ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை

கோயில்களை கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கி, அவற்றை வெறும் பணம்காய்ச்சி மரங்களாக்கி, புராதனச் சின்னங்களை, தடயங்களை அழிக்கத் திட்டம்!

புராதனச் சின்னங்களாம் கோயில்களின் அடிமடியில் கைவைத்தல். தடை செய்யப்பட்ட ஒரு சுத்தம் செய்யும் முறையால் தமிழகக் கோயில்களில் வரலாற்று ஆவணங்கள் அழிப்பு!

மேலே காணும் வாக்கியங்கள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறதா? மனம் பதறுகிறதா? அப்படியெனில் நீங்கள் நம் புராதனச் சின்னங்கள் மேல் மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பவர்.

மனம் பதறவில்லையெனில் கட்டாயம் நீங்கள் தமிழக இந்து அறநிலையத் துறையைச் சார்ந்தவராய் இருப்பீர்கள்!

sandblasting-1

கோயில் என்றாலே கடவுளை நம்பாவிடினும், ஒருவன் கலை ரசிகனாக, அதன் சிற்பங்களையும் கற்றளிகளையும் கல்வெட்டுகளையும் ரசிக்கத் தவற மாட்டான். தமிழகத்தில் சுமார் 1,00,000 கோயில்கள் உள்ளன (2ஜி ஊழலுக்குப் பிறகு, நாம் போடும் பூஜ்யமெல்லாம் சிறிதாகத்தான் தெரிகிறது!). இவற்றில் சுமார் 45,000 கோயில்கள் இந்து(?) அற(?) நிலையத் துறையின் பராமரிப்பில்(?) வருகிறது. இத்தனை கேள்விக்குறிகளைத் தாங்கி நிற்கும் அத்துறையின் தகிடுதத்தங்கள் சிலவற்றைப் பார்ப்போமா?

கமிஷனர், அதற்குக் கீழ் துணை, இணை ஆகியோர், மற்றும் ஒரு குறிப்பிட்ட கோயிலின் உயரதிகாரி, கோயிலின் புராதனத் தன்மையையோ அல்லது மகிமையையோ கணக்கிலெடுக்காமல், உண்டியல் அதிக வசூல் செய்யும் கோயில் முதல் வகை, அடுத்த அதிக வசூல் செய்யும் கோயில் இரண்டாம் வகை என்றே பிரிக்கின்றனர்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் தமிழகத் தொல்லியல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கென ஒரு பத்துநாள் கருத்தரங்கம் நடத்தியது. முடிவுறும் நிலையில், இரு துறையின் தலைவர்களும் (கமிஷனர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்) அமர்ந்த நிலையில் ஒரு நிறைவு விழா நடந்தது. அப்போது கோயில்களைப் பராமரிக்கும் முறை, புதிய பொருள்களில் கட்டக் கூடாது, நாமாக மாற்றங்கள் செய்யக்கூடாது, மண் பீய்ச்சி அடிக்கும் சுத்தம் செய்யும் முறையை கையாளக் கூடாது என்றெல்லாம் கூறக் கேட்ட அறநிலையத் துறை அதிகாரிகளில் ஒருவர் எழுந்து, “சார் நானும் 25 வருஷமா சர்வீஸில் இருக்கேன். இத மாதிரியான பராமரிப்பு பத்தியெல்லாம் எனக்குச் சொன்னதே இல்லையே. எப்படி உண்டி கலெக்ஷன் அதிகப்படுத்தலாங்கிறத தானே சொல்லிக் கொடுத்தீங்க?” என்று போட்டாரே பார்க்கலாம். எல்லார் முகத்திலும் ஈயாடவில்லை.

அந்தக் கருத்தரங்கம் ஒரு கண் துடைப்பு நாடகம். நடத்தியதாகக் காட்டி செலவுகள் காண்பித்து சுருட்டுவதற்குத்தான் அது நடந்தது என்று சொல்லத்தான் வேண்டுமா?

மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலே ஒரு சாட்சி. பழைய புராதன அடையாளங்களான கல்வெட்டுகள் மேல் வெள்ளை, பச்சைப் பூச்சுகள். நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப்பட்டு, பிராயச்சித்தமாக தற்போது ஒரு மலையாள ஓவியரைக் கொண்டு சுவர்களை நிரப்பப் பார்க்கிறார்கள். அதுவும் பலமுறை அதிகமாக்கப்பட்ட பட்ஜெட்டில் (escalated budget!).

சென்னையையே எடுத்துக் கொள்ளுங்கள். மயிலையிலும் திருவல்லிக்கேணியிலும் உள்ள கோயில்களில் புராதனத் தன்மை ஏதேனும் உள்ளதா? தூண்களில் உள்ள சிலைகளின் மேலேயே கம்பிக் கிராதிகள் அடிப்பதும், கல்வெட்டுகளை கை மாறிக் கால் மாறி மாற்றி அடித்து வைப்பதுமாக, விமானங்கள், கோபுரங்கள் முழுதும் அசிங்கமாக எனாமல் பெயிண்ட் பூசப் பெற்று, தம் புராதன, புனிதத் தன்மையை இழந்து நிற்கும் பணங்காய்ச்சி மரங்களாகத்தானே அவை இருக்கின்றன?

கடலுக்கடியில் மூழ்கிவிட்ட ஓர் அரிய கோயில் தரங்கம்பாடி மாசிலாமணி நாதர் கோயில். அதனை அப்படியே மீட்டெடுக்க புராதன ஆர்வலர்கள் போராடி வந்தனர். தொல்லியல் துறையும், அறநிலையத் துறையும் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், திடீரென அக்கோயிலைப் புனரமைக்க வைப்பு நிதியாக ஒதுக்கப்பட்ட பணத்திற்கான கெடுகாலம் முடிந்துவிடும் என்ற பயத்தில், அதிரடியாக ‘முபாரக் கன்ஸ்ட்ரக்ஷன்’ எனும் காண்டிராக்டர் மூலம் குத்தகை விட்டு, கோயிலைப் புனரமைக்கிறார்களாம். பத்து நாள்களுக்குள் கடலுக்கடியில் உள்ள புராதனச் சின்னங்களை, சிலைகளை, கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றாமல், கருங்கற்களைக் கொட்டி மறைத்து மேடுபடுத்தி, புதிய கோயிலை நிர்மாணித்து விட்டார்கள். அறநிலையத் துறை சட்ட திட்டங்களில், பிற மதத்தினருக்கு காண்ட்ராக்ட் தரக்கூடாது என்று உள்ளது. எங்கே போனது விதி?

இந்தச் சுட்டியிலுள்ள செய்தியைப் பாருங்கள்…

வெள்ளையடிப்பதும், கொள்ளையடிப்பதும் மட்டுமா இவர்கள் செய்வது? ஆகம விதிகளையுமல்லவா தேய்த்து மிதிக்கிறார்கள்?

கோஷ்ட தேவதைகளிலே, மிகவும் பரிதாபத்திற்குரிய தேவதைகள் தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும். படிப்பிற்கோ, திருமணத்திற்கோ, குழந்தை வேண்டியோ, வேறு தோஷ நிவர்த்திக்கோ வியாழக்கிழமைகளில் தக்ஷிணாமூர்த்தியையும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கையையும் அலங்கோலப் படுத்துவது இவர்களின் கைங்கர்யம். அம்மூர்த்தங்களின் அடியிலேயே கற்பூரம் ஏற்றிக் கொழுத்திக் கரியாக்குவதும், எண்ணெய் வழிய பிசுக்குமழை சேர்ப்பதும், ஜிகினா சகிதம் மட்ட ரக வஸ்திரங்கள் சார்த்தியும், மரத்தூளாலான செண்ட் சேர்ப்பிக்கப்பட்ட போலி சந்தனம், கெமிக்கல் சிவப்பால் ஆன கலப்படக் குங்குமம் கொண்டு அழகு(?) செய்வதுமாய், அவர்களுக்கு இந்த அலங்கோலங்களை பக்தர்கள் செய்ய சசதியாக கோஷ்டங்களில் ஒரு எக்ஸ்டென்ஷன் அமைப்பு (concrete extensions) செய்தும், கோயில் கட்டட சாஸ்திரத்தையும் ஆகம சாஸ்திரத்தையும் தொழும் சாஸ்திரங்களையும் சிற்ப சாஸ்திரங்களையும் நகைப்புக்குரிய விஷயங்களாக்கி விட்டு, கடவுளர்களைக் காசு அடிக்கும் இயந்திரங்களாகச் செய்வது யார்?

ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே கடவுளாய் இருப்பவரைக் கட்டம்கட்டி, சிறப்பு வழி, பொது வழி எனப் பிரித்து, கிட்டப் பார்வையாகவும், தூரப் பார்வையாகவும் பார்க்க வைத்து, கல்லாக் கட்டுவது யார்?

பழங்கால ஓவியங்கள் மிக்க திருப்புலிவனம் சிவன் கோயில், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள மன்னார் கோயில் ஆகியவற்றின் புனரமைப்பின் போது, ஓவியங்கள் அழிக்கப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டு, கற்சுவர்கள் முழுவதற்கும் மண்பீய்ச்சி அடித்து, கல்வெட்டுகளை அழித்து, ஒரு புராதனப்படுகொலையே நடத்தி விட்டார்கள், இந்த ___ __ ___த் துறையினர். இந்து, அறம் என்ற வார்த்தைகளுக்கு மரியாதை தராத அந்த நிறுவனத்தின் முன் அந்த நல்ல வார்த்தைகளைப் போட மனம் ஒப்பவில்லை எனவே இனி, அது ___ __நிலையத் துறை என்றே இக்கட்டுரை முழுதும் குறிப்பிடப்படும்.

சரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம். தமிழ் வளர்க்கிற பேர்வழிகளுக்கு, கல்வெட்டுகள் எத்தனை முக்கியமானவை என்று தெரியாதா? அவை தாங்கி நிற்கும் செய்திகள் என்ன என்று தெரியாதா? சுருக்கமாகச் சொன்னால், மன்னர்கள் மற்றும் ஊரின் முக்கிய குடிகள், பெருமக்கள், குலம் கோத்திரப் பாகுபாடின்றி, கோயிலுக்கு அளித்த நிலங்கள், கொடைகள், சாசனங்களாய் எழுதி வைத்துப் போன சட்ட திட்டங்கள், பண்ட மாற்று முறைகள், வரும் பணத்தினை பொது மக்களுக்கு எவ்வாறு உபயோகத்திற்கு தரலாம், அவ்வாறு தரும் பணம் கோயிலுடையது ஆகையால், அதற்கு எம்மாதிரியான வட்டி கோயிலுக்குப் போய்ச்சேர வேண்டும். யார் யாருக்கு எந்த மாதிரியான பணிகள், அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்ன, கோயிலுள் உள்ள ஆதுர சாலைகள் (மருத்துவ மனை) மற்றும் கல்விக்கூடங்களுக்கான பண ஒதுக்கீடு, நடைமுறைகள், ஊர் கட்டுப்பாட்டு விதிமுறைகள் என்பவற்றை எல்லாம் தாங்கி நிற்கும் காலச்சுவடுகள், இந்தக் கல்வெட்டுகள். மன்னன் மக்களுக்கு வகுத்த நெறிமுறைகள், கல்வெட்டுக்களில் அரச மெய்கீர்த்தியோடு (புகழுரை) ஆரம்பித்து, இறுதியில் மேற்கூறிய விஷயங்களுடன் முடிவடைவதாகவே இருக்கும். அருகிலுள்ள கிராமங்கள், மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் கல்வெட்டுகளில் பெரும்பாலும் குறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள் மிக மிகக் குறைவே.

அங்கேதான் நமது அரசியல்வாதிகள், துறைகளின் மூலம் ஒரு மாபெரும் சதியை அரங்கேற்றி வருகிறார்கள்.

மக்கள் இயைந்து வாழும் முறை, நிபந்தங்கள், அருகிலுள்ள கோயில் சொத்து முறைகள் என்று அன்றைய சூழலில் வாழ்வியலும், மக்களுக்குகந்த மன்னராயும், நிபந்தங்களும், கோயில் பராமரிக்க நிலங்களும் தந்து, ஜாதிச் சண்டைகளற்ற ஒரு கோயிலை இயைந்த (TEMPLE CENTRIC) சமுதாயத்தைப் பேணி காத்தனர் நம் மன்னர்கள்.

sandblasting-3

ஆனால், இன்று படிப்படியாக புனரமைப்பு என்ற பெயரில், காலச்சுவடுகளாம் கல்வெட்டுகளையும் கற்றளிகளையும் அழிக்கும் கூட்டம் ஒன்று இந்த மாநிலத்தில்தான் உருவாகி உள்ளது.

ஆதாரங்கள் கீழே:

2007-இல் அறநிலையத் துறைக்குள், தொல்லியல் துறையின் அறிவுரையின் பேரில் இந்த மணல் பீய்ச்சி அடித்தல் முறைக்கு ஒரு தடைச் சட்டம் வந்தது. சென்னை அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த திரு.ஆர்.பாலசுப்ரமணியன், அவரது கடிதத்தில் இவ்வாறு எழுதுகிறார்:

சமீபத்தில் (2007-இல் எழுதப்பட்ட கடிதம்) திருவண்ணாமலை கோயிலுக்குப் போனபோது, மணல் பீய்ச்சி அடிக்கும் முறையால் (sand blasting) என்ன கேடுகள் விளைந்துள்ளன என்பதை எங்களால் கண்கூடாகக் காணமுடிந்த்து. சிதறிப்போன தூண்களும், விரிசல்கள் கண்டுவிட்ட சுவர்களும், உடைந்துவிட்ட நந்தியும், புடைப்புச் சிற்பங்களும் சிதறுண்டுவிட்டன. அமோனியா நீரால் கற்றளிகளைச் சுத்தம் செய்யும் முறை 2002-2003 வருடத்திலேயே, சென்னை பார்த்தசாரதிப் பெருமாள் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் மற்றும் மதுரை மீனாக்ஷியம்மன் கோயில்களில் எங்களால் அறிமுகப் படுத்தப்பட்டும், அந்த முறை துரதிருஷ்டவசமாக கைவிடப்பட்டது. வண்டிகள் சுத்தம் செய்யும் சாதாரண மோட்டர் பம்ப் கூட போதும். செலவும் மிகக் குறைவு. இந்த இரண்டு முறையும் கைவிடப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இந்த முறையைத் தடை செய்த செய்தி மனதுக்கு இதமாக உள்ளது.” [இணையத்தில் இதற்கான சுட்டி]

இணையதளத்தில் இந்த முறையின் தீங்குகளை விளக்கும் இந்தச் சுட்டியைப் பாருங்கள். இது குறித்து ஜியாலஜிகள் சர்வே ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற திரு.பத்ரி நாராயணன் அவர்களிடம் விளக்கம் கேட்டோம்.

அவர் தொல்லியல் துறை அறிஞர் ரீச் பவுஃண்டேஷனின் தலைவர் திரு.தியாக.சத்தியமூர்த்திக்கு எழுதியது:

“பெங்களூர் பெருஞ்சாலையில், காஞ்சிபுரம் தாண்டி உள்ள திருப்பாற்கடல் பெருமாள் கோயில்களில் மணல் பீய்ச்சி அடிக்கும் முறையில் கற்கள் சேதமாவதைப் பற்றி திரு.சந்திரசேகரன் செய்தி அனுப்பினார். நானும் சென்று பார்வை இட்டேன்.

மிகவும் அதிக வேகத்தில் அடிக்கப்படும் மணற்துகள்களின் கெட்டிப்புத்தன்மை (hardness in Mohr units) 10 (வைரத்துக்கு இணையான கூர்மையும் கெட்டித் தன்மையும் கூடியது). ஆனால் சுவர்கள் எழுப்பட்டுள்ள கருங்கற்களின் (Charnockite) கெட்டிப்புத் தன்மை 6. எனவே அதிக கெட்டியான மணல், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குவது போல், சுவர்களில் பீய்ச்சிஅடிக்கப்படுகின்றன. அதனால் கண்ணிற்குத் தெரியாத விரிசல்கள் சுவர்களில் நிரந்தரமாய் ஏற்படும். கொஞ்சம் நெகிழ்வான கற்கள் சிதறுபடும். 3 மி.மீ வரை உள்ளே செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் மொத்தமாக அழிந்துவிடும், சிலைகளின் அங்கங்கள் ஹீனமாகி விடும். மொத்தக் கோயிலின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் செயல், இந்த மணல் பீய்ச்சும் முறை (sand blasting). எனவே தடை செய்யப்பட்ட இதை நிறுத்த நாம் எல்லாரும் போராட வேண்டும்.”

இது குறித்து சென்னை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் சுட்டி..

இதுவரை இந்த முறையால் அழிவுப்பாதையில் செல்லும் சில பிரபலக் கோயில்களின் பட்டியல் இதோ..

  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
  • அம்பாசமுத்ரம் எரிச்ச உடையார் கோயில்
  • தக்கோலம் கோயில்கள், திருப்பாலைவன நாதர் கோயில், ஆகியவை.
  • குலசேகரநாதர் கோயில், தென்காசி (இங்கே கதவுகளை மூடிக் கொண்டு இரவோடு இரவாக திருட்டுத்தனமாய் மணல் பீய்ச்சி அடித்தனர்.)

மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலில் சுண்ணம்பு அடிக்கப்பட்டும், ஓவியங்கள் அழிக்கப்பட்டும், மணல்பீய்ச்சு முறையால் கற்கள் சுத்தம் செய்யப்பட்ட போதும், பல கண்டனங்கள் எழுந்தன. சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3 | சுட்டி 4
திருவண்ணாமலையிலும் இதே கதைதான்..

mannarkoil-renovation-board

இருப்பினும் மன்னார்கோயிலில் இத்தகைய அட்டகாசம் தொடர்ந்தது. கொடுமை என்னவென்றால், கோயில் வாசலிலேயே செலவுகள் குறித்த பலகையில், மணல்பீய்ச்சும் செலவுக்குப் பணம் ஒதுக்கப்படிருந்தது! சுட்டி 1 | சுட்டி 2

சென்னை போரூர் கோயிலிலும் இதே கதைதான்…

திருப்பாலைவனத்தில் கல்வெட்டுகள் மாற்றிப் பதிப்பிக்கப்பட்டும், ஓவியங்கள் வெள்ளையடிக்கப்பட்டும், நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிட்டன.
இதைப் பாருங்கள்! இந்த தடை செய்யப்பட்ட முறையில் சுத்தம் செய்ய நன்கொடை வேண்டிப் பட்டியல்! (எண் 12 – sand blasting) | புனரமைப்பு slideshare

வழக்கமாக, புராதனச் சின்னங்கள் அழிக்கப்படும் போது, தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நான் நேரடி மனுக்கள் தந்து, அவர் பார்வைக்கு அவற்றைக் கொண்டு வருவது வழக்கம். இது நேற்று ‘தி ஹிந்து’-வில் வந்த செய்தியின் சுட்டி..

சமீபத்தில் சுமார் 50 கோயில்களில்– திருநெல்வேலி ஜில்லா முழுவதுமாய், புகழ் மிக்க கன்யாகுமரிக் கோயில் உட்பட– பல கோயில்களில் புனரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. அனைத்திலும், வேலை தெரியாத செல்வாக்கு மிக்கவர்களே காண்டிராக்டர்கள்! (அரசியல்வாதிகள், _____த் துறை அதிகாரிகளின் கணவன்மார்கள், உறவினர்கள்..) மாநிலத்தலைமையின் துணைவியாருக்கு ஒரு பெண் உயர் அதிகாரியே மாதம் ஒரு லகரம் _____த்துறையின் சார்பாக கப்பம் கட்டிவிட்டுவருகிறார், தெரியுமா?

sandblasting-2

சரி, இதில் சதிவேலை என்ன இருக்கிறது என்கிறீர்களா?

ஐயா, கல்வெட்டுகள் தான் அக்காலத்து ஸ்டாம்ப் பேப்பர்! கடவுள் கருவறையைச் சுற்றி எழுதுவது,. கோர்ட் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதுவதற்குச் சமம். படிப்பவர்கள் அந்தச் செய்திகளையும் நிபந்த ஆணைகளையும் மீறமாட்டார்கள். இறை நம்பிக்கை அன்று இருந்தது. நம் தென் மண்டலத்து அத்தனை நில ஆவணங்களும் மன்னர்களால் பெரும்பாலும் கல்வெட்டுகளாய்த்தான் பதியப் பெற்றன. இந்த சாண்ட் பிளாஸ்டிங் செய்துவிட்டால், அந்த நிலங்கள் பற்றிய ஆவணங்களை அழித்துவிடலாமல்லவா? அவ்வாறு அழித்துவிட்டால் ஒட்டு மொத்தமாக கோயில் நிலங்களை தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் அல்லவா? இதுதான் அரசியல்வாதிகளால், இறையாண்மை என்ற பெயரில், மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்துக் கோயில்களுக்கு வந்துள்ள ஆபத்து. பிற மதத்தினர் அரசு சார்ந்த துறைகளின் மூலமாகவா அவர்களது வழிபாட்டுத் தலங்களைப் பேணி காக்கின்றனர்? இல்லையே.. இந்துக்களுக்கு மட்டும் எதற்கு ஓர் அறமற்ற துறை? இந்த இந்து மத நம்பிக்கை அற்ற அறம் நிலைக்காத துறையிடமிருந்து தொன்மைமிக்க கோயில்களை மீட்டால்தான் கோயில்களும், அதனுள் உள்ள காலச்சுவடுகளும், கலைப் பொக்கிஷங்களும் மீளும்! இல்லையேல் இந்து மதத்திற்கான அத்தனை வரலாற்றுச் சான்றுகளும் அழியும் நாள் மிக அருகில்! சரி, நாமாக எப்படிப் பராமரிப்பது என்கிறீர்களா. அறிஞர் பெருமக்கள், தொல்லியல், புனரமைப்பு வல்லுநர்கள் நம்மிடையே மிக அதிகமானவர்கள் உள்ளனர். அவர்களை வைத்து இந்துக்களே ஒரு குழு அமைத்து இக்கோயில்களைப் பராமரிக்கலாம்.

நமது கோயில் உண்டியல் பணத்தினை வைத்துக் கொண்டு நாட்டின் அத்தனை பழங்கோயில்களையும்கூட செப்பனிட்டுவிடலாம்.

ஒரு வேண்டுகோள்:

ஆயிரம் சான்றுகள் – இந்து அற நிலையத்துறையினர் செய்யும் கோயில் புனரமைப்பு என்ற அடாவடிகளை, பழங்காலச்சின்னச் சிதைவுகளை படங்களாகவும், வீடியோக்களாகவும் ஏற்கனவே நாங்கள் ஆவணப் படுத்தி வைத்துள்ளோம். அறநிலையத்துறைக்கு எதிராக சட்ட ரீதியான புகார்களை நீதிமன்றத்தில் சமர்பித்து வழக்குகள் போட நல்ல வழக்குரைஞர்கள் தேவை. இதைப் படிக்கும் வாசகர்கள் இந்த விஷயத்தில் தகவல் தந்து உதவ விரும்பினால் இந்தப் பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ”ரீச் ஃபவுண்டேஷன்” உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

maraboor-jeya-chandrasekaranகட்டுரை ஆசிரியர் மரபூர் ஜெய.சந்திரசேகரன், “ரீச் ஃபவுண்டேஷன்” அமைப்பின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர்.   இந்த அமைப்பு  நமது கோயில்களின் கலைச் சிறப்பையும்  வரலாற்றுப் பாரம்பரியத்தையும்  தெய்வீகச் சூழலையும் போற்றிப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல சீரிய பணிகளைச் செய்து வருகிறது.   கிராம மக்களிடையே தங்கள் ஊர்க் கோயில் சிறப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்,   சிதைந்து கிடக்கும் பழைய கோயில்களைச் சீரமைக்க உதவுதல்,  கோயில்கள் பற்றிய வரலாற்று விவரணங்களை ஆய்வு செய்தல் மற்றும் எடுத்துரைத்தல்,  தன்னார்வலர் குழுக்களை உருவாக்கி  கோயில்களைச் சுத்தம் செய்தல்,   கோயில் பொலிவையும், கலையழகையும் சிதைக்கும்  நடவடிக்கைகளை  உடனுக்குடன் மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு:

29 Replies to “ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை”

  1. The ongoing loot of Hindu Temple by Mr.MV.Kamath – good article visit hindavakeralam web site

    https://www.haindavakeralam.com/HkPage.aspx?PAGEID=13246&SKIN=B

    இந்த அவல நிலைக்கு காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்தியதும் கிருஸ்துவத்தை இந்தியாவில் தீவிரமாக பரப்புவதற்க்கும் திட்டம் போட்டு வந்த சோனியாவின் சூழ்சிகளாலும் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. (ASI+Regional Endowment Board ) இருப்பவர்கள் பெருன்பான்மையாக மற்ற மத நம்பிக்கை கொண்டவர்களும் நாத்திகர்களுமே.

    நமது இந்திய அரசாங்கமும் சுதந்திரத்திற்க்கு பின் பாரதத்தின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதில் ஒரு மெத்தன போக்கையே கடைபிடித்து கொண்டிருக்கிறது. பாரம்பரிய சின்னங்களான கோவில் சிலைகள் வண்ண ஓவியங்கள் புகழ்வாய்ந்த கட்டிடங்கள் என்று எதையுமே பொருட்படுத்துவதில்லை. (ASI) உள்ளவர்கள் எப்படி திட்டம்தீட்டி பொதுமக்கள் கண்ணில் மண்ணைதூவி புரன்நுதாரணம் செய்வதாக சொல்லிக்கொண்டு இடிப்பது சேதப்படத்துவது சுவடு தெரியாமல் அப்புறப்படுத்துவது போன்ற பாதக செயல்களை செய்துவருகிறார்கள் என்பதற்க்கு பல நிகழ்வுகளை குறிப்பிடலாம்.
    2007 ஆம் ஆண்டுதொட்டு (ASI+Regional Endowment Board ) நமது பாரம்பரிய சின்னங்களை புதுபிப்பதாக சொல்லிக்கொண்டு கலைநயத்துடன் இருந்தவற்றை பொலிவிழக்க செய்துவிடுகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால் நன்கு அலங்கரிக்கப்பட்ட லஷ்மிகரமான மணபெண்ணிற்க்கு அமங்கலமான விதவை வேஷம்போடுவது போல்தான்.

    இப்படி தமிழனின் அடையாளங்களை அழிப்பதற்கு ஆதரவுதரும் பகுத்தறிவு கூட்டம் ஒருநாள் தமிழனை நாகரிகம் இல்லாத பரதேசிகள் என்று உலகிற்க்கு அடையாளப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  2. வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளவே இந்த அரசும் அதிகாரிகளும். பக்தர்கள் மனம் நோகும்படி வேண்டும் என்றே செய்கிறார்கள் போலிருக்கிறது

    ஆண்டவன்தான் நம்மை காப்பாற்றவேண்டும்

  3. சிந்தனை தோய்வின் அடி எங்கே……

    கோயில்கள்ள மனல்அடிக்கும் வேல ஏன் செய்றாங்க… அப்பதான் வருமானம் அதிகமாகுமா…. அதெப்படி மனல்அடிச்சு புரான காட்சிகள மறைச்சா வருமானம் அதிகமாகும்…
    புரானகால *கலாச்சாரம்* வெளிப்படுத்தர அம்சங்கள மட்டும்தான் மனல்அடிச்சு பொதைக்கராங்கங்கரது தெளிவு,,, இல்லாத மத்த சிற்பங்களும் ஓவியங்களும் மறைக்கரதுல எப்படி மதிப்பு கூடும்…

    மேல் நாட்டுக்காரன்… அதாவது ஐரோப்பிய நாட்டுக்காரன்,, பழமைய பாதுகாக்கரதுல பெருமயடயரான், உலகமெல்லாம் இருக்கர புரான எடங்கள காப்பாத்த முயற்ச்சிக்கறான்…
    இந்தியால இருக்கறவுங்களுக்கு அந்த என்னம்…இல்ல..ஏன்… ஒரு வேள அதெல்லாம் அவமான அம்சங்கள்னு இந்திய நாட்ல எல்லாரு நெனக்கறாங்களோ என்னவோ.. அதுல என்ன ஆச்சரியம்… அப்டிதான நம்ம கலாச்சாரம் பறைசாற்றுது இன்னிக்கி….
    ஐரோப்பிய நாட்டான் கலாச்சாரம் கேவலமானதாமா.. இங்க எல்லாரும் சொல்றாங்க… ஆனா அவன் பொருப்பா சிந்திக்கரான்,..
    இந்திய நாட்டான் உயர்ந்த கலச்சாரமாம்.. அப்டீனு அவங்களே சொல்லிக்கறாங்க.. இருந்தும் பொருப்பா சிந்திக்கரவுங்க….. இருக்காங்களா..
    தன்னத்தானே சிறந்தவுங்கனு சொல்லிக்கறதுனால சிறப்பாகீட முடியாது,, அதுக்கு ஒப்பு உயர்வு இல்லாத எடுத்துக்காட்டு– இந்தியா…
    மூடிய மனசுல அறிவு வளர்ச்சி இல்லாதது ஆச்சரியம் இல்ல…
    இன்னிக்கி ரொம்ப மெச்சிச்சிட்டுஇருக்கற இந்திய பண்பாடும் கலாச்சாரமும் சரியானு யோசிக்கரவுங்க இருந்தா அவுங்கள அதிர்ஷ்டவசமா அரசாங்கம் துன்புறுத்தாம இருந்தா… சிந்தனை விதங்கள் மாறுமோ……

  4. திருவிரிஞ்சிபுரம் கோவிலில் சமீபத்தில் நடை பெற்ற திருப்பணியில் (சென்ற கார்த்திகைக் கடை ஞாயிறன்று கும்பாபிஷேகம் நடந்தது) கூட மணல் பீய்ச்சும் வேலை நடைபெற்றது. நான் இது தடை செய்யப்பட்ட முறையன்றோ என வினவியபோது, தடையேதுமில்லை என்றனர்.

    இதற்கு முக்கியக் காரணம் அறியாமைதான். தக்க முறையில் தகவல்கள் மக்களைச் சென்றடையவில்லை.

  5. வர வர தமிழ் ஹிந்து படித்தாலே மன அமைதி போய் விடும் போல இருக்கிறது 🙁

  6. பிரிட்டிஷ் காலனிய அரசாங்கம், இந்து அறநிலையத் துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியதே, கோயில்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொள்ளையடிப்பதோடு, இந்து ஒற்றுமை ஏற்படுத்துவதிலும், இந்து மத வளர்ச்சியிலும் கோயில்கள் எந்தவிதப் பங்கையும் வகிக்கவிடாமல் செய்வதற்காகவே.

    ஹிந்து விரோதி நேருவின் காங்கிரஸ் அரசாங்கமும், திராவிட இயக்கங்களும் இதே கொள்கையை/கொள்ளையைத் தொடர்ந்தன.

    அரசாங்கம் இந்து ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷம் இந்து இயக்கங்களால் தேர்தல் நேரத்தில் முன்வைக்கப்படுவதோடு சரி. அவர்களுக்கே அதில் அவ்வளவு நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை.

    பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்த 7 ஆண்டுகளில் இதை எளிதில் நிறைவேற்றி இருக்கலாம். தி.மு.க.வுக்கு பா.ஜ.வின் தயவு தேவையாக இருந்தபோது, ஆதரவு கொடுக்க இதை முதன்மையான நிபந்தனையாக வைத்திருந்தால் தன் குடும்ப நலன் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாத கருணாநிதி அறநிலையத் துறையயை உடனடியாகக் கலைத்திருப்பார். அப்படி நடக்காமல் போனதற்கு, நிச்சயம் கருணாநிதி காரணமல்ல.

  7. Good to see you in Tamil Hindu, Chandra…
    Though I have been reading these through you for quite a long time, its really paining to see such attrocities happening around us. The world has gone materialistic and everyone is behind money. And people are so ignorant that they dont know anything about temples.
    All they want is, go to the garbagraham, see the diety, get vibuthi, kumkumam and think that they have earned ‘punyam’.

    kali muthi pochi…what else to say…

    Regard,
    Satish

  8. Pingback: Indli.com
  9. மிக நன்று !

    நம்மிடயே பலருக்கு விழிப்பே இல்லை!

    நாகப்பட்டினம் கோவில் உள்ளே பிரகாரங்களில் பூங்கா அமைக்கிறேன் என்று அரசு செலவு செய்திருக்கிறது அதில் உள்ள டென்டர் இத்யாதி தான் எல்லாருக்கும் தெரியுமே ? அவசியமே இல்லாமல் கோவில்களை சிதைக்கிறார்கள், தற்பொழுது கோவிலுக்கு வருகை குறைந்து கொண்டே வரும் ! சுற்று வர எங்கே இடம் நெரிசலில் சிக்க எவர் விரும்புவார்கள் !

    பகுதியில் உள்ளே அடியார்கள் சபை எவருமே எதுவும் செய்ய முடியவில்லை. !

    அடியார்கள் எந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றும் ஒரு பயனுள்ள கட்டுரையை எதிர் நோக்கி !

    சஹ்ரிதயன்

  10. திரு சந்திரசேகரன்
    நீங்களும் உங்கள் அமைப்பும் பல்லாண்டு வாழ்க.
    உங்கள் சேவை மிக பெரிது.

    தொல்லை-இயல் துறை வேண்டுமென்றே சில காரியங்கள் செய்வதாக முன்பே தோன்றியது-அதெல்லாம் இருக்காது, அக்கறையின்மை காரணமாகத்தான் இப்படி என்று சிலர் சமாதானம் சொன்னார்கள்-உண்மை இப்போது தெளிவாக தெரிகிறது.

    இவர்கள் பின்னிருக்கும் கூட்டமோ துரியோதனக்கூட்டத்தை நல்லவர்கள் ஆக்கி விடும் முரட்டு சதிக்கூட்டம்.

    என்னால் முடிந்தது இக்கட்டுரையை பலருக்கும் அனுப்புகிறேன்.
    வெளிநாட்டு [ குறிப்பாக அமெரிக்க] வாழ் இந்திய சமூகம் உதவ முடியலாம். அவர்களுக்கும் கடமை உள்ளது. நம்மை போல் பேய் ஆட்சியிலும் அவர்கள் இல்லை.
    இறைவன் உங்கள் பக்கம் இருக்கட்டும். வாழ்க உங்கள் பணி.
    அன்புடன்
    சரவணன்

  11. வர வரப் பெரிய கோயில்களுக்குப் போகவே பிடிக்கவில்லை. அதிலும் மதுரை மீனாக்ஷி கோயிலுக்கு 2007-ல் போய்ப் பார்த்துட்டு, பொற்றாமரையைச் சுற்றிலும் இருந்த ஓவியங்களை அழிச்சிருந்ததையும், வேறொரு ஓவியரைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டிருந்ததையும் பார்த்தப்போது இது வேறே ஏதோ ஊர் என்ற உணர்வே வந்தது. நான் பிறந்து, வளர்ந்த ஊராய்த் தெரியவில்லை. மீனாக்ஷியையும் பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு கூட்டம். ஒரு ஒழுங்கு முறை இல்லாமல் கோயில் ஊழியர்களும், காவலர்களும் அவங்களுக்குத் தெரிஞ்சவங்களையே உள்ளே விட்டாங்க. மதுரைக்குப்போகவோ, கோயிலுக்குப் போகவோ பிடிக்காமல் போய்விட்டது. திருச்செந்தூரிலும் இதே அக்கிரமம் நடக்கிறது. அங்கே திருப்பதி மாதிரி கூண்டுகள் கட்டப் புராதனமான ஒரு வாயிலையே இடிக்கப் போறாங்க. இப்போதைக்கு ஊர் மக்கள் எதிர்ப்பு வந்திருக்கு. போகப் போக எப்படியோ?

  12. படிக்கும் போதே மனம் பதறுகின்றது. திராவிட கட்சிகள் இருக்கும் வரை இந்த அவலநிலை தான். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது.

    சோமசுந்தரம்

  13. வாழ வீடில்லாத ஏழைகள் மிகுந்த இந்தியாவில் கற்சிலைகளுக்குச் சொத்துக்கள் எதற்கு?

    ஏசுவைப் போல ஏழைகளுக்குக் கண்ணீர் சிந்த இந்து மதம் தயாரில்லாதபோது, தெரேசாவின் தோட்டங்களுக்கு நிலங்கள் போகட்டுமே.

    காட்டுமிராண்டித் தெய்வங்களையும், பழக்கங்களையும் விட்டுவிடுங்கள் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் சொன்னதை நினைவுகூறுங்கள்.

    மெய்யான தேவனைக் கண்டடையுங்கள்.

  14. Why Kanyakumari temple need to be protected?

    Many people dont know that the kumari amman temple was one of the oldest stone temple built in Tamilnadu. This was constructed even before cholas. The main sanctum and the ardhamandapam and the pillared mandapam before the ardha mandapam were built by Pandyas in 860 AD itself.

    1. Pandyas call the devi as Kanyapidariyar and Kanya bhagavathiyar. Part of this inscription is covered with a cement structure that keeps the utsava moorti

    2. Parantaga chola in 910 after his victory over the Pandya country had gien vast contribution and his salutations to bhagavathi

    3. Rajaraja had given many lands

    4. Rajendra lists out around 64 officers who were administrating kumari

    5. His son Virarajendra had written the entire chola history from Vijayalaya onwards on the 4 pillars before ardha mandapam. Some good hearted soul had covered the 4 pillars with a brass cover for protecting the inscriptions.

    This is the only stone inscription that gives the chola history from 840 to 1060.

    6. Kulothunga made vast contributions.

    The temples destructed by sand blasting

    1.Ttirunelveli
    2. Sivasailam – Nw the pillars are developing cracks
    3.Ambasamudra ericha udayar temple
    4. Kalakkad
    5. Last week – Gangaikondan near tirunelveli. Though the town is names as Gangaikondan after Rajendra – the temple was built by Maran sadayan in 860s.
    6. 2 months back Takkolam
    7. Thiruppalaivanam near ponneri
    8. Mannarkoil – nayak murals erased. It has many miniature scluptures and all are sand blasted.
    9. Thiruppulivanam – all pallava period murals erased
    10. virinjipuram – 3 months back
    11. thirupparkadal 2 months back
    12. Madurai]
    13. Pillayarpatti
    14, tenkasi
    15. Thiruvattaru
    16. Ammaninatha swamy – Seranmadevi
    17. Nava Thiruppathi
    18. Suchindrum – another treasure house of inscriptions

    The list is very long.The first thing people do is to bring a compressor during renovation.

    The Narasimar temple in Tirunelveli was built by Pandyas in 910 but the temple is totally renovated and the entire wall is with inscriptions like donated by … stores, by sri …..
    The old inscriptions are now only in asi volumes.

    Another blunder is white washing and painting. Then sand blasting to remove them.

    In fact almost all temples in Tirunelveli region are sand blasted.

    Now what we want is not tears from people but a solid action.

  15. தமிழ்ஹிந்துவுக்கு முதல் கட்டுரையைத் தந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி சந்திரசேகர்!

    அருமையான ஒரு கண் திறப்புக் கட்டுரை. சுயலாபத்துக்காக தன் சொந்த பாரம்பரிய சின்னங்களையே அழித்தொழிக்கும் இந்த அரசுத்துறையை என்னவென்ரு சொல்வது? எங்கே போய் முட்டிக் கொள்வது? மஹாமக்கள்தான் தங்கள் வாக்குச்சீட்டு வல்லமையால் தீர்வு தரவேண்டும்.

  16. இப்போ தான் நமது கோவில்களில் நவீன மாற்றங்கள் கட்டுரையை படித்து விட்டு இப்படி புலம்பிப் (புலம்பல் கீழே ) பின்னூட்டம் போட்டேன். இதக் கட்டுரையை இப்போ தான் பார்த்தேன்.
    “ரீச் பவுண்டேஷன்” அமைப்புக்கு முதலில் நாடறியும் பாராட்டுக்களும்.

    மிகுதியாக கூட்டம் வரும் பிரபல ஆலயங்களில் ஆலய நிர்வாகம் பணத்தை வாரி இறைக்கத் தயாராக இருப்போருக்கென்று தனி சலுகைகள் கொடுத்து மற்றவர்களை காத்து நிற்க வைப்பதோடு அல்லாமல் கேள்வி கேட்டால் படு அலட்சியமாக உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று சொல்லுவதைக் காணலாம். அதுவும் முறையாக டிக்கெட் எடுத்துக் கொண்டு நின்றாலும் இதே கதி தான். அதுவும் அதிகாரிகள் அர்ச்சகர்களை விட கேட் கீப்பர் என்று நிற்பவர்கள் நடந்து கொள்ளும் விதம் ரொம்பவும் முரட்டுத் தனமாக இருக்கிறது.

    சினிமாவிலோ ஏதாவது ஊடகங்களிலோ யாரவது இந்து மத விமர்சனம் செய்தால் இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டதாக குரல் எழுப்பும் இந்து மத அமைப்புகள் கோவில் தேடி பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு உண்டாகும் சிரமங்களை கொஞ்சமேனும் குறைக்க முயலலாம். இது மாதிரி நிர்வாகத்தில் நேரடியாக தலை இட முடியாவிட்டாலும் எதிர்க் குரல் எழுப்ப வெளிப்படையாக விமர்சனம் வைக்க மட்டும் நல்ல ஆலோசனைகள் தர முன் வரலாம்.
    பக்தர்கள் மித மிஞ்சிய சுயநலப் போக்கோடு கோவில்களுக்கு சென்று அங்கே எல்லா இடத்திலும் அந்த சுயநலத்தை பிரதிபலிக்காமல் கொஞ்சம் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும்.
    https://www.virutcham.com/2010/12/ஆன்மிகம்-நுகர்வோர்/

  17. பின்னூட்டமிட்ட எல்லாருக்கும் நன்றி. இனி எங்கேனும் இவ்வாறு நடந்தால் மக்கள் விழித்துக் கொண்டு, தடை செய்யுங்கள்.

    ரீச் பல கோயில்களின் புனரமைப்புக்கு இ.அ.துறையிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. எனவே கோர்ட் படி யேறி மற்ற கோயில்களுக்கு அனுமதிகளை இழக்க நாங்கள் விரும்பவில்லை. தனி நபரோ, வக்கீல் அறிஞர் பெருமக்களோ தடை உத்தரவு வாங்கினால், எல்லா உதவிகளையும் செய்யத் தயாராய் உள்ளேன்.

    மரபூர் ஜெய.சந்திரசேகரன்.

  18. The report is an eye opening for all the Hindus. The action on the part of the authorities are atrocious, themselves being Hindus. All this is due to disunity among all the Hindus. We are not united and we have no goal to achieve to preserve the ancient sculptures in the century old temples. We have no organisation of our own to agitate over this anomalies. We are not active in the existing organisation devoted for the welfare of the Hindus. We do not participate in their meetings and conferences organised by them periodically and I am not the exception. The people in authority, as correctly mentioned in this report, are more interested in spending the budgeted amount, rather than view the importance and need based renovations. We will continue to be the silent spectators unless we are united and stand as one instead of divided.

    United we stand-divided we fall

  19. This is a request to Mr.Ramesh, who has included Kalakkad temple as a sand blasted one in his reply dated 10th Feb 2011.

    I request Mr.Ramesh to kindly provide further details like when was it done etc.

    Currently renovation work is almost complete and to my knowledge no sand blasting was carried out now.

    May be it was resorted to during earlier times, say about 10 years back.

    But if it is part of a current renovation works, then atleast it can be explained to those responsible, as to why it should have been avoided.

    Even if it is late, I think we need to tirelesly educate all, without forming any personal opinions.

  20. பாரத சமுதாயம் கோவில்களையும் அதில் உறையும் தெய்வங்கங்களையும் இயற்கையாகவே உள்ளடக்கிய ஒன்று. ஜெயராஜ் என்ற பெயரில் உள்ள கிரிச்தியாநிசதுக்கு மாற்றப்பட்ட ஒருவர் கூட, கிரிச்தியாநிசப் பெயரை வைத்துக்கொள்ளாமல், ஜெயராஜ் என்கிற வடமொழிப் பெயரை வைத்துக்கொண்டு, ஏழைகள் பாரதத்தில் மட்டுமே இருக்குமாக்ப்போலே எழுதுவதைப்பார்த்தாலே தெரியவில்லையா, இந்து அறநிலையத் துறை என்ற பெயரில், ஜெயராஜ் போன்ற போலி இந்துக்களை, இந்து எதிரிகளைக்கொண்டு, நடத்தப்படும் அராஜகங்களில் ஒன்று ஆலய பராமரிப்பு என்று.

  21. But please note that having a park inside, helps to retain water. That would protect the structure and that is why all ASI temples have a garden. There is nothing wrong in that. There is nothing wrong in what is done in Nagapatnam.

    The Madurai Meenakshi temple Potramaraikkulam was cemented and cracks started appearing on the walls. Now they have 4 bore wells on all the 4 corners which pump and keep the tank full to protect the walls.

    The Kalakkad temple images are sand blasted. But if you say that it was 10 years back – then you can still see the visible damages. Once sand blasted – that is gone for ever irrespective of the year.

    I have found visible cracks in sinasailam which was sand blasted 10 yrs back. The latest damage is to Tirunelveli. Gangaikondan sand blasting is defenetly within a month old. The Gangaikondan temple is the one of the few early pandya structure left.

    regards

  22. முன்னோர் உழைத்துச் சேர்த்து, நமக்காக விட்டுச் சென்ற அனைத்துவகை செல்வங்களின் ஒட்டுமொத்த அடையாளங்களான கோயில்கள் அழிகின்றன. அழிக்கப்படுவது நமக்கு வரவேண்டிய, நாம் அனுபவிக்க வேண்டிய சொத்து எனத் தெரியாமல் நாம் இருக்கிறோம். வெறுமே இருக்கிறோம். வாழ்கிறோம் என்ற வார்த்தையை எழுத வரவில்லை.

    கோவில் சுற்றுச் சுவர்களில் மூத்திரம் போகிறோம். நம் வீட்டுச் சுற்றுச் சுவர் சுத்தத்திற்குத் தெய்வப் படங்களை மாட்டி வைக்கிறோம்.

    இந்தியாவில் இந்து மதம் செத்துப் போய் ஆயிற்று பல காலம். அழிக்கப்படுவது கல்லறைகளின் வரலாறு.

    கோயிலை இடித்தால்கூட கவலைப்படப் போவதில்லை நாம். ஆனால், தமிழ் ஹிந்து மற்றும் மரபூர் சந்திரசேகர் போன்றோர் செத்த பிணத்திற்கு உயிர் வரும் என்று நம்புவதுதான் கவலை தருகிறது.

    அறிவியல் விதிகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. செத்த பிணத்திற்கு உயிர் வராது என்பதுதான் அறிவியலின் விதி. ஞானசம்பந்தருக்கு முன் அஸ்திச் சட்டியை வைக்கிறது இவர்களது அசாத்திய நம்பிக்கை. இதற்குப் பெயர் அறியாமை என்கிறது அறிவியல். அறிவிலித்தனம் என்கின்றன திராவிடர் கழகங்கள்.

    அத்தனை வசவுகளையும் மீறிச் செல்லும் செயல்படும் இவர்களது நன்னம்பிக்கை அசாத்தியமானது. மரணம் என்பது தொடரும் வாழ்வின் ஒரு பகுதிதான் எனும் இந்துத்துவக் கருத்தை இவர்கள் இன்னமும் நம்புகிறார்கள் போலும். நம்பிக்கைகள் மந்திரத்தன்மை கொண்டவையாம். சொல்லிக்கொள்கிறார்கள்.

    என்றாவது உயிர் வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் பதம் செய்யப்பட்ட இந்து உடம்பிற்குப் பூஜை தொடர்கிறது. ஒப்பாரிகளாகவே ஓதுவார் பாடல்கள் ஒலிக்கின்றன. அசைக்க முடியாத நம்பிக்கையுடன்.

    அதிசயங்கள் நம்பிக்கையில்தான் பூக்கின்றன. உயிர் பூத்தபின் உடலைப் பிணம் எனச் சொல்ல முடியாதுதான். அதுவரை அழுவோம்.

    அழவாவது செய்வோம்.

  23. அறநிலையத்துறை என்பதை நான் பலமுறை மறநிலையத்துறை என்று வேடிக்கையாக அழைப்பதுண்டு. காரணம் அடாவடித்தனமான பல நடைமுறைகள் கடைப்பிடிக்கபடுவதினால்தான். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிலநாட்களுக்கு முன்பு வரை எல்லா சன்னிதிகளிலும் தீர்த்தமும் சடாரியும் வழங்கி வந்தனர் அர்ச்சகர்கள். ஆனால் திடீரென்று இவ்வழக்கம் கைவிடப்பட்டு ஏதாவதொன்று வழங்கினால் போதும் என துணை ஆணையர் உத்திரவிட்டபடியால் அவ்வாறே நடந்து வருகிறது. கோயில் நடைமுறைகளை மாற்ற துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற போதிலும் இந்த அடாவடித்தனம் பல கோயில்களில் நடைமுரைப்படுதப்படுகிறது.உண்டியல் ஒன்றே குறிக்கோள் என்பது துரையின் விதி. ஆகையால் ஆகமமும் தொன்மையும் குப்பைகூடைகளில் வீசப்படுகின்றன. கடவுள் நம்பிக்கையற்ற அரசாங்கம் அண்ணாதுரையின் திவசத்தை கோயில்களில் சமபந்தி போஜனம் மூலம் கொண்டாடுகிறது.

  24. திருப்பதியிலும் கூட அனந்த ஸ்வர்ணமயம் என்னும் பெயரால் கலைநயம் மிக்க தூண்களையும், கல்வெட்டுக்களையும் (அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்க் கல்வேட்டுக்களாகும்) சிதைக்கும் முயற்சி அண்மையில் நடந்தது. ஆனால், ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால், அது கைவிடப்பட்டு விட்டது.

    சில நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி யாதெனில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் புராதானமான கோவில்கள் அனைத்தையும் மத்திய தொல்லியல் துறையின் கீழ்க் கொணரும் திட்டம் உருவாகியிருப்பதுதான். ஆனால், இதற்கும் பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.

  25. i feel it is not just HRCE alone responsible for the problem. many of the “Thiruppanik Kuzhus” also responsible for this. Many uzhavarappani groups also with out any proper knowledge – white wash/paint temples.

    when i visit many temples i find that the Gurukkals and uzhavarappani groups have drawn up plans for sand blasting the temples. Even there are plans for tiling the walls, laying tiles in the floor etc.

    Unless we take united action – nothing will happen. But if all Hindu organisations take up this cause – that will be helpful. Please note that without HRCE – the temples cant be maintained.

    All the temple lands, farms, buildings, houses are all under Hindus and they are not paying rent/lease amount. So no point in blaming others when we have many things to correct internally. If the rent and lease amount is paid then the temples can be administered better. Hindu organisations should work in getting the lease and rent paid by tenants.

    regards

  26. எப்போது இந்து கோயில்கள் அற நிலை வசம் வந்ததோ அப்போதெ இந்து கோயில்களின் புனிதம் போய்விட்டது,இப்போது புராதானமும் கேள்விக்குறியே… வசூல் ராஜாக்களுக்கு பக்தி விலை என்ன என்று தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *