா் ஸ்ரீநாராணயகுரு அய்யா வைகுண்டா் போதித்த இந்து தா்மத்தில் நம்பிக்கை கொண்டவா்கள் – அரசைக் கைப்பற்ற வேண்டும். தேவையான சட்ட திருத்தங்களை துணிந்து கொண்டு வர வேண்டும். சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *