சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்

indian_native_history_1ண்மையில் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலன் பேசினார். பேசும் போது கால்டுவெல் தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது என்று குறைபட்டுக் கொண்டதாக சொன்னார்.

பல நேரங்களில் நமக்கு இந்த விஷயம் சொல்லப்படுகிறது. ‘இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது.’ பெரும்பாலும் நாம் இதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கொஞ்சமும் இந்த விஷயத்தை சிந்தித்து பார்ப்பது கிடையாது. உண்மையிலேயே நமக்கு வரலாற்று உணர்வு கிடையாதா?

முரணான உண்மை, வடிவேலுவின் பிரபல திரைப்பட நகைச்சுவை போன்றது – வரலாற்று உணர்வு உண்டு; ஆனால் கிடையாது.

வரலாற்று உணர்வு என்றால் என்ன என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய பார்வையில் எது வரலாற்று உணர்வோ, அதுதான்  உண்மையில்  ’வரலாற்று உணர்வு’  என்று கடந்த இருநூறு முன்னூறு ஆண்டுகளாக நமக்குக் கூறப்பட்டு வருகிறது. அதிகாரம் சார்ந்த மைய வரலாற்று ஓட்டமாக அது ஆரம்பித்தது. பேரரசர்களாலும் பெரும் சாம்ராஜ்ஜியங்களினாலும் ஆனது. வின்ஸெண்ட் ஸ்மித் போன்ற காலனிய வரலாற்றாசிரியர்கள் அத்தகைய ஒரு வரலாற்றினை முன்வைத்தார்கள். மேற்கூறிய காலனிய சாம்ராஜ்ஜிய மையப் பார்வை வரலாற்றுடன் மற்றொரு வரலாற்றுப் பார்வையை இணைத்து மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்றவர்கள் முன்வைத்தனர். இது இனமைய வரலாற்றுப் பார்வை.

சாம்ராஜ்ஜியவாத காலனியமும்,  மதமாற்ற நோக்கங்களும் இணைந்து முன்வைத்த இந்த வரலாற்றுப் பார்வைகளில், இந்திய வரலாறு என்பது (படையெடுத்த அன்னிய) ஆரிய  –  (தோற்கடிக்கப்பட்ட பூர்விக) திராவிட இனங்களின் போராட்ட வரலாறாகவே முன்வைக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து தொடர் படையெடுப்புகள் மூலமாக தோற்கடிக்கப்பட்ட இந்தியா. இந்தியாவின் தலைவிதியே அன்னியர்களிடம் தோற்றுக்கொண்டே இருப்பதுதான். இதில் இறுதியாக வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு ஒரு நல்ல சமூக மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ’எனவே, மக்களே ஆங்கிலேயரிடம் விசுவாசமாக இருங்கள். ஆங்கிலேயப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலேயர்கள் அளிக்கும் பார்வையில் உங்கள் வரலாற்றைப் பாருங்கள். ஏனென்றால் உஙகள் வரலாறு புராண சுமைகளால் கழிவுகளால் குழம்பியிருக்கிறது. அதிலிருந்து வரலாற்றைப் பிரித்தெடுக்க ஆங்கிலேய பண்பாட்டு முதிர்ச்சி தேவைப்படுகிறது’.  தேவர்களும் அசுரர்களும் இனங்கள் ஆனார்கள். எல்லாம் இன மோதல்களின் அடிப்படையில் சிந்திக்கப் பட்டது.  இல்லாத வரலாறு உருவாக்கப் பட்டது.  இந்த வரலாற்றைக் குறித்த அறிவே இந்தியர்களுக்கு இல்லையே! வரலாற்று அறிவு இல்லாதவர்கள் இந்தியர்கள்! சொந்த வரலாறு தெரியாதவர்கள் தமிழர்கள்!

அடுத்து வந்தவர்கள் மார்க்சியர்கள். இவர்களும் சமூகப் பிளவுகளையே சமூக வரலாற்றைக் காணும் சட்டகமாக முன்வைத்தார்கள். சமூக உறவுகள், உற்பத்தி உறவுகளால் தீர்மானிக்கப்படும் மோதல் போக்கு கொண்டு, அவற்றின் மூலம் மட்டுமே முன்னகரும் சமுதாய வரலாறு. மார்க்சிய பொன்னுலகு வரும் வரை அதிகார சக்திகளினால் மட்டுமே வரலாறும் பண்பாடும் உருவாக்கப்படும்.  மக்கள் பண்பாடோ அடக்கப்படும் அல்லது புறக்கணிக்கப்படும். இந்தப் பார்வையிலும், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது என்றும், அதை அறிவுஜீவிகள் உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

காலனிய வரலாற்றுப் பார்வைக்கும் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வைக்கும் ஒரு பொதுத்தன்மை உள்ளது. இந்திய மக்கள் வரலாற்றுணர்வு இல்லாதவர்கள் என்றும், அவர்களின் பண்டைய வரலாற்றை உருவாக்கும் அதிகாரம் ஒரு சில அறிவுஜீவிகளுக்கு, அவர்களின் மார்க்சிய சித்தாந்த்தத்தால் அல்லது மேற்கத்திய பண்பாட்டு அறிவால், கையளிக்கப் பட்டுள்ளது – என இந்த இரண்டு பார்வைகளும் நம்புகின்றன.

ஆனால், மூன்றாவது பார்வை ஒன்று உள்ளது. அப்பார்வை இந்திய வரலாறு முழுமைத் தன்மையுடனும், குவித்தன்மையற்ற முறையிலும் எழுதப்பட்டு வந்துள்ளது என்று கருதுகிறது. செப்பேடுகள், நாட்டுப்புறப் பாடல்கள், கல்வெட்டுக்கள், சடங்கு முறைகள், தல புராணங்கள் என இவை அனைத்திலுமாக,   இந்தியப் பண்பாட்டுப் புலத்தில் வரலாற்று நினைவு தலைமுறை தலமுறையாக பாதுகாக்கப்பட்டும் சேகரிக்கப்பட்டும் வருகிறது. ஆனால் கடந்த இரு நூற்றாண்டு காலனியப் பார்வை நம்மை அந்த வரலாற்றுச் சேகரிப்பிலிருந்து வெகுவாக வெட்டிவிட்டது. இன்றைய வரலாற்று ஆய்வாளன் இந்திய வரலாற்றைப் பார்க்கும் பார்வை ஒரு அன்னியனின் பார்வை. சுவிட்சர்லாந்தையோ அல்லது டென்மார்க்கையோ சேர்ந்த ஒரு அன்னியநாட்டு மாணவன் இந்திய கிராமப் புறத்துக்கு வருகிறான என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அவன் எப்படி அந்த கிராமத்தின் வரலாற்றை அணுகுவானோ அதற்கும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறோ சமூகவியலோ படித்த ஒரு ஆராய்ச்சி மாணவன் இக்கிராமத்தின் வரலாற்றை அல்லது பண்பாட்டை அணுகுவதற்கும், எவ்வித வேறுபாடும் இருக்காது என்றே கருத வேண்டியுள்ளது.  ஒருவேளை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவனிடம் ஒரு அதிகப்படி சுமையாக மார்க்சிய சித்தாந்த பார்வையும் சேர்ந்து இருக்கலாம்!

cover_srமூன்றாவது பார்வை மூலம் இந்த அன்னியப் படுத்துதலிலிருந்து மீண்டு வந்து, இந்திய வரலாற்றை அதன் குவித்தன்மையற்ற மூலங்களிலிருந்து நாம் உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டும் ஒரு முயற்சியாக, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரனின் ’வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்’ என்னும்  இந்த நூலைச் சொல்ல வேண்டும்.

வலங்கை மாலை ஒரு வில்லுப்பாட்டு நூல். சான்றார் (நாடார்) சமுதாயத்தின் வலங்கை உய்யக்கொண்டார்கள் பிரிவின் தோற்றம் முதல், வரலாற்றுக்காலங்களில் இச்சமுதாயத்தின் வளர்ச்சி, எழுச்சி, மறு எழுச்சி என அனைத்தையும் கதைப் பாடல்களாக்கி, சான்றார் சமுதாய குல தெய்வ, குடும்ப ஊர்க் கோயில் திருவிழாக்களில் இதைப் பாடுவது இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை நிலவியுள்ளது.

இப்பாடலின் வரலாற்றையும், அதனுடன் இப்பாடல் கூறும் தொன்மக் கதையில் குறியீட்டுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் வரலாற்றுத் தரவுகளையும் ராமச்சந்திரன் விவரிக்கிறார். காலப் பயணம் என்று சொல்லத்தக்க விறுவிறுப்புடன் இது நிகழ்கிறது!  உதாரணமாக, வித்யாதர மகரிஷி நாக கன்னியரை மண்ந்த்தால் உருவான சந்ததிகள் சான்றோர்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவள் பத்திரகாளி. வித்யாதரர் என்பதை வானவர் என்பதுடனும், இப்பதம் தமிழக மன்னர்குல பெயராகவும் பயன்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டுகிறார்.

இன்றைய அறிதல்கள் அல்லது பெருமிதக் கற்பிதங்களைக் கொண்டு நம் பழைய வரலாற்றினை மீட்டெடுக்க முயல்வது பல அபத்தங்களை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, ‘நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன. உதாரணமாக, வேங்கி அரசு  ‘சதுர்த்தான்வயர்’ அல்லது சூத்திர குலத்தவராகத் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்ட வெலநாண்டி அரசர்கள் வசம் சென்றதையும், அவர்களுக்கு “சோடர்” என்ற பட்ட பெயர் இருந்ததையும் ராமச்சந்திரன் குறிப்பிடுகிறார். காகதீய அரசர்களும், அரவீடு ரெட்டிய அரசர்களும் தம்மை சூத்திர குலத்தவர் என்றே பெருமையுடன் கூறிக்கொண்டனர். க்ஷத்திரிய சமுதாய வெளிக்குள் குடியானவர் குலங்கள் நுழைந்த இந்த நிகழ்ச்சி,  க்ஷத்திரிய முறைப்படி பூணூல் அணிந்து வேதம் பயின்றனவாக கலிங்கத்துப்பரணி குறிப்பிடும் முதல் குலோத்துங்க சோழனது ஆதரவில் தான்  அதன் முழுமையான முனைப்பை எய்திற்று என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் ராமச்சந்திரன் (பக். 65-66).

சோழப்பேரரசின் வீழ்ச்சி, இஸ்லாமியப் படையெடுப்பை எதிர் கொள்ள தமிழ் மக்களை திரட்ட வேண்டிய அவசியம் இவற்றால் பல சமூக மாற்றங்களைத் தமிழ்நாடு எதிர்கொண்டது.  “கிபி 12-13 ஆம் நூற்றாண்டில் வட இந்தியா முழுமையுமே இஸ்லாமிய ஊழி வெள்ளத்தில் சிக்கித் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தி, தென்னிந்தியாவிலும் இந்த வெள்ளம் பரவவிடாமல் தடுக்கின்ற ஒரு ஜனநாயகக் கூட்டணியே, சம்புவரையர், வாணர் மற்றும் ஹொய்சளர் கூட்டணியாகும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார் (பக். 68).

இந்த சமுதாய அலை மோதல்கள் சான்றோர் சமுதாயத்தின் சமூகவெளியைப் பாதித்தன என்று சொல்லும் ராமச்சந்திரன், நாடார் சமுதாயத்தினரின் பாரம்பரிய அரச குலத்தன்மைக்கு வரலாற்றில் ஒரு தொடர்ச்சி இருந்தமையை பல தரவுகளின் மூலம் காட்டுகிறார்:

அரசகுலம் என்பது போர்த்தொழிலையும் குடிகாவலையும் (’பிரஜானாம் பரிபாலனம்’) தன் பரம்பரை உரிமையாகக் கொண்ட குலம் … தமிழகச் சான்றார் குலத்தில் பேரறமுடையார், அடக்கமுடையார் என்ற இரு பிரிவுகள் உள்ளன என்று கொங்கு நாட்டுத் திருமுருகன் பூண்டிச் சான்றார் மடத்துப் பட்டயம் குறிப்பிடுகிறது. பேரறமுடையார் என்ற பிரிவில் சேனாதிபதி என்ற வடசொல்லின் பிரிவாகிய ஏனாதி, பணிக்கன், எழுநூற்றுவர், வலங்கை உய்யக் கொண்டார் போன்ற பிரிவுகள் இருந்தன என கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. …  வலங்கை உய்யக் கொண்டார் என்ற பிரிவினர் ’வலங்கை உய்யக் கொண்ட வாள்வீரர்’ எனக் கிபி 17 ஆம் நூற்றாண்டு வில்லுப்பாட்டில் குறிப்பிடப்படுகின்றனர். சோழ அரச குலத்தொடர்புடைய போர் வீரர்களான இவர்கள், காளியைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள். கிபி 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த சிங்களாந்தகபுரம் (பெரம்பலூர் மாவட்டம், துறையூர் அருகிலுள்ள ஊர்) கல்வெட்டில் வலங்கை உய்ய கொண்டார் என்ற இப்போர் வீரரின் புராணச் சிறப்பு “ஸ்ரீ அமராவதிக்குத் தலைவர்” என்ற பட்டத்தின் மூலம் குறிப்பிடப்படுகின்றது. இக்குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகின்ற முசுகுந்த சோழன் கதையுடன் தொடர்புறுகின்றது. மகதை நாடாள்வான் எனப்பட்ட வானாதிராயனை ஒடுக்கி வணிகர்களுக்குப் பாதுகாப்பு அளித்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

ஐம்பொழில் பரமேசுவரியைக் குலதெய்வமாகக் கொண்ட ஐந்நூற்றுவர் என்ற வணிகப் பிரிவினர் வலங்கை உய்யக் கொண்டார்களுக்குப் பலவிதமான சிறப்புகள் செய்தார்கள் என்றும் தங்கள் தோளில் அவர்களை தூக்கிச் சுமந்தனர் என்றும் அதனால் வலங்கை உய்யக் கொண்டார்கள் செட்டி தோளேறும் பெருமாள் என்ற சிறப்பு பட்டம் பெற்றனர் என்றும் அறிகிறோம் (பக்.162-3)

சான்றார் குலத்தவர் க்ஷத்திரிய போர்வீரர்களாக மட்டுமல்லாது, அந்த போர்க் கலைகளை சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் ஆசான்களாகவும், தோழர்களாகவும் இருந்தனர். ஒரு கலையில் ஒருவருக்கு ஆச்சாரியனாக இருக்கும் ஒருவர், மற்றொரு கலையில் அல்லது அறிவுத்துறையில் அன்னாருக்கு சீடராகவும் இருக்க முடியும். ராமச்சந்திரன் கூறுகிறார்:

seppedu_copper_platesசேரநாட்டில் சான்றார் பிரிவினர் சேர வம்சத்தவராக இருந்தனர். சேரமான் பெருமாள் அரசர்கள் பனம்பூமாலையை அணிந்த அரசகுலத்தவர் ஆவர். கி.பி எட்டாம் நூற்றாண்டில் இராசசேகரன் என்ற மன்னன் சேரமான் பெருமாளாக இருக்கையில், காலடியில் ஆதிசங்கரர் பிறந்தார். இந்த இராசசேகரன் ”சௌகான்” (சோவன் என்ற ஈழச்சான்றார் பட்டத்தின் திரிபு) குலத்தவன் என்றும், ஆச்சார்யன் (களரி ஆசான்) என்றும், ஆதி சங்கராச்சாரியாரின் நெருங்கிய நண்பனாகவும், பின்னர் சீடனாகவும் இருந்தவன் என்றும், கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மாதவாச்சாரியார் என்பவரால் இயற்றப்பட்ட ”சங்கரவிஜயம்” என்ற சமஸ்கிருத நூல் தெரிவிக்கின்றது. இம்மன்னன் தொடக்கக்காலத்தில் ஆதி சங்கரருக்கு களரிப்பயிற்சியின் அல்லது அங்கக்கலையின் நுட்பங்களைக் கற்பித்தான் எனது நம்மால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஓர் உண்மையாகும். சான்றார் குல மடத்துப் பட்டயமான கருமாபுரம் செப்பேடு, சான்றார் குலத்து முன்னோர் ஒருவரைக் குறிப்பிடும் போது, ‘மன்னருக்கு மன்னராம் சங்கராச்சாரியாருகுக் தயவுடன் உபதேசம் தானருளிச் செய்தவன்’ என்று குறிப்பிடுகின்றது. இக்குறிப்பு இராசசேகரனையும் அம்மன்னன் கற்பித்த அங்கக்கலைப் பயிற்சியையுமே சுட்டுகிறது எனத் தெரிகிறது (பக்.164).

இன்று ஹிந்து வீடுகளிலெல்லாம் கொண்டாடப்படும் நவராத்திரியும் ஆயுத பூஜையும், ஒருகாலத்தில்  பாப்பார சான்றார் எனும் சான்றார் குலப்பிரிவினரின் குல உரிமையாக, ஆயுத பூஜை – காளி வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்தது.  அது கலைமகள் பூஜையாக இடைக்காலத்தில் மாறி,  பின்னர் ஜனநாயக யுகத்தில் காலனிய எதிர்ப்புக் குரலுக்கும் அணி சேர்க்கும் விதமாகப் பரந்து விரிவானது என்று  ஒரு கருத்தையும் முன்வைக்கிறார் ராமச்சந்திரன் (பக். 180-196).

இறுதியாக சில கேள்விகள் எழலாம். இத்தகைய ஆராய்ச்சிகளால் என்ன பயன்? பழம்பெருமை, குலப்பெருமை, சாதிப்பெருமை பேசுவதுதானே இது?

இந்தக் கட்டுரையில் முதலில் கூறியது போல, இந்திய வரலாறு என்பது  குவித்தன்மையற்றது. அது அறிவுலக ஏ.சி. சுவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமல்ல. சனங்களுடன் சடங்குகள், கதைப்பாடல்கள், இறைத் தொன்மங்கள் மூலமாக பகிர்ந்து வளர்க்கப்பட்ட ஒரு கூட்டு நினைவாக விளங்குகிறது.

indian_native_history_2நமது கல்வி அமைப்புகள் மேற்கத்திய அறிதல் முறையையும், மேற்கத்திய வரலாற்றாடலையும் மட்டுமே ஒரே அறிதல் முறையாகவும், ஒரே அறிவு சேகர முறையாகவும் முன்வைக்கின்றன. இதன் விளைவாக, காலனிய கதையாடல்கள் ’வரலாறு’ என்ற பெயரில், இனமோதல்களையும் குழு மோதல்களையும் உருவாக்குகின்றன. அன்னிய ஆயுத வியாபாரிகள் முதல் உள்ளூர் சாதி-அரசியல் பிரமுகர் வரை இந்த சமுதாயப் பிளவினால் லாபமடைகிறார். சமுதாயம் நஷ்டமடைகிறது. இந்தியாவின் வரலாற்றில், சாதி எனும் சமூக-தொழில் குழுமம் ஒவ்வொன்றுக்கும், சமூகப் பெருவெளியில் உயர்நிலைகளும் ஏற்பட்டுள்ளன;  தாழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெருமித வரலாறு உள்ளது. அந்த வரலாறு அந்த சமூகக்குழுவின் தனி வரலாறு அல்ல. பிற சமுதாயக் குழுக்களுடனான உறவுகளுடன் இணைந்து பின்னப்பட்ட வரலாறு. இந்த உறவுகளை உள்ளடக்கிய கதையாடல்களை, இந்திய வரலாற்று மரபு சமரசப் புள்ளிகளின் மூலமாகவே பாவியுள்ளது. மோதல்கள் பெரும்பாலும் தொன்மக் குறியீடுகளாக மாற்றப்பட்டு வரலாற்றுக் கசப்புக்களை உருவாக்க விடாமலும், நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தவும் செய்துள்ளது. இன்றைய வரலாற்று மாணவன் இதையே பெரும் அடக்கத்துடன் இந்திய வரலாற்று மரபிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு தெளிவான எடுத்துக்காட்டைக் காணலாம். அரசகுல சான்றார்களில், பேரறமுடையார் பிரிவில், எழுநூற்றுவர் என்கிற பிரிவு உள்ளது. இந்த ’எழுநூறு’ என்ற எண்ணிக்கை, சிங்கள நாட்டிற்கு 700 வீரர்களுடன் சென்று ஆட்சியைக் கைப்பற்றிய கலிங்க அரசன் விசயனின் தொடர்பைக் குறிக்கின்ற எண்ணிக்கையாக இருக்கலாம் என்கிறார் ராமச்சந்திரன் (பக்.163).  அப்படி என்றால், சிங்களவரும் சரி, தமிழரும் சரி, இருவேறு இனத்தவரல்லர்  என்றாகிறது. ஒருவரோடு ஒருவர் உறவுள்ள சமுதாயக்குழுக்கள். தாயாதிகள். ஆம், வரலாற்று மோதல்களும், இணக்க பிணக்கங்களும் இருந்திருக்கலாம். ஆனால், அந்த வேறுபாடுகள் ஒருவரையொருவர் கொன்றழிக்கும் இனவெறி வேறுபாடுகள் அல்ல. அப்படியானால், சிங்கள பேரினவாதிகளால் கொல்லப்பட்டும், திராவிடம் பேசி உசுப்பேத்திய தமிழக ’உடன்பிறப்புக்களால்’ முதுகில் குத்தப்பட்டும் ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்.

காலனிய, மார்க்சிய வரலாற்று அறிஞர்களோ, இந்திய வரலாற்றினையும் இத்தகைய மோதல் போக்கு கொண்ட ஒரு போர்க்களமாக மாற்றவே முயற்சி செய்கின்றனர். ஒரு தந்திரமான சிறு குழு, அறிவற்ற பெருமந்தையை அடக்கியும், ஏமாற்றியும் வந்ததாகவே வரலாற்றைக் காணவும், சமைக்கவும் முற்படுகின்றனர். அதில் அவர்கள் பல நேரங்களில் பொய்யான கதையாடல்களை உருவாக்கவும் தயங்கவில்லை. இவர்களுக்கு இந்திய வரலாறு பதியப்பட்டு வளர்க்கப்பட்ட விதம் ஏமாற்றம் அளித்ததில் வியப்பில்லை. எனவேதான் காலனிய ‘வரலாற்றறிஞர்களும்’, அவர்களின் கூலிப்படை சந்ததிகளான உள்ளூர் மார்க்சிய அறிவுசீவிகளும், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவில்லை என்கிற அதே கதையை கூறிவருகின்றனர்.

s_ramachandran
நடுவில் நிற்பவர்: எஸ்.ராமச்சந்திரன் (நன்றி: திண்ணை.காம்)

உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள் அவற்றைக் கற்றுத்தேர, அதன் மூலம் நம் வருங்காலத்தைச் சமைக்க நம்மை அழைக்கின்றன. ஆனால் அதற்குத் தேவை எளிய அரசியல் சூத்திரஙகள் அல்ல. கடும் உழைப்பும் தெளிந்த அறிவும். இந்த உழைப்புக்கும் அறிவுக்குமான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ‘வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்’. வரலாற்று, சமூகவியல் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பண்பாட்டு மீட்டெடுப்பில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் முக்கியமாகப் படித்து விவாதிக்க வேண்டிய நூல் இது.

வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்
ஆசிரியர்: எஸ்.ராமச்சந்திரன்
வெளியிட்டோர்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பக்கங்கள்: 215, ஆண்டு: 2004, விலை: ரூ 70.

21 Replies to “சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்”

 1. Pingback: Indli.com
 2. AD 52 லேயே, யூதக் கும்பல் ஒன்று மலபார் பகுதிகளில் வந்துவிட்டதாகக் குறிப்பிடப்படும், அயிரோப்பிய வரலாற்றுப் புத்தகங்கள் அவர்களைத் தொடர்ந்து அராபியர்களும் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டார்கள் என்று இருக்கும் போது, நிறுவனப்படுத்தும் எண்ணமே இல்லாமல் இருந்த இந்திய மக்களின் வாழ்க்கை, மிகவும், எளிமையாகவே இருந்தபோது, முன்னேற்றம் என்ற பெயரில், ஆசை காட்டி, இந்திய மக்களை, தன்மானமிழக்கச் செய்ததில், அனைத்துப் பங்கும்,அனைத்து அராபியருக்கும் ஆயிரோப்பியருக்கும், எப்படிப்பட்ட பேரறிஞ்சறாக இருந்திருந்தாலும் உண்டு. இது ஒன்றே போதும், அராபியரும் ஆயிரோப்பியரும், கொடு மதி கொண்டவர்கள் என்பதற்கு நிரூபணம். இதே கொடுமதியாளர்கள், சூத்திரர்கள், பரம்பொருளின் பாதத்திலிருந்து/காலிலிருந்து வந்தவர்கள் என வேதங்களும், வேதாங்கங்களும் கூறுவதை, சூத்திரர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகக் கற்பித்தபோது, அதே வேதங்களும், வேதாங்கங்களும், மற்றும் அவற்றின் அடிப்படையில் இயற்றப்பட்ட பல்வேறு நூற்றொகுதிகளும், அதே பரம்பொருளின் பாதங்களை அடைவதைத்தான், பிறப்பின் முழுப் பயன், கால்களில் வீழ்ந்து வணங்குவதுதான், உயரியது, பாத சேவை, பாட தூளி ஆகியனவே உயர்ந்தது என்பதைக்கூறியதையும், உடலின் அங்கங்களில், பாதம் என்பது, தலையைப்போலவே, இயல்பான ஒரு அங்கம் என்பதையும், கொடுமதியால் மறைத்தனர் என்பதும் மாறாத உண்மைகள். கால் சராயும், கழுத்துப்பட்டையும், தலைக் கவசமும், விலங்குத்தோல் செருப்புக்களும் அணிந்து வாசனை திரவியங்கள் தெளித்துக் கொண்டால் மட்டுமே, உன்னதமாகிவிட்டோம் என்ற உன்மத்தக்காரர்கள் அராபியர்களும் ஆயிரோப்பியர்களும்.

 3. மதிப்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு,

  ஆங்கிலேயர்களின் பிடிக்குள் இலங்கை வருவதற்கு முன்னுள்ள வரலாற்றைப் பார்த்தால் தென்னிலங்கைப்பகுதி (சிங்களமக்கள் செறிந்துள்ள பிரதேசம்)தமிழரசர்களான எல்லாளன், போன்றோரினதும் வடபுலமான (அதிகம் தமிழர்கள் வாழும் பிரதேசம்) செண்பகப்பெருமாள் போன்ற சிங்கள மன்னர்களின் ஆட்சியின் கீழும் இயல்பாக இருந்திருக்கிறது. இடைக்கிடை ஏற்பட்ட பிணக்குகளையும் யுத்தங்களையும் அரசுகளுக்கிடையான பிணக்குகளாகக் கருதலாமே ஒழிய அவை இனமுரண்பாட்டைக் குறிப்பனவாகா.

  1815 வரையிருந்த கண்டிராச்சியம் என்ற இலங்கையின் இறுதியரசு தமிழ்மன்னனான இராஜசிங்கனின் ஆளுகைக்குள்ளேயே இருந்துள்ளத. இவ்வரசைக் காப்பாற்ற சிங்கள மக்கள் கூட பகீரதப்பிரயர்த்தனம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் அதனைக் கைப்பற்றி விட்டது.

  இப்படி ஒன்றித்திருந்த இரு இனங்களின் சமய, பண்பாட்டு, வாழ்வியலும் பாரிய வேறுபாடுகளற்றது. தற்போது கூட இலங்கையின் பிரபல இந்து ஆலயங்களில் ஏராளமான சிங்கள மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விபூதியணிந்து பூஜை வழிபாடுகளில் இணைந்து பங்கேற்பதைக் காணலாம்.

  இது இவ்வாறிருக்க. தாங்கள் கூறுவது போல மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வும் அதனை தங்கள் சுயலாப வாக்கு வேட்டை அரசியலுக்காக பயன்படுத்திய அரசியல்வாதிகளின் தந்திரோபாயமுமே இன்றைய பேரழிவிற்கும் இனமுரண்பாட்டிற்கும் காரணம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

  சூத்திரகுலம் இழியது என்று ஆங்கிலேயர் சொல்லித்தர முன் எவரும் அப்படிக் கருதவே இல்லை. பெரியபுராணத்தில் ‘இளையான் குடி மாற நாயனார்’ புராண முதற்பாடல்

  ‘அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடிசூடுவார்
  தம்பிரான் அடிமைத்திறத்துயர் சாற்று மேன்மை தரித்துளார்
  நம்பு வாய்மையின் நீடுசூத்திர நற்குலம் செய்தவத்தினால்
  உம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார்’

  இது தான் இளையான் குடி மாறரை சேக்கிழார் செய்யும் அறிமுகமே… (நம்பு வாய்மையின் நீடுசூத்திர நற்குலம்) இப்படி நம் இலக்கியங்களிலும் இது பற்றி நிறைய நிறையச் செய்திகளைப் பெறலாம் என்று கருதுகிறேன்.

  ‘வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்’ என்ற நூல் இவ்வகையில் பயனுறுதியுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

 4. திரு.அரவிந்தன் நீலகண்டன்,
  ஒரே விதமான பார்வையை கொண்ட இரு குழுக்களை கூறினீர்கள்.
  மார்க்ஸிய கொரில்லாக்களை பொறுத்தவரை, இன்று உள்ளவர்களும் அதே
  மரபுகளை மதிக்காத பார்வையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ஆனால்
  மேற்கத்திய பார்வையின் இன்றைய நிலையும் இவ்வாறுதானா?

  வரலாற்றை பார்க்கும் பார்வை ஒரு புறம் இருக்க, இன்று நான் மற்ற சமுதாயங்களை மேற்கத்தியர்கள் பார்க்கும் பார்வையில் சில
  மாற்றங்களையாவது காண்கிறேன்.

  -அறிவியல் கூறும் பரிணாமவியல் உண்மை என்றே பெரும்பாலானோர்
  கருதுகின்றனர்.

  -புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் எந்த துறையாக இருந்தாலும்,
  பழைய விளக்கங்களை மாற்றிக் கொள்ள இன்றைய மேற்கத்தியர்கள் தயங்குவதில்லை என்றே நம்புகிறேன்.

  -அமேரிக்க அதிபர் தேர்தலில் திரு.ஒபாமா வெற்றி அடைந்ததே அந்த
  சமுதாயத்தின் மாற்றத்தை தெளிவாக காண்பிக்கிறதே. வெறும் 12 சதவிகிதம் உள்ள கருப்பின சமூகத்திலிருந்து ஒருவர் அமேரிக்காவின்
  அதிபராக பதவியில் வர முடிந்துள்ளதே இதற்கு உதாரணம் அல்லவா?

  வரலாற்று ரீதியில் மேற்கத்தியின முன்னோர்கள் அட்டூழியங்கள்
  புரிந்துள்ளது உண்மை என்றாலும், இன்றைய மேற்கத்தியர்களின்
  நிலையை உங்களின் அடுத்த கட்டுரைகளில் விளக்குமாறு கேட்டு
  கொள்கிறேன்.

 5. ஸ்ரீ எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது.

  இவர் நாடார் சமூஹத்தினரின் க்யாதி மிகுந்த சரித்ரத்தை சரியான ஆதாரங்களுடன் தொகுத்து நாடார் சமூஹத்திற்கு மட்டுமன்றி ஒட்டு மொத ஹிந்து சமூஹத்திற்கு சேவை செய்து இருக்கிறார்.

  குறிப்பாக வெள்ளை பரங்கியரால் ஹிந்துஸ்தான சரித்ரத்தில் உள்நோக்குடன் நுழைக்கப்பட்ட பரஸ்பர சமூஹ த்வேஷ கோட்பாட்டுக்கு நேர் எதிராக பிற சமூஹங்களுடன் இருந்த பரஸ்பர ஸ்நேக பாவத்தை பதிவு செய்திருப்பது மிக முக்யமான பதிவு.

  ராஜசேகர சேரமான் பெருமாளுக்கும் ஆதி சங்கரருக்கும் இருந்த ஸ்நேகம பின்னர் சேரமான் அவருக்கு சிஷ்யானாகியது போன்ற செய்திகளை மாதவீய சங்கர திக்விஜயம் மூலம் பதிவு செய்தது அவரது ஆதாரங்களுக்கு புஷ்டி சேர்க்கிறது.

  இந்த சமயத்தில் ஸ்ரீ தமிழ்செல்வன் அவர்கள் இதே இணைய தளத்தில் பரங்கிப் பாதிரியார் கால்டுவெல் அவர்கள் இந்த சமூஹத்தினரை பற்றி உள்நோக்குடன் அவதூறாக எழுதியதையும் அதனால் அக்காலத்தில் கலஹம் ஏற்பட்டது என்றும் பதிவு செய்துள்ளது நினைவுக்கு வருகிறது.

  \\\\\\\\\\\\\\\\\வரலாற்றை பார்க்கும் பார்வை ஒரு புறம் இருக்க, இன்று நான் மற்ற சமுதாயங்களை மேற்கத்தியர்கள் பார்க்கும் பார்வையில் சில
  மாற்றங்களையாவது காண்கிறேன். \\\\\\\\\\\\புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் எந்த துறையாக இருந்தாலும், பழைய விளக்கங்களை மாற்றிக் கொள்ள இன்றைய மேற்கத்தியர்கள் தயங்குவதில்லை என்றே நம்புகிறேன்.\\\\\\\\\

  shri.balaji, sorry to share my thoughts in English for better articulation of facts.
  I differ from your above quoted views with specific stress about the fact of “Indologists”. Earlier, the colonial whites wrote Indian history and histories of other places of the world with the specific intention of ruling over these people. With this objective, and their derived principle of “Divide and Rule”, world history was concocted by the colonian whites. I do not have much of information as to what the rest of the world has done to refurbish these concocted histories.

  As far as Indian History and Hindu scriptures are concerned, westerners are continuing with their deceitfulness by institutionalising the pro white church oriented distortions of Indian history and Hindu Scriptures by having established “Indology”. Indologists study our scriptures not for the purpose of understanding them as they are but for the specific purpose of intentionally misinterpretting them to suit to their white church Agenda of “Biblical God the only true God Biblical Truth is the only truth; all else to be liquidated lock, stock and barrel”. True there were people who were well intended and exceptional to this avowed rule. But note they were few. And these people are continuing with their durty jobs and are continuing to be supported by Indian Intellectuals.

  The recent infamous visit of indologist, Shri.Michael Witzel and his blaberring on Indian soil about Rig Veda and the way he was humiliated were written about in this forum and in vijayvaani. Ofcourse, the fact that the likes of these sort of people survive with the help of otherwise learned people like respected Iravatham. Mahadevan for reasons they better know has also been deliberated in these write ups.

  \\\\\\\\\\\\\இந்திய வரலாறு என்பது (படையெடுத்த அன்னிய) ஆரிய – (தோற்கடிக்கப்பட்ட பூர்விக) திராவிட இனங்களின் போராட்ட வரலாறாகவே முன்வைக்கப்பட்டது.\\\\\\\\\\\

  ஸ்ரீ அரவிந்தன், வரலாறு என்பது யார் எழுதினாலும் நடந்தது நடந்த படி எழுதப்பட்ட பதிவுகள் என்று நம்புவதற்கு கஷ்டமாக உள்ளது. எழுதுபவர்களின் பக்ஷ பாதங்கள் கலந்த குவியல் தான் வரலாறு என்பது எம் கருத்து.

  ஸ்ரீமான்கள் ஐராவதம் மகாதேவன், இரா வீழிநாதன் , இர்பான் ஹபிப் ஸ்ரீமதி ரொமிலா தாபர் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அவரவர் எழுத்துக்களில் அவரவர் pre conceived notions, well or good intended objectives இவையெல்லாம் இவர்களது எழுத்துக்களில் கலந்தும் பிரதிபலித்தும் உள்ளது என்பதும் எம் கருத்து.

  ஸ்ரீ.அரவிந்தன், again sorry for my switch over to English.

  Since I have read some of your write ups in this forum and tamizh paper, I want to share your ideas about the frequently used phrase “professional historian” by JNU brand of historians. Often to demean and humiliate the papers of those historians who does not belong to their tribe they pin pointedly say that these people are not “Professional historians”

  Professional Engineers, Doctors, Chartered Accountants – I can recognise by virtue of their degrees. But is there any yardstick by which people categorise historians as “professionals” and otherwise. அல்லது இந்த விஷயம் கழக கண்மணிகள் தமிழன் யார் என்று தீர்மானம் செய்யும் அதிகாரம் தங்களுடையது என்பது போன்ற எதேச்சாதிகாரமா?

 6. ‘-அமேரிக்க அதிபர் தேர்தலில் திரு.ஒபாமா வெற்றி அடைந்ததே அந்த
  சமுதாயத்தின் மாற்றத்தை தெளிவாக காண்பிக்கிறதே’
  …………..
  அறிவு ஜீவிகள் அதிகம் கொண்ட மலையாள தேச மக்கள் போலவே தான், அமெரிக்கர்களும், ஒபாமாவைத் தேர்ந்தெடுத்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்களேயன்றி, சமுதாய மாற்றம் எல்லாம் அடைந்துவிடவில்லை. காம்ரேடுகளின் அட்டகாசம் பெரிதானால், இஸ்லாமிய+கிறித்துவ வாஞ்சையில், காங்கிரசுக்கு வோட்டுப்போடும் மாக்களைப்போல்தான், புஷ்ஷின் பாபங்களுக்கு, ஒபாமாவை பிராயச்சித்தம் செய்யச் சொல்லி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? ,

 7. சான்றோர் குலத்தின் பெருமைகளை படிக்கும் போது உள்ளம் பூரிக்கிறது. காளியை மறந்தோம் இழி நிலை அடைந்தோம் என்பதே உண்மை.
  தமிழ்நாட்டில் அளப்பெரிய தொண்டு புரிந்து நாடார்களுக்கு அவர்களது உண்மையான பாரம்பரியத்தை மீட்டுத்தரும் தமிழ் இந்து தளத்துக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

 8. //புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் எந்த துறையாக இருந்தாலும், பழைய விளக்கங்களை மாற்றிக் கொள்ள இன்றைய மேற்கத்தியர்கள் தயங்குவதில்லை என்றே நம்புகிறேன்.//

  This is not a new phenomenon. Max Muller regretted for all the damages that he had already done. There were indologists like Voltaire, John Wallis, Giovanni dominique Cassini, Abraham Rogers and many more who looked at our scriptures with awe. These incidents might be more nowadays only because of the advancement in the archaeometry and more evidences being earthed out. Still there are people like Witzel and Doniger who close their eyes and just blabber whatever it comes to their mouth.

 9. \\\\\\\\\\\\\Max Muller regretted for all the damages that he had already done. There were indologists like Voltaire, John Wallis, Giovanni dominique Cassini, Abraham Rogers and many more who looked at our scriptures with awe. \\\\\\\\\\\\\\\\\

  thanks for sharing the fact that there are many indologists who looked at our scriputures with awe. Regarding Max Muller, the damage that he had done by misinterpretation is so awful that what is frequently talked about are the damages which comprise of volumes of his scholarly works whereas the regret is perhaps his conviction (thanks to your sharing of this fact, I am not aware of such). May be what speaks for Max Muller is the works he had left behind and not his benign conviction.

 10. krishnakumar
  25 November 2010 at 4:56 pm

  ஸ்ரீ எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது.

  இவர் நாடார் சமூஹத்தினரின் க்யாதி மிகுந்த சரித்ரத்தை சரியான ஆதாரங்களுடன் தொகுத்து நாடார் சமூஹத்திற்கு மட்டுமன்றி ஒட்டு மொத ஹிந்து சமூஹத்திற்கு சேவை செய்து இருக்கிறார்.

  Mr.எஸ்.ராமச்சந்திரன் I apriciate your attempts.but you do not spoil the original tamil history.the Sanars came from Srilanka.they originated from Sinhala Tody makers cast.they also call as Saanas.eela saanars were the teachers for latest Tamil kings Troops in tamil naadu. some of them Mr.Senathiryar.even today The eela saanars are living In Jaffna Srilanka.
  Vijajyakumar
  From Jaffna Srilanka

 11. ஒரு தொன்மையான தமிழ் சமூகத்தின் ஆணிவேரை கண்டறியும் முயற்ச்சியில் ஈடுபட்டு பல புதிய செய்திகளை கொண்டுவந்த திரு.ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
  எந்த சமூகமும் குறைந்தது அல்ல, அதன்வரையில் ஒரு பெருமிதமான கடந்தகாலம் இருந்துள்ளது.
  நாடார் சமூகமும் அவ்வாறே.. திருவிதாங்கூர் மன்னன் திரும்பவும் அரசுரிமை பெற உதவிய மார்த்தாண்ட வர்மா முதல் நட்டாத்தி ஜாமீன் வரை, மகமை வசூலித்து உறவின்முறை நிர்வகித்தது முதல் அதைக்கொண்டு தனி கோவில்,கிணறு,கல்விசாலைகள் கட்டி அவற்றையும் ஊழலின் நிழல் கூட படாவண்ணம் நடத்திவருவது வரை அவர்கள் அரசாண்ட ஆதி தமிழர்கள் என்பதற்க்கான சாட்சியே. மதமாற்ற பாதிப்பிருந்தும் , அவர்களின் பொது நிறுவனம்,கோவில்களில் பெருமையுடன்” க்ஷத்ரிய குல இந்து நாடார் உறவின்முறை” என்றே குறிப்பிடுகின்றனர்.
  மதமாற்றம் செய்ய வந்த சில அந்நிய நபர்களால் திரித்துக்கூறப்பட்டு, இன்று உண்மையான வரலாற்றை கண்டுகொண்ட பல சமூகங்களில் இதுவும் ஒன்று.

 12. இது ஒரு வரலாற்று திரிபு. குலோத்துங்க சோழனை பற்றிய ஆசிரியரின் அறியாமையை என்னவென்பது. சோழர்கள் நாடார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நாடார்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள். சாணான் வேறு சான்றோர் வேறு. சோழநாடு சோறுடைத்து தொண்டைநாடு சான்றோருடைத்து என்பது தான் வாக்கு. உண்மையில் சான்றோர் என்பார் பல்லவர்களே. பொருளாதாராத்தில் ஒரு சமுதாயம் முன்னேறிவிட்டால் பழமையெல்லாம் மறந்துவிடக்கூடாது.

 13. Your article is not proving “Nadars” are from “Kshatriya” origin. The history is true fact. The word “Nadar” is used in very later period. The earlier name of the “Nadars” was called as “Ezhavar”, which are found in valid/authentic copper plates and inscriptions published by the authority.

  The Vellore palayam copper plate of the Pallava King “Nandivarman-III” dates back to 8th century A.D, mentions about the “Ezhavas” and their tree climbing profession. Line 61 & 62 of the copper plate :

  “Thengum Pannaiyum evargal manamindri Ezhavar eraperadaragavum”.

  Which means, in Brama deiyam lands without permission of the authority, the tree climbers “Ezhavar” not to climb in the trees of coconut and palmyra”.

  Similarly, the 10th & 11th century copper plates such as “Easalam Copper Plates”, “Thiruvalangadu Copper Plates” pertaining to the Chola King Rajendra Chola-I and the recent discovered, the India’s biggest copper plate “Tiruvindalur Copper Plate” pertaining to the Chola King Rajendra Chola-II speaks about “Ezhavar and their tree climbing profession”.

  The “Enathi Nayanar” one of the 63 nayanmars hails from the “Ezhavar community” referred in literature by Nambiandar Nambi as “Ezha Kula Deepan”. The well known 12th century A.D. poet “Sekkilar” also denotes the same.

  The year 1374 A.D. inscription, (South Indian Inscriptions Vol-VIII No.400) refers “Nadar community” name as “Sanar”. Accordingly, the Kanyakumari (Thovalai) inscription refers “Nadar community” name as “Sanar” (Kanyakumari Inscriptions Vol-5, No.1969/33).

  The “Thirumuruganpundi copper plate” of 16th century A.D, released by Tamil Nadu Archaeology Department, speaks about “Sanar and their history”. Similarly the, Tamil Nadu Archaeology Department released “Tharangampadi Oolai Avanam” speaks in detail about “Sanar and their tree works”.

  In the hymns of “Kabilar Agaval” Nadars are mentioned as “Kaveripumpattanathil Kalveliangar cheriyil Sanaragathanil uruvai valarthanal”. This hymns refers “Sanar and their toddy works”

  The Kottaiyam Siriyan Christian Copper Plate-I speaks about “Sanar and Ezhavar” as synonyms. Many inscriptions/copper plates refers about “Ezham Putchi”, one of the levy collected from the “Sanars”

  The book ‘Idangai Valangaiyar Varalaru” of 18th century A.D, published by Tamil Nadu Government Oriental Manuscripts, the page 81 & 82 speaks about “Sanar and their tree climbing works”. In that, the title “Nadar” given to few peoples.

  In the “Thattaparai Vanitham Pattaiyam” copper plate of the year 1780 A.D, the “Sana Nadargal” is mentioned. In the “Virudunagar District Inscriptions : Vol-I, published by Tamil Nadu Archaeology Department, from inscriptions No.296/2005 to 302/2005, in the year between 1830 to 1886, the title “Nadar” is mentioned with out saying “Sanar”.

  According to Tamil Lexicon “Ezham” means “Toddy”. So, from the above mentioned valid records from 8th century onwards, the “Nadar” community people involved in their profession only and not as a rulers. History is true fact. The word “Nadar” is of later origin, it means “a country man” but not a “Kshatriya Ruler”.

 14. The “Kshatriyas” are “Vanniyas”, “Surutiman” and “Nattaman” only. (According to “Varnasirama Dharma” they are the rulers).

  The “Vanniya Kula Kshatriya” Chieftains/Feudatories during chola period are as follows. These Chieftains/Feudatories had very close matrimonial relationship with imperial cholas, the great “Kshatriyas” of Southern India.

  The “Kadavarayars” mentioned in the cholas inscriptions, as “Palli” and “Sambu Kulam” by caste. The “Sambuvarayas” mentioned in the cholas inscriptions, as “Palli”, “Vanniyan” and “Sambu Kulam”. The “Malayamans” mentioned in more than 10 cholas inscriptions, as “Vanniyan”, “Vanniya Nayan” and “Vanniar” (very close relatives of Sambuvarayas). The “Paluvettaraiyar” mentioned in the cholas incriptions/copper plate, as “Kerala Kings” (Cheras}, and the relatives of “Mazhavars” & “Kolli Mazhavars” (Ori king line). Many of their kings name such as “Kandan Maravan” means the “The real warrior”. The “Tundanadudaiyar” of 10th century A.D. mentioned in the cholas inscriptions, as “Palli” by caste and they are considered at par with “Vanagovaraiyar”. The “Vannadudaiyar” of 10th century A.D. mentioned in the cholas inscriptions as “Palli” and “Surutiman”. The “Irungolars” of 10th century A.D. mentioned in cholas as “Palli” and “Surutiman”. The “Pangalanattu Gangaraiyar” of Pallava/chola times mentioned in cholas inscriptions as “Vannian”. The “Nilagangaraiyar” mentioned in the cholas inscriptions/Later copper plates, as “Palli”. “Vanniya Nayan” and “Sambu Kulam”. The “Vanagovaraiyars” mentioned in the cholas/Pandiyas inscriptions as “Palli”. “Vanniyan”. The “Mazhavarayars” mentioned in the cholas inscriptions as the close relatives of imperial cholas and the year 1511 A.D, copper plate refers them as “Vanniyas”. Their descendants “Ariyalur Chieftains” mentioned in copper plate/documents/poems as “Palli” and “Vanniyan”. The “Kadanthaiyar Chieftains” mentioned in the cholas inscriptions with the title “Mutharaiyar”. They are “Palli” by caste according to “Aduthurai” cholas inscriptions. The year 1511 A.D. copper plate refers them as “Vanniyas” along with “Mazhavarayas”.

  The splitted groups of “Vanniyas” are “Surutiman” and “Nattaman”. The year 1009 A.D, Uttattur cholas inscription of Raja Raja Chola-I, clearly mentioned about “Surutiman Peruman Palli (alias) Periyavel Muttaraiyan” (Surutiman Peruman Palliyana Periyavel Muttaraiyan). He is obviously “Vanniya” by caste and also “Surutiman”. According to Tamil Lexicon, the word “Suruti” means both “Split” and “Learned men”. The “Learned Men” cannot be taken for the word “Surutiman”, Since, during the period of the chola king “Rajendra chola-I, in the year 1015 A.D, “Surutiman Nakkan Chandiran (alias) Rajamalla Muttaraiyan attacked the royal elephants of Satyasraya, the Chalukya King in the battle of Kadakkam and lost his life”. Such a “War Heros” Surutiman cannot be placed under “Learned men”. The “Uttattur” (Ariyalur Dist) is the place where, the large numbers of “Surutiman” community people are still living from the chola times. During the period of Kulotunga chola-III, the “Surutiman” told a story in a inscriptions, that they came from “Agni” to destroy two demons. This story is similar to “Vanniya Puranam”. More over, the “Irungolar Chieftains” mentioned in chola inscriptions as “Palli” and “Surutiman”. Similarly, the “Vannadudaiyar Chieftains”. The eminent scholar Dr. L. Thiyagarajan, states that, “During the region of Vikrama Chola (1118 – 1136 A.D) and of his successors, inscriptions give enough information to show the “Palli” and “Surutiman” castes of this region (Ariyalur & Perambalur) supplied Soldiers, Officials and Generals to the Chola Government and enjoyed status in the contemporary society”.

  The “Nattaman” mentioned in chola inscriptions as “Yadava Kulam”, which means “Velirs”, the “Kshatriyas”. The Rajendra Chola-I and Rajendra Chola-II, inscriptions mentioned the “Malayaman Kings” belonged to “Bhargava Gotra” and had the title “Yadava Kula”. The “Yadava Kula”, Hoysala king Vira Vallala Deva-III, mentioned as “Vanni Kula/Agni Kula” in the 14th century authentic work “Arunachala Puranam”. The “Hoysalas” are the descendants of “Agni” born line of “Rastrakutas” and “Chalukyas”. That is why, the imperial cholas had the matrimonial relationship with them.

  The cholas descendants are “Pichavaram Poligars” (Royal Family). They are entitled to crown in the “Thillai Natarajar Temple”, the family deity of imperial cholas. Others are not entitled for the same is clearly mentioned in the hymns of “Periya Puranam” of 12th century A.D written by the noted poet “Sekkizhar”. The “Pichavaram Cholas” are mentioned in their documents as “Kshatriya” by caste. The “Umapathi Sivacharya” one among the “Thillai Dikshidars”, period “Parthavanam Mahatmiyam” and “Rajendrapura Mahatmiyam” published by the “Madras Sanskrit College” clearly says about the chola king “Vira Varma Chola of Pichavaram”. That is why, the “Thilla Dikshitars” used to crown to “Pichavaram Chola Royal Family”.

 15. Irukuvelirs are the “Velir Clans” who ruled Kodumbalur region in the Sangam period and also later period. The another sect of “Velir Clans” of the Sangam period who ruled from “Pidavur” (Modern Pudaiyur Kattumannarkudi of Kadalur Dist). A territory called “Irungolappadi” which existed comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudhachalam taluks on both the banks of the Vellar river was ruled by the Chiefs of “Irungolar Royal Family” during imperial cholas period.and had marriage alliance with them.

  According to cholas inscriptions they are called as “Palli” (Vanniyas) / “Surutiman” (Moopanar) by caste.

  Kulothungacholiyar, daughter of “Navalur Irungolar” and wife of “Tundarayan Thiruchirrambala Udaiyar” of Tenur.

  A line of Chieftains/Feudatories who ruled the Ariyalur region during imperial cholas period was called as “Tundanadu Udaiyar” and “Tundaraiyan”. They are “Palli” by caste.

  During the period of Virarajendra Chola (1067 A.D), “A lady named Marutandaki setup a lamp in the siva temple for merit of “Pakkan Senni” who was a son of “Kuttan Pakkan (alias) Jayankonda Chola Tunda Nadalvan” a “Palli” of Karaikkadu.

  “Tundanaudaiyar Cholakula Sundran Kalyanapuramkondan” (Conquerer of Chalukyas). He called as “Tenur Udaiyan” during the period of Kulotunga Chola-I. These Chieftains/Feudatories are considered at par with “Vanagovaraiyars”.

  “Tunda Nadu Udaiyan Ekavasagan Kulotungan (alias) Pillai Vanagovaraiyan” (1180 A.D).

  “Tunda Nadu Udaiyan Ekavasagan Ulagukanividutta Perumal (alias) Vanagovaraiyar” (1184 A.D).

  An officer of “Palli caste” named “Sendan Suttamallan (alias) Vanagovaraiyan” received a land called Tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D. His another record in Aduturai (1130 A.D) mentions that he guilded the “Tiruchchirrambalamudaiyar temple” with Gold”.

  During the region of Kulotunga Chola-I, “Palli Sengeni Senapati Vanarajar” also appears. The Nandi copper plates of Rashtrakuta Govinda III (A.D. 806) mentions “Kshatriya Mahabali Banaraja”.

  In view of the above, “Irungolar Chiefs” are “Palli” / “Surutiman” by caste. The “Tunda Nadu Udaiyar” chiefs considered at par with “Vanagovaraiyar Chiefs” are “Palli” by caste and they had very close matrimonial relationship with each other and also with imperial cholas.

  The eminent scholars “Tudisai Kizhar Chidambaranar”, Thiru. Natana Kasinathan, Noboru Karashima agrees that ‘Palli” and “Surutiman” are from same clan.

 16. முரளி நாயக்கன் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழில் எழுதலாம்.ஆழ்ந்த தெளிவான சொற்களும் எழுத்துக்களும் தமிழில் இருக்கும் போது ஆங்கிலனுக்கு வாரிசுபோல நாடார்களை மதம் மாற்றம் செய்ய பொய்க் கதைகளை எழுதி உலவவிட்ட கார்டுவெல்,போப்,ஹார்டுகிரேவ் போல எழுதக்கூடாது.ஏராளமான பட்டயங்கள் ,ஆவணங்கள் உள்ளன.கல்வெட்டுக்கள் உள்ளன.இவ்வாறு அடுத்தவரின் ஆய்வுக்கட்டுரை,நூல் மதிப்பீல் குள்ளநரி போல் அந்த காலத்தில் நாயக்கன் செய்த வேலையைச்செய்யாதே.உனது பக்கத்தில் உனது வெப்பில் நாயக்கனுக்கும் மற்றவர்களுக்கும் துதிபாடு .எந்த ஒரு இனத்தையும் வசை பாடாதே.

 17. ஆரியர்களின் ஒரு பகுதியே குடி-சான்றோர் எனப்பட்டனர் இவர்கள் இமயமலை தொடர்களில் வசிப்பவர்கள் ஆரியபடையில் பெரும்பான்மையினர் குடிமக்கள் .தமிழ் நாட்டின் பெருமையினை அழித்த ஒரு குழுமம் நீங்கள். வரலாற்றைபடி பின்பு கட்டுரை எழுதலாம்.

 18. நீங்கள் போர் மறவர் என்றால் ஏன் சாணார்,நாடார் என்றிர்கள் மறவர் என்று பெயர் பெற்றிருக்கலாமே. தமிழின் ஐந்தினைகளில் நீங்கள் யார் என்ன குலம்தெய்வம் பின்பற்றுகிறீர்கள் .சேரபடையில் அம்பு வில் செய்பவர்கள் நீங்கள் நாயர் சாதியை உற்று நோக்கினால் நீங்கள் யார் என தெரியும் யானை மேய்பவர்கள்.

 19. ஆதியில் உலக உற்பத்திக்கு காரணமான லிங்கத்தையும் யோணியையும் வழிபட்டு வந்த வந்தனர்.
  சான்றோர்களோ தமது மூதாதையர்களை வழிபட்டு வந்தனர்.
  அதன் தொடர்பே இன்றும் நாம் வழிபடும் கனனி வழிபாடு.
  பின்னர் பரிணாம வளர்ச்சி காரணமாய் குப்தர்கள் காலத்தில் இறைவனுக்கு உறுவம் கொடுத்தனர் அதை நாம் ஏற்றுக்கொண்டு இன்றளவும் கடைபிடிக்கிறோம்.
  குப்த பேரரசு ஏற்பட்டிறாவிட்டால் நாம் பண்டைய வழிபாட்டு முறையை மட்டுமே கடைபிடித்திருப்போம்.
  ஆயிரம் உருவ வழிபாட்டு முறை ஏற்பட்டிருந்தாலும் நாம் நமது வழக்கத்திலிருந்து வழுவாதபடி கார்த்திகை பொருக்கு என்ற பெயரில் கன்னி வழிபாட்டை தொடர்ந்து நடத்தி வருவதன் மூலம் நமது வரலாற்றை நம்மை அறியாமலே காத்து வருவது நமது சத்திரிய தர்மமாகும்.
  அதுபோலவே பல இனத்தவர்கள் தாம்தான் சேர சோழ பாண்டிய வம்சத்தவர்கள் என்று கூறி வரலாற்றை திரித்து வருகின்றனர்.
  அவர்களது கூற்று உண்மையாகவே ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும், அவர்கள் வாதம் பொய் என்று நிறுபிக்க சிறிய எடுத்துக்காட்டு போதுமானது.
  ஏனெனில் எவ்வளவுதான் வேடமிட்டாலும் ஒருசில பழக்கவழக்கங்களை மாற்ற இயலாது,
  அதில் ஒன்று தாலியாகும்.
  தங்கம் அக்காலத்தில் சத்திரிய அரசர்களுக்கு மட்டுமே உரியதாய் இருந்தது அரச இனத்தவர்கள் மட்டுமே தங்கத்தில் தாலி அணிந்தனர்.
  மற்றவர்கள் மஞ்சல் கயிற்றை அணிந்தனர்.
  வேறு சிலருக்கோ தாலி கட்டு திருமணமே இல்லாதிருந்தது.

  தாலிகட்டு கல்யாணம் இல்லாதிருந்தது என்பதை தெளிவிக்க 12 மற்றும் 13-ம் நூற்றாண்டின் கல்லிடைக்குறிச்சி மற்றும் திருவிதாங்கோட்டு கல்வெட்டுகளில் “நம் வீட்டு பெண்டுகளை வெள்ளை நாடார்கள் கையாள அனுமதிப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் தெளிவாகும்.

  அதுபோலவே அரச வம்சத்தவர்களாக கூறிக்கொள்ளும் இனத்தோர் பலர் என்னதான் செல்வத்தில் மிகுந்திருந்தாலும் அவர்களது பண்டைய வழக்கப்படி மஞ்சள் கயிற்றையே தாலியாக அணிகின்றனர்.

  காலத்துக்கு ஏற்ப மாறினாலும் “தாலி பிரித்து கோர்த்தல் என்ற புதுமையான சடங்கை ஏற்படுத்தி தாலியை தங்க குழலில் கோர்க்கும் செயலை செய்கின்றனரே தவிர்த்து முழுமையான தங்கதாலியை கலியணத்தின்போதே அணிவது இல்லை இது 1500 மற்றும் 1700 களில் மதுரையை ஆண்ட நாயக்க அரசர்களுக்கும் பொருந்தும்.

  சான்றோர் குலமென்ற அரச குலத்தவரான நாடான்களாகிய நாம் மட்டுமே பண்டைய வரலாறு மாறாமல் எவ்வளவு வரியவரானாலும் தங்கத்திலான தாலியை கலியாணத்தில் அணிவிக்கிறோம்.

  இது ஒன்றே நாம் சத்திரியர் என்பதற்கும் சேர சோழ பாண்டிய வம்சாவளியினர் என்பதற்க்கும் போதுமானதாகும்.

  இதுவே நம்மை அறியாமல் நாம் காக்கும் நமது வரலாறாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *