“..இதோ இந்த பொம்மைக்காரர் இருக்கிறாரே, இவரே பாரத மாதாவின் செல்வம்தான். இவர் போல இன்னும் எத்தனை எத்தனையோ ஐசுவரியங்கள் பாரதத் தாய்க்கு. விதவிதமான செல்வங்கள்! அதெப்படி ஏழையாகிவிடுவாள்? கங்கையையும் காவிரியையும் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போய்விட்டார்களா? பொன் விளைகிற பூமியையும் அப்படி விளைவிக்கிற கைகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? கலைகளயும் காவியங்களையும் அவற்றைப் படைக்கிறவர்களையும் கடத்திக்கொண்டா போய்விட்டார்கள்? மெய்ஞான, விஞ்ஞான மகிமைகளைப் பறித்துக் கொண்டார்களா? …”
View More ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]Author: மலர்மன்னன்
இனி நாம் செய்ய வேண்டுவது…
இயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை? மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா? [..] பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்? [..]
View More இனி நாம் செய்ய வேண்டுவது…புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை
ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ?
View More புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலைமாயையை அறிதல்
மாயையை அறிந்து, மாயையை உணர்ந்து, மாயையை அனுபவித்து, மாயையைக் கொண்டாடி, அதன்பின் மாயையைக் கடந்து செல்லப் பழக வேண்டும். மாயையை வெறுத்து அல்ல, மாயையை துவேஷித்து அல்ல, மாயையை அறியாமை என நினைத்து அல்ல, மாயையை இடையூறு என எண்ணியல்ல.
View More மாயையை அறிதல்தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!
உமக்குத்தான் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர்? தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது?
View More தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!போகியை யோகி எனல்
உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.
View More போகியை யோகி எனல்சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்
தயை தாட்சண்யமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, முறைகேடுகளைப் புலன் விசாரணை செய்து, எவருக்கும் அஞ்சாமல் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி, குற்றப் பத்திரிகையினையும் மிகவும் உறுதி வாய்ந்ததாகத் தயாரித்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தரும் அமைப்பு… தாம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாகத் தமக்கு அபவாதம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியதாலும், என்னதான் இருந்தாலும் படுகொலையான முன்னாள் பிரதமரின் மனைவியாயிற்றே என்கிற தாட்சண்யத்தினாலும் வாஜ்பாய்… ஆண்டிமுத்து ராசாவிடம் சி.பி.ஐ. மணிக்கணக்கில் உரையாடல் மேற்கொண்டிருக்கிறது என்றால் அது விசாரணையல்ல…
View More சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை
‘ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேழ்க்கறானே இந்தப் பிள்ளையாண்டான்! அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன்? எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி?’…அவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன்…
View More சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதைகாமராஜர் என்கிற தேசியவாதி
கொள்கையில் மாறுபாடுள்ள அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காகத் தமக்குள் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு இயங்குவதைத்தான் கூட்டணி என்று குறிப்பிட வேண்டும்…. அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை… தட்சிணப் பிரதேசம் அமைந்தால் தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அரசியல்வாதி காமராஜர் கருதியிருக்கக் கூடும்.
View More காமராஜர் என்கிற தேசியவாதியோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…
அத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
View More யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…