இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்

மூலம்: Josh Schrei

தமிழாக்கம்: பனித்துளி

இந்து மதத்தின் மையமான நம்பிக்கைகளைப் பற்றி, அந்த மதம் பற்றி அறிய ஆவலாக உள்ள ஒரு பார்வையாளருக்கு விளக்க முயல்வது சவால்கள் நிறைந்த ஒரு பணி என்றே சொல்ல வேண்டும்.

hindu-composite[ஒரு தனிப்பட்ட மதம் எனும் பொருள் தரும் வகையில்] அந்த மரபிற்கு இந்து “மதம்” என்று பெயரிட்டிருப்பதே பொருத்தமற்றது என்று அடிக்கடி பலர் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏனெனில், சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் துணைக்கண்டத்தில் புழக்கத்தில் இருந்து வரும் பல்வேறு ஆன்மீக மற்றும் மதச் சிந்தனைகளின் தொகுப்பையே அந்தப் பெயர் குறிக்கிறது. இந்த 5000 வருடங்களும் செயலூக்கம் மிக்க சுறுசுறுப்பான பல நிகழ்வுகளைக் கொண்ட வருடங்கள் என்பதை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

பிரம்மாண்டமாய் விரியும் இந்து சமய ஆன்மீக இலக்கியங்கள் மற்றும் சித்தாந்தங்களின் அளவு, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த தெய்வங்களின் அளவிட முடியா எண்ணிக்கை (சில மூலங்களின்படி இவற்றின் எண்ணிக்கை 30 மில்லியன்கள் !),   தனித்தன்மையுடன் உருவான தத்துவங்கள் மற்றும் சடங்குகளின் விரியும் பரப்பு,  காலவோட்டத்தில் இந்திய சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகள் அடைந்த முற்றிலும் வேறுபட்ட மாறுதல்கள்……..

இப்படி எல்லாம் ஒரு மதம் இருக்க முடியும் என்று ஆபிரகாமிய மதப் பின்னணி கொண்டவர்களிடம் போய் சொன்னால் அவர்களால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், மிகத் தெளிவான எல்லைகள் வரையறுக்கப்பட்ட மாறக்கூடாத ஆதார நம்பிக்கைகளுடன்தான் ஒரு மதம் இருக்கிறது என்றே ஓரிறை இறையியல் சூழலில் உள்ள நமக்கு மதமானது பழக்கப் பட்டுள்ளது. (நமது மதத்திற்குள்ளேயே மேலோட்டமான நம்பிக்கைகள் குறித்துச் சில நூற்றாண்டுகளாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில பிரிவுகளை விட்டுவிடுவோம்.)

ஆனால்,  வேறுபடும் பன்மைத்தன்மைக்கும், மாற்றத்தை அனுமதிக்காத ஒற்றைத் தன்மைக்கும் இடையே உள்ள வித்தியாசமே இந்து மதத்தை மற்ற மதங்களிடம் இருந்து பிரிக்கும் முக்கிய வேறுபாடு என்று சொல்ல முடியாது;   ஆன்மீக மூலங்களைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்துத்துவமானது ஒரு திறந்த மூல (open source) மதமாக திகழ்வதும், மாற்றக் கூடாத இறையியலைப் போதிக்கும் மற்ற மதங்கள் மூடிய மூல (closed source) மதங்களாக இருப்பதும்தான் மிக முக்கியமான வேறுபாடு.

“உற்பத்தி செய்யப்படும் ஒரு மென்பொருளை (softwareஐ) வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல், மற்றும் வினியோகம் செய்தல் ஆகியவற்றோடு அந்த மென்பொருளை உருவாக்குவதற்காக எழுதப்பட்ட மூல நிரல்களையும் (source codeகளையும்) பயன்பாட்டிற்குத் தரும் அணுகுமுறையே திறந்த மூலம் (open source) என்பதாகும்.”

மனித சிந்தனையை ஒரு மென்பொருள் என்று எடுத்துக் கொண்டு,  தெய்வத்தைப் பற்றிப் பேசினால் — தெய்வம் எனும் கருத்து, அந்தத் தெய்வத்தை அடையச் செய்யும் வழிமுறைகள், அது குறித்த புதுமையான எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் தத்துவங்கள் ஆகியவற்றின் மூல நிரல்களை அனைவரும் பயன்படுத்த இந்தியா என்ற நிலப்பகுதி தனது கதவுகளை அகலத் திறந்து வைத்துள்ளது.

அத்தோடு, அந்த மூல நிரல்களை வடிவமைக்கவும், புதிய நிரல்களைக் கண்டறியவும், எப்போதோ கண்டறிந்தவற்றை மீண்டும் அறியவும், கட்டுடைக்கவும், மேம்படுத்தவும், கற்பனை செய்யவும், கற்பனை செய்ததையே மீள்-கற்பனை செய்யவும் அது அனுமதிக்கிறது. அதனால், புலன்களும் ஆன்மாவும் கண்டு துய்த்த அனைத்து வித ஆன்மீக அனுபவங்களையும் ஆராய்ந்தும், அனுபவித்தும், கொண்டாடியும், பதிவு செய்தும் வைத்துள்ளது அந்நிலப்பகுதி.

chhinnamasta

இறை மறுப்பாளர்கள், பெண் தெய்வங்களை வழிபடுபவர்கள், போதை, புணர்ச்சி, புலால் மூலமாக இறையைத் தேடும் பதிதர்கள், சாம்பலைப் பூசிய துறவிகள், த்வைதிகள், அத்வைதிகள், சூனியவாதிகள், புலன் இன்பவாதிகள், கவிகள், பாடகர்கள், சீடர்கள், புனிதர்கள், குழந்தைகள், விலக்கப் பட்டவர்கள்…….

இவர்கள் அனைவருமே இந்து எனும் மூல நிரலில் பல வரிகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தியாவின் கடவுள் பணி திட்டம் (the God Project) என்று நான் அழைக்க விரும்புகிற இந்த இந்துத்துவம் உண்டாக்கிய விளைவுகள் வியப்பில் தள்ளாட வைக்கின்றன. மனத்தின் இயல்பு, நனவுணர்வு (conciousness),  மானுட நடத்தை, மற்றும் ஒருவரது மனத்தில் செயல்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்ட எண்ணிலடங்கா வழிமுறைகள் ஆகியவற்றால் இந்த ஞானக் களஞ்சியம் உருவாகியுள்ளது.

இதில் உள்ள விஞ்ஞானங்கள், நம்பிக்கைகள், மற்றும் அனுபவங்கள் ஒப்பிட முடியாதவை. மனத்தால் அறிதல் (mental cognition), புரிந்து கொள்ளுதல் (perception), தன்னுணர்வு (awareness), மற்றும் நடத்தை உளவியல் (behavioral psychology) ஆகியவை குறித்து பல சொல்லாடல்களை வார்த்தைகளை, வேறு எந்தப் பழைய மற்றும் நவீன மொழிகளிலும் இல்லாத அளவு, ஸம்ஸ்க்ருத மொழியானது தனது சொற்களஞ்சியத்தில் கொண்டுள்ளது.

dialogue

இந்த இந்திய மூல நிரலின் இதயமாக இருப்பவை வேதங்கள். அவை “ஆராய்தலே” (inquiryயே) முதல் தேவை என உடனடியாக நிர்ணயித்துவிடுகின்றன.

இந்துத்துவ இலக்கியங்களில் ஆகப் பழமையான (பூலோகத்தில் உள்ள அனைத்து ஆன்மீக இலக்கியங்களிலும் பழமையானதாகக் கூட கருதத் தக்க) ருக் வேதத்தில் இறை அல்லது ப்ரஜாபதி ஒரு மிகப் பெரிய மர்மமான கேள்வியாகவே வரையறுக்கப் பட்டு, அந்தக் கேள்விக்குப் பதில் தர மக்கள் வரவேற்கப்படுகின்றனர்.

யார்தான் அதனை அறிவார்?

யாரால் அதை எடுத்துரைக்க முடியும்?

அதன் மூலக்காரணம் என்ன?

தேவர்களோ சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள் !

அப்படியானால் அது எப்படிப் பிறந்தது? ***

பழைய ஏற்பாட்டின் (Old Testamentன்) இறைவன் கட்டளைகளைக் கத்திக் கொண்டிருக்கும்போது, ப்ரஜாபதி கேட்கிறார்:

“நான் யார் ?”

இந்தத் தெய்வீகக் கேள்வி ஞானப் பெருக்கைத் திறந்துவிட்டது. அந்தக் காலத்தில் இருந்து, குறி சொல்லுவது, இயற்கை வழிபாடு,  மற்றும் அறிதல் குறித்த உன்னதமானதும் சிக்கலானதுமான கோட்பாடுகளினால் நடத்தப்படும் பலிகள், நனவுணர்வின் இயல்பு, மற்றும் க்வாண்டம் இயற்பியல் உள்ளீடாக இந்த இந்திய சித்தாந்தம் பரிணாமத்தின் வெளியைப் பின்பற்றிப் பரிமாணம் அடைந்தது.

வேதங்களில் பேசப்படும் தெய்வங்களோடு இந்தியத் துணைக்கண்டம் வைத்திருந்த உறவின் வரலாற்றுத் தடங்களைத் தொடர்ந்து பின்பற்றினால்,  இந்திய சிந்தனை மரபின் பல நூற்றாண்டுச் சுவடுகளைக் காணலாம். மக்கள் அவர்களது தெய்வங்களோடு வைத்திருந்த உறவுகள் மட்டுமல்ல, அந்தத் தெய்வங்களும்கூட மாறி உள்ளார்கள் என்பது நமது கவனத்திற்கு வருகிற விஷயங்களில் முதலானது.

mahashivaratri_121உதாரணமாக, வேதங்களில் ருத்ரனாகத் தோன்றுகிற சிவன் புயல்களின் தெய்வமாகக் காட்டப்பட்டாலும்,  கூச்சலிட்டுக் கொண்டு திரிபவராக, முக்கியத்துவம் இல்லாத ஒரு சிறுகடவுளாகத்தான் இருக்கிறார்.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பயத்தைத் தூண்டும் பைரவராக, பசுக்களின் தலைவனான பசுபதியாக, யோகிகளின் தெய்வமாக, அழித்தல் தொழிலுக்கு அதிபதியாக உருவங்கள் எடுக்கிற சிவன் கடைசியாக, அதாவது 9ம் நூற்றாண்டில்,  இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார மூலசக்தியாக காஷ்மீரில் வடிவெடுக்கிறார். கலக்கலான மாயஜால வேலை.

ஆனால், தெய்வம் எந்த அளவு உரு மாறினாலும், இந்தியச் சித்தாந்தமானது எந்த அளவு நவீனமானதும், பின்நவீனத்துவம் நிறைந்ததுமான ஒரு பார்வையில் நம்மை மெய்மையின் இயல்பை அறியத் தந்தாலும், பழமையான வேதங்கள் எனும் மூல நிரலே முன்னணியிலும், மையத்திலும் உள்ளது.

தெய்வம் குறித்த வரலாற்றுப் பார்வையில், இயற்கை வழிபாடு, குறி சொல்லுதல் போன்றவை விலகிப் போகவே இல்லை என்பதும், தற்போதைய வடிவத்தில் வழிபடப்படும் தெய்வம், வழிபடப்படும் அதே காலத்தில் ஒரு குறியீடாகவும் (symbol) மூலப் படிமமாகவும் (archetype) திகழ்வதோடு, அந்தப் படிமமும் குறியீடும் சுட்டும் தத்துவ விளக்கமாகவும் இருக்கிறது என்பது இந்துத்துவத்தை அடையாளம் காட்டுகிற காரணிகளில் முக்கியமானது.

எடுத்துக் காட்டாக, இறுதியான மெய்யொளியாகக் காட்டப்படும் அதே சிவனே உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, சுடுகாடுகளில் ஒரு பைத்தியம் போலத் திரிவது, நம்மைப் போன்ற ஆன்மீக அராஜகவாதிகளுக்குப் பேருவகை அளிக்கிறது; அதுவே, மேற்கத்திய இறையியலாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்து விடுகிறது.

இதைப் போன்ற தாராளமான விளக்கங்களை தங்களது கடவுளுக்குத் தர மேற்கத்திய மற்றும் மத்திய-ஆசியாவில் பயிலப்படும் ஓரிறை நம்பிக்கைகள் அனுமதிப்பதில்லை. அவை மூடிய மூல (closed source) நிறுவனங்களாகவே தங்களது இருப்பைத் தொடருகின்றன.

“பொதுவாக, உற்பத்தி செய்யப்பட்ட தங்களது மென்கலன்களை மட்டுமே மூடிய மூல நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றன. அவை வழங்கும் உரிமமானது விற்கப்படும் மென்பொருளின் மூல நிரலிகளை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. இந்நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களாகவே இந்த மூல நிரலிகள் கருதப்பட்டு மற்றவர் அணுகிவிடாமல் பாதுகாக்கப் படுகிறது.”

இந்த மூடிய மூல நிறுவனங்களைப் போலவே, ஒரு வியாபார ரகசியமாக, நாம் அறிய முடியாதபடி தெய்வத்தை அணுகுவதற்கான வழிமுறைகளும் தெய்வ அனுபவங்களும் பாதுகாக்கப்படுவது கிறுத்துவ வரலாற்றை உறுதி செய்யும் விஷயங்களில் மிக முக்கியமானது.  பைபிள், கிறுத்துவின் போதனைகள், அல்லது பழைய ஏற்பாடு போன்றவற்றை கட்டுடைப்பு செய்வதோ, அல்லது கிறுத்துவ சபையின் அடிப்படை அதிகாரத்தை எதிர்த்து அறைகூவல் செய்வதோ கிறுத்துவசபையின் வரலாற்றில் பெரும்பாலும் இல்லாதது. இதைத் தைரியமாகச் செய்ய முன்வந்தவர்கள் பெரும்பாலும் கொலை செய்யப்பட்டனர்.

ஆனால், இந்திய சித்தாந்தத்தில் வியாபார ரகசியம் என்பதே கிடையாது.  தெய்வத்தை, அண்டப் பேருணர்வை, அல்லது பரிபூரண ஞானத்தை அறியத் திறவுகோலாகத் திகழும் யோக மார்க்கத்தின் அடிப்படை ஒவ்வொரு தனிமனிதனிடமும் இருக்கிறது.  அதை பல செயல்முறைப் பயிற்சிகளின் மூலம் அணுகிப் பயன்படுத்தலாம். எளிமையின் அழகோடும், ஆனால் ஆழத்தோடும் திகழும் இந்துத்துவம் பல மில்லியன் வருடங்களாக செழிப்பாகத் தொடர இந்தியாவில் அனுமதிக்கப் பட்டுள்ளது. அதன்படி தெய்வீகத்தைக் கண்டு துய்ப்பதும்,  மீள்-கற்பனையால் அறிவதற்குமான செயல் திட்டம் உனது கைகளில்தான் உள்ளது.

அதுதான் இந்தியாவின் கடவுள் பணி திட்டம் (the God Project).

பின் குறிப்பு:

*** இவை ரிக்வேதத்தின் பிரசித்தமான நாஸதீய சூக்தத்தின் கடைசி பாடலில் உள்ள வரிகள் (There was neither existence,  nor non-existence then என்று தொடங்கும் சூக்தம்).  பிரபஞ்சத்தைப் பற்றிய பெருவியப்பை ஒரு முடிவற்ற கேள்வியாக எழுப்பி அங்கேயே முடிந்து விடுகிறது இந்த சூக்தம்.

headshotமார்க்கெட்டிங் டைரக்டராக முழுநேர வேலை செய்யும் ஜோஷ் ஷ்ரிய், பகுதி நேர எழுத்தாளராக சமூக ஆர்வலராக பகுத்தறிவாளராக இருப்பதோடு இந்திய-திபெத்திய வரலாறு மற்றும் தத்துவங்களிலும் ஆர்வம் உள்ளவர். எதேச்சதிகார சீன-திபெத்திய பிரச்சார பிம்பங்களையும், அமெரிக்காவின் அரசியல் மத சிந்தனைகளையும் பகுத்து ஆராய்வதில் கவனம் செலுத்துகிறார்.

ஹஃபிங்டன் போஸ்ட் எனும் தளத்தில் எழுதுகிறார். அவரைப் பற்றி மேலும் அறிய, ஜோஷ் ஷ்ரிய்ன் அறிமுகம்.

இக்கட்டுரை அவருடைய God Project: Hinduism as Open-Source Faithன் மொழிபெயர்ப்பு.

59 Replies to “இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்”

  1. //
    பொதுவாக, உற்பத்தி செய்யப்பட்ட தங்களது மென்கலன்களை மட்டுமே மூடிய மூல நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றன. அவை வழங்கும் உரிமமானது விற்கப்படும் மென்பொருளின் மூல நிரலிகளை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. இந்நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களாகவே இந்த மூல நிரலிகள் கருதப்பட்டு மற்றவர் அணுகிவிடாமல் பாதுகாக்கப் படுகிறது.”
    //

    இவர்கள் மென் பொருள் விற்பனை மட்டும் செய்தால் தான் பரவா இல்லையே, வாங்க ஆள் இல்லாமல் கடையை மூடி இருப்பார்கள் – அவர்களின் யுக்தியே சுவிசேஷ கூட்டம் அல்லது பயங்கரவாதம் என்ற ஒரு தோற்றம் ஏறுபடுத்தி உலகம் முழுவதும் வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம்ஸ் போன்றவற்றை பரவ விடுகின்றனர் (இது அவர்கள் சொல்லும் ஆதி பாவத்திற்கு ஒப்பாகும்) – பின்னர் இதில் இருந்து விடு பட எண்களின் அண்டி வைரஸ் பயன் படுத்தினால் தான் பாவம் தீரும் என்று பிலிம் காட்டி இன்று வரை காலம் தள்ளி விட்டனர்

  2. சிறந்த கட்டுரை. இந்து மதத்தை தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு செல்லும் கட்டுரை.
    அதில் சில கருத்து மாறுதல்கள்.
    ௧. //மனத்தால் அறிதல் (mental cognition), புரிந்து கொள்ளுதல் (perception), தன்னுணர்வு (awareness), மற்றும் நடத்தை உளவியல் (behavioral psychology) ஆகியவை குறித்து பல சொல்லாடல்களை வார்த்தைகளை, வேறு எந்தப் பழைய மற்றும் நவீன மொழிகளிலும் இல்லாத அளவு, ஸம்ஸ்க்ருத மொழியானது தனது சொற்களஞ்சியத்தில் கொண்டுள்ளது.//
    இது தமிழ் மொழியில் உள்ள சித்தாந்த கருத்துக்கள் மீது புலமை இல்லாததை காட்டுகின்றது. மனத்தால் அறிதல் பற்றி சைவ சித்தாந்தத்தில் பல அறிய புதிய கருத்துக்கள் உள்ளன.

    ௨. // பசுக்களின் தலைவனான பசுபதியாக//
    இங்கே பசு என்பது உயிர்களை குறிக்கும், பசுபதி என்பவன் உயிர்களுக்கு எல்லாம் பதியாக உள்ளவன். தவறாக இங்கே கூறப்பட்டுள்ளது.

    ௩. //உதாரணமாக, வேதங்களில் ருத்ரனாகத் தோன்றுகிற சிவன் புயல்களின் தெய்வமாகக் காட்டப்பட்டாலும், ஒரு கோமாளி போல ஊளையிட்டுக் கொண்டு திரிபவராக, முக்கியத்துவம் இல்லாத ஒரு சிறுகடவுளாகத்தான் இருக்கிறார்//
    இது முற்றிலும் தவறானது. சிவனை எங்கும் சிறுகடவுளாக காட்டப்படவில்லை. அப்படி எங்காவது காட்டப்படுமேயானால் அது நமது தருமத்திற்கு மாறானது.

  3. இந்த ஆன்மீகத் தேடலினால் தான் , இந்துக்கள் ‘கிறித்தவ’ மிக மிகச் சாதாரண, கல்வி முறையை வெகுநாட்களாகப பின்பற்றாமல் இருந்து, அன்னியர்களிடையே ‘கல்வி அறிவில் பின்தங்கிய நாடு’ என ஏளனப்பட்டு, தற்போது, அவவேளணத்தைக் களையும் பொருட்டு, ஆன்மிகப் பாதையிலிருந்து விலகி, தங்களால் அதுவும் முடியுமெனவும் அதை எப்போதோ செய்து விட்டோம் எனவும், மேற்க்கத்தியாளர்களுக்கு, அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  4. What makes the author Josh Schrei think that Hinduisim existed only for about 5000 years? What happened before 5000 years ago in India? Don’t tell me that 5000 years back,Bharath was a primitive land one day and it’s people found Vedas the next day.This is another Christian lie, being peddled around as an honest historical fact. I find even pious Hindus accept it without any question. This lie was imposed on Hindus ( and to the rest of the world) to credit Bible/ Christian version of creation that the world was created by the Christian God 5000 years ago.They were/are still not able to come to terms with the fact a superior, totally spritiual,peaceful culture/lifestyle existed in our land long before their God’s creation of the world. Our Sanatana Dharma is ageless, our Vedas are timeless and our culture is eternal. Nothing will shake my belief on these fundamentals of Hinduisim.

  5. Please remove the word “Idho” from the title.
    It sounds like marketing our religion (or) as though Hinduism is open-source from now onwards.
    We are neither marketing nor Hinduism has become open-source suddenly now.
    It has been always so.
    So title would be better as “Oru open-source madham”.

  6. Sir,

    PLS REMOVE THE BUDDHA’S THAT ART.

    I DON’T EXPECT THAT ART IN TAMILHINDU.COM

    PLEEEES…………………………………………………………..

    R. NATARAJAN

  7. கட்ருரை நன்று . அனால் ரொப்பவும் open source ஆ இருந்து தொளசிடோம் போல . நம்ப கிட்டயே உருவி நமக்கே பாடம் நடத்தற அளவுக்கு . There is a proverb ” Pearls and golds are not found on the surfaces ” . என்னதான் நம் முன்னாள் கொட்டிக்கிடந்தாலும் அதை நாம் பின்பற்றுவது இல்லை . ஓஷோ ஒரு புக் ல சொல்லி இருப்பார் நம்முடைய பொகிழத்தை திறக்கும் சாவியை தொலைத்து விட்டோம் என்று .

    இதோ ஒரு ரஷியன் வெப் சைட் .. ஹிந்துஇசம் பற்றிய அற்புத களஞ்சியம்

    https://sivasakti.net/articles/intro-yantra.html

    இதோ இன்னொரு களஞ்சியம்

    https://www.hinduwisdom.info/Hindu_Scriptures.htm

    – பிரகதீஸ்வரன்

  8. R. NATARAJAN
    15 June 2010 at 5:01 pm
    Sir,

    PLS REMOVE THE BUDDHA’S THAT ART.

    I DON’T EXPECT THAT ART IN TAMILHINDU.COM

    PLEEEES…………………………………………………………..

    R. NATARAJAN

    I agree with Mr. R. Natarajan.

    That may not be Buddhas art but that porno picture has no room in Hinduism.

    The Bagavath Geetha shows almost all possible ways of Sprituality, Karma yoga, Dhyana Yoka (Medidation), Ghana Yoka, Bakthi yoka, Worshipping the shapeless form (Avyaktham) …. all has been detailed, but never aremark about Sexulaity as a pth.

    The Vedhas in general and Upanishadhs in particular never told of using Sex for spiritual upliftment.

    Thevaram, Piarabandahangkal … none has any mention about sexual type of spiritulaity

    99. 9% of Hindus does not consider sex as a path of spiritual upliftment or enlightment.

    The introduction of these sexual are due to the barabaric pepole entered into the india, during the fall of Buddhism. In the confused stage of fall of Buddhism, sex cults were intorduced in Indian soceity, which was detailed by Vivekaanadha.

    This sex picture is a denigration to Hinduism.

    We dont condems sex as a whole, its a part of life for house holders, Sex between husband and wife is part of life, Hinduism did not forbid that, Hinduism does not prescribe austerity for House holders.

    But using sex for raising one Spiritully is not part of Hinduism, may be very few hindus resort to that method, they have to be reformed with care.

    //இறை மறுப்பாளர்கள், பெண் தெய்வங்களை வழிபடுபவர்கள், போதை, புணர்ச்சி, புலால் மூலமாக இறையைத் தேடும் பதிதர்கள், சாம்பலைப் பூசிய துறவிகள், த்வைதிகள், அத்வைதிகள், சூனியவாதிகள், புலன் இன்பவாதிகள், கவிகள், பாடகர்கள், சீடர்கள், புனிதர்கள், குழந்தைகள், விலக்கப் பட்டவர்கள்…….

    இவர்கள் அனைவருமே இந்து எனும் மூல நிரலில் பல வரிகளைச் சேர்த்திருக்கிறார்கள்.//

    Hindusim does not reject any one. All the people in the world are considered as children by Hinduism.

    சுவாமி விவேகானந்தரே சொன்னது போல, “மிருகத்தை விட சற்று மேலான நிலையில் இருப்பவரில் இருந்து, இவரும் மனிதரா என்று வியந்து போற்றும் அளவுக்கு அமைதியான மனிதர் வரை இந்து மதம் எல்லோருக்கும் தேவையான ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கும் மதமாக மதமாக , சூரியனின் கிரகணங்கள் எல்லோரையும் தழுவுவது போல இந்து மதம் இருக்கிறது”.

    அதற்காக மிருகத்தை விட சற்று மேலான நிலையில் இருக்கும் மனிதரின் காம நடவடிக்கைகள் இந்து மதத்தின் ஆன்மீகம் ஆகி விட முடியாது.

    Open source does not mean that those introduced virus elements in the system shall be considered as part of the developers of the system.

    That porn picture depicted under the name of Hinduism is an insult to Hinduism, Hindus, Indians and India.

  9. ///பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பயத்தைத் தூண்டும் பைரவராக, பசுக்களின் தலைவனான பசுபதியாக, யோகிகளின் தெய்வமாக, அழித்தல் தொழிலுக்கு அதிபதியாக உருவங்கள் எடுக்கிற சிவன் கடைசியாக, அதாவது 9ம் நூற்றாண்டில், இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார மூலசக்தியாக காஷ்மீரில் வடிவெடுக்கிறார். கலக்கலான மாயஜால வேலை.///

    This is blasphemy in its absolute form.

    மேலை நாடுகளின் “so called” ஆராய்ச்சியாளர்கள் வேண்டுமென்று உள்நோக்கத்துடன் இப்படியான கருத்துக்களை தங்கள் “ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இடைச்செருகல் செய்துவிடுகிறார்கள். இது புரியாமல் நம்மவர்களும் இவற்றுக்கு முறையான மறுப்புச் செய்யாமல் விடுவதுடன் இப்படி ஒரு ஆராய்ச்சிக கட்டுரைக்கு ஆதரவான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். நம்மவர்களுக்கே உரித்தான இந்த அப்பாவித் தனம்தான் (naivity) கிறித்துவத்துக்குப பாலூட்டி வளர்க்கிறது.

    பரமேஸ்வரன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதும் ரிக்வேதத்தின் மையமானவன் என்பதும் எந்த ஆராய்ச்சியாளனும் ஆரம்பத்திலேயே அறிந்துகொள்ளக் கூடிய எளிய பரவலான உண்மை. சரித்திர பூர்வமான சான்ருகளாக 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவலிங்கங்கள் அமைந்த இந்த பாரதத்தில் இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்கப்படக் கூடாது. வெறுமே மேம்போக்காக எழுதப்பட்ட வரிகளாக இவற்றைக் கருத முடியாது. பார்வைக்கு அதிகம் அறியாததால் எழுதப்பட்டதாக தோற்றம் அளிக்கும் வகையில் எழுதி மறைமுகமாக நமது சரித்திர பண்பாட்டு பாரம்பரிய உண்மைகளை மறைக்கச் செய்யும் கொச்சைப்படுத்தும் முயற்சியாகவே இதைக் கருதவேண்டும். பிரிதொருநாளில் இக்கட்டுரையே சிவபெருமானின் ஆதியைக் கேலி செய்யும் வகையில் நாத்திகர்களாலும் அரசியலாராலும் மாற்று மதத்தாராலும் பயன் படுத்தப் படும் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ் ஹிந்து தளமும் கூட இப்படி அப்பாவியாக (naive) இருப்பது வியப்பளிக்கிறது.

  10. //……இறை மறுப்பாளர்கள், பெண் தெய்வங்களை வழிபடுபவர்கள், போதை, புணர்ச்சி, புலால் மூலமாக இறையைத் தேடும் பதிதர்கள், சாம்பலைப் பூசிய துறவிகள், த்வைதிகள், அத்வைதிகள், சூனியவாதிகள், புலன் இன்பவாதிகள், கவிகள், பாடகர்கள், சீடர்கள், புனிதர்கள், குழந்தைகள், விலக்கப் பட்டவர்கள்…….

    இவர்கள் அனைவருமே இந்து எனும் மூல நிரலில் பல வரிகளைச் சேர்த்திருக்கிறார்கள்…..//

    //……R. NATARAJAN
    15 June 2010 at 5:01 pm
    Sir,

    PLS REMOVE THE BUDDHA’S THAT ART.

    I DON’T EXPECT THAT ART IN TAMILHINDU.COM

    PLEEEES…………………………………………………………..

    R. NATARAJAN………………//

    //………திருச்சிக் கார‌ன்
    …………..

    I agree with Mr. R. Natarajan.

    That may not be Buddhas art but that porno picture has no room in Hinduism…..//

    :)))) !!

  11. opensource போன்ற நவீன வணிக ரீதியான வார்த்தை ஜாலங்களால் sourceless அதாவது எந்த மூலத்திலிருந்தும் வராத ஆதியும் அந்தமும் இல்லாத சுயம்பிரகாச சக்தியான பரம்பொருளைக் கொச்சைப்படுத்தும் முயற்சியே இது.

    பாரதத்தின் பழம்பெரும் சித்தாந்தங்கள் அனைத்தையும் அல்லாத எதையும் ஓரளவு கூட அறிந்துகொள்ளாமல் வெறுமே மேலோட்டமாக ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் என்று சொன்னால் இக்கட்டுரை ஆராய்ச்சிக்கட்டுரை என்ற தகுதியை உடையதல்ல. சித்தாந்த மரபுகளின்படி பரம்பொருள் அனைத்து ஆன்மாக்களில் உறையும் மெய்ப்பொருள் என்ற பேருண்மையைத் திரித்து ஏதோ பசுக்களை ஆள்பவன் அல்லது மேய்ப்பவன் என்பது போல shepherd நிலைக்குத் தள்ளியிருப்பது கண்டனத்துக்குரியது. கிறித்துவத்தின் தாக்கமாக நாளை ஒரு தேவசகாயம் இக்கட்டுரையை ஆதாரமாக அல்லது மூலமாக அல்லது மையமாக வைத்து சிவபெருமான் என்று ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் வழிபடப்படுபவர் பைபிளில் நன்மேய்ப்பன் ( good shepherd ) என்று கூறப்பட்ட ஏசுவே, ஏசு 2000 வருடங்களாக வழிபடப்பட்டவர் இவரே பிற்காலத்தில் ஹிந்துக்களால் பரமசிவனாக வழிபடப்பட்டார் என்று ஒரு குப்பையை உருவாக்கி அதையும் மயிலை பேராயம் திரைப்படமாக எடுக்கும் நிலையில்தான் விழித்துக் கொள்வோமா?

    இது போலவே தமிழ் உள்ளிட்ட ஏனைய பாரதீய மொழிகளின் சிறப்பை அறியாதது போலக் கட்டுரையாளர் எழுதியிருப்பதும் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் தொடர்ச்சியே ஆகும். தமிழின் தொன்மையும் தமிழில் உள்ள தொன்மையான பலதரப்பட்ட ஆளுமையுடைய சொற்சுரங்கமும் மேலை நாடுகளின் உள்நோக்கம் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியாது போவதில் வியப்பில்லை.

  12. டுத்துக் காட்டாக, இறுதியான மெய்யொளியாகக் காட்டப்படும் அதே சிவனே உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, சுடுகாடுகளில் திரியும் ஒரு பைத்தியம்போலத் திரிவது, நம்மைப் போன்ற ஆன்மீக அராஜகவாதிகளுக்குப் பேருவகை அளிக்கிறது; அதுவே, மேற்கத்திய இறையியலாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்து விடுகிறது./

    ரு உமாசங்கர் அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன். திருமுறைகளில் பேசப்படும் சுடலை, திருநீறு , பேய்க்கணம் என்பன எவை, ஏன் அவ்வாறு கூறப்படுகின்றன என்பனவற்றை இந்துப் பண்பாட்டின் வழி அறியாமல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.”இன்பஞ் செய்தலின் சங்கரன் எம்பிரான், இன்ப மாக்கலின் சம்பு இடும்பைநோய், என்பதோட்டும் இயல்பின் உருத்திரன், என்பராலவை” எனக் காஞ்சிப்புராணம் போன்ற தமிழ் நூல்கள் கூறியிருக்க, உருத்திரசிவனை ஊளையிட்டுத் திரிபவராகக் கூறியிருப்பது தவறான செய்தியாகும். open source, outsource என்னும் சொல்லாட்சியே அருவருப்பைத் தருகின்றது.

  13. //வேறு எந்தப் பழைய மற்றும் நவீன மொழிகளிலும் இல்லாத அளவு, ஸம்ஸ்க்ருத மொழியானது தனது சொற்களஞ்சியத்தில் கொண்டுள்ளது//
    அப்படின்னா சமஸ்கிருதத்திலேயே எழுதலாமே ஏன் தமிழில் எழுத வேண்டும். நாமும் சொற்களஞ்சியத்தில் இருந்து நிறைய தெரிந்து கொண்ட மாதிரி இருக்கும்.

  14. மேலை நாடுகளில் எந்த மதத்தையும் சாராத, பிறந்த கிறித்தவ மதத்தையும் உதறித் தள்ளி விட்டு, எந்த principle-ஐயும் ஆதரிக்காத கிறுக்குப் பிடித்த வர்க்கங்கள் சில உண்டு. அவர்களுக்கு ஏனோ ‘ஹிந்து மதம்’ என்பதில் ஒரு மோஹம் உள்ளது. இப்படித் தான்தோன்றித்தனமாக சிலதை அவர்கள் சொல்வதை மேலோட்டமாகக் கேட்டுப் பார்த்தால் அவர்கள் இந்தியாவையும் சனாதன தருமத்தையும் புகழ்வதாகத் தோன்றும். உற்றுப் பார்த்தால், இவர்களுடைய நோக்கம் என்ன என்பது புரியும்: இவர்களுக்கு ஆண்-பெண் ஈர்ப்பு, சோம்பேறித்தனம், taboo breaking, முதலியவற்றின் மேல் ஒரு பைத்தியக்காரத்தனமான fascination.

    வேதாங்கங்களாகிய சிக்ஷா, வியாகரணம், நிருக்தம், சந்தஸ், நியாய சூத்திரம், (ஜைமினியின்) பூர்வ மீமாம்ச சூத்ரம், (வியாசர் அருளிய) உத்தர மீமாம்ச பிரம்ம சூத்திரம், முதலியவற்றை வைத்தே பிரம்மத்தைப் பற்றிய விசாரமும், தேவதா விஷய விசாரமும் பண்ண முடியும். இதைச் செய்யாமல், “மகாதேவன்”, “பெரியவன் (ஜேஷ்டாய), சிறந்தவன் (ஸ்ரேஷ்டாய)” என்று வேதத்தில் பிரசித்தமாக கூறப்படும் முக்கட்பிரானை “சிறு தேவதை, பைத்தியக்காரன்” என்று எழுதுவதெல்லாம் ஆராய்ச்சியின்மையும் அறியாமையுமே.

    “மூடர்களைக் கண்டு, ‘இதிகாசங்களையும் புராணங்களையும் சரியே பயிலாமல் இந்த அற்ப அறிவினன் எனக்குத் தப்பு அர்த்தம் சொல்லி விடுவானோ?’ என்று வேதம் பயப்படுகிறது” என்பது, ஆதி சங்கரர் முதலியவர்களால் ஐந்தாம் வேதமாகப் போற்றப்பட்ட மகாபாரதத்தில் உள்ள ஒரு சுலோகத்தின் தமிழாக்கம்.

    யாராலும் ஆதரிக்கத்தக்காத, ஆதரிக்கப்படக்கூடாத வாமாச்சாரங்கள் இந்தியாவில் உண்டு. ஆனால் அதையெல்லாம் ‘வேதத்தை ஒட்டியது’ என்று நினைப்பது அசட்டுத்தனம்.

  15. // உருத்திரசிவனை ஊளையிட்டுத் திரிபவராகக் கூறியிருப்பது தவறான செய்தியாகும் //

    முனைவர் ஐயா கூறியிருப்பது மிகவும் சரி. வேத இலக்கியத்தில் ருத்திரனாகிய சிவன் பரம்பொருளாகவே பேசப் படுகிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிவ வழிபாட்டில் ஓதப் படுவது ஸ்ரீருத்ரம் என்ற வேத மந்திரம்.. ”நம: சிவாய ச சிவதராய ச” என்று பஞ்சாட்சரத்தையும் “த்ரயம்பகம் யஜாமஹே” என்ற மிருத்யுஞ்சய மகா மந்திரத்தையும் உள்ளடக்கிய உத்தமமான வேத துதி இது. எனவே ருத்திரன் ”முக்கியத்துவம் இல்லாத ஒரு சிறுகடவுளாகத்தான் இருக்கிறார்” என்பது தவறான கருத்து.

    ரிக்வேத தெய்வப் படிமங்கள் பரிணாமம் அடைந்து பின்னாளைய புராண தெய்வங்களின் படிமங்கள் உருவானது குறித்து ஸ்ரீஅரவிந்தர் போன்ற இந்து ஞானிகள் அருமையான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். மிகப் பரந்த சமய, கலாசார, தத்துவ வெளியைக் கருத்தில் கொள்ளாமல் அதனை விளக்க முடியாது.. சுதந்திர நோக்கு என்ற ஒரு விஷயத்தில் open source software உடன் இதனை ஒப்பிடுவது சரிதான். ஆனால் அது முழுமையான உதாரணம் அல்ல.

  16. பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கவியலே உண்மையான ஒழுக்கவியல், பிறிதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவை என்று நம்பும் மனநிலை ·பாசிசம். மார்க்ஸியம் மேலைநாட்டில் இதேபோன்ற கூட்டுவாழ்க்கை குழுமியங்களாகவே ஆரம்பித்தது. ஆகவேதான் அதற்கு கம்யூன்கள் என்று பெயர். இஸ்லாமும் கத்தோலிக்க மதமும் ஒரு சராசரி ஒழுக்கவியலை வைத்து பிற அனைத்தையும் ஒடுக்க முயல்கின்றன. அது போல கம்யூனிஸ்டுகளும் நடந்துகொள்கிறார்கள் என்பது நம் சமூகத்தின் சிந்தனைச் சீரழிவையே காட்டுகின்றது என்றார் நித்யா.

    சராசரியை கொண்டு மீறல்களை ஒடுக்கும் சமூகம் ·பாஸிஸ சமூகம். மீறல்களுக்கு எந்நிலையிலும் வாய்ப்பளிக்கும் சமூகமே உண்மையான ஜனநாயக சமூகம். இந்தியா பல நூற்றாண்டுகளாக , விதிவிலக்கான தருணங்களைத் தவிர்த்தால், அப்படித்தான் இருந்துள்ளது. பல்வேறு நம்பிக்கைகளும் மதங்களும் சமூகக்குழுக்களும் இணைந்து வாழ்ந்த பூமி இது. ஆகவே பல்வேறு பரிசோதனைகள் நடந்த இடம்.

    ஆனால் சமீப காலமாக இந்தியாவில் சராசரியினரின் குரல் ஜனநாயகத்தின் பேரால் சிறப்புவிழுமியங்களுக்கு எதிராக எழுப்பப் படுகிறது. எண்பதுகளில் வங்கத்தின் ஆனந்தமார்க்கிகள் வங்க அரசாலும் கட்சியாலும் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டனர். ஓஷோவின் ஆசிரமங்கள் அவதூறுக்கு உள்ளாகி கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்யப்பட்டன. தமிழகத்தில் மெய்வழிச்சாலை தமிழக அரசால் ஒடுக்கப்பட்டது. இவை எதிலுமே எந்தவகையான குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    ஆனாலும் இவற்றை குற்றகரமான குழுமியங்கள் என்று அரசும் , அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் சித்தரித்தன. இவற்றின் ஒதுங்கிய தன்மை, அசாதாரணத்தன்மை காரணமாகவே சாதாரண மக்கள் இவற்றை எளிதில் வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவற்றை பற்றி எந்த வகையான கதைகளையும் கட்டிவிட்டால் மக்கள் நம்புவார்கள். நாம் ஜனநாயகத்தின் பெயரால், மக்களின் பெயரால், மத்தியகால மதவெறி அரசுகளின் மனநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

    பொதுச்சமூகத்தின் மீது மோதாத கிறுக்குத்தனங்களுக்கு இடம் கொடுக்கும் சமூகமே ஆரோக்கியமான சமூகம். அங்கேதான் தனிமனித அறிவுத்தேடலுக்கும் ஆன்மீகத்தேடலுக்கும் கலை வெளிப்பாட்டுக்கும் இடம் இருக்க முடியும். அதுதான் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்ளவும் தன்னை புதிய வழிகளில் செலுத்திக்கொள்ளவும் முயன்றுகொண்டிருக்கும் சமூகம்.

    இந்தியா எத்தனையோ நூற்றாண்டுகளாக அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் இங்கே உள்ள மையமதங்களான இந்து,சமண,பௌத்த மதங்கள் கூட்டான சராசரியான ஆன்மீகத்தை முன்வைப்பவை அல்ல. அனைவருக்கும் ஒரே வழியைக் காட்டக்கூடியவை அல்ல. ஒவ்வொருவரும் தன் ஆன்மீக ஈடேற்றத்தை தன் சொந்த வழியில் தானே தேடிச்செல்ல வலியுறுத்துபவை அவை. ஆகவேதான் மாபெரும் ஆலயங்களின் மூலச்சிலையாக சிவலிங்கத்தை வைத்து வழிபடும் சைவமதம் லிங்கம் மீது ஏறி அமர்ந்து தியானம்செய்யும் அகோரியையும் தனக்குள் அனுமதிக்கிறது. பிணத்தை சிவனுக்கு படைப்பவனும் சைவன்தான் என்கிறது.

    இந்த மாபெரும் பன்மைத்தன்மையை எதன் பொருட்டேனும் இந்தியாவும், இந்து-பௌத்த-சமண மதங்களும் இழக்குமென்றால் இந்தியா அழிந்துவிட்டதென்றே பொருள். இந்தியா கத்தோலிக்க அல்லது இஸ்லாமிய அல்லது கம்யூனிச அரசுமையச் சமூகங்களைப்போல சீராக வெட்டி ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமாக ஆகும் என்றால் அதன்பின் இது இந்தியாவே அல்ல.

    ……

    நவீனக் கல்வி கற்ற இந்திய மனம் இன்று அதன் பண்பாட்டு வேர்களில் இருந்து வெகுவாக துண்டிக்கப்பட்டு விட்டிருக்கிறது. அது பள்ளியில் கற்ற ஒழுக்கவியலையே அது ஒரே வாழ்க்கைமுறையாக எண்ணுகிறது. ஞானத்தேடலின் பல்வேறு வழிகளை அதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவேதான் திகம்பரச் சமணர்மேல் கல்லெறிதல் போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் இங்கே நிகழ்கின்றன. ஒரு சுதந்திரச் செயல்பாட்டை அமெரிக்கவகை தாராளவாதத்தால் விளக்கினால் மட்டுமே நம்மால் ஏற்க முடிகிறது. ஒரு தாந்த்ரீகக்குழுவை வெறுத்து ஒதுக்கும் நம் நவீன அறிவுஜீவிகள் ஒரு நிர்வாணசிகிழ்ச்சை நிலையத்தை சாதாரணமாக ஏற்றுக்கொள்வார்கள்.

    நாம் நம்முடைய மரபின் பின்னணியில் வைத்து தாந்த்ரீகம் போன்றவற்றை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவை நம்முடைய பாரம்பரியத்தின் தவிர்க்க இயலாத பகுதிகள். அவை உண்மையில் என்ன என்று நமக்கு தெரியாது. அவற்றைப்புரிந்துகொள்ள அவற்றுக்குள் செல்வதொன்றே வழியாகும். ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியப்படாது. அவை உண்மையில் பயனுள்ளவையா, அவை ஏன் நீடிக்கின்றன எதுவுமே நம் பொதுப்புத்திக்கு எட்டுவதில்லை. ஆகவே அவை நம் பொதுச்சமூகத்திற்கு நேரடியான தீங்கு விளைவிக்காதவரை நம் சமூகத்தில் அவை இருந்தாகவேண்டும்.

    இல்லையேல் நமக்கு ஏற்படும் இழப்புகள் சாதாரணமானவை அல்ல.

    https://www.jeyamohan.in/?p=5193

    The name Rudra is still used as a name for Shiva. In RV 2.33, he is described as the “Father of the Maruts”, a group of storm gods.[38] Furthermore, the Rudram, one of the most sacred hymns of Hinduism found both in the Rig and the Yajur Vedas and addressed to Rudra, invokes him as Shiva in several instances, but the term Shiva is used as a epithet for Indra, Mitra and Agni many times.

    The identification of Shiva with the older god Rudra is not universally accepted, as Axel Michaels explains:

    To what extent Śiva’s origins are in fact to be sought in Rudra is extremely unclear. The tendency to consider Śiva an ancient god is based on this identification, even though the facts that justify such a far-reaching assumption are meager.[39]

    https://en.wikipedia.org/wiki/Shiva#Rudra

  17. இந்த ஆங்கிலக் கட்டுரை நண்பர் சேஷத்ரி இராஜகோபாலன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு திண்ணையில் (13 -6-2010)ல் வெளிவந்துள்ளது. தமிழ்மொழி நடையில் இரண்டுகட்டுரைகளும் சற்று வேறுபடுகின்றன.

  18. Regarding Panchakshara Mantram – Aum Namaschivaya –
    The same Wikpedia Article says thus as footnote 162
    ^ It is first encountered in an almost identical form in the Rudram. For the five syllable mantra see: Kramrisch, p. 182.

    What is unfortunate is that one Michels has written some book with half baked knowledge and that is quoted and accepted as a source by Wikipedia.

    It is very difficult to correct web sites like Wikipedia, because if we correct it by editing today, we may keep a watch on it for say one or two years. After sometime or so, someone else edits it changing it from the correct position in our heritage. I am frustrated with this effort.

  19. ருத்திரன் உண்மையிலேயே வேதத்தில் minor deity தானா என்பது குறித்து இந்தியவியலாளர்களுக்குள்ளேயே கடுமையான விவாதம் நடக்கிறது. ஸ்டெல்லா க்ராம்ரிஸ்க் (Stella Kramrisch), சிவனது சிலை வடிவ பரிணாம வளர்ச்சி குறித்து சிவராமமூர்த்தி ஆகியோர் எழுதியிருக்கும் விஷயங்களைப் படித்தால் ருத்திரனை minor deity என 19 ஆம் நூற்றாண்டு மேற்கத்திய இந்தியவியலாளர்கள் சொன்ன அடிப்படையில் நம்மவர்கள் அப்படியே அதை மீண்டும் மீண்டும் கூறுவது எவ்வளவு தவறென்பது தெரியும். ஒன்பதாம் நூற்றாண்டில்தான் சிவன் முக்கிய தெய்வமாக மாறுவதாக கட்டுரையாளர் சொல்லுகிறார். ஆனால் சங்க இலக்கியங்களிலேயே சிவன் முக்கிய முதுபெரும் மூத்த தெய்வமாக உருவாகிவிட்டார். கிமுவில் கனிஷ்கர் காலத்து நாணயுங்களிலேயே திரிசூலம் கொண்டு விடையேறும் சிவன் இடம் பெறுகிறார். முகலிங்கங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன. கிமுவைச் சார்ந்த குடிமல்லம் லிங்கத்தில் வேதவிவரணப்படியே ருத்ரனாக சிவன் லிங்கத்துடன் இணைந்து காணப்படுகிறார். எனவே சைவர்கள் கோபப்படுவதில் பொருள் இல்லாமல் இல்லை.

  20. கட்டுரையாளர் பாராட்டுக்கு உரியவர். ஆவணப்படுத்தப் பட்ட, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்ட தகவல்களைக் கற்றறிந்து இந்து மதம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அது பாராட்டுக்கு உரியது.

    ஓப்பன் ஸோர்ஸாக இந்து மதம் இருக்கிறது என்பது மிகச் சரி என்றும், அதற்கு விதிவிலக்குகள் இல்லை என்றும் எனக்குத் தோன்றுகிறது. இந்தப் புரிதல் தவறு என்று சொல்பவர்கள் அது ஏன் தவறு என்பதைச் சொல்லவில்லை.

    இந்தக் கட்டுரை ஆசிரியரின் ஆய்வையும் ஆய்வுத் தகவலகளையும் பற்றிக் குறை சொல்லும் முன் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் எத்தகையோர் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

    நான்கு வித ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

    1. இந்தியாவை, இந்து தர்மத்தைக் குறை சொல்லும் கிறுத்துவ-யூரோப்பிய மையவாதப் பார்வை உடையவர்கள்.

    2. இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, இந்து தர்மம் பற்றி நேர்மையான ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர்கள்.

    3. தங்களது சுயதேடுதல்களுக்காக இந்து மதம் பற்றிக் “கிடைக்கும் தகவல்களின்” அடிப்படையில் அறிந்து வியந்து பாராட்டுபவர்கள்.

    4. வியாபார மற்றும் சுயலாப நோக்கங்களுக்காகத் தகவல்களில் இருப்பவற்றைத் திரித்தும், இல்லாதவற்றை உருவாக்கியும் பிழைப்பவர்கள்.

    இந்த நான்கு பிரிவுகளில், மூன்றாவது வகை ஆட்களே தொடர்புப் புள்ளிகள். எனவே, மிக முக்கியமானவர்கள்.

    இந்தக் கட்டுரை ஆசிரியர் மூன்றாவது வகை. இந்து மதம் ஒரு ஓப்பன் ஸோர்ஸ் என்ற உண்மையை வெளிப்படுத்தியதன் மூலமாகவும், அவர் மூன்றாவது வகை ஆராய்ச்சியாளர் என்பதாலும் அவர் மிக முக்கியத்துவம் உள்ளவர். இவர் முன்வைக்கும் கருத்துக்கள் மற்ற ஆய்வாளர்களைவிட வீச்சு அதிகம் கொண்டவை.

    இந்தக் கட்டுரையாளர் அவருக்குக் கிடைத்தத் தகவல்களின்படி கட்டுரையை எழுதி உள்ளார். அதில் எந்தவிதமான தவறான உள்நோக்கத்தையும் நான் காணவில்லை.

    ஆனால், நமது புரிதலில் இருந்து மாறுபடுகிறார் என்பதற்காக மூன்றாவது வகை எழுத்தாளர்களை, முதல்வகை எழுத்தாளர்களாகக் கருதி ஒதுக்கினால், நஷ்டம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் தொடர்ந்து தங்களது சரியான, தவறான புரிதல்களை முன்வைத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

    இத்தகைய எழுத்தாளர்கள் முன்வைக்கும் சரியான புரிதல்களைப் பாராட்டுவதோடு, தவறான புரிதல்களைச் சுட்டிக் காட்டவும் செய்ய வேண்டும். செய்தால், அவர்கள் திருத்திக் கொள்வார்கள்தான்.

    இவர்களை வேண்டாம் என்று ஒதுக்கினால் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று பிரமையில் காலம் கடத்துவதை மட்டுமே நாம் செய்யக் கூடியது.

    கட்டுரையைக் குறை சொல்பவர்கள் ஆதார பூர்வமாக அதில் உள்ள தவறுகளைப் பற்றி விளக்க முன்வர வேண்டும். அத்தோடு, அதில் உள்ள சரியான விஷயங்கள் எவை என்பதையும் சொல்ல வேண்டும்.

    சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள உளவியல் வார்த்தைகள் யூரோப்பியர்களாலும், மற்றவர்களாலும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப் பட்டுள்ளன. தமிழுக்கு அப்படி எதுவும் நடக்க வில்லை. உண்மை இங்கனம் இருக்க ஸம்ஸ்கிருதத்தை எப்படிப் பாராட்டலாம், ஏன் தமிழைப் பாராட்டவில்லை என்று குதிப்பது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே.

    அதே போல, இந்தியாவைப் பற்றிய இந்து மதம் பற்றிய வரலாற்றுப் புரிதல் கிறுத்துவ-யூரோப்பிய மையவாத ஆய்வாளர்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டு, அந்தத் தவறான சித்திரங்கள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான கருத்தாக்கம் நமது வேத இலக்கியங்களில் எவ்வாறு உள்ளது என்பது பற்றி மூடிய கருத்தரங்குகளுக்குள் மட்டுமே பேசப்படுகிறது. அந்தத் தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும்.

    என்னைக் கேட்டால், விக்கிப்பீடியாவில் உள்ளதுதான் உண்மை என்பேன்.

    ஓப்பன் ஸோர்ஸான விக்கிப்பீடியாவில் நமது கருத்துக்களை ஆதாரங்களோடு தெரிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைச் செய்யாமல் விக்கிப் பீடியாவைக் குறை சொல்லுகிறோம். ஆடத் தெரிந்தும், தெருக்கோணல் என்று போனால் யாருக்கு நட்டம்?

    சாதி, இன வெறியர்கள் விக்கிப்பீடியாவில் தரும் உழைப்பின் கால்பங்கு தந்தாலே போதுமானது.

    வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், சோம்பி இருக்கிறோம். விவேகானந்தர் கண்டு சலித்த அதே சோம்பல். இதை உதறிவிட்டு உண்மையை உரக்கச் சொல்லவேண்டும்.

    மிக முக்கியமாக, உலக அளவில் நடைபெறும் வரலாற்று மாநாடுகளில் ஆரியர்-திராவிடர் கருத்துக்கள் உள்ளிட்ட தவறான கருத்துக்களை, “இந்திய வரலாற்றாசிரியர்கள்” மறுத்து ஆதாரங்களை வைக்க வேண்டும். அப்படி எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்றுதான் கேள்விப் படுகிறேன்.

    இவற்றைச் செய்ய வேண்டியது அவசியம். இல்லை என்றால், நாம் நமது கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு அபச்சாரம், அபச்சாரம் (blasphemy) என்று கத்திக் கொண்டுதான் இருப்போம். தொண்டை வறண்டபின், காதுகள் வலி தாங்காமால் துடிக்கும்போது நாம் எதை அபச்சாரம் என்று கத்துகிறோமோ அதையே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.

    ஆனால், பக்தி என்ற பெயரில் கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டு கத்துவதை மட்டுமே நாம் செய்து வருகிறோம்.

    தமிழ் மொழியில் உள்ள உளவியல் வார்த்தைகள், மற்றும் சிவனின் வரலாற்றுப் பெருமை போன்றவை ஆவணப்படுத்தப்பட்டு, இதைப் போன்ற கட்டுரையாளர்களுக்கும், மற்ற பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியதும் சிவபக்தர்களின் பணியே.

    இவை எதுவும் இந்து மதம் ஒரு ஓப்பன் ஸோர்ஸ் என்ற உண்மையை மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது.

  21. ஆங்கிலக் கட்டுரையசிரியர் ஜோஷ் உண்மையிலேயே இந்திய சமயமரபின் பன்முகத்தன்மையை ஏற்றுப் போற்றுகின்றார் எனில் மகிழ்ச்சியே. அவருடைய உள்ளம் தூயதாயின் அவருடைய மொழியிலோ அல்லது மொழிபெயர்ப்பிலோ உள்ள நெருடல்களைப் பொருட்படுத்த வேண்டுவதில்லை. ஆனால் தவறான புரிதல்களைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமையும் உள்ளது

  22. முத்துக் குமாரசாமி ஐயா,

    புலமையுடையவருக்கான பக்குவ மொழி சொன்னீர்கள். சரியான கருத்துக்களைப் போற்றுவதோடு தவறைச் சுட்டிக் காட்டுவதும் அவசியமே.

    வேதங்களில் ருத்ரன் சிவனாகத் திகழ்ந்த வரலாற்றுப் பார்வை குறித்து இந்தப் புத்தகம் சொல்லுகிறது: https://www.exoticindiaart.com/book/details/IDD253/

    ஒரு கேள்வி. கோமாளி போல ஊளையிட்டுக்கொண்டு ஒரு funny manஆக, ஒரு howlerஆக இருப்பது கீழானதா? நமது கடவுள் அப்படியும் இருக்கிறான் என்று சொல்லுவதில் என்ன தவறு?

    கூத்தாடுவதும், கூச்சலிடுவதும் இந்து மரபிலுள்ளோர் செய்வதுதானே? சபரி மலையில் ஐயப்ப மார்கள் ஆடும் ஆட்ட பாட்டங்கள்கூட இந்த கட்டுப்பாடற்ற, அபிப்பிராயங்கள் பற்றிக் கவலைப்படாத கட்டற்ற களியாட்டத்தின் வெளிப்பாடுதானே?

    அத்தகைய வெளிப்பாடு தவறா?

  23. அசத்தோமா சத்கமய – உண்மைக்கு செல்வதைக் குறிக் கோளாக வைத்து சத்யம் எவ ஜெயதே , உணமையே வெல்லும் என்று சொல்லும் ஒரே மதமாக இந்து மதம் இருக்கிறது.

    உண்மையை தேடி அடைவதை குறிக்கோளாக வைக்கும் ஒரே மதமாக, கண்ட உண்மையை ஏற்றுக் கொள்ள சொல்லும் ஒரே மதமாக் இந்து மதமே உள்ளது. இதை விட என்ன இன்னும் open source தேவை?

    உலகிலேயே ஆன்மீக உயர்வுக்கு உதவும் எல்லா முறைகளையும் ஆதரித்து அரவணைக்கும் ஒரே மதமாக இந்து மதம் மாத்திரமே, உள்ளது. வெறுப்பே இல்லாமல் வாழ்வது (அத்வேஷ்டா) , தாவர , ஜங்கம உள்ளிட்ட எல்லா உயிர்க்ளைடமும் சிநேகமாக இருக்க வேண்டும் ஆகிய மிகச்சிறந்த கொள்கைகளை கூறும் ஒரே மதமாக இந்து மதமே உள்ளது.

    இந்த மதத்தை உலக மக்கள அனைவருக்கும் சரியான வகையில் உணர்த்துவது இந்த உலகுக்கு நாம் செய்யும் நன்மை ஆகும்.

    அதே நேரம் இந்துக்களுக்கு இந்து மதத்தைப் பற்றிய திரிபு வாதங்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்து மதம் புணர்ச்சி வழியான ஆன்மீகத்தை சொல்லவேயில்லை. நல்ல ஒரு மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவசரத்திலே கெடுதியான விடயங்களை புகுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்து மதம் பற்றி யாருக்காவது சந்தேகம் இருந்தா ல் , முதலில் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் இந்தக் கட்டுரையில் உள்ள படங்களுடன் இந்தக் கட்டுரையைப் பிரின்ட் எடுத்து கொடுத்து , படிக்க சொல்லுங்கள். அவர்கள் சொல்வார்கள், இந்து மதத்தில் ஆன்மீக உயர்வுக்கான வழிகளில் புணர்ச்சி , போதை இதற்க்கு இடம் இருக்கிறதா என்று.

    மற்றபடி கட்டுரையாளர் இந்து மத்தைப் பற்றி முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். அவரைக் குறை சொல்லவில்லை. அவர் எழுதியதை வெளிடும் போது விளக்கம் கொடுக்கக் வேண்டியது அவசியம். இப்போது பல இந்து இளைங்கர்களுக்கே இந்து மதம் பற்றி சரியாக தெரியவில்லை. இதிலே புணர்ச்சி, போதை என்று இழுப்பது மயக்கத்தின் பாதையே. மயக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

  24. @ திருச்சிக்காரர்

    ஐயா,

    புணர்ச்சி, போதை, புலால் வழியாக இறையைத் தேடும் பல பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

    ஆனால், அவை சமூகத்தைப் பாதிக்காத வகையில் இந்து சமூகம் அனுமதித்தும் வருகிறது.

    இவற்றை இந்து மரபு வெறுத்ததில்லை. வெறுக்கச் செய்வது நாம் கற்ற ஆங்கிலக் கல்வி முறை.

    @ கந்தர்வன்

    “வாமாச்சாரம்” வெறுக்கப் படவில்லை. தாந்த்ரீக சாதகர்களில் பலரால் விலக்கப்பட்டது. சிலரால் பயிலப்பட்டது.

    உண்மையில், வலது-இடது என்ற பிரிவுகள் தெளிவானவை அல்ல. நடைமுறையில் இருக்கும் பல இந்துச் சடங்குகள் வாமாச்சாரர்கள் என்று கீழாக இப்போது அழைக்கப்படுபவர்களால் உருவானவை.

    வைதீக பூஜைகளின்போது செய்யப்படும் பல முத்திரைகள் வாமாச்சார முத்திரைகள் என்று கூடச் சொல்லலாம்.

    இந்து மதத்தையும், அதன் சடங்குகளையும் இணைக்கின்ற ஊடுபாவாக இருப்பது தாந்த்ரீக மார்க்கமே.

    தாந்த்ரீகம் என்றாலே “ஊடுபாயும் தத்துவம்” எனப் பொருள் என்று கேள்விப் பட்டுள்ளேன்.

  25. Dear Sir,

    I am sorry this comment is not releated in this post.

    But releated in this time. (tamil manadu at Kovi.)

    All advadismants of manadu in June 23 – 27. BUT NOT IN AANI 9 TO 13th [‘AANI’ IS ONE OF THE TAMIL CALANDER MONTH]. SO TAMIL IS IDENTIFY IN ENGLISH DATE AND MONTH WHY ?

    WHY…??? EXPOSED IN THIS MATTER IN TAMILHINDU AND TAMIL BLOGPOST’S ?????

    by

    R. Natarajan

  26. @களிமிகு கணபதி

    ஐயா,

    //Ref: @ திருச்சிக்காரர்

    ஐயா,

    புணர்ச்சி, போதை, புலால் வழியாக இறையைத் தேடும் பல பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

    ஆனால், அவை சமூகத்தைப் பாதிக்காத வகையில் இந்து சமூகம் அனுமதித்தும் வருகிறது.

    இவற்றை இந்து மரபு வெறுத்ததில்லை. வெறுக்கச் செய்வது நாம் கற்ற ஆங்கிலக் கல்வி முறை.//

    மன்னிக்க வேண்டும்.

    பகவத் கீதை, உப நிடதங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் உள்ளிட்ட எந்த இந்து மதத்தின் முக்கிய நூல்களிலும் பற்றிய குறிப்புகள் எதுவும் எனக்குத் தெரிந்த அளவிலே இல்லை. நீங்கள் தெரிவித்தால் தெரிந்து கொள்வேன்.

    மாறாக புலனடக்கம் பற்றி உள்ளது. எனக்குத் தெரிந்து நான் வசிக்கும் இடத்திலும், நான் இது வரை சென்று பழகிய இந்துக்கள் யாரும், இந்த வகையிலே (புணர்ச்சி, போதை, புலால் வழியாக இறையைத் தேடுவது) இல்லை.

    சிறுவனாக இருந்த போது வைணவர்களோடு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் எனப் படும் நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறேன். சைவர்களின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியைப் பார்த்து இருக்கிறேன்.

    திருச்சியை அடுத்த கலிய பெருமாள் கோவிலில் ராம நவமி விழா லட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்கள். பெரிய தேர் இழுப்பார்கள். பத்து நாள் உற்ச்சவம்.

    திரவுபதி அம்மன் கோவிலிலே தீ மிதி பார்த்து இருக்கிறேன். தைப் பூசத்திலே அலகு குத்திக் கொள்வதை வியப்புடன் பார்த்து இருக்கிறேன்.

    நான் பல துறவிகளுடன் பழகி இருக்கிறேன், அவர்களின் ஆன்மீக சாதனை முயர்ச்சிக்ளைக் கண்டு இருக்கிறேன். ஹடயோகிகளின் சாதனைகளை பார்த்து இருக்கிறேன்.

    யாரிடமும் புணர்ச்சி, போதை வழி ஆன்மீக முயற்ச்சியை கண்டதோ , கேட்டதோ இல்லை.

    வட இந்தியாவிலே அகோரிகள் எனப் படுபவர்கள் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, புணர்ச்சியை ஒரு வழியாக உபயோக்கிப்பதாக படித்து இருக்கிறேன். என்னுடைய கேள்வி அவர்கள ஆன்மீகத்திலே முன்னேறி வெற்றி பெற்று இருக்கிறார்களா?

    அவர்களுடைய முறையானது ஒரு இராமகிருஷ்ண பரம ஹம்சரையோ , வீர சிவாஜியையோ, மாறக்கண்டேயனையோ, அப்பரையோ, பட்டினதாரையோ, பாம்பாட்டி சித்தரையோ, நந்தனாரையோ , போகரையோ, நசிகேதசையோ ….. உருவாக்கி இருக்கிறதா?

    இந்த புணர்ச்சி, போதை ஆகியவை எல்லாம் நாகரீகம் இல்லாத் வெளி நாட்டவர் இந்திய சமுதாயத்தில் வந்து கலந்த போது, அவர்க்ளளால் புகுத்தப் பட்டவை என சுவாமி விவேகானந்தர் “இந்திய ரிஷிகள்”என்னும் தலைப்பிலே சென்னையில் ஆற்றிய உரையிலே சொல்லி இருக்கிறார்.

    புத்த மதம் சீர்கெட்டு இருந்த காலத்தி இந்து மதம் மீண்டும் ஆதி சங்கராரல் புனர் நிர்மாணம் செய்யப் படுவார்க்கு இடைப் பட்ட நேரத்திலே புகுத்தப் பட்ட பழக்கங்கள் இவை. என சொல்லி இருக்கிறார்.

    அதை சுத்தம் செய்து மீண்டும் தூய்மையான இந்து மதத்தை கொண்டு வர ஆதி சங்கரர் முயன்றார் எனவும், அந்தப் பணி முடியவில்லை, இன்றளவும் தொடர்கிறது என்றும் சுவாமி விவேகானந்தர் சொல்லி உள்ளார். அது சரிதான் என்பது இப்போது வூர்ஜிதம் ஆகிறது.

    உங்களுக்கு நேரம் கிடைக்குமானால் அந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

    இந்து மதம் தூய்மையானது. அதிலே தவறான பழக்கங்கள் இருந்தால் அதை சுத்தம் செய்வோம். நம் மேல் சட்டையில் காக்கை எச்சம் இருந்தால் சுத்தம் செய்ய வேண்டுமேயல்லாது அந்த எச்சத்தையே ஒரு டிசைனாக வைத்து அழகு பார்க்க முடியாது.

    உங்கள் மனதைப் புண் படுத்தும் வகையிலே எழுதி இருந்தால் அதற்காக உண்மையிலே வருத்தப் படுகிறேன். ஆனால் புணர்ச்சி, போதை, சிடிக்கள் இவ எல்லாம் இந்து மதத்தை, புறம்போக்கு நிலம் போல பட்டா போடா அனுமதிக்க முடியாது. நல்ல கருத்துக்களாக இருந்தால் கொண்டு வாருங்கள். இந்து மதம் அதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும்.

    எல்லா ஆன்மீக முறைகளும் (அதாவது உண்மையான ஆன்மீக முறைகள்) வழிபாடுகள் இவை எல்லாம் இந்து மதத்திலே உள்ளன. அருவ வழிபாடு, உருவ வழிபாடு, தியானம், ராக (இசை வழி) ஆராதனை, யோகம் , ஹடயோகம், ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி, விழாக்கள் …. எல்லாம் ஏற்க்கனவே இருக்கின்றன.

    புணர்ச்சி, போதை, சிடிக்கள் இவ எல்லாம் இந்து மதத்துக்கோ , மக்களுக்கோ தேவை இல்லை, அவை பலவீனத்தையே உருவாக்கும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  27. @ திருச்சிக்காரன் அவர்களே,

    இதில் மனம் வருந்த என்ன இருக்கிறது?

    நீங்களும் நானும் புரிதலில் வேறுபடுகிறோம். அவ்வளவுதான். இதில் தவறே இல்லை.

    தாந்த்ரீகம் எல்லாருக்கும் உரியது இல்லை. தாந்த்ரீகத்தின் எல்லா முறைகளையும் எல்லா தாந்த்ரீகர்களும் பயிலுவதும் இல்லை. அவை அபாயமானவை. சாதாரண பொதுமக்களுக்கானவை இல்லை. எனவே, அவை பற்றி நமக்கு அதிகம் சொல்லப் படுவதில்லை. வாமாச்சாரத்தில் இருந்து விலகி இருக்க எச்சரிக்கப் படுகிறோம். விவேகானந்தர் போன்றவர்களால்.

    அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. தாந்த்ரீகம் “நமக்குத்” தப்பு. சிலருக்கு அதுதான் சரி.

    எனவே அதை வெறுக்க வேண்டியதில்லை. ஆனால், அதில் இருந்து நாம் விலகுவோம், தள்ளி நின்று வணங்குவோம் என்பதே என் தரப்பு.

  28. திரு பனித்துளி அவர்களுக்கு,

    //சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள உளவியல் வார்த்தைகள் யூரோப்பியர்களாலும், மற்றவர்களாலும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப் பட்டுள்ளன. தமிழுக்கு அப்படி எதுவும் நடக்க வில்லை. உண்மை இங்கனம் இருக்க ஸம்ஸ்கிருதத்தை எப்படிப் பாராட்டலாம், ஏன் தமிழைப் பாராட்டவில்லை என்று குதிப்பது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே.//
    இது முற்றிலும் தவறானது. தமிழ் மொழி ஆவணப்படுத்தவில்லை என்பதிற்காக அதில் ஏதும் கூறவில்லை என்பது தவறு. எழுதியவருக்கு தெரியவில்லை என்றால் அதை மொழி பெயர்ப்பு செய்பவருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
    தமிழை பாராட்ட சொல்லவில்லை, தனக்கு தெரியாமல் //வேறு எந்தப் பழைய மற்றும் நவீன மொழிகளிலும் இல்லாத அளவு// என எழுத வேண்டாம். மகா கவி பாரதியார்கூட “யாம் அறித்த மொழிகளிலே” என்று தான் கூறினார்.

    //என்னைக் கேட்டால், விக்கிப்பீடியாவில் உள்ளதுதான் உண்மை
    என்பேன்.//
    இந்து மத கருத்துக்களை விக்கிப்பீடியாவில் எதிர் பார்ப்பது தவறு. உண்மையாக விருப்பபட்டால் ‘மூல நூல்களை’ படித்து அறிந்துகொள்வதே சிறந்தது.

    // தமிழ் மொழியில் உள்ள உளவியல் வார்த்தைகள், மற்றும் சிவனின் வரலாற்றுப் பெருமை போன்றவை ஆவணப்படுத்தப்பட்டு, இதைப் போன்ற கட்டுரையாளர்களுக்கும், மற்ற பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியதும் சிவபக்தர்களின் பணியே. //
    ஆவணப்படுத்தப்பட்டால் நல்லது.

    இந்த கட்டுரை இந்து மதத்தை பற்றி தொலை நோக்கு பார்வையுடன் எழுதப்படவில்லை. கட்டுரையாளருக்கும் மொழி மாற்றம் செய்தவருக்கும் இந்து மதத்தை பற்றி அழ்ந்த புலமை இல்லை என நினைக்கின்றேன்.

    சோமசுந்தரம்

  29. சோமசுந்தரம் ஜி,

    நான் கம்ப்யூட்டரைப் பற்றி இங்கிலீசில் படிக்கும் மாணவன். என்னிடம் போய் எனக்குத் தெரியாத வார்த்தைகளைப் போட்டிருக்கும் சங்கப் பாடல்களையும், அந்தக் கால இலக்கியங்களையும் நீயாகவே படித்துத் தெரிந்துகொள் என்றால், அறிஞர்களுக்கே கடினமாக இருக்கிற வேத மூலங்களையும் நீயே படித்துத் தெரிந்துகொள் என்றால் ….. நியாயமா சார்?

    எல்லா மூலங்களையும் படித்தவர்கள் ஏன் தமிழில் உள்ள உளவியல் வார்த்தைகள் மற்ற எல்லா மொழிகளிலும் உள்ள வார்த்தைகளைவிட அதிகம் என்று நிரூபிக்கக்கூடாது?

    தமிழ் மொழியில் உள்ள உளவியல் வார்த்தைகளை நான் ஆராய்ந்து ஆதாரங்களை முன்வைக்கமாட்டேன், தமிழ் மொழியின் பெருமைகளை உலகெங்கும் உள்ள அறிஞர்களும் பொதுமக்களும் அறியத் தரமாட்டேன்.

    வேறு யாரோ அறிஞர் வேறு ஒரு மொழியில் இப்படி ஒரு ஆராய்ச்சியை நடத்தி, எல்லாரும் அறியும்படி ஏற்றுக்கொள்ளும்படி செய்தால், அதை எதிர்த்து விக்கிப்பீடியாவிலோ அல்லது வரலாற்று மாநாடுகளிலோ ஆதாரங்களை வைக்க மாட்டேன்.

    ஆனால், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை ஏதேனும் அறிஞர் போகிற போக்கில் சொன்னால் எனக்குக் கோபம் தலைகால் தெரியாமல் வந்துவிடும்.

    நானும் செய்யமாட்டேன், செய்தவனையும் திட்டுவேன் என்பதுதான் நம் தமிழ் பற்று போலும் !

    மன்னியுங்கள். நீங்கள் எழுதி இருப்பது சிரிப்பைத் தருகிறது.

    செம்மொழி மாநாடு என்ற பெயரில் சொம்படிப்பதற்கே தமிழனுக்கு நேரம் இல்லாத போது இப்படி வாதம் செய்வதுதான் நம்மால் முடியும் போல.

  30. நமது கடவுளரை உள்ளங்கவர் கள்வன் என்று பக்தன் கூறும் (B )பாவத்துக்கும் அரசியலார்/ போலி நாத்திகர் கூறும் (B )பாவத்துக்கும் உள்ள வித்தியாசமே பேட்டை துள்ளலுக்கும் இறைவனைக் கூச்சலிட்டுத் திரிபவராகக் கூறும் கட்டுரைக்கும் உள்ளது.

    நான் blasphemy என்று கூறியதை ஒப்புக்கொள்வதைவிட ஹிந்து மதம் open source மதம் என்பதை நிலைநாட்டுவதில் பனித்துளி அவர்களுக்கு உள்ள வேகம் வியப்பைத் தருகிறது. ஆனால் கட்டுரை ஆசிரியர் எழுதியது blasphemy தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    கட்டுரையைக் கண்டவுடன் அதை வெளியிட்ட தளத்துக்குச் சென்று பார்த்தேன். அதில் comments closed என்றிருந்தது. அதனால் தளத்துக்கு ஒரு மின்னஞ்சல் செய்தேன். நான் இதைச்செய்தேன் என்றெல்லாம் பொதுத் தளத்தில் எழுதுவது எனக்கு உடன்பாடில்லை, ஆனால் பனித்துளி அவர்களின் எழுத்தில் இருந்த ஆதங்கம் இதனை எழுத வைக்கிறது.

    விக்கிபீடியா தளத்தில் நான் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நமது மதம் சார்ந்த கட்டுரைகளில் உள்ள தவறான கருத்துக்களை edit செய்து வநது அதன் source எனப்படும் கோட்பாட்டில் உள்ள குறைபாட்டைப் போக்கப் போராடி வருகிறேன். original ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட source ஆக விக்கிபீடியா ஏற்கவில்லை. மேலும் ஒரு கட்டுரையில் நமது உச்சநீதிமன்றத்தீர்ப்பையே ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட source ஆக விக்கிபீடியா ஏற்கவில்லை. நானும் எனது குழுவினரும் போராடி Arbitration வரை சென்றுதான் இதையே நிலைநாட்ட முடிந்தது. பனித்துளி அவர்கள் சொல்வதுபோல வாய்ப்புகள் ஏராளமானதாகினும் அவற்றின் விதிமுறைகள் மேலைநாட்டினர் வகுத்ததாகவே இன்னமும் இருக்கின்றன.

    DMoz என்றொரு தளம் அதில் சமயம் சார்ந்த பக்கங்களில் எழுத எனக்கும் எனது குழுவில் உள்ளோருக்கும் அனுமதி மறுக்கப் பட்டு விட்டது. பனித்துளி அவர்கள் நான் முன்னமே எழுதிய /// “It is very difficult to correct web sites like Wikipedia, because if we correct it by editing today, we may keep a watch on it for say one or two years. After sometime or so, someone else edits it changing it from the correct position in our heritage. I am frustrated with this effort.” /// என்பதை முழுமையாகப் படிக்காமல் எழுதியிருக்கிறார் என்றே கருதுகிறேன்.

    வெண்தோலினரும்
    வன்தோளினரும்
    வகுத்ததை என்றும்
    வெல்லுதல் கடிதே ….
    கடிதே எனினும்
    முயன்றால் முடியும்
    முயல்வோம் எனவே …

  31. களிமிகு கணபதி அவர்களே,

    //தாந்த்ரீகம் எல்லாருக்கும் உரியது இல்லை. தாந்த்ரீகத்தின் எல்லா முறைகளையும் எல்லா தாந்த்ரீகர்களும் பயிலுவதும் இல்லை. அவை அபாயமானவை. சாதாரண பொதுமக்களுக்கானவை இல்லை. எனவே, அவை பற்றி நமக்கு அதிகம் சொல்லப் படுவதில்லை. வாமாச்சாரத்தில் இருந்து விலகி இருக்க எச்சரிக்கப் படுகிறோம். விவேகானந்தர் போன்றவர்களால்.

    அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. தாந்த்ரீகம் “நமக்குத்” தப்பு. சிலருக்கு அதுதான் சரி//

    நான் சொன்னது புணர்ச்சி , போதை இவற்றை ஆனமீக முன்னேற்றத்துக்கு வழியாக உபயோகப் படுத்த முடியுமா , அப்படி உபயோகப் படுத்துவது இந்து மத முறையா என்பது பற்றியே.

    நாம் அனைவரும் நம்முடைய உண்மைத் தன்மை பற்றி அறியாமையால மயக்கத்தில் கஷ்டப் படுகிறோம். மயக்கம் நீங்கி உண்மையை உணர்ந்தால் நாம் விடுதலை பெற்ற சுதந்திரவானாக இருப்போம் என்பதே இந்து மதத்தின் மிக அடிப்படையான கொள்கைகளில் ஒன்று, என்று நான் கருதுகிறேன்.

    மோக முத்கரம், மயக்கத்தி இருந்து விடுதலை பெற்று உண்மையைக் காண்பதுதான் குறிக்கோள!.

    இதிலே இன்னும் அதிகமான மயக்கத்தை தரும் போதை, எப்படி விடுதலை தர முடியும்? போதையில் இருக்கும் வரை கவலைகள் இல்லாமல் அதாவது கவலைகள் தெரியாமல் இருக்கும், போதை தெளிந்தவுடன் பிரச்சினைகள, கவலைகள அப்படியேதான் இருக்கின்றன.

    எனவே போதையின் பாதை மயக்கத்தின் பாதை, இந்து மதத்தின் பாதை மயக்கத்தில் இருந்து மீட்கும் பாதை. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை .

    அதே போல புணர்ச்சி என்பது குடும்ப வாழ்க்கையில் அங்கீகரிக்கப் பட்ட ஒன்றே. கணவனும் மனைவியும் புணர்வதை இந்து மதம் ஒரு போதும் தடுக்கவில்லை.

    மற்றபடி ஒரு பிரம்மச்சாரி புணர்ச்சி செய்வது சரியல்ல, அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

    துறவி புணர்ச்சியில் ஈடுபடுவது என்றால் அவர் யாருடன் புணர்ச்சி செய்வார், இன்னொருவன் மனைவி உடனா? இது இந்து மத ஆன்மீக முறை அல்ல. விபச்சாரம் இந்து மதத்தில் அனுமதிக்கப் படவில்லை. ஆன்மீக விடயத்தில் துறவிக்கு புணர்ச்சி பின்னடைவை உருவாக்கும், விஸ்வாமித்திரருக்கு மேனகை உருவாக்கியது போல.

    குடும்பத்தோடு வாழ்ந்த அக்கால முனிவர்கள் பலரும் புணர்ச்சிக்கு குறைவான முக்கியத்துவம் கொடுத்து வந்ததாகவே விவரிக்கப் பட்டு உள்ளது.

    மற்றபடி பல குடுமபஸ்தர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவாறே பக்தி அடிப்படையில் ஆன்மீக முன்னேற்றம் கண்டு உள்ளனர்.

    குடுமபஸ்தர்க்ளுக்கு புணர்ச்சி அனுமதிக்கப் பட்டுள்ளது, ஆனால் ஆன்மீக முன்னேற்றத்துக்கு அது காரணமல்ல.

  32. வெகுஜன ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி அமைப்புகள் சரியான புரிதல் இன்றி நமது மதத்தில் போதை ஒரு பங்கு (பெரும்பங்கு அல்ல) வகிப்பதைப் போன்ற தோற்றத்தைச் சமீபகாலமாக உருவாக்கி வருகிறார்கள். இதற்கும் முறையான சரியான உண்மையின் அடிப்படையிலான விளக்கத்தை நம்மவர்கள் அளிப்பதுவும் அதனைப் பரவலாக மக்களிடமும் எடுத்துச் செல்லவும் தேவை இருக்கிறது.

    சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முனிவரிடம் அணுங்கி உரையாடும் வாய்ப்பு கிடைத்தபோது அவரிடம் சில வினாக்களை எழுப்பினேன். அவர் ஆண்டில் இருமுறை கொடஜாத்திரி – அகும்பா காடுகளில் உள்சென்று ஒவ்வொரு முறையும் சுமார் 45 முதல் 60 நாட்கள் வரை மோனத்தவத்தில் ஆழ்பவர். உடுத்திய காவியைத்தவிர வேறெதுவும் தம்மிடம் வைத்திருக்காத திருமரபினர். அப்படியானால் அவர் தனது பசி, தாகம், உறக்கம், மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு குறித்த எனது ஐயங்களை அவரிடம் கேட்டேன். பசி வந்தால் காட்டில் தென்படும் கனிகள், கிழங்குகள், மூலிகைத் தழைகள் உதவும் என்றார். தான் பொதுவாக மூலிகைத் தழைகள் பயன்பாட்டையே கொள்வதாகக் கூறினார். காரணம், கிழங்குகளும் கனிகளும் கழிவுக்கு வழி கோலும் எனவே மறுநாள் சில மணி நேரத்தில் தவம் தடைப்படலாம். தாகத்துக்குக் கூட நீரைவிட மூலிகைத் தழைகளையே பயன்படுத்துவது சிறந்தது என்றார். ஏனெனில் அதனால் சிறுநீர் கழிக்கும் அவசியம் நேருவதில்லை, எனவே மூலிகைத்தழைகள் பெரும்பாலும் பயன்படுத்துவதாகக் கூறினார். சில தழைகள் பலநாட்களுக்குப் பசியை அண்டவிடா. சிலவோ சில மணிதான் தாங்கும் எனினும் எது முதலில் கண்ணில் தென்படுகிறதோ அதையே கொள்வேன் என்றும் மீண்டும் மீண்டும் ஒரே செடியில் கொள்ளக்கூடாது எனவும், இதுதான் வேண்டும் என்று தேடிச்செல்வதும் இல்லை எனவும் அதிலும் பலவிதமான சுயக் கட்டுப்பாடுகளோடு தமது வாழ்வு நெறி பற்றிக் கூறினார். பற்றற்ற வாழ்வில் எத்தனை சுய கட்டுப்பாடுகள்.

    இரவில் பெரிய பாறையைத் தேர்ந்து மையத்தில் அமர்ந்து சிறு நெருப்பை சிக்கிமுக்கிக் கல் தழை குச்சிகளை வைத்து உருவாக்கி தம்மை மிருகங்களிடமிருந்து காத்துக்கொள்வதாகவும் சிலநாட்களில் பாறைமீது அமர்ந்து நாட்கணக்கில் தவம் செய்ய முடியும் என்றார்.

    அவர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து பயின்று துறவு பூண்டவர். விவேகானந்தர் கூட இத்தகு மூலிகைகளைத் தமது தவம் செய்யும் நாட்களில் பசி தாகத்திலிருந்து தற்காலிக விடுதலைக்குப் பயன்படுத்தியே தவம் செய்ததாகக் குறிப்பிட்டார். இத்தகு மூலிகைகள் வகைத்தே நம்மால் கஞசா என்றும் ஓப்பியம் என்றும் அறியப்படுகின்றன என்றார். எதுவும் அளவோடு கொள்ளும்போது நற்பயன் அளிக்கவல்லன, அளவுக்கு மீறும்போதுதான் போதைதரும் என்றார். இத்தகு மூலிகைகளே தவசீலர்களுக்கு பசி தாகம் பிணி போன்றவற்றிலிருந்து விடுதலை தர வல்லன. ஆனால் எத் தழை எந்த இடத்தில் கிடைக்கும் எதற்குப் பயன் என்பதை மன்பதை நலன் கருதியே முனிவர்கள் வெளியில் சொல்வதில்லை என்றார். தெரிந்துவிட்டால் இன்றைய வணிக உலகில் இதையும் வணிக ரீதியில் பயன்படுத்துவர் என்றார்.

  33. //என்னைக் கேட்டால், விக்கிப்பீடியாவில் உள்ளதுதான் உண்மை
    என்பேன்.//
    இந்து மத கருத்துக்களை விக்கிப்பீடியாவில் எதிர் பார்ப்பது தவறு. உண்மையாக விருப்பபட்டால் ‘மூல நூல்களை’ படித்து அறிந்துகொள்வதே சிறந்தது.

    திரு சோமசுந்தரம் அவர்களின் இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன். விக்கிபிடியா பொதுவான பார்வைக்கு மட்டுமே (reference ) பயன் படுத்தத் தக்கது. அதனை ஓர் இறுதியான ஆதாரமாகக் கொள்ளமுடியாது. அதிலும் குறிப்பாக நமது சமயம் சார்ந்த விஷயங்களில் இது சரியானதே. ஏனெனில் விக்கிபிடியாவின் source என்பது குறித்த கொள்கை இன்னும் முழுமையாக செம்மையாக உருவாகவில்லை என்பதே உண்மை. The policy on what is the acceptable source has not been completely and blemishlessly evolved by Wikipedia as Wiki is on a trial and error basis as far as this is concerned. எந்தக் கட்டுரையானாலும் அதில் குறிப்பிடும் எந்தக் கருத்தானாலும் அக்கருத்துக்கு ஓர் ஆதாரமாக ஒரு வலைப்பக்கம் இருந்தால் போதும். அதாவது முரசொலியிலோ, விடுதலையிலோ, நக்கீரனிலோ வெளிவந்த எந்தக் குப்பையானாலும் அதை மேகொள் காட்டி விக்கிபீடியா பக்கத்தில் எக்கருத்தையும் எழுத முடியும். இதை நாம் வெட்டினால் அதை எழுதியவர் அதை மீண்டும் எழுதமுடியும். அதை நாம் மீண்டும் வெட்ட அவர் மீண்டும் எழுத பிறகு ஒரு போராட்டம் துவங்கி அப்பக்கத்தை சில பல நாட்களுக்கு திருத்தங்களுக்குத் தடை செய்து, நடுவரிடம் முறையிட்டு இத்தனை செய்தாலும் செய்தித்தாள் எனப்பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆதலின் அக்கருத்துக்களை வெட்ட முடியாது! எனவே விக்கிபீடியா பக்கங்கள் கட்டுரைகள் முதலியன எழுதுபவரின், திருத்துபவரின் (those who edit) தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு (bias) உட்பட்டவை ஆகவே அமைகின்றன. அங்கே ஆராய்ச்சி என்பதோ, உண்மை என்பதோ பின்னடைகிறது. நமது வேதத்தையே மேற்கோள் காட்டவேண்டுமென்றால் கூட ஒரு வலைப்பக்கத்தின் நிரலியைக் கொடுத்தால்தான் ஏற்கப்படும் என்றால் அத்தகு கட்டுரை எப்படி சரியானதாக உருவாக முடியும்? ஒரு ஆராய்ச்சியாளர் தமது ஆராய்ச்சியை ஓர் ஆதாரமாகக் காட்ட முடியாது ஏனெனில் original research ஏற்கப்பட மாட்டாது. அது எங்காவது வெளியிட்டிருக்கப்பட வேண்டும். இதில் ஓரளவு நியாயம் இருந்தாலும், வெளியானதாலேயே சில original research அப்படியே ஏற்கப்படுகின்றன, பிளைபட்டதானாலும். உதாரணமாக, சென்னைப் பல்கலைக் கழகத்தால் ஆய்வுக்கு ஏற்கப்பட்ட கட்டுரைகள் ஆதாரங்களாக ஏற்கப்படும் அது எந்தக் குப்பை ஆனாலும். நான் எதைச் சொல்கிறேன் என்பது நம்மவர்களுக்குப் புரிந்திருக்கும். அதை நாம் மறுக்கும்போது பிரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டும். எனவே விக்கிபிடியா கட்டுரைகள் சரியானது என்பது ஏற்கவொண்ணாதது.

  34. @ திருச்சிக்காரன்

    தாந்த்ரீகம் துறவிகளுக்கான துறை அல்ல.

  35. @ உமா சங்கர்

    ஐயா,

    விக்கிப்பீடியாவில் நீங்கள் ஆற்றும் பணி போற்றத் தக்கது.

    நீர் வாழ்க !

  36. நம் சமய கோட்பாடுகளை அறியாதவர் ஆனால் மலைத்து எதையோ எழுதியது நமக்கு எப்படி பயன் படும்? கட்டுரை நம் வழியை சரியாக காட்டவில்லை.

  37. why dont we write about temples status under government control.yesterday there was an article in DINAMALAR about this.Lightly they touched how our temples are getting changed as a shopping mall.
    please consider and create awareness.
    Thanks

  38. கட்டுரையை விட இங்கே வரும் மறுமொழிகளே அதிகம் பயன் அளிபதாக நான் எண்ணுகிறான். கட்டுரையை ஒரு முறை தான் படிக்கிறேன் அனால் மறுமொழிகளை பல முறை படிகின்றேன் அவைகள் தான் அதிகம் இந்து மதத்தை பற்றி விளக்கமும் தெளிவையும் அளிக்கின்றன. கட்டுரை ஆசிரியர்க்கும் மறுமொழி அளிப்பவர்க்களுக்கும் என் மனமார்த நன்றியையும், உங்கள் சிறப்பான பனி தொடர இறைவனை ப்ராத்தனை செய்கிறேன்.

    ம. மணிவண்ணன்
    புதுவை

  39. @களிமிகு கணபதி,

    தாந்திரீகம் துறவிகளுக்கான துறை அல்ல என்றால், வேறு யாருக்கான துறை?

    இந்திய சமுதாயத்திலே, குறிப்பாக இந்து சமுதாயத்திலே நான்கு நிலைகள் உள்ளன. அவையாவன,

    பிரம்மச்சரியம், கிரிஹஸ்தன், வானப் பிரஸ்தன், துறவி.

    இதிலே ஒவ்வொருவருக்கான வாழ்க்கை முறையும் தெளிவாக வரையறை செய்யப் பட்டு உள்ளது. சாஸ்திரங்களில் இதற்க்கான விதி முறைகள் உள்ளன.

    இந்த நான்கு நிலையில் ஏதாவது ஒன்றில் இல்லாதவன் இந்து சமுதாயத்தை சேர்ந்தவன் அல்லன். அவன் சமுதாய வாழ்க்கைக்கு எதிரான மைனர் ( நான் போலீசு இல்லடா …. ), வகையை சேர்ந்தவனாகவே கருதப் படுவான்.

    காட்டிலே வசிப்பவர்கள் கூட இந்த நான்கு பிரிவிலே ஒன்றில்தான் இருந்தனர். காட்டில் பலகாலம் வசித்த பிரம்மச்சாரிகள், ரிஷிய ஸ்ரிங்கர் , சிரவணன், காட்டில் வசித்த கிரஹஸ்தர் இராமர், பானடவர்கள், காட்டிலே வசித்த முனிவர்கள் பலர் , வானப் பிரசத நிலையை திருதராஷ்டிரன் காட்டிலே கழித்து இருக்கிறார்.

    காட்டிலே இந்த நான்கு நிலையை தாண்டி அடாவடி அக்கிரம வாழ்க்கை வாழ்ந்தவர்கள், சூர்ப்பனகை, தாடகை, மாரீசன்… போன்றவர்கள்.

    எனவே இந்து என்றால் தாந்திரீகமோ, மாந்திரீகமோ, ஹட யோகமோ… எதுவாக இருந்தாலும், இந்த நான்கு வாழ்க்கை நிலைகளில் ஒன்றில் இருந்துதான் செய்ய வேண்டும். இந்த நான்கு முறையையும் தாண்டிய வாழ்க்கை முறைக்கு இந்து சமுதாயத்தில் அனுமதி இல்லை.

    சிலர் “ஜாலி”வாழ்க்கை என்று சொல்லி விபச்சார வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ இறங்கி விடுகின்றனர். அவர்கள் திருந்தி ஒரு பெண்ணை மனம் செய்து கொண்டு சமுதாய வாழ்க்கை வாழலாம். அப்படி திருந்தாமல் ஜாலி வாழ்க்கையில் ஈடுபடுபவர்களும் இந்துக்களாக வே உள்ளனர். ஆனால் அவர்களுக்கு சமுதாயத்தில் முழு வரவேற்ப்பு இல்லை, முழு அனுமதி இல்லை. ஒரு ஜாலி பார்ட்டியை தன வீட்டில் வந்து நெருங்கிப் பழக ஒரு கிரிஹஸ்தான் பெரும்பாலும் விரும்ப மாட்டான். அப்படி இருக்கும் போது ஆன்மீகத்துக்கு புணர்ச்சியை உபயோகப் படுத்தும் ஒருவனால் இன்னும் அபாயமே.

    எனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்பவன், தன மனைவியோடு புணர்ச்சி செய்ய இந்து மதம் அனுமதிக்கிறது, அது தவறல்ல என்பது யாவரும் அறிந்ததே.

    கணவனும் மனைவியும் புணர்ச்சி செய்து கொள்வதை, அது வம்ச விருத்திக்கோ அல்லது தாந்திரீகத்துக்கோ எதற்காக வேண்டுமானாலும் புணர்ச்சியில் ஈடுபடலாம் , யாரும் குறை சொல்லவில்லை.

    ஆனால் புணர்ச்சி என்பது ஆன்மீக உயர்வுக்கு வழி வகுக்கும் என்றால், ஒருவருக்கு விடுதலை அளிக்கும் என்றால், கோடானு கோடி மக்கள் மிகப் பெரிய ஆன்மீக சாதனையாளர் ஆக இருப்பார்கள்.

    ஆன்மீகத்தில் உச்ச கட்டத்தை எட்டியவன் ஆசையை முழுதும் வென்றவனாக இருப்பான. பெண்ணைப் பார்த்தாலும் ஆசைப் பட மாட்டான், ஒரு பெண் அவன் அருகில் வந்தாலும் அவனைப் பார்த்து சிரித்தாலும் அவன் ஆசைப் பட மாட்டான், அவன் மடியிலே ஒரு பெண் உட்கார்ந்தாலும் அவன் ஆசைப் பட மாட்டான் என்று சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஆனால் இதைப் பரீட்சித்துப் பார்ப்பதாக சொல்லி புணர்ச்சியில் ஈடுபடுவது தவறு. பட்டினத்தார் போல பேய்க் கரும்பைக் கடித்தாலும் கசப்பு இல்லாத நிலையை அடைகிறோமா என்று பரீட்சை செய்தால் போதுமானது. ஒரு துறவி ஒருவர் பாகற்காயை பச்சையாக அடிக்கடி சாப்பிடுவார் என்று சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

    வூர்த்ரேவதன் என்றால் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

    ஞான வழியில் பல துறவிகள் ஆன்மீக உயர்வை அடைந்துள்ளனர். பக்தி வழியிலே பலர் ஆன்மீக உயர்வை அடைந்துள்ளனர், கர்ம யோக வழியிலே பலர் ஆன்மீக உயர்வை அடைந்துள்ளனர்.

    புணர்ச்சி வழியிலே ஆன்மீக சாதனியில் வெற்றி பெற்றவர்கள் யாரவது இருந்தால் சொல்லுங்கள்.

  40. இதே தளத்தில் வெளியாகியிருக்கும் மறவர் மண்ணில் மத மாற்றம் செய்த பாதிரியார் என்ற கட்டுரையில் காணும் கீழ்கண்ட பகுதிகள் இங்கே மிகவும் பொருந்துகின்றன.

    ///நம் மக்களுக்கு அந்தக் காலத்தில் வெள்ளைத் தோலையும், அவர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழையும் கண்டதும் ஒருவித மோகம் ஏற்பட்டு விடுகிறது. இன்றுகூட அயல்நாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளின் பின்னால், நமது குழந்தைகள் காணாததைக் கண்டது போல ஓடுவதைப் பார்க்கிறோமல்லவா? அந்த தாழ்வு மனப்பான்மைதான் நம் அப்பாவி மக்களை அவர்கள் பின் ஓடவைத்தது.////

    ////நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. செயல்பாடுகள் தான் மாறவில்லை!////

    சத்தியமான வார்த்தைகள். வெண் தோலினர் எதோ ஒரு பக்கம் புகழ்வதுபோல எழுதிவிட்டு அதிலேயே வஞ்சத்தை உள்வைத்து அவதூறாக எழுதினால் புரியாத நிலையில்தான் இன்னமும் இருக்கிறோம்.

  41. @ உமா சங்கர்

    ஐயா,

    //அவர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து பயின்று துறவு பூண்டவர். விவேகானந்தர் கூட இத்தகு மூலிகைகளைத் தமது தவம் செய்யும் நாட்களில் பசி தாகத்திலிருந்து தற்காலிக விடுதலைக்குப் பயன்படுத்தியே தவம் செய்ததாகக் குறிப்பிட்டார். இத்தகு மூலிகைகள் வகைத்தே நம்மால் கஞசா என்றும் ஓப்பியம் என்றும் அறியப்படுகின்றன என்றார். எதுவும் அளவோடு கொள்ளும்போது நற்பயன் அளிக்கவல்லன, அளவுக்கு மீறும்போதுதான் போதைதரும் என்றார். இத்தகு மூலிகைகளே தவசீலர்களுக்கு பசி தாகம் பிணி போன்றவற்றிலிருந்து விடுதலை தர வல்லன. ஆனால் எத் தழை எந்த இடத்தில் கிடைக்கும் எதற்குப் பயன் என்பதை மன்பதை நலன் கருதியே முனிவர்கள் வெளியில் சொல்வதில்லை என்றார். தெரிந்துவிட்டால் இன்றைய வணிக உலகில் இதையும் வணிக ரீதியில் பயன்படுத்துவர் என்றார்.//

    ஐயா, நீங்கள் சொல்ல வருவது என்ன என்று தெளிவாக சொல்லுங்கள்!

    பசிக்காக இல்லை தழைகளை உணவாக உட்கொள்வது வேறு,

    ஆன்மீக சாதனை என்ற பெயரில் கஞ்சா ஓப்பியம் இலைகளை அரைத்து பங்கி அடிப்பது என்பது வேறு.

    அத்ரி, பிருகு, குத்ஸ , வசிஷ்ட , கவதம, காஷியப, ஆங்கீரச முனிவர்கள் தொடங்கி , போகர், பாம்பாட்டி சித்தர் உட்பட பலரும் காட்டிலே வசித்து இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பங்கி அடிக்கவில்லை என நான் கருதுகிறேன்.

    பங்கி அடிப்பது ஒருவன் மனதை மயக்கும். இந்து மதம் ஒருவனின் மயக்கத்தைப் போக்கி அறிவை வளர்ப்பது.

    நீங்கள் wikipediyaவில் செய்து வரும் சேவையை பாரட்டுகிறேன்.

    அதே நேரம் இந்து துறவிகள் காட்டிலே தாகத்துக்காக கஞ்சா இலைகளை தின்கிறார்கள் என்று யாரும் கருதுவது போல அமைந்து விடாமல் , தயவு செய்து தெளிவாக எழுதமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    இந்து முனிவர்கள், காட்டிலே தாகம், பசி இவற்றுடன அலைந்தாலும், சரியான இலை தழை களையே உண்டிருப்பார்கள், கஞ்சா போன்ற இலைகளை தவிர்த்து இருப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிரேன்!

    //இத்தகு மூலிகைகள் வகைத்தே நம்மால் கஞசா என்றும் ஓப்பியம் என்றும் அறியப்படுகின்றன என்றார். //

    மூலிகை என்பது ஒருவனின் உடல், மன நிலையை சீராக்குவது. கஞ்சா, ஒப்பியம் இவை ஒருவனின் மன உடல் நிலையை சீர் குலைப்பவை.

    //எதுவும் அளவோடு கொள்ளும்போது நற்பயன் அளிக்கவல்லன//

    முதலில் அளவோடு அடிக்கிறான், அப்புறம் அடிக்ட் ஆகி விடுகிறான். தன மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாட்டையும் இழக்கிறான்.

    இதைப் போல நான்கு கட்டுரைகள் வந்தால் போதும், இந்து மதத்தைக் கெடுக்க வெளியில் இருந்து ஆள் தேவை இல்லை

  42. ஐயா,
    மிகப்பிரமாதமான கட்டுரை. பனித்துளியின் நான்கு வகை படிப்பினர் சிறந்த உதாரணம். நாம் மேற்கத்திய சொல்லாடல்களை பயன்படுத்தி இப்போது இந்து மதம் பேசுகிறோம். இதில் தவ்றொன்றும் இல்லை. இதை படிக்கிற படித்த மேற்குல இளைஞனுக்கு இது வெகு எளிதில் சென்றடைய முடியும்.

    ஓப்பன் ஸோர்ஸ் எப்போதும் வணிக பொருள்களை போல வெற்றியடைவதில்லை என்பது எனக்கு மிக ஆச்சமூட்டுவதாய் உள்ளது.

  43. @ உமாசங்கர்

    //அவர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து பயின்று துறவு பூண்டவர். விவேகானந்தர் கூட இத்தகு மூலிகைகளைத் தமது தவம் செய்யும் நாட்களில் பசி தாகத்திலிருந்து தற்காலிக விடுதலைக்குப் பயன்படுத்தியே தவம் செய்ததாகக் குறிப்பிட்டார். இத்தகு மூலிகைகள் வகைத்தே நம்மால் கஞசா என்றும் ஓப்பியம் என்றும் அறியப்படுகின்றன என்றார். எதுவும் அளவோடு கொள்ளும்போது நற்பயன் அளிக்கவல்லன, அளவுக்கு மீறும்போதுதான் போதைதரும் என்றார். இத்தகு மூலிகைகளே தவசீலர்களுக்கு பசி தாகம் பிணி போன்றவற்றிலிருந்து விடுதலை தர வல்லன. ஆனால் எத் தழை எந்த இடத்தில் கிடைக்கும் எதற்குப் பயன் என்பதை மன்பதை நலன் கருதியே முனிவர்கள் வெளியில் சொல்வதில்லை என்றார். தெரிந்துவிட்டால் இன்றைய வணிக உலகில் இதையும் வணிக ரீதியில் பயன்படுத்துவர் என்றார்.//

    அடக் கடவுளே ! அடுக்குமா இது !

    தவம் என்பது மனத்தின் விழிப்பை அதிகரித்துக் கொண்டே செல்லும் பயணம். கஞ்சா அடித்தால் உடம்பு மட்டுமல்ல, மனதும் மக்கிப் போய்விடும்.

    விவேகானந்தரும், ராமகிருஷ்ணரும் பசித்த போது சாப்பிட்டு விட்டு வந்தார்களே ஒழிந்து, பசியை இப்படி எல்லாம் அடக்கவில்லை. ஏன் இப்படிக் கதை கட்டுகிறார்கள்?

    இத்தனைக்கும் இவர்கள் இருவரது வாழ்க்கையும் மக்கள் நேரடியாகப் பார்க்கும்படி, ஆய்வுக்குட்பட்டு இருந்தது. மக்கள் அவர்களைப் பற்றி – அவர்களது நிறை குறைகளைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால், இந்த மாதிரிப் புரளிகளை யாரும் எழுதவில்லை.

    இதை உங்களுக்குச் சொன்னவருக்கு விவேகானந்தரோ, ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ தெரியாது என்பது தெளிவு.

  44. @களிமிகு கணபதி

    //தவம் என்பது மனத்தின் விழிப்பை அதிகரித்துக் கொண்டே செல்லும் பயணம். கஞ்சா அடித்தால் உடம்பு மட்டுமல்ல, மனதும் மக்கிப் போய்விடும்.//

    Thanks நண்பரே !

    //விவேகானந்தரும், ராமகிருஷ்ணரும் பசித்த போது சாப்பிட்டு விட்டு வந்தார்களே ஒழிந்து, பசியை இப்படி எல்லாம் அடக்கவில்லை. ஏன் இப்படிக் கதை கட்டுகிறார்கள்?

    இத்தனைக்கும் இவர்கள் இருவரது வாழ்க்கையும் மக்கள் நேரடியாகப் பார்க்கும்படி, ஆய்வுக்குட்பட்டு இருந்தது. மக்கள் அவர்களைப் பற்றி – அவர்களது நிறை குறைகளைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால், இந்த மாதிரிப் புரளிகளை யாரும் எழுதவில்லை.

    இதை உங்களுக்குச் சொன்னவருக்கு விவேகானந்தரோ, ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ தெரியாது என்பது தெளிவு.//

    Many Many Thanks, நண்பரே!

    //அடக் கடவுளே ! அடுக்குமா இது !//

    என்ன சொல்லுவது! கட்டுரையே போதையை வழி மொழிகிறது, தமிழ் இந்து தளமும் அந்தக் கட்டுரையை தாரளமாக வெளியிடுகிறது!

    தமிழ் இந்து ஆசிரியர் குழுவே, தயவு செய்து நீங்கள் கருத்துக்களைப் படித்துப் பார்க்க வேண்டும். சில நண்பர்கள் அவசரத்தில் எழுதி விடுகிறார்கள்.

    விவேகானந்தர், ஆதி சங்கரர், பட்டினத்தார், அப்பர் இவர்கள் எல்லாம் பெரும்பாலான காலம் நாட்டிலே வசித்தவர்கள், அக்கால முனிவர்களைப் போல காட்டிலே வசித்தவர்கள் அல்ல. விவேகானந்தர் இந்தியா முழுதும் கால் நடையாகவே சுற்றி இருக்கிறார். இமய மலையில் கால் படாத குகை இல்லை என்று சொல்லும் அளவுக்கு மலையிலும் காட்டிலும் பாலைவானத்திலும் சென்று இருக்கிறார் என்றாலும் பெரும்பாலும் அவர் நாட்டு மக்களுடன் கலந்து வசித்த கால கட்டமே அதிகம்.

    பலமுறை இரண்டு மூன்று நாட்கள் உணவு இல்லாமல் கடும் பட்டினியில் இருந்திருக்கிறார், அப்போது கூட யாரவது கை தட்டி கூப்பிட்டால் திரும்புவதில்லை என்கிற விரதத்தை விடவில்லை. உயிரே போனாலும் கொள்கையை விடுவதில்லை என்கிற நிலையிலே இருந்திருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களை தாகத்துக்கு கஞ்சா இலையை தின்றார்கள் என்று எழுதுவதை அப்படியே போடுகிறது தமிழ் இந்து தளம்.

    இது அடுக்குமா?

  45. அன்பர்கள் திருச்சிக்காரர அவர்களும் களிமிகு கணபதி அவர்களும் நான் சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நிச்சயமாக ராமகிருஷ்ண பரமஹம்சரும் சுவாமி விவேகானந்தரும் என்னிடம் இதைச் சொல்லியிருக்கமுடியாது, நானும் அப்படிச் சொல்ல முடியாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழி இருப்பதும், பாம்பின் நஞ்சும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதும் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும். நான் சந்தித்த முனிவர் மிகவும் உன்னதமானவர். ஒருநாளில் ஒருமுறையும் அதும் பிக்ஷை எடுத்தே உண்பவர். என்றும் தம்மிடம் உடுத்திய ஆடை தவிர எதுவும் வைத்திருக்காதவர். ஓர் இடத்தில் ஓர் இரவுக்கு மேல் தங்காதவர். அவர் சொன்னதின் மையக்கருத்து மூலிகைகளை போதைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்பதே. பசியையும் தாகத்தையும் தற்காலிகமாகத் தவிர்க்கும் அளவில் சிறு அளவில் பயன்படுத்தவேண்டும் என்பதே. இதில் முழு அளவில் உண்மை இருக்கிறது. இன்றைக்கும் ஒபியம் என்பது மேலை நாட்டு allopathy மருத்துவத்தில் பயன்படுகிறது. மென்மேலும் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மூலிகையை மூளிகையாகப் பயன்படுத்தியவர்கள் பாரதத்தின் முனிவர்களும் சித்தர்களும். இந்தப் பாரம்பரியத்தில் இன்னமும் சிலர் இருக்கிறார்கள் என்பது நான் கண்ட உண்மை.

    கள், சாராயம், மேலைநாட்டு மது வகைகளில் உள்ள alcohal ஹோமியோபதி மருந்துகளில் ஒரு மூலப்போருலாகப் பயன்படுகிறது.

    ஆக ஒரு பொருளைப் பயன்படுத்துபவன் பயன்படுத்தும் வகையில்தான் நனமியோ தீமையோ விளைகிறதே அல்லாது பொருளில் நன்மை தீமை இல்லை என்பது தெளிவு.

  46. திருச்சிக்காரன் அவர்களே நானேங்காவது பங்கி அடித்தார்கள் என்று சொல்லி இருக்கிறேனா? கஞ்சா அடித்தார்கள் என்று சொல்லி இருக்கிறேனா? பங்கி என்பது பற்றியே நான் எழுதவில்லையே? கஞ்சா “அடிப்பது” பற்றியும் எழுதவில்லையே? சொல்லாததை எல்லாம் நீங்களாக எடுத்து எழுதுவது முறையல்ல.

  47. I agree with Mr Thrichikaran and Mr Kalimigu Ganapathy.
    Uma Shankar sir, I have a lot of admiration for your work and your knowldge but I need to point out that you have erred here. I cannot accept Sawmijis Vivekanda /Ramakrishna woud have a used a NARCOTIC agent. Opium/ Morphine etc are all narcotics and are very good analgesics, used mainly in Western medicine for post operative/Cancer pain.Marijuna is being prescribed in some states in USA for medical purpose mainly for the terminally ill patients.
    They all have some hallucinogenic effect and causes euphoria ( mind altering, sense of well being) Chronic use of marijuana can cause psychosis.. Alcohol is mainly used in medicine as a preservative or cleaning agent. It has no theraputic value. Wine has some benifit in small quanties in preventing??? heart attacks due to antioxidant effects. It idoes have some postive effect on good cholestrol Hdl in blood.
    I do not think narcotics and hallucination inducing agents have a place in one’s quest for self realization, small quantities or otherwise.

  48. ந. உமாசங்கர் அவர்களே,

    கஞ்சா இலையை தின்றார்கள் என்கிற ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டை அவர்களே மேல் வைக்கிறீர்கள். மீண்டும் , மீண்டும் அதை எழுதுகிறீர்கள். மாற்று மதத்தினர் கூட சொல்லத் தயங்கும் ஒரு குற்றச் சாட்டு. என்னவோ செய்யுங்கள்.

  49. Dear Sri Rama

    Please check what I had written, I had never mentioned aywhere that Sri Ramakrishna Paramahamsa or Swami Vivekananda used any of these intoxicating drugs. Whatever I wrote was that the herbs are used for treating hunger and thirst temporarily while in the forest where there is no food is available. I nver mentioned that this or that leaf was used. I mentioned that the the leaves that are used as intoxicating agents by others also are of these variety. What is used as a food and what is used as intoxicator are two different things. Sri Thiruchchikkaran has not understood the import of whatever I wrote and started raising issues of intoxication. I repeat again that this twisitng of issues is the cause for concern and nothing more. I clarified again and yet he twisits the issue and the whole issue is misdirected by him to non-issues.

  50. திருச்சிக்காரன் அவர்களே
    நான் எழுதாததை எழுதியதாக மீண்டும் ஒருமுறை கூறுகிறீர்கள். இது முறையற்றது. பங்கி என்ற சொல்லை நான் உபயோகிக்காத போதும் இதைச்செய்தீர்கள். நான் சுட்டிக் காட்டிய பின்பு இப்போர்த்து கஞ்சா உண்டார்கள் என்று நான் எழுதியதாக எழுதுகிறீர்கள். புரளி கிளப்புவதற்கு இது இடமல்ல.

  51. திரு திருச்சிக்காரன் அவர்களே

    ///அத்ரி, பிருகு, குத்ஸ , வசிஷ்ட , கவதம, காஷியப, ஆங்கீரச முனிவர்கள் தொடங்கி , போகர், பாம்பாட்டி சித்தர் உட்பட பலரும் காட்டிலே வசித்து இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பங்கி அடிக்கவில்லை என நான் கருதுகிறேன்.

    பங்கி அடிப்பது ஒருவன் மனதை மயக்கும். இந்து மதம் ஒருவனின் மயக்கத்தைப் போக்கி அறிவை வளர்ப்பது.
    ////

    உங்கள் இந்த மறுமொழியைப் படிப்பவர்கள் எதோ ஒருவன் இந்த மகாரிஷிகள் எல்லாம் பங்கி அடித்தார்கள் என்று நான் எழுதிவிட்டதாகக் கருதுவார்கள்.
    இவர்கள் பெயரையோ அல்லது பங்கியைப் பற்றியோ நன் எழுதவே எழுதாத போது இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவது மிகவும் கண்டிக்கத் தக்கது. நீங்கள் ஒருவகை character assassination செய்கிறீர்கள். இது முறையற்றது.

  52. நண்பர், சகோதரர் , திரு. உமா சங்கர் அவர்களே,

    நான் உங்களை character assassination செய்யவில்லை. உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் பெரும் புகழும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.

    //நான் சுட்டிக் காட்டிய பின்பு இப்போர்த்து கஞ்சா உண்டார்கள் என்று நான் எழுதியதாக எழுதுகிறீர்கள். //

    நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று நீங்களே படியுங்கள்.

    //அவர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து பயின்று துறவு பூண்டவர். விவேகானந்தர் கூட இத்தகு மூலிகைகளைத் தமது தவம் செய்யும் நாட்களில் பசி தாகத்திலிருந்து தற்காலிக விடுதலைக்குப் பயன்படுத்தியே தவம் செய்ததாகக் குறிப்பிட்டார். இத்தகு மூலிகைகள் வகைத்தே நம்மால் கஞசா என்றும் ஓப்பியம் என்றும் அறியப்படுகின்றன என்றார். //

    //ஆனால் எத் தழை எந்த இடத்தில் கிடைக்கும் எதற்குப் பயன் என்பதை மன்பதை நலன் கருதியே முனிவர்கள் வெளியில் சொல்வதில்லை என்றார்.//

    தயவு செய்து நம் முனிவர்களை character assassination செய்ய வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். வாராது வந்த மாமணி விவேகானந்தர். அவர் அமெரிக்காவிலே தங்கி இருந்த பொது , அவர் தங்கிய ஒவ்வொரு வீட்டிலும் அவர் கெட்டவர் என்று புரளி கிளப்பி அவரை அலைக்கழித்தனர். அத்தனையும் மீறி, தன கருத்தில் இருந்த உண்மைகளால் , அவருக்கு உலகில் உள்ள எல்லா மக்களின் மீது உள்ள அன்பால் அவரை எல்லோரும் புரிந்து கொண்டனர். இப்போது இப்படி எழுதுவது , அதுவும் நீங்கள் எழுதுவது சரியா? இலை தின்றபோது பக்கத்தில் கூட இருந்து பறித்து தின்றார்களா?

    கஞ்சா இலையைத் தின்பதும் கஞ்சா அடிப்பது போல தான். கஞ்சா இலையை அரைத்து உருவாக்கும் பானம் தான் பங்கி.

    உங்களைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை, நம் முனிவர்களின் மேல் வீண் பழி வரக் கொடாது என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

    நீங்கள் எழுதியதை சுட்டிக் காட்டும் போதே உங்கள் மேல் பழி வருவதாக எண்ணுகிறீர்கள். ஆனால் முனிவர்கள் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை, அவர்கள் மேல் பழி வரும் படி ஆகி விடக் கூடாது.

    உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தியிருந்தால் மிக்க வருத்தப் படுகிறேன். ஆனால் யாரோ சொன்னார் என்று மூலிகை தின்றார்கள், கஞ்சா ஒப்பியமும் மூலிகையில் ஒன்றுதான் லிமிட்டாக சாப்பிட்டார்கள் என்று எல்லாம் எழுதுவது சரி இல்லை தலைவா.

    யாரோ சொன்னார்கள் என்று நீங்கள் எழுதுவது புரளி போல அமைத்து விடக் கூடாது . இந்தக் கருத்தை என் அண்ணனோ, தம்பியோ எழுதி இருந்தாலும் நான் இதைப் போலவே எழுதி இருப்பேன். எனக்கு உங்கள் மீது தனிப் பட்ட அளவிலே எந்த வருத்தமும் இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் முனிவர்களின் சீலத்தைப் பற்றி தவறாக கருத்து வந்து விடக் கூடாது என்றே எழுதுகிறேன். 600 கோடிப் பொன்னை அப்படியே போட்டு விட்டு ஒத்தை வேட்டியுடன் தெருவில் இறங்கினார் பட்டினத்தார்.

  53. திரு திருச்சிக்காரன் அவர்களே

    நான் சந்தித்த முனிவரிடம் என்சந்தேகத்தைத் தீர்த்துக்கொண்ட நிகழ்வை எழுதினேன். எந்த இடத்திலுள் கஞ்சா தழையைத் தின்றதாகவோ பயன் படுத்தியதாகவோ கூட எழுதவில்லை. தங்களிடமிருந்து இப்போது பெற்ற தகவல் பங்கி எப்படி செய்கிறார்கள் என்பது. போதை போதை என்று தாங்கள்தான் அதிலிருந்து வெளிவராமல் எல்லா முனிவர்களையும் விஷயத்துக்குள் இழுக்கிறீர்கள். தேவை இல்லாமல் அத்தனை முனிவர்கள் பெயரையும் இழுக்கலாமா? இழுத்துவிட்டு நான் அவர்களை character assassination செய்வதாகக் கூறுகிறீர்களே இது முறையற்றது.

    முன்னர் நான் தங்களிடம் தமிழ் ஹிந்து தளத்தில் இயற்பெயரில் எழுதவேண்டும் என்று சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு நான் என் இயற்பெயரில் எழுதுவது எனக்கு எத்தனை சிரமத்தை உருவாக்கும் என்று காட்டுவதற்காகவே நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவதுபோலப் படுகிறது. தமில்ஹிந்துவில் எழுதும் போது இயற்பெயரில் எழுதுவதில் என் கருத்து அப்படியே இருக்கிறது. நாடக வசனம்போல என்னைப்பற்றி இட்டுக்கட்டி எழுதுவதை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  54. திரு. உமா சங்கர் அவர்களே,

    //முன்னர் நான் தங்களிடம் தமிழ் ஹிந்து தளத்தில் இயற்பெயரில் எழுதவேண்டும் என்று சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு நான் என் இயற்பெயரில் எழுதுவது எனக்கு எத்தனை சிரமத்தை உருவாக்கும் என்று காட்டுவதற்காகவே நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவதுபோலப் படுகிறது. //

    அதெல்லாம் இல்லை நண்பரே. நான் அதை நினைவில் வைக்கவும் இல்லை.

    என் அண்ணனோ, தம்பியோ எழுதி இருந்தாலும் நான் இதைப் போலவே எழுதி இருப்பேன். எனக்கு உங்கள் மீது தனிப் பட்ட அளவிலே எந்த வருத்தமும் இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

  55. அன்பு சகோதரர் திரு திருச்சிக்காரன் அவர்களே
    புரிதலுக்கு நன்றி. எனது கருத்துக்கள் செம்மையான அடிப்படையில் அமைந்தவை. ஆனால் தங்கள் மறுமொழிகளில் நான் எழுதாத விஷயங்களை கலந்து எழுதியதால்தான் விவாதம் எழுந்தது. இதை இத்தோடு விட்டுவிடுவோம்.

  56. வணக்கம்,

    முதலில் எனது தீபாவளி திரு நாள் நல்வாழ்த்துக்கள்.

    அன்புச்சகோதரர் திருச்சிக்காரர், மற்றும் க. கணபதி, ஆகியோர் கொஞ்சம் அவசரமின்றி சகோதரர் உமா சங்கரின் மறுமொழியினை படிக்கவும்.

    //அவர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து பயின்று துறவு பூண்டவர். விவேகானந்தர் கூட இத்தகு மூலிகைகளைத் தமது தவம் செய்யும் நாட்களில் பசி தாகத்திலிருந்து தற்காலிக விடுதலைக்குப் பயன்படுத்தியே தவம் செய்ததாகக் குறிப்பிட்டார். இத்தகு மூலிகைகள் வகைத்தே நம்மால் கஞசா என்றும் ஓப்பியம் என்றும் அறியப்படுகின்றன என்றார். எதுவும் அளவோடு கொள்ளும்போது நற்பயன் அளிக்கவல்லன, அளவுக்கு மீறும்போதுதான் போதைதரும் என்றார். இத்தகு மூலிகைகளே தவசீலர்களுக்கு பசி தாகம் பிணி போன்றவற்றிலிருந்து விடுதலை தர வல்லன. ஆனால் எத் தழை எந்த இடத்தில் கிடைக்கும் எதற்குப் பயன் என்பதை மன்பதை நலன் கருதியே முனிவர்கள் வெளியில் சொல்வதில்லை என்றார். தெரிந்துவிட்டால் இன்றைய வணிக உலகில் இதையும் வணிக ரீதியில் பயன்படுத்துவர் என்றார்.//

    இதில் சகோதரர் உமா சங்கர் அவர்களே முனிவர் சொன்னதாக இங்கே குறிப்பிட்டு உள்ளதை கவனியுங்கள்

    ***** எதுவும் அளவோடு கொள்ளும்போது நற்பயன் அளிக்கவல்லன, அளவுக்கு மீறும்போதுதான் போதைதரும் *****

    மேலும் உ ச அவர்கள் கஞ்சாவை அரைத்து பங்கி அடித்ததாக குறிப்பிடவில்லை என்பதை கொஞ்சம் கவனியுங்கள். மேலும் கஞ்சாவை நீங்கள் மென்று தின்னாலும் ஒன்றும் நேர்ந்து விடாது, கசக்கி புகைத்தால்தான் போதை. கஞ்சா குடல் புண்ணுக்கான, மற்றும் வலிக்கான ஒரு மருந்து. ஆனால் போதை வஸ்து என்பதால்
    அதனை விலக்கி உள்ளனர்.

    நமது நாட்டில் ஒரு பழமொழி உண்டு அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சே. நீங்கள் வேண்டுமானால் ஒரு சீதா வைத்தியரிடம் சென்று விசாரித்து பாருங்கள் கஞ்சா என்பது ஒரு மூலிகையா என்று , இல்லை என்று எவரும் சொல்ல மாட்டார்கள்.

    இங்கே மறு மொழியிலேயே ஒரு விஷயம் உள்ளது ஆல்கஹால் இல்லாமல் அலோபதி மருந்துகள் இல்லை என்று. தனியாக ஆல்கஹால் மட்டுமே அருந்தப் படுமாயின் அதன் விளைவுகள் நீங்கள் அறியாதது இல்லை.

    மேலும் நீங்கள் சொல்லும் அத்தனை முனிவர்களும் கஞ்சாவை அறிந்தவர்களே. விவேகனந்தர் கஞ்சாவைத்தான் சாப்பிட்டார் என்று அர்த்தம் இல்லை, அது சரி இதையும் கொஞ்சம் படிச்சிடுங்க.https://abidheva.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *