கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03

ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் மூன்றாம் பாகம்.

பாகம் 1ல்: ஜோகேந்திரநாத் மண்டல் என்ற தலித் தலைவர் பற்றிய அறிமுகம். அவர் சிறுபான்மையினரும் தலித்துகளும் ஒன்றிணைந்து முன்னேற முடியும் என்று நம்பியது. மக்கள் ஆதரவு இல்லாத முஸ்லீம் லீக் அரசைப் பலமுறைகள் காப்பாற்றியது. டாக்கா கலவரத்தின் பின்னணி மற்றும் அந்தக் கலவரத்தின் கொடூரங்கள். கலவரத்தில் தலித்துகளான நாம்தாரிகளை முஸ்லீம்கள் அழித்தது. இருப்பினும், நாமதாரிகளை மத நல்லிணக்கத்தோடு இருக்க ஜோகேந்திரநாத் மண்டல் உழைத்தது போன்ற தகவல்கள் உள்ளன.

பாகம் 2ல்: முஸ்லீம்களால் அழிக்கப்பட்டாலும், பட்டியல் வகுப்பினர்,  முஸ்லீம் லீக்கிற்கு விசுவாசமான ஜோகேந்திரநாத் மண்டலை ஆதரித்தது. பாகிஸ்தானின் முதல் அமைச்சரவையில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டது. அவரைத் தவிர வேறு பட்டியல் வகுப்பினரையும் அமைச்சராக்க பாகிஸ்தான் மறுத்தது. நாமசூத்திரர்கள் என்ற தலித் பிரிவினரின் மேல் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி, அவர்களைக் குவியல் குவியலாக முஸ்லீம்கள் கொன்றழித்தது. கலவரத்தின்போது, இந்துப் பெண்களைப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்களாகக் கருதி முஸ்லீம் தலைவர்கள் கூட்டம் கூட்டமாகக் கற்பழித்தது. இந்தக் கலவரத்தில் அரசே ஈடுபட்டது. இந்தக் கலவரங்கள் பற்றி அமைச்சரவையில் பேச சட்ட அமைச்சரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போன்ற தகவல்கள் உள்ளன.

முந்தைய பாகங்கள்:
பாகம் 1 || பாகம் 2

மூன்றாம் பாகத்தைப் படியுங்கள்…..

மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்

டாக்கா கலவரத்தின் பின்னணி

21. டாக்கா கலவரத்தின் முக்கிய காரணங்கள் ஐந்து:

bangladesh-islamic-terrorism-jihad-300x203அ. கால்ஷீரா மற்றும் நாச்சோல் பற்றிய ஒத்திவைப்பு தீர்மானங்கள் சட்டபேரவையில் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை காட்டிய தைரியத்திற்கு தண்டனை தருவது.

ஆ. ஸூரஹர்தி குழுவுக்கும் நஜிமுதீன் குழுவுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் குழு மோதல் பாராளுமன்ற கட்சியில் பிளவு ஏற்படும் அளவுக்கு போனது.

இ. கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் முயற்சியை சில இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் மேற்கொண்டது  கிழக்கு வங்காள அரசுக்கும் முஸ்ஸிம் லீக் தலைவர்களுக்கும் கவலை அளித்தது. அவர்கள் அதைத் தவிர்க்க எண்ணினர்.

அவர்களின் சிந்தனைப்படி கிழக்கு வங்காளத்தில் ஒரு பெரிய மதக்கலவரம்  நடந்தால் அது கண்டிப்பாக மேற்கு வங்காளத்திலும் பரவும். அங்கு முஸ்லீம்கள் கொல்லப்படலாம். கிழக்கு மற்றும் மேற்கு வங்காளங்களில் நடக்கும். 

மதக்கலவரங்களின் விளைவுகள் இந்த ஒற்றுமை முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியும்.

ஈ. வங்காளி முஸ்லீம்களுக்கும் வங்காளி  அல்லாத முஸ்லீம்களுக்கும் இடையே இருந்த நம்பிக்கையின்மை பெரிதாக வளர ஆரம்பித்தது. இதை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பை உருவாகுவதன் மூலமே ஒழிக்க முடியும். இவர்கள் பேசும் மொழியும் சிக்கலுக்கு ஒரு காரணம்.

உ. பணமதிப்பை குறைக்காததன் விளைவு மற்றும் இந்திய-பாகிஸ்தான் வணிகத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டையின் விளைவுகள் கிழக்கு வங்காளப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இந்த பாதிப்பு முதலில் நகரப் பகுதிகளிலும் பின்பு கிராமப் பகுதிகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. வரும் பொருளாதார பஞ்சத்தில் இருந்து முஸ்லீம்களின் கவனத்தை இந்துக்களுக்கும் எதிரான ஜிகாத் மூலம் விலக்க முடியும் என முஸ்லீம் லீக் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் நினைத்தனர்.

மலைக்கவைக்கும் தகவல்கள் – பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டனர்

bangladesh-hindus-genocide-jihad-islam-muslim22. நான் ஒன்பது நாள் டாக்காவில் தங்கியிருந்த போது கலவரம் நடந்த நகரப்  பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் பார்வையிட்டேன். பி.ஸ். தேஜ்கானில் இருக்கும் மிர்பூருக்கும் சென்றேன். டாக்கா – நாராயண்கஞ் மற்றும் டாக்கா–சிட்டகாங் வழி இருப்பு பாதைகளிலும் ரயில் பெட்டிகளிலும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டது எனக்கு அதிர்ச்சியளித்தது.

டாக்கா கலவரத்தின் இரண்டாவது நாள், நான் கிழக்கு வங்காள முதலமைச்சரைச் சந்தித்து அவர் மாவட்ட நகரங்களிலும் கிராமங்களிலும் கலவரம் நடக்காமல் இருக்க எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட கேட்டுக்கொண்டேன்.

1950 பிப்ரவரி 20 ஆம் தேதி நான் பாரிசால் நகரத்திற்கு போனேன். அங்கு நடந்தவைகளைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த மாவட்ட நகரத்தில் பெரும்பாலான இந்து வீடுகள் எரிக்கப்பட்டன.  பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் கொல்லப்பட்டனர். நான் அந்த மாவட்டத்தில் கலவரம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டேன். அங்கு முஸ்லீம் கலவரக்காரர்கள் செய்த கொடுமைகள் இதுவரை நான் அறியாதவையாக இருந்தன.

அருகில் இருக்கும் காஷிபூர், மாதப்ஷா (Madhabpasha ) மற்றும் லகுட்யா எனும் பகுதிகள் நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்தும் வானங்கள் செல்லக்கூடிய சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தும் கலவரக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை.

மாதப்ஷா (Madhabpasha ) ஜமின்தார் வீட்டில் 200 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 40 பேர் காயமடைந்தனர். மைவ்லாடி (Muladi) எனும் இடம் நரக வேதனையை அனுபவித்தது.

மைவ்லாடி பந்தர் எனும் இடத்தில் மட்டும் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அந்த கலவரக்காரர்களில் முஸ்லீம்களும் அரசு அதிகாரிகளும் இருந்தனர்.

bangladesh-jihad-islam-murdered-hindusபக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.

பிஸ். ராஜ்புர் இல் இருக்கும் கைபார்ட்டகளி (Kaibartakhali ) எனும் இடத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். காவல் துறை அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இந்து வீடுகளும் கொள்ளையடிக்கப்பட்டன. உள்ளே இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன.

பாபுகன்ஞ் கடைவீதியில் இருந்த எல்லா இந்து கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டு அவர்கள் எரிக்கப்பட்டனர்.  நிறைய இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.

பெறப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறைந்த பட்சம் 2,500 பேர் பாரிசால் மாவட்டத்தில் மட்டும் கொல்லப்பட்டனர்.
டாக்காவிலும் கிழக்குவங்காளத்திலும் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை பத்தாயிரம் ஆகும்.

உற்றார் உறவினரை இழந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் அவலக்குரல் என்னுடைய இதயத்தை உருக்கியது. “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது?” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.

டெல்லி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த எந்த ஆர்வமும் இல்லை

(இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரை காக்க வழிவகை செய்ய லியாகத் அலிகானுக்கும் நேருவுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தம் டெல்லி ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.)

23. மார்ச்சின் பிற்பகுதில் கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்துக்கள் அகதிகளாக வெளியேறுவது ஆரம்பித்தது. குறைந்த கால அளவில் எல்லா இந்துக்களும் வங்காளத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் எனத்  தோன்றியது.

இதற்கு எதிராக போர்க்குரல் இந்தியாவில் எழுந்தது. ஒரு தேசியப் பேரழிவு நிகழ்வதை தடுக்க முடியாது போல் தோன்றியது. இப்படி வந்திருக்கக்கூடிய அவலம் ஆனது ஏப்ரல் 8 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட டெல்லி ஒப்பந்தத்தால் தவிர்க்கப்பட்டது.

பயத்தில் இருந்த பங்களாதேசத்து  இந்துக்களின் தைரியம் குறைந்தது. அவர்களது பயத்தைத் தவிர்க்க நான் கிழக்கு வங்காளத்தில் பெரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். டாக்கா, பாரிசால், பரிதாபூர், குலானா ஜெஸ்ஸூர் மாவட்டங்களில் பல இடங்களுக்குச்  சென்றேன். அங்கு பல டஜன் கூட்டங்களில் பேசினேன். அதில் இந்துக்களைத் துணிவுடன் இருக்கும் படியும் அவர்களின் குடும்ப வீடுகளையும் சொத்தையும் விட்டு விட்டுப்  போக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன்.

கிழக்கு வங்காள அரசும் முஸ்லீம் லீக் தலைவர்களும் டெல்லி ஒப்பந்ததின் விதிகளை புழங்குவார்கள் என நம்பியே இதைச் சொன்னேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கிழக்கு வங்காள அரசோ முஸ்லீம் லீக் தலைவர்களோ இந்த ஒப்பந்தத்தைப்  புழக்கத்திற்கு கொண்டுவருவதில் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள் என எனக்குப் புரிந்தது.

கிழக்கு வங்காள அரசு  டெல்லி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட அரசு இயந்திரங்களை அமைப்பதிலோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளையோ  எடுக்க வில்லை. டெல்லி ஒப்பந்தத்திற்குப் பிறகு உடனடியாக தங்கள் சொந்த ஊருக்குக் கிளம்பிய இந்துக்கள் அவர்களின் வீடுகளும் நிலங்களும் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததை கண்டார்கள். அவைகள் அவர்களுக்குத் திருப்பி தரப்படவில்லை.

மவுலானா அக்ரம் கானின் வெறுப்பு பரப்புரை

24. முஸ்லீம் லீக் தலைவர்களின் மீதான என்னுடைய சந்தேகம் உறுதிப்பட்டது எப்போது எனில் நான் முஸ்லீம் லீக் மாகாண தலைவர் ஆன மவுலானா அக்ரம் கான் மாத பத்திரிக்கையான “முகம்மதி” யின் “பைசக்” மாத வெளியீட்டில் எழுதியதைப் படித்த போது தான்.

இதற்கு முன்னர், பாகிஸ்தானின் சிறுபான்மையினர் துறை அமைச்சர் ஆன முனைவர் ஏ. எம். மாலிக் டாக்கா ரேடியோ நிலையம் அதனுடைய முதல் ரேடியோ ஒலிபரப்பை செய்த போது பேசினார். அப்போது முகம்மது நபி கூட அரேபியாவில் இருந்த யூதர்களுக்கு அவர்களுடைய சமய உரிமையை அளித்தார் எனக் கூறினார். இதற்குப் பதில் அளித்த மவுலானா அக்ரம் கான் அந்தப் பத்திரிக்கையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

bangladesh-muslims-kill-hindu-friday-prayer“முனைவர் மாலிக்கினுடைய பேச்சு அரேபியாவின் யூதர்களைக் குறிப்பிடாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். முகம்மது நபியால் அரேபியாவின் யூதர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் தரப்பட்டது உண்மை தான். ஆனால், அது வரலாற்றில் முதல் பகுதி மட்டுமே. ஆனால், வரலாற்றின் கடைசிப்பகுதி தூதர் முகம்மது “எல்லா யூதர்களையும் அரேபியாவை விட்டு துரத்துங்கள்” என்று உத்தரவிட்டதைக் கொண்டுள்ளது.”

முஸ்லீம்களிடையே அரசியல், சமூக, மத வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைக்  கொண்டிருக்கும் மவுலானா கானின் எழுத்திற்குப் பிறகும் நான் நூருல் அமின் அமைச்சரவை நம்பிக்கை குறைவாக நடந்து கொள்ளாது என சிறிய எதிர்ப்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால், டி.என் பராரி யை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக டெல்லி ஒப்பந்தத்தின் படி  நூருல் அமின் நியமித்த போது அந்த எதிர்ப்பார்ப்பு சுக்கு நூறானது. டெல்லி ஒப்பந்தத்தின்படி சிறுபான்மையினரில் இருந்து ஒருவரைத்தான், சிறுபான்மையினருக்கு நம்பிக்கை வரும்படி சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கபடவேண்டும்; அவர் தான் கிழக்கு மற்றும் மேற்கு வங்காள அரசுகளுக்கு தொடர்பாளராக இருப்பார்.

நூருல் அமின் அரசின் அக்கறையின்மை

25. என்னுடைய ஒரு பொது அறிக்கையில், டி.என் பாராரியை சிறுபான்மையினரின் சார்பான அமைச்சராக நியமித்தது எந்த நம்பிக்கையையும் கொண்டுவரவில்லை என்பதைக் கூறினேன். மாறாக அது சிறுபான்மையினரின் மனதில் நூருல் அமின் அரசின் மேல் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் உடைத்தது என்பதைச் சொல்லி இருந்தேன். நூருல் அமினின் அரசு டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் விருப்பம் இல்லாது இருப்பதோடு மட்டுமல்லாமல் டெல்லி ஒப்பந்தத்தின் முதன்மை விதிகளை தோற்கடிக்க விரும்பியது என்றும் எனது அறிக்கையின் மூலம் நான் கூறினேன்.

bangladesh-jihad-islam_dead-hindusநான் திரும்பவும் சொல்கிறேன். டி.என் பாராரி அவரை மட்டும் தான் முன்னிறுத்துகிறார், வேறு யாரையும் அல்ல. அவர் வங்காள சட்டசபைக்கு காங்கிரஸ்ஸின் சீட்டிலும் அதன் பணம் மற்றும் அமைப்பு பலத்திலும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பட்டியல் வகுப்பு குழு வேட்பாளர்களை எதிர்த்தவர். அவருடைய தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பிறகு காங்கிரஸுக்குத் துரோகம் செய்து விட்டுப் பட்டியல் வகுப்பு குழுவில் சேர்ந்துகொண்டார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் குழுவில் இருக்கும் தகுதியையும் இழந்துவிட்டார். பராரியின் முந்தைய செயல்கள், தகுதிகள், நடத்தைகள் ஆகியவை டெல்லி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட ஒரு அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என்று சொல்லும் என் அறிக்கையை எனக்குத் தெரிந்தவரையில் கிழக்கு வங்காள இந்துக்கள் ஒப்புக்கொள்வார்கள்.

26. அந்த பதவிக்கு நான் நூருல் அமீனிடம் மூன்று பெயர்களை பரிந்துரைத்திருந்தேன். நான் பரிந்துரைத்ததில் ஒருவர், எம்.ஏ, எல்எல்.பி. முடித்து டாக்கா உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் ஆக பணிபுரிபவர். அவ்ர் பஷல் ஹக் அமைச்சவரையில் முதல் நான்கு வருடம் பணிபுரிந்தவர், ஆறு வருடம் தலைவராக கல்கத்தா நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றியவர், மேலும் ஆறு வருடம் மூத்த துணைத்தலைவராக பட்டியல் வகுப்பு குழுவிற்கு பணியாற்றியவர். நான் பரிந்துரைத்ததில் இரண்டாவது நபர், எம்.ஏ, எல்எல்.பி. அவர் ஏழு வருடம் சட்ட மேலவையில் உறுப்பினராக பணியாற்றியவர்.

எனக்கு தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால் என்ன காரணங்களுக்காக நூருல் அமின்  இந்த இரண்டு நபர்களில் ஒருவரை அமைச்சராக நியமிப்பதை விட்டு விட்டு நான் சரியான காரணங்களை முன்வைத்து எதிர்க்கும் ஒரு நபரை அமைச்சராக நியமித்தார் என்பது தான்.

மாற்றிச்சொல்வது பற்றிய எந்த பயமும் இல்லாமல் இதைச் சொல்கிறேன், நூருல் அமீனின் பாராரியை அமைச்சராக நியமிக்கும் முடிவு டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காததின் முடிவான நிருபணம் ஆகும். கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் அவர்களின்  உயிர், சொத்து, உடைமைகள், கவுரவம், மதம் பற்றி எந்த பயமும் இல்லாமல் வாழ்வதுதான் அந்த டெல்லி ஒப்பந்தம் உருவாவதற்கான முதன்மை காரணம் ஆகும்.

இந்துக்களை கசக்கி பிழியும் அரசின் திட்டம்

27. இந்த இடத்தில் உங்களிடம் ஓரிரு முறைக்கு மேல் சொன்னதான, கிழக்கு வங்காள அரசு இன்னமும் அந்த மாநிலத்தில் இருக்கும் இந்துக்களை கசக்கி பிழியும் திட்டத்தை நன்கு திட்டமிட்டு நடைமுறை படுத்தி வருகிறது என்பதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்துக்களைப் பாகிஸ்தானில் இருந்து விரட்டியடிக்கும் திட்டம், நன்றாக் திட்டமிட்டப்பட்டு நடைமுறைப்பட்டுத்தப்பட்ட திட்டம். வெற்றிகரமாக மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தான்) செயல்படுத்தப்பட்டுவிட்டது. அதுவே இப்போது கிழக்கு பாகிஸ்தானிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டி.என் பாராரி யை அமைச்சராக நியமித்ததும் அந்த விஷயத்தில் நான் செய்த பரிந்துரைகளுக்கு கிழக்கு வங்காள அரசு தந்த மோசமான விளக்கமும் இஸ்ஸாமிய அரசு என்று அவர்கள் அழைக்கும் அரசு எப்படி இருக்கும் என உறுதி செய்கிறது. இந்துக்களுக்கு பாகிஸ்தான் முழு திருப்தியையோ அல்லது முழு பாதுகாப்பையோ அளிக்கவில்லை. அவர்கள் இப்போது இந்து அறிவாளிகளை துரத்த முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அப்போது தான் பாகிஸ்தானின் சமூக,அரசியல், மற்றும் பொருளாதார வாழ்க்கை இந்து அறிவாளிகளால் மாற்றம் அடையாமல் இருக்கும்.

bangladesh-genocide-hindu-skullsஇணை ஓட்டுமுறையை தவிர்க்கும் செயல்கள்

28. எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால் ஓட்டுமுறை பற்றிய கேள்வி இன்னமும் முடிவாகாமல் இருப்பது தான். சிறுபான்மை சப் கமிட்டி நிறுவப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. அது மூன்று முறை கூடி இருக்கிறது. இணை ஓட்டுப் பதிவா அல்லது பொது ஓட்டுப்  பதிவா எனும் விவாதம் கடந்த டிசம்பரில் கூடிய கமிட்டியின் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதில் எல்லா அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினரும் கலந்து கொண்டு அவர்களின் இணை ஓட்டு பதிவிற்கும், கூடவே பின் தங்கிய மைனாரிட்டிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்பதற்கும் அவர்களின் ஆதரவைத் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்டில் நடந்த இந்த கமிட்டியின் மற்றொரு கூட்டத்திலும் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த விஷயம் பற்றிய எந்த விவாதமும் இல்லாமல் அந்த கூட்டம் காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த முக்கிய விஷயத்தில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் செய்யும் இந்த தவிர்க்கும் நடவடிக்கைகளின் பின் இருக்கும் காரணத்தை பற்றித் தெரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.

(முகம்மது நபிகளின் வழிகாட்டுதலில் பங்களாதேச இந்துக்களின் அப்போதைய ஒட்டுமொத்த நிலை என்ன? அடுத்த பாகத்தில் காண்போம்.)

தொடரும்….

11 Replies to “கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03”

 1. இந்தக் காட்டுமிராண்டி மதத்தவர்களின் கொடுமைகளைப் படிக்கும்போதே மனம் பதைக்கிறது. இவர்கள் இன்னும் முகமது நபியின் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்டுமிராண்டிகளிடமிருந்து நம் மக்களைக் காக்க வேண்டிய அரசியல் வியாதிகள் இந்துக்களை பலிகொடுத்துவிடுவார்கள் போலுள்ளது. ஆனால் இந்தக் காட்டுமிராணடிகள் வாழ்த்தி பேசுவது மட்டும் ”அமைதி நிலவட்டுமாக” . இவர்கள் இந்த புமியில் இருக்கும்வரை சாந்தி நிலவாது. உணவு சுழற்சி முறையில் ஒரு உயிர் மற்றொரு உயிரை உண்டு எந்த உயிரும் அளவுக்கதிகமாக பெருகி விடாதபடி படைத்துள்ளார். அதே முறையில் உலக ஜனத்தொகை பெருகிவிடாதபடி குறைப்பதற்காக அனுப்பப்பட்ட மதம்தான் இஸ்லாமும் அவரது தூதரும் என்று நினைக்கிறேன். இதைப்படிக்கும் இந்துக்கள் இனியாவது ஒன்றுபட வேண்டும். இஸ்லாத்தால் உலக ஜனத்தொகை அழிகிறது. ஆனால் இஸ்லாம் எப்படி அழியும் என்றுதான் புரியவில்லை. அவர்களுக்குள்ளேயே போரிட்டு அழித்துக்கொண்டாலும் மிஞ்சுவது இஸ்லாமாகத்தானே இருக்க முடியும்.

  பகவானே இஸ்லாத்தை அழித்து மனித குலத்தைக் காப்பாற்று

 2. சினிமா எடுப்பது போலப் படங்களை எடுத்து, இவை 1971ல் பங்களாதேசத்தில் நடந்த கலவரத்தின்போது எடுத்த படங்கள் என்று போடுகிறீர்களே. இது உங்களுக்கு அடுக்குமா ?

  ஹோலோகேஸ்ட் என்று சொல்லி யூதர்கள் காட்டும் பொய்யான படங்களைப் போல இந்துத்துவவாதிகளும் போலிப் படங்களைப் போட்டு மக்களைக் குழப்புகிறீர்கள்.

  வெட்கமே இல்லாமல் பொய்யான தகவல்களைச் சொல்லி மத நல்லிணக்கத்தைக் கெடுக்க முயலும் இந்துத்துவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக அன்புடன் அமைதியாக வாழும் சூழலை அழிப்பதுதான் இந்துத்துவத்தின் சூழ்ச்சித் திட்டம்.

  இஸ்ரேலிய யூதர்களோடு சேர்ந்து நீங்கள் செய்யும் புரட்டுப் பிரச்சாரங்கள் விரைவில் வெளிப்பட்டு உங்கள் குட்டு உடையத்தான் போகிறது.

  உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

  1971ல் எடுத்த படங்களோடு, சமீபத்தில் எடுக்கப்பட்ட படங்களை ஏன் போடுகிறீர்கள் ?

 3. நாம் இனிமேலும் முழித்துக்கொள்ளா விட்டால் . எதிர் காலத்தில் இங்கும் அதே போல் நடக்கும்.

 4. // ஹோலோகேஸ்ட் என்று சொல்லி யூதர்கள் காட்டும் பொய்யான படங்களைப் போல இந்துத்துவவாதிகளும் போலிப் படங்களைப் போட்டு மக்களைக் குழப்புகிறீர்கள். //

  சுலைமான், மிக்க நன்றி. உங்களைப் போன்று தான் பெரும்பாலான இசுலாமியரும் நம்பிக் கொண்டு இருக்கிறார் என்றால் இஸ்லாத்தில் மறுமலர்ச்சி என்பதே அசாத்தியம் என்று தான் முடிவு கட்ட வேண்டி வரும்.

 5. @sulaiman ,

  //1971ல் எடுத்த படங்களோடு, சமீபத்தில் எடுக்கப்பட்ட படங்களை ஏன் போடுகிறீர்கள் ?//

  Very simple . நிங்கள் 1971; இருந்த மாதிரியே இன்னும் உள்ளீர்கள் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று காட்டவே.

 6. ஓரிரு வருடங்களுக்கு முன்னர், இங்கிலாந்தில் கிறித்துவ சமயத்தின் ஒரு பிரிவினர் , பேரூந்துகளிலும், பொது ரயில்களிலும் விளம்பரங்களை எழுதி , இறை நம்பிக்கை இல்லாத நாத்திகர்களுக்கு அழைப்பு விடுத்து, பைபிளை ஏற்றுக்கொண்டு , கர்த்தரின் அருள் பெற்று , சொர்க்கத்தில் புகுமாறும், நாத்திகர்களாக இருந்து வீணாக நரகத்திற்கு போக வேண்டாம் என்றும் எழுதி விளம்பரங்கள் செய்தனர்.

  உடனே, நாத்திகர்கள் பதிலுக்கு விளம்பரம் செய்து, நரகம் போக விரும்புபவர்கள் கிருத்துவ மதத்தில் உடனே சேரும்படியும், சொர்க்கம் போக விரும்புபவர்கள் உடனே நாத்திக இயக்கம் மூலம் தெளிவு பெறுங்கள் என்றும் விளம்பரம் செய்தனர்.

  இறை நம்பிக்கை எவ்வளவு புனிதமானதோ, அதனை விட இறை நம்பிக்கை இன்மையும் புனிதமானதே ஆகும். ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களை பார்த்து, நீ நரகத்துக்கு போவாய் என்று சொன்னால் , நாத்திகர் நரகம் போகமாட்டார். நாத்திகர்கள் சொர்க்கத்திற்கே போவார்கள். நாத்திகர்களை நரகத்திற்கு போவார்கள் என்று சொன்ன கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயம் மீள முடியாத நரகத்திற்கே போவார்கள்.

  அதே போல, இறைநம்பிக்கை கொண்டவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்று சொன்ன நாத்திகர்களும் சொர்க்கம் போகாமல் நரகத்திற்கே போவார்கள். எனவே இறை நம்பிக்கை கொண்டவர்கள்கூட சொர்க்கம் போக வேண்டுமானால் , பிற மதத்தினரை இழிவு படுத்துவதோ, நாத்திகர்களை நரகம் போவார்கள் என்று சாபமிடுவதோ கூடாது.

  பிற மதங்களையும், நம்பிக்கைகளையும், குறைவு படுத்தி இழிவாக சித்தரிக்கும் எந்த மதமாயினும், அந்த மதத்தை சேர்ந்த அனைவரும் நிச்சயம் நரகம் தான். வேறு வழி கிடையாது. உலகில், கடவுள் நம்பிக்கை என்பது எல்லைகள் அற்ற ஒரு கடலை விட பெரிய விஷயம். ஆனால் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால், கடவுள் சக்திக்கு இது மட்டுமே பெயர், இது மட்டுமே புனித நூல், இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும், பிற மதத்தினரையும் கொன்று விடுவோம் என்று சொல்லும் காட்டுமிராண்டிகள் , அவர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களது கடவுளாலேயே அழிக்கப்படுவார்கள்.

  தன்னுடைய மதத்தை தவிர பிற மத நம்பிக்கைகள் இருந்தால், தன் மதம் அழிந்து விடும் என்று யாராவது அஞ்சினால், அவர்கள் மதம் அழிந்துவிடுவதே நல்லது. பிறரை அழிக்க நினைக்க நினைப்பவன் தானே அழிந்து போவான். பிறருடன் சேர்ந்து வாழ்பவனை மட்டுமே கடவுள் இந்த உலகத்தில் வாழவிடுவார். பிறரை மதம் மாற்றி தன்னுடைய மதத்தில் சேர்த்து, பிற மதங்களை அழித்துவிடலாம் என்று கனவு காணுவோருக்கு , என்றும் மீளமுடியாத நரகத்தில் அவர்களது கடவுள் , அவர்களை தள்ளிவிடுவார்.

  இது, ஒரு அடிப்படையான விதி. இந்த விதிக்கு எந்த கொம்பனும் விதி விலக்கல்ல.

 7. மத மாற்றம் என்பது ஒரு மோசடியான விவகாரம் ஆகும். ஒரு தாய்க்கும் ஒரு தகப்பனுக்கும் பிறந்தவன் பிறரை மதம் மாற்றும் முயற்சியில் ஈடு பட மாட்டான்.

  கடவுள் நம்பிக்கை என்பதே, பிற உயிர்களிடம் நாம் செலுத்த வேண்டிய அன்பை அடிப்படை ஆக கொண்டது ஆகும்.

  பிற மதத்தினரையும், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களையும் கொல்ல சொல்லும் மதமோ, அம்மதத்தை பின்பற்றுவோரோ , முழு காட்டுமிராண்டிகள் ஆவார்கள். அது போன்ற காட்டுமிராண்டி மதங்களை பின்பற்றி, நரகத்துக்கு போவதை விட, கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தை பின்பற்றினால் கூட , நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும்.

  எனவே, என் வழி நல்ல வழி என்று சொல்ல எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஆனால் என் வழி மட்டுமே நல்ல வழி என்று சொல்பவன் ஒரு கிரிமினல் ஆவான். இது போன்ற தீய சக்திகள் நிச்சயம் நரகத்திற்கு முன்பதிவு செய்து கொள்பவர்கள் ஆவார்கள். பிற மதத்தினரை மதமாற்றம் செய்ய முயலும் தீய சக்திகள் , விரைவில் மீளா நரகத்திற்கு செல்வர்.

  பிறரை இழிவு படுத்துபவன் எவனாயினும், அவனுக்கு நரகமே நிரந்தர வீடு.

 8. சுலைமான் அவர்களே,

  \\இஸ்ரேலிய யூதர்களோடு சேர்ந்து நீங்கள் செய்யும் புரட்டுப் பிரச்சாரங்கள் விரைவில் வெளிப்பட்டு உங்கள் குட்டு உடையத்தான் போகிறது.\\

  உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா? ஒரு பைத்தியம் கூட நம்பாது நீங்கள் சொல்வது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில ஹிந்துக்களின் நிலைமையும் ஹிந்துக்கள் பெரும்பன்மையாக உள்ள இடங்களில் முஸ்லிம்களின் நிலைமையும் ஒப்ப்பிட்டு பாருங்கள்.

  எண்பது சதம் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் ஒரு இஸ்லாமியர் குடியரசு தலைவர் ஆகா முடியும். ஆனால் இது முஸ்லிம் நாட்டில் சாத்தியமா? சும்மா உதார் விடாதிர்கள்.

  ஹுசைன் என்ற மதவெறி பிடித்த மனித உருவில் உள்ள மிருகம், ஹிந்து தெய்வங்களை விலங்குகளுடன் புணர்தல் போல் வரைவான், அதை கேட்டல் மதவாதம்,

  மெக்கா முழுமையாக முஸ்லிம்களுக்கு சொந்தம், ஏன் சௌதி அரேபியாவில் ஒரு கோயில் கூட கட்ட முடியாது. வாடிகன் முழுமையாக கிறித்துவர்களுக்கு சொந்தம், ஆனால் அயோத்தி, மதுர மற்றும் காசி ஹிந்துக்களுக்கு மட்டும் சொந்தம் என்றால் அது மதவாதம்,

  தயவு செய்து இந்த ஹிந்து புனித நகரங்களுக்கு சென்று பாருங்கள், அங்குள்ள கோயில்களை சுற்றி எவ்வாறு ஆக்கிரமித்து மசூதிகளும், முஸ்லிம் கடைகளும் அமைக்க பட்டுள்ளது என்று தெரியும். எவ்வளவு ஏன் பார்த்த சாரதி கோயில் சென்று பாருங்கள் தெரியும். உங்கள் ஆட்கள் எவ்வாறு ஆக்கிரமித்து உள்ளனர் என்று. தென் காசியில் கோயில் கோபுரத்தின் முன்பு நீங்கள் மசூதி கட்டி நீங்கள் செய்யும் அநியாயம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஏன் உங்களுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா கோயில் முன்பு தான் கட்டுவிர்களா?
  இதை எல்லாம் கேட்டல் மதவாதம்.

  இவ்வளவு ஏன் ஹிந்துகளின் புனித யாத்திரையான அமர்நாத் யாத்ரியை முஸ்லிம்கள் பெருபான்மையாக உள்ள ஜம்முவில் நிம்மதியாக நடக்க விடுகிறீர்களா? இப்பொழுது கூட 15 யத்த்ரையை குறைக்கும் உங்கள் சிறு புத்தியை மத வெறியை என்ன என்று சொல்வது? ஆனால் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மற்ற மாநிலங்களில் நிலம் வழங்கி, நீங்கள் செய்யும் உங்கள் மதக்கடைமைக்கு அரசாங்கம் பணம் தருகிறது.

  ஆனால் அமர்நாத் எதிரிக்கும் பணம் தருகிறேன் பேர்வழி என்று மதிய அரசு கூறி மிகப்பெரிய வரியை வசூலிக்கும் இந்த நாட்டில் ஹிந்துக்கள் உரிமைக்காக வாதாடுவது மதவாதம் தான்.

  முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் நாட்டில் முஸ்லிம்களே நிம்மதியாக வாழ முடியாது. ஆனால் ஹிந்துக்கள் ஆட்சி செய்யும் நாட்டில் முஸ்லிம்கள் ஹிந்துக்களை விட அதிக சலுகைகளை பெற்று வளமாக உள்ளனர்.

  எதற்கு எடுத்தாலும் குஜராத் கலவரத்தை பேசும் நீங்கள் அந்த கலவரத்தில் 600 ஹிந்துக்களும் தானே இறந்தார்கள். அதை பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.

  உத்திர பிரதேசத்தில் நடந்த அயோத்தி பிரச்சனைக்கு மும்பையில் பல ஆயிர கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த கொலைக்கு முஸ்லிம்கள் பொறுப்பு ஏற்க மாட்டார்கள்.பிரச்சனைக்கு காரணமான ஹிந்து இயக்கங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

  ஆனால், சபர்மதி இரயில் பெட்டி எரிக்கப்பட்டு 60 மேற்பட்ட மக்கள் கொள்ளப்பட்டதனால் ஏற்பட்ட குஜராத் கலவரத்திற்கு ஹிந்துக்கள் மட்டும் தான் காரணம். என்ன ஒரு காமெடி?

  இந்தியாவின் அனைத்து ஊடகங்களையும் உங்கள் சௌதி முதலாளிகள் விலைக்கு வாங்கி NDTV மற்றும் CNN – IBN கொண்டு பொய் பிரச்சாரம் செய்வது எங்களுக்கு தெரியாதா? கம்யூனிஸ்ட் முகமுடி போட்டு கொண்டு ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் உங்கள் செயலை அறியாமல் இருக்க நாங்கள் ஒன்றும் இ ந வ ந கிடையாது.

 9. சோழன் — ஐயா — நீர் வாழ்க வளமுடன் — Also we have recognize the Hindus are cowards the origin for this goes upto to Buddhism — Even after that we were (During Tamil kings) quite good in maintenance of courage — we lost it everything — so much we have to accept muslims just because we are all cowards that includes me — if you ask muslims to come for communal fight there get at least 5-15 men in every house (as the minimal children 8 in every house), but not even 1 come forward from any of the Hindu house, instead they will all proclaim it is secular country and all muslims are their brothers.

 10. @ சுன்ன்யக்ரீன்,

  உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்ள முடியாது. நம்ம ஊருள சாதி சண்டை ஒன்று வந்தால் என்ன நடக்கும் என்று நான் சொல்ல தேவை இல்லை. இந்த பாலை வன கூட்ட்த்தை விட நாம் பல ஆயிரம் மடங்கு சக்தி மிக்கவர்கள். நம்ப ஆளுங்க பொருள தூக்குனா என்ன ஆகும்னு நான் சொல்ல தேவை இல்லை. நூறூ பன்றி சேர்ந்து வந்தாலும் ஒரு சிறுத்தையை ஒன்றும் செய்ய முடியாது.

  வெறி நாய்களுக்கு தான் எந்த லட்சியமும் இன்றி, அலையும். நாமும் அவ்வாறு நடந்து கொண்டு இருக்க முடியாது. பொருமைக்கு ஒரு எல்லை உண்டு. இவர்கள் பத்து குழந்தைகள் பெற்று கொண்டலும் நாளடைவில் அதுவே இவர்களை அழிக்கும். இவர்கள் தங்கள் சொந்த பருமனாலேயே அடிவாங்க போகிறார்கள்.

  ஆதலால் ஹிந்துக்கள் கோழைகள் அல்ல. அவர்களுக்கு திராவிடம் என்ற போதை மருந்தை ஊற்றி, சாதி என்ற முறையை தவறாக திருத்தி முட்டாளாக மாற்றி உள்ளனர்.

  ஒரு கிறித்துவனும் ஒரு முஸ்லிமும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அது பெரும்பான்மையாக ஹிந்து இருந்தால் மட்டுமே முடியும்.
  ஒரு முஸ்லீமே முஸ்லீம் நாட்டில் நிம்மதியாக வாழ முடியது.

  பெட்ரோல் என்ற ஒன்று இல்லா விட்டால், அரேபியாவும் எப்பொழுதோ ஆப்கான் ஆகி இருக்கும்.

  பணம் இருந்தாலும் இல்லா விட்டாலும் ஒழுக்கமாக வாழும் குணம் மற்ற மதத்தை விட ஹிந்து கலாச்சாரத்தில் தான் அதிகம். இதற்கு நமது நாட்டில் உள்ள காவல் துறை மற்றும் பொது மக்கள் விகிதாச்சாரமே சாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *