அச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]

அச்சுதனின் அவதாரப் பெருமை பகுதி 1, பகுதி 2 , பகுதி 3, பகுதி 4

(தொடர்ச்சி…)
விச்சக்கரவர்த்தி கம்பர் தம் பெருங் காப்பியத்தில் வேதாந்தத் தத்துவத்தை விளக்கவல்ல பல அரிய பெரிய பக்திப்பாடல்களை விராதன், கபந்தன், இந்திரன் முதலியோர் வாய்மொழியாகச் சேர்த்துள்ளார். முனிபுங்கவராகிய வால்மீகியின் ஆதி காவியத்திலும் கூட இத்தகைய பக்திரசம் ததும்பும் இடங்கள் காணப்படுவது அரிது (யுத்த காண்டத்தில் நான்முகக் கடவுள் இராமனைக் குறித்து உபநிடதங்களையொட்டிச் செய்யும் மாபெரும் துதியைத் தவிர). ஒருவேளை இக்காரணம் கொண்டே ஸ்ரீவைஷ்ணவ பரமாச்சாரியாராகிய ஸ்ரீமந் நாதமுனிகள் கம்பருடைய இராம பக்தியில் மெய்மறந்து, “உன் காவியம் வால்மீகி முனிவருடைய ஆதி காவியத்தை விட மிகச் சிறந்ததாக உள்ளது” என்று கொண்டாடியதாகவும், ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை “ராமாயண தனிசுலோகி” என்ற தம் உரைநூலில் கம்பரைப் பல இடங்களில் மேற்கோள் காட்டுவதையும் அறிகிறோம். (இப்படி சம்பிரதாய ஆச்சாரியர்களே மொழிக்கு முதன்மை தராமல் கருத்துக்கு முதன்மை தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது). கம்ப ராமாயணத்தின் ஆரணிய காண்டத்தைச் சேர்ந்த விராதன் வதைப் படலத்தில், விராதன் சாபம் நீங்கிய பிறகு செய்யும் மெய்சிலிர்க்க வைக்கும் துதியின் முடிவில்

ஒப்பு இறையும் பெறல் அரிய

ஒருவா! முன் உவந்து உறையும்

அப்பு உறையுள் துறந்து, அடியேன்

அருந்தவத்தால் அணுகுதலால்,

இப் பிறவிக் கடல் கடந்தேன்;

இனிப் பிறவேன்; இரு வினையும்

துப்பு உறழும் நீர்த்த சுடர்த்

திருவடியால் துடைத்தாய் நீ.

என்ற பாடல் உள்ளது. விராதன் தான் செய்த தவப் பயனால் பாற்கடலில் பாம்பணையில் விரும்பி யோக நித்திரையில் உள்ள திருமால் (“முன் உவந்து உறையும் அப்பு உறையுள்”) அதனைத் துறந்து, இராமனாய் அவதரித்துத் தனக்குக் காட்சியளித்ததில் தன் கொடிய சாபம் மட்டுமின்றி, “போய பிழையும் புகுதருவான் நின்றனவும்” [திருப்பாவை – 5] ஆகிய முன்வினைகள் நீங்கப் பெற்று மோட்ச நிலையைத் தான் எய்தியதை உவகையோடு உரைக்கிறான். பள்ளிகொண்ட பரமன் தான் விழைந்து அவதாரமெடுக்கும் இச்செய்தியைக் கம்பர், இராமானுஜர் தம் கீதை விளக்கத்தில் எடுத்துள்ள

“ஏஷ நாராயண: ஸ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதன:

நாக3பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆக3தோ மது2ராம் புரீம்”

எனும் கண்ணனைப் பற்றிய மகாபாரத வரிகளின் எதிரொலியாகவே இராமனைக் குறித்துச் செய்துள்ளாரோ என்று வியக்க இடமுண்டு.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் அவதாரம் குறித்த ஓரிரு கேள்விகளை எழுப்பி, அவற்றுடன் ஸ்ரீ பராசர பட்டர் தம் விஷ்ணு சஹஸ்ரநாம உரையில் கூறும் அரியதொரு விளக்கத்தோடு தொடர்பு படுத்தித் துவக்குவோம். முன்பு இத்தொடர்க்கட்டுரையின் மூன்றாம் பகுதியில் சங்க்ஷேப சாரீரகமென்னும் அத்வைத வேதாந்த விளக்க நூலில் இராமாவதார தாத்பர்யம் கூறப்பட்டமையை விரிவாகக் கண்டோம். அப்பகுதிக்கு முன்னும் பின்னும் இருக்கும் சில பத்யங்களைக் காட்டி அதில் அவதாரம் பற்றி முனிகளாலும் அதற்கு பாஷ்யமிட்ட பாஷ்யகாரர்களாலும் சொல்லப்பட்ட சில விஷயங்களையும் இக்கட்டுரையில் பார்ப்போம். அத்துடன் ஆதி சங்கரரும், அவரைப் பரமாச்சாரியாராக ஏற்ற ஸ்ரீ மதுசூதன சரஸ்வதியும் செய்துள்ள சிறந்த பகவத் கீதா பாஷ்யங்களிலிருந்து சில அருமையான செய்திகளையும் இக்கட்டுரையில் எடுத்து ஆராய்வோம்.

இத்தொடரின் சென்ற நான்காம் பகுதியில், தன்னுடைய பக்தர்களுக்குக் காட்சி தந்து அவர்களை மகிழ்விப்பதே அவதாரங்களின் முக்கிய நோக்கம் என்னும் செய்தியை நாம் பார்த்தோம். அப்படி என்ன அவன் பக்தர்களுக்கு அவனையே காண வேண்டும் என்ற துடிப்பு? இது பித்துப் பிடித்தவன் செயல் போன்றல்லவா உள்ளது? அவனைக் காண முடியவில்லை என்றால் பக்தர்கள் துயரப்படுவரா? ஏன், நாம் எல்லோரும் அவனைக் கண்டதே இல்லையே, நன்றாக மூன்று வேளை சாப்பிட்டுக் கொண்டு, கைநிறைய சம்பாதித்து, பிள்ளைக்குட்டிகளுடன் சந்தோஷமாகத் தானே இருக்கிறோம்? இப்படி மேலும் பல கேள்விகளை எழுப்பலாம். இப்படிக் கேட்பவர்கள் ஒரு அற்புதமான தத்துவத்தை மறக்கிறார்கள். அது என்ன என்று ஸ்ரீ பராசர பட்டர் மொழிந்திருப்பதைக் காண்போம்.

ஸ்ரீ பராசர பட்டர் இராமானுஜருடைய சீடர்களுள் பிரதானராகிய கூரத்தாழ்வானின் மைந்தர். பட்டர் எழுதிய “பகவத் குண தர்ப்பணம்” என்ற சமஸ்கிருத உரைநூலானது, பீஷ்மர் வாய்மொழியாக மகாபாரதத்தில் வரும் பரமனின் ஆயிரம் திருநாமங்களுக்கு எழுதப்பட்ட உரைகளுள் அற்புதமானது. “பகவத் குண தர்ப்பணம்” என்பதற்கு “இறைவனின் குணத்தைக் காட்டும் கண்ணாடி” என்று அர்த்தம். இந்நூலின் முன்னுரையில்,

அறிவுடைய ஒருவன் நேராக ஐம்புலன்களின் வழியாகவோ (பிரத்யக்ஷம்) சிந்தித்து ஊகித்தோ (அனுமானம்) தன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டு, சந்தனம், பூ, பொன் முதலான சுகம் தரக்கூடிய பொருட்களை நுகர்வதையும், நெருப்பு, முள், வாள் முதலிய துன்பம் தரக்கூடிய பொருட்களைத் தவிர்ப்பதையும், கல், மரக்கட்டை, களிமண் முதலான இன்பமோ துன்பமோ தராத ஜடப்பொருட்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் நாம் அன்றாடம் இவ்வுலகில் பார்க்கின்றோம். இவற்றுள் பொருளாதார சுகம் (அர்த்த2ம்), காமம் ஆகிய இரண்டு தாழ்ந்த பலன்களை (புருஷார்த்த2ங்களை) நாடிச் செல்வதை விட்டுவிட வேண்டும். ஏனெனில், அவ்விரண்டும் பல குறைகளால் பீடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, அவை (1) அற்பமானவை, (2) பல இம்சைகளைத் தருபவை, (3) அருவருக்கத்தக்கவை, (4) நிலையாதவை, (5) இன்னல்களுடன் கலந்தவை. இப்படி இருந்தும் அவை (6) கடினமான ஆயாசத்திற்குப் பிறகே பெறப்படுபவை. ஆனால், மற்ற இரண்டு புருஷார்த்தங்களாகிய தர்மமும் பரதத்துவமும் (மோட்சம்) முதுமொழியாகிய வேத மறை வழியாகவே அறியப்படுபவை. மற்ற இரண்டாகிய பொருட்செல்வத்துக்கும், காமத்துக்கும் மாறாக அவை முழுவதும் தூய இன்பமயமானவை. ஆகையால், வேத சாத்திரமும் அவை கூறுவனவுமே விரும்பத்தக்கவை. இதிகாச-புராணங்களில் வல்லவர்கள் இவ்வாறு கூறுவரன்றோ:

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்3த்4ருத்ய பு4ஜம் உச்யதே

வேத3 சா`ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தை3வம் கேச`வாத் பரம்’

என்று பட்டர் அறுதியிடுகிறார். சிற்றின்பங்களாகிய காமத்தையும் செல்வத்தையும் தேடுவதிலேயே குறியாக இருப்பதைக் கைவிட்டு, தர்மமும் மோட்சமுமாகிய உயர்ந்த பலன்களைத் தேடுமாறு நமக்குப் பரிந்துரைக்கிறார். இங்கு இரண்டு கேள்விகள் எழலாம்:

மோட்சம் என்பது இறைவன் அருளால் பெறப்படுவது என்று அறிகிறோம். தர்மம் என்பது மோட்சத்துக்கு ஏது தானே, ஏதுவைப் பலனாகக் குறிப்பிடுவது ஏன்?

“அதென்ன தர்மம் மோட்சம் என்று கூறிவிட்டு கண்ணனைப் பற்றிய வியாசர் வசனத்தைக் கூறுகிறார்?”

இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் – தர்மம் வேறல்ல, கண்ணன் வேறல்ல; “க்ருஷ்ணம் த4ர்மம் ஸனாதனம்” என்பது மகாபாரதத்தில் முனிவர்களின் கூற்று. கண்ணனையே நாடி கண்ணனுக்கே சேவை செய்து கண்ணனையே அனுபவிப்பதைத் தான் “தர்மம்” என்று சொல்கிறோம்.

பட்டர் கூறும் தர்மத்தை ‘பாகவத தர்மம்’ என்று கொள்ளலாம். பாகவத தர்மம் என்றால் என்ன? பூரி ஜகன்னாத க்ஷேத்திரத்தில் 15/16-ஆம் நூற்றாண்டு குடிகொண்டிருந்த அத்வைத ஆச்சாரியாராகிய ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி தம் நூலாகிய கூடார்த்த தீபிகையில் (Gudhartha Dipika) கீதை 18.65-க்கு விளக்கம் கூறுகையில்,

“ச்’ரவணம் கீர்த்தனம் விஷ்ணோஸ் ஸ்மரணம் பாத3 ஸேவனம்

அர்ச்சனம் வந்த3னம் தா3ஸ்யம் ஸக்2யம் ஆத்ம நிவேத3னம்”

[ஸ்ரீமத் பாகவதம், 7.5.23-24]

என்று பிரகல்லாத ஆழ்வான் பாகவதத்தில் கூறும் நவ வித பக்தியையே பாகவத தர்மம்என்று கூறுகிறார். இதில் கூறப்பட்டுள்ளவை: செவியால் கேட்டல், புகழ் பாடி உரைத்தல், மனதை விஷ்ணுவிடம் செலுத்துதல், அவன் திருவடிகளுக்குச் சேவை செய்தல், அருச்சித்தல், பல்லாண்டு பாடுதல், அடிபணிதல், நட்பு கொள்ளுதல், ஆன்மாவை அற்பணித்தல் ஆகிய ஒன்பது வித பக்தி.

இது வெறும் கீழ் நிலையில் இருப்பவர்களுடைய யுக்தி அன்று; ஸ்ரீ சங்கரரே “விஷ்ணு தத்துவத்தை அறிபவன் ஞானி [“ஜ்ஞானீ விஷ்ணோ: தத்த்வவிச் ச ஹே ப4ரதருஷப4:” – ஆதி சங்கரர் கீதா பாஷ்யம், 7.16] என்று கீதைக்கு உரையிடுகையில் கூறுகிறார். அது மட்டுமன்று, ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரும் ஸ்ரீ வல்லபாச்சாரியாரும் மதுர பக்தியைப் பரப்புவதற்கும் பல நூற்றாண்டுக்களுக்கு முன் ஆதி சங்கரரே,

“தன் சித்தத்தை என் மீது செலுத்தி, கண் முதலான ஐம்புலன்களையும் என்னில் ஆழ்த்தி, வாழ்க்கையை எனக்கே அற்பணித்து, என் புகழைச் சொல்லிக் கொண்டு ஒருவருக்கொருவர் என்னைப்பற்றி விளக்கி உணர்த்துவர். ஒப்பற்ற ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகிய ஆறு குணங்களோடு கூடியவனாக என்னைப் பற்றிக் கலந்து பேசி மகிழ்வர். தமக்குப் பிரியமானவருடன் அனவரதம் சேர்ந்து இருப்பதைப் போன்ற திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பர்” [ஆதி சங்கரர் கீதா பாஷ்யம், 10.9]

என்று கண்ணன் வாக்கை மிகச் சிறப்பாக மெருகேற்றி உரையிட்டிருப்பது கொண்டாடத்தக்கது. இதை எவ்வளவு நேரம் செய்ய வேண்டுமாம்? எவ்வளவு வருடங்கள் செய்ய வேண்டுமாம்? சங்கரர் கூறுகிறார்: “நீண்ட நாள் — அதாவது வருடத்துக்கு ஆறு மாதம் என்றெல்லாம் அல்ல; வாழ்நாள் முழுதும் இடைவிடாது — கண்ணனை மனதில் நிறுத்தி உபாசிக்க வேண்டும். அத்தகைய யோகிக்குக் கண்ணன் அடைய எளியவனாக உள்ளான்.” [ஆதி சங்கரர் கீதா பாஷ்யம், 8.14] அதற்கும் மேலாக,

மனதை ஸ்திரமாக வைக்கும் யோகத்தைக் கடைபிடித்து வேறு புகலிடமில்லாமல் சர்வேஸ்வரனாகிய கண்ணனிடத்திலேயே சரண் புகவேண்டும். தாழ்ந்த பலன்களை விரும்பும் ஏனையோர் யாக வேள்விகளையும், விரதத்தையும், தானம் கொடுப்பதையும் அப்பலனை அடைதற்குரிய சாதனமாகக் கடைபிடிப்பர். கண்ணனை அடைய விரும்புபவனோ வேறு சாதனங்களைக் கைவிட்டுத் தன் சிந்தையை அவன் மீதே செலுத்தி அவனையே பற்றுகிறான். “இத்தகைய யோகியானவன் என்னை அடையத் தகுதி பெறுகிறான்” என்று கண்ணன் கூறுகிறான்.

[ஆதி சங்கரர் கீதா பாஷ்யம், 7.1]

என்றும் குறிப்பிட்டிருப்பது ஆழ்ந்து தியானிக்கத்தக்கது.

பிரகல்லாத ஆழ்வானும், சங்கரரும் கூறும் பக்தியை இடையறாது வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க, அச்சுதனின் அவதார இலீலைகளல்லவோ நமக்கு வழி தருகிறது? “இராமன் தாமரைக் கண்ணனாவன் அன்றோ” [ “ராமோ ராஜீவ லோசன:” – வால்மிகி இராமாயணம்] என்னும்படி இவனுடைய சுகுமாரமான, மென்மையான திருமேனியானது காட்டிலும் மேட்டிலும் சென்று வாடுகிறதே என்று வருந்தி அவனுக்குப் பல்லாண்டு பாட வேண்டாமா? அவன் புகழ் பாடுவதையே வாழ்நாள் முழுதும் செய்ய வேண்டுமானால், அவனைப் பற்றி நாள் தோறும் நினைத்திருக்க வேண்டுமானால், அவன் செய்த இலீலைகளைப் பற்றி இனிக்க இனிக்கப் பேசுவதென்றால், நிர்விசேஷ சித் ஸ்வரூபம் (குணமற்ற ஆன்ம வடிவு) மாத்திரம் இருந்தால் போதாதே? அப்படிப் புலன்களுக்கு எட்டா நிலையில் மாத்திரம் இருப்பவனை எப்படி “அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே” என்று பாடி வணங்க இயலும்? ஆகையால் தான், வெறும் யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் மாத்திரம் கிடைத்தால் போதாது என்று கருதித் தன்னை இப்படி எளிமையாக ஆக்கிக் கொள்கிறான் மாயவன்.

இக்காரணம் பற்றியே, நிர்விசேஷ பிரம்ம வாதியாக – பழுத்த அத்வைதவாதியாக இருந்தபோதும் ஸ்ரீ மதுசூதன சரஸ்வதியும், சர்வஞாத்ம முனிகளின் சங்க்ஷேப சாரீரகம் என்ற வேதாந்த நூலில் வரும்

“… ப்ரபோ4: ஸகல லோக ஹிதாவதார

ஸ்வேச்சா2வினிர்மித வபுர் வரம் அந்தரேண”

[சங்க்ஷேப சாரீரகம், 2.179]

என்ற இடத்திற்கு, அந்நூற்குத் தாம் எழுதிய ஸார ஸங்க்3ரஹம்‘ என்னும் விளக்கவுரையில் முதலில்,

“கம்சன் முதலான அசுரர்களையோ, இராவணாதிகளையோ வதைப்பதனால் சகல லோகங்களுக்கும் நன்மையை அளிக்கும் அழகிய திருமேனிகளாகிய அவதாரப்பெருமையையே ’ஸ்வேச்ச2யா… வபுர் வரம்’ என்று விவரிப்பது.”

என்று விளக்கிய பிறகு, அவ்விடத்தை ஒட்டியே

“தன்னுடையவர்களாகிய பக்தர்களின் இச்சைக்கு இணங்க, என்றுமாம். அவியக்த பிரம்மமாகிய அக்ஷரமாக இருக்கும் பரமாத்மாவை உபாசிப்பது அதி துர்லபம் ஆகையாலே தன்னுடைய பக்தர்களுடைய வேண்டுதலைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பகவானால் எடுக்கப்படும் அவதாரம்.”

என்று கூறுகிறார். ஸங்க்ஷேப நூலில் முனிகளுடைய வாக்கியத்தில் “ஸ்வேச்சயா” [தன்னிச்சையாக (அ) சுதந்திரமாக] என்று இருப்பினும், “தன்னுடையவர்களாகிய பக்தர்களின் இச்சைக்கு இணங்க” என்று மதுசூதனர் பாஷ்யமிட்டிருப்பது அருமையான விஷயமாகும் (ஸ்ரீ ராமதீர்த்தரும் அன்வயார்த்தபிரகாசிகையில் இப்படியே உரையிட்டுள்ளார்).

இப்படி எழுதியதோடு நிற்கவில்லை, பக்தி நிரம்பிய சுலோகங்களாகவும் செய்துள்ளார்… தமது ’கூடார்த்த தீபிகை’ (Gudhartha Dipika) என்னும் பகவத்கீத உரையில் ஆங்காங்கு மெய்சிலிர்க்க வைக்கும் அர்த்தங்களைக் கொண்ட பல சுலோகங்களை பாடியுள்ளார்:

“த்4யாநாப்4யாஸ வசீ’க்ருதேன மநஸா தந் நிர்கு3ணம் நிஷ்க்ரியம்

ஜ்யோதி: கிம் ச, ந யோகி3நோ யதி3 பரம் பச்’யந்தி பச்’யந்து தே |

அஸ்மாகம் து தத்3 ஏவ லோசன-சமத்காராய பூ4யாச் சிரம்

காலிந்தீ3 புலிநோதரே கிம் அபி யந் நீலம் மஹோ தா4வதி ||

[தம்முடைய யோக பலத்தினால் மனதை அடக்கிக் குணமற்ற ஆன்ம ரூபத்தைச் சில ஞானிகள் கண்டால் கண்டுகொள்ளட்டும். நமக்கோ, யமுனைக்கரையில் துள்ளி விளையாடும் அந்த நீலநிற ஒளிவடிவம் ஒன்றே நம் நமது கண்கவர எப்போதும் நிலைத்திருக்கட்டும் கூடார்த்த தீபிகை, 13-ஆம் அத்தியாய அவதாரிகை]

“காருண்யதோ நரவதா3சரத: பரார்த்தா2ந்

பார்த்தா2ய போதி4தவதோ நிஜமீச்வரத்வம் |

ஸச்சித்ஸுகை2கவபுஷ: புருஷோத்தமஸ்ய

நாராயணஸ்ய மஹிமா ந ஹி மாநமேதி ||”

“கேசிந்நிக்3ருஹ்ய கரணாநி விஸ்ருஜ்ய போ4கம்

ஆஸ்தாய யோக3மமலாத்மதி4யோ யதந்தே |

நாராயணஸ்ய மஹிமாநம் அநந்த பாரம்

ஆஸ்வாதயந்ந் அம்ருதஸாரம் அஹம் து முக்த: ||”

[மனிதனைப் போலக் காட்சியளித்து, ஆழ்ந்த மெய்ப்பொருளியலையும் தன்னுடைய உண்மையான ஈசுவர சொரூபத்தையும் பார்த்தனுக்கு உரைத்தும் காட்டியும் விளக்கிய கருணைவள்ளலாகிய புருடோத்தமனாம் நாராயணனுடைய மகிமை பெருவியப்பை அளிக்கின்றதன்றோ! சிலர் தம் ஐம்பொறிகளை அடக்கி, போக பலன்களைக் கைவிட்டு, யோகத்தைக் கடைபிடித்து அடையும் சித்த சுத்தியினாலேயே மோட்சம் அடைய முயற்சி செய்கின்றனர். யானோ, நாராயணனுடைய மகிமையாகிய எல்லையற்ற அமுதக்கடலைச் சிறிது சுவைத்ததினாலேயே முக்தனானேன்.கூடார்த்த தீபிகை, 15.18]

இப்படி ஞானிகள் பாமரர்கள் என்ற பாகுபாடின்றித் திருமாலின் எளிமையைப் புகழ்ந்துள்ளமை அவன் அவதாரப் பெருமையையும் அதனால் நாம் அடையும் பயனையும் நன்கு உணர்த்தும்.

நிற்க. இனி, “அவதாரங்கள் சுய சங்கல்பத்தால் ஏற்படுவது” என்பது பூரணமான விளக்கம் அன்று என்பதையும், அதையும் பூர்த்தி செய்யும் வண்ணம் விளங்கும் இன்னொரு அரிய செய்தி ஒன்றைப் பார்த்துவிட்டு இத்தொடரை முடித்துக் கொள்வோம். உந்துதல் இன்றித் தானே விரும்பி அவதரித்தாலும், அவன் தன் ஈச்வரத் தன்மையும் வீர சௌர பராக்கிரமங்களும் குன்றாத வண்ணமே அவதரிக்கிறான் என்பதும் பெரியோர் வாக்கு. அதாவது, அவன் கீழே இறங்கி வருவது “தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டு பார்வையிழந்து அந்த இலீலை முடிந்ததும் மீண்டும் கண்பார்வையைத் திரும்பப் பெறுவது” என்பது போல அன்று. ஆதி சங்கரர்

“எப்படி மாயாவி ஒருவன் இந்திர ஜாலம் செய்யும் பொழுது தன்னைத் தானே மயக்கிக் கொள்வது இல்லையோ, அவ்வாறே” [ஆதி சங்கரர் கீதா பாஷ்யம், 7.25]

என்று விளக்கியுள்ளார். ஸ்ரீ ராமதீர்த்தர்,

“உலகத்தில் உள்ளாரைப் போல அறிவை இழந்து அதை வித்யா பலத்தினால் திரும்பப் பெறுவது போலன்று இராமன் செயல். அது வெறும் நாடகமே. ஸ்வதந்த்ரனாகிய ஸ்ரீராமனிடத்தே சிறிதளவும் மயக்கம் உண்டானதை நாம் கேள்விப்படவில்லையாதலால்.” [அன்வயார்த்த பிரகாசிகை, 2.182]

என்று இராமாவதார விஷயமாகவும் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது. இராமானுஜரும் ஸ்ரீ வேதாந்த தேசிகரும் முறையே கீதா பாஷ்யத்திலும் தாத்பர்ய சந்திரிகையிலும் [கீதை 4.6] இவ்விஷயத்தை மேலும் பல பிரமாணங்கள் காட்டி விஸ்தாரமாக விளக்கியுள்ளனர். விரிவிற்கஞ்சி அதை இங்கு விளக்கவில்லை.

இறுதியாக, நாம் இதுவரை கண்ட அவதாரப் பெருமைகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஓரிடத்தில் அர்ஜுனன் வாய்மொழியாக (கீதை மூலத்தில் இல்லாவிடினும், உரையில்) கவிதை நயம்பட ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி விளக்கியுள்ளார். அவ்விடத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:

“கண்ணா, நீயோ பிறக்கும் பொழுதே யோகிகளால் விரும்பப்படும் ரூபமாகிய, வைகுண்டமென்னும் உயர்ந்த நல்வீட்டில் குடிகொண்டுள்ள அந்த திவ்ய மங்கள ரூபத்தை வெளிப்படுத்தினாய். அத்துடன் ஸ்ரீவத்சம், கௌஸ்துபம், பாதம் வரை நீண்டிருக்கும் வைஜயந்தி மாலை முதலானவையோடும், வெண்சங்கம், தாமரை மலர், கௌமோதகி என்னும் கதை, சக்கரம் ஆகியவற்றை ஏந்திய நான்கு கரங்களுடனும், கருட வாகனத்துடனும், அண்டமெல்லாம் உன்னை ராஜாதிராஜன் என்று முடிசூட்டப்பட்டிருப்பதாகிய சிறந்த பெருமையுடனும், சகல தேவர்களையும் அசுரர்களையும் வெற்றிகொண்டும் விளங்குகிறாய். பல அரிய இலீலைகளைப் புரிகிறாய். அவதாரங்களுக்குச் சூடாமணியாக விளங்கியும் வைகுண்டத்திற்கு அரசாகவும் இருக்கிறாய். இஞ்ஞாலம்வாழ் மக்களுடைய துயர் அனைத்தையும் தீர்க்கும் வண்ணம் அவதரித்துள்ளாய்; பிரமனுடைய படைப்பில் எங்குமே காணப்படாத, ஒப்பற்ற சௌந்தரியங்களைக் குறைவறப் பெற்றுள்ளாய். உன்னுடைய குழந்தைப் பருவ விளையாட்டாக பிரமனையே தலைகுனியச் செய்தாய். ஆயிரம் சூரிய கிரணங்களை ஒத்த பொன்னிற ஆடையையும் கண்கவரும் அழகிய கார்முகில் உருவத்தையும் பெற்றுள்ளாய்; இந்திரனை ஜயித்து பாரிஜாதத்தைப் பெற்றாய். வாணாசுரனுடன் போர் புரிகையில் சிவனையும் வென்றாய். தேவர்களையெல்லாம் நடுங்க வைத்த நரகாசுரனைக் கொன்று அவனிடமிருந்த எல்லாவற்றையும் அரக்கர்களது உயிர்களோடு சேர்த்து அபகரித்தாய். அதே சமயம் ஒன்றும் இல்லாமல் திண்டாடிய சுதாமாவைச் செல்வந்தன் ஆக்கினாய். பதினாறாயிரம் திவ்விய உருவங்களை எடுத்தாய்; அளவற்ற சிறப்பை உடைய குணங்களைப் பெற்றுள்ளாய்; திசை எங்கும் பரவிய கீர்த்தியை உடையாய். நாரத மார்க்கண்டேயாதி ரிஷிகளுடைய வந்தனங்களுக்குப் பாத்திரமானாய். இப்படிப்பட்ட உன்னை சீவன் என்று பகுத்து அறியாதவன் கூட எண்ணுவதற் கிடமில்லையே?”

[கூடார்த்த தீபிகை, 7.24]

முடிவுரை:

இது வரை நாம் “அச்சுதனின் அவதாரப்பெருமை” தொடரில் பார்த்திருப்பது இறைவன் திருமாலுடைய குணக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு திவலையே. முறையே ஐந்து கட்டுரைகளில் நாம் பார்த்தவை:

(i) பரம்பொருளுக்கு உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள தன்மைகள்; ஐம்புலன்களுக்கும் எட்டாமை; ஆதி சங்கரர் விளக்கம்: அ) ஸ்ரீமந் நாராயணனின் ஆறு இறைத் தன்மைகள், ஆ) பிரபஞ்சத்தின் முதற்காரணமானவன் தனக்கென்று ஒரு தனிப்பட்ட ஆசையும் நோக்கமும் இன்றி உயிர்கள் உய்யும்பொருட்டு அவதரித்தல், இ) திருமாலுக்கு அவதாரங்கள் காட்டும் ஒப்பற்ற பராக்கிரமங்கள்.

(ii) ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி/ஸ்ரீஜயந்தி ஸ்பெஷல்: ஸ்ரீ நாராயணீயத்திலிருந்து கிருஷ்ண ஜனனம் பற்றிய பகுதிகளின் சுருக்கம்: வானத்தார் திருமாலைப் பாற்கடலுக்குச் சென்று அவதார்ம் புரியுமாறு வேண்டுதல்; திருமால் தேவகி அம்மையின் எட்டாம் கர்ப்பத்தில் தோன்றுதல்; திருமால் பிறப்பெடுத்த தருணம் அவன் முழுமுதற் தோற்றத்தை தேவகியும் வசுதேவரும் கண்டு துதித்தல்; வசுதேவர் நள்ளிரவு யமுனை நதி தாண்டி மாயோனை ஆயர்ப்பாடியில் நந்தகோபர் இல்லத்தில் விட்டு வருதல்; மாயோன் பிறந்த செய்தி கேட்டு ஆயர்ப்பாடி கோலாகலமும் கொண்டாட்டமும்.

(iii) அத்வைத ஆச்சாரியார்கள் விளக்கம்: அ) இராமாவதாரத்தின் தாற்பரியம்; ஆ) வினைக் கட்டுக்குள் (கர்ம சம்பந்தம்) இல்லாத இறைவன் தன்னிச்சையாகப் பிறப்பெடுக்கும் தன்மை; இ) அவதார இலீலைகளின் உட்பொருள்.

(iv) கீதையில் அவதாரங்களுக்குக் கூறப்படும் முக்கியக் காரணங்கள் குறித்த தருக்கம்; முக்கியக் காரணமான “நல்லாரைப் பேணுதல்” என்பதற்கு இராமானுஜர் கூறும் விளக்கம்; பாகவதத்தில் கஜேந்திர மோட்ச சம்பவ விளக்கம்; நம்மாழ்வார் திருவாய்மொழியிலும் நம்பிள்ளை ஈட்டிலும் கஜேந்திர மோட்ச விளக்கம்; மேற்படி இரண்டிற்கும் முன்கூறிய இராமானுஜர் கீதை விளக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை.

(v) புருஷார்த்தங்கள் பற்றிய விளக்கம்; பரமனே உயர்ந்த புருஷார்த்தம்; அக்ஷர பிரம்மத்தை உபாசிப்பதில் உள்ள கடினமும் அவதாரங்கள் காட்டும் எளிமையும்; அவதாரங்களில் இறைத்தன்மை குன்றாமல் வெளிப்பட்டமை.

கட்டுரை எழுதியவரின் குறிப்பு:

இத்துடன் மேற்கண்டவாறு ஐந்து பகுதிகளில் “அச்சுதனின் அவதாரப்பெருமை” என்ற சிறு கட்டுரைத்தொடர் முடிக்கப்பட்டது. அவதாரப்பெருமை பற்றி இன்னும் சொல்வதற்கு நிறைய உள்ளன – பாகவதத்திலிருந்து, மகாபாரதத்திலிருந்து, கம்ப ராமாயணத்திலிருந்து, விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் தசாவதார மகிமை, இப்படி எழுதிக்கொண்டே போகலாம். இருப்பினும், இப்போதைக்கு இக்கட்டுரையுடன் நிறுத்தி விட்டு புதிய அத்தியாயம் ஒன்றைத் தொடங்குவோம். பின் ஒரு நாள் “யதா யதா ஹி தர்மஸ்ய”, “பரித்ராணாய ஸாதூனாம்” என்று கீதை சொல்வது போல, தகுந்த வாய்ப்பும் தருணமும் வரும்போது பரமன் திருவுள்ளம் பற்றினால் கண்டிப்பாக அவதாரப்பெருமைத் தொடர் மறு அவதாரமெடுக்கும் என்று உறுதிமொழி இடுகிறேன்.

அனைவருக்கும் மங்களமுண்டாகட்டும்!!!

34 Replies to “அச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]”

  1. Pingback: Indli.com
  2. கந்தர்வன் அவர்களுக்கு

    அச்சுதனின் அவதார பெருமைகளை மிக மிக அழகாக, விளக்கமாக , எளிய முறையில் விளக்கி அருளி உள்ளீர்கள் . தொடர் முடிவது வருத்தம் அளிக்கிறது. உங்கள் பணி ஓங்குக.

  3. மறுமொழி அளித்த அனைத்து நண்பர்களுக்கும் தலை வணக்கத்துடன் நன்றி கூறுகிறேன்.

    //
    really excellent commentaries and explanations.
    //

    இக்கட்டுரைத் தொடருக்குப் பெரும் உதவியாக விளங்கிய பாஷ்ய பகுதிகளை எழுதிய ஆசார்யார்களையும், அதற்கு எளிய விளக்கங்களை எழுதிப் புத்தக வடிவில் தந்த பெரியோர்களையுமே பாராட்டுக்கள் போய்ச் சேரும்.

    //
    தொடர் முடிவது வருத்தம் அளிக்கிறது. உங்கள் பணி ஓங்குக.
    //

    கண்டிப்பாக தக்க தருணம் வரும்பொழுது அவ்வப்போது அவதாரப் பெருமைகள் பற்றி எழுதுகிறேன். முடிகிறதே என்று எனக்கும் வருத்தமாகவே உள்ளது, எனினும் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கவே இப்போதைக்கு முடித்துக் கொண்டேன். அது வரை ஆழ்வார் பாசுரம், பாகவதம், நாராயணீயம், கம்பராமாயணம் மூலமாக அனுபவத்தை இடைவிடாது தொடருவோம்.

  4. //இத்துடன் மேற்கண்டவாறு ஐந்து பகுதிகளில் “அச்சுதனின் அவதாரப்பெருமை” என்ற சிறு கட்டுரைத்தொடர் முடிக்கப்பட்டது.//
    என் அன்பிற்குரிய ஸ்ரீ கந்தர்வன்,
    முழுக்க முழுக்க மன நிறைவு அளித்தீர்கள். நிறைவு பெற்றது/பெறுகிறது என்று குறிப்பிடுமாறு உரிமையுடன் தெரிவிக்கிறேன். ’முடிக்கப் பட்டது’ என எழுதுவது நமது சம்பிரதாயமும் அல்ல. அதனால்தான் மங்களம் என்றோ சுபம் என்றோ குறிப்பிடுகிறோம். திருச்சிற்றம்பலம் என்கிறோம். க்ருஷ்ணார்ப்பணம் என்கிறோம்.
    மலர்மன்னன்

  5. அன்புள்ள மலர்மன்னன் ஐயா,

    தங்கள் பாராட்டுக்கு நன்றி.

    “முடிக்கப்பட்டது” என்று எழுதியது பற்றி நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். இருந்தாலும் “நிறைவு பெறுகிறது” என்று கூறினால் “மேற்கொண்டு எழுதுவதற்கு வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை” என்று கூறுவது போல ஆகி விடுமோ என்று தோன்றுகிறது. நீங்கள் கூறும் வேறு யோசனை சரியாகத் தோன்றுகிறது…

    “ஐந்து பகுதிகள் கண்ணன் திருப்பாதங்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது”

    என்று எழுதியிருக்கலாம்.

  6. பெருமாளை உயர்த்துவது என்றாலே சிவபெருமானை குறை கூறுவது எனும் இலக்கணத்தை எங்கு படித்தீர் என தெரிய வில்லை.
    இப்படியே எழுதி ஒற்றுமையை குலைப்பது என்ன நியாயமோ? ஒற்றுமை பற்றி பேசும் இத்தளத்தில் இவ்வர்று எழுதுவது “புத்திர வரம் கேட்க போய் புருஷனை பறி கொடுத்தது போல் ” ஆகிவிடுமே! சர்ச்சைக்கு உரிய வார்த்தைகளை தவிர்க்கலாமே.
    “யோ வாமபாதார்ச்சிதே விஷ்ணு நேத்ரம் தஸ்மை ருத்ராய நமோஸ்து” எனும் வேத விதிப்படியும் , “செக்கர் வான சடையோன்
    சேவடிக்கீழ் மெய்கண்ணிட்டு சக்கரம் நீ பெற்ற ” எனும் பிரபந்த படியும் சக்கரம் பெற சிவபெருமானை பூசித்த நாரணன் சிவனை வெல்லுவாரா என மற்றவர் கேட்டால் என்னாகும்?
    நீங்கள் வாணாசுரன் பற்றி எழுதினால் இன்னொருவர் கிருஷ்ணன் காலவயனனுக்கு பயந்து ஓடியதையும், வேதத்தில் கூறியபடி வராகமாகி சிவபெருமானின் திருவடியை தேடியதையும் ,விஷ்ணு சூரபத்மனுக்கு பயந்து ஓடியதையும், ராமன் வாலியை மறைந்து இருந்து கொன்றதையும் பற்றி பரிகசித்து எழுதினால் என்ன செய்வீர்? முன் ஒரு கட்டுரையில் வியாசருக்கு வக்காளத்து வாங்கிய நீர் இப்போது வால்மீகியை தாழ்த்துவது ஏனோ? வான்மீகி ராமாயணமே முதன்மையானது, கம்பர் அதனை அனுசரித்தே சிறிது மாற்றியும், கால,தேச, வர்த்தமானத்திற்கு ஏற்ப பாடினார். எனவே பிரமாணம் என வரும் போது வான்மீகி ராமாயணமே முதன்மை. இனிமேல் இதுபோல் எழுதாதீர்.

  7. // பெருமாளை உயர்த்துவது என்றாலே சிவபெருமானை குறை கூறுவது எனும் இலக்கணத்தை எங்கு படித்தீர் என தெரிய வில்லை. //

    இதென்ன விந்தை! நான் எங்கு சிவபெருமானைக் குறை கூறினேன்? ஐந்து பகுதிகளில் கடைசிப் பகுதியான இப்பகுதியில் மாத்திரம் ஒரே ஒரு இடத்தில் சிவபெருமான் பற்றி வருகிறது. அதுவும் நான் சொந்தமாக எழுதியதல்ல. மதுசூதன சரஸ்வதி என்ற மெத்தப் படித்த அத்வைத சந்யாசி தம் கீதா பாஷ்யத்தில் எழுதியுள்ளார். நீங்கள் முறையிட்டால் அவரிடம் அன்றோ முறையிட்டிருக்க வேண்டும்! (அவர் வாழ்ந்த காலம் அக்பர் காலம்).

    // பரிகசித்து எழுதினால் என்ன செய்வீர்? //

    நான் எங்கு “பரிகசித்து” எழுதினேன் என்று காட்டவும். உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளேன். அவ்வளவே. வேண்டுமானால் கூடாரத்த தீபிகை புத்தகம் வாங்கிப் படிக்கவும். இராமகிருஷ்ணா மிஷன் காரர்கள் அதை எளிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதியுள்ளனர்.

    // “யோ வாமபாதார்ச்சிதே விஷ்ணு நேத்ரம் தஸ்மை ருத்ராய நமோஸ்து” எனும் வேத விதிப்படியும் , “செக்கர் வான சடையோன்
    சேவடிக்கீழ் மெய்கண்ணிட்டு சக்கரம் நீ பெற்ற ” எனும் பிரபந்த படியும் சக்கரம் பெற சிவபெருமானை பூசித்த நாரணன் சிவனை வெல்லுவாரா என மற்றவர் கேட்டால் என்னாகும்?//

    ஒன்றும் ஆகி விடாது. “பாகவத புராணத்திலும், விஷ்ணு புராணத்திலும், நாராயநீயத்திலும் அவ்வாறு உள்ளது. ஆகையால் மதுசூதன சரஸ்வதி அவ்வாறு எழுதினர்” என்று பதில் கூறுவேன்.

    நண்பரே! அவரவர் இஷ்ட தேவதைகளைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. அப்படிப் பேசும் பொழுது, உள்ளதை உள்ளபடி எழுதி மேற்கோள் காட்டாமல் அதையே தேவையில்லாமல் மிகைப்படுத்தி (மற்றவர்கள் புண்படும்படியான) கருத்துக்களை முன்வைத்தால் தான் சர்ச்சை உண்டாகிறது. அப்படி எங்காவது செய்துள்ளேனா என்று காட்டவும்.

    // நீர் இப்போது வால்மீகியை தாழ்த்துவது ஏனோ? //

    இதென்ன வேடிக்கை… வால்மீகியைத் தாழ்த்திநேனா? நாதமுனிகள் கம்பரை வாழ்த்தும்போது அவ்வாறு கூறியதாக எனக்கு ஒரு நண்பர் தெரிவித்தார். அதையும் நான் சொந்தமாகச் சொல்லவில்லை.

    // வான்மீகி ராமாயணமே முதன்மையானது, கம்பர் அதனை அனுசரித்தே சிறிது மாற்றியும், கால,தேச, வர்த்தமானத்திற்கு ஏற்ப பாடினார். எனவே பிரமாணம் என வரும் போது வான்மீகி ராமாயணமே முதன்மை. //

    ஒத்துக் கொள்கிறேன். இதற்கும் நான் எழுதியதற்கும் (அதாவது நாதமுனிகள் கூறியது) எந்த ஒரு முரண்பாடும் இல்லை. எதைப் போல என்றால், எப்படி வேதமே பிரமாணம் ஆனாலும் திருவாய்மொழியை வேதத்தை விடப் பெருமை வாய்ந்ததாகப் பேசுவதிலும் ஒரு முரண்பாடும் இல்லையோ அப்படி.

    “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்று எழுதிய வேதாந்த தேசிகரும் சமஸ்கிருத வேதத்தைத் தான் முதற் பிரமாணமாகக் கொண்டார்.

  8. எத்தகைய முறைமையால் இறை அரியல்லன் என்று கீழ்க்காண்பதை நான் சொந்தமாகச் சொல்லவில்லை. சிவஞானசித்தியாரில் அருணந்திசிவம் அவர்கள்தான் எழுதியுள்ளார். யாராவது புண்பட்டால் அதற்கு அவரே பொறுப்பு.

    https://www.tamilvu.org/slet/l41G0/l41G0sel.jsp?x=371

    இப்படிப் பிருகு சாபத் தீரைந்து பிறப்பின் வீழ்ந்து
    மெய்ப்படு துயர முற்று வருபவன் விமலன் அல்லன்
    எப்படி யானுஞ் சொன்னேன் இறைஅரி அல்ல னென்றே
    மைப்படி கண்டன் அண்டன் மலரடி வணங்கி டாயே. 301

    (உரை) இந்த முறைமையிலே பிருகுமுநிவர் சாபத்தாலே ஒன்பது
    பிறப்புப் பிறந்து சரீரவருத்தமுற்று மேலுங் குதிரையாகப் பிறந்தும்
    ஜநநமரணப்படுபவன் மலரகிதனான கர்த்தாவல்லன். வேதாகம
    சாத்திரங்களானுஞ் சொன்னேன் மோக்ஷகர்த்தா விஷ்ணு அல்லனென்றே.
    இனி மோக்ஷகர்த்தா யாவனென்ன விரும்புதியாயின், நீலகண்டனாகிய
    மேலானவனே கர்த்தா. அவனது தாமரை மலர்போன்ற சீர்பாதத்தைச் சரியை கிரியா யோக ஞானத்தாலே வணங்கி நினது பவத்தை நீக்கிக்கொள்வாயாக. 31

  9. வெங்கட்,

    // எத்தகைய முறைமையால் இறை அரியல்லன் என்று கீழ்க்காண்பதை நான் சொந்தமாகச் சொல்லவில்லை. சிவஞானசித்தியாரில் அருணந்திசிவம் அவர்கள்தான் எழுதியுள்ளார். யாராவது புண்பட்டால் அதற்கு அவரே பொறுப்பு. //

    இதை எதற்கு இக்கட்டுரையில் கூறினீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் கூறியதில் புண்படுவதற்கு ஒன்றுமில்லை. மாறாக, அருணந்தி சிவம் அவர்களைத் திட்டுவது போல உள்ளது உங்கள் மறுமொழி.

    நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளதில் உள்ள கொள்கையை ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், உள்ளிட்ட த்ரிமதத்து ஆச்சாரியார்களும் அவர்களைப் பின்பற்றி வந்தவர்களும் சற்றும் ஆதரிக்கவில்லை; நம் கட்டுரையின் ஐந்து பாகங்களில் உள்ள மேற்கோள்களையும் நூற்குறிப்புகளையும் சான்றுகளையும் கண்டுத் தெளிக. இதைத் தகவலுக்காகவும் தெளிவுக்காகவும் மாத்திரம் கூறுகிறேன்.

    அருணந்தி சிவாச்சாரியாரின் கருத்து தமிழ்நாட்டுச் சைவர்களுக்கு ஒத்துப் போகலாம். ஆதி சங்கரர் முதலானோர் பாஷ்யங்களில் கூறியுள்ள கொள்கையைப் பின்பற்றலாமா அல்லது அருணந்தி சிவம் முதலிய சைவப் பெருமக்களின் கொள்கைகளைப் பின்பற்றலாமா என்பது அவரவர் சொந்த விஷயம். இதில் மற்றவர்கள் புண்படுவதற்கு ஒன்றுமில்லை. என்னுடைய முந்தைய மறுமொழியில் இட்ட வாக்கியத்தையும் இங்கு மறுபடி இடுகிறேன்:

    // அவரவர் இஷ்ட தேவதைகளைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. அப்படிப் பேசும் பொழுது, உள்ளதை உள்ளபடி எழுதி மேற்கோள் காட்டாமல் அதையே தேவையில்லாமல் மிகைப்படுத்தி (மற்றவர்கள் புண்படும்படியான) கருத்துக்களை முன்வைத்தால் தான் சர்ச்சை உண்டாகிறது. //

    அதே சமயம், நாடெங்கும் சங்கரர், ராமானுஜர், மத்வர், வல்லபர், நிம்பர்கர், சைதன்யர், சுவாமிநாராயணர் முதலானோர் வாக்கைப் பின்பற்றும் சம்பிரதாயங்களில் வேதத்தில் கூறப்பட்ட பரமபுருஷனாகப் பர வாசுதேவனையும், அவன் அவதாரங்களையும் வழிபட்டு உய்யும் சம்பிரதாயம் ஆதி காலம் முதலாக உள்ளது. சங்க நூலாகிய பரிபாடலையும், கடைச்சங்கத்துக்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல்களிலும் திருமாலைப் பரம்பொருளாகக் கொண்ட வேதத்தை ஒட்டிய சமயம் நம் தமிழ்நாட்டிலும் தொன்று தொட்டு இருந்து வந்தது என்பதையும் காணலாம்.

    பிருகு சாபத்தைப் பற்றிக் கட்டுரையின் மூன்றாம் பகுதியின் இறுதியில் உள்ள விளக்கம் காண்க. இவ்விளக்கத்தை நரசிம்மாச்சிராமர் என்ற அத்வைதி கூறியுள்ளார். மேலும், “சித்தாந்த லேச சங்கிரகம்” எனும் நூலில் அப்பைய தீட்சிதரும் நம் கருத்துக்கு உடன்பட்டுள்ளார் என்பதையும் கண்டுகொள்ளலாம். வேண்டுமானால், அந்நூலிலிருந்து மேற்கோளையும் நாம் தர நம்மால் இயலும்.

  10. திரு.கந்தருவன்: இந்த வாதத்தை வளர்க்க நான் விரும்பவில்லை. இது ஏதோ நான் பெருமாளுக்கு அபவாதம் செய்வது போல் தொனிக்கிறது. எனவே ஆசிரியர் குழுவுக்கு அனுப்பிய இந்த விண்ணப்பத்தை இங்கே மீண்டும் தருகிறேன்.

    திரு.கந்தர்வன் அவர்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை மிக்கவராய், தெள்ளிய நடையில் நல்ல தமிழில் கட்டுரை வடிப்பவராய் இருப்பினும், ஏதோ ஓர் உட்கிடப்புடன் இங்கே செயல்படுவதாய் ஐயம் மிகுகிறது.

    ஆழ்வாராதிகளும் நாயன்மாரும், மூலர், காலங்கி, போகர், சிவவாக்கியர் வழிவரும் சித்தமுனிகளும், கம்பரும், அருணகிரியும் அன்னபிறரும் கண்டிராத ஹரிஹரபேதத்தை இவர் வலிந்து கண்டு அதுவும் ஆதிசங்கரர் முதலான அத்வைதிகள் பேரிலேற்றி கிடைத்த சந்திலெல்லாம் மிஷநரியார் பாணியில் பரப்புரை செய்வதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். பலரும் நயமாய்ச் சொல்வதையும் பார்த்தேன். கேட்டபாடில்லை.

    இவர் கொணர்ந்திங்கிடும் பாடியத்துக்கேல்லாம் மாற்றான கருத்துக்களை இதரரும் செய்யமுடியும். அவர்கள் ஹிந்து ஒற்றுமையை மனதில் கொண்டு அமைதி காக்கிறார்கள். அதைத் தன் வெற்றியாகக் கருதிக்கொண்டு இவர் மேலும் கும்மியடிப்பார் என்றால் அது இந்தத் தளத்தின் ஆதாரக்கொள்கைக்கே ஆப்பாகிவிடும் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மற்றபடி தமிழ்ஹிந்துவின் உன்னதமான சேவைக்கு மனமார்ந்த சிரந்தாழ்ந்த வணக்கமும் வாழ்த்தும் உரித்தாகுக.

    (edited and published)

  11. ஸ்ரீ கந்தர்வன், எனக்குத் தோன்றுவதைக் கூறுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். நான் ஏதோ மறுத்துப் பேசுவதாகவும் கருத வேண்டாம்.
    அவர் சொன்னதைத்தான் சொல்லியிருக்கிறேன், நானாகச் சொல்லவில்லை என்றே சொல்லிச் செல்வது கேட்போருக்குத் திருப்தியளிக்காது. மற்ற பெரியோர் சொன்னவற்றை எடுத்தாள்வதோடு சொந்த அனுபூதியையும் குறிப்பிட்டாலன்றி திருப்தி அளிக்கவும் இயலாது.

    பேசப் பேசப் பேச்சு வளர்கிறது, நம்மை அறியாமல் அது நமக்குள் பேத உணர்வுகளையும் தோற்றுவித்துவிடுகிறது.

    பாரம்பரிய வழக்கப்படி நான் சைவன். ஆகையால் தினமும் ஐந்தெழுத்து மந்திரம் ஓதி சிவலிங்கத்திற்கு அபிஷேக பூசை செய்கிறேன். எங்கள் குல தெய்வம் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகைத் தாய். ஆகையால் தினமும் அதன்பின் செளந்தர்ய லஹரியிலிருந்து எனக்குப் பிடித்த தனோது க்ஷேமம் நஸ்தவ வதன செளந்த்ர்ய லஹரீ… பரீவாஹஹ ஸ்ரோதஹ ஸரணிரிவ ஸீமந்த ஸரணிஹி வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல கபரீபாரதிமிர த்விஷாம் ப்ருந்தைஹி பந்தீ க்ருதமிவ நவீநார்க்க கிரணம் என்ற ஸ்லோகம் உள்ளே ஓட அவளுக்கும் பூசை செய்கிறேன். நான் கேளாமலே ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் பெயரால் அமைந்த மந்திரோபதேசம் அடையப்பெற்றதால் அதுவும் உள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஸ்ரீவித்யையிலும் லயிப்பு உண்டாகிக் கூடவே ராமன் என்றாலும் க்ருஷ்ணன் என்றாலும் உடம்பில் மின்சாரம் பாய்ந்துவிடுகிறது. இப்போது சொல்லுங்கள், நான் எதில் சேர்த்தி? சைவனா, சாக்தனா, வைணவனா? ஆதி பராசக்தி படைத்தல் காத்தல் அழித்தல் என்ற தொடர் சங்கிலி அறுபடாமலிருக்க ஒரு சக்தி மீதே மூன்றையும் சுமத்திவிடாமல் ஒவ்வொரு சக்தியிடமும் ஒரு தொழிலை ஒப்படைத்திருப்பதாய்க் கொள்கிறேன். திருமால் காத்தல் தெய்வமாதலால் இக வாழ்வு தருபவர் அவரே. எனவே அவர் மார்பில் இலங்கும் தாயார் பெயரிலான மந்திரம் தானாக என்னை வந்தடைந்ததாய்ப் புரிந்துகொள்கிறேன். இறுதியில் எதற்கும் உதவாமல் வெறும் சுமையாகப் போகவிருக்கும் கூட்டைவிட்டுத்தொலைக்கும் நன்மையை நான் பெற்று விடுதலை அடைய கர்ண மந்திரம் சொல்லிக் கடைத்தேற்றும் சிவபிரான எனும் அழிக்கும் தெய்வத்தைச் சரணடைகிறேன். இக வாழ்விற்கான அருளுக்குத் திருமாலின் லட்சணங்களான ஸ்ரீ ராம க்ருஷ்ணாம்ருதம் பருகி பர சுக மோட்ச சித்திக்கு சிவனையும் நம்பியிருக்கிறேன். உள்ளே ஒளிச் சுடராய் அன்னை பராசக்தியை உட்கார்த்தி வைத்திருக்கிறேன். தியானம் கூடுகையில் சகலமும் ஒன்றாகிப் பெரும் சோதியே உள்வாங்கிக் கொள்வதாய் உணர்கிறேன். இதற்குமேல் என்ன சொல்ல?
    -மலர்மன்னன்

  12. திரு வெங்கட்,

    என் சொந்த நம்பிக்கை வைணவமே. அதை நான் மறைக்கவோ வேறு விதமாக வேஷம் இடுவதோ இல்லை. எனக்கு வைஷ்ணவத்தில் தான் நூறு சதவிகிதம் ஈடுபாடு, ஆகையால் வைணவம் குறித்த கட்டுரைகளையே இடுகிறேன். ஆதி சங்கரர் முதலானோர் வைஷ்ணவத்துக்குச் செய்த தொண்டினைப் பற்றிக் கட்டுரையில் பேசுவதில் எந்த ஒரு தீமையும் இல்லை. இதைத் தான் நீங்கள் “உள்நோக்கு” என்று கூறுகிறீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    முன்பு விஷ்ணு அவதாரங்கள் குறித்து உங்களுக்குப் பிடித்த மேற்கோள் ஒன்றை இட்டு விட்டு இப்போது நீங்கள் ‘ஹரி-ஹர அபேதம்’ பேசுவது வேடிக்கையாய் உள்ளது.

    நான் மற்ற இந்துக்களையும் நெருங்கிய நண்பர்களாகவே பாவிக்கிறேன்; அவரவர் தத்தம் பாரம்பரியத்தில் ஈடுபாடு செலுத்தி அதே சமயம் ஒருவரையொருவர் புண்படுத்தாமல் ஒற்றுமையாய் இருப்பதே சரி. ஆகையால் தான் மேற்கோள்களை மாத்திரம் காட்டி விட்டு, விமர்சனத்தைச் செய்யாமல் இருக்கக் கேட்டுக்கொண்டோம் (if it is a controversial topic, just paraphrase or quote the source and do not give an opinion on it). இது தவறியதால் தான் நான் (பிறர் எழுதிய) ஒரு சில கட்டுரைக்கடியில் உங்களுக்குக் கேட்கக் கசப்பாக உள்ள மறுமொழிகளை இட நேர்ந்தது. மேற்படி குறிப்பிட்ட அக்கட்டுரைகளில் வைணவர்கள் எந்த அளவுக்குப் புண்படுமாறு உள்ளது என்பதை வைணவர்கள் தான் அறிவர்.

    நீங்கள் நம்மைப் பற்றி ஆசிரியர் குழுவிற்கு முறையிட்டுள்ளீர்கள் என்று தெரிகிறது–

    // அதைத் தன் வெற்றியாகக் கருதிக்கொண்டு இவர் மேலும் கும்மியடிப்பார் என்றால் அது இந்தத் தளத்தின் ஆதாரக்கொள்கைக்கே ஆப்பாகிவிடும் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். //

    ஒரு கட்டுரைக்கடியில் மறுமொழியில் நண்பர் ஜடாயு அவர்கள்:

    //இன்னொன்று. வேத இலக்கியம் பற்றி உங்களுக்கு தனித்துவமுள்ள ஒரு பார்வை இருக்குமானால், அதனை விளக்கி நீங்கள் தெளிவான, விரிவான கட்டுரைகளாக எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் (முன்பு ஒருமூறையும் இப்படி சொன்னதாக ஞாபகம்). //

    என்று என்னைக் கேட்டுக் கொண்டதால் கட்டுரை எழுதத் தொடங்கினேன். அத்துடன், ஆசிரியர் குழுவில் உள்ளோர் எனது பிளாக்-ஐப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டி தொடர்புகொண்டு கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

    என் கட்டுரைகளில் என் கொள்கைக்கு மாறாக, நீங்கள் கூறுவதற்கு ஏற்ப மாற்றி எழுதுவதற்கு ஒரு பொழுதும் இசையமாட்டேன். It is more important to be clear than to agree.

    (edited and published)

  13. அன்புள்ள மலர்மன்னன் ஐயா,

    வணக்கம்.

    //அவர் சொன்னதைத்தான் சொல்லியிருக்கிறேன், நானாகச் சொல்லவில்லை என்றே சொல்லிச் செல்வது கேட்போருக்குத் திருப்தியளிக்காது. மற்ற பெரியோர் சொன்னவற்றை எடுத்தாள்வதோடு சொந்த அனுபூதியையும் குறிப்பிட்டாலன்றி திருப்தி அளிக்கவும் இயலாது. //

    சொந்த அனுபூதியாகிய சிறியேனுடைய அற்ப புத்திக்கு எட்டிய அளவிற்கு பக்தி அனுபவத்தைக் கட்டுரையில் குறித்துள்ளேன்.

    நான் பச்சைப் பெட்டியில் பெருமாள்-கருடன் படத்திற்கு அருகில் மேற்கோள் காட்டியுள்ளது மதுசூதன சரஸ்வதிகள் எழுதிய ‘கூடாரத்த தீபிகை’ என்ற புத்தகத்தில் உள்ளது. அதன் மையக் கருத்தாகிய “அவதாரப் பெருமையைப்” பற்றிக் கூறுவதே, ஆகையால் அதில் உள்ள ஒரு விஷயத்தை முன்வைத்து அதை விளக்குவது தேவையில்லை. “இது சர்ச்சைக்குரியதாக இருக்கிறதே, ஆகையால் இந்த வாக்கியத்தை நீக்கிவிடலாமா?” என்று நினைத்தேன். ஆனால், கட்டுரை ஆசிரியருக்கோ வாசகர்களுக்கோ உடன்படாத வாக்கியங்களை நீக்கி மேற்கோள் காட்டினால் அது மோசடி, ஆசார்ய துரோகம், நேர்மையற்ற அரசியல். ஆகையால் அப்படிச் செய்யவில்லை. கட்டுரையின் தலைப்பு “அச்சுதனின் அவதாரப்பெருமை” என்பதே. ஆகையால், அதற்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் கட்டுரையில் இறங்கவில்லை.

    நண்பர் வெங்கட் அவர்களுக்கு எழுதிய பதிலில் உள்ள இவ்வாக்கியத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்:

    // ஆகையால் தான் மேற்கோள்களை மாத்திரம் காட்டி விட்டு, விமர்சனத்தைச் செய்யாமல் இருக்கக் கேட்டுக்கொண்டோம் (if it is a controversial topic, just paraphrase or quote the source and do not give an opinion on it). //

    நீங்கள் கேட்டுள்ளீர்கள்:

    // இதற்கிடையில் ஸ்ரீவித்யையிலும் லயிப்பு உண்டாகிக் கூடவே ராமன் என்றாலும் க்ருஷ்ணன் என்றாலும் உடம்பில் மின்சாரம் பாய்ந்துவிடுகிறது. இப்போது சொல்லுங்கள், நான் எதில் சேர்த்தி? சைவனா, சாக்தனா, வைணவனா? //

    அதை முடிவு பண்ண வேண்டியது நீங்களே. “வழிபாடு” என்பது வேறு விஷயம், “கொள்கை” என்பது வேறு விஷயம். என்னைத் தனிப்பட்ட முறையில் கேட்டதால் கூறுகிறேன்: பரமாத்மா அனைவருக்கும் தாய், தந்தை, எல்லாம். அவனுடைய திவ்ய ஸ்வரூபம் வேறு பக்தர்களை ஈர்த்திருக்கிறது என்றால் அதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

    // ஆதி பராசக்தி படைத்தல் காத்தல் அழித்தல் என்ற தொடர் சங்கிலி அறுபடாமலிருக்க ஒரு சக்தி மீதே மூன்றையும் சுமத்திவிடாமல் ஒவ்வொரு சக்தியிடமும் ஒரு தொழிலை ஒப்படைத்திருப்பதாய்க் கொள்கிறேன். //

    கண்டிப்பாக இது சாக்த கொள்கையே. இது என் கொள்கை அல்ல.

    // திருமால் காத்தல் தெய்வமாதலால் இக வாழ்வு தருபவர் அவரே. //

    // இக வாழ்விற்கான அருளுக்குத் திருமாலின் லட்சணங்களான ஸ்ரீ ராம க்ருஷ்ணாம்ருதம் பருகி பர சுக மோட்ச சித்திக்கு சிவனையும் நம்பியிருக்கிறேன்.//

    இதில் தான் நான் திடமாக, உறுதியாக வேறுபடுகிறேன். திருமால் வெறும் இக வாழ்வு தருபவர் அல்ல. “முகுந்தன்” என்னும் பெயருக்கு “மோட்சமாகிய பரகதியை அளிப்பவன்” என்று அர்த்தம். அவர் வெறும் காத்தல் தொழில் புரிபவரும் அல்ல. முத்தொழில்களையும் நடத்துபவராக அவரை நான் வணங்குகிறேன்.

    கொள்கைகளில் எனக்கும் உங்களுக்கும் வேறுபாடு உண்டு என்பதற்காக, நான் உங்களுடைய தொண்டினை அவமதிக்கவில்லை. அற்பனாகிய நான் காசு தேடி நாடு கடந்துச் சென்றவன், ஆகையால் உங்களை அவ்விஷயத்தில் அவமதிக்க எனக்கு உரிமையும் இல்லை.

  14. //கொள்கைகளில் எனக்கும் உங்களுக்கும் வேறுபாடு உண்டு என்பதற்காக, நான் உங்களுடைய தொண்டினை அவமதிக்கவில்லை. அற்பனாகிய நான் காசு தேடி நாடு கடந்துச் சென்றவன், ஆகையால் உங்களை அவ்விஷயத்தில் அவமதிக்க எனக்கு உரிமையும் இல்லை. – கந்தர்வன்//

    கொள்கையில் வேறுபாடிருந்தால் ஒருவரையொருவர் ஏன் அவமதித்துக் கொள்ள வேண்டும்? காசு தேடிச் செல்வதில் குறைபாடும் இல்லை, குற்றமும் இல்லை. நான் ஏதோ தொண்டு செய்வதாக எல்லாம் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு விருப்பமானதைச் செய்கிறேன் என்பதற்குமேல் இதில் எதுவும் இல்லை. என் கருத்தை மறுக்கவோ விமர்சிக்கவோ உங்களுக்குப் பூரண உரிமை உண்டு. நான் எதில் சேர்த்தி என்று கேட்டது எனக்கு விடை தெரியாததால் அல்ல.
    -மலர்மன்னன்

  15. //”முகுந்தன்” என்னும் பெயருக்கு “மோட்சமாகிய பரகதியை அளிப்பவன்” என்று அர்த்தம். -ஸ்ரீ கந்தர்வன்//

    இத்ற்கு மோட்சம் (பரகதி) அடைய வழி செய்பவர் என்பதாக நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். அவருடைய அநுக்ரஹமாயினும் சம்ஹாரமாயினும் பரகதி அடைய வழி செய்பவை எனக்கொள்கிறேன். அளித்தல், வழி செய்தல் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் விளக்கத் தேவையில்லை.
    -மலர்மன்னன்

  16. நமது சனாதன தர்மத்தில் பல்வேறு பெயர்களும் பல்வேறு வழிபாட்டு முறைகளும் உண்டு. எல்லாமே ஒரே இலக்கை நோக்கி செல்லும் பாதைகளே ஆகும். ஆனால் அறியாமை காரணமாக என் வழி மட்டுமே உயர்ந்தது. பிற வழிகள் என் வழியை விட மட்டம் என்ற தவறான கருத்து பலரிடம் முளை விட்டு இருந்தது. இதனை போக்கவே, ஆதி சங்கரர் முயற்சிகள் எடுத்து,கணபதி , முருகன், சூரியன் ,சக்தி, திருமால், பரமசிவன், ஆகிய ஆறுவகை வழிபாட்டையும் ஒன்று படுத்தி, ஷண்மத ஸ்தாபனம் செய்தார்.

    இதனையே மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தில் சிவபுராணத்தில் “ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ” எனவும், அதே திருவாசகத்தில் திருத்தேள்ளேணத்தில் “ஒரு நாமம் ஓர் உருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ “எனவும் பாடியுள்ளார்.

    வழிகள் பல.எல்லா வழிகளும் உயர்ந்தவையே ஆகும்.நமக்கு எந்த வழி பிடித்துள்ளதோ அதை சர்வ சுதந்திரமாக பின்பற்ற வேண்டும் . அதைவிட முக்கியம் என் வழி மட்டுமே உயர்ந்தது என்று யாரும் சொல்லக்கூடாது. அவ்வாறு சொல்பவர்கள் தங்கள் அறியாமையையும், முட்டாள் தனத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிரார்கள்.

    வேதங்கள் அனைத்தும் பரம்பொருள் ஒன்றே என்பதையும் அதை உணரும் vazhimuraikal பல என்பதையும் மிக அழுத்தமாக வலியுறுத்தி சொல்கின்றன. உதாரணமாக தெய்வ வழிபாடுகளில் நாம் பயன்படுத்தும் அஷ்டோத்திரம், மற்றும் சஹாச்ற நாமங்களில் நாம் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் பல் வேறு உண்மைகளை தெரிந்து கொள்ளமுடியும். அச்சுதாய நமஹ என்ற வணக்கம் திருமால் வழிபாட்டிலும், சுப்பிரமணியர்(முருகன்) சகஸ்ர நாமத்திலும் வருகிறது. எனவே அச்சுதன் என்பது திருமால், திருமால் மருகனாம் முருகன் இருவருக்குமே பொதுப்பெயர் ஆகும்.

    இதைப்போலவே பக்தவத்சலாய நமஹ என்பது பல அஷ்டோத்திரங்களிலும் , பல சஹஸ்ர நாமங்களிலும் காணப்படுகிறது. எனவே இது என் இறைவனின் பெயர் மட்டுமே என்று தனி உரிமை யாரும் கொண்டாடக்கூடாது. அது முழு பைத்தியங்கள் மட்டும் செய்யும் செயல் ஆகும்.

  17. அன்புள்ள மலர்மன்னன் அய்யா,

    // கொள்கையில் வேறுபாடிருந்தால் ஒருவரையொருவர் ஏன் அவமதித்துக் கொள்ள வேண்டும்? //

    இக்கருத்தோடு நான் பூரணமாக உடன்படுகிறேன். இதைத் தான் நான் பல காலமாகச் சொல்லி வருகிறேன். நீங்கள் தெளிவாகக் கூறிவிட்டீர்கள்.

    // இத்ற்கு மோட்சம் (பரகதி) அடைய வழி செய்பவர் என்பதாக நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். //

    “முகுந்தன்” என்பதை ஆதி சங்கரர் விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் “முக்திம் ததாதி இதி முகுந்த – मुक्तिं ददाति इति मुकुन्दः”, அதாவது “முக்தியைத் தருபவன் முகுந்தன்” என்று விளக்கியுள்ளார்.

    “நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம்” என்றும், “மா அயோயே மா அயோயே மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி” என்றும் பரிபாடலில் சங்கத் தமிழர் பாடவில்லையா?

    “மோக்ஷம் இச்சேஜ் ஜனார்த்தனஹா” – ஜனார்த்தனனாகிய திருமாலிடம் மோக்ஷத்தை வேண்டுவது – இதெல்லாம் பிரசித்தமான பிரமாணங்கள்.

    ஆரணிய காண்டத்தில் ஜடாயுவுக்கும், பின்பு உத்தர காண்டத்தில் அயோத்திவாழ் “புற்பா முதலாப் புல் ஏறும்பாதி” அனைத்துக்கும் இராமனே வைகுண்டமாகிற முக்தியைத் தருவதாக வால்மீகி பகவான் இராமாயணத்தில் பாடவில்லையா? ஓர் ஆய்ச்சிக்குக் கண்ணன் அந்நிலையைத் தந்திருப்பதாக பாகவதத்தில் சுக ரிஷியும், விஷ்ணு புராணத்தில் பராசர மகரிஷியும் சொல்லவில்லையா?

    இப்படிப் பெரியோர்கள் சொல்லியுள்ளமையால் முகுந்தபதத்துக்கு ‘முக்தி தருபவன்’ என்று பொருள் கொள்வதே சிறந்தது என்று நம்புகிறேன். வெவ்வேறு பலன்களுக்காகத் தனித்தனியாக வெவ்வேறு தெய்வங்களின் தயையை எதிர்பார்த்து நிற்பது கீதை கூறும் ஏகாந்த பக்தியின் இலக்கணத்திற்கு மாறானது. (தெய்வங்களிடம் சென்று வேண்டுவது வேறு, அவர்களை வழிபடுவது/வணங்குவது வேறு.)

    மேலும் கண்ணன் வழி செய்பவன் மட்டுமே, அளிக்கும் உரிமை வேறு ஒருவரிடம் உள்ளது என்று கொண்டால் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் மேலாக ஒன்றை ஏற்கவேண்டும். அது கீதை கூறும் சித்தாந்தத்துக்குப் பொருந்தாது.

  18. “வழிமுறைகள் ” என்ற சொல் என்னுடைய மேலே கண்ட கடிதத்தை டைப் செய்யும்போது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றம் ஆகி வர மறுத்து சிறிது மக்கர் செய்தது. எனவே அதை அப்படியே ஆங்கிலத்திலேயே விட்டுவிட்டேன்.

  19. ஸ்ரீ கந்தர்வன், ஆழ்வார் திருவடிகளே சரணம்.

    நான் வைஷ்ணவன் அல்ல. ப்ரதேசாந்தரத்தில் இருக்கும் எமக்கு திருப்புகழும் ஸ்ரீமத் பாகவதமும் வாழ்க்கைத் துணை.

    அச்சுதனின் அவதாரப் பெருமை (ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்த சாரம்) வள்ளல் அருணகிரிநாதர் வாக்குப் படி

    மருகன் எனாமல் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
    வரவிடு மாயப் பேய்முலை பருகா மேல்
    வருமத யானைக் கோடவை திருகிவிளாவிற் காய்கனி
    மதுகையில் வீழச்சாடியச் சதமாபுள்
    பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப்போதொரு
    சகடுதையா மற்போர்செய்து விளையாடி
    பொதுவியர் சேரிக்கே வளர்

    புயல் மருகா வஜ்ராயுத
    புரம் அதில் மாபுத் தேளிர்கள் பெருமாளே

    மருமகன் என்றும் பாராமல் கம்ஸன் அனுப்பிய பூதனையின் ஸ்தனத்திலிருந்து பாலொடு உயிரை எடுத்தும் குவலயா பீட யானையை வதம் செய்தும் விளாமர ரூபமாயும் கன்று ரூபமாயும் னின்ற கபிஸ்தாசுரன் மற்றும் தேனுகாசுரன் இவர்களை வதம் செய்தும் இரு பெரு மருத மரங்களுக்கிடையில் போய் அவற்றை முறித்தும் சகடாசுரனை உதைத்தும் (வதைத்தும்) சாணூர முஷ்டிக மல்லர்களுடன் மற்போர் செய்தும் இடைச்சேரியில் வளர்ந்த கண்ணனின் மருகோனே என்று புகழ்கிறார்.

    இஃது யதார்த்தம்.

    ஆதிசங்கரர் மற்றும் மதுசூதன ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வ்யாக்யானங்களில் இருந்து தாங்கள் எழுதியது selective quote. இஃது அவர்களின் சித்தாந்த சாரம் ஆகாது. பஜ கோவிந்தம் மூட மதே என்றும் க்ருஷ்ணாத்பரம் கிமபி தத்வமஹம் ந ஜானே என்று இவர்களின் ஸ்துதிகள் இருப்பினும் summum bonum வேறு அல்லவா.அனன்ய க்ருஷ்ண பக்தர்கள் அத்வைதியாக இருப்பினும் தங்கள் யதார்த்த வ்யாக்யானங்களை ரசிக்கவே செய்வர். Although, I am not knowledeble enough, I understand that every vyaakyaanam of thrimathasthaas are not always interpretted as literal interpretations. Every line of vyaakyaanam is interpretted by the sampradaya vadins in line with the ultimate sidhdhaantham.

    நிகமாந்த தேசிகர், ஹரதத்தர் அருணந்தி சிவம் போன்றோர் வைஷ்ணவ சைவ பக்ஷமாய் காஷ்டமாய் பேசுவது யதார்த்தம். காஷ்டமான வ்யாக்யானங்கள் மற்றும் ஸ்துதிகளை யதார்த்தமாக எற்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்கிறேன். யாதொரு பக்ஷத்தை பின்பற்றினாலும் அவற்றை அப்படியே படித்து அறிவது தான் நன்று என்பதையும் ஏற்கிறேன்.

    ஆனால் பொதுவில் பேசும் போது ஒரு சித்தாந்தத்தை நிலைப்படுத்த வேண்டி நேர் எதிர் சித்தாந்த வாதிகளின் வ்யாக்யானங்களில் இருந்து உதாஹரித்து அவர்களின் சித்தாந்தமே அது தான் என்பது போல பேசுவது தவறு என நினைக்கிறேன்.

    ஹிந்து என்பது உணர்ச்சி பிழம்பான ஒரு பதம். ச்ருத்யாதி க்ரந்தங்களை பின்பற்றும் மக்களையும் அவற்றை பின்பற்றாது ஆனால் அவர்களுடையது போலவே காஷ்டமாய் ஆத்ம விசாரம் செய்யும் பௌத்த ஜைன மற்றும் சீக்கிய விசாரங்களையும் உள்ளடக்கியது இந்த பதம் என்பது ஆர்.எஸ்.எஸ் ஸில் பாடப்படும் கீழ்கண்ட ப்ரார்த்தனை தெரிவிக்கிறது.

    யம் வைதிகா மந்த்ரத்ருச: புராணாம்
    இந்த்ரம் யமம் மாதரிஸ்வான மாஹு:
    வேதாந்தினோ நிர்வசனீயம் ஏகம்
    யம் ப்ரம்ஹ சப்தேன வினிர்திசந்தி

    சைவாயமீசம் சிவ இத்யவோசன்
    யம் வைஷ்ணவா விஷ்ணுரிதிஸ்துவந்தி
    புத்தஸ்ததார்ஹன் இதி பௌத்த ஜைனா:
    ஸ்த்ஸ்ரீஅகாலேதி ஸ்சிக்க ஸந்த

    சாஸ்தேதி கேசித் கதிசித் குமார:
    ஸ்வாமீதி மாதேதி பிதேதி பக்த்யா:
    யம் ப்ரார்தயந்தே ஜகதீசிதாரன்
    ஸ ஏக ஏவ ப்ரபு: அத்விதீய:

    ஸ்ரீமான் வெங்கட் although you no more want to add to what you said, i understand that selective quotations from differing sampradayavadins ultimately distorts the discourse. பின்னும் ஆப்பு, கும்மி போன்ற பதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

    இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமுன்னோடு
    உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்.

    हिन्दु हिन्दु एक् रहे

  20. //“வழிபாடு” என்பது வேறு விஷயம், “கொள்கை” என்பது வேறு விஷயம-ஸ்ரீ கந்தர்வன்//
    எனது வழிபாடு கொள்கை வழிப்பட்டதே. வெறும் சடங்காக, காலைக் கடன்களுள் ஒன்று என்பதுபோல எனது வழிபாடு அமைவதில்லை.
    -மலர்மன்னன்

  21. ஸ்ரீ கிருஷ்ணகுமார்,

    நமஸ்காரங்கள். வேறு சில கட்டுரைகளுக்கடியில் உங்களுடைய மறுமொழிகளைப் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.

    //
    ஆதிசங்கரர் மற்றும் மதுசூதன ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வ்யாக்யானங்களில் இருந்து தாங்கள் எழுதியது selective quote. இஃது அவர்களின் சித்தாந்த சாரம் ஆகாது. பஜ கோவிந்தம் மூட மதே என்றும் க்ருஷ்ணாத்பரம் கிமபி தத்வமஹம் ந ஜானே என்று இவர்களின் ஸ்துதிகள் இருப்பினும் summum bonum வேறு அல்லவா
    //

    மன்னிக்கவும், ‘summum bonum வேறு’ என்றால் அந்த summum bonum பற்றி அவர்கள் பாஷ்யங்களில் எங்காவது கூறியிருப்பார். அப்படி ஏதாவது இடம் உண்டா?

    சங்கரருடைய பாஷ்யத்தில் சிலவற்றை “யதார்த்தம், சித்தாந்தம் ஆகாது” என்று வகைப்படுத்துவதற்கு இடமிருந்தால் பாஷ்யங்களுக்கு டீகை இட்ட ஸ்ரீ ஆனந்தகிரி அப்படிச் சொல்லியிருப்பார். கீதா பாஷ்யத்திற்கு ஆனந்தகிரி டீகை இணையத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. நான் மேற்கோள் எடுத்த சங்கர பாஷ்ய வாக்கியங்களுக்குரிய இடத்தில் டீகையையும் அலசிப் பார்த்து விட்டேன். அப்படி அவரும், “அர்த்தவாதம் யதார்த்தம், சித்தாந்தம் வேறு” என்று சில வாக்கியங்களைக் கழித்திருப்பதாகத் தெரியவில்லை.

    அது மட்டுமா? In Narayaneeyam dasakam 90 slokam 5, Keralite scholar Narayana Bhattar testifies what Sankarar’s siddhantam is. Desikar also conforms and confirms to the same view while referring to Sri Sankarar in Tatparya Chandrika 18.66. It is also evident from Sri Sankarar’s own words (which are not in the original sutra) under Pancharatra Adhikaranam of Brahma Sutra Bhashya. நான் காட்டியவை எல்லாம் யதார்த்தம் என்றால் இவ்வாக்கியங்களை எல்லாம் என்ன செய்ய?

    // காஷ்டமான வ்யாக்யானங்கள் மற்றும் ஸ்துதிகளை யதார்த்தமாக எற்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்கிறேன் //

    யதார்த்தம் என்று நான் எங்கு கூறினேன் தெளிவுபடுத்தவும். பாஷ்யத்தில் உள்ள ஒரு வாக்கியத்தை யதார்த்தமாக ஏற்கவேண்டுமேன்றால் அதற்கு பலமான உறுதியான காரணங்கள் இருக்க வேண்டும்.

    // ஆனால் பொதுவில் பேசும் போது ஒரு சித்தாந்தத்தை நிலைப்படுத்த வேண்டி நேர் எதிர் சித்தாந்த வாதிகளின் வ்யாக்யானங்களில் இருந்து உதாஹரித்து அவர்களின் சித்தாந்தமே அது தான் என்பது போல பேசுவது தவறு என நினைக்கிறேன். //

    நீங்கள் கூறுவது போல அத்வைதமானது ஏகாந்த பக்தி மார்க்கத்துக்கு “நேர் எதிர் சித்தாந்தம்” அன்று (சில ஸ்ரீவைஷ்ணவ/மத்வ சம்பிரதாயத்தவர்கள் கூட இப்படித் தவறாக எண்ணுகிறார்கள்). முக்தி நிலை எத்தகையது என்பதில் தான் சங்கர-ராமானுஜ-மத்வ ஆச்சாரியார்களுக்குள் வேறுபாடு. அது தவிர ஆங்காங்கு சிறுசிறு வேறுபாடுகள் அத்வைத ஆச்சாரியார்களுக்குள்ளேயே இருந்தது. (உதாரணமாக பாமாதி பிரஸ்தானம், விவரண பிரஸ்தானம்).

    பரமார்த்த நிலையில் நிர்விசேஷ சின்மாத்திர தத்துவம் ஒன்றே உண்மை என்று கூறினாலும், அத்வைதம் வியாவகாரிக நிலையில் பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அளித்து தேவ-மனுஷ்ய-திர்யங்-ஸ்தாவராதி ஜீவகோடிகளையும் தன்னுள்ளே அடக்கி ஆளும் பரமாத்மா ஒன்றையே ஏற்கும். அத்துடன் ஜீவகோடிகள் சம்சாரத்திலிருந்து வீடுபேற பரமாத்மா ஒருவனே வழி என்பதையும் ஏற்கிறது. ஏன், முக்தி நிலையில் நிர்குண சின்மாத்ரமே நிலைக்கும் என்றாலும் கூட, அத்தகைய நிலையை அடைவதற்கு ஏதுவாகிய ஞானத்தை சர்வேஸ்வரன் கிருபை தேவை என்றே சங்கரர் சூத்திர பாஷ்யத்தில் அடித்துக் கூறுகிறார்!

    இக்கட்டுரையிலேயே மதுசூதன சரஸ்வதியின் வாக்கியத்தைக் காட்டியுள்ளேன். (‘இக்காரணம் பற்றியே’ என்று தொடங்கி ‘என்று மதுசூதனர் பாஷ்யமிட்டிருப்பது அருமையான விஷயமாகும்’ என்று முடியும் பகுதியை மீண்டும் படித்துப் பாருங்கள். அந்நூல் மிக ஆழமான “சங்க்ஷேப சாரீரக” வேதாந்த நூலின் விளக்கவுரையாகும். அங்கு யதார்த்தத்துக்கும் அர்த்தவாதத்துக்கும் இடமில்லை.

    // ஹிந்து என்பது உணர்ச்சி பிழம்பான ஒரு பதம். // இத்யாதி…

    இந்து ஒற்றுமை குறித்து நீங்களும் நண்பர் பாலச்சந்திரனும் கூறுவதை ஏற்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். பாடல் “எந்த மாத்ரமுன” என்று தொடங்கும் அன்னமாச்சாரியார் கீர்த்தனையை நினைவூட்டுகிறது, அக்கீர்த்தனம் கூறும் பொருளும் இப்பாடலுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

    “நான் எப்படி சேவிக்கிறேனோ அப்படியே நீயும் சேவிக்க வேண்டும். நான் சேவிக்கும் வழியில் நீ சேவிக்கவில்லை என்றால் நீ அயோக்கியன்” என்றெல்லாம் கூறத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இடத்தில் ஈடுபாடு இருக்கலாம். இந்துக்களுக்குள் சித்தாந்த வேறுபாடுகள் இருக்கலாம். சின்னங்கள் வெவ்வேறாக இருக்கலாம். We can agree to disagree and still stand in unity against common threats. இந்தப் பாணியில் தான் நான் இத்தளத்தில் எழுதி வருகிறேன்.

  22. மேலும், “யதார்த்தம்” என்று சில வாக்கியங்களை சிலர் வகைப்படுத்தினால், வேறு சிலர் ஜீவாத்ம-பரமாத்ம ஐக்கியத்தைக் கூறும் அத்வைதபரமான பாஷ்ய வாக்கியங்களை எல்லாம் யதார்த்தம் என்று கூறிவிட்டு, “சங்கரர் சித்தாந்தம் விசிஷ்டாத்வைதமே” என்று கூறுவதைத் தடுக்க முடியாது. இப்படி நம் இஷ்டப்படி பொருள் கொள்ளாமல் நடுநிலை நின்று, starting from blank paper ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

  23. அன்புள்ள பாலச்சந்திரன்,

    ஒற்றுமை குறித்த கருத்துக்களை ஏற்கிறேன். ஏற்கனவே சொன்னாற்போல சித்தாந்தங்கள் வேறுபடலாம், பிரமாணங்கள் வேறுபடலாம். அதற்காக நீங்கள் சிலரை “முழுப்பைத்தியம்” “அறிவிலி” “முட்டாள்” என்று வகைப்படுத்தத் தேவையில்லை. அப்படிக் கூறுவதால் நீங்கள் உங்களை அறியாமலேயே திருமழிசை ஆழ்வார், ஆளவந்தார், இராமானுஜர், கூரத்தாழ்வான், மத்வாச்சாரியார் முதலிய பெரியோர்களையும் சேர்த்துக் கூறுகிறீர்கள்.

    We can agree to disagree and still be friendly and brotherly. If necessary, we can have an intellectual debate, but this would sidetrack the purpose of this site. Also, I have already said that the editors are welcome to stop me from writing if they feel my participation is sidetracking their agenda.

    We can finish off this discussion as it is tangential to the purpose of the article.

  24. சு பாலச்சந்திரன்
    அன்புள்ள திரு கிருஷ்ண குமார்

    உங்கள் கடிதங்கள் மிகவும் உள்ளடக்கம் மிகுந்து கருத்துப் பொலிவுடன் உள்ளன. அறியும் , சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு என்று நம் மக்கள் கூறுவர்.அதி தீவிர வைஷ்ணவமும், அதி தீவிர சைவமும் நம் நாட்டில் பக்தியை விட வீண் சண்டைகளையே வளர்த்துள்ளன அந்தக்காலங்களில். இவர்கள் பலர் திருந்திவிட்டார்கள் ஆனால் சிலர் இன்னும் திருந்தவில்லை. இந்நிலை நீடித்தால் பிற மதத்தினர் அதிகமாகி நம் வழிபாட்டு தளங்கள் பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இஸ்லாமிய வெறியர்களால் அழிக்கப்பட்டது போலவே இங்கும் நேரிடாதபடி தடுக்கவேண்டியது நம் கடமை. தாங்கள் பயன்படுத்தும் தமிழ் மொழி தற்போது வழக்கத்தில் இல்லை. ஆனாலும் எங்களுக்கு புரிந்துகொள்வதில் அதிக சிரமம் இல்லை. இருந்தாலும் ஸ்ரீமான் என்பதற்கு பதிலாக திரு என்பதையும், வேறுசில கடினமான பழைய தமிழுக்கு பதிலாக எல்லோருக்கும் ஈசியாக புரியும் வேறு சொற்களை நீங்கள் உபயோகித்தால் நான் மேலும் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். உங்கள் எண்ணங்கள் கடிதம் மூலமாக இந்த தமிழ் இந்து அரங்கில் வெளிப்படுவதனால் இந்த அரங்கம் மிக சுவை கூடி அழகு பெறுகிறது. எல்லாம் வல்லானாகிய இறை அருளால் தங்கள் பரம பவித்ரமான கருத்துக்கள் தொடர்ந்து பலகாலம் வெளியாகி எங்களுக்கு நல்ல வழி காட்ட உதவட்டும்.
    ஓம் நமசிவாய

  25. அன்புள்ள மலர்மன்னன் அய்யா,

    // வெறும் சடங்காக, காலைக் கடன்களுள் ஒன்று என்பதுபோல //

    அப்படிச் சொல்லவில்லை. வழிபாடு என்றால் என்ன, கொள்கை என்றால் என்ன இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை கீதை உரையில் சங்கரர் 7.19-7.23 இல் விளக்கியுள்ளார். அதைப் படித்துப் பார்த்தால் தெளியலாம்.

    இன்னொரு விதமாகப் பார்த்தால், கருடன் ஆதி சேஷன் ஆகியோருக்கும், பெரிய பிராட்டியார், பூதேவி நீளாதேவி முதலானோருக்கும் பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர/வைகானச ஆகம ரீதியில் பூஜை நடக்கிறது. இது வழிபாடு. அதற்காகச் சிலர் மகாலட்சுமித் தாயாரையும் கருடன் ஆஞ்சநேயர் இவர்களையும் பரமாத்மாவே என்று நினைக்கலாம், விஷயம் தெரிந்த பாஞ்சராத்ர/வைகானச சித்தாந்திகள் இதை ஏற்பதில்லை அவர்களுக்குப் பரமாத்மா ஸ்ரீமன் நாராயணன் தான். இது கடவுட்கொள்கை.

  26. ஆன்மிகம் என்கிற விஷயம் குறித்துப் பேசுவதிலும் எழுதுவதிலும் எனக்கு எப்போதுமே தயக்கம்தான். ஏனெனில் சொற்களுக்கு வரம்பு உண்டு. ஓர் எல்லைவரைதான் அவற்றின் மூலம் வெளிப்படுத்த முடிகிறது. எனவே ஆன்மிக விஷ்யம் என்றால் ஆம், ஆம் என ஒதுங்கிக்கொள்ளும் நான் சில பலவீனமான தருணங்களில் அது தொடர்பான வாதப் பிரதி வாரதங்களில் கலந்து கொண்டு நான் ஒரு சட கசட மூட மட்டி என்பதை அமபலப் படுத்திக் கொண்டு விடுகிறேன்.
    ஆன்மிகம் உணரப்பட விஷயம். ஆகையால் சொற்கள் என்ன பயனுமில என்றாகிவிடுகிறது. அந்தரங்கமான ஆன்மிக அனுபவங்களை ஏதோ ஒரு பலவீனமான தருணத்தில் அரையுங் குறையுமாக வெளியிட்டுவிடுகிறபோது அது அதிகப் பிரசங்கித் தனமாகவும் அகந்தையாகவும் ஆகிவிடுகிறது. முக்கியமாக அந்த சுயானுபவங்கள் எச்சிலாகிவிடுகின்றன.

    ”வெவ்வேறு பலன்களுக்காகத் தனித்தனியாக வெவ்வேறு தெய்வங்களின் தயையை எதிர்பார்த்து நிற்பது கீதை கூறும் ஏகாந்த பக்தியின் இலக்கணத்திற்கு மாறானது. (தெய்வங்களிடம் சென்று வேண்டுவது வேறு, அவர்களை வழிபடுவது/வணங்குவது வேறு.)

    மேலும் கண்ணன் வழி செய்பவன் மட்டுமே, அளிக்கும் உரிமை வேறு ஒருவரிடம் உள்ளது என்று கொண்டால் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் மேலாக ஒன்றை ஏற்கவேண்டும். அது கீதை கூறும் சித்தாந்தத்துக்குப் பொருந்தாது” என்று ஸ்ரீ கந்தர்வன் அறிவுறுத்துவதெல்லாம் முற்றிலும் சரியே. ஆனால் ஒரு எல்லைக்குமேல் எதற்குமே அர்த்தமில்லாமலும் அவசியமில்லாமலும் ஆகிவிடுகிறது. கும்பிடும் தெய்வங்கள் எல்லாம் குடும்ப உறுப்பினர்களாகிவிடுகிறார்கள். குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை உரிமையுடன் கேட்பதுபோலாகி விடுகிறது. இதற்லெல்லாம் என்னிடம் பிரமாணங்கள் இல்லை. பெரியோரின் வழியே பிரமாணங்களைக் கேட்டறிகையில் ஓஹோ, சரிதான் என்று பணிவுடன் கேட்டுத் தெரிந்துகொள்வதோடு நின்று என் சுயானுபவத்தில் திளைக்கிறேன். இதைவிடப் பேரானந்தம் ஏதுமில்லையாய் உணர்கிறேன்.
    எனக்கு சமூகப் பொறுப்பு என ஒன்று இருப்பதாக ஒரு கட்டத்தில் உணர்த்தப்பட்டதால் விலக மனமின்றியே அந்த ஜலக்ரீடையிலிருந்து வெளியே வர நேரிடுகிறது.
    -மலர்மன்னன்

  27. இறையன்பு கொண்டவர்கள் இறுமாப்பு கொள்வதில்லை. இறைவன் ஆதி அந்தமில்லாத தூய்மையான அன்பாக இருக்கின்றார். இதை இறைவனே எனக்கு கூறினார்.

  28. அடியேன் ராமானுஜ தாசன் ,
    /***
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை “ராமாயண தனிசுலோகி” என்ற தம் உரைநூலில் கம்பரைப் பல இடங்களில் மேற்கோள் காட்டுவதையும் அறிகிறோம்.
    ***/

    உண்மையைக் சொல்லும் ! தேவரீர்! ராமாயண தனிசுலோகி, வாசித்ததுண்டா ?
    கண்ணாலாவது கண்டதுண்டா ?
    ஸ்ருஷ்டத்வம் வனவாஸாய ஸ்வநுரஜ்ஜ ஸுஹ்ருஜ்ஜனே |
    ராமே ப்ரமாதம் மா கார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி |

    ராமம் தசரதம் வித்தி அஹம் வித்தி ஜனகாத்மஜாம் |
    அயோத்யாமடவீம் வித்தி கச்ச தாத யதா ஸுகம் || என்னும் ஆரண்ய காண்ட சுலோகத்திற்கு பெரியவாச்சான் பிள்ளை சுவாமியின் வ்யாக்யானம் படித்ததுண்டோ?
    கச்சதா மாதுல குலம் பரதேன ததாநக: |
    சத்ருக்னோ நித்யசத்ருக்னோ நீத: பிரீதி புரஸ்க்ருத: ||
    மற்றும்
    பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லக்ஷ்மனோ லக்ஷ்மீவர்தன: |
    ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யாச: ||
    என்னும் சுலோகங்களுக்கு

    சமமான கம்பராமாயண பாசுரம் உண்டோ?
    இவற்றில்தான் சுமித்திரை ,இலக்குவன் மற்றும் சத்ருக்நருடைய பெயர்க் காரணம் பொதிந்துள்ளன. ராமாயண தனிசுலோகி வாசியும். பிறகு வால்மீகி ராமாயணம் உயர்ந்ததா (அல்லது ) கம்பராமாயணம் உயர்ந்ததா என்று நீரே அறிவீர் .
    அடியேன் ,
    கெனீசு

  29. அடியேன் ராமானுஜ தாசன் ,
    /**
    ஸ்ரீமந் நாதமுனிகள் கம்பருடைய இராம பக்தியில் மெய்மறந்து, “உன் காவியம் வால்மீகி முனிவருடைய ஆதி காவியத்தை விட மிகச் சிறந்ததாக உள்ளது” என்று கொண்டாடியதாகவும்
    ***/
    “அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே — ஸேமுஷீ பக்தி ரூபா ” -என்னும் உடையவர் அருளிய ஸ்ரீபாஷ்ய கடவுள் வாழ்த்து வரிகளைத்தான் ,கம்பரும்
    “உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் — அளவிலா விளையாட்டுடையார் — அன்னவர்க்கே சரண் ” -என்று எழுதினார் . மேலும் கம்பர் ஸ்ரீ பராசர பட்டருக்கு சமகாலத்தவர் என்பர்.
    ஆனால் நீவிர் அதை மாற்றுகின்ரீர் ! விந்தை !
    கம்பரை ஸ்ரீநாதமுனிகள் ச்வாமி பாராட்டினார் என்பது வரலாற்றுப் புரட்டு !
    கலி பிறந்து 5000 ஆண்டுகள் கழித்து , ஸ்ரீநாதமுனிகள் ச்வாமி வெளிக்கொணர்ந்த சுவாமி நம்மாழ்வார் பற்றிய “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் பிரபந்தம் தான் ,முதல் அருளிச்செயல். கம்பர் அருளிய சடகோபரந்தாதி அதற்கு மிக ப் பின்னர்தான். அதாவது ஸ்ரீ பராசர பட்டர் காலத்திலாம்.
    அடியேன் ,
    கெனீசு

  30. /***
    கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் பெருங் காப்பியத்தில் வேதாந்தத் தத்துவத்தை விளக்கவல்ல பல அரிய பெரிய பக்திப்பாடல்களை விராதன், கபந்தன், இந்திரன் முதலியோர் வாய்மொழியாகச் சேர்த்துள்ளார். முனிபுங்கவராகிய வால்மீகியின் ஆதி காவியத்திலும் கூட இத்தகைய பக்திரசம் ததும்பும் இடங்கள் காணப்படுவது அரிது
    ***/
    ஆமாம் ! !! ஆமாம் ! !
    கம்பர் மிகப் பெரிய வேதாந்தி தான் !
    தன்னை ஆதரித்த வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலை 100 பாட்டிற்கு ஒரு பாட்டிலே முதலில் தான் எழுதிய ராமாவதாரத்திலே பாடினர் .பின்னர் திருவரங்கத்தில் ,அந்நூலில் நரவாசனை மிகுதியென அறிவுரை கூறியும் கேளாமல் அதனை 1000 பாட்டிற்கு என்று விடாப்பிடியாக மாற்றினார் .

    இப்படிப்பட்ட கம்பர் உமக்கு ஆதிகவியும், ரிஷியுமான வால்மீகியைவிட உயர்ந்தவராகப் போனது விந்தையிலும் விந்தை .
    https://www.valmikiramayan.net/utf8/baala/sarga2/bala_2_frame.htm
    பால காண்டம் 2ம் சர்க்கம் -31ம் சுலோகம்
    மச்சந்தாதேவ தே ப்ரம்மந் ப்ரவ்ர்த்தே அயம் ஸரஸ்வதி|
    ராமஸ்ய சரிதம் க்ருத்ஸ்நம் குரு த்வம் ரிஷிஸத்தம ||
    பொருள் : ஓ ப்ரம்ம ரிஷியே உன் நாவில் உதித்த வார்த்தைகள் என் சங்கல்பத்தால் ஸரஸ்வதி ஸ்ருஷ்டித்தது . எனவே நீர் பூரணமாக ராம கதையை (நாரதர் சொன்னபடி) விஸ்தாரமாக இயற்றுவீராக .

    பால காண்டம் 3ம் சர்க்கம் -4ம் சுலோகம்
    ஹஸிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம் |
    தத் ஸர்வம் தர்ம வீர்யேந யதாவத் ஸம்ப்ரபஶ்யதி ||
    பொருள் : வால்மீகி முனிவர் தனது யோகசக்தியால் ராமர்,லக்ஷ்மணர் , ஸீதை மற்றும் எல்லா பாத்திரங்களும் தம்முள் பேசியது ,சிரித்தது முதலிய அனைத்து செய்கைகளும்,நிகழ்வுகளும் நடந்தது அனைத்தும் நீரில் காண்பது போல கண்டு எழுதினார் .
    பால காண்டம் 2ம் சர்க்கம் 33 ம் சுலோகம்
    யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரித ச மஹீதலே |
    தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி || -33
    பொருள் : இதுவரையில் மலைகளும் ,நதிகளும் இத்தரணியில் நிற்குமோ அதுவரையில் உனது ராமாயணம் நிலைத்து இருக்கும் .
    கம்பராம் வேதாந்தியாம் !!
    1984 ம் ஆண்டு கீர்த்திமூர்த்தி , நியாய வேதாந்த வித்வான் உ.வே.காரப்பங்காடு வேங்கடாசார்ய ச்வாமி எழுதிய ஸ்ரீ ராமாயண ஸாரம் என்னும் ஆராய்ச்சி கட்டுரையைப் படியும் .

    அதில் ப்ரம்ம சூத்திரத்தின் சிலவற்றை வால்மீகி ராமாயணத்தில் நிறுவிக் காட்டுவதை வாசியும்.
    அன்புடன் ,
    கெனீசு

  31. கந்தருவனே
    அருணந்தி சிவாச்சாரியார் போன்றவர்கள் எழுதிய நூல்களை சிறிதும் வாசிக்காது தூற்றக் கூடாது.
    ஆதிசங்கரரும் மத்துவரும் உடையவரும் பசுஞானிகள். சிவாபிரானோ பதிப்பொருள்
    அவரருளிய ஆகமங்களை நீ மோகனமென்று தூற்றுவதை ஒத்துக் கொள்ளமுடியாது. ஆகம சாரமாம் சிவஞானசித்தியை முழுவதும் வாசித்துப் பின் கண்டனம் கூறு.

    நீ கூறினாய் ஆதிசங்கரர் ஒத்துக் கொள்ளாததால் சைவாகமங்கள் ஏற்கத்தக்கனவல்ல என்று. அந்த ஆதிசங்கரர் ஸ்ரீகண்ட சிவாச்சாரியாரிடம் தீட்சை பெற்று உயந்த கதையை ஸ்ரீகண்ட விஜயத்தில் அறியும். பின் அவர் சிவானந்தலகரி சௌந்தரியலகரி போன்ற நூல்களை இயற்றி ஆகமவழி நின்ற சம்பந்தரையும் புகழந்த கதை தெரியாதோ?

    அவர் ஆகமங்களை இகழ்ந்தார் எனில் பஞ்சராத்திரமும் அவரால் மறுக்கப்பட்ட கதையை அவர் பாடியத்தில் காண்பாய்

    சங்கரரோ துஷ்டனான உடையவனோ ஏற்றுக்கொள்ளாமல் போனால் ஆகமங்கள் அப்பிராமணம் ஆகிவிடுமா?

    திருமூலதேவர் அருளிய திருமந்திரத்தில் ஆகமச்சிறப்பு என்னும் தனித்தலைப்பொன்றிருக்கிறது.அதில் அவர் சிவாகமங்களை வெகுவாகப் புகழ்ந்திருப்பதை உனது அவிந்த கண்களைக் கொண்டு பார்.
    ஒன்றைப் புரிந்து கொள் திருமூலதேவர் நீ கொண்டாடும் சங்கரராமானுசமத்துவர்களுக்கு வெகுகாலம் முந்தையவர்கள் .அவர் சிவயோகத்தில் மூவாயிர வருடங்கள் இருந்து ஆண்டுக்கொருபாடலாக இயற்றிய ஆகமசாரமாம் திருமந்திரத்தை இன்னும் பலரும் ஆய்வு செய்கின்றனர்.இதனால் ஆதிசைவ பிராமணர்களும் அவர்களால் ஓதப்படும் ஆகமங்களும் எவ்வளவு பழமையானது என்பதை உணர்ந்து கொள்
    நீலகண்டரும் சங்கரருக்கு முந்தையவர்கள் என்பதை புரிந்து கொள்.

    ராமானுசன் என்னும் பஞ்சமன் நீலகண்டபாடியத்தை காப்பியடித்து எழுதிய கதை எமக்குத் தெரியுமாதலால் அதனை ஒருபொருளாக மதியோம்.

  32. ஆகமங்களை மோகனமெனப் கூரேசவிசயம் கூறும் அந்த துஷ்டநூலை ஒரு பொருளாக யாராவது மதிப்பரா சீசீ

    திருமூலர் அருளிய திருமந்திரமோ பலநாட்டவர்களால் ஆராயப்படுகிறது.அவரே ஆகமங்களை ஒத்துக்கொண்டிருக்க சங்கரரோ ராமானுசன் என்னும் சிவநிந்தகனோ குருட்டாழ்வானோ ஏற்றுக்கொள்ளாவிடில் எங்களுக்கு நஷ்டம் என்ன?

    ஒன்றோடு ஒன்று மாறுபடும் சங்கரராமானுசமத்துவ சித்தாந்தம் .அம்மூன்றையும் எப்படி நீ ஏற்றுக்கொள்வாய்? ஏதாவது ஒன்றல்லவோ ஏற்கப்பாலது.சங்கர சித்தாந்தாமோ ஆத்மாவே பொருளென்றும் மற்றையது விஷ்ணுவே பொருளென்றும் கூற நீ அம்மூன்றையும் ஏற்றுக்கொண்ட விசித்திரத்தை எப்படிக் கூறுவது?

    சங்கரர் விஷ்ணுவே பரம் என்றனராம் அப்படியெனில் உனது விஷ்ணு ஆலயத்தில் நீங்கள் ஆதிசங்கராழ்வார் என்னும் பெயர் சூட்டி அவருக்கு மூதேவி புண்டரம் அணிவித்து அவரை ஏன் அங்கீகரிக்க வில்லை ?

    சிவானந்தலகரி சௌந்தரியலகரி போன்ற நூல்களைப் படித்து உண்மையுணர்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *