தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!

பாரத சமுதாயம் என்ன பாபம் செய்ததோ, அதனை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு மன் மோகன் சிங் என்னும் அந்நியரின் கைப்பாவையிடம் சிக்கிக் கொண்டுள்ளது.

இந்த அந்நியருக்கு பாரதத்தின் நலன் மீது ஆத்மார்த்தமாக எவ்வித ஈடுபாடும் இருப்பது சாத்தியமில்லை. பாரதத்தின் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டாலும், கை மாறிப் போனாலும், பாரதத்தின் மீது பகைமை பாராட்டும் நாடுகள் பல மாறு வேடங்களில் உள்ளே புகுந்து பொருளாதாரச் சீர்குலைவையும், உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைவிக்கும் நாச வேலைகளையும் செய்தாலும் அதுபற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல் அகப்பட்டவரை சுருட்டுவதிலேயே குறியாக இருக்கும் அந்நிய சக்திக்குத் துணை போகிறோமே என்கிற உறுத்தல்கூட இல்லாமல் காலந் தள்ளிக்கொண்டிருக்கும் ஒருவரின் கையில் இன்று நாட்டின் நிர்வாகம் மாட்டிக்கொண்டுள்ளது.

மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று அறியப்பட்ட மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தில்தான் என்றுமே காணாத வகையில் இன்று மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு பாரதம் ஆளாகியிருக்கிறது. நேர்மையான வழியில் பொருளீட்டும் எவராலும், அவர்களின் வருமானம் பல்லாயிரங்களாகவே இருந்தாலுங் கூட விலைவாசிக்கு ஈடு கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சாமானிய மக்களின் நிலைமை எம்மாத்திரம்? தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கத் தொடங்காத குறைதான்!

ஊழல் செய்து லஞ்சம் வாங்கிப் பழகியவர்களைத் தவிர வேறு எவராலும் இன்று நிம்மதியாக வாழ முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

நிர்வாகத் திறனோ, அமைச்சரவை சகாக்கள் மீதான ஆளுமையோ, சுய மரியாதையோ, நாட்டு நடப்பு பற்றிய கவலையோ சிறிதும் இல்லாத, மிகவும் நம்பகமான பினாமியாகத் தனக்கு ஒருவர் வேண்டும் என்று சோனியா காந்தி தேடியதில் அகப்பட்டவர்தான் மன்மோகன் சிங் என்பது இப்போது புரிகிறது. இதன் விளைவாக நாடு அனுபவிக்கப் போகும் பேராபத்தை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது.

மன்மோகன் சிங் எது குறித்தும் கவலைப்படாமல் பினாமிப் பிரதமராக இருப்பதிலேயே சுகம் கண்டு வருகிறார் என்று மட்டுமே எண்ணிக்கொண்டிருந்த நமக்கு அது போதாது என்று மிகப் பெரிய அதிர்ச்சியையும் கொடுத்துவிட்டார், மன்மோகன் சிங். முன்பின் யோசியாமல், என்ன பேசுகிறோம் என்கிற பிரக்ஞையுமின்றி தேசிய உணர்வையே அவமதிக்கத் தொடங்கியிருக்கிறார், அவர்.

bjp-ekta-yatra-posterகஷ்யப முனிவர் பெயரால் அமைந்த காஷ்மீர பூமி ஹிந்துஸ்தானத்தின் பிரிக்க முடியாததோர் அங்கம் என்பதை நினைவூட்டி, தேசிய உணர்வை நாடெங்கிலும் புதிய எழுச்சியுடன் தோற்றுவிக்க வேண்டியே பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி கிழக்கே சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்டு தேசத்தின் குறுக்காக எட்டு மாநிலங்களைக் கடந்து குடியரசு தினத்தன்று மேற்கே காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் நமது மூவண்ண தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் செயல் திட்டத்தை மேற்கொள்ள நேர்ந்தது.

காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்தின் அங்கம்; அதனுள் பிரவேசிப்பது ஒவ்வொரு ஹிந்துஸ்தானப் பிரஜையின் உரிமை என்பதை நிலைநாட்டுவதற்கென்றே புறப்பட்டுச் சென்று, தடையை மீறிச் சிறையில் அடைபட்டு, ஷேக் அப்துல்லாவின் வஞ்சகச் சதியால் சிறையிலேயே உயிரிழந்த தியாக சீலர் சியாமா பிரசாத்தின் மகத்தான தேசப் பற்றுக்கு அஞ்சலி செலுத்துவது போலவும் மேற்கொள்ளப்பட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியின் திட்டத்தை அரசியல் காரணங்களுக்கான நடவடிக்கை என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் கொச்சைப் படுத்தியிருக்கிறார், மன்மோகன்.

bjp-anurag_thakur_shahnawaz_hussainகுடியரசு தினத்தனறு பாரத தேசத்தின் ஒரு பகுதியில் தேசியக் கொடியை ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று நாட்டின் பிரதமரே விமர்சிப்பாரேயானால் அது பிரிவினைச் சக்திகளுக்குக் கொண்டாட்டமாகி விடாதா? சிறு குழந்தைக்குக்கூட எளிதில் புரியக் கூடிய இந்த உண்மை மன்மோகனுக்குத் தெரியாமலா போகும்? தெரிந்தே அவர் செய்த இந்த விமர்சனம் தேசிய உணர்வையே அவமதிக்கும் செயல் அல்லவா? அதிலும் குடியரசு தின சந்தர்ப்பத்தில் தேசிய உணர்வை ஊட்ட வேண்டிய பிரதமர் பதவியில் இருக்கும் நபர் இப்படிப் பேசலாமா? இந்த அவலத்தை எங்கே சொல்லி ஆற்றிக்கொள்வது?

குடியரசு தினத்தன்று பிரிவினைச் சக்திகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தேசியக் கொடியேற்றி தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது? உமக்குத்தான் அதற்குத் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர்? இதிலுமா அரசியல் பண்ணுவது?

இன்று மன்மோகன் பொறுப்பில், சோனியா காங்கிரஸ் தலைமையில் குப்பை கொட்டும் கூட்டணி ஆட்சியில் நடைபெறும் அலங்கோலங்கள் ஆயிரமாயிரம் இருக்க, அரசியல் பண்ணுவதற்கு பா.ஜ.க.வுக்கு விஷயத்துக்கா பஞ்சம்? போயும் போயும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றும் தேசியக் கடமையை வைத்தா அது அரசியல் பண்ணும்?

ஒரு தேசியத் திருநாளன்று தேசியக் கொடியை தேசத்தின் ஒரு பகுதியில் ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவது வெட்கங்கெட்ட பேச்சு என்பது மட்டுமல்ல, தேசிய உணர்வுக்கே அவம்ரியாதை என்கிற பிரக்ஞை கூட இல்லாத ஒருவரை இன்னும் எத்தனை காலத்திற்கு பிரதம மந்திரியாக இந்த நாடு சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?

தேசப் பற்றும் பொறுப்புணர்வும் மிக்க மக்கள்தான் இதற்கு விடை கூற வேண்டும்.

23 Replies to “தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!”

  1. Pingback: Indli.com
  2. இன்னுமாயா இந்த நாடு என்ன நம்புது ????? !!!!

    ஒரு பக்கம் சீன அரசு அருணாச்சல பிரதேசம், மணிப்பூர்,ஒரிஸ்ஸா வழியாக ஊடுரிவிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் அறிவிக்கபடாத மற்றும் எதிர்பார்க்க இயலாத பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல், அடியில் குண்டு வைத்தாற்போல் இலங்கை ராணுவம் சீன பாதுகாப்பு மற்றும் கப்பற்படை இரண்டுக்கும் அனுமதி கொடுத்து நிறுத்தி வைத்துள்ளது….. மும்முனை தாக்குதலை பாரதம் சமாளிக்குமா??? ஏன் இதைப்பற்றி யாருமே சிந்திகவில்லையா, இல்லை அப்டிதான் நடக்கும் என்கிற திமிரடி பதிலை எதிர்பார்த்து இருக்கிறோமா ???

  3. காஸ்மீர் அரசு மிக பெரிய தவறை செய்கிறது.. இந்தியாவை சேர்ந்த யாரும் எங்குவேண்டுமானாலும் தேசிய கொடி ஏற்றலாம். இதை தடுக்க காஸ்மீர் அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை. பாகிஸ்தான் இதுவரை காஸ்மீர் எங்களுக்கு சொந்தம் என சொல்லவில்லை.சொல்லமுடியாது. ஆனால் இரு வாரங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசம் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா பகிரங்கமாக அறிவித்தாலும் அங்கே பி.ஜே.பி.யினர் ஏன் அருணாச்சல பிரதேசத்தில் தேசிய கொடி ஏற்றவில்லை என குறுக்கு கேள்வி கேட்கக்கூடாது. ஏனென்றால் பி.ஜே.பி.க்கு மதம்தான் எதிரியை தீர்மானிக்கும். நியாயம் பின்புதான். இது தெரிந்ததுதான். அதனால் காஷ்மீருக்கு கொடி ஏற்றவரும் தேச பக்தர்கள் அனைவரையும் ஆரத்தியிட்டு வரவேற்று உபசரித்து அனைவருக்கும் கேம்ப் ஏற்பாடு செய்து அங்கு ராணுவத்திற்கு பதில் தீவிரவாதிகளோடு நடக்கும் சண்டைக்கும், இப்பிரச்சினையில் தேசவிரோதிகள் கலவரம் மூட்டினால் நடக்கும் கலவரத்தை தடுக்கவும் கட்டாயம் பயன் படுத்தவேண்டும். திரும்பி வரவேண்டும் என தலைகீழாக நின்றாலும் அனுப்பக்கூடாது. இவர்கள் ஒருநாள் காப்பு கட்டிவிட்டு வந்துவிடுவார்கள். அடுத்த 10 நாள் கலவரத்தில் அங்குள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் கொல்லப்படுவார்கள்.வரும் போலிகளிடம் கை எழுத்து வாங்கி ஒருவருடம் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்துங்கள். உண்மையான தேச பக்தர்கள் இருப்பார்கள். ஒருநாள் தேச பக்தர்கள் ஓட்டமெடுப்பார்கள்.

  4. பாரத சமுதாயம் என்ன பாபம் செய்ததோ, அது ஹின்”துஸ்தான்” என்று அறியப்படுகின்றது.

  5. இந்த இழி நிலைக்கு காரணம் நாம்தான் ..இனிமேலாவது பிஜேபி போன்ற தேச பக்தி உள்ள கட்சிகளுக்கு நாம் ஓட்டு போட்டு தேந்தெடுக்க வேண்டும்

  6. தேசிய உணர்வு தேவையா இல்லையா என்பதை மக்கள் ஓட்டுப் போடுவதன் மூலம் தெரிவிக்கிறார்கள். மக்களின் விருப்பப்படிதான் மன்மோகன் நடந்துகொள்கிறார்.

    மக்கள் எதை விரும்ப வேண்டும் என்பதை, ஊடக கல்வி பொருளாதார அமைப்புகள் நிர்ணயிக்கின்றன.

    ஆதரவற்ற அறம் மெலிந்தது. ஆபிரகாமியம் பெருத்தது.

  7. //அருணாச்சல பிரதேசம் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா பகிரங்கமாக அறிவித்தாலும் அங்கே பி.ஜே.பி.யினர் ஏன் அருணாச்சல பிரதேசத்தில் தேசிய கொடி ஏற்றவில்லை என குறுக்கு கேள்வி கேட்கக்கூடாது. -ஸ்ரீ சலாவுதீன்//
    காஷ்மீரின் நிலையும் அருணாசல பிரதேசத்தின் நிலவரமும் ஒன்றா? காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் பிரிவினை சக்திகள் தலையெடுத்து ஆட்டம் போடுவதும் நாசவேலைகளில் ஈடுபடுவதும் தெரியாதா? அருணாசல பிரதேசம் என்ன, வட கிழக்கு மாநிலம் முழுவதுமே எமக்குச் சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடத்தான் போகிறது, சோனியாவின் கட்டுப்பாட்டில் நாடு நீடித்தால்!

    சீனா அருணாசல பிரதேசத்தின் மீது உரிமைகொண்டாடினால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதேபோல காஷ்மீர் பாரதத்தின் அங்கம் என்பதை வலியுறுத்துவதற்கான பணிகளைச் செய்வதும் அதன் கடமையே. ஆனால் அங்கு பிரிவினைவாதிகளின் பகிரங்க அட்டகாசங்களைச் சகித்துக்கொண்டிருக்கிறது. மாநில அரசும் மத்திய அரசும் ஆற்ற வேண்டிய கடமையை நினைவூட்டத்தான் பா.ஜ.க. இத்திட்டத்தை மேற்கொள்ள நேர்ந்திருக்கிறது. காஷ்மீர் பிரிவினை சக்திகளுக்கு இடதுசாரிகளின் ஆதரவும் பெருகி வருவதாலேயே இந்த ஆண்டு அங்கு கொடியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் அங்கு கொடியேற்றிவிட்டு வந்தால் கலவரம் ஏற்படும் என்று கையாலாகாத மத்திய மாநில அரசுகளைப்போல் நீங்களும் பயமுறுத்துகிறீர்களே, பிக்பாக்கெட தொல்லை அதிகம் என்பதால் யாரும் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டாம் என்று சொல்கிற கூட்டத்தில் ஏன் சேருகிறீர்கள்?
    கல்வரத்தைத் தூண்டும் தீய சக்திகளை ஒடுக்குகின்ற நேரடி அனுபவம் எனக்கே நிறைய உண்டு. பூச்சாண்டி காட்ட வேண்டாம்!
    -மலர்மன்னன்

  8. //…ஆனால் இரு வாரங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசம் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா பகிரங்கமாக அறிவித்தாலும் அங்கே பி.ஜே.பி.யினர் ஏன் அருணாச்சல பிரதேசத்தில் தேசிய கொடி ஏற்றவில்லை என குறுக்கு கேள்வி கேட்கக்கூடாது…//

    நீங்கள் சொல்லுவது சரிதான். முட்டாள்தான் அப்படி ஒரு கேள்வி கேட்பான்.

    ஏனென்றால், அருணாச்சலத்தில் தேசியக்கொடி எற்றப்பட்டு வருகிறது. அதை ஏற்றக்கூடாது என்று யாரும் எதிர்க்கவில்லை – சைனா உட்பட.

  9. //ஒரு தேசியத் திருநாளன்று தேசியக் கொடியை தேசத்தின் ஒரு பகுதியில் ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவது வெட்கங்கெட்ட பேச்சு என்பது மட்டுமல்ல, தேசிய உணர்வுக்கே அவம்ரியாதை என்கிற பிரக்ஞை கூட இல்லாத ஒருவரை இன்னும் எத்தனை காலத்திற்கு பிரதம மந்திரியாக இந்த நாடு சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?//

    ஐயா, மனதுக்கு மிகவும் வலிக்கிறது. நான் அதர்சமாகக் கொண்டிருந்த மனிதர், ஒரு நிதி சேவை விற்பனைப் பிரதிநிதியாக இருந்த என்னை மதித்து (மும்பையில் 1997ல்) என்னுடன் பேசிய பெரியவர்(10 நிமிடங்கள் தான்), பொருளாதாரம் பற்றி நிறையப் படி என்று ஊக்குவித்து புத்தகங்கள் suggest செய்த நல்லாசான், இன்று இப்படி இழிநிலைக்குப் போய் அதையும் சரியென்று வாதிடும் சின்னப் புத்திக்காரராகி விட்டாரே என்று கோபமும் வருகிறது. படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்ற கவி வாக்குப் பொய்க்காது.

    என் உறவினர் ஒருவர் பல பதவிகளைப் போட்டு (தர்மகர்த்தா, விநாயகர் கோவில், அறங்காவலர் குழு உறுப்பினர் துர்க்கை அம்மன் கோவில், தலைவர், குடியிருப்போர் சங்கம் இன்னபிற) லெட்டர் பேட் அடித்து வைத்திருந்தார். இரண்டாண்டுகள் கழித்து பதவிகள் போன பின் அந்த லெட்டர் பேடில் பதவிகள் அனைத்தையும் ஒரு அடைப்புக் குறியிட்டுச் சுட்டி Ex என்று போட்டார்.

    அது போல மனமோகனச்சிங்கனாரைக் குறிப்பிடுகையில் பொருளாதார மேதை, திறமையான நிர்வாகி, நேர்மையான மனிதர், குற்றம் பொறுக்காத குணத்தினர், தேசிய உணர்வு மிக்கவர் என்றெல்லாம் எழுதி அனைத்தையும் ஒரு அடைப்புக் குறியிட்டுச் சுட்டி Ex என்று போட்டுவிடலாம். காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என்று கண்ணதாசன் புலம்பியதை தற்போது கைக்கொள்வது தவிர எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை.

  10. //அதனால் காஷ்மீருக்கு கொடி ஏற்றவரும் தேச பக்தர்கள் அனைவரையும் ஆரத்தியிட்டு வரவேற்று உபசரித்து அனைவருக்கும் கேம்ப் ஏற்பாடு செய்து அங்கு ராணுவத்திற்கு பதில் தீவிரவாதிகளோடு நடக்கும் சண்டைக்கும், இப்பிரச்சினையில் தேசவிரோதிகள் கலவரம் மூட்டினால் நடக்கும் கலவரத்தை தடுக்கவும் கட்டாயம் பயன் படுத்தவேண்டும்.//

    சலாவுதீன் அவர்களே! ஸ்வயம் சேவக்குகள் இதற்கு அஞ்சியவர்கள் அல்ல. இரயில் வராத நேரம் பார்த்துத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து பத்திரிகைக்குப் போஸ் கொடுக்கும் தலைவர்களையும் பிரியாணியும் குவார்ட்டரும் ஓசியில் சாப்பிட்டுவிட்டு “தழிவா! ஒழக்காக உழியக் குழுப்பேன்” என்று பேத்தும் தொண்டர்களையும் கொண்ட அடலேறுகளின் பாசறையில் உங்களின் இந்த மிரட்டல் அச்சம் விளைவிக்கும்.

    ஆனால் ஸ்வயம்சேவக்குகள் இந்த மாதிரி வூடுகட்டும் பூச்சாண்டிகளுக்கு அஞ்சும் ரகமல்ல. அந்தப் பாரம்பரியத்தில் வந்த பாஜகவினரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சுபவர்களல்லர். அல்-ஃகாய்தா, லஷ்கர்-எ-தய்யிபா போல காசு கொடுத்துக் கூட்டப்படும் கொலைகாரக் கூட்டமுமல்ல ஸ்வயம்சேவக்குகள். So, விபரம் தெரிந்துகொண்டு பேசுங்கள்!

  11. ”கல்வரத்தைத் தூண்டும் தீய சக்திகளை ஒடுக்குகின்ற நேரடி அனுபவம் எனக்கே நிறைய உண்டு. பூச்சாண்டி காட்ட வேண்டாம்”

    அய்யா சொல்லுவது சுலபம் செய்வது தான் கடினம்.

  12. ”ஏனென்றால், அருணாச்சலத்தில் தேசியக்கொடி எற்றப்பட்டு வருகிறது. அதை ஏற்றக்கூடாது என்று யாரும் எதிர்க்கவில்லை – சைனா உட்பட”

    அருணாச்சலத்தில் சீனா விசா கொடுப்பது உங்களுக்கு தெரியாதா?

  13. தொடக்கத்திலேயே நாட்டை ஆளும் அதிகாரம் தவறான நபர்களிடம் சென்றடைந்துவிட்டதால்தான் எளிதாக முடியும் காரியங்களும் கடினமாக ஆகிவிட்டன. உதாரணமாக 1947-ல் காஷ்மீரில் நமது ராணுவம் முன்னேறிச் சென்று ஊடுருவிய தீய சக்திகளை விரட்டியடித்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பை மீட்கும் தறுவாயில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் களத்தில் இறங்கி வேலை செய்யும் ராணுவத்திடம் விடாமல், யுத்த விவகாரம் பற்றிய அனுபவம் சிறிதும் இன்றி தில்லியில் உட்கார்ந்துகொண்டு பிரச்சினையை ஐநாவுக்கு எடுத்துச் சென்று போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்ட நேருவின் அறியாமையால் எளிதாக முடிய வேண்டிய காரியம் இன்றுவரை தீராத தலைவலி தரும் கடினமாகிவிட்டது. இதேபோல் சீனா திபேத்தை ஆக்ரமித்தபோதே துணிந்து எதிர்ப்புத் தெரிவித்து சர்வ தேசப் பிரச்சினையாக்கி அமெரிக்கா, உள்ளிட்ட வல்லரசுகளின் உதவி நாடி சீனாவைத் திபேத்திலிருந்து விரட்டியடித்திருந்தால் இன்று சீனா நமது வ்ட கிழக்கு, வட மேற்கு எல்லைகள் வரை வந்து வாலாட்டாது. 1949-ல் கம்யூனிஸ்ட் நாடாக மாறிய சீனா 1950களின் தொடக்கத்தில் இன்றுபோல் பெரும் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை. நினைத்திருந்தால் வெகு எளிதில் சீனாவை அதன் எல்லைகளை மீறாமல் செய்திருக்க முடியும். சிறிதளவும் தீர்க்க தரிசனம் இல்லாத நேருவின் அர்த்தமில்லாத சோஷலிச ஒற்றுமை மயக்கத்தால் இந்த எளிதான பணியையும் நாமே கடினமாக்கிக்கொண்டோம். இதேபோல் பயங்கரவாதிகளையும் ச்மூக விரோதிகளையும் தொட்க்கத்திலேயே தயவு தாட்சண்யமின்றி இரும்புக் கரம் கொண்டு அடக்கத்தவறி, கடும் நடவ்டிக்கை எடுத்தால் எங்கே சிறுபான்மையினர் மனம் நோகுமோ என்று அஞ்சி எளிதான காரியத்தைக் கடினமாக்கிவிட்டோம் ( இது சிறுபான்மையினரை அவமதிக்கும் செயல் என்கிற சிறு விஷயம்கூட.உறைக்கவில்லை!)

    என்னைப் பொருத்தவரை தீய சக்திகளை ஒடுக்கும் செயலிலும் நேரடியாக இறங்கியே வந்துள்ளேன்.
    -மலர்மன்னன்

  14. செங்கோட்டை ஸ்ரீராம் facebook ல் பார்த்த கவிதை –

    https://www.facebook.com/home.php#!/senkottaisriram?sk=wall

    Senkottai Sriram
    குடியரசு தினக் கொடியேற்றம்…
    கொடியின் நிறங்கள்…
    பசுமை-செழுமை-இஸ்லாமாம்…
    வெண்மை-அமைதி-கிறித்துவமாம்…
    காவி-தியாகம்-இந்துவாம்…
    …குண்டூசிகளால் குத்துப்பட்டும்
    சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது
    தேசியக் கொடி!
    குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
    தேசியக் கொடியும்
    அதனால்தானே விழாமல் தாங்கி நிற்கிறது?!
    அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!
    தியாகம் மட்டும் இல்லை என்றால்
    தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!
    குத்துப் பட்டும் சிரிக்கும் காவியைப்போலே
    வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
    தேசியத்தைத் தாங்கி நிற்பீர்…
    இந்திய நாட்டின் இந்துக்களே!
    தியாகிகளே!

  15. சலாலுதீன்

    அருணாச்சலப் பிரதேசத்தில் தேசக் கொடியை ஏற்றக் கூடாது என்று அருணாச்சல் முதலமைச்சரோ அல்லது பிற இயக்கங்களோ தடை செய்தார்களா? சொல்லுங்கள் அப்படிச் சொல்லியிருந்து அங்கே பி ஜே பி கொடியேற்றச் செல்லவில்லை என்றால் அவர்களைக் கேட்க்கலாம். உங்கள் கேள்வி மத வெறி பிடித்த ஒரு வெறியனின் கேள்வி. மதச் சாயம் பூச வேண்டாம் இது தேசீயப் பிரச்சினை. உங்களைப் போன்ற மத வெறி பிடித்த மிருகங்களினால் நேற்று பண்டிட்களுக்கு நேர்ந்த கதி இன்று இந்தியாவில் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் நேர்ந்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் பா ஜ க போரிடுகிறது. அதற்கு முட்டாள்த்தனமான அருணாச்சல் பிரதேசத்தைப் ஒப்பிட்டு மதச் சாயம் பூசும் கேவலமான கேடுகெட்ட வேலையைச் செய்ய வருகிறீர்கள். வெட்க்கமாக இல்லை? அப்படி காஷ்மீர் பாதுகாப்பு வேலையைச் செய்ய ஆயிரம் என்ன லட்சக்கணக்கான தேசீயவாதிகள் தயாராகவே உள்ளனர். உங்களது ஜிஹாதி பயங்கரவாதப் பூச்சாண்டி இங்கு காட்ட வேண்டாம்.

    ச.திருமலை

  16. சலாலூதீன்

    அருணாச்சலப் பிரதேசக்காரர்களுக்கு சீனா விசா கொடுப்பது வேறு காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்கள் அங்கு இந்தியக் கொடி ஏற்றக் கூடாது என்று சொல்வது வேறு. உங்கள் ஒப்பீடு கேனத்தனமானது. மத வெறி பிடித்து இந்தியாவுக்குள் காஷ்மீர் மட்டும் அல்ல கர்நாடகாவில் உள்ள பெல்காமில் இருக்கும் மைதானத்தில் கூட இந்தியக் கொடியை ஏற்றக் கூடாது என்று பிரிவினை வாத முஸ்லீம்கள் போராடுகிறார்கள். அதை எதிர்த்துத்தான் கொடி ஏற்றுகிறார்கள். அதென்ன இந்தியாவுக்குள் இந்தியர்கள் தங்கள் தேசீயக் கொடியை ஏற்றுவது என்றால் உங்களுக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. இந்தியாவில் வாழ்ந்து கொண்டு இந்திய சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு ஏன் இந்த நன்றி கெட்டத்தனம்? ஏன் இந்த துரோக எண்ணம்? முதலில் நாடு அதன் பிறகுதான் மதம், இனம், ஜாதி மொழி எல்லாம் என்ற உணர்வு உங்களுக்கு என்று ஏற்படப் போகிறது? ஏனிந்த மத வெறி? மனிதர்களாக என்று மாறப் போகிறீர்கள்?

  17. இந்தியாவை எதிரி நாடாகவே பாவிக்கும் பாக்கிஸ்தானிய ஐ எஸ் ஐ யின் பிரிவினை வாத தூபத்திற்கு விலை போன துரோகிகள் கும்பலைச் சார்ந்த ஒருவனாகவே இந்த மன்மோகன் சிங் இருக்க வேண்டும். இந்தியாவை ஒட்டு மொத்தமாக அழிக்கக் சபதமேற்று வந்திருக்கும் ஒரு தேசத் துரோகி நாட்டைப் பீடித்த பீடை மன்மோகன் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. இந்தியாவின் மானக் கேடு இந்த மன்மோகன் அசிங்கம். சோனியாவை இத்தாலிக்காரி அவளுக்கு இந்தியா மீது எந்தவித அக்கறையும் இருக்காது. ஆனால் மன்மோகன் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்து வரும் மாபாதகன்.

    (edited and published)

  18. கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி நகராட்சி முன்பின் யோசியாமல் நகரின் மையப் பகுதியில் உள்ள பொது மைதானத்தை பாத்தியதை உரிமையை முன்னிட்டு மிக மிகக் குறைந்த வருடாந்தரக் கட்டணம் நிர்ணயித்து நூறு ஆண்டுகளுக்கு முகமதிய அமைப்புக்குக் குத்தகைக்கு விட்டது. ஊர்ப் பொதுவில் உள்ள அந்த மைதானத்தில் தேசிய தினங்களில் கொடியேற்றவிடாமல் முகமதியர் தடுத்தனர். இத்கா மைதானம் என்று அதற்குப் பெயர் சூட்டித் தமது குத்தகைதாரர் உரிமையை நிலை நாட்டினர். கையாலாகாத மாவட்ட நிர்வாகம் அதற்குச் செவி சாய்த்து, கொடியேற்ற வருவோரைக் கைது செய்யத்தொடங்கியது. ஒருமுறை கைது ஆனாவர்களில் நானும் ஒருவன். உமா பாரதியும் இம்முயற்சியில் கைதானது நினைவிருக்கும். பின்னர் முகமதியர் பணிந்து தேசிய தினங்களில் அங்கு கொடியேற்றி வருகின்றனர்.

    ’மத அடிப்படையில் தனி நாடு கோருவது மடமை. இன்று ஹிந்துஸ்தானத்தில் ஊர் ஊர் முகமதியரும் உள்ளனர். அப்படியிருக்க முகமதியருகு ஹிந்துஸ்தானத்தில் மத அடிப்படையில் ஒரு தனி நாட்டை எப்படி உருவாக்கமுடியும்? ஒருவேளை அப்படியொரு தனி நாட்டை மத அடிப்படையில் உருவாக்கும் நிலைமை ஏற்பட்டால் அதற்குமுன் மத அடிப்படையில் மக்கள் பரிவர்த்தனை நடைபெற வேண்டும். தவ்றினால் ஹிந்துஸ்தானம் நிரந்தரமாக மதக் கலவரங்களாலும் பிற தொல்லைகளாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று எச்சரித்தவர் டாக்டர் அம்பேத்கர். பாகிஸ்தான் பற்றிய உரையில் அவர் கூறியது இது. இந்த உரை பின்னர் சிறு நூலாகவும் வெளிவந்துள்ளது. அம்பேத்கர் தொகுபிலும் காணலாம். அம்பேத்கரின் முன்னெச்சரிக்கையினைக் கேட்டிருந்தால் இன்று இம்மாதிரியான விவாதங்களுகெல்லாம் அவசியமில்லாமல் போயிருக்கும்.
    -மலர்மன்னன்

  19. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு மிகப்பெரிய ஓட்டை 370 வது பிரிவு. அதனை ரத்து செய்து பாரத குடிமக்கள் காஷ்மீரில் குடியேற வழிகாண வேண்டும். ஆனால் இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் சாத்தியமில்லை. உருப்படாத யுபிஎ அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டு பிஜேபி அறிதிபெரும்பான்மையுடன் வந்தால்தான் இது சாத்தியம். ஆயினும் மதசார்பின்மை எனும் அரசியல் வியாபாரத்தில்(விபச்சாரத்தில்) ஈடுபடும் காங்கிரஸ்,பக்கவாத கம்யூனிஸ்ட் கட்சிகள் குய்யோ முறையோ என்று கூச்சல் போடும். சிறுபான்மை வோட்டு பொறுக்கி கட்சிகள் (உ.ம்) சமாஜ்வாதி, ஆர்ஜேடி திமுகழகம் பக்கவாத்யம் இசைக்கும். நாட்டின் ஒரு அதிகாரபூர்வமான மாநிலத்திற்கு தனியாய் விசா வழங்கும் கம்யூனிஸ்ட் சர்வாதிகார சீனாவை தட்டிகேட்க துணிவிலாத ஒரு அரசு,சீனாவை விமர்சிக்கத் துணியாத காம்ரேடுகள் இவர்களின் நடுவில் நாட்டை இதுவரைகாப்பாற்றி வருவது இறையருளே. வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான அரசைதேர்ந்து எடுக்கவேண்டும். ஒருவேளை அலைக்கற்றை ஊழலில் கிடைத்த பணத்தில் வோட்டு பெற கட்சிகள் முயற்சிக்கலாம். காஷ்மீரில் இன்று ஏற்பட்டுள்ள நிலை மற்ற மாநிலங்களில் பரவாது என்பது என்ன நிச்சயம். தேச நலனில் அக்கறை உள்ளோர் கழிசடை காங்கிரசையும் கழகத்தையும் அரசியல் அரங்கிலிருந்து அப்புறபடுத்த முயற்சித்தல் முதல் கடமையாகும். வந்தே மாதரம்.

  20. //காஷ்மீரில் இன்று ஏற்பட்டுள்ள நிலை மற்ற மாநிலங்களில் பரவாது என்பது என்ன நிச்சயம்.//
    இதோ தமிழ்நாட்டிலேயே மேல்விஷாரம் இருக்கே.

  21. சலாஹூதின் அவர்களுக்கு,
    ஜம்மு – காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீ நகரின் லால் சௌக்கில் குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பா.ஜ.க. திட்டமிட்டதற்கு நேர்மையான காரணம் இருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல; காஷ்மீரை விட்டு இந்தியா வெளியேற வேண்டும் என்று கூறும் பிரிவினைவாதிகள் அங்கு இந்திய தேசிய கொடி ஏற்றப்படுவதை எதிர்க்கிறார்கள். அவர்களின் எதிர்ப்புக்கு அரசு அடிபணியும்போது அதை தங்களுக்கான வெற்றியாக கொண்டாடுகிறார்கள். சில பாகிஸ்தான் கைகூலிகள் அரசின் இந்த பலகீனத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றவும் செய்கிறார்கள். இந்திய அரசிற்கு எதிரான போக்கு அங்கே அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறதே ஒழிய குறையவில்லை. காரணம், குறைப்பதற்கான முயற்சிகளை மத்திய, (ஜம்மு – காஷ்மீர்) மாநில அரசுகள் எடுப்பதில்லை.
    ஆனால் காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்று தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., பிரிவினைவாதிகளின் இப்போக்கிற்கு எதிராக லால் சௌக்கில் தேசிய கொடியை ஏற்ற முடிவு செய்தது. பா.ஜ.க. – வின் இந்த முடிவை எதிர்த்த பிரிவினைவாத அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், “லால் சௌக்கில் பா.ஜ.க., இந்திய தேசியக் கொடியை ஏற்றினால் அதை எப்பாடு பட்டாகிலும் தடுப்போம். அதற்காக நாங்களும் அந்த இடம் நோக்கி பேரணி மேற்கொள்வோம்” என்று அறிவித்தார்.
    பிரிவினைவாதிகளின் தேசத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய மாநில அரசு, மாறாக பிரிவினைவாதிகளுக்கு துணை போனது. ஸ்ரீ நகரின் லால் சௌக்கில் இந்திய தேசிய கொடியை யாரும் ஏற்ற முடியாத அளவிற்கு பாதுகாப்புகளை பலப்படுத்தியது. இதன் மூலம் நமது குடியரசு தினத்தன்று நமது மண்ணில் நமது தேசிய கொடி ஏற்றப்படுவதை நமது (ஜம்மு கஷ்மீர்) மாநில அரசே தடுத்து நிறுத்திவிட்டது. இதைத்தான் தற்போதைய மத்திய அரசும் விரும்பியது. தேசப்பற்று குறித்தோ, தேசத்தின் இறையாண்மை குறித்தோ, தன்மானம் குறித்தோ இந்த ஆட்சியாளர்கள் பொதுவாக பேசுவதில்லை. இனி பேசினாலும் அதற்கு மதிப்பிருக்காது.
    இது ஒருபுறம் இருக்கட்டும். கஷ்மீர் போன்ற நிலை அருணாசலப் பிரதேசத்தில் இல்லை. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் யாரும் தங்கள் மாநிலத்தை தனிநாடாகவோ, சீனாவின் ஓர் அங்கமாகவோ மாற்ற முயலவில்லை.
    ஜம்மு கஷ்மீரில் நிலவும் மோசமான சூழலுக்கு காரணம் மதம். தற்போதைய பா.ஜ.க. – வின் முயற்சிக்கு காரணம் மதமல்ல; தேசப்பற்று.
    – மோகன் கணபதி.

  22. 2009 ஜனவரியில் பை பாஸ் சர்ஜரி செய்துகொண்டு உடனேயே பிரதமந்திரி வேலைகளையெல்லாம் வெகு சீக்கிரமே செய்ய ஆரம்பித்த மண்மோகன் சிங், எடுத்துக் கவிழ்த்த தேசத்த்ரோக முடிவுகள் அனைத்தையும் பார்த்தால், அவர் உடலில் மற்றும் மூளை என்று ஒன்று இருந்தால் அதிலும், எதோ சிப் வைத்து இயக்கப்படுகிறார் போல் உள்ளது. ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டியுட்டுக்கு கொண்டுசெல்லப்படுகின்றது என்றாலே, எதோ ஒரு முடிவு வரப்போவதாகத்தான் இருக்கும். அந்த டாக்டர்களை விசாரித்தால் தான், எப்படிப்பட்ட சிப், எவ்வளவு நாள் வேலைசெய்யும் சிப் வைத்தார்கள் என்பது தெரியும்.

  23. உண்மையான தேசபட்ட்று உள்ள மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு விடுவு பிறக்கும். எகிப்த்தில் நடப்பது போல் இந்தியாவில் கடும் போராட்டம் நடைபெற்றால் தான் விழிப்பு வரும். பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனையும் தட்டி எழுப்புக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *