கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04

ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் நான்காம் பாகம்.

பாகம் 1ல்: ஜோகேந்திரநாத் மண்டல் என்ற தலித் தலைவர் பற்றிய அறிமுகம். அவர் சிறுபான்மையினரும் தலித்துகளும் ஒன்றிணைந்து முன்னேற முடியும் என்று நம்பியது. மக்கள் ஆதரவு இல்லாத முஸ்லீம் லீக் அரசைப் பலமுறைகள் காப்பாற்றியது. டாக்கா கலவரத்தின் பின்னணி மற்றும் அந்தக் கலவரத்தின் கொடூரங்கள். கலவரத்தில் தலித்துகளான நாம்தாரிகளை முஸ்லீம்கள் அழித்தது. இருப்பினும், நாமதாரிகளை மத நல்லிணக்கத்தோடு இருக்க ஜோகேந்திரநாத் மண்டல் உழைத்தது போன்ற தகவல்கள் உள்ளன.

பாகம் 2ல்: முஸ்லீம்களால் அழிக்கப்பட்டாலும், பட்டியல் வகுப்பினர், முஸ்லீம் லீக்கிற்கு விசுவாசமான ஜோகேந்திரநாத் மண்டலை ஆதரித்தது. பாகிஸ்தானின் முதல் அமைச்சரவையில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டது. அவரைத் தவிர வேறு பட்டியல் வகுப்பினரையும் அமைச்சராக்க பாகிஸ்தான் மறுத்தது. நாமசூத்திரர்கள் என்ற தலித் பிரிவினரின் மேல் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி, அவர்களைக் குவியல் குவியலாக முஸ்லீம்கள் கொன்றழித்தது. கலவரத்தின்போது, இந்துப் பெண்களைப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்களாகக் கருதி முஸ்லீம் தலைவர்கள் கூட்டம் கூட்டமாகக் கற்பழித்தது. இந்தக் கலவரத்தில் அரசே ஈடுபட்டது. இந்தக் கலவரங்கள் பற்றி அமைச்சரவையில் பேச சட்ட அமைச்சரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போன்ற தகவல்கள் உள்ளன.

பாகம் 3ல்: இந்த பாகத்தில் டாக்கா கலவரத்தின் முக்கிய காரணங்கள்; பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டது; இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரை காக்க வழிவகை செய்ய லியாகத் அலிகானுக்கும் நேருவுக்கும் இடையில் நடந்த டெல்லி ஒப்பந்தம்; அது செயல் படாமல் போன ஏமாற்றம்; மவுலானா அக்ரம் கானின் வெறுப்பு பரப்புரை; கிழக்கு வங்காள அரசு அந்த மாநிலத்தில் இருக்கும் இந்துக்களை கசக்கி பிழியும் திட்டத்தை நன்கு திட்டமிட்டு நடைமுறை படுத்தி வருவது; இணை ஓட்டுமுறையை தவிர்க்கும் செயல்கள் போன்ற தகவல்கள் உள்ளன.

முந்தைய பாகங்கள்: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3

நான்காம் பாகத்தைப் படியுங்கள்…..

மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்

இந்துக்களின் மோசமான எதிர்காலம்.

29. டெல்லி ஒப்பந்தத்தின் விளைவாக கிழக்கு வங்காளத்தில் இந்துக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி பேசும் போது தற்போதைய நிலவரம் ஆனது எந்த வித திருப்தியும் அளிக்காததோடு நிச்சியமற்றதாக இருக்கிறது, எதிர்காலமோ இருண்டும் பயமளிப்பதாகவும் இருக்கிறது. கிழக்கு வங்காள இந்துக்களின் நம்பிக்கை எந்த வித்திலும் கூட்டப்படவில்லை. கிழக்கு வங்காள அரசாலும் முஸ்ஸீம் லீக் தலைவர்களாலும் டெல்லி ஒப்பந்தம் ஆனது ஒரு காகிதக்கழிவு போலவே நினைக்கப்பட்டது. கிழக்கு வங்காளத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் குறிப்பாக பட்டியல் வகுப்பினர் கிழக்கு வங்காளத்திற்கு வருவது அங்கு இந்துக்கள் இழந்த நம்பிக்கை திரும்பி விட்டதற்கான அறிகுறி இல்லை. அது மேற்கு வங்காளத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லை என்பதை காட்டுகிறது. கூடவே அகதிகள் முகாமில் இருக்கும் வாழ்க்கை ஆனது அவர்களை அவர்களின் வீட்டிற்கு திரும்ப செல்ல வலியுறுத்துகிறது. மேலும் அவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து விலையுர்ந்த பொருட்களை திரும்ப எடுத்து போகவும் தங்களுடைய சொத்தை விற்றுவிட்டு போகவும் தான் வருகிறார்கள். சமீப காலமாக கிழக்கு வங்காளத்தில் எந்த வித மதக்கலவரம் நடைபெறாமல் இருப்பதற்கு டெல்லி ஒப்பந்தம் காரணம் இல்லை. இது எந்த வித ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் கூடவே இது போலவே இருந்திருக்கும்.

30. டெல்லி ஒப்பந்தம் ஆனது ஒரு முடிவானது அல்ல என்பது இங்கு ஒத்துக்கொள்ளப்படவேண்டும். அது இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையில் இருக்கும் பல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்ப்பதற்கு ஏதுவான காரணிகளை உருவாக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. ஆனால் இந்த ஆறு மாத காலத்தில் எந்த விதமான சிக்கலோ அல்லது பிரச்சினையோ தீர்க்கப்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக மதவெறுப்பு பரப்புரையும் இந்தியாவிற்கு எதிரான பரப்புரையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மூழுமூச்சில் பாகிஸ்தானால் செய்யப்பட்டது. மூஸ்ஸீம் லீக்கால் பாகிஸ்தான் முழுவதும் கொண்டாடப்பட்ட காஷ்மீர் நாள் கொண்டாட்டங்கள், இந்தியாவுக்கு எதிரான மத வெறுப்பு பரப்புரைக்கு நல்ல உதாரணம் ஆகும். பாகிஸ்தான் பஞ்சாப் இன் ஆளுநரால் பேசியது பொழுது இந்திய முஸ்ஸீம்களின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தானுக்கு ஒரு உறுதியான ராணுவம் தேவைப்படும் என்று சொன்னது இந்தியா பற்றி பாகிஸ்தானின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. இது இரண்டு நாடுகளுக்கு இடையே மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்யும்.

கிழக்கு வங்காளத்தில் இன்று என்ன நடக்கிறது

31. இன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன? ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இப்படி இந்துக்கள் வெளியேறிவதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன, அதில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரமும் ஒன்று. இந்து வழக்குரைநர்களை, மருத்துவர்களை, கடைகாரர்களை, வியாபாரிகளை, புறக்கணித்த முஸ்ஸீம்களின் செயலால் இந்துக்கள் மேற்கு வங்காளத்திற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை தேடி வெளியேறினார்கள். இந்து வீடுகளில் வாடகை இல்லாமல் குடியிருப்பது, சட்டரீதியான நடைமுறை ஏதும் இல்லாமல் வீடுகளை ஆக்கிரமித்து கொள்வது போன்ற செயல்கள் இந்துக்களை இந்தியாவிற்கு போக வைத்தது. இந்து வீடு உரிமையாளர்களுக்கு வாடகை தரும் பழக்கம் வெகு நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. கூடவே அன்சார்கள் (உள்நாட்டு பாதுகாவலர்கள்) இந்துக்களின் உடமைகளுக்கும் உயிருக்கும் பெரும் கேடாக இருக்கிறார்கள் என எனக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கல்வித்துறையால் இஸ்ஸாமிய மதமாக்கப்படும் கல்வி முறையால் மேல் நிலை பள்ளி மற்று கல்லூரிகளின் ஆசிரியர்கள் அவர்களின் பழைய சொந்த முறைகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடினார்கள். இதன் விளைவாக பல கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கொஞ்ச காலம் முன்பு எனக்கு கிடைத்த தகவலின் படி கல்வித்துறை மேல்நிலை பள்ளிகளுக்கு, எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளி துவங்கும் முன் குரான் சொல்வதில் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வங்க வன்முறைகள் இன்னொரு அறிக்கையோ பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை இந்த ஜின்னா, இக்பால், லியாகத் அலி, நஜிமுதீன் போன்ற பன்னிரண்டு சிறந்த முஸ்ஸீம்களின் பெயரில் இருக்கவேண்டும் என சொல்லியிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் பேசிய அதிபர், கிழக்கு வங்காளத்தில் இருக்கும் 1500  ஆங்கில மேல்நிலை பள்ளிகளில் 500 மட்டுமே இயங்குவதாக சொல்லியிருக்கிறார். மருத்துவர்கள் வெளியேறியதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்த விதமான வழிமுறைகளும் இல்லை. இந்து கடவுள்களுக்கு வழிபாடு செய்துகொண்டிருந்த அனைத்து பூஜாரிகளும் வெளியேறிவிட்டனர். முக்கியமான வழிபாட்டு தலங்கள் கைவிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்துக்கள் அவர்களின் மதத்தை பின்பற்றும் வழி இல்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் சமூக பழக்கவழக்கங்களான திருமணம் போன்றவற்றை செய்யக்கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள். கடவுள்களின் திருவுருவச்சிலைகள் செய்துகொண்டிருந்த தச்சர்கள், ஓவியர்கள் முதலானோரும் வெளியேறி விட்டார்கள். பஞ்சாயத்து யூனியன்களில் இந்து தலைவர்கள் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையுடன் துரத்தியடிக்கப்பட்டு அந்த இடங்களுக்கு முஸ்ஸீம்கள் வந்தார்கள். மிச்சமிருந்த ஒரு சில இந்து அரசு அதிகாரிகளின் வாழ்க்கையானது, அவர்களை விட அனுபவம் குறைவான முஸ்ஸீம்களுக்கு பதவி உயர்வு தருவதாலும் எந்த வித காரணம் இல்லாமல் வேலையில் இருந்து நீக்கப்படுவதாலும், மோசமாக இருக்கிறது. சமீபத்தில் சிட்டகாங்கில் அரசு பொது வழக்குரைநர் பதவியில் இருந்த ஒரு இந்துவை பதவியில் இருந்து  நீக்கப்பட்டார். ஸ்ரீஜகுடா நெல்லி சென்குப்தா (Srijukta Nellie Sengupta) எனப்படும் அவர் மேல் எந்த விதமான முஸ்ஸிம்களுக்கு எதிராக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டோ வைக்கப்படவில்லை.

இந்துக்கள் முற்றிலுமாக விலக்கப்பட்டனர்.

32. திருட்டுகளும் கொள்ளைகளும் மேலும் கொலைகளும் முன்போலவே நன்றாக நட்ந்து கொண்டு உள்ளன. காவல் துறை அதிகாரிகள் இந்துக்களால் செய்யப்படும் பாதிக்கும் மேற்பட்ட புகார்களை பதிவே செய்வதில்லை. இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான்.

கிராமங்களின் வசிக்கும் ஒரு சில பட்டியல் வகுப்பு இந்து பெண்களும் கூட இந்த முஸ்ஸீம் குண்டர்களால் கற்பழிக்கப்பட்டனர். என்னிடம் வந்த புகார்களை வைத்து பார்த்தால் முஸ்ஸீம் குண்டர்கள் பெரும் அளவில் இந்து பட்டியல் வகுப்பு பெண்களை கற்பழித்து உள்ளனர். சந்தைகளில் இந்துக்களால் விற்கப்படும் சணல் மற்றும் மற்றைய விவசாய பொருட்களுக்கு முஸ்ஸீம் வியாபாரிகள் ஒரு பொழுதும் முழு விலை தருவதில்லை. இந்துக்களை பொறுத்தவைரை சமநீதி, சட்டம், ஒழுங்கு என்பவை பாகிஸ்தானில் இல்லாமல் போய்விட்டன.

மேற்கு பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்

33. கிழக்கு பாகிஸ்தானின் கேள்வியை தற்போதைக்கு விட்டுவிட்டு இப்போது மேற்கு பாகிஸ்தானுக்கு வருவோம், குறிப்பாக சிந்துவிற்கு. மேற்கு பஞ்சாப் பிரிவினைக்கு பிறகு ஒரு லட்சம் பட்டியல் வகுப்பினரை கொண்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் இப்போது முஸ்ஸீமாக மதம் மாற்றப்பட்டுள்ளர். முஸ்ஸீம்களால் கடத்தப்பட்ட பல டஜன் பட்டியல் வகுப்பு சிறுமிகளில் அதிகாரிகளிடம் திரும்ப திரும்ப வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பின்பு நான்கே நான்கு பேர் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகளின் பெயரும் அவர்களை கடத்தியவர்களின் பெயரும் அதிகாரிகளுக்கு தரப்படிருந்தது. கடத்தப்பட்ட பெண்களை மீட்க நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி கடைசியில் பின்வருமாறு கூறினார், “அவருடைய பணி இந்து சிறுமியரை மீட்பது தான் அவருடைய வேலை எனவும் அச்சூட்ஸ்(பட்டியல் வகுப்பினர்) இந்துக்கள் அல்ல”. சிந்துவிலும் கராச்சியிலும் வாழும் குறைந்த எண்ணிக்கையிலான இந்துக்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. கராச்சியிலும் சிந்துவிலும் முஸ்ஸீம்களால் கைப்பற்றப்பட்ட 363 கோயில்கள் மற்றும் குருத்வாராக்களின் பட்டியல் என்னிடம் இருக்கிறது, அந்த பட்டியலில் இன்னமும் சேர்க்கப்படவேண்டிய கோயில்களும் உள்ளன.

woman-harassedஅதில் சில கோயில்கள், தோல் தைக்கும் இடமாகவும், சில இறைச்சிக்கூடங்களாகவும், சில உணவகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதில் எதையும் இந்துக்கள் திரும்ப பெறவில்லை. எந்த வித முன்னறிப்பு இல்லாமல் இந்துக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வந்த முஸ்ஸீம்களுக்கும் உள்ளூர் முஸ்ஸீம்களுக்கும் தரப்பட்டன. எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவரையில் 200 இல் இருந்து 300 இந்துக்கள் வெளியேற்றக்கூடாதவர்களாக பாதுகாப்பாளரால் நெடுநாள் முன்னரே அறிவிக்கப்பட்டனர். ஆனால் இதுவரையில் அவர்களின் சொத்து ஒருவருக்கு கூட திருப்பி தரப்படவில்லை. கராச்சி பின்சிரபோல் (Pinjirapole, பசு பாதுகாப்பு இடம்) கூட அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி தரப்படவில்லை, அந்த இடம் எப்போதே ஆக்கிரமிக்கப்படக்கூடாத இடமாக அறிவிகப்பட்டுள்ளது. கராச்சியில் இருக்கும் பட்டியல் வகுப்பு தந்தைகளிடம் இருந்தும் கணவன்மாரிடம் இருந்தும் அவர்களின் உறவு சிறுமியரை மீட்டு தர சொல்லி எனக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இரண்டாவது தற்காலிக அரசிடம் இந்த புகார்களை எடுத்து சென்றேன். ஆனால் எந்த விளைவும் இல்லை. என்னை மிகவும் வருத்ததிற்கு ஆளாக்கிய செய்தி என்னவென்றால் சிந்துவில் இதுகாரும் இருந்த பட்டியல் வகுப்பினர் இஸ்ஸாமியர்களாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பதாகும்.

இந்துக்களுக்கு பாகிஸ்தான் ஒரு சாபம்

34. மேல்கண்டவை தான் இந்துக்களைப்பொறுத்தவரை பாகிஸ்தானில் அவர்களின் நிலை என்பதாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் அவர்களில் நாட்டிலேயே எல்லா காரணிகள், செயல்களின் படி நாட்டற்றவர்களாக அவர்களின் வீட்டில் இருக்கிறார்கள் என்று நான் சொன்னால் அது மிகையாகாது. இந்து மதத்தை கடைபிடிப்பதை தவிர அவர்கள் செய்த குற்றம் வேறொன்றும் இல்லை. முஸ்ஸீம் தலைவர்களால் பாகிஸ்தான் ஒரு இஸ்ஸாமிய நாடாக ஆகவேண்டும், ஆகும் என்று திரும்ப திரும்ப சூளுரைக்கப்படுகிறது. எல்லாவிதமான உலக சிக்கல்களுக்கும் இஸ்ஸாமே தீர்வு எனும் பரப்புரை செய்யப்படுகிறது. எவ்வாறு முதலாளித்துவமும் சோசிலிசமும் பேசப்படுகிறது அந்த வார்த்தைகளில் நீங்கள் இஸ்ஸாத்தின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றி சர்க்கரை தடவிய வார்த்தைகளில் பேசுகிறீர்கள். ஷரியாவின் படி நடக்கும் முஸ்ஸீம்கள் மட்டுமே ஆளுவோராக இருக்கும் அமைப்பில் இந்துக்களும் மற்ற சிறுபான்மையினரும் விலை கொடுத்து தங்கள் பாதுகாப்பபை வாங்கும் திம்மிக்களாக இருக்கவே முடியும். பிரதமர் அவர்களே மற்ற எல்லாரையும் விட அந்த விலை என்ன என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். நிச்சயமற்ற வெகுகாலமான போராட்டத்திற்கு பிறகு பாகிஸ்தானில் இந்துக்களுக்கு அவர்கள் வாழ்வதற்கோ எதிர்காலத்திற்கோ எந்த விதமான இடமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

அவர்களின் எதிர்காலம் மதம் மாற்றப்படுவதிலோ அல்லது அழித்தொழிக்கப்படுவதிலோதான் இருக்கிறது. பெரும்பாலான மேல் வர்க்க இந்துக்களும் அரசியல் நிலை அறிந்த பட்டியல் வகுப்பினரும் கிழக்கு வங்காளத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். பாகிஸ்தானிலேயே தங்கும் சாபத்தை பெற்ற இந்துக்கள், என்னுடைய பயத்தின் படி, கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்ட படி இஸ்ஸாத்திற்கு கட்டாய மதம் மாற்றப்படுவார்கள் அல்லது முழுமையாக அழிக்கப்படுவார்கள். நன்கு படித்த, அனுபவமும் பண்பாடும் உள்ள உங்களைப்போன்ற ஒருவர், மனித சமுதாயத்திற்கே பெரும் தீங்கு விளைவிக்க கூடிய, சமத்துவத்தின் எல்லா விதமான விதகளையும் மீறிய ஒரு கொள்கையை எப்படி முன்னெடுக்கிறீர்கள் என்பது வியப்பை அளிக்கிறது. உங்களுக்கு உங்களின் தொண்டர்களுக்கும் இந்துக்கள் அவர்களின் பிறந்த இடத்திலேயே திம்மிக்களாக நடத்த பயத்தாலோ அல்லது விரும்பியோ அனுமதி தருவார்கள் என நான் சொல்லலாம். இன்று அவர்கள் அப்படி இருக்கலாம், ஏன் அவர்கள் இன்னேரம் சொத்துக்களை பயத்தில் வருத்தத்துடன் விட்டு விட்டார்கள். நாளை அவர்கள், அவர்களின் பிறப்பு உரிமையை கோரலாம். ஆனால் எதிர்காலம் எதை கொண்டுவரும் என யாருக்கு தெரியும்? எப்போது நான் பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இருப்பது இந்துக்களுக்கு எந்த வித உதவியையும் கொண்டு வராது என நம்பினேனோ, அப்போது என்னுடைய நல்ல சிந்தனையுடன், பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களின் மனதிலும் வெளிநாடு வாழ் மக்களின் மனதிலும் பாகிஸ்தானில் இந்துக்கள் வாழ்க்கை, சொத்து, மத உரிமை முதலியவற்றில் கவுரவத்துடனும் பாதுக்காப்புடனும் வாழ முடியும் என்ற போலி நம்பிக்கையை உண்டாக்க விரும்பவில்லை. இது இந்துக்களை பற்றியது.

அரசியல் உரிமைகள் முஸ்ஸீம்களுக்கு கூட இல்லை.

35. முஸ்ஸீம் லீக் ஆள்பவர்களின் சுற்றத்தாரை தவிரவும், வேலைசெய்யாத அதிகாரிகளின் சுற்றாத்தாராகவும் இல்லாத முஸ்ஸீம்களின் நிலை என்ன? அரசியல் உரிமை என்பதே பாகிஸ்தானில் இல்லாமல் போய்விட்டது. இதற்கு ஆதாரமாக, இவரைவிட சிறந்த முஸ்ஸீம் இந்த உலகத்தில் பல வருடங்களுக்கு இருந்ததில்லை என்று சொல்லப்படும் கான் அப்துல் காபர் கான் இன்  தற்போதைய நிலையும் அவரின் சகோதரரும்வீர தேசப்பற்றாளர் ஆன டாக்டர் கான் சாகிப் அவர்களின் தற்போதைய நிலை என்ன? வடமேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானின் முன்னாளைய முஸ்ஸீம் லீக் தலைவர்கள் இப்போது எந்த வித விசாரணையும் இல்லாமல் சிறையில் இருக்கிறார்கள். வங்காளத்தில் முஸ்ஸீம் லிக்குக்கு பெரும் வெற்றிகளை தந்த ஸஹ்ரவர்தி இப்போது பேசுவதற்கும் வெளியே செல்வதற்கும் மேலிடத்தில் உத்தரவு வாங்கும் நிலையில் இருக்கும் சிறைக்கைதி. வங்காளத்தின் பாசத்திற்குரிய தொண்டு கிழவர் என்று சொல்லப்படுவரும் (பாகிஸ்தான் உருவாவதற்கு காரணமாக இருந்த) லாகூர் தீர்மானத்தை கொண்டு வந்தரும் ஆன பைசல் ஹக் இப்போது டாக்கா உயர் நீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தனியாளாக காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறார், இவைகள் மூலமாக இஸ்ஸாமிய திட்டங்கள் கொடூரமாகவும் இறுதியையும் நோக்கி போயின. கிழக்கு வங்காள முஸ்ஸீம்களை பற்றி குறைவாக சொல்வதே போதுமானது ஆகும். அவர்களுக்கு சுய ஆட்சியும் தனி அதிகாரமும் தருவாத வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கிடைத்தது என்ன? ஒட்டு மொத்த பாகிஸ்தானைவிட அதிக மக்கள் தொகை கொண்டிருந்தும் கிழக்கு வங்காளம் மேற்கு பாகிஸ்தானின் அடிமைநாடாக ஆக்கப்பட்டது. கராச்சியில் இருந்து அனுப்பட்ட ஒரு துணை ஆள், அங்கிருந்து கொண்டு உத்தரவுகளை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். கிழக்கு வங்காள முஸ்ஸீம்கள் உணர்ச்சிப்பெருக்குடன் இஸ்ஸாமிய நாட்டின் புரிந்துகொள்ள முடியாத செயல்பாடுகளின் படியும் ஷரியத்தின் படியும் அப்பம் கிடைக்கும் என்று வந்தார்கள், ஆனால் அவர்களுக்கு கல் தான் கிடைத்தது. சிந்துவிலும் பஞ்சாப்பிலும் இருக்கும் முஸ்ஸீம்களுக்கோ இனிப்புகள் கிடைத்தன.

pakistan-condemn-bd-genocide

என்னுடைய வருத்தமான கசப்பான அனுபங்கள்.

36 பாகிஸ்தானின் முழுவிவரங்களையும் அது மற்றவர்களுக்கு செய்த கொடும் அநீதிகளையும் விலக்கி பார்க்கையில் என்னுடைய வருத்தமான கசப்பான் அனுபவங்களும் அதை விட குறைவானது இல்லை. உங்களுடைய பிரதமர் பதவியையும் பாராளுமன்ற கட்சி தலைவர் என்ற பதவியையும் கொண்டு என்னிடம் ஒரு அறிக்கை விடும் படி கேட்டீர்கள், அதை நான் கடந்த செப்டமர் 8 ஆம் தேதி வெளியிட்டேன். அந்த அறிக்கை முழுப்பொய்களையும் அதைவிட மோசமான பாதிப்பொய்களையும் கொண்டிருப்பதால் அதை வெளியிட விரும்பவில்லை என உங்களுக்கு தெரியும். உங்கள் அமைச்சரவையில் அமைச்சராக உங்களுக்கு கீழ் பணிபுரியும் வரை உங்களின் வேண்டுகோள்களை மறுப்பது எனக்கு சாத்தியம் இல்லை. ஆனால் என்னால் இனிமேலும் போலியான நம்பிக்கைகளையும் பொய்களையும் கொண்டிருக்க என்னுடைய மனச்சாட்டி மறுப்பதால் என்னுடைய அமைச்சர் பதவியை விட்டு விலகும் கடிதத்தை இப்போது உங்கள் கரங்களில் அளிக்கிறேன், அதை காலதாமமின்றி ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்களுடைய இஸ்ஸாமிய அரசின் படி நான் வகித்த அமைச்சகத்தை உங்கள் விருப்பப்படி எப்படி தோன்றுகிறதோ அப்படி செய்து கொள்ளலாம்.

உங்கள் நம்பிக்கைக்குரிய
ஜெ. என். மண்டல்
8 அக்டோபர் 1950

முற்றும்.

4 Replies to “கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04”

  1. இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த கதை அல்ல . இது ஒரு தொடரும் நிகழ்வு. இந்துக்கள் முழித்துக்கொள்ளாவிட்டால் மற்றும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் . இந்துகள் கொல்லப்படுவார்கள். அப்படி பாகிஸ்தான் உருவாகாமல் , முஸ்லிம்கள் இங்கேயே பெரும்பான்மை அடைந்தால் கேட்கவே வேண்டாம் அனைத்து இந்துக்களுக்கும் கொள்ளி தான்.

  2. தமிழ் ஹிந்துவிற்கு நன்றிகள். சமீபத்தில் நண்பர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலில், பாகிஸ்தானில் காணாமல் போய்விட்ட ஹிந்து சமுதாயத்தை பற்றிய எனது கருத்தை வெளியிட்டேன். அதற்கு எனது பாகிஸ்தானிய நண்பர், பாகிஸ்தானில் ஹிந்துக்கள் சகல சவுகரியங்களுடன் வாழ்ந்து வருவதாகவும், நான் பொய் பேசுவதாகவும் மறுத்தார். மேலும் என்னிடம் ஆதாரங்களை காட்டுமாறும் கூறினார்.

    அதனால் எனது சக ஹிந்து நண்பர்களே எனது பேச்சை அங்கீகரிக்கவில்லை. ஜோகேன்ட்ரநாத் மண்டல் என ஒருவர் இருந்தார் அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார் என்பதெல்லாம் எனக்கு புதிய தகவல்கள்.

    சூர பத்மன் இருள் வடிவம் எடுத்து வந்த பொழுது, முருகனின் ஒளி வடிவான வேல் அதை வென்றது போல, முஸ்லிம் சகோதரத்வம் எனும் மாயையை நீக்கவல்ல ஞான சுடராகவே நான் இந்த கடிதத்தை பார்க்கிறேன்.

    என்றென்றும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

  3. பெருந்தன்மைக்கும் கோழைத்தனத்துக்கும் நூலளவு வேறுபாடே உண்டு.இதனைப்புரிந்து கொள்ளாமல் மதச்சார்பின்மை என்ற பெயரால் நமக்கு இழைக்கப்படும் துரோகங்களை உணராமல் இருக்கும் ஹிந்துக்கள் வெகு விரைவில் இதற்காக வருத்தப்படபோவது நிச்சயம்.

  4. நெஞ்சை உருக வைக்கும் தொடர்,
    /ஷரியாவின் படி நடக்கும் முஸ்ஸீம்கள் மட்டுமே ஆளுவோராக இருக்கும் அமைப்பில் இந்துக்களும் மற்ற சிறுபான்மையினரும் விலை கொடுத்து தங்கள் பாதுகாப்பபை வாங்கும் திம்மிக்களாக இருக்கவே முடியும். /

    மிகச் சரியான வரிகள்.இந்துக்கள் பெரும்பான்மையினராக் இருக்கும் போது இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும்,சம்த்துவம்,மதச்சார்பின்மை இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் மறுக்கப் படும்.

    பிற்படுத்தப்பட்டவர்,தலித் சிறு பான்மையினர் ஒற்றுமை என்பது ஒரு தந்திரமே.அவர்களை பொறுத்தவரை இஸ்லாமியரல்லாத எவரும் காஃபிரே.
    ஷாரியாவின் மீதான உலக்ளாவிய இஸ்லாமிய ஆட்சியை நோக்கி மட்டுமே இந்த மத பிரச்சாரங்கள் செய்யப் படுகின்றன என்பதை நம் மக்கள் புரியாவிட்டால் இதே நிலை நமக்கும் வரும்.
    அருமையான் மொழி பெயர்ப்பு.சகோதரர் ராஜா சங்கருக்கு பாராட்டுகள்.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *