ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]

 upa-spectrum-2g

உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்; ஊழல் செய்பவன் கண்டிப்பாக மாட்டித்தான் ஆகவேண்டும். ஆனாலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள், தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு உடனடியாக மாட்டிக்கொள்ளும் அவசியம் இல்லை. தலையிலேயே இடி விழுந்தாலும் எங்கே இடி விழுந்தது என்று எட்டிப் பார்க்கும் அற்புதமான பொருளாதார மேதை நமக்குப் பிரதமராக வாய்த்திருக்கிறார். ஊழல்கறையே படியாதவர் என்ற பெயரை வேறு அவர் கட்டியுள்ள தலைப்பாகையோடு சேர்த்துக் கட்டி இருக்கிறார். இதையும் மீறி பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஏதாவது குரல் எழுப்பினால் இருக்கவே இருக்கிறது மதவாதப் பூச்சாண்டி. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சேவகம் செய்யவே பிறப்பெடுத்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளவரை மன்மோகன் சிங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை.
 
congress1ஆனால், இந்த நவம்பர் மாதம், மன்மோகன் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாகக் கடக்கவில்லை. அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பு சென்றமாதம் நாடு முழுவதும் ஏற்படுத்திய பரபரப்பை விழுங்கிவிட்டது இந்த நவம்பர் மாதம். எல்லாமே, மத்திய அமைச்சர் திருவாளர் ‘தலித்’ ராசாவின் உபயம். 2008-இல் அவர் நடத்திய ஊழல் உறுத்துவந்து 2010-இல் ஊட்டும் என்று அவர் மட்டும் கனவா கண்டார்? கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளை விருப்பம்போல விற்று ஏப்பம் விட்டது யாருக்கும் தெரியாது என்று இறுமாந்திருந்த ராசாவுக்கும் அவருக்குத் துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) இந்த நவம்பர் மாதம் கறுப்பு மாதமாக மாறியது அதிர்ச்சி அளித்திருக்கலாம். அதைவிட, நாட்டு மக்களுக்குத் தான் அதிர்ச்சி- அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் லட்சம் கோடி!) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்!

அது எப்படி கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளில் ஊழல் செய்ய முடியும்? கேள்வி கேட்கும் புத்திசாலிப் பகுத்தறிவாளர்களுக்காக ஒரு விளக்கம்:

இப்போது உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அலைபேசிகள் இயங்குவது வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகளால்தான். அவற்றை கிரகித்துப் பகிரவே அலைபேசி கோபுரங்கள் எங்கு பார்க்கினும் தட்டுப்படுகின்றன. இந்த மின்காந்த அலைகள், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நமது செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றை நிர்வகிப்பது மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை.
 
இந்த மின்காந்த அலைக்கற்றைகளை முறைப்படுத்துவதும் வர்த்தக ரீதியாக விநியோகிப்பதும் மத்திய அரசின் கடமை. இதில் மூன்று தலைமுறை அலைக்கற்றைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன.

ஆரம்பகால கம்பிமுறைத் தொலைபேசிக்கு மாற்றாக முதலில் உருவானது முதல் தலைமுறை அலைக்கற்றைகள். (அதற்கு அவ்வாறு எந்தப் பெயரும் சூட்டப்படவில்லை. வாசகர்கள் குழப்பமின்றி தெரிந்துகொள்ளவே இந்த விளக்கம்). இந்த அலைக்கற்றைகளின் ஆதிக்கம் 2008 வரை நீடித்தது. உலக அளவில் ஏற்பட்ட தொலைத்தொடர்புப் புரட்சி தாமதமாக வந்தாலும் இந்தியா அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டது. 1998 முதல் 2009 வரையிலான இந்தக் காலகட்டத்தில்தான் அலைபேசிகளின் எண்ணிக்கை நாட்டில் பல மடங்கு அதிகரித்தது.

1998 காலகட்டம் தொலைபேசியின் இடத்தை அலைபேசிகள் வெற்றி கொள்ளாத காலகட்டம். ‘பேஜர்’ எனப்படும் சிறு கருவியே அதிசயமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. ஆரம்பத்தில் நமது நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களே புதிய அலைக்கற்றைகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டின. அதன் விளைவாக ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் அந்த அலைக்கற்றைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனினும் இந்த விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் (டிராய்) செயல்பட்டது. ஆனால், விரைவிலேயே நாடு முழுவதும் அலைபேசிகளின் ஆதிக்கம் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போதைய அலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை 70 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம். பத்து ஆண்டுகளில் நம்ப முடியாத வளர்ச்சி பெற்றது இந்தியத் தொலைத்தொடர்புத் துறை. அதன் விளைவாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் கொண்டுவரப்பட்டன. இதனை ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்த அலைக்கற்றைகள் 2008-இல் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இதில்தான் முறைகேடு நிகழ்ந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தது தான் இந்த ஆண்டு வெளியான மூன்றான் தலைமுறை மின்காந்த அலைக்கற்றைகள் (3ஜி). இதன்மூலமாக அலைபேசி அல்லது தொலைபேசியில் பேசுபவரது முகத்தையும் பார்த்தபடி பேசலாம்.
 
இப்போது விஷயத்திற்கு வருவோம்… 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் எப்படி மோசடி நடந்தது?
 
அப்போது மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா. புதிதாக அறிமுகமாகும் மின்காந்த அலைக்கற்றைகள் வற்றாத சுரங்கம் என்பதைக் கண்டுகொண்ட ராசா, அவற்றை விற்பதில் (2008) தனக்கென ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு செயல்பட்டார். ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார்.

இதில் நிலவும் முறைகேடுகள் குறித்து அப்போதே சலசலப்பு எழுந்தது. பகிரங்க ஏல முறையில் 2ஜி அலைக்கற்றைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கை அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. இதிலும் ஏலத்திற்கு மிகக் குறைந்த நாள்களே அவகாசம் வழங்கப்பட்டு, கெடுதேதிக்கு முன்னதாகவே அலைக்கற்றைகள் அவரச அவசரமாக விற்பனை செய்யப்பட்டன. இதனால், நாட்டின் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவை கிடைக்காமல் போயின. தவிர, தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ‘லெட்டர்பேடு’ நிறுவனங்களுக்கு எல்லா விதிமுறைகளையும் மீறி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இது குறித்து கேள்வி எழுந்த போதெல்லாம், தனக்குமுன் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் (அவரும் தி.மு.க. தான்; தாத்தாவுடனான சண்டையால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதே இடத்தில்தான் ராசா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.) கடைபிடித்த ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற விதியின் அடிப்படையிலேயே அலைக்கற்றைகள் விற்கப்பட்டதாக ராசா கூறி வந்தார்.
 
ஆயினும், சில வடக்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகள், 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதை வெளிப்படுத்தின. அதன் பின்னணியில் முந்தைய அமைச்சர் தயாநிதி மாறன் இருப்பதாக அப்போது ராசா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் ராசாவால் விற்கப்பட்ட அலைக்கற்றைகளை ஒரே மாதத்தில் வேறு நிறுவனங்களுக்கு பல மடங்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தன ‘லேட்டேர்பேடு’ பினாமி நிறுவனங்கள் (காண்க: பெட்டிச் செய்தி: 1). அதன்மூலமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பது உறுதியானது. இதனை முதன்முதலில் அம்பலப்படுத்தியது, பயனீர் நாளிதழ். அதன் நிருபர் கோபி கிருஷ்ணன் எழுதிய தொடர் புலனாய்வுக் கட்டுரைகள், ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தின. தமிழகத்தில் தினமணி நாளிதழும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்சும், ராசாவின் முகத்திரையைக் கிழிப்பதில் முன்னணி வகித்தன.
 

karuunity

மதுரை தினகரன் எரிப்பு, அரசு கேபிள் கழகம் ஆகிய அத்தியாயங்களைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், மாறன் சகோதரர்களுடன் தி.மு.க. சமரசமானது. அப்போது ”குடும்பங்கள் இணைந்தன; இனி ஊழல் குற்றச்சாட்டுகள் மறையும்” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதே ‘குடும்பங்கள் ஒன்றானால் எப்படி ஊழல் மறையும்?’ என்று புத்திசாலிப் பத்திரிகைகள் சில (கண்டிப்பாக தமிழக புலனாய்வுப் பத்திரிகைகள் அல்ல) கேள்வி எழுப்பின. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டுமே பெற்ற பயன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கிடப்பட்டுவிட்டதால், இனிமேல் மாறனின் தொந்தரவு இருக்காது என்பதுதான் கருணாநிதியின் அறிவிப்புக்கு விளக்கமாக இருக்க முடியும். அப்போதுதான், ”முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998- 2004) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகளே ஸ்பெக்ட்ரம் விற்பனையிலும் கடைபிடிக்கப்பட்டன” என்று தனது முந்தைய கருத்தில் சிறு மாற்றம் செய்து கொண்டார் ராசா.

அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான அருண்ஷோரி, ராசாவின் தற்காப்பு உத்தியான ”முந்தைய அரசு கடைபிடித்த வழிமுறைகளையே நானும் கடைபிடித்தேன்” என்ற கருத்தைக் கண்டித்திருக்கிறார். தே.ஜ.கூ. ஆட்சியில் டிராய் பரிந்துரையின்றி எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். தவிர, 1998-2004-இல் விற்ற விலைக்கே 2008-லும் விற்க முடியாது என்ற சாமானிய அறிவும் கூட இல்லாது பேசும் ராசாவை எப்படித் தெளியவைப்பது? பிரச்சினை அவரிடம் உள்ள குழப்பமல்ல; செய்த தவறை மறைக்க அவர் போடும் நாடகம் தான்.

1998 – 2004 காலகட்டத்தில் அலைபேசி எண்ணிக்கை பெருகாத காலகட்டத்தில் இருந்த ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற கோட்பாடு, போட்டி மிகுந்த தற்போதைய (2008) காலத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாகும் என்ற கேள்வியை சமத்காரமாக ராசா தவிர்த்து வந்தார். டிராய் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக அறிவுரைகள், தொலைத்தொடர்புத் துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி, தன்னிச்சையான முறையில், 2ஜி அலைக்கற்றைகளை மூடுமந்திரமான முறையில் பகிரங்க ஏலம் அல்லாது விற்பனை செய்துள்ளார் ராசா. இது குறித்த செய்திகள் வெளிவந்தவுடன் பா.ஜ.க, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், ”பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரிந்துதான் அனைத்தும் நடந்துள்ளன” என்று ராசா விளக்கம் அளித்தார். பிரதமரோ, ”ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை  விற்பனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவே கூறிவிட்டார்” என்று மழுப்பினார். நல்ல பிரதமர்! நல்ல அமைச்சர்! இவரைத்தான் நமது பத்திரிகைகள் தூய்மையானவர் என்று புகழ்ந்து எழுதி மத்திய அரசு விளம்பரங்களைப் பெற்றுக் கொள்கின்றன!

உண்மையில், இந்த முறைகேட்டில் கிடைத்த லஞ்சப் பணம் (பல ஆயிரம் கோடிகள்) முறைப்படி, காங்கிரஸ் தலைமை, தி.மு.க. தலைமை, ராசா குழு மற்றும் சம்பந்தப்பட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டதாகத் தகவல். கைநீட்டி காசு வாங்கிவிட்டவர்கள், ராசாவின் அமர்த்தலான பதிலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துதானே ஆகவேண்டும்?

இந்நிலையில்தான், 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் முக்கியப் பிரசார அம்சமானது. ஆயினும் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் வென்றது. அதையடுத்து மத்திய ஆட்சியில் தி.மு.க.வின். பிடி இறுகியது. தொலைத்தொடர்புத் துறையில் நடந்துவிட்ட ஊழல்களை அடுத்து, ராசாவுக்கு மீண்டும் அதே துறையை ஒதுக்க பிரதமர் மன்மோகன் தயங்கினார். ஆயினும், தில்லிவரை போர்தொடுத்து கூட்டணி உரிமையை நிலைநாட்டிய கழகத் தலைவர் கருணாநிதி, மீண்டும் ராசாவுக்கே தொலைத்தொடர்புத் துறையைப் பெற்றுத் தந்தார். கைநீட்டி வாங்கிய காசுக்கு நன்றிக்கடன் காட்டித்தானே ஆகவேண்டும்? பிரதமர் மன்மோகன் சிங் நாணயஸ்தர். அவரது கட்சித் தலைவியோ கூட்டணிதர்மம் காக்கவே இத்தாலியிலிருந்து இறக்குமதி ஆனவர். ராசாவின் காட்டில் மீண்டும் மழை பொழியத் துவங்கியது.

இந்நிலையில் தான், மூன்றாம் தலைமுறை (3ஜி) அலைக்கற்றைகள் மே மாதம் பகிரங்க ஏல முறையில் ஏலம் விடப்பட்டன. இதனையும் மூடுமந்திரமான முறையில் விற்க ராசா முற்பட்டதாகவும், பிரதமர் நேரடியாகத் தலையிட்டதால் பகிரங்க ஏலம் நடப்பதாகவும், ஆங்கில ஊடகங்கள் மன்மோகன் புகழ் பாடின. இதன் விளைவாக அரசுக்கு 67.7 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இத்தனைக்கும் 3ஜி அலைக்கற்றைகளின் ஒருபகுதிக்கே இவ்வளவு லாபம்! உடனே மத்தியத் தணிக்கை ஆணையம் (சி.ஏ.ஜி) விழித்துக் கொண்டது. 2ஜி அலைக்கற்றை விற்பனையில் நிகழ்ந்த நஷ்டத்தை சி.ஏ.ஜி கணக்கிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாங்கி, குறுகிய காலத்தில் வேறு நபர்களுக்கு விற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்குத் தோராயமாக ஏற்பட்டுள்ள இழப்பை சி.ஏ.ஜி கணக்கிட்டது.
 
இம்மாதம் 10-ஆம் தேதி, சி.ஏ.ஜி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட தகவல்தான், ராசா மூலம் ஏற்பட்ட இழப்பை (ரூ.17,60,00,00,00,000) நாட்டுக்கு விண்டுவைத்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் பலவகையாகக் கூறிவந்தபோதும், சி.ஏ.ஜி அறிக்கை, ஸ்பெக்ட்ரம் ஊழலின் மதிப்பைத் தெளிவாக வரையறுத்துள்ளது. தவிர அதன்மூலமாக பயன் பெற்றவர்கள் யார் என்பதையும் பட்டியலிட்டு, திருவாளர் புனிதரின் லட்சணத்தையும் தியாக நாயகி லட்சணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது.

mathi-cartoon-151110

ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் கட்டட ஒதுக்கீடு ஊழலால் கறைப்பட்ட மத்திய அரசுக்கு, ராசாவை நீக்குவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. கனத்த நெஞ்சத்தோடு, ராசாவைப் பதவி விலகுமாறு கோரினார் (கெஞ்சினார்) பிரதமர். ராசாவோ, பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார். தலித் என்பதால் ராசாவைக் குறி வைக்கிறார்கள் என்று ஏற்கனவே சொன்ன கருணாநிதி, வழக்கம்போல, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தார். சீடருக்கு ஏற்ற குரு! இந்நிலையில், ”தி.மு.க.வு.க்கு பயந்து ராசாவை அமைச்சராகத் தொடரச் செய்ய வேண்டாம்; ராசாவுக்காக தி.மு.க. ஆதரவை விலக்கினால், அ.தி.மு.க. ஆதரவளிக்கும்” என்று சந்தில் சிந்து பாடினார் அதன் தலைவி ஜெயலலிதா.
 
இதற்கெல்லாம் மயங்குபவரா மன்மோகன்? அவருக்கு, உச்சநீதிமன்றம் (காண்க: பெட்டிச் செய்தி: 2) என்ன சொல்லப் போகிறதோ என்பதுதான் கவலை. அதைவிட, தானைத்தலைவி சோனியா அம்மையார் கண்ணசைவில் சதிராடும் பிரதமாரால் என்னதான் சிந்திக்க முடியும்? மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிட்டு ராசாவைக் காப்பாற்றலாம் என்றால், அதற்குள், சுப்பிரமணியம் சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிரதமர் மன்மோகனுக்கு காட்டமான அறிவுரையைக் கூறியுள்ள நிலையில், ராசா வேறுவழியின்றி, விருப்பமின்றி (கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவும், நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவும்!) பதவி விலகினார். காங்கிரஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
 
பிரதமருக்கு மேலும் பேரிடியாக, ஊழலில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது டிராய். இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கின. காங்கிரஸ் கட்சியோ, முரளி மனோகர் ஜோஷி (பா.ஜ.க) தலைமையிலான பொதுக் கணக்குக் குழு விசாரித்த பிறகே ஜே.பி.சி. விசாரணைக்குச் செல்ல முடியும் என்று சண்டித்தனம் செய்தது. ‘’தங்கள் தலைவர் மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லையா?’’ என்று வேறு கேட்டார் நமது கலாகார். உண்மையில், பொது கணக்குக் குழு வரம்பிற்குள் வராத பல விஷயங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று முரளி மனோகர் ஜோஷியே கூறி இருக்கிறார். அதை காங்கிரஸ் வசதியாக மறந்துவிட்டது.

niira_radiaதவிர, ஆ.ராசா அமைச்சர் ஆனதன் பின்னணியில் அதிகாரத் தரகர் நீரா ராடியா உடன் ஊடகத் தரகர்கள் பர்கா தத் (என்.டி.டி.வி), வீர் சாங்க்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் பா.ஜ.க எதிரிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். இவர்கள் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல் உச்சநீதிமன்றத்தில் சாமி தொடர்ந்த வழக்கில் முக்கிய சாட்சியாகி இருப்பது, பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத் தன்மையையும் கேள்விக் குறி ஆக்கியுள்ளது.
 
இத்தனைக்கும் பிறகும், காங்கிரஸ் எதுவுமே நடக்காதது போல நடிப்பது தான் வியப்பளிக்கிறது. நடிகர் வடிவேலுவின் ‘இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க” நகைச்சுவைதான் நினைவில் வருகிறது. கட்சியின் இளவரசர் ராகுல், ”எனக்குத் தெரிந்தவரை, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பிரதமருக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை” என்று சான்றிதழ் அளித்திருக்கிறார். பிரதமரின் அமைச்சரவை சகா கபில் சிபலோ, ”பிரதமர் குற்றமற்றவர்” என்கிறார். பிறகு ஏன் ராசா விவகாரத்தில் முடிவெடுக்காமல் 16 மாதம் காலம் தாழ்த்தினார் என்ற கேள்விக்கு மட்டும் சோனியா முதல் கார்த்தி சிதம்பரம் வரை யாரிடமும் பதிலில்லை.
 
இந்த நாடகம் என்ன ஆகும்? இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ராசா வகையறாவுக்குக் கிடைத்து எத்தனை? கைமாறிய லஞ்சப் பணம் சென்றது எங்கே? இந்த நஷ்டத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை வருமா? குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்கள் (பிரதமர் உள்பட) மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊழலில் பயன் பெற்ற நிறுவனங்கள் உரிமங்களை இழக்குமா? அவற்றிடம் டிராய் பரிந்துரைப்படி கூடுதல் தொகை வசூலிக்கப்படுமா?

ராசா உயிருக்கு உண்மையிலேயே சுப்பிரமணியம் சாமி சொல்வது போல ஆபத்து ஏற்பட்டுள்ளதா? ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசு இழந்த 1.76 லட்சம் கோடியும் மீட்கப்பட்டு விடுமா? அப்படியே தொகை மீட்கப்பட்டாலும் இந்திய அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்துபோகுமா?
 
இனிமேலும் ‘தலித்’ என்ற போர்வையில் ஊழல் செய்வதை நியாயப்படுத்தலாமா? கூட்டணியின் நிர்பந்தத்திற்காக ஊழல்களைக் கண்டும் காணாமல் இருக்கலாமா? அதிகாரத் தரகர்களாக மாறியுள்ள பத்திரிகையாளர்கள் மீதும் சட்டம் பாயுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் மலிந்த தற்போதைய ‘மதச்சார்பற்ற’ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டில் தொடரத் தான் வேண்டுமா?… கேள்விகள் தொடர்கின்றன.

இவற்றுக்கான பதில்கள் எங்கோ இல்லை; இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் வாக்காளராகிய மக்களிடம்தான் இவற்றுக்கான பதில்கள் கிடைக்கும். அவர்களிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விலாவாரியாக விளக்க வேண்டியது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கடமை. வெறும் ரூ.64 கோடி போபர்ஸ் ஊழலுக்காக ராஜீவ் காந்தியை வீட்டுக்கு அனுப்பிய நாட்டுமக்களுக்கு, ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் குறித்து (உலக அளவில் மாபெரும் ஊழல் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!) உண்மை நிலையைச் சொல்ல வேண்டியது தேசபக்தர்களின் கடமை.

1: யாருடைய பினாமிகள்?

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக்.1 என்று தொலைத்தொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசித் தேதி என்று எந்த முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,650 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், ஏலத்தில் பயன் பெற்ற சில நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் தங்கள் பங்குகளை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்தன.
 
anil-ambaniராசா மூலம் உரிமத்தை தரைக் கட்டணத்திற்கு வாங்கிய ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன்னனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி ரூ. 4,200 கோடி கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

தற்போது நடந்துவரும் விசாரணையில் மேலும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று…

‘ஸ்வான் டெலிகாம்’ என்ற பெயரில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்ற எடிசலாட் டிபி நிறுவனத்திற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2ஜி ஏலம் நடந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் அதில் பங்கேற்றது. இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தவிர, தன்மீதான புகாரை அனில் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
 
தற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். சிஏஜி அறிக்கையில் “ஸ்வான் நிறுவனத்திற்கு தேவையே இல்லாமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

2008, ஜனவரி மாதம் 2ஜி உரிமத்தைப் பெற்றது ஸ்வான் டெலிகாம். அடுத்த 9 மாதங்களில் துபாயைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட், ஸ்வான் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பெயரை எடிசலாட் டிபி என்று மாற்றியது.
 
2008, செப். 17ம் தேதி சென்னையில் ‘ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ்’ என்ற நிறுவனம் வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது.  மூன்று மாதங்கள் கழித்து, டிச. 17ம் தேதி, இந்த ஜெனெக்ஸ் நிறுவனம், எடிசலாட் நிறுவனத்தின் ரூ. 300 கோடி மதிப்புள்ள பங்குளை வாங்கியுள்ளது. வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்தை மட்டு் கொண்டிருந்த ஜெனெக்ஸ் நிறுவனத்திற்கு எப்படி திடீரென ரூ.300 கோடி அளவுக்கு வசதி வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை.

ஜெனெக்ஸ் எக்ஸிம் நிறுவனத்தின் சார்பில் எடிசலாட் டிபி நிறுவன இயக்குனர் குழுவைச் சேர்ந்தவர் அகமது சையத் சலாஹுதீன். இவர் துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடைய மகன் ஆவார். இடிஏ ஸ்டார் குழுமம் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் பல அரசு திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
 
தற்போது எடிசலாட் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட 2ஜி உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் யாருடைய பினாமியாக செயல்பட்டது என்பது தான் இப்போதைய பலகோடி ரூபாய் கேள்வி. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விரைவில் நியமிக்கப்படலாம். அப்போதுதானே மூடி மறைக்க முடியும்?

 

 

2: எல்லாப் புகழும் சாமிக்கே!

 
subramaniaswamyஅலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா மீது வழக்குத் தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது (நவ. 16) அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர், ‘மிஸ்டர் கிளீன்’ மன்மோகன் சிங்கை கேட்ட கேள்விகள், மிகவும் கூர்மையானவை. ஆனால், மன்மோகன் சிங் எதுவுமே நடக்காதது போல நடமாடுகிறார். மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமோ, பிரதமரை உச்சநீதி மன்றம் ஏதும் விமர்சிக்கவில்லை என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்.

”தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை மின்காந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அமைச்சர் ராசாவின் தன்னிச்சையான செயல்பாட்டால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி புகார் மனு அளித்திருந்தார். இந்த மனு 2008, நவ.29-ம் தேதி அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டது. இந்தப் பதில் கடிதத்தில், ”விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சுப்பிரமணியசாமி.

சாமியின் வழக்கு கடந்த நவ.16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், ஆ.ராசா மீது வழக்குத் தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாகக் கூறி நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ”வழக்குத் தொடர அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய நல்ல அரசுக்கு மூன்று மாதங்கள் போதுமானது. அமைச்சர் மீது வழக்குத் தொடர அனுமதி அளிப்பதற்கான காலவரையறையை (ஏற்கனவே விநீத் நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில்) உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தேவைப்பட்டால் இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரை ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அலைக்கற்றை ஊழல் புகாரில் அரசு 16 மாதங்களுக்கு மேலாக பதில் அளிக்காமல் இருந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வருத்தத்துக்கு உரியது” என்ற நீதிபதிகள், ”அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பு நவ.20-க்குள் பதிலளிக்க வேண்டும்,” என்றும் உத்தரவிட்டனர்.

சுப்பிரமணியசாமி பிரதமருக்கு அனுப்பிய மனுவில், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புள்ள `ஸ்வான் டெலிகாம்’ நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு, `ஆர் காம்’ மற்றும் `ஸ்வான்’ என்ற பெயர்களில் இரு முறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின் அவற்றின் பங்குகள் மொரிஷியஸ் நிறுவனம் ஒன்றுக்கு மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
 
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டும் தீவிரத்தைப் பார்த்தால், கூடிய விரைவில் மத்திய ஊழல் அரசுக்கு மேலும் பல சங்கடங்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. உண்மையில், மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா அவசர அவரசமாக விலகியதே, சாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் அரசுக்குக் கேவலமான நிலை ஏற்படும் என்பதால்தான். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தைவிட, மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான்.

43 Replies to “ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]”

  1. Pingback: Indli.com
  2. pls explain more abt what is 2G?

    //அவருக்குத் துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) //
    topunga ……

  3. திரு.சேக்கிழான்,
    சுருக்கமான ஆனால் தெளிவான அலசல்.

    இந்த ஊழல் குறித்து நான் கவனித்த நடப்புகள்.
    (1)அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்களை தடை செய்ய
    வேண்டும் என்பது சரி அல்ல. நாம் சந்தை பொருளாதார முறைகளை
    அனுசரிக்கிறோம். Perception மிக முக்கியமானது. ஒதுக்கீடு நடந்து
    முடிந்து விட்டது. லஞ்சம் கொடுத்து ஒதுக்கீட்டை வாங்கிய, தெளிவாக
    நிரூபிக்கப்பட்ட கம்பெனிகளின் உரிமத்தை மட்டுமே தடை செய்ய
    வேண்டும். மொத்தமாக எல்லா கம்பெனிகளின் உரிமங்களையும் தடை
    செய்வது சரியல்ல. இது எதிர்காலத்தில் நமக்கு வரும் முதலீட்டை
    பாதிக்கக்கூடும்.

    (2)1,76,000 கோடிகளும் லஞ்சமாக பெறப்பட வில்லை. ஏலமுறையில்
    நடந்திருந்தால் அவ்வளவு பணமும் கிடைத்திருக்கலாம். இந்த பணம்
    முழுமையும் அரசு கஜானாவுக்கு வர சாத்தியமே இல்லை. ஊழல் பணத்தின்
    ஒரு பகுதி வெளிவந்தாலே பெரிய விஷயம். போனது போனதுதான்.

    (3)அடுத்து ஊடக விவகாரம். CNN-IBN தொலைக்காட்சி இந்த ஊழலை
    மூடி மறைக்க வில்லை. கடந்த 10 நாட்களில் காங்கிரஸை பல முறை
    சாடியுள்ளது. பிரதமரையும் விமர்சனம் செய்யும் செய்திகளை
    வெளியிட்டுள்ளது. சில நேரங்களில் சரியான செய்திகள் வெளி வருகின்றன
    என்பதையும் நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

    (4)பிறகு சி.ஏ.ஜி நிறுவனம். எனக்கு நினைவு தெரிந்து கடந்த
    20 வருடங்களாக பிரதி வருடமும் அரசின் செலவு செய்யும் முறைகளை
    விமர்சித்துதான் வருகிறது. இது ஒன்றும் புதியதல்ல.

    என்னை பொருத்தவரை இந்தியாவில் இன்னும் ஜனநாயகத்தின் சில
    கூறுகளாவது இருக்கத்தான் செய்கிறது.
    – உச்சநீதிமன்ற நீதிபதிகள் சில நேரங்களிலாவது தைரியமாக வழக்கை
    நடத்துகிறார்கள்.

    – சி.ஏ.ஜி தன் விமர்சனத்தை எந்த பயமும் இல்லாமல் வெளியிட
    முடிகிறது.

    – சில ஊடகங்கள் தைரியமாக செய்திகளை வெளியிடுகின்றன.

    – ஊழல் செய்த அமைச்சரை ராஜினாமாவாவது செய்ய வைக்க முடிகிறது.
    (காலம் கடந்தேனும்).

    -ஊழல் பணம் நமக்கு கிடைக்காமல் இருக்கலாம். வழக்குகள் முடியாமலே
    போகலாம். ஆனாலும் ஜனநாயகம் சிறிய அளவிலாவது இந்தியாவில்
    வாழத்தான் செய்கிறது. அடுத்த 20, 25 வருடங்களில் நம் ஜனநாயகம்
    மேலும் முதிர்ச்சி அடையும் என்று நான் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.

  4. //இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் லட்சம் கோடி!) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்!// எத்தனை நாளைக்கு? நம்ம நாட்டு மக்களுக்குத் தான் பத்து நாளைக்கு மேல எதையும் ஞாபகம் வெச்சுக்கத் தெரியாதே? இந்தியா அடுத்த டெஸ்ட் மாட்சுல ஜெயிச்சா இதை மறந்துட்டு அதுக்குப் போயிடுவாங்க நம்ம மக்கள்..

  5. https://twitter.com/SalmaanTaseer/statuses/18185958944
    பர்கா தத்தைப் பாராட்டி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னர் சாகிப் ட்வீட்டியிருக்கிறார். காஷ்மீர் பற்றிய மனிதாபிமானமிக்க செய்திகளை வெளியிட்டமைக்காக இந்தப் பாராட்டாம். இந்தப் பெண்மணி காங்கிரசு அரசில் யார் எந்தத் துறைக்கு மந்திரியாவது என்ற பேரத்தில் முக்கியமானவர். தேசம் எங்கே போகிறது? நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்பது சத்தியமான வரிகள்.

  6. The opposition is pitching for JPC. I believe that even some of these opposition crooks are also involved. For example there is involvement of Ranjan bhattacharya, the foster son-in-law of V(H?)ajpayee in the Niira Radia Tapes. JPC is a nice way of escaping the public scrutiny. Instead this should be investigated under the supervision of SC as suggested by Arun Shourie.

  7. //CNN-IBN தொலைக்காட்சி இந்த ஊழலை
    மூடி மறைக்க வில்லை. கடந்த 10 நாட்களில் காங்கிரஸை பல முறை
    சாடியுள்ளது.//

    Probably R.Balaji is right. As per Radia Tapes, kangis trust NDTV more than CNN-IBN.

  8. எந்த உலகத்துல இருக்கீங்க இன்னும். நீரா ராடியா tapes பாக்கலையா youtube la…. எல்லா வண்டவாளமும் தண்டவாளம் ஏறியாச்சு. ஆனா எல்லா மீடியாவும் விசயத்த அமுக்கீட்டாங்க .

  9. சேக்கிழான் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த ஊழல்தான் இன்று நாடு முழுவதும் பேசப்படும் செய்தி. இந்த ஊழலில் ஆண்டிமுத்து ராசா ஒரு கருவி மட்டுமே. அவரைத் தவிர இப்போது கவலையில் இருப்பது கருணாநிதி குடும்பமும், பிரதமரும், இந்திய அரசின் அதிகார மையத்துப் பெண்மணியும்தான். தி.மு.க.வில் உள்ள வேறு யாரும் (கருணாநிதி குடும்பம் தவிர) இதில் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை, காரணம் இந்தக் கொள்ளையில் அவர்களுக்கு ஒரு பைசா கூட தேறியிருக்க வாய்ப்பில்லை. தொடக்கத்தில் கருணாநிதி தொலைத் தொடர்பு போன்ற வளம் கொழிக்கும் துறைகளைக் கேட்டு, அல்ல அல்ல, அடம் பிடித்து வாங்கிய காரணத்தை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். இனி என்ன நடக்கும்? மனமோகன சிங்கர் வாய் திறப்பாரா? ஊழலின் பரிமாணம் வெளிவருமா? நாடு இழந்த தொகை மீட்கப்படுமா? பொறுத்திருப்போம். ஆனால் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன தெரியுமா? இது போன்ற அரசியல் ஊழல்களில் அரசியல் வாதிகள் மட்டும் தனித்து ஈடுபடுவதில்லை. தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொண்டு தர்மம் பேசும் சில ஊடகத்தாரின் கபட நாடகம் இன்று வெளிவந்துவிட்டது. இந்த பர்க்கா தத் என்பவர் என்ன குதி குதிப்பார். காங்கிரசுக்கு ஆதரவாக எத்தனை நிகழ்ச்சிகள். இந்துக்களைக் கேவலமாகவும் பா.ஜ.கவை நேர்மையற்றவர்களாகவும் சித்தரிக்கும் பல நிகழ்ச்சிகளில் இவர் பல்லைக் காட்டிக்கொண்டு கிராப் தலை சிலும்ப என்ன சிலும்பு சிலும்பி இருப்பார். அத்தனையும் கையூட்டு வாங்கிக்கொண்டு பேரம் பேசும் தரர்கள் என்பதை மக்கள் உணர்ந்தால் போதும். யாருக்கு என்ன அமைச்சரகம் என்பதை இவர்கள் யார் முடிவு செய்வதற்கு. செய்தி சொல்லும்போது, காங்கிரஸ் வென்றால், பா.ஜ.க.வைத் தோற்கடித்தார் என்பார். பா.ஜ.க.வென்றால், இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பார். என்ன மோசடி இது? இது போன்றவை இனி அதிகமாக நிகழும் என்பது தெற்காசிய வானொலி நிருபராக இருந்த ஜான் மக்லித்தான் என்பவர் “நியு இந்தியன் எக்ஸ்பிரசில்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார். பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள பெரும் தொகை செலவழித்து பல கட்சித் தலைவர்களைத் தன்வயப் படுத்திக் கொள்கிறார்கள். இதற்குத் தரகர்களாகப் பயன்படுபவர்கள் ஊடகத்துறை சார்ந்தவர்கள். பத்து பேரை ‘வா வா’ என்று கூப்பிட்டால், உதை கிடைத்தாலும் ஒருவராவது வருவார் என்ற எதிர்பார்ப்பு. தொழிலதிபர்களின் கருப்புப்பணம், அரசியல் வாதிகளின் கைகளுக்கு மாறுகிறது. அவை வெளி நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்திய நாட்டில் அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஊழலுக்கு உட்பட்டவையே! உலகத்திலேயே இத்தனை ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருப்பது நமது பாரத புண்ணிய நாட்டிலேதானாம். இத்தனை நடந்த பிறகும், எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது என்று கேள்வி கேட்பவருக்குக் கேள்வி கேட்கும் அசிங்கத்தையும் செய்கிறார்கள் காங்கிரசார். கேவலம்! இதற்கெல்லாம் ஒரே வழி. மக்கள் விழிப்புணர்வுதான். இன்னமும் மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நாடு சுடுகாடுதான் ஆகும்.

  10. இன்னைக்கு முனா.கானா ஒரு அறிக்கை வுட்டிருக்காரு பாருங்க.
    //ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் நான் அடகு வைத்துவிட்டதாக ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விமானத்தில் பறந்து சென்று, ரங்கநாதருக்கு பூஜை, நைவேத்தியம் செய்தும் ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் ஜெயலலிதா காப்பாற்றுவதை போல, நான் காப்பாற்றவில்லை என்கிறார் போலும்.என் அரசியல் குருகுலம் ஈ.வெ.ரா.,வின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் அறிவர். ஜெயலலிதாவின் குருகுலம் எது என்பதையும் தமிழக மக்கள் நன்கறிவர். எனவே, என் கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க அவருக்கு தகுதி போதாது.

    உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம் கூட அல்ல; விஷத்தைக் கொண்டிருப்பவர் யார் என்பதை, மத்திய அரசு நன்றாக புரிந்து கொண்டு தான், தொடர்ந்து அவருடைய அறிக்கைகளுக்கெல்லாம் முகத்திலே அறைவதைப் போல, பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.”பதிபக்தி இல்லாதவர் சோனியா’ என்றும், “வெளிநாட்டுக்காரி சோனியா’ என்றும் பேசிவிட்டு, இப்போது, “நிபந்தனையற்ற ஆதரவுக்கு தயார்’ என அறிக்கை விடும் ஜெயலலிதாவுக்குத் தான், உதட்டில் வெல்லம்; உள்ளத்தில் கள்ளம். இது, மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.ராஜிவ் பிரதமராக இருந்த போது, “ஒரு பிரதமர் இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கப் போவாரா’ என கேள்வி எழுப்பியவரும்; நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, “மத்திய அரசு செயல்படாத அரசாக இருக்கிறது’ எனக் கூறியவரும்; வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, “அவர் நடுநிலை தவறி நடப்பவர்; தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்’ என விமர்சித்தவரும் ஜெயலலிதா தான்.

    ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் கேட்டிருக்கிறார். தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார். அதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணமல்ல. இதற்கு மேலும் உங்களிடம் அதற்கு ஆதாரம் இருக்குமானால், சொல்லத் தயாரா?மத்தியிலே உள்ள அரசோடு தோழமையாக இருந்த காலத்தில், ஒரு சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி, “அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும்’ என்றும், அவர்களுக்குப் பதிலாக, தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டும் என்றும் கோரியதை மறந்துவிட்டாரா? அவற்றை ஏற்க வாஜ்பாய் அரசு முன்வராத காரணத்தால், மத்திய அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.

    ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் தவறு நடந்திருக்கிறது என்றால், “தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை பார்லிமென்டில் வைக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது’ என பிரதமரும், மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி போன்றவர்களும் மீண்டும் மீண்டும் உறுதியளித்த பிறகும், அதற்கு முன்வர பா.ஜ.,வும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்?முறைப்படி லோக்சபாவில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக் கணக்கு குழுவின் முன் கொண்டு போகப்பட்டு, அந்தக் குழுவிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டியது தானே. தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால், முன்பெல்லாம் பொதுக் கணக்கு குழுவின் முன் தான் விசாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மட்டும் அதற்கிணங்காமல், பார்லிமென்ட் கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்?இவ்வாறு கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். //

    நாமெல்லாம் என்ன கேனையா !

  11. ஸ்ரீ சேக்கிழான் அவர்களே மிகத்தெளிவாக ஆதியோடந்தம் (அந்தம் இன்னும் வெகு தொலைவில் என நம்புகேறேன்; அல்லது மற்ற ஊழல் வழக்குகள் போல் அந்தமிலா மற்றொரு வழக்க என சமயம் பதிலிறுக்கும்) நூதன ராஜா ராணி புராணத்தை எழுதி இருக்கிறிர்கள்.

    \\\\\\\\\\இந்தியாவில் தற்போதைய அலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை 70 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம்.\\\\\\\\\\\\ இந்த புள்ளிவிபரம் அதிகமோ என்று எண்ண தோன்றுகிறது. சரி பார்க்கலாம்.

    சமிபத்திய ஜெயா டி.வி. ஒளிபரப்பில்(ரபி பெர்னார்ட் கலந்துரையாடல்) ஸ்ரீமான் தலித் எழில்மலை அவர்கள் ஸ்ரீ ராஜா அவர்களை தலித் என்பதற்காக ஊடகங்கள் வரிந்து கொண்டு குற்றம் சாட்டுகின்றன என்று ஸ்ரீ கருணாநிதி கூறியதை க்ஷாத்ரத்துடன் கண்டித்தார். தலித் சமுதாயத்தின் சான்றோர்களான ஸ்ரீமான்கள் பாபா சாஹேப் அம்பேத்கார், இரட்டைமலை ஸ்ரீனிவாசன் மதுரை பிள்ளை கக்கன்ஜி போன்றோர்களை முன்னிறுத்தாது தமக்கு சாதகமாக காரியம் செய்தார் பல்லாயிரம் கோடிகளை ராஜாங்கத்திற்கு நஷ்டம் செய்வித்தார் என்பதற்காக ஸ்ரீ ராஜா அவர்களை முன்னிறுத்துவது மோசமான அரசியல் என்று கண்டித்தார். இன்று தலித் மக்களுக்காக தன் அபிமானம் பற்றி பேசும் ஸ்ரீ கருணாநிதி முன்னர் ஸ்ரீமதி சத்தியவாணிமுத்து போன்ற பற்பல தலித் மந்த்ரிகளை பதவி நீக்கம் செய்து அவமானம் செய்தார் என்று குறிப்பிட்டார்.

    எல்லாப் புகழும் சுவாமிக்கே என்பதில் ஒரு சிறு திருத்தம். உச்ச நியாயாலயத்தை பிரதம மந்த்ரி காரியாலயத்தை கேள்வி கேட்கும் படி பண்ணின வரை சரியே. இப்படி அகடி தகடனா சாமர்த்ய சுவாமி நேற்றைய செய்தி படி பிரதம மந்த்ரி அப்பாவி அவர் கர்யாலய குமாஸ்த்தாக்கள் சாமர்த்யமின்மையினால் தான் இப்படியெல்லாம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்று தொல்லை காட்சிகளில் பேசியுள்ளார். இந்த அந்தர் பல்டி எதற்கோ. இந்த பல்டியின் சூத்ரதாரி யாரோ.

    இந்த ஊழலில் எத்தனை ஆயிரம் கோடிகள் யாருக்கு போயின என்பது தீர்மானமான விசாரணையில் தெரிய வரலாம். வராமலும் போகலாம். ஹிந்துஸ்தானம் ஸ்வதந்த்ரம் அடைந்தது தொடங்கி நேற்று வரை ஆளுமையில் இருந்த காங்கிரெஸ், ஜனதா, பா.ஜ.க. ரா. ஜ.த.போன்ற கட்சிகளின் பல அரசியல் வாதிகள் செய்த ஊழல்கள் பத்திரிக்கைகளில் டி.வி யில் பேசப்பட்டதே அன்றி இது வரை ஏப்பம் விட்ட பணம் சர்காரின் கஜானாவிற்கு சேர்ந்ததாகவோ அல்லது குற்றவாளி அரசியல் வாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதாகவோ முன்னுதாரணம் இல்லை.

    இன்னொரு முக்யமான முதல் இது வரை ஊழல் புராணங்களில் மந்த்ரிகளும் சந்த்ரிகளும் தான் பேசப்பட்டார்கள். இந்த முறை ஊடகத்தார்கள் பெயர்களும் சர்ச்சையில் உள்ளது. தங்கள் தங்கள் ஊடகங்களில் தாங்கள் நேர்மையானவர்கள் மற்ற எல்லோரும் ஊழல் பெருச்சாளிகள் என்றெல்லாம் அஹோராத்ரம் பிரசாரம் செய்யும் இந்த ஜர்னலிஸ்டுகள் விசாரணைக்காவது அழைக்கப்படுவார்களா என்று காலம் தான் சொல்லும்.

    மற்றெந்த டி.வி களில் ஜர்னலிஸ்டுகள் சம்பந்தமாக ஏதும் கலந்துரையாடல் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. நேற்று சி.என்.என்.ஐ.பி.என். இல் நடந்த விவாதத்தில் இந்த ஊழல் விவகாரத்தில் ஜர்னலிஸ்டுகள் சம்பந்தம் அலசப்பட்டது. இடி வாங்குவது அடுத்த வீட்டுக்காரன் என்பதால் முகத்தில் புன்னகையோடு ஸ்ரீமதி சீமா அவர்கள் இந்த விவாதத்தை நடாத்தினார். ஆனாலும் இடி படுவது தன் ஸ்வய தொழிலை சேர்ந்தவர்கள் என்பதால் பவ்யமாக அடக்கியே வாசித்தார். ஹிந்து (விரோத?) பத்திரிகையின் சார்பில் பேசிய சித்தார்த் வரதராஜன் எப்படி பேசி இருப்பார் என்று விளக்க அவசியமில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

    சுய புத்தியில் வேலை செய்யாத ப்ரதம மந்த்ரி என்று ஸ்ரீ அத்வானி பல முறை கூறியதில் கடுப்படைந்த ஸ்ரீ மன்மோஹன் சிங் நீங்கள் இது வரை என்ன பெரிதாக கிழித்து விட்டீர்கள் என்று அவரை பரிபவம் செய்து மகிழ்ந்தார் நாடாளு மன்ற தேர்தலின் முன். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. காமன்வெல்த், ஆதர்ஷ், டூ ஜி என்று அடுக்கடுக்காக பல்லாயிரம் கோடிகள் ஊழல் நடந்த பின்னும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்றும் அடைக்கலம் நீயே அம்மா என்றும் மஹாத்மா காந்தி அடிகளின் மூன்று குரங்குகளுக்கும் ஒரே உருவகமாய் கண் காது வாய் பொத்தி “வித்யா வினய சம்பன்ன” என்று இத்தாலிய அன்னையின் முன்னும் லோக்சபையின் முன்னும் மௌன ஸ்வாமிகளாக உலா வரும் ப்ரதம மந்த்ரி ஸ்ரீ அத்வானியிடம் வாயாடியது சரியா என்று ஒரு க்ஷணம் நினைத்தல் நன்று.

    ஸ்ரீ பாலாஜி அவர்களே தாங்கள் பதிவு செய்த சில விஷயங்களில் இருந்து வேறுபடுகிறேன். விவரம் கீழே.
    \\\\\\\\\\\\\\\\\(1)அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்களை தடை செய்ய
    வேண்டும் என்பது சரி அல்ல. நாம் சந்தை பொருளாதார முறைகளை
    அனுசரிக்கிறோம். Perception மிக முக்கியமானது. ஒதுக்கீடு நடந்து
    முடிந்து விட்டது. லஞ்சம் கொடுத்து ஒதுக்கீட்டை வாங்கிய, தெளிவாக
    நிரூபிக்கப்பட்ட கம்பெனிகளின் உரிமத்தை மட்டுமே தடை செய்ய
    வேண்டும். மொத்தமாக எல்லா கம்பெனிகளின் உரிமங்களையும் தடை
    செய்வது சரியல்ல. இது எதிர்காலத்தில் நமக்கு வரும் முதலீட்டை
    பாதிக்கக்கூடும்.\\\\\\\\\\\\\\\ Shri.Balaji i differ from you. It depends as to how genuine the intent of the business houses which participitated in the so called auction. Had they got their allotment with out committing any fraud or participated in the auction with out any fradulant intenion and got the allotments in good faith, i agree with what you say is correct as per natural justice. But as per the information made available to public, there is prima facie case to suspect that people involved in either side viz., the bueracracy and politicians on one side and business houses on other side completed this murkier deal in haste. As such, prima facie this is a fit case which is void ab initio and it would be for the good of exchequer and the country to cancel the licences of errant business houses.
    \\\\\\\\\\\\\அடுத்து ஊடக விவகாரம். CNN-IBN தொலைக்காட்சி இந்த ஊழலை
    மூடி மறைக்க வில்லை\\\\\\\\\சில ஊடகங்கள் தைரியமாக செய்திகளை வெளியிடுகின்றன.\\\\\\\\\
    என்.டி.டி.வி, டயம்ஸ் நௌ, ஹெட்லயன்ஸ் டுடே போன்ற மற்ற பல தொலைக்காட்சிகளும் இந்த செய்திகளை வெளியிட்டன. ஆனால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க போன்ற கடிசிகளுடன் நான் அடிக்கிற படி அடிப்பேன் நீ அழுகிற படி அழு என்ற ரீதியில் தான் கலந்துரையாடல்கள் நடத்துகின்றன. சரியான சமயத்தில் யெடியூரப்பா வின் வெடிவேட்டுகள் வேறு. ஊழல் அரசியல் யார் நடத்தினாலும் அதை வெளுக்க வேண்டும் என்றாலும் பிக் பாகட்டையும் வங்கி கொள்ளையும் நேர் சமமாக பேச இப்போது தொல்லை காட்சிகளுக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் வாய்ப்பு. யெடியூரப்பாவின் அழுகுனி ஆட்டம் போதும் போதாதற்க்கு.

    \\\\\\\\\\\\\\\\ஊழல் பணம் நமக்கு கிடைக்காமல் இருக்கலாம். வழக்குகள் முடியாமலே போகலாம். ஆனாலும் ஜனநாயகம் சிறிய அளவிலாவது இந்தியாவில் வாழத்தான் செய்கிறது. அடுத்த 20, 25 வருடங்களில் நம் ஜனநாயகம் மேலும் முதிர்ச்சி அடையும் என்று நான் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.\\\\\\\\\\\ நூற்றுக்கு நூறு சரி. நம்பினாற் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.

  12. நிஜமாகவே கூட்டு பாரளுமன்ற குழுவால் ஏதெனும் நன்மை உண்டா! முன்பு அமைந்த பாரளுமன்ற கூட்டுக்குழு (போஃப்ர்ஸ், குளிர்பானத்தில் நச்சு, ஹர்ஷத் மேத்தா பங்கு ஊழல்) அறிக்கையும் என்ன ஆனது.

  13. //இந்தப் பெண்மணி காங்கிரசு அரசில் யார் எந்தத் துறைக்கு மந்திரியாவது என்ற பேரத்தில் முக்கியமானவர். தேசம் எங்கே போகிறது? //

    We are going towards banana republic. Let’s nominate Sonia-G and Rasa for Bharat Ratna. Any one like to take Niira Radia’s help for this top prize deal?

  14. Shri kumudhan, when there is joint venture in the awardees S G and A R why do you avoid JV in award fixing. that should be Radia and barkha. Be it praising Arundhati selling Kashmir to pakistan heroising separatist geelani raising their voices against hanging of Afzal Guru on one or other pretexts, it is holier than thou journalists like these ones who are a species of their own they do every other anti national jobs on JV basis.

  15. இதை மக்களிடம் உண்மையாகவே தேசத்தின் மீது பிரியம் உள்ள சக்தி உள்ளவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது தான் நிலைமை சரியாகும். நன்றி!

  16. காங்கிரஸ், ஆங்கிலேய ராணியிடமிருந்து பல இந்தியர்களின் உயிர்களை பலிவாங்கி, அஹிம்சை முறையில் பெற்றதாகக்கூறிய சுதந்திரத்தை, தற்போது, இத்தாலிய நடைபாதை ராணியின் மூலம், ஹிம்சைமுறையையே தன ஆயுதமாகக் கொண்டுள்ள தி.மு.க. வைக் கொண்டு, 176000 கோடிகளுக்கு, ஈஸ்ட் இண்டியா கம்பெனி போன்ற பல கம்பனிகளுக்கு விற்பதற்காக, உலக வங்கியால், நியமிக்கப்பட்ட ஏஜெண்டுகள் தான், மன்மோகன் சிங்க், மோன்டேக் சிங்க் அலுவாலிய மற்றும் பி.சிதம்பரம். இவர்கள் தங்கள் பணிகளைச் செவ்வனே முடித்துள்ளார்கள். இந்தியர்களை மீண்டும் காலணி ஆட்சியின் கீழ் வீழ்த்தியதன் பெருமை அதே காங்கிரஸ் கட்சியையும், அப்போதே, ஆங்கிலேய ராணிக்கு சலாம் போட்ட கருனாநிதிகளைத் தான் சாரும்.

  17. //இப்படி அகடி தகடனா சாமர்த்ய சுவாமி நேற்றைய செய்தி படி பிரதம மந்த்ரி அப்பாவி அவர் கர்யாலய குமாஸ்த்தாக்கள் சாமர்த்யமின்மையினால் தான் இப்படியெல்லாம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்று தொல்லை காட்சிகளில் பேசியுள்ளார். இந்த அந்தர் பல்டி எதற்கோ. இந்த பல்டியின் சூத்ரதாரி யாரோ. //

    மணிப்ரவாள நடையில் எழுத யத்தனம் பண்ணுவது சந்தோஷமான சமாசாரம்தான். ஆனால் அம்பலத்தில் எழுதும் போது அக்ஷரம் தப்பாமல் எழுத கொஞ்சம் ப்ரயத்தனம் பண்ணுவது ஸ்லாக்யம்.

    கார்யாலயத்தை கர்யாலயம் என்று சொல்லலாமோ? இன்றைய தினத்தில் அங்கே நடக்கும் கார்யங்கள் கர்ணகடோரம் என்பது வாஸ்தவமானாலும் அக்ஷரசுத்தமாய் எழுத்தாவது இருக்கட்டுமே என்பது அடியேனுடைய விக்ஞாபம். சரி. வாதம் பண்ணப்பட்ட விஷயத்துக்கு வருவோம்.

    ஸ்ரீ ஸ்வாமி அந்தர்பல்டி அடிப்பதாய் அநேகர் (ஸ்ரீ க்ருஷ்ணகுமார் பர்யந்தம்) சொல்வது அநுருத்தம் பண்ணத்தக்க விஷயம். ஸ்ரீ ஸ்வாமி பல்டி ஏதும் அடிக்கவில்லை என்பது அடியேன் அபிப்ராயம். ஸ்ரீமான் மன்மோகன் சிங் ராஜினாமா பண்ண வேணுமாய் விபக்ஷிகள் தான் கேட்கிறார்கள். ஸ்வாமி ஆதியிலிருந்தே ஸ்ரீ மன்மோகன் சிங் 2G விஷயத்தில்அபராதம் நடந்தது பற்றி பார்லிமென்ட்டிலும், உச்சபக்ஷ ந்யாயாலயத்திலும் வியக்யானம் தந்தால் போதுமானது என்றே சொல்லி வந்தார்.

    ப்ரதம மந்த்ரி பக்ஷத்தில் தாக்கல் பண்ணப்பட்ட பரமாண பத்ரத்தை படித்துப் பார்த்ததற்கு அப்புறமாகத்தான் ப்ரதமமந்த்ரி பக்ஷத்தில் எந்த துர்பாவனையும் இருக்க சாத்யமில்லை என்பது இந்த க்ஷணத்தில் தெரியும் சத்யம் என்று ஸ்ரீ ச்வாமி சொல்கிறார். (There could be no malafide intent found on the PM’s part, at this moment). ஆனாலும் உத்தரம் தருவதற்குள் உத்தரத்தில் தொங்கிவிடலாம் என்பது போல அநேக ப்ரச்னங்கள் ந்யாயாலயத்தில் கேட்பார்கள். ப்ரதமமந்த்ரியும் அவருடைய கார்யாதிகாரிகளும் மௌனமாயிருந்து செய்த கார்யவிபத்தி பற்றி நிறைய வியாக்யானங்கள் தரவேண்டியது இருக்கும்.

    மற்ற விபக்ஷ தளங்கள் சொல்வது கேட்டு ஸ்ரீ சிங்கும் ராஜினாமாவை சமர்ப்பித்து விட்டால், எதுடா சாக்கு என்று காத்துக் கொண்டிருக்கும் விதேசி மாதா தன் பிள்ளையாண்டனை ப்ரதம மந்த்ரியாக்கி பட்டாபிஷேகம் பண்ணிவிடுவார்.

    ஆக்ஷியில் இல்லாத போதே சர்வாதிகார பூஷிதையாக பவனி வரும் ஸ்ரீமதி ஸோனியா காந்தி அதற்கு அப்புறம் ராஜமாதா என்ற பட்டத்தோடு படோடாபமாய் பவனி வருவார். அக்ரமங்கள், அநாச்சாரங்கள் ப்ரவாகமாய்ப் பெருகும். மிலேச்சாதிகார மித்ரர்கள் தவிர யாரும் பாரத தேசத்தில் ஜீவிதம் செய்வதே துர்லபம் என்பது சுலபமாக சாத்யப்பட்டுவிடும்.

    இதை உத்தேசித்தே ஸ்ரீ ஸ்வாமி ப்ரதம மந்த்ரி விஷயத்தில் ஸர்வ ஜாக்ரதையாய் இருக்க சங்கல்பம் செய்து கொண்டார் என்பது சாத்யம் அதிகம் இருக்கக்கூடிய அபிப்ராயம். அதனால் தான் ஸ்ரீ சிங் அர்த்த சாஸ்த்ர பண்டிதராகப்பட்ட போதிலும் நீதிசாஸ்த்ரத்தில் பாண்டித்யம் இல்லாதவர். ந்யாய மந்த்ராலய கார்யஸ்தர்கள் இது விஷயத்தில் அவருக்கு ஹிதவாதம் சொல்லாமல் அபவாதம் வர வழிபண்ணிவிட்டார்கள் என்று சொன்னார் ஸ்ரீ ஸ்வாமி.

    மொத்த விஷயமும் கொஞ்சம் அதர்க்யமாக இருந்தாலும் ஸ்ரீ ஸ்வாமி ப்ரதீபயமாக எதுவும் பண்ணிவிடவில்லை என்பது அடியேன் மதிநிச்சயம் செய்து கொண்டது.

  18. அய்யா, குறைந்தது சென்னை ராஜதானியில் மட்டுமாவது தங்கள் ஆட்சி
    யே தொடர வேண்டும் ,சுதந்திரம் வேண்டாம் என்று ஆங்கிலேயரிடம்
    மன்றாடிய தலைவரின் வாரிசின் தலைமையில் இன்று ஆ.ராஜாவை
    ஆதரித்துக் கூட்டம்.சேக்கிழான் கேட்ட கேள்விகளுக்கு அங்கே பதில்
    கிடைக்கும்.சிவிசியின் மாறுதல், அந்த இடத்துக்கு உத்தமர் தாமஸ்
    நியமனம்,அரசுடன் ஒத்துழைக்காத வினீத் மகராஷ்ட்ராவுக்கு மாறுதல்,
    துபாய் பில்டர்ஸ்,தமிழ் நாட்டின் பிரம்மாண்ட கான்ட்ராக்டுகள்,வாங்கப்பட்டாக வேண்டியஓட்டுகள், அயோக்கிய ஆரியர்கள்,அவர்களின் சூழ்ச்சிகள்,திராவிட அரசியல் கண்டு பிடித்த புதுயுக ஜெனிடிக்ஸ்-எலலாம் உண்டு.இந்தியாவையும்,அதன் மக்கள் ,
    43 சதவீதம் UNDERNOURISHED குழந்தைகளையும் மூலையில் தூக்கிக்
    கடாசி விட்டு வாரும்.வேடிக்கை அங்கு பிரமாதமாக இருக்கும்.

  19. தனி மனித வீழ்ச்சியின் உச்சகட்டம் போலும். இந்தியாவின் மிகப் பெரிய ஊழலை அலசும் நேரத்தில் கர்நாடக முதல்வரின் ஊழல்களும் அம்பலமேறுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்களை எடியுரப்பா பெயரளவிற்குக் கூட மறுக்கவில்லை. மாறாக பெற்ற நிலங்களைத் திருப்பி அளிப்பதாக அறிவிக்கிறார். மற்ற அரசுகளும் ஊழல் புரிந்ததாக அறிக்கை விடுகிறார். ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கிறார். சத்தம் மட்டும் போடும் லோகயுக்தா சந்தோஷ் ஹெக்டே இப்போது தான் இதை எதிர்த்து முனகுகிறார். என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.

    நம் இழவூழ் அதோடு நிற்கவில்லை. எடியூரப்பாவின் சாதி மடத்தலைவர்கள் அவருக்காகப் போராடுகிறார்கள். இந்து மதத்தில் இஸ்லாமிய வாசனை.

    பா ஜ க மேலிடம் துணிந்து எடியூரப்பாவை வீட்டிற்கு அனுப்பி நல்ல செய்தியை அளிக்க வேண்டும். எடியூரப்பா தொடர்வது பா ஜ விற்கோ, நாட்டிற்கோ, ஏன் இந்து மதத்திற்கோ கூட நல்லதில்லை. இல்லையெனில் பா ஜ க முகமிழந்து போவதுடன் இப்போராட்டமும் வலுவிழந்து போகும்.

    காங்கிரஸ் எடியூரப்பா ஊழலைக் கேடயமாக்கி தப்பிக்க நினைப்பது சரியல்ல. அது பதிளிருக்கவேண்டியது நீதிமன்றத்திற்கு, பா ஜ விற்கோ மற்ற எதிர்கட்சிகளுக்கோ அல்ல.

    உண்மையில் காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டியது மக்களுக்கு என்று எழத வேண்டும். அந்தத் துணிவு எனக்கில்லை. பெருவாரியான மக்கள் ஊழலை கவுண்டமணியின் திரைவசனத்தைக் கூறி இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்; அல்லது அதில் மறைமொகமாகவேனும் பங்கு பெறுகிறார்கள். தேர்தல் ஆணைய கூற்றுப்படி தமிழனுக்கு இதில் முதலிடம்.

    இரட்டை நிலை மலிந்த நிலையில் இவற்றை எதிர்த்து குரல் கொடுப்போர் மிகக் குறைவு.
    இப்பதிவின் மூலம் மன அழுத்தம் சற்று குறைந்தது. வேறு பலனுண்டா தெரியவில்லை.

  20. அருண் பிரபு தங்கள் நடை என்னை வியக்க வைக்கிறது, சில புரியவில்லையாயினும். வாழ்த்துக்கள்.

  21. ஒரு மர்ம நாவலைப் படித்தது போல் இருக்கிறது. எளிமையாக புரிந்துகொள்ளும்படி அருமையாக எழுதியுள்ளார். பிக்பாக்கெட் அடிப்பவர்களும், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களும் கூட தண்டிக்கப்படுகிறார்கள். கம்பி எண்ணுகிறார்கள். ஆனால் அரசியல் வாதிகளை யார் தண்டிப்பது. இந்த பாவிகளை இறைவன்தான் தண்டிக்க வேண்டும்.

  22. ஊழலெல்லாம் இருக்கட்டுமய்யா! அவைதான் என்றைக்கும் இருக்கின்றன. ஆனால் இந்த கிருஷ்ணகுமாரும் அருண்பிரபுவும் தூள் கிளப்புகிறார்கள். அதிலும், அருண் விஞ்சி நிற்கிறார்.

    நாப்பதாமாண்டு கட்டுரையொன்றைப் படிப்பதைப்போல் இருக்கிறது. சினிமாவில்தான் பீரியட் ஃபிலிம் எடுப்பார்களா; எழுத்திலும் அது சாத்தியமே என்று நிரூபணம் செய்கிறார்கள்; படிப்பதற்கு ரஸமாக இருக்கிறது.

  23. LOK SATTA (New Politics for new generation)

    The silence of good man is more dangerous than the brutality of bad man
    (Martin Luthur King)

    Nomination Form for “Lok Sabha Election”

    1. Name of Candidate :_____________________

    2. Present Address:
    (i.)Name of Jail :_____________________
    (ii.)Cell Number:_____________________

    3. Political Party :_____________________
    *List ONLY the last 5 parties in Chronological (Order)

    4.Sex: [ ]
    A- Male
    B- Female
    C- Mayawati
    D- Uma Bharathi

    5. Nationality: [ ]
    A- Italian
    B- Indian

    6. Reasons for leaving last party (circle one or more)
    A- Defected
    B- Expelled
    C- Bought out
    D- None of above
    E- All of above

    7. Reasons for contesting elections (circle one or more)
    A- To make money
    B- To escape court trial
    C- To grossly misuse power
    D- To serve the public
    E- I have no clue
    (If you choose “D, attach Certificate of Sanity from a
    Recognized Government Psychiatrist)

    8. No of years of public service experience do you possess?
    A- 1-2 yrs
    B- 2-6yrs
    C- 6-15yrs
    D- 15+yrs

    9. List the criminal cases pending against you (Use as many
    Additional Sheets as you want)

    10. How many years have you spent in Jail? [ ]
    (Don�t confuse with question 8)
    A- 1-2 years
    B- 2-6 years
    C- 6-15 years
    D- 15+years

    11. Are you involved in any financial scams? [ ]
    A- Why not
    B- Of course
    C- Definitely
    D- I deny it all
    E- I see a foreign hand.

    12. What is your Annual Corruption Income? [ ]
    A- 100-500 Crore
    B- 500-1000 Crore
    C- Overflow…
    (Convert all your $ earning from hawala etc to Rupees)

    13. Do you have any developmental plans for India in mind? [ ]
    A- No
    B- No
    C- No
    D- No

    14. Describe your achievements in space provided:
    [_________]

    Issued in public interest by Election Commission of India

    (For Humor)

    regards ,
    RANJAN SHAGRITHAYA
    SHAGRI AGENCIES
    SHANTHARAM COMPLEX
    SHAKTHI NAGAR
    MANGALORE – 575016
    KARNATAKA STATE
    0 944 848 5353

  24. Indians are poor but INDIA is not a poor country !!! (Says one of the Swiss bank directors)

    He says that “280 lac crore“ of Indian money is deposited in Swiss banks which can be used for “tax less” budge for years

    Can give 60 crore jobs to all Indians. From any village to Delhi 4 lane roads

    Forever free power supply to more than 500 social projects

    Every citizen can get monthly Rs.2000/- for 60 years

    No need of loan from World Bank or IMF

    Think how our money is blocked by rich politicians. We have full right against corrupt politicians.

    Take this seriously – Be a responsible citizen
    https://www.thedivineshoppe.com

  25. எளிய தமிழ் நடையில் எழுதினால் (கருத்துக்களை கூறுவோர்), போதுமே !!!!

  26. @ Ramki & Kannan! மணிப்ரவாள நடையில் எழுத முதல் முயற்சி செய்தேன். பாராட்டுக்களுக்கு நன்றி. ஆனால் தகுந்த சொற்களை யோசித்து எழுத நேரம் அதிகம் செலவாகிறது என்பது மணிப்ரவாளத்தில் (பொதுவகத் தமிழிலும்) எனக்குள்ள handicap. Yet, பாராட்டுக்கள் ஊக்குவிக்கின்றன. மிக்க நன்றி.

  27. அருண் மகாசயா மணிப்ரவாளத்தில் எழுத தாஸன் யத்னம் செய்யவில்லை. சம்ஸ்க்ருதம் கலவா தூய தமிழ் எழுதவே யாம் யத்னம் செய்ய வேண்டும். மணிப்ரவாளம் எமது க்ருஹ பாஷா சைலி. இருபத்து ஐந்து வருஷத்திற்கு மேல் உத்தர பாரதத்தில் சேவா வ்ருத்தியில் இருப்பதாலும் எமது நித்ய திருப்புகழ் பாராயணத்தாலும் இந்த சைலி புஷ்டியாய் இருக்கிறது. எனவே எமது உத்தரம் ஸ்வாபாவிகம் யத்ன பூர்வகம் அன்று.

    விக்ஞாபனம் (விக்ஞாபம்) ப்ரமாணம் (பரமாணம்) என்று அங்கங்கே பாஷா லோபம் மற்றும் அக்ஷர லோபம் தங்களுடைய உத்தரத்தில் இருந்தாலும் ஸ்ரீ சாமுவேல் வேதநாயகம் பிள்ளையை ஞாபகப்படுத்தும் தங்களது உத்தரம் அத்யுத்க்ருஷ்டம். அக்ஷர லோபம் தவிர்க்க ப்ரயத்னம் செய்கிறேன்.

    ஜாதி வித்யாசமல்லாது திருப்புகழ் மற்றும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையவர்களின் வ்யாக்யான விசாரம் செய்பவர்களிடமும் தெருத் தெருவாய் ஹிந்துக்களை பாவிகளே என்று கூவிக் கூவி கிறிஸ்தவ மத சுவிசேஷ ப்ரசாரம் செய்யும் மதாந்தரத்தை சேர்ந்தவர்களிடமும் இன்றும் ஜீவிதமாய் இருக்கும் இந்த பாஷா சைலிக்கு தமிழகத்தில் பலர் மரண சாஸனம் கொடுத்து விட்டனர்.

    விஷயத்திற்கு வருவோம். ஸ்ரீ ஸ்வாமி தனியே இல்லை. உத்தர பாரதத்தில் ப்ரக்யாதி வாய்ந்த ஸந்த் ஸ்ரீ ராம்தேவ் க்ராமம் க்ராமமாக இந்த விஷயத்தை ப்ரசாரம் செய்து வருகிறார். ஸ்ரீமதி கிரண் பேடி அவர்களும் இன்று அவருக்கு துணையாய் இருக்கிறார். பல நற்சிந்தை உள்ள பற்பல மதங்களை சார்ந்த சான்றோர்களும் இவருக்கு துணை வர இருக்கிறார்கள். ஸ்ரீ ஸ்வாமி இவருடன் சேர்ந்தால் இந்த இயக்கம் இன்னும் பலம் பெறும்.

    Arun, i could not get back your view regarding letting off corporate business houses where the case seems to be void ab initio and unless otherwise proved the intent of fraudulant dealing is quite explicit from either side right from the very beginning.

    Again Arun, in lighter veins, “ஸ்ரீ மன்மோகன் சிங் 2G விஷயத்தில்அபராதம் நடந்தது பற்றி பார்லிமென்ட்டிலும், உச்சபக்ஷ ந்யாயாலயத்திலும் வியக்யானம் தந்தால் போதுமானது என்றே சொல்லி வந்தார்”. இது மட்டிலும் பக்ஷபாதம் தவிர்த்து வருவது உச்ச ந்யாயாலயம். எனவே உச்ச பக்ஷ ந்யாயாலயம் என்ற பாஷா ப்ரயோகம் வேண்டாமல்லவா.

    ஸ்ரீ கண்ணன் & ஸ்ரீ SS, இந்த மொழி நடை எமது மஜ்பூரி. இன்று காஷ்மீரத்தில் இருக்கும் நான் ஜபர்தஸ்தியாக இந்த நடையில் எழுதுவதாக எண்ண வேண்டாம்.

  28. வேதம் கோபால் அவர்கள் உருவாக்கியுள்ள மனு சுவாரசியமாக இருக்கிறது. நிச்சயம் நவீன காங்கிரசார் விரும்பி அதனைப் பூர்த்தி செய்து அனுப்பி விடுவார்கள். அதில் 2 (ii) வினாவுக்கு தங்கள் கைபேசி எண்ணைக் கொடுத்து விடுவார்கள். சிறை என்று ஒருமையில் கொடுத்திருக்கிறீர்கள். சிறைகள், அவைகளில் அடைக்கப்பட்டிருந்த அறைகள் என்று கேளுங்கள். பாதிப் பேருக்கு இந்தி புரியாது, மற்றவர்களுக்கு ஆங்கிலம் புரியாது. ஒன்று மட்டும் தெரியும் அது ஊழல் செய்வது. அவர்கள் தங்கள் மக்கள் பணிக்காக அல்ல சேவைக்காகப் பெரும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்கள்.

    QUESTION Why people die to become a Member of Parliament?
    ANSWER =
    Indian government approves 200% MPs salary hike , Still some MP’s are unhappy.
    Now , MP’s take home salary is Rs 45 lakh per anum + other allowances.
    TOTAL expense for a MP [having no qualification] per year : Rs.60,95,000
    For 534 MPs, the expense for 1 years:
    Rs. 325,47,30,000 Crores
    3254730000 X 5 years =
    Rs.1627,36, 50000 crores ( One Thousand six hundred crores plus..)

  29. ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டுக்கு இழப்பு ஒரு லட்சத்து எழுபத்தராயிரத்து முன்னூற்று அறுபத்தொன்பது கோடிகள் என்று மட்டுமே தெரிகிறது.
    ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் வாங்கிய லஞ்சம் எவ்வளவு என்று கணிப்பு இல்லை
    அனால் விஷயம் தெரிந்தவர்கள் அது ஐம்பத்து ஐந்தாயிரம் கோடிகள் என்றும்அது ஏற்கெனவே சுவிஸ் வங்கியில் போடப் பட்டு விட்டது என்றும் சொல்கிறார்கள்.

  30. இளஞ்சிங்கம், காந்திவம்ச குலவிளக்கு, வருங்கால ப்ரதமமந்த்ரி, தலித்களின் ஆத்ம நண்பன், இந்திய மக்களின் ஒரே வழிகாட்டி, த்யாகி சோனியா அன்னையின் தவ புதல்வன், ஏழை பங்காளன், மதசார்பற்ற வீரன், காங்கிரஸின் கொடி காக்கும் குமரன்,அறிவின் விக்ரஹம், பெண்களின் இதய கள்வனாம் எங்கள் ராவுல் வின்சியின் கனவுகளை பீகார் மக்கள் சிதறடித்தது ஏனோ?

    Did they make the word “Congress 4 Bihar” come true by giving what they wanted?

    Are they effete? (To borrow the word of our padma shri awardee journalist)

  31. அப்பா அப்பா !! சாமி மொழி புலவர்களே !! போதுங்க எங்கள போல கீழ்தட்டு தமிழர்களுக்கும் கொஞ்சமேனும் புரியட்டுமுங்க!!! இந்த மாதிரி தமிழ் ஹிந்து ல கட்டுரை வெளி வந்துச்சு, கல்கி பத்திரிகையின் 1910 களின் நினைவுகள் போல ஆகிவிடும்.

  32. நாங்கள் ஒரு சாதனையை, செயலை, திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதில் மத்திய அரசுக்கும் பங்குண்டு. அவர்கள் எட்டு அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம்;அந்த எட்டு அடியையும் கூட்டித்தான் இந்த 16 அடி. தனியாக 16 அடி பாயவேண்டுமென அவர்கள் சொன்னாலும், சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
    https://www.dinamalar.com/News_Detail.asp?Id=133004
    இது வேளாண்மைத்துறை மாநாட்டில் அந்தத் துறையின் சாதனைகளைப் பற்றி முதல்வர் பேசியதாம். ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இந்தப் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை.

  33. N. Ram on CNN-IBN: Radia affair would not have been tolerated in NYT/BBC, it would have ended Barkha & Virs career. But then HT & NDTV are not BBC/NYT

    Ram is correct in this. BBC reporters do not air anti-UK views and get patting tweets from enemy states!

  34. 2G ஊழலுக்கு JPC விசாரணை மறுக்கப்படுவதால் பாராளுமன்றம் செயல் படாத நிலை இருக்கிறது. இதில் இன்னொரு அரசியல் stunt நடக்கிறது. பாராளுமன்றம் நடக்காத நாட்களுக்கு படிக்காசு வேண்டாம் என்று சோனியா, ராகுல் உள்ளிட்ட 80 கவலைகொண்ட காங்கிரசு உறுப்பினர்கள் சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களாம்.

    இதற்கு Indian Express நாளிதழ் தந்திருக்கும் தலைப்பு:
    Opposition deprives Sonia, Rahul of their dues.
    ஏதோ எதிர்க்கட்சிகள் சதி செய்து இவர்களின் நியாமான சம்பாத்தியத்தைக் கெடுத்துவிட்டது போல ஒரு படம் காட்டியிருக்கிறார்கள்.

    ஒரு வேள வஞ்சப் புகழ்ச்சீல வெளயாடீருப்பாகளோ??? இப்புடி எதயாச்சுஞ் சொல்லி ஆத்திரப்பட்ட மனச ஆத்திக்கிருவோம்!!!

  35. ஆஹா என்ன புண்யம் செய்தனம் யாம் என்று நினைத்து இத்தேசத்தார் எல்லோரும் இறும்பூது எய்திடலாம். காசு கொடுத்து ஒட்டு பொறுக்கிகளாய் இருப்போரும் பணத்தைப் பெறுவோரும் தான் நமது ஜன நாயகத்தைகட்டி காப்பாற்றுகிறார்கள் எனில் யாரைச் சொல்லி என்ன பயன்? ஊழல் திருவிழாக்கள் அங்கு இங்கு என்னதபடி எங்கும் நிறை பரம்பொருளாய் விளங்குவது உள்ளங்கைநெல்லிக்கனி அன்றோ. யதா ராஜா ததா பிரஜா என்று சொல்வது மிகவும் சரியே. அடுத்த தேர்தலிலாவது சரியான அரசை தேர்ந்தெடுத்து தேறுதல் அடைவோம். வந்தே மாதரம். இந்திய மாதாவை இத்தாலிய “மாதா”விடமிருந்து காப்பாற்ற எல்லாம் வல்ல பரம்பொருள் நல்லருள் புரியட்டும்.

  36. //யதா ராஜா ததா பிரஜா//

    இல்லை. ஜனநாயகத்தில் இது மாறும். யதா பிரஜா ததா ராஜா!!

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் போல.

  37. இந்த 2G ஊழலில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் சிக்குகிறார். அவர் இராசா செய்வது சரிதான் என்றும். கணக்காயரோ, கண்காணிப்பாளரோ 2G விவகாரத்தில் விசாரணை செய்ய முடியாது என்றும் கூறி கையெழுத்திட்டுள்ளார். இது Times Now தரும் தற்போதைய update.

  38. சேக்கிழான்

    முழுமையான கட்டுரை. நாம் ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டேயிருக்கிறோம் மக்கள்தான் திருந்துவதாகத் தெரியவில்லை. இவ்வளவு பெரிய நாசகார ஊழல் நடந்திருக்கிறது மக்களிடம் கிஞ்சித்தும் அதிர்ச்சியோ, கோபமோ ஆத்திரமோ எழவில்லை. இந்த மக்களுக்கு இப்படியாகப் பட்ட அரசுதானே கிடைக்கும். சுவாமி உள்துறை அமைச்சர் சிதம்பரம் குறித்து மிக மிக அபாயகரமான ஒரு குற்றசாட்டை மன்மோகனுக்கு அனுப்பியுள்ளார். ஒட்டு மொத்த நாட்டின் பாதுகாப்பையே அச்சுறுத்தும் நடவடிக்கை சிதம்பரத்தின் நடவடிக்கை உடனடியாக சிதம்பரத்தை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று எழுதியுள்ளார் இருந்தும் வழக்கம் போல மன்மோகன் அமைதி காக்கிறார். லண்டனுக்குச் சென்ற சிதம்பரம் அங்கு ”ஆபாசமான” நிலையில் இருந்ததை லண்டனின் உளவு நிறுவனம் எம் ஐ 6 வீடியோ எடுத்துள்ளதாக சுவாமி மன்மோகனுக்கு கடிதம் எழுதி ”அது மிக மிக அபாயகரமானது என்றும் நாட்டின் அத்தனை ரகசியங்களையும் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் ப்ளாக் மெயில் செய்யப் படும் நிலையில் உள்ளார் அதனால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்கிறார் சுவாமி. இந்தப் புகாரை வாங்கி அதன் மேல் உட்கார்ந்து கொண்டு இஞ்சி தின்ற குரங்கு போல மன்மோகனும், சிதமபரமும் அமைதி காக்கிறார்கள். ஒன்று சுவாமி செய்த புகார் பொய்யானால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் சிதம்பரத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த வீடியோவும் சுப்ரீம் கோர்ட்டில் வெளியான பின்னால்தான் பதவி விலகுவார் போலிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த ரகசியங்களின் பாதுகாப்பாளரே இன்னொரு நாட்டினால் ப்ளாக்மெயில் செய்யும் நிலையில் இருந்தால் அது இந்தியாவின் இருப்புக்கே அச்சுறுத்தல் அல்லவா? இந்த நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது. மன்மோகனை மிஸ்டர் க்ளீன் என்றும் சிதம்பரத்தை ஜெண்ட்டில் மேன் என்றும் இன்னும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து வெடிக்கவிருக்கும் இந்த விஷயம் 2ஜி ஊழலை விட பல மடங்கு ஆபாசமானதாகவும் பல மடங்கு நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். சுவாமியின் புகார் உண்மையா இல்லையா என்பதை உடனடியாக மன்மோகன் விசாரித்து மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மன்மோகனுக்கு மன்னிப்பே கிடைக்காது. இந்திய வரலாற்றிலேயே மிக மிக மோசமான ஒரு பிரதமர் இந்த மன்மோகனாக மட்டுமே இருக்க முடியும். ஒரு நித்யானந்தாவின் வீடியோவுக்கே நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டும் என்று சொன்ன பத்திரிகையாளர்களும், டி விக்களும், ப்ளாகர்களும், சிதம்பரத்தின் மீதான சுவாமியின் இந்த வீடியோ புகார் குறித்து கனத்த அமைதி காக்கின்றார்கள். சுவாமியின் மற்றொரு முக்கியமான குற்றசாட்டு கருணாநிதியுடன் கூட்டு வைத்து ஸ்பெக்ட்ரம், இன்ஷ்யூரன்ஸ் போன்ற அனைத்து ஊழல்களிலும் உடனிருக்கும் இ டி ஏ நிறுவனத்திற்கும் பாக்கிஸ்தானின் ஐ எஸ் ஐ க்கும் தொடர்பு இருக்கும் என்பது. இந்தக் குற்றசாட்டு உண்மைதான் என்று சிதம்பரம் இப்பொழுது ஒத்துக் கொண்டிருக்கிறார் இருந்தாலும் அவர்களுக்கு அளித்த எந்த ஸ்பெக்ட்ரமும் இன்னும் ரத்து செய்யப் படவில்லை. அப்படியானால் நாட்டின் முக்கியமான வளமான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஸ்பெக்ட்ரத்தினை ஐ எஸ் ஐ யின் பினாமி நிறுவனத்திற்கும் மன்மோகனின் மந்திரி விற்றுள்ளார். ராஜாவின் ஊழல் பணத்தில் தாவூதின் காசும், பாக்க்கிஸ்தானின் ஐ எஸ் ஐ யின் காசும் உள்ளது. காசுக்காக நாட்டையும், நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் உயிர்களையும் ஒட்டு மொத்தமாக விற்றிருக்கிறது இந்த நாசகாரக் கும்பல். இதெல்லாம் ஒரு நாடு இவரெல்லாம் ஒரு பிரதமர். இதைப் பொறுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் எல்லாம் ஒரு மக்கள். நெஞ்சு பொறுக்குதில்லை.

    ச.திருமலை

  39. எத்தனை ஆயிரம் கோடி ஊழல் என்றாலும், அதிகபட்ச தொந்திரவு என்பது இவ்வளவுதான் :
    ௧) விசாரணைக் குழுவிடம் பதில் சொல்லுதல்
    ௨) தண்டனை கொடுத்தால் மார்வலி என்று மருத்துவ மனையில் சேருதல்.

    பத்தாண்டுகளுக்குள் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுதல் மட்டுமே போதுமானது.. எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம். இந்த ஊழலால் யாருக்கும் எதுவும் நஷ்டமில்லை. எதிர்க்கட்சிகளுக்கு சற்றே லாபம். அவ்வளவுதான்.

  40. //மக்களிடம் கிஞ்சித்தும் அதிர்ச்சியோ, கோபமோ ஆத்திரமோ எழவில்லை.// மக்கள் இதற்கெல்லாம் ஆத்திரப்படுவார்களா என்ன? அப்படியே அவர்களுக்கு ஆத்திரம் வந்தாலும் அவர்களால் என்ன செய்து விட முடியும் ? நமது மக்கள் என்ன ஆத்திரம் வந்த உடனே தெருவுக்கு வந்து போராடப்போகிறார்களா என்ன? சராசரி இந்தியர்களுக்கு தங்களது சொந்த வாழ்க்கை, குடும்பம், உறவினர்கள், சாதி, கட்சி இதற்கெல்லாம் அப்புறம்தான் தர்மம், நேர்மை எல்லாம்.. தங்களது சொந்த வாழ்க்கையும் குடும்பமும் நேரிடையாக பாதிக்கப்படாத வரையில் எந்த பிரச்சினையைக் குறித்தும் அவர்கள் கவலைப்படப்போவதில்லை. அவர்களது கவலை எல்லாம் அடுத்த முறை வோட்டுக்கேட்டு திமுக வரும்போது எவ்வளவு அதிகமாகக் கறக்கலாம் என்பதாகத்தான் இருக்கும்.

    இரண்டு மூன்று மனைவிகளும் இதர தொடுப்புகளும் இல்லாதவர்களைத் தலைவர்களாகவே இந்தியர்கள் கருதுவதில்லை ( குஜராத் வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம் 🙂 ). அந்தக்கணக்கில் சிதம்பரம் இந்த செய்தி கேட்டபின் ‘தலைவர்’ என்ற நிலையை உறுதிப் படுத்திக்கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *