சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை பல காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கிறார்கள், தமிழக வாக்காளர்கள். பணபலத்தைப் பொருட்படுத்தாமல், ஆசை வார்த்தைகளுக்கு மசியாமல், ஊழலின் ஒட்டுமொத்த உருவாகக் காட்சியளித்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதன்மூலமாக, நாடு முழுவதற்கும் ஓர் அற்புதமான செய்தியையும் தமிழகம் தந்திருக்கிறது.
அது…
‘ஊழல்வாதிகள் என்றுமே கொக்கரித்துக் கொண்டிருக்க முடியாது. ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்’ என்பதுதான்.
அதிகார பலமும் கவர்ச்சிகரமான பிரசாரமும் லஞ்சமாக வழங்கப்பட்ட பணமும் தமிழக மக்களை முட்டாளாக்கிவிடவில்லை. இந்தப் பாணியில் எவர் செயல்பட்டாலும் வெற்றி கிட்டாது என்பது நாட்டு மக்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களுக்குக் கோடி நன்றி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக நடத்திய நிர்வாகச் சீர்கேடு மிகுந்த ஆட்சியால் மக்கள் மனம் வெதும்பிக் கிடந்தார்கள்; விண்ணை எட்டிய விலைவாசியால் வாழவே போராடிய அவர்களுக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் கையூட்டாக முன்வைக்கப்பட்டன. ஒரு ரூபாய் அரிசி வழங்கப்பட்டதையே பெரிய சாதனையாக முதல்வராக இருந்த கருணாநிதி கருதிக் கொண்டிருந்த வேளையில், மக்கள் நாட்களைத் தள்ளவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கருணாநிதியின் குடும்பங்கள் நடத்திய கேளிக்கைகளும் அதிகார விளையாட்டுக்களும் மக்களை குமுறச் செய்திருந்தன.
இவை அனைத்திற்கும் சிகரமாக, உலகிலேயே மிகப் பெரிய ஊழலாகக் கருதப்படும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் பெற்று, நாட்டிற்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய திமுக அமைச்சரான ஆ.ராசாவும், அதற்குத் துணை புரிந்த கருணாநிதி குடும்பமும் கண்டுகொள்ளாமல் தானும் லாபம் பார்த்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசும் மக்களிடையே கோபத்தைக் கொந்தளிக்கச் செய்திருந்தன.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு முன்எப்போதையும் விட மோசமான நிலையை எட்டியது. முதல்வரின் மகனே தென் தமிழகத்தின் தாதாவாக விளங்கிய சூழலில் காவல்துறை கையைப் பிசைந்தது. திமுகவில் நிலவிய வாரிசுப் போராட்டம் அதிகார வர்க்கத்திலும் குழப்பமான மனோநிலையை ஏற்படுத்தியது. விளைவாக நிர்வாகமும் சீர்குலைந்தது. இலவசத் திட்டங்களுக்கு அரசு பணத்தை வாரி இறைத்ததால், தமிழக அரசின் கருவூலமும் காலியானது.
அண்டை நாடான இலங்கையில் சகோதரத் தமிழ் மக்கள் அந்நாட்டு அரசால் வேட்டையாடப்பட்டபோது, காங்கிரஸ் தலைவி சோனியா உதவியுடன் இலங்கை அதிபர் ராஜபக்ஷே கொக்கரித்துக் கொண்டிருதபோது, அரசியல் சுயநலனுக்காக கண்மூடி வேடிக்கை பார்த்த திமுக, அதை மறைக்க கோவையில் பலகோடி செலவில் நடத்திய செம்மொழி மாநாடு அருவருப்பை மக்களிடம் ஏற்படுத்தியது. போர் முடிந்து இரண்டாண்டுகள் ஆன பின்னரும் குற்றுயிராக விடப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலை தமிழக மக்களிடையே வேதனையை விளைவித்திருந்தது. ஆயினும் ‘திருமங்கல’ பாணியில் பணத்தால் தேர்தலில் வென்று விடலாம் என்ற மனப்பால் குடித்தபடி இருந்தது திமுக.
இவ்வாறாக தவறுக்கு மேல் தவறு செய்தும் உத்தமர் போல நடித்துக் கொண்டிருந்த திமுகவுக்கு பாடம் கற்பிக்க தமிழகம் காத்திருந்தது. அதற்கான நேரம் சட்டசபை தேர்தல் வடிவில் வந்தது. மக்களின் இதய ஆவேசம் வாக்குச்சீட்டுக்களாகப் பரிணமித்தது. அதன் விளைவாக இப்போது தமிழக மக்கள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோக ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். ஒட்டுமொத்தத் தொகுதியான 234-இல், 202 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி அளித்து திமுகவுக்கு அதிரடி அதிர்ச்சி வைத்தியமும் அதிமுகவுக்கு ஆள்வதற்கான அதிகாரமும் வழங்கி இருக்கிறார்கள் தமிழக மக்கள். இதன்மூலம், ஊழல் ஒரு பொருட்டல்ல என்று விதண்டாவாதம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முகத்திலும் கரியைப் பூசி இருக்கிறார்கள், விழிப்புணர்வுள்ள மக்கள்.
ஜாதி அரசியலால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் (இது மட்டும் அதிமுக கூட்டணி கட்சி) கட்சிகள் இத்தேர்தலில் நல்ல பாடம் கற்றிருக்கின்றன. சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை, ஃபார்வர்டு பிளாக் கட்சிகள் ஜாதி ரீதியாக இயங்கியபோதும், கூட்டணி காரணமாகவே வென்றுள்ளன என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
திமுக, அதிமுக கூட்டணிகள் இரண்டிலும் இடம் பெற்ற முஸ்லிம் கட்சிகளும் கூட மதரீதியான வாக்குகளால் சாதிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றதால் மனிதநேய மக்கள் கட்சி வென்றது. முஸ்லிம்லீக் திமுக கூட்டணியில் சேர்ந்ததால் தோற்றது. மக்கள் மதரீதியாகச் சிந்திக்கவில்லை என்பதும் இத்தேர்தல் உணர்த்தும் பாடம்.
இத்தேர்தலில் ஆச்சர்யமான வெற்றி பெற்றிருப்பது விஜயகாந்த்தின் தேமுதிக-தான். 29 தொகுதிகளில் வென்று சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்திருப்பது அக்கட்சிக்கு அமோகமான எதிர்காலம் இருப்பதைக் கட்டியம் கூறி இருக்கிறது. ஆண்ட கட்சியான திமுக 22 தொகுதிகளில் மட்டுமே வென்ற நிலையில் தேமுதிக பெற்றுள்ள வெற்றி, அதற்கு, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கி உள்ளது, திமுகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் தகுதிகூட இல்லை என்று மக்கள் தீர்மானித்திருப்பது புல்லரிக்கச் செய்கிறது.
இந்தத் தேர்தல் களம் ஊழலின் ஒட்டுமொத்த வடிவான திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் அதற்கு மாற்றாக உருவெடுத்த அதிமுக கூட்டணிக்கும் இடையிலானதாக மாற்றம் பெற்றது. அதன் பலனாகவே பாஜக உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. அர்ஜுனன் கண்ணுக்கு பறவையின் கால் மட்டுமே தெரிந்தது போல, தமிழக மக்களின் பார்வைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் மட்டுமே தென்பட்டதன் விளைவாகவே, இந்த அமோக வெற்றியை ஜெயலலிதாவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இதைப் பாடமாகக் கொண்டு நல்லாட்சி நடத்த வேண்டிய கடமை அவருக்கு உண்டு.
இத்தேர்தலில் கிடைத்த அனுபவம் கொண்டு எதிர்கால அரசியலைத் திட்டமிட வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு உள்ளது. பாண்டிச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் கிடைத்துள்ள அனுபவமும் இதையே பிரதான எதிர்க்கட்சிக்கு அறிவுறுத்துகிறது. நடந்து முடிந்த தேர்தலில் கட்சியினர் ஆற்றிய பணிகள், பெற்றுள்ள வாக்குகள், மக்களின் மனநிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்கால அரசியல் வியூகங்களைத் திட்டமிட முடியும். கிடைத்துள்ள தோல்விகளைப் படிப்பினைகளாகக் கொண்டு திறம்படச் செயல்பட வேண்டியது பாஜகவின் பொறுப்பு.
நாட்டு மக்களை பொய்யான கருத்துக் கணிப்புகளால் குழப்பிவிட முடியாது என்பதும் இத்தேர்தலில் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஊடகங்களின் பொய்முகங்கள் அம்பலமாகவும், ஊடகப் பிரசாரத்தை மீறி ஜனநாயகம் வெல்ல முடியும் என்பது நிரூபிக்கப்படவும் இத்தேர்தல் உதவியுள்ளது.
மேற்கு வங்கத்திலிருந்தும் கேரளாவிலிருந்தும் அதிகார பீடத்திலிருந்து இடதுசாரிகளை விரட்டிய மக்கள், அக்கட்சியை நம்பி மூன்றாவது அணி அமைக்கும் கனவில் இருப்பவர்களை எச்சரித்திருக்கிறார்கள். தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்றிருப்பது எதிர்காலத்தில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும். அசாமில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட மறுத்ததன் விளைவை, காங்கிரஸ், வெற்றியாக அறுவடை செய்திருக்கிறது. இவை அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கற்பித்துள்ள பாடங்கள்.
இவை அனைத்தையும் விட, தேசிய அரசியலில் தமிழகம் தந்துள்ள தேர்தல் முடிவு அற்புதமானது; ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு உற்சாகம் அளிப்பது; மக்கள் அறிவாளிகள் என்பதை சம்மட்டி அடியாக அரசியல்வாதிகளுக்கு நினைவூட்டி இருப்பது.
நமது தேர்தல் முறைக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் நன்றிகள் என்றும்.
தாங்கள் கூறியுள்ளது போல் தமிழக மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஊழல் விஞ்ஞானி கருணாநிதியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ், சந்தர்ப்பவாத சாதிக்கட்சி பாமக போன்றோருக்கு சரியான பாடம் புகட்டிவிட்டனர். பணபலம் கொண்டவர்கள்தான் பதவிக்கு வரமுடியும் என்ற நிலையைக் கருணாநிதி ஏற்படுத்திவிட்டாரே என்று நினைத்தேன். மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர் என்பதை தேர்தலில் காட்டிவிட்டனர். இதிலிருந்து பாடம் கற்று ஜெயலலிதாவும் இனியாவது நல்ல ஆட்சி தரவேண்டும்.
//”மேற்கு வங்கத்திலிருந்தும் கேரளாவிலிருந்தும் அதிகார பீடத்திலிருந்து இடதுசாரிகளை விரட்டிய மக்கள், அக்கட்சியை நம்பி மூன்றாவது அணி அமைக்கும் கனவில் இருப்பவர்களை எச்சரித்திருக்கிறார்கள்”.//
கேரளாவில் இடதுசாரிகளை மக்கள் தூக்கி எரிந்து விடவில்லை. காங்கிரசும், இடதுசாரிகளும் மாறி மாறி ஆட்சி அமைப்பது இயல்பான ஒன்று. ஆனால் இந்த முறை வெறும் நான்கு இடங்கள் மட்டுமே வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது காங்கிரஸ் கூட்டணி. மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருமாறி இருக்கிறது கம்யுனிஸ்ட் கட்சி. இது இதற்கு முன் நடந்திராதது. இதன் மூலம் மக்கள் இடது சாரிகளைத் தூக்கி எரியவில்லை என்றே தெரிகிறது. இது அச்சுதானந்தான் மீதான நல்லெண்ணம் பாதியும், காங்கிரஸ் மீதான எதிர்ப்பு பாதியுமான விளைவே என்று தெரிகிறது. மேலும் தற்போது காங்கிரஸ் முதல்வராக ஆக உள்ள உம்மன்சாண்டி அப்படி ஒன்றும் திறமையானவரோ நேர்மையானவரோ கிடையாது. இதன் பாதிப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும். தவிர அங்கே காங்கிரசுக்கு மெஜாரிட்டி பலம் இல்லை. இதனால் ஆட்சி ஸ்திரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
மேற்கு வங்கத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பிகிரார்கள் என்று தெளிவாகியிருக்கிறது. ஆனால் மம்தா பானர்ஜி திறமையான , நேர்மையான ஆட்சி தருவாரா என்பது சந்தேகமே. இரயில்வேத் துறையை அவர் வைத்திருக்கும் இலட்சணமே இதற்கு சாட்சி.
தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த பின்னடைவை கொடுத்துள்ளது. ஆனாலும் கிடைத்த ஐந்து தொகுதி வெற்றியில் மூன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தது. வெற்றி பெற்ற தொகுதிகளில் படித்த கிறித்தவர்கள் அதிகம். இவர்கள் காங்கிரசை வெற்றிபெற செய்ததன் மூலம் ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவளிக்கிரார்களா? அல்லது வேட்பாளர் கிறித்தவர் ஆனதால் வெற்றிபெற செய்தார்களா ?. மனித உயிர்கள் படுகொலை செய்யப்பட்டதை கிள்ளியூரிலும், குளச்சலிலும் உள்ள படித்த கிறித்தவர்கள் காங்கிரசுக்கு வாக்கு அளித்து நியாபடுத்தி உள்ளார்கள் என்று எடுத்து கொள்ளலாமா ?
மனித உயிரை விட கிறித்தவர்களுக்கு மதம் முக்கியமாகி விட்டதா ?
கிறித்தவர்களே இலங்கை தமிழர் படுகொலைக்கு ஆதரவாக இருந்த காங்கிரசை வெற்றிபெற செய்து விட்டீர்கள். கிறித்தவர்களே, நீங்கள் படித்த படிப்பு உங்களுக்கு சுய சிந்தனையை தரவில்லையா .? கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்தவர்கள் அதிகம். ஆனாலும் தலைகுனிய வேண்டிய விஷயம், என்னவென்றால் தமிழகத்திலேயே குறைவான வாக்கு சதவிகிதம் மற்றும் காங்கிரசை மக்கள் தமிழகம் முழுவதும் நிராகரித்த போதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் வெற்றிபெற செய்தது.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தோற்க கிறித்தவர் சீமான் பிரச்சாரம் செய்தார். இதற்கு அவர் என்ன பதில் சொல்ல போகிறார்?
அருமையான கட்டுரை. தமிழ் ஹிந்துவுக்கு நன்றி.
திமுகவின் ஊழலுக்கு தமிழகம் தந்துள்ள தெளிவான தீர்ப்பு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எச்சரிக்கையாகும். அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்.
பாஜக இந்த தேர்தல் களத்தில் வெல்லாமல் இருக்கலாம். ஆனால், அதன் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் வென்றுள்ளது. தவிர கேரளத்திலும் தமிழகத்திலும் பல தொகுதிகளின் வெற்றி- தோல்விகளை நிர்ணயிப்பதாக பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் அமைந்துள்ளன. அஸ்ஸாமில் கூட்டணி அமைத்திருந்தால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கும். அங்கு சுமார் 25 தொகுதிகளில் பாரதீய ஜனதா இரண்டாமிடத்தில் குறைந்த வித்தியாசத்தில் வந்துள்ளது. இந்த தோல்வியில் இருந்து வெற்றிக்கான படிக்கட்டுகளை பாரதீய ஜனதா அமைக்க வேண்டும்.
-நாட்டன்பன்
தமிழ் மக்களின் இலவச மயக்கம் பண மயக்கம் தீராதா என்று ஏங்கியவர்களுக்கு இது ஒரு ஆனந்தமயமான அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவு.
ஊழல் மன்னன் கருணாநிதியும், ஊழல் இளவரசன் ஸ்டாலினும் வெற்றிபெற்று விட்டபின், திருவாரூர் மற்றும் கொளத்தூர் ஊழல் ஆதரவு வாக்காளர்களை தவிர்த்துத்தான் சொல்லவேண்டும். மற்றும் பிற திமுக, காங்கிரஸ், பாமக ஊழல்வாதிகளுக்கு வோட்டுபோட்ட, வெற்றியடையச் செய்த ஊழல் வாக்காளர்களையும் கழித்துத்தான் சொல்ல வேண்டும். ஒரே அணியாக நின்ற அஇஅதிமுக, தேமுதிக மற்றும் தோழைமைக்கட்சிகளின் வாக்காளர்களுக்கு மட்டுமே, ஊழலை எதிர்த்து வோட்டு போட்ட பெருமை சேரும். எனவே, தமிழகம் ஊழலுக்கு சம்மட்டி அடி கொடுத்தது என்பது தவறு.
V Subramanian
Reg Freebies (ilavasams). Je has signed some orders today. U can know abt them to find out who has changed. People r waiting for 4 g gold and 2000 rs per month for fisherfolk and so on. What abt mixies grinders and pattas for srirangam brahmins who occupy the houses belonging to the temple, which she gave as an election promise ?
Editor
In all the articles abt the elections defeat of DMK, the Hindy religious symbols are invoked by the writers.
Religion and politics – at least TN politics – may be kept apart. If you dont do, and continue to cite hindu religious references in f/o Je and against DMK, it will mean u dont take into consideration the fact that, although the DMK is avowedly an atheist party, yet it has all its members as Hindus only. Only a small fraction among them r Christians and Muslims. In KK dist, as one has pointed out here, the Christians are traditionally Congress. In T.veli, Tutocrin and KK dists, the Muslims r traditionally AIADMK.
So, Tamil.hindu.com editors, u r scoring same side goal against ur religion. The DMK members and their families are Hindus. They worship both mainstream Hindu gods and goddesses and village Hindu deities. Please ponder over such facts – dispassioantely, w/o guidance of the members writing here. Urself.
By neglecting these sections of Tamil population, or by using hindu religious symbols for the perverse comparision in politics, I am afraid, u r doing a disservice to the Hindu religion, which, i am sure, is not the objective for which this blog has been started.
Such articles as have appeared here, are expected from Thuglak or Namadu MGR or Dinamalar.
Never succumb to the immediate reaction from the members here contradicting me and justifying the invocation of religious symbols, such as puranic stories. Their purpose is not propogation of the religion, but only to gratify their egos.
Remember u cant imagine a Hindu religion of only these writers most of them r from brahmin and upper castes. Ur agenda shd be inclusive – so inclusive that it shd take in its ambit the so called dravidian party members.
Rarely have I come across any article penned by a lower caste person in ur blog, except the Venkatesan, but his view points are decade old – reproduction of his essays. If u dont think on the lines suggested above, I, for one, will go and write anywhere abt u being pro upper caste, trying to damage the religion by making it EXCLUSIVE.
Nanjil Suresh
It s a convenient talk abt SL Tamil issue.
Last elections had shown clearly that Tamils, as a whole, did not take the SLT issue as an election plank before voting. They neglected it. Reasons for such neglect are too complicated to go into.
This elections, too, did the same, in TN, as a whole. Seeman’s propoganda was there only in certiain pockets. Seeman is not the right man to do the job. His style is inappropriate esp. among a people like Tamil nadu residing Tamilians. These people associate out shouting political leaders as tinpot orators. Like the late Vetrikondaan and now living Theeppori Arumugam, and u can add, Vadiveli also. Tamilains are peace loving; and they can b won over by clever talk which is ‘gentle and politie’ . A device used by Dravidian party leaders earlier. Their speech may hve venom, but never delivered with a harangue. Seeman harangued, threatened and intimated. He challenged everyone.
SLT issue has been botched by persons like him in this election.
All said and done, the honest fact is that SLT mattered little.
Against this background, the KK dist christians did not care for SLT and voted for cong, is a skewed view.
Why they voted for Cong may be due to the fact that they r traditioanl congress supporters and their love for the party harked back to Kamaraj, a Nadar. All candiates in the current elections who won in the chistian dominated consitutencies are Nadars. They prefer CSI Nadars. What s wrong with that ? I wonder. Cong and a Nadar candiate r all that they wanted. and they got both.
ஓட்டிற்கு பணம் கொடுக்கும் விவகாரத்தில் எனக்கு ஒரு புத்தகத்தைப்
பற்றின நினைவு வருகிறது.
வருடம்-1947. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன், நாட்டின்
எதிர்காலம் குறித்த தன் கணிப்பை ஒரு அறிக்கை வாயிலாக வெளியிடுமாறு
பிரசித்தி பெற்ற ஒருவரிடம் வேண்டினார்கள். அவரும் ஒரு அறிக்கையை
அளித்தார்.
“நம் நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள் வசதி வாய்ப்புகள் இல்லா
விட்டாலும் தர்மத்திலிருந்து நழுவுவதில்லை. சுதந்திரத்திற்கு முன்னாலேயே
சில அரசியல் கட்சிகள் ஏழைகளுக்கு பணம் கொடுத்து ஓட்டை பெற
முயற்சிப்பதாக சில தகவல்கள் கிடைக்கின்றன. இதில் இரண்டு
இழப்புகள் இந்தியாவிற்கு ஏற்படும்.
ஒன்று- பணம் கொடுத்து ஓட்டை பெறுவதால் அரசும் அதனால் சமூகமும்
சீரழியும்.
இரண்டு-ஏழைகள் ஒரு கட்சிக்காரரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு
கட்சிக்கு ஓட்டை போட்டால் வாக்குறுதியை மீறிய, தர்மத்திலிருந்து
வழுவிய நிலையும் ஏற்படும்.”
இப்படியெல்லாம் 1947லேயே புலம்பியது காஞ்சி பெரியவர்.
2011 தேர்தலில் என்னதான் தேர்தல் கமிஷன் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுத்தாலும் கோடிக்கணக்கான ரூபாய்களை அரசியல்
கட்சிகள், குறிப்பாக தி.மு.க விநியோகித்தது ஊரறிந்த இரகசியம்.
ஆனாலும் அ.தி.மு.க வென்றிருப்பதன் மூலம் அம்மக்கள் தாங்கள்
தி.மு.கவிற்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளனர் என்பதும் தெளிவு.
இன்றைய நிலையில் பொது ஜனம், ஏழைகளையும் சேர்த்து அப்படி
ஒன்றும் நேர்மையான வாழ்க்கை வாழ்வதில்லை என்றாலும்,
பெருவாரியான மக்கள் அதர்மத்தின் பக்கமே இருக்கிறார்கள் என்பது
நம் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக ஆக்கியுள்ளது.
if this is against corruption and you cry also, then JJ is totally genuine?
Some people are crying that because of corruption DMK was defeated. If it so, is JJ really against corruption? Or in TN everybody became genuine and not taking bribes? This kind of articles are really annoying and we all know that corruption was not the factor.
As usual this web site gives a biased article.
//இன்றைய நிலையில் பொது ஜனம், ஏழைகளையும் சேர்த்து அப்படி
ஒன்றும் நேர்மையான வாழ்க்கை வாழ்வதில்லை என்றாலும்,
பெருவாரியான மக்கள் அதர்மத்தின் பக்கமே இருக்கிறார்கள் என்பது
நம் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக ஆக்கியுள்ளது.//
ஒரு கட்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு அக்கட்சிக்கு வாக்களிக்காமல் இருப்பதை அதர்மம் என்று சொல்கிறீர்களா? மக்கள் பணம் கொடுக்கப்படும் போது வாங்காமல் இருக்கும் நிலையைத் தர சட்டம் ஒழுங்கு நிலை சரியானதாக இல்லை என்பது நிதர்சனம். வாக்களிக்க பணம் கொடுக்கும் மாபாதகத்தை ஆதரிக்காமல் மாற்றி வாக்களித்து மீண்டும் இவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்து வாக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணம் ஏற்படாமல் மிகப்பெரிய தர்மத்தை மக்கள் செய்திருக்கிறார்கள்.
தர்மத்தை போதித்ததை அதர்மம் என்று சொல்லாதீர்கள்.
“தி.மு.க. பணம் கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள் ஆனால் எங்களுக்கு வோட்டு போடுங்கள்” என்று மற்ற கட்சிகள் சொல்லும்போது அது எப்படி அதர்மமாய் மாறி விடும் என்பது புரியாத புதிராய்த்தான் இருக்கிறது எது எப்படியோ முடிவுகள் நமக்கு சாதகமாய்த்தான் இருக்கின்றன.
ஜெயலலிதா இதுதான் சாக்கு என்று மறுபடியும் ஹிந்து மடாலயங்கள் மேல் பாயாமல் இருப்பாராக. சில கிறிஸ்தவ கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.
JJ entha madathin meethum payah mattar… now she need to collect back 500cr from Ramanad MP and madam periyvar i guess amt got settled later… I guess another 500cr i heared that person who was popular in chidambaram has been killed in aircraft crash….. TN has only two options either shit or bullshit… sorry for using these words..
மீண்டும் மன்னார்குடி ஆட்சி…..
ஜெயலலிதா ஏதோ மிகவும் கண்ணியமானவர் போலவும் சசிகலா என்ற ஒருவர் இல்லவே இல்லாதது போலவும், விஜயகாந்த் போன்ற விஷயமில்லாத ஆட்கள் பற்றி பேசுவது/எழுதுவது தர்மமாகி விட்டது.
கருணாநிதி எதிர்ப்பு மனப்பான்மை மட்டும் கட்டுரை எழுதுவதற்கு போதுமா?
தி.மு.க. பணம் கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள் ஆனால் எங்களுக்கு வோட்டு போடுங்கள்” என்று மற்ற கட்சிகள் சொல்லும்போது அது எப்படி அதர்மமாய் மாறி விடும் என்பது புரியாத புதிராய்த்தான் இருக்கிறது எது எப்படியோ முடிவுகள் நமக்கு சாதகமாய்த்தான் இருக்கின்றன.” என்று சந்திரமொலி எழுதுகிறார்.
புதிரல்ல.
உங்கள் இறுதிவரியில் அப்புதிர் விடுவிக்கபபடுகிறது.
ஒரு அடிப்படைத் தமிழன் அல்லது இந்தியனின் மனப்பாங்கு : “எது எப்படி போனாலென்ன நமக்கு வேண்டியது கிடைத்தால் போதும்’ என்பதுதான்.
அரசியல் கட்சிகள் விலக்கா என்ன ? பணத்திற்கு வாக்கை விற்பது ஜனனாயகத்துரோகம் என்று எல்லாரும் சொல்லிக்கொண்டே, அப்படிப் பணவினியோகம் செய்யும் கட்சிகளை விட தாம் உயர்வான நெறியைக்கடைபிடிப்போர்; எம் செயல் தூய்மைக்கு வாக்களிப்பீர்” என்று ஒருபுறம் சொல்லி, இன்னொரு புறம் ‘பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்; ஆனால் அவர்களுக்குப் போடாதீர்; எமக்கே போடுங்கள்’ என்று கேட்பது எப்படியென்றால் — எப்படி பணம் அளித்து ஓட்டை வாங்கி வெற்றிபெற நினைப்பது கொள்கையில்லா அரசியலோ, அதே போல, பணம் வாங்கி ஓட்டளிக்காமல், அஃதை எமக்கே போடுக’ என பணம் வாங்குதலை நியாயப்படுத்தி பேசுவதும் கொள்கையில்லா அரசியலாகும்.
இன்று தூய்மையில்லா அரசியலே உண்டு. அது ஜெயலலிதாவானால் என்ன ? கருனானிதியானால் அல்ல?
பணம் கொடுப்பவன், பணத்தை வாங்கிக்கொள்; ஆனால் இங்கே போடு; அங்கே போடாதே என்பவன் – என்று அனைவரும் ஜனனாயகத் துரோகிகளே.
எப்படி ஜெயித்தாலென்ன ? என்பது மேலே சொன்ன இருவகை அரசியல்வாதிகள் செயலைவிட கேவலமானது.
ஜெயலலிதா இதுதான் சாக்கு என்று மறுபடியும் ஹிந்து மடாலயங்கள் மேல் பாயாமல் இருப்பாராக. சில கிறிஸ்தவ கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.”
Chandramouli
மடங்கள் தெய்வங்களால் நடாத்தப்படுபவை அல்ல. அது மனிதர்களாலேயே நடாத்தப்படுவன. எம்மதத்தைச்சேர்ந்தவையாயிருந்தாலும்.
மடங்கள் இன்று வெறும் மதப்போதனைகளில் ஈடுபடுவன அல்ல. அவை மற்ற சமூகத்தை நன்றாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கும் செய்ல்களையும் செய்கின்றன.
தமிழில் நீட்டி முழக்க வேண்டிய\தாக இருக்கிறது.
A religious institution today is not all about religion only. It has to do so many things which do not come under the purview of religion proper. But they ought to do them, because – what to do with the extra money poured in ?
Say, for e.g., Tirupathi temple. So, they employ a vast army of servants of all categories and give them livelihood; and still money is left. They divert them to other channels like running edu institions; hospitals or other philanthropic activities.
In such materialist pursuits, although they can be said to be noble, yet, there will be corruption. And, as a man, you may know, where there are women, in a huge number, of all sorts of ages, and where there are possibilities of men in contact with them under variety of pretexts, there is bound to sex scandals.
When these things go out of hand, and spoken of much in open society negatively, the govt in power cant sit and watch the drama unfold helplessly. It has to step in to arrest the trend. No matter it is Hindu mutts or, Christian seminaries, or a Muslim brotherhood (jamat).
Government is supreme. Not your mutt if it is scandalous. Better option for you is to tell your religious leaders to behave properly.
இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியும், அ.தி.மு.கவின் வெற்றியும் எதிர் பார்த்தவைதான். இதில் ஆராய்ச்சிக்கு எதுவும் இல்லை. தி.மு.க.வின் ஊழல், குடும்பத்தினரின் ஒட்டுமொத்தமான தலையீடு, மகளை முன்னிலைப்படுத்த பெரியவர் எடுத்துக்கொண்ட அதீத முயற்சிகள், தமிழ் மையத்தோடு இணைந்து இவர்கள் அடித்த கூத்து, அந்நிய சக்தியான அந்தப் பாதிரியார் வந்த நமது தமிழ் பாரம்பரியத்தைக் காக்கப் போகிறாரா? காங்கிரஸ்காரர்களின் திமிரான பேச்சுக்கள், அவர்களுடைய ஊழல், இலங்கையில் நடந்த படுகொலைக்கு உடந்தையாக இருந்தது, தவறுகளை மறைத்து எதிர்கட்சியினர் மீது அவர்கள் நடந்துகொண்ட முறை, இவை அத்தனையும் ஜெயலலிதாவின் வெற்றிக்குக் காரணம். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள், மனு சிங்வி, ஜெயந்தி நடராசன், மனீஷ் திவாரி ஆகியோரின் திமிர் பேச்சும் அகம்பாவமும் முக்கிய காரணங்கள். ஜெயந்தி நடராசன் என்கிற பெண்ணைத் தமிழ் நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும். அவருக்குப் பின்னால் மக்கள் ஆதரவு எவ்வளவு? பெரியவர் பக்தவத்சலத்தை “பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கேலி பேசியவரின் காலில் பதவிக்காக விழுந்து நமஸ்காரம் செய்த அரிய காட்சி ஒன்று போதாதா? இவர் தாத்தாவுக்கு இவர் செய்த மரியாதை? பெரியவர் அடக்கி வாசித்திருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர் தன குடும்பத்தையும், கட்சிக்காரர்களையும், முடிந்தவரை சுருட்டுங்கள் என்று சொல்லிவிட்டார் போல இருக்கிறது. அவரவரும் ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி, அம்மா குடி என்று குடித்துத் தீர்த்து விட்டார்கள். பலன்?
@Amalan – Every one will agree with your view that inadequacy of men will result in scandals, regardless of religion. But what do you mean when you say //மடங்கள் இன்று வெறும் மதப்போதனைகளில் ஈடுபடுவன அல்ல. அவை மற்ற சமூகத்தை நன்றாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கும் செய்ல்களையும் செய்கின்றன.//
இந்த சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்த பின்னர் , தமிழ் வாரமிருமுறை இதழுக்கு அளித்த பேட்டியில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் , எம் ஜி ஆர் , ரஜினி, விஜய், அஜீத், விஜயகாந்த், சரத் குமார் ஆகிய ஆறு நடிகர்களின் ரசிகர்களும் சேர்ந்து தங்களது கட்சியை தோற்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் மக்களின் துயரத்துக்கு காரணமான கலைஞர், சோனியா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்த திருமா, ஒரு தவறான அணியில் சேர்ந்ததன் மூலம் , தன் கட்சியின் தோல்விக்கு தானே வழி வகுத்துவிட்டு , முழு முயற்சியும் எடுத்துவிட்டு, சினிமா நடிகர்களையும் , அவர்களின் ரசிகர்களின் ஆதரவு கிடைக்காததையும் குறை கூறுவது , இவருடைய அரசியல் தெளிவின்மையை மட்டுமே காட்டுகிறது.
ரஜினி, விஜய், அஜீத் போன்ற புகழ் பெற்ற நடிகர்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் திமுக அணி சைபர் தான்.
கடும் விலை வாசி உயர்வு,
கடும் மின்வெட்டு,
ஆளுங்குடும்ப கட்சியின் அராஜகம்,
சினிமா துறையில் அந்த குடும்பத்தின் தலையீடு,
இலங்கை தமிழர் மீது கருணா – சோனியா அணி இழைத்த கொடுமை,
இவை தவிர ,
இரண்டு ஜி புகழ் இராசாவை இன்னமும் கொள்கைபரப்பு செயலாளராக வைத்திருந்தது ( தேர்தல் நாள் வரை) ,
சாதிக் பாட்சாவின் மர்ம மரணம்,
தீபக் புஷ்பனாதனின் திடீர் மரணம்,
உயர் நீதி மன்றத்தில் போலீசாரும், வழக்கறிஞரும் மோதல்,
உயர்நீதி மன்றத்தில் நீதிபதி மீதே தாக்குதல்,
சட்ட கல்லூரி வாசலிலேயே மாணவர்கள் வன்முறை மோதல்( போலீசார் கண் முன்னே )
அமைச்சர் கண் முன்னே ஒரு போலீசு அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டது
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவினர் செய்த பூத்து ஆக்கிரமிப்பு வன்முறை புரட்சி என்று
திமுக ஆட்சியில் எதுவுமே மக்கள் மனதை கவர்வதாய் அமையவில்லை. இலவசமாய் திமுக அரசு வழங்கிய கலர் டி வீ பெட்டிகள் தமிழகத்தின் எல்லைப்புற மாநிலங்களான ஆந்திரம், கேரளம், பாண்டி ஆகிய இடங்களில் மிகவும் மலிவு விலையில் விற்றது, மலிவு விலை அரிசியும் கடத்தப்பட்டு அண்டை மாநிலங்களில் நல்ல விலைக்கு விற்கப்பட்டு திமுகவினரால் சாதனை செய்யப்பட்டது.
மேலும் தமிழனின் வாழ்வாதார பிரச்சினைகளான காவேரி, பாலாறு, பெரியாறு போன்ற விஷயங்களில் திமுகவின் தூக்கம் இவை எல்லாமும் சேர்ந்து மக்களை பொங்கி எழ செய்தன.
உண்மை இப்படியிருக்க, திருமா போன்றவர்கள் எப்படி திமுக அணி வெற்றி பெரும் என்று எதிர் பார்த்தார் என்று தெரியவில்லை.
பாஜக, பகுஜன் சமாஜ் , பச்சைமுத்து ஆகிய மூன்று இயக்கங்களும் போட்டி போடாமல் இருந்திருந்தால் திமுக அணி “கோவிந்தா ” ஆகியிருந்திருக்கும்.
இராவணனையும், கும்பகர்ணனையும் போல இருங்கள் என்று தன் மகன்களுக்கு கலைஞர் கூறினார். உடனே நம் மக்கள் இராவணனும், கும்பகர்ணனும் தமிழ் நாட்டுக்கு வேண்டாம் என்று அந்த அணியை தூக்கி எறிந்து விட்டனர். இனியாவது இராவணர்கள் திருந்துவார்களா?
தமிழக மக்களை மடையர்கள் என்று நினைத்து அரசியலோர் எவ்வளவோ பொய் பிரச்சாரங்களை செய்தும், ஊடகங்களும் அந்த குடும்பத்தின் பொய் பிரச்சாரங்களுக்கு இசைவாக நெய் தீபம் ஏற்றியும் வந்தும் கூட, தமிழன் மிக தெளிவாக வாக்களித்துள்ளான்.
தமிழக ஊழலுக்கு, டெல்லி மன்மோஹனார் தலைமையிலான திருட்டு கூட்டணி , டூ ஜி ஊழலால் அரசுக்கு நட்டம் எதுவும் இல்லை, அதிக அளவில் லாபமே வந்துள்ளது என்று திருவாய் மலர்ந்தருளிய கபில் சிபல் போன்ற சித்த புருஷர்கள், இவர்களுக்கு தொடர் பொய் ஜால்ரா அடித்த சொம்பு வீரமணி, சொம்பு வீரமணியின் குட்டி சொம்பு சுபவீ ஆகியோரை தமிழகம் என்றும் மன்னிக்காது.
சினிமா நடிகர்களின் ரசிகர்களால் தங்கள் தோற்கடிக்கப்பட்டதாக புரூடா விடும் திருமா போன்றோர் பரிதாபத்துக்குரியவர்களே. அது உண்மை என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால் , சினிமா ரசிகர்களால் தோற்கடிக்க பட்டவர்களிடம் ஒரு சரக்கும் இல்லை என்ற உண்மை மக்களுக்கு நன்கு தெளிவாக தெரிந்துவிட்டது என்று தான் பொருள். கனி, ராசா, இவர்களுக்கு துணையாக பி எஸ் என் எல்லை சுருட்டிய இன்னும் சில தீய சக்திகளும் விரைவில் திகாருக்கு போய் சேருவார்கள்.
காங்கிரசு என்று சொல்லித்திரிந்த மோசடி கட்சிக்கு இனி ஒவ்வொரு மாதமும் , நீத்தார் கடனை தமிழன் நிறைவேற்றுவான். பெற்ற மகளை தன் மகள் இல்லை என்று பத்திரிகை ஆசிரியர் மேல் பொய் வழக்கு போட்டு, அவரை ஒரு மாதம் சிறைச்சாலைக்கு அனுப்பிய புண்ணியவான் அதே மகளை சந்திக்க சிறைச்சாலை வாசலில் கண்ணீர் வழியும் முகத்துடன் சந்திக்க செல்வது காலத்தின் கோலம்.
திமுக, காங்கிரசு இரண்டும் ஒழிந்து தமிழனுக்கு புதிய தலைமை எதிர்காலத்தில் வரும். திமுக என்ற தீய சகாப்தம் காங்கிரசு என்ற களவாணி கட்சியுடன் சேர்ந்து ஒழிந்தது. தீய குடும்பம் முழுவதும் செய்த தீவினையை அனுபவிக்க நேரம் வந்து விட்டது.
ஐயா ,
புதிய சட்டசபை கட்டிடம் பயன்படுத்த தேவையான தீயணைப்பு துறையினரின் நிபந்தனைகளில் இருபத்தைந்தில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் லிப்ட் வசதிகளும் இன்னும் பூர்த்தியாக வில்லை. நான் நேரில் அந்த கட்டிடம் முழுவதையும் சுற்றிப்பார்த்தேன். இப்போதைய நிலையில் , அக்கட்டிடம் கலைஞரின் மீன்தொட்டிக்கு மட்டுமே பாதுகாப்பானது. அக்கட்டிடம் முழுவதும் முடிவடைய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும். அதன் பின்னர், இடப்பற்றாக்குறையால் சிரமப்படும் சில அரசு அலுவலகங்களை அந்த புதிய கட்டிடத்தில் செயல்பட வைப்பர். சட்டசபை தான் அங்கு போகவேண்டும் என்று எந்த தலை எழுத்தும் இல்லை.
கலைஞர் 1989 லே முதல்வரானபோது, எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில், விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட காப்பீடு ( insurance) திட்டத்தை கைவிட்டதுடன் , விவசாயிகளிடம் தாலுக்கா அலுவலகம் மூலம் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பிரிமியம் தொகையை திருப்பிக்கொடுத்து , திட்டத்தையே மூடிவிட்டார். கலைஞர் ஒரு தீய சக்தி. அவர் எதுசெய்தாலும் , குறுகிய குடும்ப நலனும், தமிழ் விரோத போக்குமே தலை தூக்கி நிற்கும். மத்திய அரசால் மாநில மொழிகளில் பாடப்புத்தகங்கள் அச்சிட கொடுக்கப்பட்ட உதவி தொகைகளை பல ஆண்டுகளாக செலவிடாமல் , சரண்டர் செய்தவர் தான் கலைஞர்.
சமச்சீர் கல்வி என்பது ஒரு துபாக்கூரான விஷயம். முடிந்த கலைஞர் குடும்ப அரசின் ஆட்சியிலேயே , பத்தாம் வகுப்பு( எஸ் எஸ் எல் சி ) அறிவியல், மற்றும் கணிதப்பாடங்களில் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று சொல்லி புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டு, ஆனால் அமுல்படுத்தப்படாமல், ஆசிரியர் சங்கங்களின் பலத்த எதிர்ப்பின் பேரில் கைவிடப்பட்டன. ஏனெனில், எழுபது சதவீத அரசு பள்ளிகளில் புதிய உயர்தர பாடங்களை சொல்லிக்கொடுக்க தேவையான தகுதிவாய்ந்த ஆசிரியர்களும், போதிய சோதனைச்சாலை வசதிகளும் இல்லை. எனவே சமச்சீர் கல்வி என்பது, இன்றைய தேதியில் , திரு முத்துக்குமரன் ( குழு தலைவர்) அவர்கள் தெரிவித்தபடி, 129 முக்கிய பரிந்துரைகளில் , பெரும்பாலானவை அமுல்படுத்தப்படாத நிலையில் தான் உள்ளன.
இன்னும் சரியாக சொல்வதென்றால், அரசு பள்ளிகளின் மட்டமான தரத்துக்கு சமமான அளவுக்கு தனியார் பள்ளிகளை தரம் தாழ்த்துவதாகவே இன்றைய சமச்சீர் கல்வி உள்ளது. தனியார் பள்ளிகளின் தரத்துக்கு , அரசு பாடங்களை தரம் உயர்த்தி, அரசு பள்ளிகளின் சோதனைச்சாலை வசதிகளையும் பெருக்கிய பின்னரே உண்மையான சமச்சீர் கல்வியை உருவாக்க முடியும். எனவே, இக்குறைகள் களையப்பட்டு சமச்சீர் கல்வி அடுத்த ஆண்டில் அமுல்படுத்தப்படும். கருணா கொடுத்த இந்த அரைகுறையான சமச்சீர் கல்வி என்பது ஏற்கனவே உள்ள கல்வியைவிட மட்டமானது. இந்த பாடப்புத்தகம் முழுவதும் டவுன்லோட் செய்து, நான் முழுவதும் பார்த்தவன். எனவே புதிய அரசின் மீது, இந்த விஷயத்தில் குறை எதுவும் இல்லை என்பது தெளிவு. சிலர் இந்த விஷயத்தில் உண்மை நிலை தெரியாமல் குற்றம் சுமத்துகிறார்கள்.
அன்புள்ள
பி சிவசுப்பிரமணியன்
கச்சத்தீவு பற்றிய வழக்கில் தமிழக அரசின் வருவாய் செயலாளரையும் ஒரு வாதியாக இணைத்துக்கொள்ள தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள தீர்மானம் , மற்றும் முள்ளி படுகொலை மற்றும் அதனுடன் இணைந்த போர்க்குற்றங்கள் பற்றி ஐ நா மூலம் விசாரிக்கப்படவேண்டும் என்ற தீர்மானமும் மிக சரியானவை.
மே 2009 லேயே அப்போதிருந்த தமிழக சட்டசபை தீய காங்கிரசின் தீய கூட்டணியால் , வாய் மூடி செத்த பிணம் போல இருந்தது. சமாதானக்கொடியுடன் வந்த தமிழர்களை சுட்டுக்கொன்ற கோழைகளை கழுவில் ஏற்றவேண்டும். அமிர்தலிங்கம், ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களை படுகொலை செய்துவிட்ட புலிகளின் விஷயம் வேறு, அது போன்ற விஷயங்களை தமிழக மக்கள் என்றுமே ஏற்க மாட்டார்கள்.நிராயுதபாணிகளாய் சரண்டர் ஆகி வந்த மக்களை கொன்ற , சிங்கள ராஜபக்ஷே வேறு. பல ஆயிரக்கணக்கான சிவிலியன் தமிழரை கொன்ற ராஜபக்ஷே உலக நீதியால் தண்டிக்கப்பட்டு தூக்கில் ஏற்றப்படுவார். அவருக்கு துணைநின்றவர் எவராயினும் அதே கதிதான்.
விமர்சனங்கள் அனைத்தும் செத்த பாம்பை அடிப்பதற்கு ஒப்பாகும். ஒருகட்சி ஊழல் என்று ஒதுக்கப்பட்டால் அடுத்த கட்சியும் அதையேதான் செய்கிறது. எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்பர் ஊர்மக்கள். ஒருவனை வீழ்த்துவதற்கு பல ஆயுதங்கள்(காரணங்கள்) தேவைப்பட்டன. ஆனால் இதே ஆயுதங்கள் இந்த ஆட்சியின் உழலுக்குப்பின் திருப்பி விடப்படும் என்பதில் ஐயம் வேண்டாம். மக்கள் நீதி மன்றம் பதில் கூறட்டும் -வாக்கு வங்கி மூலம்.