தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி

admk-vs-dmk

அதீதத் தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் ஒரு நூலிழைதான் வித்யாசம் என்பார்கள்- அதிபுத்திசாலிக்கும் பைத்தியத்திற்கும் இருக்கும் அதே நூலிழை வித்யாசம்தான். இந்த வித்யாசம்தான் வாழ்வை இயக்குகிறது. தன்னை உணர்ந்தவன் சாதனை புரிகிறான். தன்னை மாபெரும் சாதனையாளன் என்று தனக்குத் தானே எண்ணிக் கொள்பவன் சோதனைகளை அடைகிறான். கடைசியில் அவனுக்கு வேதனைதான் மிஞ்சும்.

தேர்தல் களத்தில் தத்துவமா என்ற கேள்வி எழலாம். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்தானே கீதை ஞானம் பிறந்தது? தமிழகத் தேர்தல் களம் இப்போது வைகோவுக்கு மயான வைராக்கியத்தையும், தமிழக வாக்காளர்களுக்கு ஜெயலலிதா குறித்த மனச் சித்திரத்தையும் அளித்திருக்கிறது. ஒருவகையில், தேர்தல் முடிவுகளை நிர்மாணிக்கும் முக்கிய கருதுகோள்களை, அண்மைய தேர்தல் நிகழ்வுகள் அளித்துள்ளன.

தமிழகத் தேர்தல் களம் கடந்த ஒருமாதமாகவே பரபரப்புடன்தான் காணப்படுகிறது. குறிப்பாக திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையிலான ஊடலும் கூடலும் தேர்தல் காலத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி இருந்தன. சுயமரியாதைச் சுடரொளியாம் கருணாநிதி நடத்திய அபத்த நாடகம் ஆளும் கூட்டணியின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்தியது. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி உறுதியாகி வந்தது. விஜயகாந்த்தின் தேமுதிக, அதிமுக உடன் கைகோர்ப்பது உறுதியானவுடன், தமிழகத் தேர்தல் களத்தில் புத்துணர்ச்சி தென்பட்டது. முதல் சுற்றில் அதிமுக வென்றதாகவே கருதப்பட்டது.

திமுக தலைவர் நடத்திய அரசியல் நாடகம் சந்தி சிரித்திருந்த நிலையில், ஆண்டிமுத்து ராசாவின் பினாமிக் கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி (மார்ச் 16) ஆளும் கூட்டணி திகைப்பில் ஆழ்ந்திருந்த தருணம், ஜெயலலிதா நிகழ்த்திய இமாலயச் சறுக்கல், சற்றும் எதிர்பாராதது. வைகோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் முடிவில் ஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்த 160 அதிமுக வேட்பாளர் பட்டியல், அவரது கூட்டணித் தோழர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. ‘ஜெயலலிதா மாற மாட்டார்’ என்ற பேச்சுகள் புழங்கத் துவங்கின.

jayalalitha1தன்னிச்சையான போக்கு, யாரையும் துச்சமாகக் கருதும் அகந்தை, எவரையும் மதிக்காத கர்வம் போன்ற காரணங்களால்தான் முந்தைய காலங்களில் ஜெயலலிதா ஆட்சியைப் பறிகொடுத்திருந்தார். தற்போது அவர் மாறிவிட்டார் என்று நம்பப்பட்டு வந்தது. திமுக தலைமையின் அதிபயங்கர ஊழல்களுக்கு ஒரே மாற்றாக ஜெயலலிதா உருவாவார் என்ற நம்பிக்கை காரணமாகவும் அவரது பழைய குணாதிசயங்களை மறக்க தமிழகம் தயாராக இருந்தது. அந்த எண்ணத்தைத்தான், ஜெயலலிதா தனது ஒரே பட்டியலில் தகர்த்து எறிந்தார்.

புத்திசாலிகள் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சாதனையாக்குவார்கள். முட்டாள்களோ, அற்புத வாய்ப்பையும்கூட நழுவ விடுவதுடன் அதனையே தனக்கு சோதனையாக்குவார்கள் என்பது தேர்தல் களத்தில் மீண்டும் தெளிவானது.

சாதிக் பாஷா மரணம் திமுகவையும் மத்திய அரசையும் உலுக்கி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அதிமுக தலைவி செய்த சிறுபிள்ளைத்தனத்தால், அவர்கள் ஆசுவாசம் அடைந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அதிமுகவின் எதேச்சதிகாரத்தால் வெகுண்டு கூட்டணி கட்சித் தலைவர்கள் தேமுதிக அலுவலகத்திற்கு படையெடுத்தபோது, தேர்தலின் பிடி ஜெயலலிதா கரத்திலிருந்து விஜயகாந்த் கரத்திற்கு மாறுவது தெளிவாகவே புலப்பட்டது. இந்த வினையை ஜெயலலிதாவே சுயமாகத் தேடிக் கொண்டார். சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்றால் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும்.
‘அம்மா’வின் தடுமாற்றம்:

இந்த தடுமாற்றத்திற்குக் காரணம், ‘அம்மா’ என்று பயபக்தியுடன் தொண்டர்களால் அழைக்கப்படும் ஜெயலலிதாவின் அகந்தை மட்டுமே. தன்னை அனைவரும் ‘அம்மா’ என்று அழைப்பது பாசத்தால்தான் என்று கருதிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவிடம் யார் புத்திமதி கூறுவது? தனது நீண்டநாள் கூட்டாளியான மதிமுக கோரும் இடங்கள் (35) அதிகம் என்ற அம்மா, அவருக்குக் கொடுப்பதாகக் கூறிய தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 6! வைகோ 21 தொகுதிகள் போதும் என்று கீழிறங்கி வந்தும் கூட, அம்மா மனம் இளகவில்லை. புதிதாகக் கூட்டணியில் ஐக்கியமான தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை வழங்கிய அம்மா– மார்க்சிஸ்டுகளுக்கு 12 தொகுதிளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளையும் அளித்த அம்மா– வைகோவுக்கு மட்டும் தொகுதிகளைக் குறைத்தது பல நியாயமான கேள்விகளை எழுப்பியது.

இந்தத் தொகுதி உடன்பாட்டில் மதிமுகவுக்கு கடைசி வரை அழைப்பு விடுக்கப்படவில்லை. ஏனெனில் மதிமுகவுக்கு வேறு போக்கிடம் கிடையாது. பாமக போலவோ, தேமுதிக போலவோ ‘அரசியலில் எதுவும் சாத்தியம்’ என்று கூறிக் கொண்டு பிறருடன் பேச்சு நடத்தவில்லை வைகோ. அது அவருக்கு தெரியாது என்பதல்ல; அவருக்கு அந்த வாய்ப்பே இருக்கவில்லை. ஆக மொத்தத்தில், பேரம் பேசும் திறன் இல்லாத காரணத்தால், வைகோ அழையா விருந்தாளி ஆனார். புதிய கூட்டாளிகளுக்கு மரியாதை கிடைத்தது.

போதாக்குறைக்கு கூட்டணிக் கட்சிகள் கோரிய தொகுதிகள் அதிமுகவின் விருப்பத் தொகுதிகள் பட்டியலில் இடம் பெற்றவையாக இருக்கவும், ஜெயலலிதா தடுமாறினார். கருணாநிதிக்கு எதிராக மாபெரும் அதிருப்தி மாநிலத்தில் நிலவுவதாக ஊடகங்கள் எழுதத் துவங்கிவிட்டதை தனக்கான கிரீடமாகவே கண்டார் அம்மா. வழிக்கு வராத வைகோவை மட்டம் தட்டவும், சமமான குரலில் பேசும் தோழமைக் கட்சிகளை அடக்கவும் பிரயோகித்த அஸ்திரம்தான் 160 வேட்பாளர் கொண்ட அதிமுக பட்டியல். ஆனால், அதன் விளைவு எதிரிடையாகத் திரும்பும் என்று அவர் கனவு கண்டிருக்கவில்லை.

கூட்டணிக் கட்சிகள் சென்ற தேர்தலில் வென்ற தொகுதிகளிலும் கூட அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது, கூட்டணி தர்மத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆனது. மறுநாள், கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகம், புதிய வாசல் ஆனது. இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேறக் கழகத் தலைவர் சேதுராமன் எனப் பலரும் படையெடுத்து, புதிய தலைவர் விஜயகாந்தை தரிசித்தனர். அதிமுகவின் தன்னிச்சையான போக்கால் மனம் புண்பட்ட தோழமைக் கட்சிகள் விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசித்தனர்.

 
விஜயகாந்த்தின் நிதானம்

vijaykanth-dmdkஇந்த இடத்தில்தான் விஜயகாந்த் தனது மதியூகத்தை (உபயம்: பண்ருட்டி ராமசந்திரன்?) வெளிப்படுத்தினார். மூன்றாவது அணியாகப் போட்டியிட்டால், எதிர்பார்க்கும் வெற்றி வசப்படாது போவது மட்டுமல்லாது திமுக ஆட்சி மீண்டும் மலர வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அவர்தான் பிறரை அமைதிப்படுத்தினார். இந்த நிதானம் ஜெயலலிதாவிடம் இருந்திருக்க வேண்டியது.

ஆனால், அதிமுகவின் ஆணவ அறிவிப்பால் ஆவேசம் அடைந்த கூட்டணித் தொண்டர்கள் தமிழகத்தின் பல இடங்களில் ஜெயலலிதா உருவ பொம்மையை எரித்தனர். ஒரே நாளில், கருணாநிதிக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு எதிரானதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை ஜெயலலிதா தவிர வேறு யாருக்கேனும் வாய்க்குமா என்பது சந்தேகமே.

ஜெயலலிதா உருவபொம்மை எரிக்கப்பட்டதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். ஊழல் திலகமான கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றுபட்டிருக்கும் நிலையில் ‘வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்கிறாரே ஜெயலலிதா’ என்ற கோபமே மாநிலம் முழுவதும் வெளிப்பட்டது.

ஆயினும் விஜயகாந்த்தின் நிதானத்தால் (கொம்பு சீவி விடுபவர்களுக்கென்ன? அவர்களா தேமுதிகவை சட்டசபைக்கு அனுப்பப் போகிறார்கள்?) மூன்றாவது அணி என்ற முழக்கம் அமுங்கியது. ‘துக்ளக்’ சோ உள்ளிட்ட ஜெ. நலம் விரும்பிகள் சூழ்நிலையின் திருப்பத்தை உணர்ந்து ஜெயலலிதாவை எச்சரிக்க, கொஞ்சம் தெளிந்தார் ஜெயலலிதா. அவர் அறிவுறுத்தியபடி, சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளான அதிமுக குழு (பாவம், பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் பொள்ளாச்சி ஜெயராமனும்) மீண்டும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியது. எனினும் இந்தமுறை புத்திசாலித்தனமாக ஒவ்வொரு கூட்டணிக் கட்சியாகப் பேசி அவர்களது தொகுதிகளை அறிவித்து சமாதானப்படுத்தியது அதிமுக.

ஒருவாறாக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மார்ச் 20-ஆம் தேதி தொகுதிகள் தெளிவாகப் பிரிக்கப்பட்டன. ஆயினும் மதிமுகவுக்கு அம்மாவின் அருள் கிடைக்கவில்லை. ”வேண்டுமானால் 12 தொகுதிகள் தருகிறோம்; அதுவும் நாங்கள் கொடுக்கும் தொகுதிகளைத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்ற உபதேசம் வைகோவை மீண்டும் சீண்ட, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது மதிமுக.

 
வைகோவின் பலவீனம்

சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடாது; மதிமுக போட்டியிடாததால் தமிழகத் தேர்தல் களத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டு விடாது. இதனை வைகோ புரிந்துகொள்ளவில்லை. ஜெயலலிதாவின் புறக்கணிப்பு அளித்த மன வேதனை வைகோவின் சுயமரியாதையைத் தூண்டி இருக்கக் கூடும் (காங்கிரஸ் கட்சியால் சுயமரியாதை நினைவுக்கு வந்த கலைஞர் இப்போது உங்கள் ஞாபகத்திற்கு வரக் கூடும்).

உண்மையில் தனது வீழ்ச்சிக்கு வைகோவே பலமுறை காரணமானார். அவரும் பலமுறை சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார். ஒவ்வொரு தேர்தலிலும் அணி மாறி தனது நம்பகத் தன்மையை பலி கொடுத்த வைகோ, கலைஞரின் ஆள்பிடிப்பு வியூகத்தில் தனது கட்சியின் முன்னணித் தலைவர்களை இழந்தார். கூட்டணியில் தனக்கு உரிய மரியாதை இல்லை என்பதை முன்னதாகவே உணர அவரது அரசியல் அனுபவம் உதவி இருக்க வேண்டும். அதிலும் அவர் சறுக்கினார். தனக்கு எதிராக ஒரு பன்னாட்டுத் தொழில் நிறுவனம் செயல்படுவதை அவர் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. பாஜக தனித்து நிற்பதாக அறிவித்த போதேனும் அவர் சுதாரித்திருக்கலாம்.

இவ்வாறு பல அறிகுறிகள் தெரிந்தபோதும் அமைதி காத்த வைகோ, இறுதியில் ஜெயலலிதா தன்னைக் கைவிட்டுவிட்டதாகவும் துரோகம் செய்துவிட்டதாகவும் புலம்புவதில் பொருளில்லை. அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு தனது வெற்றிவாய்ப்பை அதிகரிப்பதே தனித்த ஆட்சிக்கு உதவும் என்று மனப்பால் குடிக்கும் ஜெயலலிதாவுக்கு வைகோவின் அமைதி வசதியானது. வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில் வேறெங்கும் செல்ல முடியாத நிலையில், தனித்து தேர்தலை சந்திக்க முடியாத நிலையில், வைகோ அறிவித்திருப்பதுதான் தேர்தல் புறக்கணிப்பு.

சாகப்போகும் நிலையில் இருப்பவனுக்கு வரும் வைராக்கியத்தின் பெயர்தான் ‘மயான வைராக்கியம்’. தேர்தல் நடைமுறைகள் துவங்கியபோது இந்த வைராக்கிய சித்தராகக் காணப்பட்டவர் கலைஞர். இப்போது ஜெயலலிதாவின் முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளால் மயான வைராக்கியம் வைகோவுக்கு இடம் மாறி இருக்கிறது. மாறாக ‘பிரசவ வைராக்கியம்’ (அழுது அழுது பெற்றாலும் அவளவள்தான் பெற வேண்டும்) என்ற உயரிய குணத்துடன், வைகோவை மறந்துவிட்டு அதிமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் களத்திற்குச் சென்றுவிட்டன.

மூன்றாவது அணி அமைக்கலாம் என்ற யோசனையின்போது வைகோவையும் சேர்த்துக் கொண்ட கம்யூனிஸ்டுகளும் பிற கட்சிகளும், தங்களுக்கு பிரச்னையின்றி தொகுதிகள் கிடைத்தவுடன் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. இப்போது மீண்டும் ‘சரியான நேரத்தில் தவறான முடிவு எடுக்கும்’ தனது அற்புதத் திறமையை நிரூபித்திருக்கிறார் வைகோ. கடைசிக்கு ஜெயலலிதா கொடுப்பதாகக் கூறிய 12 தொகுதிகளில் மட்டுமாவது போட்டியிட்டு, அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி மதிமுக வென்றிருக்கலாம்.

இதற்கு மாறாக கம்யூனிஸ்ட், பாஜக கட்சிகளை தொகுதிகளுக்கு ஏற்றவாறு ஆதரிப்பதாகவேனும் வைகோ அறிவித்திருக்கலாம். போர்க்களம் செல்லாமல் புறமுதுகு காட்டுவது அரசியல் கட்சியை வாழ வைக்காது.

தனது கட்சியின் வாக்கு வங்கி ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ போகக் கூடாது என்று முடிவெடுக்க அவருக்கு உரிமையுண்டு. ஆனால், அதனை வீணாக்க அவருக்கு கண்டிப்பாக உரிமை கிடையாது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் வைகோவின் பேச்சுக்கு தமிழகத்தில் பெரும் மதிப்புண்டு. தனது சிந்தனையுடன் ஒத்த நண்பர்களைத் திரட்டி இரு கழகங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவாவது வைகோ முன்வந்திருக்கலாம்.

இயக்குனர் சீமானும் (தமிழகத்தின் சேகுவேராவாம்!) நாடாளும் மக்கள் கட்சியின் நடிகர் கார்த்திக்கும் (இந்தத் தேர்தலின் ஒட்டுமொத்த ஜோக்கர் இவரே!), பாரிவேந்தரும் (இவர் தலைமையில் மாமாபெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது!) தங்கள் இருப்பை எப்படி எப்படியோ வெளிப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், களத்தை விட்டு விலகியோட, வைகோ ‘விதுரர்’ அல்ல.

 
கருணாநிதியின் நாகரிகம்

karunanithyஎதிரணியில் நேரிட்டுள்ள குழப்பம் தனக்கு உவப்பைத் தரவில்லை என்று மொழிந்திருக்கிறார், கருணாநிதி. என்னே பெருந்தன்மை! கடலில் கட்டிப் போட்டாலும் கட்டுமரமாக அவர் மிதக்கும் கலைஞர் தொலைக்காட்சியும், அன்பு நிழல் மாறனின் சன் தொலைக்காட்சியும் அதிமுக கூட்டணியை நொறுக்க என்ன வகையிலான செய்திகளையெல்லாம் ஒளிபரப்பின என்பது, அந்தக் குழப்ப நாள்களில் செய்தி பார்த்த நேயர்களுக்குத் தெரியும்.

எது எப்படியோ, முற்றிலும் கருணாநிதிக்கு எதிரானதாக இருந்த தமிழகத் தேர்தல் களம், ஜெயலலிதாவின் அகந்தையால் சற்றே மாற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் இலவச கிரைண்டர், மிக்ஸி போன்ற கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையுடன் போருக்கு ஆயத்தமாகி விட்டது திமுக.

திமுக கூட்டணி வேட்பாளர்கள் (காங்கிரஸ் தவிர) வேட்புமனு தாக்கல் செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால், அதிமுக தலைவி அறிவித்த வேட்பாளர் பட்டியல், வந்த வேகத்தில் குப்பைக் கூடைக்குச் சென்றுவிட்டது.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடுமா என்றே தெரியவில்லை. ஏற்கனவே மன அமைதி குலைந்துள்ள தோழமைக் கட்சிகளை ஜெயலலிதா எப்படி அரவணைக்கப் போகிறாரோ தெரியவில்லை. நம்பகமான வைகோவின் முதுகில் ஜெயலலிதா குத்தியதை அவ்வளவு சீக்கிரம் மக்களால் மறக்கடிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

ஆரம்பத்தில் குடுமிப்பிடி சண்டையிட்ட ஊழல் கூட்டாளிகள் இப்போது ஒருங்கிணைந்து பணிபுரிகிறார்கள். அதற்கு மாறாக, ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அதிமுக கூட்டணி தடுமாறுகிறது.

உடன் வரும் படையினரே தனது முதுகில் குத்தி விடுவார்களோ என்று திரும்பித் திரும்பிப் பார்த்தபடிச் செல்பவர்களால் போர்க்களத்தில் வெல்ல முடியாது. அவ்வாறு வென்றாலும், அதன் பிறகு மற்றொரு குடுமிப்பிடி சண்டை காத்திருக்கவே செய்யும்.

தவறுகளிலிருந்து பாடம் கற்பவன் புத்திசாலி; அவனால் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவன் படிப்பினைகளிலிருந்து பாடம் கற்காத மூடன். அவனுக்கு வெற்றிகள் வசப்படாது. இது அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல; வாக்காளர்களுக்கும் பொருந்தும்.

இனிமேலும் கழகங்களிடம் எதிர்காலத்தை அடகு வைப்பதை விட, ‘9 -ஓ’வை தமிழக மக்கள் தேர்வு செய்யலாம்; அல்லது, வெற்றி- தோல்வி பற்றிய எந்தக் கவலையும் இன்றிக் களம் காணும் பாஜகவை சிறிது திரும்பிப் பார்க்கலாம்.

 

வைகோவுக்கு ராதாகிருஷ்ணன் அழைப்பு

தேர்தல் களத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள மதிமுக தலைவர் வைகோவுக்கு, பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் வரவேற்போம் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியது:

vaiko-qnவரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முடிவு செய்துள்ளார். இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது சரியானது அல்ல.

அவர் எங்களோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தவர். யாருடன் கூட்டணி என்றாலும் உறுதியோடு அனைத்து பகுதிகளிலும் பிரசாரம் செய்பவர். பழுத்த, நாகரிமான அரசியல்வாதியான அவர் விரும்பினால் பாஜகவோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம். இது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்…”.

மதிமுக தேர்தல் புறக்கணிப்பை இடதுசாரிக் கட்சிகளும் விரும்பவில்லை. அவர்களும் வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிமுக தலைவி ஒப்புக்கு ‘அன்பு சகோதரியின் கவலையை’ வெளிப்படுத்தி ஒரு கடிதம் எழுதிவிட்டு கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியதை ஆமோதித்துவிட்டார்.

இந்தச் சந்தடி சாக்கில் திராவிட அரசியல் ஜாம்பவான்(?) வீரமணி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். அவருக்குத் தோதாக திமுக தலைவர் கருணாநிதியும் பூடகமான வேண்டுகோள் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். வைகோ திமுகவுக்குத் திரும்ப வேண்டுமாம்! கருவாடு மீனாகுமா?

இப்படி எல்லோரும் கொம்பு சீவிவிட்டே தன்னை ‘கைப்பிள்ளை’ ஆக்கிவிட்டார்களே என்ற கவலையில் இருக்கிறார் கலிங்கப்பட்டிச் சிங்கம். அவர் என்னதான் செய்யப் போகிறார்?

44 Replies to “தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி”

  1. பிரதாப்

    நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் முன் கூட்டியே பிரபஞ்ச சக்தியால் தீர்மானிக்கப் பட்டவையே என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் . எந்த காரியத்தையும் , தான் செய்வதாக நினைப்பவன் பல சமயம் ஏமாந்துபோகிறான். அரசியலில் நடக்கும் பல நிகழ்ச்சிகளும் , இதனை நினைவூட்டுகின்றன. ஜெயலலிதாவின் நடவடிக்கை நிச்சயம் சரியல்ல. அதே சமயம் வை கோ தேர்தல் அரங்கில் இருந்து விலகி ஓடுவது , எப்படியும் நகைப்பே ஏற்படுத்தும். மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சிறிது காலம் விலகி இருந்ததை உதாரணம் காட்டி இருக்கிறார். கம்யூனிஸ்டுகள் கொள்கையிலும், நடைமுறைகளிலும் குழப்பவாதிகள். நல்லவர்கள் அல்ல. அவர்கள் மேற்கு வங்காளத்தை சுடுகாடு ஆக்கி விட்டார்கள். அவர்கள் இந்தியாவின் ராஜபக்ஷே ஆவார்கள்.

    வைகோ தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவதால் , அடுத்த தேர்தலில் அவர் கட்சியே இல்லை என்ற சூழ்நிலை ஏற்படும். வைகோ சூது வாது தெரியாத நபர். அவர் கையில் ௨ஜி போல ஊழல் பணம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஊழலுக்கும் அவருக்கும் அவ்வளவு சம்பந்தம் எதுவும் கிடையாது.

    இந்த நிலையில் அவருக்கு மிகவும் செல்வாக்குள்ள ஒரு பத்து தொகுதிகளையாவாது தேர்ந்தெடுத்து , அதில் முழு உழைப்பையும் காட்டி , தன்னுடைய கட்சியின் இருப்பை அவர் நிலை நிறுத்த வேண்டும். அல்லது பாஜக போன்ற 234 தொகுதி கட்சியுடன் கூட்டணி கண்டு, எல்லா இடங்களிலும் தோற்றாலும் அவருக்கு , வாக்கு சதவீதமாவது கூடும். ஒதுங்குவதால் ஒரு புண்ணியமும் இல்லை.

    காங்கிரசுடன் சேர்ந்த கருணாவும், வைகோவை ஏமாற்றிய ஜெயாவும் தமிழகத்தின் அசிங்கங்கள். இந்த தேர்தலுக்கு பிறகு இருவரும் நல்ல பாடங்களை கற்றுக்கொள்வார்கள். குடும்ப அரசியலுக்கு மற்றும் ௨ஜி பணமும் புதைகுழிக்கு போகும். கழகங்களின் கொள்கை மற்றும் குணங்கள் நாடு முழுவதும் சிரிக்கிறது. தேர்தலுக்கு பிறகு தமிழனுக்கு கிடைக்கப்போகும் திட்டுக்கள் ( கலைஞரால்) வரலாற்றில் இடம் பெறும் . விஷக்கிருமிகள் பரவி விட்டன என்ற, பக்தவத்சலத்தின் கூற்றும் , இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற காமராஜரின் கூற்றும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வைர வரிகளாக தமிழன் நினைத்து நினைத்து வருந்துவான்.

    நம் இனத்துக்கு நல்ல தலைவர்கள் எப்போது கிடைப்பார்கள் என்று தமிழன் ஏங்குகிறான்.

  2. Pingback: Indli.com
  3. எல்லாம் சரி, இறுதியில் யாருக்கு வாக்களித்தாலும் ஏமாறுவது தமிழன் தானே…

  4. jayalalitha is most undependable lady who is known for arrogancy . She is under the grip of sasikala,the notorious ganga leader whose husband remotely operate AIADMK. Jalalitha never be the supporter of hindu causese which we have seen the arrest and bad treatment to seer of hindu mutt. Everyone knows that sankarachariyar,saravanabhavan hotel owner all met the fate of some false fabricated cases against them for not agreeing to part their assets and properties to sasikala. she only announced the list of candidates in hurry but jj and sasi are the partner in life. Bjp never trust jayalalitha but always trust atleast karunanidhi. jayalalitha always is closer to christian mafias and missionaries in real life as she is sorrounded by christians in her life. she declared to kanyakumari christians that if she comes to power, she will give subsidy to them for flying to jerusalam isreal. Hindus are treated badly by jayalalitha. what about karunanidhi on hindus . he never encourage christians or muslims but pretend to be closer to them but does not favour them at the cost of hindus as per my finding. on monday an interview by Ravi bernard with a christian leader in jaya Tv gives such impression that this priest was crying at DMK govt that they never sanction consruction of any christians churches or mosques for which they have given oral instruction to collectors. Also this priest was telling that more than 2000 priests are working for the victory of jayalalitha now becouse christians were informed by the missionaries to vote for jayalalitha and oust dmk government as they never support them.

    so i would either prefer to vote for BJP even if they lose seat or get defeated or finally skip voting and if left with the chance to vote between DMK or AIADMK, for the cause of hindus, i would prefer to vote only DMK. Brahmins never favour jayalalitha but divided between DMK and AIADMK since most of the brahmins vote only for DMK normally after the arrest of sankarachariyar. This time due to the corruption done by dmk govt and karunanidhi family
    their votes will be divided . BJP must utlise this opporutunity to grab more votes in cities.

  5. there has been a rumor -may be true also- agog that Sasi compromised with DMK as she got an assurance from the DMK that her business and other interest would be protected. Moreso, it has been said that she also got a good sum -may be the sum from the scam- for misguiding Jaya. whatever the confusions that occurred in the AIADMK alliance was because of Sasi’s high handedness.

  6. இந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி அமையாமல் போவது உறுதி. மைனாரிட்டி அதிமுக அரசு அமைவது தான் இப்போதுள்ள ஒரே சிறந்த வழி. வாக்காளர்கள் முடிந்தவரை பா.ஜா.கா விற்கும், தேமுதிக விற்கும் வாக்களிப்பது தான் புத்திசாலித்தனம். எப்படியும் கட்சித் தொண்டர்கள் பலத்தில் திராவிடக் கட்சிகள் ஒட்டு பெறும்போது நான் சொன்ன முடிவு ஏற்படும்.

  7. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் திமுகவும் அதிமுகவும். ஊறி, ஊறி, முதிர்ச்சியும் விவேகமும் அடையாமல் குட்டையிலேயே அழுகி நாற்றம் எடுக்கும் நிலை வந்துவிட்ட இந்நிலையில் மக்கள் தான் விவேகமுடன் நடந்து கொள்ள வேண்டும். திரு வைகோ அவர்களும் தேர்தலைப் புறக்கணிக்கும் எண்ணத்தை விடுத்து அவருக்கு ஏற்கனவே பரிச்சயமான பாஜகவை ஆதரித்து வெற்றியடையச் செய்தால் தமிழ் நாடு ஒரு புதிய பரிமாணத்தை அடைய வாய்ப்பு உண்டு. இரு மட்டைகளும் இது வரை கிழித்ததில், கிழிந்தது தமிழர்கள் தான். பாஜக ஒருவேளை அத்ர்ஷ்ட வசமாக ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு இவ்விரு கழகங்களிலிருந்து நிச்சயம் தலை வலி மிக அதிகமாகக் கிடைத்துக் கொண்டுதானிருக்கும் என்பதை மனதில் இருத்தி திரு நரேந்திர மோதி குஜராத்தை நலமாக ஆளுவது போல் அமைந்தால் தமிழர்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகலாம். வாக்காளர்கள் தான் அவர்கள் தலை எழுத்தை எழுதிக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் ‘ஸ்வாட் அனலிசிஸ்’ என்று சொல்வார்கள். அது போல் பாஜகவும் இத்தருணத்தில் புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

  8. வை.கோ ஒன்றும் சத்யபுத்திரன் அல்ல. அரிச்சந்திரன் வாரிசும் அல்ல. மத்தியில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி ஆட்சியில் பங்குபெற்று இருந்தபோது அவர் சம்பாதித்தது வெட்ட வெளிச்சத்திற்கு வரவில்லையே தவிர சொத்து சேர்க்காதவர் அல்ல. பா.ஜ.க.ஆட்சியில் சகல சுகங்களையும் கூட்டணிக் கட்சியின் தலைவர் என்கிற முறையில் அன்பவித்து இருந்து விட்டு கடைசி நேரத்தில் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி துரோகம் செய்தவர் அவர். அன்று பா.ஜ.க.விற்கு அவர் செய்ததை ஜெயலலிதா அவருக்கு இன்று செய்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் திராவிட இயக்கங்கள் அனைத்துமே துரோகம் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள். கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ ஆகிய அனைவரும் ஒரே குட்டையில் ஊறிப்போய் அழுகி நாற்றம் எடுக்கும் குப்பைக் கூளங்கள். தேசியக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தமிழகத்தில் தலைதூக்க இயலாமல் போய்விட்டது. பா.ஜ.க. தில்லி தலைமைக்கும் ஆட்சியை விரைவாகப் பிடித்திட வேண்டும் என்கிற வேகமும் பேராசையும் ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் அதே குட்டைக் கூட்டணியில் சேர்ந்து ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டது. ஆனால் அதன் காரணமாக அக்கட்சி தனது அடித்தள ஹிந்து வாக்கு வங்கியை இழந்ததுதான் மிச்சமானது. இத்தேர்தலில் தேசிய வாதிகள் அனைவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பா.ஜ.க.விற்கு வாக்களிக்க முன்வரவேண்டும்.அக்கட்சி தோற்றுப் போனாலும் பரவாயில்லை. ஒரு ஹிந்து வாக்குவங்கி இருப்பதை வெளிப்படுத்திட இது பேருதவியாக இருக்கும்.

  9. I think Vaiko had no choice. He had the option of aligning with the BJP but having been anti hindu all along, this would have been seen as a let down by his supporters.

    At least he had the good sense not to stand alone. If he does, it will be advantage DMK. Also, vaiko does not have enough money to spend for elections.

    JJ still has a chance to win in spite of the recent fracas. Mu ka has the advantage of having a ruling party at the centre as his alliance partner. He also has the money to bribe the voters & gain votes.

    But 1 thing is sure – if JJ loses this election, then AIADMK is doomed.

  10. பிரதாப்

    அன்புள்ள சஞ்சய்,

    2004 தேர்தலுக்கு முன் வாஜ்பாயி அமைச்சரவையில் பங்கேற்று அமைச்சர் பதவியையும் , அனைத்து சுகங்களையும் அனுபவித்த கழகங்கள் தான் மூன்றுமே.( திமுக, அ திமுக , மற்றும் ம திமுக )

    பாஜக வுடன் கூட்டு சேர்ந்து , 1998 மற்றும் 1999 தேர்தலில் போட்டியிட்ட போது, வைகோ இந்து எதிர்ப்பாளர் அல்லவே. கலைஞரும் , ஜெயலலிதாவும் பாஜகவுடன் வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பாஜகவை பாம்பு, பண்டாரம், பரதேசி என்று 1999 க்கு முன்பு சொன்ன கலைஞரும் , கூட்டு சேர்ந்தபின் எப்படி இருந்தனர். எனவே வைகோ பாஜகவுடன் கூட்டு சேரமுடியாது என்பதற்கு இந்து ஆதரவு என்பது காரணம் அல்ல. பணம் இல்லை, தேர்தலில் செலவழிக்க போதுமான நிதிநிலை இல்லை என்று சொன்னால் அர்த்தம் உண்டு. இந்து ஆதரவு அல்லது இந்து எதிர்ப்பு என்பது முழுப்பொய் மற்றும் கற்பனை ஆகும்.

    வாஜ்பாயிக்கு துரோகம் செய்துவிட்டு கழகங்கள் மூன்றுமே , ஒவ்வொரு காலக்கட்டத்தில் பிஜேபி கூட்டணியிலிருந்து விலகி காங்கிரசுடன் ஓடினர். ( 1999 – ஜெயலிதா , 2004- கலைஞர் மற்றும் வைகோ ) துரோகத்தில் இவர்கள் மூன்று கழகங்களும் ஒருவரே. காலக்கட்டம் தான் வேறு வேறு. எனவே பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல.

    சிறந்த நிர்வாகம் நரேந்திர மோடி, காங்கிரசை விட குறைந்த ஊழல் தான் பாஜக.

  11. வைகோ மாதிரியே நிறைய வாக்காளர்கள் உணர்ச்சி வசப்படுவதில் அர்த்தமில்லை. வாக்கு சத விகிதம் குறைந்து முக்கிய தலைவர்களையும் இழந்து தத்தளித்துக்கொண்டு இருக்கும் மதிமுகவுக்கு அந்த கட்சியில் இருக்கும் இரண்டு தலைவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்துவது நகைப்பிற்குரியது. இரு தனி நபர்கள் சம்பந்தப்பட்ட உறவுகளில் நட்பு, நன்றி, கைம்மாறு இது போன்ற உணர்வுகளின் அடிப்படையில் முடிவு எடுப்பது போல அரசியலில் முடிவு எடுப்பது கடினம். அப்படிப்பார்த்தால் 2004 நாடாளுமன்ற தேர்தலில் வைகோவுக்கு உரிய மரியாதையை அளித்து வந்த பா.ஜ.க கூட்டணியில் இருந்து அவர் விலகி காங்கிரஸ் கூட்டணிக்கு தாவியது நன்றி இல்லாத செயல்தானே? இன்று ஜெயலலிதாவின் ‘ஆணவப்போக்கை’ விமரிசிக்கும் பலர் வைகோ கூட்டணி தாவல் செய்தபோது இந்த அளவு உணர்சிவசப்பட்டதாக தெரியவில்லை. 2004 இல் மத்திய அரசில் இடம்பெறும் வாய்ப்பை நிராகரித்த அன்றே கட்சியின் சிதைவுக்கு அடிக்கல் நாட்டிவிட்டார் அவர். தவிர விடுதலைப்புலிகள் அளித்து வந்த நிதி உதவியும் இல்லாத இந்த நேரத்தில் அதிமுக உதவியுடன் மட்டுமே தேர்தலை சந்தித்து இருக்க முடியும். இருப்பினும் கொடுக்கப்பட்ட 12 இடங்களுக்குகூட வைகோவினால் வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்திருக்க முடியுமா என்பதும் கேள்விக்குரியதே! கூட்டணிக்கு தலைமை தாங்கி தேர்தலை சந்திக்கும் ஒரு பெரிய கட்சி தன ஆதரவாளர்களுக்கு அதிக இடங்கள் வழங்கி வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதா அவரது வாழ்நாளிலேயே முதல் முறையாக தேர்தல் களத்தில் இருந்து விலகிய வைகோவிற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதிய பிறகும் அதிமுக தலைமையின் ‘எதேச்சாதிகாரம்’ பற்றி வைகோ வெளிட்டுள்ள அறிக்கை அவரது அவசரப்போக்கை காட்டுகிறது. ஆக தவறு முழுவதும் வைகோ மீதுதான்!

  12. சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியல் காங்கிரசு கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. அறுபத்து மூன்று தொகுதிகளில் அறுபது தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரசு கட்சி வேட்பாளர்கள் மிகவும் தாமதமாக அறிவிக்க பட்டுள்ளதாக யாரும் கவலைப்படவில்லை. ஏனெனில் வெற்றிபெறவேண்டிய கட்சி அதனைப்பற்றி கவலைப்படும். அறுபத்து மூன்று இடங்களிலும் தோற்றுவிடாமல் ஏதேனும் ஒரு சில இடங்களில் மட்டுமாவது ஜெயிப்பார்களா என்று ஆண்டவனுக்கு தான் தெரியும்.

    அறந்தாங்கியில் திருநாவுக்கரசு போல தனிச்செல்வாக்கு உள்ள ஒன்றிரண்டு பேர் தேறினால் அதிகம். ஊழல் காங்கிரசு , சுயமரியாதை இல்லாமல் ஏதேனும் ஒரு கழகத்தின் வால் பிடித்து வாழும் ஜந்து ஆனதால் விரைவில் கழகங்கள் காங்கிரசுக்கு கொள்ளி போடப்படுகின்றன. 1989 தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து தனித்து போட்டியிட்டிருந்தால் , தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி கட்டிலில் ஏறியிருக்கும்.ஓரிரு தேர்தலுக்கு பின்பு அதன் வாக்குவங்கி கூடி , செத்துப்போன காங்கிரசுக்கு சிறிது உயிர் வந்து பிழைத்திருக்கும்.

    காங்கிரசுப்பினத்திற்கு , இந்த தேர்தலில் தான் பல வருடங்களுக்கு பிறகு சற்று உயிர் வந்து, அறுபத்து மூன்று நிச்சயம் என்று அதட்டி வாங்கிவிட்டார்கள். அது பெரிய ஆச்சரியம். தமிழன் மூக்கு மேல் விரல் வைத்து , நாம் ஏதாவது கனவு காண்கிறோமா என்று தன் கையை தானே கிள்ளிப்பார்த்து திகைத்து நிற்கிறான். ஏதோ இந்த அளவுக்காவது காங்கிரசு என்ற பெயரில் நாட்டில் அக்கிரமம் செய்துவரும் அயோக்கியர்களின் கட்சிக்கு , சிறிது சொரணை வந்ததே என்று பலரும் நம்பமுடியாமல் தவிக்கிறார்கள். கழகங்கள் எப்படியாவது காங்கிரசை எல்லா இடங்களிலும் தோற்கடித்து விடுவார்கள். ஏதாவது கொஞ்சம் ஜெயித்தால் , அது அந்த வேட்பாளரின் அதிர்ஷ்டம் தானே தவிர, கலைஞர் கட்சியின் ஏஜெண்டுகள் காங்கிரசில் டிக்கட் கிடைத்திருந்தால் , அவர்கள் மட்டுமே திமுக தயவில் ஜெயிக்க முடியும். கூட்டணி குழப்பம் வராமல் ஏதாவது ஒரு பிசாசு வெற்றி பெற்றால் சரி. அதுவே போதும். இலங்கையில் உயிரிழந்த அப்பாவி தமிழர்களின் ஆவிதான் இந்த பாவிகளுக்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

  13. The only way to end the himalayan corruption and loot of the congi-DMK combine and the arrogance of the AIADMK /corruption of sasikala is to vote for the BJP

  14. why should Tamil Hindu give free publicity to these two mosnters
    Tamilnadu has seen their barbaric rule for more than forty years. The people are sick of their corruption, loot,arrogance.cunning, barbarity, power hunger,misuse of government machinery,nepotism, family rule etc
    Why not there be some fresh thinking?
    Why not write about the BJP in positive light?

  15. துணிந்து பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தரச் சொல்லி மக்களை நாம் அனைவருமே கேட்க்கலாம். அதற்கான வலுவான காரணங்களும் உள்ளன:

    1. தமிழ் நாட்டில் இது வரை ஆட்சி அமைத்து ஊழல்களில் சிக்காத கட்சி.
    2. பொன் ராதாகிருஷ்ணனை ஒரு இந்நாள் காமராஜர் என்று தாராளமாக அழைக்கலாம். எளிமையும் நேர்மையு தேச பக்தியும் தெய்வ பக்தியும் நிறைந்த ஒரு தலைவர். இவருக்கு இணையான ஒரு தலைவர் இன்று தமிழ் நாட்டில் எந்தக் கட்சியிலும் கிடையாது என்பதை உறுதியாகச் சொல்லலாம். பொன் ராதாகிருஷ்ணன் தவிர எச்.ராஜா போன்ற நெஞ்சுரமும் நேர்மையும் உடைய தலைவர்களையும் தொண்டர்களையும் பெற்ற ஒரே கட்சி இன்று பா ஜ க மட்டுமே

    4. இன்று குஜராத்தில் பா ஜ க வின் ஆட்சி அகில இந்திய அளவிலும் ஒரு மாடல் ஆட்சியாக ஊழல் அற்ற திறமையான அரசாங்கத்தை மோடி அவர்கள் அளித்து வருகிறார்கள். மோடி எவராலும் ஊழலுக்கு ஆட்படுட்ட்த்தவே முடியாத ஒரு இரும்புத் தலைவர் என்று குஜராத் காங்கிரஸ் தலைவர்களே சர்ட்டிஃபிகேட் அளித்து அதை அமெரிக்க தூதுவர் வழிமொழிந்து அமெரிக்க அரசுக்கு அனுப்பிய செய்தியை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. இலவசங்களில் நம்பிக்கையில்லாத தூய்மையான நேர்மையான திறமையான அரசை அளித்து வரும் குஜராத்தின் மோடியின் அரசு போலவே தமிழ் நாட்டில் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அமையும் பி ஜே பி அரசும் நிச்சயம் அமையும்

    5. ஊழல்களிலும் அராஜகத்திலும் மூழ்கிப் போன தி மு க விடமிருந்தும் ஆணவத்திலும் முட்டாள்த்தனத்திலும் ஊறிப் போன ஜெயலலிதாவின் அ தி மு கவில் இருந்தும் தமிழ் நாட்டை மீட்க்க இன்று இருக்கும் ஒரே வழி பா ஜ க மட்டுமே. அதைத் தவற விட்டு விட்டால் நம் எதிர்காலச் சந்ததியினர் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள்.

    ஆகவே அனைவரும் உங்கள் தொகுதிகளில் நிற்கும் பி ஜே பி வேட்ப்பாளர்களுக்கு மட்டுமே வாக்களித்து தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும் பீடைகளில் இருந்து காப்பீர்களாக.

    ச.திருமலை

  16. ஐந்தாண்டு காலம் ப.ஜ.கா ஆட்சியில் நாடு பல துறைகளில் காங்கிரசைவிட மிக சிறப்பாக செயல்பட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்று பல மாநிலங்களில் அதன் செயல்பாடு சிறப்பாக உள்ளதை கண்கூடாக பார்கிறோம். இப்படிபட்ட தேசிய கட்சி இன்று தமிழ் நாட்டில் தீண்ட்டதாக கட்சியாக பார்கப்படுகிற கொடுமையை எங்கேபோய் சொல்லுவது. சுயநலம்தான் பொதுநலம் என்ற முடிவுக்கு தமிழன் தரம் தாழ்துள்ளதே இதற்கு காரணம்.

    இன்று நாட்டில் நடப்பது ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வ அதிகார ஆட்சி. காங்கிரஸ் தனது முந்தய ஆட்சியை பணபலத்தால்தான் தக்கவைத்து கொண்டது என்பதும் தற்பொழுது ஆட்சியை மின்னணு வாக்கு பெட்டி தில்லுமுல்லு செய்துதான் தக்கவைத்து கொண்டது என்பதும் ஊழல் செய்வதில் கின்னஸ் புத்தகத்தில் முதல் இடம் பெற்றது என்பதும் இந்தியாவிலேயே தி.மு.க. தான் அதிகமான ஊழல் செய்த கட்சி என்பதும் உலகளவில் அப்பட்டமாக இன்று நிறுபணமான உண்மை. இப்படிப்பட்ட இந்தமோசடி பேர்வழிகள் மேலும் என்னென்ன மோசடிகள் செய்வார்கள் என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.

    1. மின்னணு வாக்கு பெட்டி ஒழுங்காக இயங்குமா ?
    2. தேர்தல் நடந்தபின் 30 நாட்களுக்கு பின் தான் ஒட்டு எண்ணபடும் என்றால் அதன் பாதுகாப்பதில் என்ன குளறுபடிகள் நடக்கபோகிறதோ
    3. தேர்தல் முன் தெரிவிப்பு வாக்கு சீட்டை தேர்தல் ஆணையமே தரப்போகிறது என்றால் அதில் எத்தனை பேர்களது பெயர் விலக்கி வைக்க போகிறார்களோ ?
    4. தேர்தல் ஆணையம் கட்டுபாடுகள் விதிக்கிறேன் என்று வேஷம் போட்டு யார் யாருக்கொல்லாம் சாதகமாக செயல் படபோகிறதோ ? (தேர்தல் ஆணையத்தில் அமர்த்தபடுபவர்கள் எல்லாம் ஆளும் கட்சிக்கு தொண்டூழியம் செய்வர்கள்தான்)
    5. கட்டுபாடு என்று தலைவர்கள் சிலையை துணி போட்டு மூடுவது நாகரிக செயலா ?
    6. இன்றய கூட்டணி கட்சிகள் ஆட்சியை பிடித்தபின் கூட்டணியை தொடருமா ?

    இந்துமத பற்றும் தேச பற்றும் உள்ளவர்கள் இன்றைய சூழ்நிலையில் பா.ஜ.கா. விற்கு வாக்களிக்கவில்லை என்றால் அவர்கள் அவ்வாறு சொல்லிக்கொள்ள அருகதை அற்றவர்கள். பா.ஜ.கா நிற்காத இடங்களில் ஒரு மாற்றத்திற்காக தே.மு..தி.க அல்லது சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். எந்த காரணத்தை கொண்டும் காங்கிரஸ்க்கு வாக்களிப்பது நாட்டிற்கு நல்லதல்ல.

    ஒண்ணுமே புரியல இந்தியாவிலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது – சொன்னாலும் தெரியலே சுயமாயியும் புரியலே – என்னபோல ஏமாளி எவனுமே இல்லே – என்ற நிலைக்கு மாறாதீர்கள் !!!

  17. “GUJARAT” Government is 2nd best in the world.. Announced by international council.

    https://www.youtube.com/watch?v=_p3b493MwJg

    https://www.gujaratindia.com/state-profile/awards.htm

    Before 10 years they had 50,000 crores loan in World Bank.

    BUT

    Today they have deposited 1 Lakh crore in World Bank.

    In Gujarat,

    “NO TASMAC”

    “No free colour TV”

    “No rice for Rs. 1”

    “NO POWER CUT”

    “100% LADIES STUDYING”

    “WHOLE INDIA EXPORT 15% FROM GUJARAT”

    “30% OF INDIAN SHARE MARKET INVESTS BY GUJARAT”

    Finally No: 1 state in India.

    Considering the above where is our state… ???

    He is only 1 hope for an PM of India.. Truly making Gujarat Vibrant !!!

    He is an little ray of hope for INDIA !!! 🙂

  18. MANY PEOPLE WHO ON THE OTHER HAND BEING THE SUPPORTER OF BJP STILL TEND TO VOTE ONLY FOR AIADMK THINKING BJP CAN NOT WIN, AND IF VOTED FOR BJP, IT WILL HELP DMK, THE MOST CORRUPT PARTY. THESE PEOPLE MUST REALISE THAT DRAVIDIAN PARTIES ARE ALL CORRUPT AND ONE AND SAME ONLY. IT IS ALWAYS IN CYCLE FOR EVERY FIVE YEARS, SAME PEOPLE IN THE NEXT FIVE YEARS LATER WOULD VOTE FOR DMK TELLING AIADMK IS CORRUPT. SO BOTH ARE IN THE SAME BOAT.

    THIS IS THE RIGHTTIME THAT OUR PEOPLE THINK OF GOOD DECISION TO VOTE FOR BJP CANDIDATES IRRESPECTIVE OF HIS/HER WINNING CHANCES – WHETHER HE GETS JUST
    1000 VOTES OR MORE NOT ABLE TO REACH THE MAGIC FIGURE. IT IS OUR DUTY IRRESPECTIVE OF CONSQUENCES TO CONTRIBUTE FOR THE GROWTH OF A NATIONALIST PARTY WHICH IS LESS CORRUPT COMPARED TO CONGRESS. ATLEAST BJP IS BETTER THAN OTHER PARTIES AND CONGRESS MUST BE SHOWN THE DOOR. SONIA MUST LEAVE THE COUNTRY. SO PLEASE VOTE FOR BJP

  19. தமிழக அரசியல் வாதிகளில் சற்று கவுரவமானவர் வை.கோ. அவரை ‘அம்மா’ நடத்திய விதம் சரியில்லை. அவர் கட்சி கரைந்து வருகிறது என்பதும், அவரது பலத்துக்கு அதிக இடம் நியாயமில்லை என்பதும் கூட சரியாக இருக்கலாம். அதற்காக அவரை கடைசி வரை அழைத்துப் பேசாமல் இருந்தது அவமானம் இல்லையா. அவர் சொரணை உள்ள, நியாய தர்மத்துக்குக் கட்டுப் பட்டவர் என்பதால், அசிங்கமாக நடந்து கொள்ளாமல் மிகவும் கெளரவமாக நடந்துள்ளார். கடைசி நேரத்திலாவது அவருக்கு ஒரு பதினைந்து இடம் கொடுத்து தன்னக் கட்டிக் கொண்டிருந்தால் அவரது பங்களிப்பு நிச்சயம் தமிழக மக்களிடம் எடுபடும். ஆனால் பாவம் அவர் ஒதுங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழ் நாட்டில் அவருடைய சேவை அவசியம். சட்ட மன்றம் அல்லது நாடாளு மன்றம் இவற்றில் இடம் இல்லையென்றால் ஒரு கட்சி வளர்ச்சி அடைவது இயலாது. திராவிட கட்சிதான் தமிழ் நாட்டை ஆள வேண்டுமா? திரு வை.கோ. இந்த நாட்டு மக்கள் மீது அக்கறை உள்ளவராக இருந்தால் பா.ஜ.க.வின் அழைப்பை ஏற்று இருபத்தி ஐந்து தொகுதிகளுக்கும் மேல் போட்டியிட்டு சில சட்டசபை பதவிகளைப் பிடித்துத் தன கட்சியின் வளர்ச்சிக்குப் பாடு படலாம். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையுமானால் நிச்சயம் வை.கோ. ஒரு அமைச்சர் ஆகலாம். பா.ஜ.க. ஒன்றும் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் தீட்டுக் கட்சி அல்ல என்பதை தமிழர்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தமிழருக்கு நல்ல நாள். இல்லையெனில், கையில் ஓடு ஏந்திக்கொண்டு கிடைக்கும் இலவசத்தில் பண்டாரங்களாக இருக்க வேண்டியது தான். இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக ஆக்கும். இது தேவையா? உழைக்கக் கற்போம். இலவசங்களை மறுப்போம்.

  20. வைகோ நிறுத்துவதாக எண்ணியிருந்த வேட்பாளர்களில் 5 பேர் அழகிரியிடம் பெட்டி வாங்கியதும் தேர்தலில் வெற்றி பெற்றால் திமுகவுக்கு தாவி விட தயாராகி இருந்ததைப் பற்றி வைகோவுக்கு ஜெ தெளிவு படுத்தியதில் ஆட்டம் கண்ட வைகோ இப்போது தொண்டர்களை திருப்தி செய்வதற்காக ஆவேசக் குரல் கொடுக்கிறார் என்கிறார்கள்!

  21. தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கிவிட்ட வைகோ மீது அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் தனது கட்ச்சியை வளர்ப்பதற்கு பதிலாக பிரிவினை வாதிகளைப் போல் பேசிக்கொண்டும் நமது நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றவர்களுடன் ஒரேமேடையில் அமர்ந்து கொண்டு வீராவேசமாகப் பேசிக்கொண்டு இருந்தாரே ஒழிய கட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. மேலும் அவருக்கு கிறிஸ்துவ மதமாற்ற சக்திகளுடன் தொடர்பு அதிகம். அவரே கிறிஸ்தவர் என்று பலர் கூறிவருகின்றனர். அவரது மகளுக்கு சில வருடங்களுக்கு முன்பு கோவையில் சர்ச்சில் திருமணம் நடத்தினார். எல்.டி.டி.ஈ. யுடன் நெருங்கியத் தொடர்பு போன்ற பல காரணங்களால் அவருக்கு பொது மக்களிடம் இருந்த செல்வாக்கு மளமளவென சரிந்துவிட்டது. ஊழல் செய்வதில் அவர் ஒன்றும் சளைத்தவர் இல்லை. வெளியில் பகிரங்கமாகத் தெரியவில்லை என்கிற காரணத்தினால் அவர் ஒன்றும் உத்தமபுத்திரன் ஆகிவிடமாட்டார். அவர் கட்சியில் யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் விலை போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதை கடந்த கால சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. இனிமேல் வீரமணி, நெடுமாறன் போன்றவர்களுடன் இணைந்துகொண்டு தினசரி ஏதாவது ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு பொழுதைக் கழிக்கலாம். தேசியவாதிகள் நாட்டு நலன் விரும்பிகள் அனைவரும் மறவாமல் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க முன்வர வேண்டும். அது ஒன்றுதான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக முடியும். இன்று அக்கட்சி வெற்றிபெறாமல் போகலாம்.ஆனால் ஓட்டு வங்கி அதகரித்தால் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெற உதவியாக இது இருக்கும்.

  22. இன்றைய சுபயோக சுபதினத்தில் “அம்மா”வும் “தமிழீனதலைவரும்” வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். கருணாநிதி வாக்காளப் பெருமக்களை எவ்வாறு பிச்சை பெருமாள் ஆகினாரோ அதைவிட பெயரய பிச்சைக்காரர்கள் ஆக்கும் வகையில் அம்மா வின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது
    மக்களும் இலவசங்களைபெற்று வாக்களிக்க தயாராகிவிட்டனர். இந்தநிலையில் வைகோவின் பிலாக்கணமோ தேர்தல் புறக்கணிப்போ எடுபடுமா?பாஜகவும் சுவாமியும் எந்த அளவு வெற்றிபெறுவார்கள் என்பது தெரியவில்லை. எல்லாம் வல்ல இறைவன் தமிழக மக்கள் மேல் கண் வைத்தால் நல்ல ஆட்சி கிடைக்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

  23. வை கோ பிரிந்தது அதிமுக அணிக்கு சிறிது பாதிப்பு தான் என்றாலும், மூன்று கழகங்களுமே வாஜ்பாயீக்கு துரோகம் செய்துவிட்டு , ஒவ்வொரு காலகட்டத்தில் காங்கிரசுடன் ஓடியவர்கள் தான்.

    தொன்நூற்றுஎட்டாம் ஆண்டில் கோவை குண்டு வெடிப்பு நடந்த சமயம் பாராளு மன்ற தேர்தலில் வைகோ, ஜெயலலிதா போன்றவர்கள் பாஜக வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வென்று, மத்திய அரசில் பதவிகளை பெற்று வாழ்ந்தனர். பின்னர், ஒரு வருடத்திலேயே ஜெயா துரோகம் செய்துவிட்டு , காங்கிரசு என்று சொல்லிக்கொண்டிருக்கும் கும்பலுடன் ஓடிப்போனார்.

    அதே போல, வைகோ வும் வாஜ்பாயிக்கு துரோகம் செய்துவிட்டு, இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் சேர்ந்து காங்கிரசு அணிக்கு ஓடினார்.

    அதேபோல கலைஞரும் வாஜ்பாயி அரசுக்கு துரோகம் செய்துவிட்டு , காங்கிரசுடன் ஓடினார். அவரும் மாறன் மற்றும் பல அமைச்சர் பதவிகளை வாஜ்பாயி அரசில் பெற்று வாழ்ந்தவர் தான்.

    வாஜ்பாயிக்கு தொண்ணூற்று எட்டாம் ஆண்டில் துரோகம் செய்த ஜெயலலிதா கடந்த பதிமூணு வருடமாக மத்திய அரசில் பதவிபெறமுடியாமல் வெளியே இருந்து அவஸ்தை படுகிறார்.

    அதே போல வாஜ்பாயிக்கு 2004 லே துரோகம் செய்த வைகோ இப்போது ஒதுக்கப்பட்டுள்ளார்.

    காலச்சக்கரம் வேகமாக சுழலும்போது , இது போன்ற துரோகிகளுக்கு சிறிது பாடம் கிடைக்கிறது. கலைஞருக்கும் அவர் வாஜ்பாயிக்கு செய்த துரோகத்திற்கு, சிறிது பாடம் விரைவில் கிடைக்கும்.

    இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ” தமிழக அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று ஒரு நகைச்சுவை வசனம் ஒரு தமிழ்ப்படத்தில் வருமே அதை நினைத்து சிரித்து மகிழவேண்டியது தான்.

    இத்தேர்தலில் காங்கிரசு தமிழ்நாட்டில் அழியப்போகிறது. ஓரிருவர் தேறுவதே கடினம். அப்படியே தேறினாலும் , அறந்தாங்கி திருநாவுக்கரசு போல சொந்த செல்வாக்கினால் இருக்குமே தவிர , காங்கிரசு கம்பெனியின் வாக்கு வங்கியால் இருக்காது.

    மக்களாட்சியில் ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது நல்லது நடக்கத்தான் செய்கிறது. ஏனெனில் மக்களாட்சி என்பது நல்லது கேட்டது இரண்டும் கலந்ததுதான். நம் பாரதநாடு ஜனநாயகத்தை தேர்ந்தெடுத்தது மிக சரியான ஒரு காரியமே. உலகிலுள்ள பல்வேறு ஆட்சி முறைகளில் ஜனநாயகமே மிக குறைந்த தீமை ஆகும்.

    இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசு அழிந்தவுடன் , நம் மக்கள் அனைவரும் மகிழலாம். ஏதோ ஒரு நல்லது நடக்கிறதே என்று.

  24. திரு வை கோ தேர்தலிருந்து ஒதுங்கியது அவருக்கே செய்துகொண்ட தண்டனை. இப்பொழுது உள்ள அரசியல் நிலையில் அகில இந்திய அண்ணா தி மு கா வுடன் உடன்பாடு செய்துகொண்டு சில இடங்களிலாவது நின்று இருப்பதே விவேகம் . இத்தேர்தலில் ஜெயலலிதா ஜெயிப்பது உறுதி என நம்புகிறேன்

  25. சென்னையில் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற உழைத்தால் நிச்சயம் வாய்ப்புண்டு.

    ஏனெனில் காங்கிரஸ், திமுக ஊழலை கண்டு வெறுப்பில் இருக்கும் மத்திய வர்க்க வாக்காளர்கள் அதிமுகவுக்கும் வாக்களிக்க விரும்பவில்லை. திமுக வாக்காளர்கள் கூட இந்த இழுபறி நடந்ததில் காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்பவில்லை.

    பாஜகவுக்கு மத்திய வர்க்க வாக்காளர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. அவர்கள் வெளியே வந்து வாக்களித்தாலே போதுமானது. அவர்கள் வாக்கில் வேளச்சேரி, மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் மிக அதிகமான வாக்கு எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெறும்.

    வேளச்சேரியில் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் நிற்கிறார். காமராஜரின் சீடரும், நேர்மையான காங்கிரஸ் தலைவராக அறியப்பட்ட குமரி அனந்தனின் மகள் இவர். அரசியல் வாழ்வை ஆரம்பித்தது முதலாக பாஜகவிலேயே இருந்து வருகிறார்.

  26. டாக்டர் தமிழிசை சௌந்திரராஜனின் இணையப்பக்கம்

    https://drtamilisaibjp.com

    ஊழலற்ற மக்கள் பிரதிநிதியாக செயல்பட விரும்பும் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வாக்களிப்பது வேளச்சேரி பொதுமக்கள் க்டமை

  27. இந்து என்பவன் நாசமா போகட்டும் !!!!! ??????

    கருணா – நான் கிருஸ்துவர்களுக்காகவும், முஸ்லீம்களுக்காகவும் எவ்வளவோ சலுகைகள் செய்திருக்கிறேன்
    ஜெயா – அவர் பொய் சொல்கிறார். நான் ஏசுவின் அருளால் ஆட்சிக்கு வந்தால் கிருஸ்துவர்கள் எல்லாம் இஸ்ரேல் செல்ல பணம் கொடுப்பேன்.
    கருணா – கிருஸ்துவர்களே ! ஜெயாவை நம்பாதீர்கள். நீங்கள் பணம் கொடுத்து ஏமாற்றி கட்டாயப்படுத்தி இந்துக்களை கிருஸ்துவர்களாக மாற்றி வருவதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவந்தவர் தான் ஜெயா

    ஜெயா – கிருஸ்துவர்களே அந்த சட்டத்தை நானே வாபஸ் பெற்றுவிட்டேன். கருணா சொல்வதை நம்பாதீர்கள். நீங்கள் மொத்த நாட்டையே கூட கிருஸ்துவ நாடாக மாற்றிக்கொள்ளுங்கள் அதற்கு நான் உதவ தயார். எந்த கோவிலாக இருந்தாலும் அதன் அருகில் உங்கள் பட்டா நிலம் இருந்தால் அதில் சர்ச் கட்டி ஒலிபெருக்கியை வைத்து ஏசு அழைகிறார் என்று முழங்குங்கள். நான் உங்களுக்காக இருக்கிறேன். நான் கிருஸ்துவ பள்ளியில் படித்தவள்

    கருணா – கட்டாய மதமாற்ற சட்டத்தை நான்தான் நீக்கினேன். ஜெயாவை நம்பாதீர்கள். நான் கிருஸ்துவர்களுக்காகவும் முஸ்லீம்களுக்காகவும் நாட்டையே எழுதிகொடுக்க தயாராக இருக்கிறேன். கிருஸ்துவ இஸ்லாமிய மாணவர்களுக்காக ரூபாய் 1000 முதல் 50000 வரை கொடுக்கிறேன். நீங்கள் மனம் நோகும்படி இந்து மாணவர்களுக்கு அந்த தொகையை கொடுக்க மாட்டேன்.
    ஜெயா – நான் மட்டும் இந்து மாணவர்களுக்கு கொடுத்தவிடுவேனா ? என்ன ? இந்து அல்லாதவருக்கு இந்த தொகையை இன்னும் கூட்டி கொடுப்பேன். என்னை நம்புங்கள் கருணாவை நம்பாதீர்கள்.

    இந்து என்பவன் ஏமாளி ! இளித்த வாயன் ! சோற்றுபிண்டம் ! அவன் நாசமா போகட்டும் ! அழிந்து போகட்டும் ! மதமாறி போகட்டும். கிருஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நாட்டையே எழுதிக்கொடுத்தாவது வரும் தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும் – இப்படிக்கு கருணா-ஜெயா

    கருணா-ஜெயா இந்து விரோத போக்கிற்காக நாங்கள் எதிர்பு தெரிவிக்க மாட்டோம். வாய்பு கிடைக்கும்போது நாங்களும் அதைதான் செய்வோம் – இப்படிக்கு கம்யூனிஸ்ட்-காங்கிரஸ்-ராமதாஸ்-விஜயகாந்த்-வைகோ

    இந்துகளே நீங்கள் யாரை ஆதரிக்க போகிறீர்கள் ???????

    (நன்றி விஸ்வதரிசனம்)

  28. வெற்றியோ தோல்வியோ கவலை இல்லை. எனது வோட்டு தாமரைக்கே. ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்குவோம். அதற்கு இது பயன்படும். தாமரை ஓரிரு இடத்தில் மலரக்கூடிய வாய்ப்பு தென்படுகிறது. மலர்கிறதோ இல்லையோ குறைந்தபட்சம் கொடியாவது மேலே வரட்டும்.

    சிவா
    பத்மநாபபுரம்

  29. வணக்கம்

    வேதாளம் முருங்கை மரம் ஏறின கதை போலே அம்மையாரின் ஆணவம் கொஞ்சமும் குறைய வில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார், காங்கிரசின் கவுரவம் சத்யமூர்த்தி பவனிலே சன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அவசரமாக வெளியே தெரிந்து விட்டது.

    மீண்டும் தமிழ் சகோதரர்களை முட்டாளாக நினைத்து கருணாநிதியின் அறிக்கை, கடைசி ஏழை இருக்கும் வரை இலவசம் இருக்கும் என்பதாக,
    கடைசித் தமிழனையும் (எதோ ஏழையாக இருப்பினும் கொஞ்சமாவது உழைப்பாளியாக இருப்பான், அவனையும் ) சோம்பேறி பிச்சைக்காரன் ஆக்காமல் விட மாட்டோம் என்று ஒரு முடிவோடுதான் இருக்கிறார் என்று தெரிகிறது.

    எப்படியும் இருவது கிலோ அரிசி இலவசம் (பருப்பெல்லாம் கிலோ வெறும் இருநூறு ரூபா மட்டுமே)
    மிக்சி கிரைண்டர் இலவசமாக கிடைக்கும் . (ஒருநாளைக்கு ஒருமணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும்.)

    யார் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைக்கட்டும், அது பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. வாக்கு சாவடி செல்லும் வழியிலே பலர் நின்று ஜெயிக்கிற கட்சிக்கு ஒட்டு போடுங்க என்றெல்லாம் ஒரு மாயையை உருவாக்குவார்கள். என்னமோ ஜெயிக்கிரதுக்குன்னே இவங்க கட்சி இருப்பதாக ஒரு எண்ணம் போல.

    இரு கழ(ல)கங்களுக்கும் இருக்கும் ஒரே நம்பிக்கை என்ன எனில் எப்படியும் இந்த குப்பை மேட்டையும் , குட்டிசுவரையும் தவிர வேறு எதையும் தமிழ் மக்கள் தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என்பதுதான்,

    முதலில் அந்த நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்றால் பா ஜ க ஒன்றே தீர்வு என்பதை சகோதரர்கள் அனைவரும் அறிந்து கொவார்கள் என்றே நம்புகிறேன். சகோதரர்களே எல்லா தேர்தலிலும் ஒரே மாதிரி யோசிச்சா எப்படி?

    இப்போவாவது மாத்தி யோசிங்க

  30. வணக்கம்

    இரு கழ(ல)கங்களுக்கும் இருக்கும் ஒரே நம்பிக்கை என்ன எனில் எப்படியும் இந்த குப்பை மேட்டையும் , குட்டிசுவரையும் தவிர வேறு எதையும் தமிழ் மக்கள் தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என்பதுதான்,

    மன்னிக்கவும் இதற்க்கு அடுத்து நான் முக்கியமாய் எழுதியது விட்டுப் போய் விட்டது ……….அது

    அந்த இரண்டு இடமுமே மனிதர்களான நமக்கு ஆனது அல்ல கழுதைகளுக்கானது

  31. ஜெயலலிதா இப்போது ஸ்ரீரங்கம் வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக’ நான் இந்த மண்ணுக்குரியவள்.எனது மூதாதையர் இங்குதான் இருந்தனர். எனது வேர் ஸ்ரீரங்கத்தில் ‘ என்றெல்லாம் சொல்கிறார்.

    இத்தனை வருடம் மறந்திருந்த ‘வேர்’ திடீரென்று ஜெயலிதாவுக்கு ஞாபகம் வந்துவிட்டது.
    ஸ்ரீ ரங்கநாதர் கோயிலுக்கு முன்பாக ஹிந்துக்களை அவமானப் படுத்தும் விதமாக திராவிடக் கழகத்தினர் , ஹிந்து விரோத திமுக அரசின்
    ஆசியுடன் ஈ வே ரா சிலையை வைத்த போது ஜெயலலிதா வாயை இறுக மூடிக் கொண்டிருந்தார்.

    ஹிந்து மக்கள் அவமானத்தில் கூனிக் குறுகியும், அக்கிரமம் கண்டு கொதித்தும் போயிருந்த போது அவர்களுக்கு உதவ வந்தது பாரதீய ஜனதா கட்சி,ஹிந்து முன்னணி,வீ ஹெச் பீ மற்றும் ஹிந்து மக்கள் கட்சி இவைகளே.

    அரசு, திக, திமுக அடியாட்கள் மற்றும் காவல் துறையின் தாக்குதல்களைத் தாங்கியவர்கள் இவ்வியக்கத் தொண்டர்களும் தலைவர்களுமே.
    எனவே இப்போது ஜெயலலிதா ஸ்ரீரங்கம் மக்களை ஏமாற்ற நினைத்தால் அந்த ரங்கநாதரே அவருக்குத் தகுந்த தண்டனை கொடுப்பார்.

    இரா .ஸ்ரீதரன்

  32. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகள்

    1. அரசு பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் வழங்கப்படும்.
    2. ஆண்டின் தொடக்கத்திலும், தேர்வுகள் நடக்கும்போது பேனா, பென்சில் போன்ற எழுது பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.
    3. ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டுக்கு இலவசமாக பால் வழங்கப்படும். மாற்றுத் திறனோடு பிறக்கும் குழந்தைகளுக்கு 5 வயது வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
    4. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
    5. ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ. 10 ஆயிரம் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும்.
    6. ஏழைப் பெண்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
    7. படிப்பை பாதியில் கைவிடும் 15 முதல் 21 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவசமாக தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.
    8. ஆண்டுக்கு ஒருமுறை புனிதப் பயணம் மேற்கொள்ள பயணச் சலுகை வழங்கப்படும்.
    9. ஏழைக் குடும்பங்களுக்கு பசு மாடு இலவசமாக வழங்கப்படும்.
    10. அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
    11. ஏழை பெண் குழந்தைகள் பருவமடையும்போது இலவசமாக உடைகளும், ஒரு மாதத்துக்கு சத்தான உணவும் வழங்கப்படும்.
    12. இலவச மின்சாரம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் தொழிலுக்கும் விரிவுபடுத்தப்படும்.
    13. சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு:
    14. சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்படும்.
    15. சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதுபோல இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
    16. தொடக்கப் பள்ளி முதல் நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும்.
    17. அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்.
    18. 6-ம் வகுப்பு முதல் இலவசமாக யோகா, தியானம் கற்றுத் தரப்படும்.
    19. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தெற்குறிச்சி பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை பயிற்சி மையம் அதே இடத்தில் அமைக்கப்படும்.
    20. மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  33. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகள்

    21. மாவட்ட அரசு மருத்துவமனைகள் தனியார் உதவியுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
    22. பாலியல் தொந்தரவுகளுக்கு தண்டனை:
    23. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.
    24. ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சியும், நிதி உதவியும் செய்து தரப்படும்.
    25. இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக தனித் துறை ஏற்படுத்தப்படும்.
    26. மாவட்ட, தாலுகா அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
    27. இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்படும்:
    28. இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    29. தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள், தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கும் நாளாக கடைபிடிக்கப்படும்.
    30. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    31. விவசாய பம்புசெட்டுகளுக்கு ஓராண்டுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
    32. தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் ஒரு பகுதியாக தமிழக நதிகள் குறுகிய காலத்தில் இணைக்கப்படும்.
    33. பாஜக ஆளும் மாநிலங்களைப்போல தமிழகத்திலும் விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
    34. விவசாய உற்பத்தி பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
    35. நெல், கரும்பு போன்ற விளை பொருள்களுக்கு பணவீக்கத்துக்கு தகுந்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.
    36. மரபணு மாற்ற விதைகளுக்கு தடை:
    37. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும்.
    38. கால்நடை தீவனத்தின் விலை உயர்வுக்கேற்ப பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்.
    39. எத்தனால் உற்பத்தி செய்ய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
    40. மணல் கொள்ளை தடுக்கப்படும்.

  34. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகள்

    41. 100 நாள் வேலை திட்டம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
    42. உலகெங்கும் வாழும் தமிழர்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.
    43. சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட அந்நிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
    44. தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத சூழல் உருவாக்கப்படும்.
    45. தென் தமிழகத்தின் வளர்சிக்காக குளச்சல் துறைமுகம் உருவாக்கப்படும்.
    46. அரசு நிர்வாகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
    47. ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை செயல்படும் அரசின் சூப்பர் மார்க்கெட்டுகளாக மாற்றப்படும்.
    48. போலி குடும்ப அட்டைகளைத் தடுக்க மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.
    49. பூரண மதுவிலக்கு கொண்டு வருவதே பாஜகவின் லட்சியம்.
    50. இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் இருக்கும்வரை விவசாயிகளின் நலன் கருதி கள் இறக்க அனுமதி அளிக்கப்படும்.
    51. இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். மற்ற மத அமைப்புகளுக்கு உள்ளதுபோல குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்திலிருந்து கோவில் சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.
    52. கோவில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
    53. நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி:
    54. அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் இந்து கோவில்களில் சமபந்தி விருந்து நடத்துவது நிறுத்தப்பட்டு 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி விருந்து நடத்தப்படும்.
    55. கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.
    56. ராமர் பாலம் தேசிய வரலாற்று சின்னமாக அறிவிக்கப்படும்.
    57. மாற்றுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  35. பிஜேபி தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது, இது முதலில் எல்லாரையும் போய் சேரவேண்டும், இதனை படித்துபார்க்கும் ஒவ்வொரு சிந்திப்பவரும் ஓட்டளிப்பார்கள்

  36. எத்தனை தொகுதிகளில் யார் வென்றாலும் திருவாரூரில் கலைஞ்சரும்
    திருவரங்கத்தில் ஜெயலலிதாவும் நிச்சயமாக தோற்க வேண்டும்.
    மக்கள் ஆப்பு வைத்தால் நல்லது

  37. பாஜகவின் தேர்தல் அறிக்கை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் என்ன பயன் ? தமிழகம் முழுவதும் போட்டி போடுவது அவர்களது கட்சித்தேவையாக இருந்தாலும், ஓரிரு இடங்கள் வெற்றிப் பெற்றாலும், ஆகப்போவது என்ன?

    மாற்றங்கள் எதுவாயினும் ஒரே நாளில் வருவதில்லை. பாஜக எல்லா தேர்தல்களிலும் தொடர்ந்து எல்லா இடங்களிலும் தமிழ்நாடு முழுவதும் போட்டியிட்டு மூன்று தேர்தல்களில் தோற்றால் நான்காவது தேர்தலில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். யார் கூட்டணியும் தேவையில்லை. நல்ல தரமான பேச்சாளர்களை உருவாக்குங்கள். கழகங்களை போல் மக்களை ஏமாற்றி பொய்கள் பல சொல்லி , ஆட்சியை பிடிக்க வேண்டாம். உண்மையை சொல்லியே பாஜக ஆட்சியை பிடிக்க முடியும். அதே சமயம் நம் தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நிறைய சமூக சீர்திருத்தங்கள் செய்ய முன்வர வேண்டும்.

    விதவை மறுமணம், ஒரு ஜாதியை சேர்ந்தவர் பிற ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்ய விரும்பினால் அதை அங்கீகரித்து காதல் திருமணங்களை சமுதாயத்தில் மதிப்பு ஏற்படச்செய்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இந்த திட்டங்களை சொல்லி பிரச்சாரம் செய்தால் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல வெற்றி கிடைக்கும்.

    இப்போது, மக்கள் முன் உள்ள பிரச்சினை என்ன வென்றால் , கருணாவின் அரசு நீக்கப் பட்டு, வேறு புதிய அரசு வர வேண்டுமா, அல்லது இதே அரசு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்பட வேண்டுமா? என்பதுதான். கருணா அவர்களின் குடும்ப ஆட்சி மற்றும், ௨ஜி ஊழல், மின்சார தட்டுப்பாடு, மிகவும் எக்குதப்பான விலைவாசி உயர்வு முதலியவை தமிழகம் முழுவதும் மாநில ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளன. மேலும் இலங்கை தமிழர்களில் லட்சக்கணக்கானோர் இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரசு கட்சியுடைய மத்திய அரசின் ராணுவ தளவாட உதவிகளை பெற்று கொல்லப்பட்டுள்ளனர் என்ற ரகசியம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அந்த மத்திய அரசில்தான் கருணாவின் குடும்பத்தினர் மந்திரி பதவிகளை பெற்று , குடும்ப நிதிவசதிகளை பல ஊழல்கள் செய்து பெருக்கி கொண்டனர் என்பதும் எல்லோருமறிந்த உண்மை ஆகிவிட்டது.

    ரஜினி காந்தின் மாப்பிள்ளை சினிமா துறையில் நடிக்கிறார், என் பேரன்கள் திரைப்படத்துறையில் வியாபாரம் மற்றும் படத்தயாரிப்பு செய்வதை ஆட்சேபிக்கிறார்களே என்று முதல்வர் புலம்புகிறார். இதில் என்ன நியாயம்? சினிமாவில் ஏற்கனவே சில படங்களில் நடித்து , புகழ்பெற்ற ஒரு நடிகரான தனுஷை தன் மாப்பிள்ளை ஆக்கி கொண்டாரே தவிர, தனுஷுக்கு ரஜினி சினிமா வாய்ப்புகளை தேடித்தரவில்லை. அப்படி தேடித்தந்தால் கூட அதில் தவறு எதுவும் இல்லை. ஏனெனில் ரஜினி தமிழக முதல்வர் அல்ல. அதிகார துஷ்பிரயோகம் செய்ய அவருக்கு தேவையும், வாய்ப்பும் இல்லை. ஆனால் கருணா தமிழ் நாட்டரசின் முதல்வராவார். அவர் வசம் அரசு, காவல் துறை எல்லாமே உள்ளன. எனவே துஷ்பிரயோகம் செய்ய அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. அவர்கள் பேசிய ரகசிய பேச்சுக்கள் எல்லாமே இப்போது இன்டர்நெட் மூலம் உலகம் முழுவதும் பரவி விட்டது.

    வெளிநாட்டு வங்கிகளில் இவர்களது பணம் போய் சேர்ந்து விட்டது என்று எல்லா பத்திரிக்கைகளும் எழுதிவிட்டன. இவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கைது செய்யப்பட்டு , ஆ ராசாவுக்கு பக்கத்து சிறைக்குப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று பலரும் பேசத்துவங்கிவிட்டனர்.

    ஜெயலலிதா ஒன்றும் விரும்பத்தக்க சக்தி அல்ல என்றாலும், கருணாவின் அளவுக்கு ஊழல் செய்தவரல்ல. மேலும் ஜெயாவின் 2001 -2006 ஆட்சியில் ஊழல் மிக குறைவு. மின் தட்டுப்பாடு இல்லை. சட்டம் ஒழுங்கு மிக நன்றாக இருந்தது. தமிழ் தீவிரவாதி வீரப்பர் என்று கருணாவால் சட்டப்பேரவையிலே பாராட்டப்பட்ட சந்தன வீரப்பன் ஜெயா ஆட்சியில் தான் அடக்கப்பட்டான். எனவே கருணாவைவிட பல விதங்களிலும் ஜெயா பரவாய் இல்லை. எனவே இந்தமுறை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இன்று வந்துள்ள கருத்துகணிப்பு தெரிவித்துள்ளது போல, இம்முறை வாக்கு பதிவு சதவீதம் மிக அதிகமாக இருக்கும். சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் பணத்தை வாங்கிகொண்டு , எங்கள் விருப்பப்படிதான் ஒட்டுபோடுவோம், பணத்துக்காக , பணம் கொடுத்த கட்சிக்கு ஒட்டு போடமாட்டோம் என்று தெளிவாக தெரிவித்து உள்ளனர். எனவே இத்தேர்தல் கலைஞருக்கு மட்டுமல்ல அவர் நடத்தும் குடும்ப கட்சிக்கும் கடைசி தேர்தலாக இருக்கும். காங்கிரசுடன் சேர்ந்த அவர் பாடு அதோகதிதான்.

  38. வணக்கம் ,

    பாஜக வின் தேர்தல் அறிக்கைகள் கண்டிப்பாக அனைவருக்கும் போய் சேர வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள அணைத்துமே நம் நாட்டில் உள்ள எல்லா தரப்பு மக்களுக்கும் பயன் உள்ளதாக காணப்படுகின்றது.

    பாஜக விற்கு நம் வாக்குகளை பதித்து, அணைத்து மக்களும் பயன்பெற செய்வோம்.

  39. அட கண்ணுகளா நமது கலிங்கப்பட்டியார் பாவம், பாவம், பாவம் மகாபாவம். ஆனால் நாம் புலம்பி பயன் என்ன? 2Gகொள்ளையர்பாஸ் கருணாநியும், அடாவடி பொம்பளை ஜெயாவும் தங்களது நடைபெரும் தேர்தல் வெற்றியை (யார் வென்றாலும்) தங்கள் சுய நல பண, அதிகார, புகழ் வெறிகளை தணித்துக்கொள்ள உபயோகித்துக்கொள்வார்கள். ஆனால் வேறு கதியற்ற நாம் இரண்டு அல்பங்களில் எது பரவாயில்லை என்று யோசித்து முடிவு எடுக்கவேண்டும். இலவசத்திற்கு மயங்கினால் நமது சந்ததியினருக்கு இந்த தேசம் மீதமிருக்காது. ஆகவே கொள்ளையிடும் சக்தி குறைந்த ஜெ வை தேர்ந்த்டுப்போமாகட்டும். O.K பை பொழப்ப பார்க்கலாம்.

  40. பிரதாப்

    ஒரு அரசியல் கட்சி நடத்த ஏராளமான பணம் தேவைப்படுகிறது. கட்சி அலுவலகங்களின் வாடகை, மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், கட்சி ஊழியர்களின் சம்பளம் என்று எவ்வளவோ. மேலும் தேர்தல் சமயத்தில், நோட்டிசு, விளம்பர போர்டுகள் , கூட்டங்கள் , ஊர் ஊராக பிரச்சாரம் என்று எவ்வளவோ உள்ளது.

    ஆனால் மேலே சொல்லிய செலவுகளுக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு பெரிய பணக்காரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கொடுக்கும் நன்கொடையையே வைத்து சமாளித்து விடலாம். இந்த வியாதிக்கு மூலகாரணமே காங்கிரசு அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் தான். நாற்பத்தேழாம் ஆனதில் சுதந்திரமடைந்ததிலிருந்து , தொண்ணூற்று ஒன்றாம் ஆண்டில் நரசிம்ம ராவ் பிரதமராகும் வரை , அவர்களின் பொருளாதார கொள்கை தவறானதும் , நம் நாட்டையே அழிக்க போதுமானதுமாக இருந்தது. இருந்தும் நம் நாடு யார் செய்த புண்ணியமோ அழியவில்லை. என்ன சாகா வரமோ?

    அரசியல் கட்சிகளுக்கு பெரிய கம்பெனிகள் கொடுக்கும் நன்கொடையையும், தனி நபர்கள் கொடுக்கும் நன்கொடையையும் வருமான வரியிலேயே அனுமதித்து , வருமானவரி சட்டம் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகம் என்பது குறைந்த தீமை ஆனால் அதிக காஸ்ட்லி யான சமாசாரம் ஆகும்.

    நம் நாட்டில் கருப்பு பணம் உருவாக காரணமே காங்கிரசு கட்சியின் சிந்தனைகளில் இருந்த அழுகிப்போன சிந்தனைகள் ஆகும். காங்கிரசு என்றால் யாரும் தவறாக மகாத்மா, வல்லபாய் படேல், மொரார்ஜி , காமராஜ் என்று தவறான அடையாளங்களை நினைத்து ஏமாந்து விட வேண்டாம்.

    காங்கிரசு என்றால் நகர்வாலா, ஹர்ஷத் மேத்தா, சர்க்கரை பேர ஊழல் ,போபர்சு பீரங்கி , மற்றும் ௨ஜி என்று அவர்கள் பரம்பரை போகும். தற்போது மஞ்சளாரின் குடும்ப கழகத்துடன் வேறு அணிகண்டு , தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் தான் மக்கள் சக்தி மற்றும் ஜனநாயகத்தின் உண்மை சொருபத்தை காங்கிரசு தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. இந்த தேர்தலுக்கு பிறகு காங்கிரசு தமிழ் நாட்டில் காணாமல் போகும். பசி, வாசன் , தங்க பாலு போன்றோர் தலைமறைவாக நேரிடும்.

    தமிழக மக்கள் காங்கிரசுக்கு அடிக்கும் சாவு மணியுடன் , கலைஞரும் இவர்களுடன் கூட்டணி கண்டோமே என்று தலையில் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்படும்.

  41. வை .கோபால்சாமிக்காக இங்கு யாரும் அனுதாபப் படத் தேவையில்லை .அதற்கு அவருக்கு அருகதையும் இல்லை .நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்து இன்று முக்கியத்துவம் பெற்றது ,அவர் தனித்து நின்று தனது பலத்தை நிரூபித்ததனால் தான் .அது போல வைக்கோ தனித்து நின்று தனது பலத்தை நிருபிக்க யார் தடையாக இருந்தது ?இந்த தேர்தலில் தான் பாஜகவும் மாநிலம் முழுவதும் தனித்து நின்று தேர்தலை சந்திக்க முன்வந்துள்ளது .பாராட்டத்தக்க விஷயம் .அனுமனின் பலம் அவனுக்கே தெரியாது என்பார்கள் .அது போலதான் பாஜவின் பலமும் அக்கட்சி அறியாததாகவே இருந்து வந்தது .நமது கணக்கை இந்த தேர்தலில் தொடங்குவோம் .அடுத்த தேர்தலில் ஆட்சியை தீர்மானிப்பவராக இருப்போம் .இறுதியில் ஆட்சியை கைப் பற்றுபவராக மாறுவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *